Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61

நிலவு 61

 

‘வணக்கம் தமிழ்நாட்டு எம்.பி ஜெகனாதனின் ஒரே மகனான அதர்வா சற்று முன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், இந்திய வலைப்பாந்தாட்ட சம்மேளத்தில் ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி’ என்று செய்தியைக் கேட்டு கிறு அதிர்ச்சி அடைய ஆரவ் மர்மமாகப் புன்னகைத்தான். 

 

“கண்ணா இவன், அன்றைக்கு நைட் என் கூட மீரா நிச்சயதார்தத்தில் பேசினான்” என்றான் அதே அதிர்ச்சியில்.

 

“என்ன சொன்னான்?” என்று ஆரவ் தெரியாதது போல் கேட்க, 

 

அன்று அவன் கூறிய அனைத்தையும் ஒருவாறு திக்கித்திணறி கூறிமுடித்தாள்.

 

அவன் அவளை பார்த்து சிரிக்க,

 

“எதுக்கு சிரிக்கிற?” என்று கேட்க,

 

“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் பின்னாடி அவன் சுத்தி இருக்கான், அதை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது” என்றான் சிரித்துக் கொண்டே.

 

அவனை அடித்தவள், “ஆமா டா இப்போ என் அருமை உனக்கு புரியாது, நான் இல்லாத காலத்துல புரியும்” என்று கூற

 

அவளை வேகமாக அணைத்தவன், “இதை போல தேவையில்லாமல் பேசின அடிச்சிடுவேன். என்னை விட்டு நீ எங்கேயும் தனியா போக மாட்ட நான் போகவும் விடமாட்டேன்” என்றான்.

 

அவனை அணைத்து “அவளோ சீக்கிரம் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன், என் கிட்ட மாட்டி நீ இன்னும் அனுபவிக்க இருக்கு ராசா” என்றாள். 

 

இன்னும் சில வருடங்களில் தன்னை விட்டு செல்லுமாறு அவளே அவனிடம் கூறுவாள் என்பதை அறியாமல் இருந்தாள்.

 

“இரு எனக்கு இப்போ காபி குடிக்கனும் போல இருக்கு, உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வரேன்” அவன் எழுந்து சென்றான். 

 

அதே நேரம் அவன் மொபைல் அலற

 

“ஆரவ் கண்ணா உன் மொபைல் உன்னை கூப்பிடுது” என்று கூற

 

“பாருடி யாருன்னு?” என்று கூற

 

அவள் அழைப்பை ஏற்றக முன் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைப்பு வர

 

“மச்சான் அதர்வா சூசைட் பன்னிக்கிட்டான். இதனால் சிஸ்டருக்கு மீரா நிச்சயம் நேரம் அவங்க கிட்ட தப்பா நடக்க பார்த்தது தெரியாது, நாம இவனுக்கு பன்னதும் யாருக்கும் தெரியவராது” என்று சரண் பேசிக் கொண்டே போக,

 

எதிர்புறம் எந்த சத்தமும் இல்லாமல் போக அவன் அழைப்பைப் பார்க்க அப்படியே இருந்தது.

 

‘டவர் இல்லையோ’ என்று அழைப்பை துண்டித்தவன் மீண்டும் அழைக்க அழைப்பு ஏற்கப்படவில்லை.

 

கிறுஸ்தி சரண் கூறிய விடயத்தில் இருந்து மீள முடியாமல் அதிர்ந்து இருந்தாள். மொபைலை அதே இடத்தில் வைத்தவள் அறைக்குச் சென்றாள்.

 

ஆரவ் கிச்சனிலிருந்து வரும் போது கிறுஸ்தியைப் பார்க்க அவள் அங்கே இருக்கவில்லை. அவளைத் தேட அதே நேரம் அவன் மொபைல் அலறியது. திரையில் சரண் என குறிப்பிட்டிருக்க,

 

“ஆரவ் யேன் டா பேசாம அமைதியா இருந்த?” சரண் திட்ட 

 

“நான் இப்போ தான் ஆன்சர் பன்றேன் டா” என்றான் ஆரவ்..

 

“அப்போ இதுக்கு முன்னாடி???” என்று சரண் நிறுத்த

 

“நீ எல்லாவற்றையுமே சொன்னியா?” என்று ஆரவ் பதற

 

“ஆமா டா” என்றான்.

