Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 7’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 7’

7 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

குணா, ராஜீவ், மகேஷ் இன்னொரு வண்டியில் என மீண்டும் அவர்கள் சங்கத்தோட ஐக்கியமாக ரோட்டோரம் கடையில் நண்பர்கள் கலாட்டாவுடன் சாப்பிட்டனர்.  குணா “ஆமா எப்போவுமே என்னவே எல்லாரும் கிண்டல் பண்ணுங்க..ஏன் இவனுங்கள பண்ணவேண்டியது தானே…” என

 

மித்ரா “மகேஷ் மகியை ரூட் விடுவதை பற்றி அவர்கள் கேர்ள்ஸ் கேங்கில் பேசுவது, ராஜீவ் குணாவுடன் சென்று அவனை நம்பி ஆஃபிஸில் பல்பு வாங்கியது என அவள் மாற்றி மாற்றி ஒவ்வொருத்தரையும் கலாய்க்க அவர்கள் விட்றுமா என கெஞ்சினர்…

 

இறுதியாக சிவாவிடம் வர “ஆமா சிவா..கேக்கணும்னு நினச்சேன்..நீயும் மித்ரனும் லவ் பண்றிங்களாடா?” என சிவா வாயில் தண்ணீரை ஊற்றியவன் அப்டியே துப்பிவிட்டு “என்னது?” என அதிர்ச்சியாக மற்ற மூவரும் சிரிக்க,

மித்ரா “இல்லை, நான் அவன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணா நீ பொறாமைப்பட்டு என் பிரண்ட்ஷிப்பே வேணும்ங்கிற..நீ டென்ஷன் ஆகி கத்துனா அவன் உடனே என்கிட்ட வந்து அட்வைஸ் பண்ணி உன்கூட பிரண்ட்ஷிப்ப மெயின்டைன் பண்ணுனு சொல்லிட்டு போறான்..இதுவரைக்கும் இவனுங்க எல்லாம் பில்ட்டப் பண்ணி தான் கேட்ருக்கேனே தவிர நீயும் மித்ரனும் ஒரு தடவ கூட அடிச்சுகிட்டு சண்டைபோட்டு பாத்ததில்லையே…உங்களுக்குள் ஏதோ ஒண்ணு இருக்கு போலவே..சம்திங் சம்திங்?”

 

குணா, மகேஷ், ராஜீவ் “அட ஆமால்ல…மித்து இவளோ நாள் இதை யோசிக்கல…இவனுங்க இரண்டுபேரும் முறைக்கறது வாயிலையே வடை சுடுறதோட நிறுத்திட்டானுங்க…தனித்தனியா இவனுங்க சண்டை போட்டு பாத்திருக்கோம்..ஆனா இவனுங்க சண்டை போட்டு பாத்ததில்லையே… எங்கேயோ இடிக்கிதே..”

சிவா “அடச்சீ..அவ தான் லூசு மாதிரி உளறான்னா நீங்களும்..அதெல்லாம் ஒண்ணுமில்லை..”

மித்து “குணா, இதுவே நம்ம ரௌடி சிவாவா இருந்திருந்தா அவனுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பத்தி நீ கேட்டதும் உன்னை அடிச்சிட்டு தானே அடுத்து அவன் பேசிருப்பான்…இவளோ பொறுமையாவா பதில் சொல்லிருப்பான்” என எடுத்துக்கொடுக்க

குணா “அதானே..அப்போ மித்து சொல்றது உண்மையா…எந்த புத்துக்குள்ள எந்த பாம்பு இருக்குனே தெரில..ஐயோ சிவா உன்னை நாங்க ஊட்டி ஊட்டி வளத்தோமே எல்லாம் இதை பாக்கவா..? உன் ஆசைய எப்படி நிறைவேத்துவேன்..இந்த சமுதாயம் எப்படி ஒத்துக்கும்?” என புலம்ப

மித்து “விடு குணா..இப்போ செக்ஷன் இருக்கே..ஒன்னும் ப்ரோப்லேம் இருக்காது..விடு நாம இதை ஏத்துக்கத்தான் வேணும்..” என இவர்கள் பேசிக்கொண்டே போக

சிவா “ஐயோ..ச்சை கருமம்..அதெல்லாம் ஒண்ணுமில்ல…ஹே மித்து நீயே அவனை லவ் பண்ணிக்கோ…எனக்கு எல்லாம் அவன் ஒன்னும் வேண்டாம்…தயவுசெஞ்சு இப்டி பேசுறத மட்டும் நிப்பாட்டுங்க..நினைச்சாலே கண்ராவியா இருக்கு…” என அவன் கைகழுவ போக மகேஷ், ராஜீவ் குணா, மித்து நால்வரும் அன்று வீட்டிற்கு போகும்வரை இதே போல சொல்லி, கலாய்க்க, அடிக்க விளையாட என அன்று மகிழ்வுடன் பொழுதை கழித்தனர்.

