Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 42

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 42

ந்த பார்க்கில் அமர்ந்து சரயுவுடன் உணவு உண்ணும்போது உலகிலேயே அதிர்ஷ்டசாலியாய் தன்னை உணர்ந்தான் ஜிஷ்ணு. “தாங்க்ஸ் சரயு”

“நான் சொன்னத கவனிச்சியா இல்லையா?” கடுப்பாய் கேட்டாள்.

“பேசினியா என்ன? தேவதைகள் லா லான்னு பாட்டுப் பாடினதுல ஒண்ணும் கேக்கல” என்று உதட்டைப் பிதுக்கியவனின் முதுகில் ரெண்டு மொத்து மொத்தினாள்.

“கழுத வயசாச்சு. டீன் ஏஜ் பையன்னு நெனப்பா உனக்கு. என் பின்னாடியே சுத்துற… நாலு காபி ஆறு சிகரெட் குடிச்சுகிட்டே கண்ணாடி வழியா பார்த்தானாம். உனக்கு வேற வேல வெட்டி இல்ல? பத்து வயசு பொம்பளப் பிள்ளையை வச்சுட்டு ஏண்டா இப்படி பண்ணுற?”

அவள் பேசுவதைக் காதிலே வாங்காமல், “இந்தா கொஞ்சம் கோக் குடிச்சுக்கோ… என்னை அடிச்சே டையர்ட்டாயிட்ட…”

கையிலிருந்த கோக்கைத் தர, கட கடவென வாங்கிக் குடித்தாள். குடித்து முடித்தவுடன்,

“ஐயோ இது டையட் கோக் இல்லையா… போடா இது வேற அனாவசிய கேலரி” சோகமாய் சொன்னாள்.

“அந்த அளவுக்கு டையட்ல ஸ்ட்ரிக்ட்டா மாறிட்டியா?”

“விளையாடவே நேரமில்ல, அத்தை வேற எனக்கு சூப்பரா சமைச்சு போடுவாங்களா… வெயிட் போட்டுடுச்சு. அதனால ராம் வேற எடையைக் குறைக்கணும்னு ஆர்டர் போட்டுட்டான்”

“ஆமா ஆமா குறைச்சுடு, இடுப்புல கூட சின்ன டையர் இருக்கு”

சரயு கோவமாய் முறைக்க, “கோச்சுக்காதடி… சின்னதா, ப்ரெஸ்டிஜ் குக்கர் காஸ்கட் அளவுதான் இருக்கும்னு நெனைக்கிறேன். நீ ஸ்வீட்டை நிறுத்தினா ரெண்டு வாரத்துல ஹாக்கின்ஸ் காஸ்கட்டா குறைஞ்சுடும்” சொல்லி முடித்ததும் முன்னிலும் வேகமாய் அடிக்க ஆரம்பித்தாள் சரயு.

“பொறுக்கி… பேச்சைப் பாரு… உன்னைப் பாத்ததில இருந்து உடம்பு புல்லா மறைக்குர ப்ராக்தான் போட்டுட்டு இருக்கேன். அதுலையே என்னம்மா நோட் பண்ணிருக்க.. எருமை”

“நேத்து உன் இடுப்பை வளைச்சப்பத்தான் கண்டுபிடிச்சேன். ஐ கான்ட் ப்ரிவென்ட் இட் டியர்… தப்புத்தான் சாரி சரயு.”

மூச்சு வாங்க நிமிர்ந்தவள், கைப்பையிலிருந்த ஸ்கார்பை எடுத்து கழுத்தில் துப்பட்டாவைப் போல சுற்றிக் கொண்டு புல்லில் படுத்து மூச்சு வாங்கினாள்.

அவ்வளவு களைப்பிலும் மறக்காமல் அவள் ஸ்கார்பை எடுத்து சுற்றிக் கொண்டது அவள் தன் மேல் என்ன மாதிரி எண்ணம் வைத்திருக்கிறாள் என்று ஜிஷ்ணுவைக் குத்திக் காட்ட,

“நெஜம்மாவே நான் பொறுக்கி இல்ல சரயு. ரொம்ப நாளா என்னை அப்படியே சொல்லுறடி. அந்த ஸ்விம்மிங் பூல்ல ரெண்டு மூணு பொண்ணுங்களோட உன் கிட்ட சீன் போட்டது தானே காரணம்” வருத்தமாய் கேட்டான்.

“உன்னை இன்னொரு தடவை வேற ஒரு பொண்ணு கூட பார்த்திருக்கேன் ஜிஷ்ணு. ஆனா நான் பார்த்தது உனக்குத் தெரியாது” என்றாள் அமைதியாக.

