Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 32

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 32

 

நிலவு 32

 

“மீரா, இப்போ நீ நிற்க இல்லை, இனிமேல் உன் கூட பேசவே மாட்டேன்” என்று அவள் பின்னே சென்றான் அஸ்வின் அவள் அறைக்கு.

 

“அச்சு, இது சின்ன குழந்தைகள் பேசுறது போல இருக்குடா” என்று அறைக்குள் நுழைய அஸ்வின் அவனும் நுழைந்தவுடன் கதவை அடைத்து தாழ்ப்பாள் இட்டான்.

 

“இப்போ எதுக்கு கதவை தாழ்பாள் போட்ட?” என்று மீரா கேட்க, 

 

அவன் பதில் கூறாமல் நெருங்க, 

 

“எதுக்கு கிட்..ட வ…ர?” என்று வார்த்தைகள் தந்தியடிக்க,  அவன் நெருங்க இவளும் பின்னே செல்ல அஸ்வினுக்கு உதவுவதற்காக பின் இருந்தது சுவர்.

 

அதில் சாய்ந்தவள், “அ..ச்..சு, நீ” என்றது மாத்திரமே அஸ்வினுக்கு விட்டு விட்டு கேட்டது, அதன் பிறகு அவள் வாயிலிருந்து காற்றே வெளிவந்தது. 

 

அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் படுமாறு அவளை நெருங்கி நின்று,

 

“இப்போ நான் உன்னோட இரண்டு கேள்விகளில் எந்த கேள்விக்கு பதில் சொல்லட்டும்?” என்று கேட்க,

 

மீரா கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தாள். 

 

“சொல்லு மீரு” என்று அவன் கூற, அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 

 

அவள் முகத்தை கையில் ஏந்தியவன், “இரண்டு நாளா, உன் கூட டைம் ஸ்பென் பன்னவே கிடைக்க இல்லை. அது மட்டுமில்லை மீரு, அழகா வந்து கொல்றியேடி, நான் கிட்ட வந்தாலே தள்ளிப்போற அதான், எனக்கு தேவையானதை நானே எடுத்துக்க வந்தேன்” என்று அவளிதழை முற்றுகையிட்டான்.

 

தன் தேவையை நிவர்த்தி செய்து அவளை விடுவித்தவன், அவன் பிறை நெற்றியில் தன் இதழைப் பதித்தான். 

 

“இது தான் உன்னோட முதல் கேள்வி, இரண்டாவது கேள்விக்கு பதில்” என்றான் கண்ணடித்து. 

 

“சீ போடா, ரொம்ப கெட்டவனா மாறிட்ட” என்றாள் அவன் நெஞ்சில் தலைசாய்ந்து.

 

“ஹூம்ம்…. இன்றைக்கு காலையில் உன் நெற்றியில் குங்குமம் வைத்ததுக்கு நெற்றி வகுட்டுல வைத்திருந்தா இப்போ என் பொன்டாட்டி ஆகிருப்ப, ஆரவ் ஐடியா எனக்கு தோனாமல் போயிருச்சே” என்றான்.

 

“விடு அச்சு, நம்ம கல்யாணத்தை கிறு என்ஜோய் பன்னனும் டா, அதற்காக நிச்சயமாக நம்ம கல்யாணத்தை கிரேன்டாக பன்னனும், அது மட்டும் இல்லை டா, நீ கவனிச்சியா? கிறு இப்போ ஆரவை கண்ணான்னு தான் கூபிடுறா?” என்றாள்.

 

“அப்படியா?” என்று அவன் கேட்க,

 

“நல்லா வருவடா, நீயெல்லாம் பெரிய பிஸ்னஸ் மேன்னு வெளியில் சொல்லாத” என்றாள்.

 

“ஆரவ், கிறு இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் சந்தோஷமா பாத்துக்கனும் நினைக்குறாங்க, அவங்க காதலை இரண்டு பேருமே சீக்கிரமா உணர்ந்துருவாங்க” என்றான் அஸ்வின்.

