Tamil Madhura கவிதை புன்னகையே பதிலாய் (கவிதை)

புன்னகையே பதிலாய் (கவிதை)

வணக்கம் தோழமைகளே!

நமது தளத்துக்கு தனது கவிதை மூலம் வருகை தந்திருக்கும் சுரபி மூர்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். 

இத்தனை அழகாய் காதலை சொல்லும் காதலிக்கு அவனின் புன்னகை கிடைக்காமலா போய்விடும் சுரபி. 

அன்புடன்,

தமிழ் மதுரா

 

 

புன்னகையே பதிலாய்

 

என்னவனே

என் அன்பு காதலனே..

 

கடற்கரை மணலில் உன் பெயர் எழுதி

உன்னை அலைகளுக்குள் தொலைத்துவிட எண்ணவில்லை..

 

என் நெஞ்சில் உன் பெயரை பச்சை குத்திக்கொண்டு

பெயரோடு மட்டும் பெருமை கொள்ள விரும்பவில்லை..

 

பரிசுகளில் உன்னை மூழ்கடித்து வெற்றுப் பொருட்களால்

என் விருப்பம் சொல்ல விழையவில்லை..

 

முத்தங்களால் உன் கன்னம் சிவக்க செய்து

என் காதல் சொல்லி தீர்க்க தெரியவில்லை..

 

ஆனால்…..

 

உன் கை கோர்த்து வாழ்க்கைப் பாதைதனைக்

கடக்கும் கனவு காண்கிறேன்..

 

விழி முழுதும் உன் பிம்பம் தேக்கி

உன்னை எனக்குள் சிறை வைக்க வேண்டுகிறேன்..

 

உன் வித்தை என் வயிற்றில் சுமந்து

உனக்காக உயிர் வலி பொறுத்து

உன் சாயல் கொண்ட நம் சிசுவை கையிலேந்த விழைகிறேன்..

 

ஒன்றென கலந்து ஓருயிர் ஆகும் நமக்கு பிரிவென்பது வரும்போது

உன் மடியில் என் இறுதி உறக்கமும்

உன் இறுதி மூச்சு என் இரு நாசித்துவாரங்களிலுமே வேண்டும்..

 

யோசித்து சொல்..

உன் இரு விழி பார்வைக்காய் ஏங்கும் என் இதயத்திற்கு

நல்லதொரு பதில்

உன் சிறு புன்னகையில்..

 

— சுரபி மூர்த்தி

1 thought on “புன்னகையே பதிலாய் (கவிதை)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு – (கவிதை)நிலவு – (கவிதை)

  நிலவு   இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே விண்மீன் கூட்டத்தின் தலைவனே! ஒரு காலம் தோன்றுதலும் ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே உன்னைக் காண மனம் துடிக்குதடா

அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

என் காதல் வானிலே இரவிலும் வானவில் தோன்றுதே என்னுள் பூத்த பூவொன்று வாழ்வில் வாசம் வீசுதே உள்ளங்கையில் புதிதாகக் காதல் ரேகையும் தோன்றுதே வெயிலிலும் ரகசியமாய் மழைச்சாரல் என்னை நனைக்குதே உன்னிடம் மட்டுமே சொல்லிட கதைகள் கோடி உள்ளதே உனக்காக மட்டுமே

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்