 

“உன்னை… அப்பொறமா பார்க்குறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

அவசரமாக மாடிப்படிகளில் தனது அறையை நோக்கி ஓடினான். 

 

“கிறுஸ்தி கதவை திற” என்று கூற எதிர்புறம் அமைதியாக இருந்தது.

 

அதே நேரம் அஸ்வின் மற்ற நால்வருடன் சேர்ந்து கான்பிரன்சில் போட்டு அழைக்க, ஆரவ் ஏற்றான்.

 

“ஆரவ் நியூஸ் பார்த்தியா? இன்றைக்கு தான் நிம்மதியா இருக்கு” என்றான் மாதேஷ்.

 

“மச்சான் கிறுஸ்திக்கு தெரிந்து போச்சு டா, பயமா இருக்கு டா ” என்று ஆரவ் பதற

 

“என்ன டா சொல்ற? முதலில் அவளை போய் பாரு” என்றான் அஸ்வின்.

 

உடனே அழைப்பைத் துண்டித்தவன், அறைக்கதவை தட்டியவன் களைத்து போக அவன் பயம் அவன் மூளையை வேலை செய்ய வைக்கவில்லை.

 

கிறுஸ்தியே அறைக்கதவே திறக்க அப்போதே அவனுக்கு சீராக மூச்சு வந்தது.

 

அவன் நெஞ்சில் முகம் புதைத்து கதறி அழுதாள். அவள் தலையை ஆதரவாக வருட அவனைத் தள்ளிவிட்டாள்.

 

“என் கிட்ட வராத கண்ணா, நான் கெட்டுபோனவ” என்றாள் கிறுஸ்தி பின் நகர்ந்தபடி.

 

“லூசு மாதிரி பேசாத” என்று திட்டினான் அவளை நெருங்கிக் கொண்டே.

 

“இல்லை டா, அந்த அதர்வா சொன்னது போலவே அவன் என்னை…” என்று முடிக்க முடியாமல் அழ

 

“கிறுஸ்தி அப்படி எதுவுமே நடக்க இல்லை. அதற்கு முன்னாடி நான் வந்துட்டேன், அவன் சுண்டு விரல் கூட உன் மேலே பட விடல்லை. விடவும் மாட்டேன்” என்றான்.

 

“இல்லை நீ பொய் சொல்ற” என்று கிறு நடுங்கிக் கொண்டே கூற

 

“நான் உயிரா நினைக்குற உன் மேலே சத்தியமா” என்றான்.

 

அவனை அணைத்துக் கொண்டே மீண்டும் தன் அழுகையைத் தொடர இவளின் சிறுபிள்ளைத்தனமான செயல்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.  

 

“நான் உனக்கு மட்டும் தான் டா சொந்தம் வேறு யாருக்குமே இல்லை. தப்பா ஏதாவது நடந்தால் அடுத்த நிமிஷமே செத்துருவேன்” என்றாள் விசும்பிக் கொண்டே.

 

அவள் முகத்தை தன் ஒற்றை விரலால் நிமிர்த்தியவன் ” நீ எனக்கு மட்டும் தான் சொந்தம், நான் உனக்கு மட்டும் தான் சொந்தம்” என்று அவள் இதழைச் சிறைச் செய்தான்.

 

அவளைக் கையிலேந்தியவன் அவர்களின் வாழ்க்கையை அடுத்த கடத்திற்கு அழைத்துச் சென்றான். அன்றிரவு இவர்களுக்கு மறக்க முடியாத இனிய இரவாகவே அமைந்தது. 

 

அஸ்வின் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருக்க

 

“அச்சு என்னாச்சு டா? ஏன் டென்ஷனா இருக்க?” என்று மீரா கேட்க

 

“அது மீரு… என்று இதுவரையில் கிறுவின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும்  கூறி முடித்தான். 

 

“நம்ம கிறு இவளோ கஷ்டபட்டு இருக்காளா?” என்று அவள் கண்கள் கலங்க,

 

“ஆமா” என்றான் அஸ்வின்.

 

“பயபடாத அச்சு ஆரவ் அண்ணா அவளை பார்த்துப்பாங்க” என்றாள்.