 

“நீ சொல்றது நடந்தால் சரி தான்” என்றாள் மீரா.

 

அன்று மாலை நேரம் முதலிரவிற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படன. கிறுவையும் அலங்கரித்து அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்தனர்.

 

உள்ளே சென்று, அவனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற மனநிலையில் வந்தாள்.

 

கட்டிலில் அமர்ந்து மொபைலை நோண்டிக் கொண்டு இருந்தவன், கிறு பதட்டமாக இருப்பதைக் கண்டவன், 

 

“என்னாச்சு மெடம்? அமைதியா இருக்கிங்க?” என்று கேட்க,

 

“அது, நான்” என்று கிறு தடுமாற 

 

“ரிலேக்ஸ், நீ இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற? நாம பிரன்ஸ் ஞாபகம் இருக்கா, ஒரு பிரன்ட் கூட இருக்க, நீ ஏன் பயபடுற?” என்று அவன் கேட்க,

 

அவன் பேசியதில் normal ஆகியவள், அவள் குறும்பு சற்று தலைதூக்க,

 

“நான் உன்னை பிரன்டா எப்போ ஏத்துகிட்டேன்?” என்றாள்.

 

“அப்போ நீ என்னை பிரன்டா ஏத்துக்கவே இல்லையா?” என்று தன் கவலையை மறைத்து கேட்க,

 

“என் பிரன்டா இருக்கனும்னா சில கன்டிஷன் இருக்கே” என்றாள் அவன் முகத்தை ஆராய்ந்த படி.

 

“என்ன?” என்று அவன் கேட்க,

 

“நான் சொல்கிறதை செய்வியா?” எனக் கேட்க,

 

அவள் கைபிடித்து அவன் அருகில் அமர வைத்தவன், அவள் கண்களைப் பார்த்து,

 

“செய்வேன் மிஸஸ் ஆரவ் கண்ணா” என்றான்.

 

முதலில் தடுமாறியவள் பின் தன்னை சரி செய்து,

 

“மூன்று நேரமும் டைமுக்கு சாப்பிடனும், கட்டாயமாக ஆறு மணி நேரம் தூங்கனும் என்ட் இ.டி.சி” என்றாள்.

 

“இது யாருக்காக உருவாக்கிய கன்டிஷன் கிறுஸ்தி?” என்று கேட்க,

 

“எல்லாம் என் புருஷன் கண்ணனுக்காக தான் ஆரவ், என்ன சேர் செய்விங்களா?” என்றாள்.

 

“கண்டிப்பா, ஆனால் அந்த இ.டி.சி என்ன?” என்றான் ஆரவ்.

 

“அந்த நேரத்துக்கு தேவைப்படும் போது சொல்லுவேன் கண்ணா டோன்ட் வொரி” என்றாள் சிரித்துக் கொண்டே.

 

“சரி தூங்கலாமா?” என்று அவள் கேட்க,

 

“ஒகே, நான் சோபாவில் தூங்கிக்கவா?” என்று ஆரவ் கேட்க,

 

“என்னை பார்த்தால் பூசணிக்காய் போல இருக்கா?” என்றாள் கோபமாக.

 

“இல்லை, எதுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசுற?” என்று அவன் புரியாமல் கேட்க,

 

“இவளோ பெரிய கட்டில் எனக்கு எதுக்கு? பெரிய பூசணி போல இருக்கிறவங்களுக்கு தான் பெட் புள்ளா தேவைப்படும்” என்றாள்.