 

கேண்டினில்  மித்ரன் அவனது நண்பர்களுடன் இருக்க அங்கே சிவா கேங்குடன் வந்தாள் மித்ரா. இவர்களை கண்ட மித்ரா புன்னகையுடன் “நான் போயி பேசிட்டு வரேன்” என கூறிவிட்டு செல்ல

சிவா “நீ திருந்தவே மாட்ட..” என சலித்துக்கொள்ள அதை பொருட்படுத்தாமல் மித்ரனிடம் சென்றவள் “ஹலோ பாஸ்…” என

அவன் பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சிவாவை பார்க்க அவன் நண்பர்களுக்கும் அதே சந்தேகம் தான் அதை உணர்ந்த மித்ரா “அதெல்லாம் அவனுங்க எதுவும் சொல்லமாட்டாங்க…” என

குமார் “அப்டினா மித்ரனை லவ் பண்ணலன்னு சொல்லிட்டியா?”

“நே….அது எதுக்கு சொல்லணும்…இப்போவும் லவ் பண்றேன் தான்..”

“அப்புறம் எப்படி இவளோ அமைதியா இருக்கானுங்க..”

“அதெல்லாம் நான் தனியா பேசி அவனுங்களுக்கு புரியவெச்சுட்டேன்..” என கெத்தாக கூற

” அதெப்படி சாத்தியமாச்சு..ஒருவேளை கெஞ்சி கால்ல விழுந்திட்டியோ?”

“ஓய்ய்..”

“இல்லடா…இவ விடாம பேசிட்டே இருந்திருப்பா…அதுல இருந்து தப்பிக்க வழி தெரியாம நீ சொல்றதுக்கு ஓகேனு சொல்லிருப்பானுங்க..” என

டீ குடித்திக்கொண்டிருந்த குணா சட்டென சிரித்துவிட்டு “டேய் குமார்…சரியா சொன்ன…உண்மையா அதுதான் நடந்தது…நீ இவளோ நாள் லூசு மாதிரி பேசுனாலும் இன்னைக்கு நீ சொன்ன விஷயத்தை நான் கண்டிப்பா ஒத்துக்கறேன்..” என அனைவரும் சிரிக்க சிவா, மித்ரன் வெளியே தெரியாமல் சிரிக்க

கடுப்பான மித்ரா “டேய் என்னங்கடா ரொம்ப ஓவரா போறீங்க…இவளோ நாள் குரங்கு மூஞ்சி, கொரில்லா வாயன்னு மாத்தி மாத்தி நீங்க எல்லாரும் அசிங்கப்படுத்தினது எல்லாம் மறந்துபோட்ச்சா..வந்தேன் டில டெட்டாயில் ஊத்திடுவேன்…ஒழுங்கா இரு..” என மிரட்டினாள்..

 

அங்கே முகத்தை தொங்கப்போட்டுகொண்டு ஒருவன் வர குமார் “என்னடா மச்சி, இப்டி காலையிலேயே சோககீதம் வாசிச்சிட்டு வர? என்னாச்சு?”

“பாஸ்கெட் பால் மேட்ச் வருது…அந்த Dragon கேங் பசங்க ‘இந்த தடவையும் நீங்க தோக்க தான்டா போறீங்கனு எவ்ளோ திமிரா பேசிட்டு கலாய்ச்சிட்டு போறாங்க தெரியுமா?” என

மித்ரா புரியாமல் “ஆச்சரியமா இருக்கு, இங்க இவளோ பெரிய பிலேயேர்ஸ் வெச்சுகிட்டு எப்படி தோத்திங்க…எப்போ மேட்ச்?”