 

“அதனால தான் நான் அமைதியா இருக்கேன்” என்றான்.

 

“அதர்வாவை என்ன பன்னிங்க?” என்று கேட்க,

 

“ஒன்னுமே இல்லையே, அவன் சூசைட் பன்னிட்டானாம், பாவம் டி என்ன பிரச்சனையோ அவன் அல்பாயுசுல போய் சேர்ந்துட்டான்” என்றான் முகத்தை கவலையாக மாற்றிக் கொண்டே.

 

“டேய் உன் நடிப்பை என் கிட்ட காட்டாத, கிறுவிற்கு ஏதாவது ஒன்னுன்னா யாருமே சும்மா இருக்க மாட்டிங்க கண்டிப்பா அவனை ஏதாவது பன்னி இருப்பிங்க டா ஆறு பேரும் சேர்ந்து, என்னடா பன்னிங்க?” என்று மீரா இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கேட்க,

 

“இப்படி இருந்தால் உன்னை இரசிக்க சொல்லி மனசு சொல்லுது, அதனால” என்று அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து கூற ஆரம்பித்தான்.

 

“அவன் நம்ம நிச்சயதார்த்தத்திற்கு அவன் அப்பா சார்பா தான் வந்திருக்கான். ஆரவிற்கு அவனை பற்றி முழுமையா தெரியும். ஆனால் நம்ம நிச்சயத்திற்கு வருவான்னு யாருமே எதிர்பார்க்க இல்லை. அதுவும் அவன் கிறுஸ்தி கிட்ட போய் பேசுவான்னு நினைக்க இல்லை. 

 

அவளை கடத்தி நம்ம வீட்டிற்கு கூட்டிட்டு போய் இருக்கான். சரியின நேரத்திற்கு போய் அவளை காப்பாத்தி இருக்கான். ACP சரணை வச்சி ஒரு பாழடைந்த பங்களால கட்டி போட சொன்னோம். அவனும் அங்க கட்டிப் போட்டு போனான். அவன் விழிக்காமல் இருக்கக குளோரோபோம் கொடுத்தோம். ஆரவ் எங்க ஐந்து பேருகிட்ட எல்லாவற்றையும் லேட் நைட் சொன்னான்.

 

அடுத்த நாள் விடிய முன்னாடி நைட் இரண்டு மணிக்கு நாங்க ஐந்து பேரும் அந்த பங்களாவிற்கு போகும் போது அவன் ஓரளவு மயக்கம் தெளிந்து முணகிட்டு இருந்தான். அவனுக்கு கொடுக்க வேண்டியை தண்டனைக்காக தேவையானதை எல்லாமே வாங்கிட்டு தான் போனோம். எங்க ஆறு பேரோட ஆத்திரம் தீருகிற வரைக்கும் அடிச்சோம். ஷ்ரவனுக்கு கோபம் வந்ததை நாங்க யாருமே பார்த்தது இல்லை.

 

ஆனால் அன்றைக்கு அவனோட முழுமையான கோபத்தை பார்த்தோம். இன்னும் பத்து நிமிஷம் அதர்வாவை விட்டு இருந்தால் அவன் அடிச்சே கொன்னு இருப்பான். அவனை தடுத்து நிறுத்தினாலும் அவன் கோபம் தீரும் வரைக்கும் சுவரை உதைந்திட்டே இருந்தான். அவன் கோபம் நியாயமானது தான். எந்த காதலன் தான் தன்னோட காதலிக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்ததை பொறுத்துப்பான்.

 

அப்பொறமா அவன் உயிரோட இருந்துகிட்டே சாகனும் அப்படி ஒரு முடிவை எடுத்தோம். அவன் ஆம்பளைங்குற திமிருல தானே அப்படி பன்னான். அதனால அவன் அவனோட ஆண்மையை பார்க்கும் போது தன்னோட தப்பை நினைவுபடுத்தனும். அதனால ரொம்ப ஆபத்தான அசிடை அவனோட பிறப்புஉறுப்பில் ஊற்றினோம். அவனால அதை எந்த டாக்டர்கிட்டையும் சொல்ல முடியாதில்லையா?.