 

“இப்போ என்ன? நான் அந்த பெட்டில் தூங்கனும் அவளோதானே” என்று கேட்க,

 

“பரவால்லை கண்ணா, உனக்கும் அறிவு இருக்கு பாறேன்” என்று நைட் டிரஸ்ஸை எடுத்துக் கொண்டே ஆச்சரியப்பட,

 

“அடிங்……”என்று அவன் துரத்த ஆரம்பிக்க கிறு வேகமாக, துணியை எடுத்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

ஆரவ் சிரித்துவிட்டு, கட்டிலின் ஒரு புறம் சாய்ந்து அமர்ந்து, நாளைய மீட்டிங்கிற்கான வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

 

கிறு ஆடையை மாற்றிவிட்டு, கட்டிலின் மறுபுறம்  சென்று படுத்துக் கொண்டாள். 

 

ஆரவின் புறம் திரும்பி, “நாளைக்கு  நீ இங்கே இருந்து எத்தனை மணிக்கு கிளம்புற?” என்று கிறு கேட்க,

 

“நாளைக்கு காலையில் நாலு மணிக்கு” என்றான் லெப்டொப்பை பார்த்தபடி.

 

“இப்போவே பத்து மணி கண்ணா, காலையில் சீக்கிரம் போகனும் சொ லெப்பை வச்சிட்டு தூங்கு” என்றாள்.

 

“கொஞ்சம் வேலை இருக்கு கிறுஸ்தி, இது தான் லாஸ்ட் இதற்கு அப்பொறமா லேட்நைட் வேலை பார்க்க மாட்டேன் புரொமிஸ்” என்றான்.

 

“அப்போ ஒகே” என்று அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்து, ஆரவையும் ஒரு முறை பார்த்துவிட்டு கண்களை மூடினாள்.

 

ஆரவும், ஒரு மணி போல் வேலையை முடித்து விட்டு மூன்று மணி போல் எழுந்தான். அவன் எழும் போதே பார்த்தான், கிறு அவனது கையை இறுக பற்றிக் கொண்டு உறங்குவதை. அவன் புன்னகைத்து அவளிடம் இருந்து தன் கையை அவள் தூக்கம் கலையாத வண்ணம் பிரித்து எடுத்து குளிக்கச்சென்றான். பின் மூன்று நாற்பத்தைந்தை போல் தயாராகி, கிறுவிடம் வந்தான்.

 

‘கிறுஸ்தி’ என அவளை எழுப்ப சிறு குழந்தைப் போல் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தவளை, அவனால் இரசிக்காமல் இருக்க முடியவில்லை.  

 

“கிளம்பியாச்சா? இரு வரேன்” என்று கட்டிலில் இருந்து இறங்கப் போனவளை தடுத்து,  

 

“நீ தூங்கு நான் போயிட்டு சீக்கிரமா வரேன்” என்று கூறி சில அடிகள் சென்றவன் மீணடும் அவளிடம் வந்தான்.

 

“என்ன?” என்று அவள் கேட்க,

 

“தயவு செஞ்சு நான் வருகிற வரைக்கும் யாருகிட்டவும் வம்பிழுக்காத வாயாடி” என்று கூறி அவள் நெற்றியை தன் நெற்றியோடு முட்டிவிட்டுச் சென்றான்.

 

அவன் செய்கையில் அதிர்ந்து இருந்தவள், அவன் கூறியதைக் கேட்டு சிரித்தாள்.

 

‘பயபுள்ளை, நாம நினைச்சதை கரெக்டா கண்டு பிடிச்சு சொல்றானே, ஏதாவது தப்பு பன்னா, இப்போ நான் ஆரவ் பொன்டாட்டின்னு சொல்லி தப்பிக்கலாம்னு பார்த்தால், இவன் அதை தான் பன்னுவேன்னு எப்படி கண்டுபிடிச்சான்’ என்று கட்டிலில் யோசித்து உறங்க, நித்ராதேவியும் ஆட்கொண்டாள்.

