குறள் : 231 அதிகாரம் : புகழ் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. விளக்கம்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
Category: தமிழமுது
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 21சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 21
குறள் : 231 அதிகாரம் : புகழ் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. விளக்கம்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20
குறள் :361 அதிகாரம் : அவாவறுத்தல் அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்த வாஅப் பிறப்பீனும் வித்து. விளக்கம்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 19சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 19
குறள் : 264 அதிகாரம் : தவம் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். விளக்கம்: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 18சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 18
குறள் : 155 அதிகாரம் : பொறையுடமை ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. விளக்கம்: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 17
குறள் எண் :114 தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். மு.வரதராசன் விளக்கம்: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 16சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 16
குறள் எண் : 641 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று விளக்கம்: நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 15சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 15
குறள் எண் : 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். விளக்கம்: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14
குறள் எண் : 182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. விளக்கம்: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13
குறள் எண் : 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். விளக்கம்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 12சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 12
குறள் எண் : 799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும். விளக்கம்: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 11சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 11
குறள் எண் : 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். விளக்கம்: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.