 

அவன் துடிச்சதை பார்க்கும் போது எல்லோருக்குமே நிம்மதியா இருந்தது. இதை போல தானே எத்தனையோ பொண்ணுங்களை கஷ்டபடுத்தும் போது அவங்களுக்கும் வலிச்சு இருக்கும். அதனால் தான் இப்படி ஒரு தண்டனை. அதற்கு அப்பொறமா அவனை விட்டுட்டு போயிட்டோம். பட் அவனை வொச் பன்ன ஆளுங்களை விட்டிருந்தோம்.

 

மூன்று நாள் நடக்க முடியாமல் கஷ்டபட்டு இருக்கான். அதற்கு அப்பொறமா கொஞ்சமா நடந்தாலும் அந்த எரிவு அவனை விட்டு நீங்கவே இல்லை. சரியா ஒரு கிழமைக்கு அப்பைறமா கரெக்டா வீடு போய் சேர்ந்து இருக்கான். அவன் கையை ஆரவ் உடைச்சி இருந்ததால அந்த வலியும் அவன் வீட்டிற்கு தாமதமா போகிறதுக்கு ஒரு காரணம். 

 

எப்படி இன்னொருத்தருகிட்ட போய் அவன் கஷ்டத்தை சொல்ல முடியும்? வாழ முடியாமல் ரொம்ப கஷ்டபட்டு இருக்கான். அதான் வாழாமல் ஒரேடியாக போய் சேர முடிவு எடுத்துட்டான் போல இப்போ அவன் அவமானம் தாங்காமல் சூசைட் பன்னிட்டான். இப்போ அவன் செத்துட்டானே என்று ஒரு துளி கூட மனசுல கஷ்டம் இல்லை மீரு. 

 

என் தங்கை சாப்பிடாமல் பட்டனியில. இருந்து இருக்கா, கோடி கணக்குல பணம் இருந்தும் அவளால் ஆசையா ஒரு டிரஸ் வாங்க முடியல்லை. அவ கனவை அவனுக்கு பயந்து ஒதுக்கி வச்சிட்டா. என்னால் அதை மன்னிக்கவே முடியாது” என்று கூறி முடிக்க அவன் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. 

 

“அச்சு நீ பன்னது தப்பே இல்லை, இவனுக்கு இதை விட கொடூரமான தண்டனை கொடுத்திருந்தால் கூட தப்பில்லை. கிறு பாவம் டா, இப்போ சந்தோஷமா இருக்கா, அவ கடைசிவரைக்கும் சந்தோஷமா இருக்கனும் டா” என்று கூற அவனும் ஆம் என்று புன்னகைத்தான். 

 

அவர்கள் அறியவில்லை அவளுடைய சந்தோஷத்தை இன்னும் சில மாதங்களில் கடவுள் பறிக்கப் போகிறார் என்று.

 

அடுத்த நாள் காலை பல அதிர்ச்சி தரும் தகவல்களை வழங்க காத்திருக்கின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16

“பாருடா மத்தவங்க தூங்குறாங்களே, டிஸ்டபனஸ் இல்லாமல்  இருக்கனுமே, அந்த எண்ணம் கொஞ்சமாவது அவளுங்களுக்கு இருக்கா?” என்று பொரிந்தான் கவின்.   “வாடா போய் பாக்கலாம் எதுக்கு சிரிக்கிறாளுங்க?” என்று அனைவரும் அடுத்த அறையை நோக்கிச் சென்றனர் நால்வரும்.   அறைக்கதவை திறந்த

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55

நிலவு 55   “என்ன ஆச்சு கண்ணம்மா?” என்று ஆரவ் கேட்க,    “கால் வலிக்குது டா” என்றாள்.   அவள் கால்களைப் பார்க்க வீங்கி இருந்தது.   அவள் முன்னே இருந்த சோபாவில் அமர்ந்தவன், அவள் கால்களை தன் மடியின்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 4யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 4

நிலவு 4   அன்று மாலை நேரம் தேவி, அருணாச்சலம் அனைவரும் வந்து சேர்ந்தனர். அவர்களை வீட்டுப் பெண்கள் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கே அனைவரும் எவ்வாறு பேசுவது என்று அமைதியைக் காக்க, அதை புரிந்துக் கொண்ட வினோ