 

கீழே சென்றவன், கிறுவின் குடும்பதினரிடம் கூறி விட்டு, அவளை திட்ட வேண்டாம் என்ற கோரிக்கையோடு டெல்லியை நோக்கி புறப்பட்டான். அடுத்த நாள் காலை எட்டு மணி போல் எழுந்த கிறு குளித்து சுடியொன்றை அணிந்து கீழே வந்தாள். அனைவரிடமும் பேசி விட்டு மொபைலை எடுத்துக் கொண்டு கார்டனில் சென்று அமர்ந்தாள்.

 

“குட் மோர்னிங்” என்று ஆரவிடம் இருந்து மெசேஜ் வர அவளும் ” ஹப்பி மோர்னிங்” என்று பதில் அனுப்பினாள்.

 

“எங்கே இருக்க?” என்று கேட்க,

 

“பிளைட்டுக்குள்ள இருக்கேன், நான் லேன்ட் ஆனதுக்கு அப்பொறம் பேசுறேன் பாய்” என்று அவன் அனுப்ப

 

இவளும் “பாய்” என்று முடித்துக் கொண்டாள்.

 

அவள் ‘ஆரவின் மீடிங் நல்லபடியாக முடிய வேண்டும்’ என்றே எண்ணிக் கொண்டு இருந்தாள்.

 

வினோ, “என்னடி புருஷனை விட்டு ஒரு நாள் சரி இருக்க முடியலையா?” என்று கிண்டலாக கேட்க,

 

“இல்லை டா, இது அவனோட கனவு, எல்லாம் நல்ல படியா முடியனும்னு நினைத்தேன்” என்றாள்.

 

“ஆரவ் ஒரு வேலையில் கையை வச்சா, அதில் வெற்றி பெறாமல் இருக்கமாட்டான்” என்று அஸ்வின் வர அவனைத் தொடர்ந்து வானரக் கூட்டம் முழுவதுமே வந்தது.

 

“ஆனாலும் பயமா இருக்குடா, அவன் எந்த பிஸ்னஸ் விஷயமா இருந்தாலும் நிதானமா ஹென்டில் பன்னுவான், பட் நம்ம கனவுன்னு வரும் போது எங்களை அறியாமலஃ நாம நேர்வர்ஸ் ஆகுவோம் டா” என்றாள் கிறு சீரியசான குரலில்.

 

‘எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்று அனைவரும் அவளுக்கு ஆறுதல் கூறினர். 

 

சிறிது நேரம் இயல்பாக அவர்களுடன் அரட்டை அடித்து விட்டு காலை உணவை உண்ணச் சென்றனர். அதிலும் கலகலப்பாக உண்டாலும் அனைவருக்கும் ஆரவ் இல்லாத குறை நன்றாகவே தெரிந்தது. பதினொரு மணி போல் டெல்லியில் இருப்பதாகவும், மாலையில் மீடிங் முடிந்த பிறகு அழைப்பாதகவும் கிறுவிடம் கூறி அழைப்பைத் துண்டித்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 27யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 27

நிலவு 27   “என் மகன் ஆரவுக்கும், என் மருமகள் கிறுஸ்திகாவுக்கும் நான் முன்னாடி நின்று கல்யாணத்தை நடத்துகிறேன். ஆரவ் உனக்கு அப்பா, அம்மா நாங்க இருக்கோம்” என்றார் அருணாச்சலம்.    அனைரின் மனதும் இன்பத்திலும், நிம்மதியிலும் நிறைந்து இருந்தது.  

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 45யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 45

நிலவு 45   கிறு அவளது அலுவலகத்திற்கு சென்று காரில் இருந்து இறங்கும் போதே மெனேஜர் அவளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்க, அவளும் தனது நன்றியை தெரிவித்து உள்ளே செல்ல அனைவரும் அவளை வரவேற்க வரவேற்பரையில் நின்றிருந்தனர்.    அதே நேரம்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3

நிலவு 3   வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம்.    ‘என் மகன் வளர்ந்து விட்டானா? எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா? நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறுக்காக இருக்கிறேனா? ஒரு வேளை வினோ