“பிரச்னையே அதுதான்.. மித்ரன் இருந்தா சிவா வரமாட்டான்..சிவா இருந்தா மித்ரன் வரமாட்டான்…முத வருஷம் சிவா கேங் மட்டும் போயி தோத்திட்டு வந்தது. செகண்ட் இயர்ல மித்ரன் கேங் மட்டும் போயி தோத்திட்டு வந்தது.. இவனுங்க பிரச்னையை விட்டுட்டு சேர்ந்து ஒரு டீம போனா கண்டிப்பா நம்ம தான் வின்…சொன்னா கேட்டாதானே…அந்த அரைகுறைங்க எல்லாம் இவளோ அலப்பறை குடுப்பானுங்களா? நம்ம panthers டீம் மானம் போகுது, காலேஜ் மானம் போகுதுனு எல்லாம் இவனுங்களுக்கு கவலை இல்லை..ஒண்ணுமே இல்லாத இவனுங்களோட ப்ரோப்லேம் தான் முக்கியம்..அதவே கட்டிக்கிட்டு அழுங்கடா..ச்ச…” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த

சிவா, மித்ரன் உட்பட பிறரும் அமைதியாக இருக்க மித்ரா “கரண் அண்ணா தான் இவளோ தூரம் சொல்ராங்களே…நீங்க இரண்டுபேரும் ஏன் சேந்து இந்த மேட்ச் போகக்கூடாது…இனி அடுத்து ஒரே ஒரு வருஷம் தான்…அப்புறம் எல்லாம் இந்த மாதிரி சான்ஸ் நீங்க ஆசைப்பட்டா கூட வராது…” என அனைவரும் ஆமா டா மித்ரா சொல்றது கரெக்ட்டா…மத்த கோபத்தை எல்லாம் விட்டுட்டு மேட்ச்ல வின் பண்றத பாப்போம்டா..இந்த ஒரு தடவ..” என

மித்ரன் “எனக்கு எந்த பிரச்னையும் இல்ல..சிவாவை காட்டி அவனுக்கு ஓகேனா எனக்கு ஓகே தான்..” என

அனைவரும் சிவாவை பார்க்க இங்கே குணா, மகேஷ், ராஜீவ் கூட “டேய் மச்சான்.. நீ சொல்றதுல தான்டா இருக்கு..சரினு சொல்லுடா..வீம்பு பண்ணாத டா ” என கெஞ்ச அவன் விட்டெறியாக அமர்ந்திருக்க மித்ரா இது ஆவரதுக்கில்ல என்றவள் நேரே சிவாவிடம் சென்று  “என்ன சிவா..மித்ரன்கூட விளையாண்டா உன் கண்ட்ரோல நீ இழந்திடுவேன்னு ஒருவேளை பீல் பண்றியோ? வேணா லவ் உனக்காக விட்டுகுடுத்திடவா?” என

சிவா “அடச்சீ…அதெல்லாம் ஒண்ணுமில்ல..”

“நீ வேற எதுனால அவன்கூட சேந்து விளையாடமாட்டேனு சொல்லு..இல்லாட்டி நான் ஊர் முழுக்க இப்டி தான் பரப்பிவிடுவேன்..”

“பல்லை ஒடச்சிடுவேன் மித்து..”

“ஒடச்சாலும் எழுதி காட்டுவேனே…என்ன பண்ணுவ?”

பிறர் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் விழிக்க மித்ரா “மகேஷ், ராஜீவ், குணா நாம நேத்து பேசுன மாதிரி தான்..சிவாவோட பிரச்னை என்னனு நாம எல்லார்கிட்டயும் சொல்லிடலாம்..அப்போதான் அவங்களும் புரிஞ்சுப்பாங்க..” என சீரியஸக பேச “அது தான் சரி..கண்டிப்பா சொல்லிடலாம்…” என

சிவா “டேய் நீங்களுமா இவகூட சேந்திட்டு…” என கடுப்புடன் கத்திவிட்டு “சரி மேட்ச்ல கலந்துக்கறேன்..” என மித்ரா “கேட்கல..நீ மட்டும் கலந்துக்க போறியா என்ன?”

சிவா “உன்னை…மித்ரன் நான் இரண்டுபேருமே மேட்ச்ல கலந்துக்கிட்டு இந்த டைம் வின் பண்றோம்..போதுமா?” என

அனைவரும் மகிழ்வுடன் கத்தி கூச்சலிட சிவா, மித்ரன் மற்றும் மற்றவர்கள் அங்கிருந்து சென்ற பின் குமார் மட்டும் இவர்களிடம் வந்து “மித்ரா..நீ என்ன சொன்ன..அவன் எப்படி ஓகே சொன்னான்?”

குணா “அதுவா இப்போ முக்கியம்? எப்டியோ ஒத்துக்கிட்டான்..விடுவியா?”

