Tag: தமிழ் நாவல்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9

“பிரேமா ப்ளீஸ் இன்னும் ஒரு முறை நீ ஈஸ்வரை மீட் பண்ணியே ஆகணும்” ராபர்ட் கெஞ்சும் குரலில் கேட்டான். “என்னால முடியாது ராபர்ட்” “இப்படி சொல்லக் கூடாது பிரேமா. இப்படி பாதியில் விட்டா நாங்க என்ன செய்வோம். இது உன் தொழில்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8

அலுவலகம் இருக்கும் தெருவிலேயே இருந்த மிகச்சிறிய தள்ளுவண்டிக் கடை. மினுக் மினுக்கென கண்சிமிட்டிய தெருவிளக்கு. அதனையே நம்பி வியாபாரம் செய்யும் குடும்பம். அந்த விளக்கொளியில் குண்டானிலிருந்த இட்லிகளில் ஈ மொய்த்தது கண்டு சிலர் ஒதுங்கிச் செல்ல, கொஞ்சம் கூட அசூயை இன்றி

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7

முகமெல்லாம் சிரிப்புடன் மாரா ஜெயேந்தரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள். “ஹன்ட்ரெட் பெர்சென்ட் என்னை அவன் நம்பிட்டான். என்னை நம்பு ஜெய் அவன் கண்ணைப் பார்த்தே சொல்லிடுவேன். கண்டிப்பா அவன்கிட்ட மாற்றம் தெரியும்” “தெரியுது. நேத்து கவுன்சிலிங் தர்ற இடத்துக்குத் தானா போயிருக்கான்,

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 6உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 6

ஜெயேந்தர் மாராவிடம் ஈஸ்வர் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தந்தான். “மரணமே… நீ யாரும் பதலளிக்க விரும்பாத அழைப்பு. சிலர் உன்னை வரவேற்கலாம். ஆனால் பலருக்கு நீ தருவது மனவலியை மட்டுமே. இப்படி இருக்கும்போது உன்னை பெரிதாகப் பார்த்து எல்லாரும் பயப்படணும்னே இதெல்லாம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5

போதையின் ஆரம்பக் கட்டம். ஆனாலும்  நிதானமாகவே கடற்கரை மணலில் நடந்தான் ராபர்ட். அவனை சந்திப்பதாக சொல்லியிருந்த மூன்று நடிகர்களும் வீட்டுக்கு வரவில்லை. ஒரு நேர்காணலுக்கே நேரத்தோடு வர முடியாதவர்களை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது. தமிழ் நாட்டின் சாபம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 4உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 4

நீலாங்கரையிலிருக்கும் அந்த ஃபார்ம்ஹவுசை  ஆர் ஆர் நிறுவனம் லீசுக்கு வாங்கியிருந்தது. பக்கத்தில் ப்ரைவேட் பீச் ஒன்றும் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு பிக்னிக் வந்திருக்கிறார்கள். இனிமையான தருணங்கள் பலவற்றைத் தன்னுள் கொண்ட இந்த

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 3 (youtube link)உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 3 (youtube link)

அந்த பார்க்கில் ஈஸ்வர் வேகமாய் ஓடி மூச்சிரைக்க இரைக்க பாலைப் போட, தனது சின்னஞ்சிறு கைகளால் கிரிக்கெட் பேட்டைப் பிடித்திருந்த அந்த சின்னஞ்சிறுவன் தனது பேட்டினால் ரப்பர் பந்தினை அடிக்க அது பறந்து சென்று வெகு தூரத்தில் விழுந்தது. “அப்பா சிக்ஸர்

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதிகல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதி

என் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார்.   பேச்சின் நடுவில் “என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய்

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 5கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 5

மறுநாள் ஸர்தார்பவன் ஹோட்டலுக்குப் போனேன். மனோகரி மட்டும் அறையில் தனியாக இருந்தாள். அவள் தகப்பனார் என்னைப் பார்ப்பதற்காகத்தான் போயிருப்பதாகச் சொன்னாள். அன்றிரவு தன்னால் எனக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்தாள்.   “இது என்ன பிரமாதம்? சில நிமிஷ நேரம்

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 4கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 4

ரயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு என்னைக் கொண்டு போனார்கள். என்னுடைய பெட்டி படுக்கையும் கொண்டுவரப்பட்டன. ‘புஷ்கோட்’ மனிதர்கள் மூவரும் வந்து பெட்டி, படுக்கைகளைச் சோதனைப் போட்டார்கள். என்னையும் சோதித்தார்கள். துணிகளைக் கிழித்து மட்டும் பார்க்கவில்லை. மற்றபடி சாங்கோபாங்கமாகத் தேடினார்கள். என்னிடமிருந்து ஒன்றும் அகப்படவில்லை!

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 3கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 3

திண்டுக்கல் ஸ்டேஷனில் வண்டி நின்றது. “சிறுமலை வாழைப்பழம்”, “சாம்பார் சாதம்” “பிரியாணி” என்னும் கூக்குரல்கள் காதைத் துளைத்தன. அந்த மனிதர் இறங்கி அவசரமாகப் போனார். பெட்டியை வைத்து தொலைத்து விட்டுதான் போனார். அந்தப் பெண் ஒரு வேளை இந்த வண்டியில் ஏறிக்

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 2கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ – 2

என் வண்டியில் ஏறிய மனிதர் “அப்பா! பயங்கரம்!” என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன். படித்த நாகரிக மனிதராகக் காணப்பட்டார். வயது நாற்பது இருக்கும். ஐரோப்பிய உடை தரித்திருந்தார். அவருடைய கண்கள் ரயிலின் அபாய அறிவிப்பு விளக்கைப் போல் சிவப்பாக ஜொலித்தன.