“சரயு…”

“மெட்ராஸ் ஏர்போர்ட்ல என் சீனியர் ஒருத்திக்கு சென்ட் ஆப் தர வந்தோம். அப்ப ஒரு பொண்ணு ப்ளேன்லேருந்து இறங்கி வந்து உன்னைக் கட்டிப் பிடிச்சா… நீயும் பதிலுக்கு அவ தோளை சுத்திக் கையைப் போட்டுகிட்ட…”

திகைப்போடு ஜிஷ்ணு பார்க்க சரயு தொடர்ந்தாள்.

“அப்பக்கூட என் மனசுகிட்ட அது நீ இல்ல நீ இல்லன்னு திருப்பித் திருப்பி சொன்னேன். ஆனா என் புத்தி உங்க பின்னாடியே என்னை போக சொல்லுச்சு. பைத்தியம் பிடிச்ச மாதிரி உங்க பின்னாடியே வந்தேன். இருட்டா இருந்த பார்கிங் ஏரியாவுக்கு போனிங்க. அங்க நீ என்னை காலேஜ்ல சேக்க வந்தப்ப வந்தேல்ல அதே போர்ட் கார்ல ரெண்டு பேரும் ஏறினிங்க. அதுக்கு அப்பறம் அவ அவசரம் தாங்க முடியாம கட்டிப் பிடிச்சு உன் வாயில கிஸ் பண்ண ஆரம்பிச்சா… நீயும் ஒத்துழைச்ச. மூணு நிமிஷம் பத்து செகண்ட்ஸ் அந்த கிஸ்சோட டைம். அப்பறம் அவ உன் சட்டை பட்டனைத் திருவினா. எனக்கு அதுக்கு மேல தெம்பில்ல. அதுக்குள்ளே நீ அவ கையை விளக்கிவிட்டுட்டு அமைதியா ஏதோ சொன்ன… அவ உன் கன்னத்துல கிஸ் கொடுத்துட்டு தோளுல சாஞ்சுகிட்டா… காரைக் கிளப்பிட்டு போயிட்ட… நல்ல வேளை அதுக்கு மேல கடவுள் என்னை சோதிக்கல”

மனதுள் சொன்னாள். ‘அதுவரைக்கும் எனக்கு மட்டும்தான் உன்னால மனசார கிஸ் பண்ண முடியும்னு நெனச்சேன். அன்னைக்குத்தான் அந்த எண்ணம் முழுசுமா தகர்ந்து போச்சு. நீ ராமனில்ல கிருஷ்ணன் என்ற உண்மையைக் கஷ்டப்பட்டு ஜீரணிச்சேன்’

அவளருகே அமர்ந்து அவளையே பார்த்தான் ஜிஷ்ணு.
“மூணாவது வருஷம் படிச்சப்ப நடந்ததா சரயு” என்றான்.

ஆமாமென தலையாட்டினாள் சரயு.

“அதுக்கப்பறம்தான் நீ என் பணத்தை உபயோகப்படுத்துறதை குறைச்சுகிட்ட… என் கிட்ட உன் மாமா பணம் அனுப்புறதா போய் சொல்லிட்டு, பார்ட் டைம் வேலை பார்த்து சம்பாரிச்சு உன் செலவுகளை சமாளிக்க ஆரம்பிச்ச. இதெல்லாம் நம்ம பிரிவுக்கப்பறம் நான் சைத்தன்யா மூலமா தெரிஞ்சுகிட்டேன்”

“ஆனாலும் என் படிப்பு நீ தந்ததுதான். பீசுக்கு உன் பணத்தை மட்டும்தான் உபயோகப்படுத்தினேன்”

“கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு விலக ஆரம்பிச்ச… நான் பைத்தியக்காரன் மாதிரி, வேஷம் போட்டதை நம்பி விலகுறன்னு நெனச்சேன்” சிரித்தான் ஜிஷ்ணு.

“இதை மட்டும் நினைவில் வச்சுக்கோ சரயு… என் வாழ்க்கைல உன்னைத் தவிர வந்த ஒரு பொண்ணு, அதுவும் எனக்கு முத்தம் கொடுக்குற அளவு நெருக்கமா பார்த்த பொண்ணு ஜமுனாவாத்தான் இருக்கும்” என்றான்.

‘நான் கேட்டேனா’ என்ற பார்வையைப் பார்த்தாள் சரயு. எழுந்து கிளம்ப தயாரானவளை ஏமாற்றத்தோடு பார்த்தான் ஜிஷ்ணு.