குமார் “அதெப்படி அப்டியே விடமுடியும்..எனக்கென்னமோ எதையோ வெச்சு நீங்க அவனை பிளாக் மைல் பண்றமாதிரி தெரியுது…சிவா பயப்படுற அளவுக்கு ஒரு விஷயம் இருக்குன்னா அது என்னனு தெரிஞ்சுக்கவேண்டாமா?” என

மகேஷ், ராஜீவ் “அது இப்போதைக்கு வேண்டாம்… ” என

மித்து “அது வெளில தெரியாத வரைக்கும் தான் நமக்கு சேப்…அப்போப்போ இப்டி நமக்கு வேணும்ங்கிறதை நிறைவேத்திக்கமுடியும்….சோ கீப் இட் சீக்ரெட்..” என கூறிவிட்டு அவள் ஓடிவிட ராஜீவ் “ஆமாடா யாருகிட்டேயும் சொல்லிடாத..” என அவனும் மகேஷும் சென்றுவிட

குணா “சொன்ன அவ்ளோதான்டா..” என அவன் செல்ல போக குமார் “டேய் பைத்தியக்காரா எதுமே நீங்க இன்னும் சொல்லலடா…”

குணா “அதான் விசாரிக்காதானு சொல்லவந்தேன்..” என ஒளறிவிட்டு ஓடிவிட்டான்..

குமார் “இந்த பைத்தியங்கள..” என அவனும் சென்றுவிட்டான்.

அடுத்த ஒரு வாரத்தில் மேட்ச் இருக்க அனைவரும் கிரௌண்டில் இருக்க மித்ரா அங்கே சென்று பேசிவிட்டு “பை ஆதி..” என்றாள்..அனைவரும் யாரை சொல்ற என வினவ “மித்ராதித்தன்..நீங்க எல்லாரும் மித்ரன்னு கூப்பிடுங்க..நான் ஸ்பெஷல் தானே சோ என் லவர ஸ்பெஷல ஆதினு கூப்பிடறேன்..உங்களுக்கு என்ன டா?” சிவா, மித்ரன் இருவரும் இதை கேட்டு இவளை திருத்தவே முடியாது என்பது போல ஒரே மாதிரி ரியாக்ஷன் குடுத்துவிட்டு விளையாட சென்றுவிட சுற்றி அனைவரும் சிரிக்க மித்ரா “என்ன இவனுங்க ட்வின் பிரதர்ஸ் மாதிரி பண்ணிட்டு போறாங்க..ச்ச…” என அவள் செல்ல அனைவரும் ஆதி ஆதி என கத்த திரும்பி வந்தவள் “டேய் எனக்கு மட்டும் தான் அவன் ஆதி..வேற யாராவது மித்ரனை அப்டி கூப்பிட்டீங்க…”

“என்ன பண்ணுவ?”

“சிவா மித்ரன் விஷயத்தை வெளில சொல்லிட்டு நீங்க தான் பரப்பிவிட்டிங்கனு அவனுங்ககிட்ட போட்டுகுடுத்திடுவேன்…முக்கியமா சிவாகிட்ட நீ செத்த மவனே..

மகேஷ் “நான் சொல்லிருக்கமாட்டேனு தெரியுமே..சிவா நம்பமாட்டானே…”

“உன்னை நான் மகிகிட்ட கோர்த்துவிட்ருவேனே….உன் லவ் உப்….”

அவனும் அடங்கிவிட “வாலசுருட்டிட்டு ஒழுங்கா இருங்க..” என மிரட்டிவிட்டு சென்றுவிட்டாள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 15’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 15’

15 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   காலையிலேயே அனைவரும் எழுந்து வேலை செய்ய எங்கேயோ கிளம்ப சிந்து, சங்கர், கவிதா அனைவரும் வந்து எழுப்பியும்  “கடைக்கு நீங்களே போயிட்டு வாங்க மா..எனக்கு சொகமா தூக்கம் வருது..நான் இப்டியே இருக்கேன்..”

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 10’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 10’

10 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அடுத்து வந்த காலங்களில் எப்போதும் போல படிப்பு காலேஜ் அவ்வப்போது சில பேச்சுகள் பிரச்சனைகள் என சாதாரணமாக சென்றுகொண்டிருக்க அடுத்த ஒரு வருடம் கண்ணிமைப்பதற்குள் ஓடிவிட இறுதி செம் வந்தது. ஆனால்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’

3 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் சிவா “எது எதுல விளையாட்றதுன்னு இல்லை? அதுவும் காலேஜ்ல வந்து அர்ரெஸ்ட் ம்ம்? ரொம்ப மோசமானவனா இருந்து இதுக்காகவே உன்கிட்ட பிரச்சனை பண்ணிருந்தா என்ன பண்ணுவ? நாங்க ஏதோ நல்ல பசங்கள இருக்கறதால