“அதுக்குள்ளே கிளம்புறியே சரயு”

அதுக்குள்ளேயா இப்ப மணி என்னான்னு பார்த்தியா…” என்றாள்.

“உன் கூட இருக்குறப்ப மட்டும் ஏன் இந்த நேரம் இவ்வளவு வேகமா போகுது” எரிச்சல் பட்டவன், “ஐயோ உன்கிட்ட எவ்வளவோ பேச வேண்டியிருக்கு. ப்ளீஸ்டி இன்னும் கொஞ்ச நேரம் இரேன்” கெஞ்சினான்.

அவன் அருகே முட்டி போட்டு அமர்ந்தவள், “ஜிஷ்ணு… ஜிஷ்ணு… நான் கிளம்புறதை தள்ளிப் போடத்தான் முடியுமே தவிர, தவிர்க்க முடியாது. உனக்கு ஏன் இது புரிய மாட்டேங்குது. ஒரு காலத்துல உயிருக்கு உயிரா லவ் பண்ணோம் ஒத்துக்குறேன். ஆனா நம்ம ரெண்டு பேரும் தனித் தனி பாதைல நடந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். அதை மனசில் பதியவை ஜிஷ்ணு” குழந்தையிடம் சொல்வத்தைப் போல ஒவ்வொரு வார்த்தையாக சொன்னாள்.

“பதிய வைக்கிறேன் சரயு… ஆனா இந்த மாதிரி ஒரு சான்ஸ் இனிமே கிடைக்குமா… இப்ப இங்க நானும் என் சரவெடியும் மட்டும். ஐயோ ஐ லவ் திஸ் மொமன்ட். ஐ டோண்ட் வான்ட் டு வேஸ்ட் இட். ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அட்வைஸ் பண்ணி இந்தப் பொழுதை வீணாக்காதடி” மண்டியிட்டு சரயுவின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினான்.

“என்ன சொல்லுற… உனக்கு இப்ப என்ன வேணும்?”

“உன்னோட நேரம்… அதை எனக்கே எனக்குன்னு தரியா…”

அதிர்ச்சியுடன் சரயு பார்க்க…

“ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்கூட ஸ்பென்ட் பண்ணுரா”

‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?’ இமைக்காமல் பார்த்தாள்.

“ஹே பொறுக்கிங்குற மாதிரி பார்க்காதே. ஐ நோ மை லிமிட்ஸ்…”

“ஈவ்னிங் ஒரு முக்கியமான வேலையிருக்கு”

“ஈவ்னிங்கே கிளம்பணுமா… பரவால்ல அது வரைக்கும் என் கூட இருக்கலாமே”

“இதுக்கு சம்மதிக்கணும்னா நீ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தரணும்”

“உன்னை மறக்க முடியாது. அதை மட்டும் கேக்காதே.”

பெருமூச்சு விட்டவள், “இனிமே நீ உன் மனைவி குழந்தைகளோட சந்தோஷமா இருக்கணும். என்னை தொறத்துறதை விட்டுட்டு உன் வேலையை பார்த்துட்டு போயிடணும் ஓகேயா?”

மௌனம் அவனிடம்.

“இந்த மௌனத்தை நான் சம்மதமா எடுத்துக்குறேன். சரியா அஞ்சு மணிக்குக் கிளம்பிடுவேன்” கையோடு செல்லில் அலாரம் செட் செய்தாள்.

புன்னகைத்த ஜிஷ்ணு, “என் வாழ்க்கைல மறக்க முடியாத நிமிஷங்கள். மூங்கில் வீடு இல்லை, நீச்சலடிக்க ஆறில்லை, முறுகல் தோசை இல்லை. ஆனா என் ஏஞ்சல் சாயந்தரம் வரை என் கூட இருக்கேன்னு சொல்லிருக்கா. நம்ம கனவு கண்டதுல ஒண்ணு ரெண்டாவது நிறைவேறட்டும். முதல்ல ஒரு சைக்கிள் வாடகைக்கு எடுத்துட்டு இந்த பார்க்கை சுத்துவோம்” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45

கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு. “விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல” “நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 34என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 34

அத்தியாயம் – 34 விடிவதற்கு முன்பே சித்தாராவுக்குப் பன்னீரிடம் இருந்து போன் வந்தது.   “நிலமை அங்க எப்படிம்மா இருக்கு?”   “பரவால்லண்ணா சமாளிச்சுடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அங்க அரவிந்தைக் கல்யாணம் பண்ணிக்குறதுக்கு முன்னாடி இருந்த சைலஜாவைப் பத்தி ஏதாவது