Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 25

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 25

நிலவு 25

 

கோயிலை வந்தடைந்தவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்தனர். சிறியவர்கள் பெரியவர்களுக்கு உதவிகளை செய்துக் கொண்டு இருந்தனர்.

 

சாவி, ” பொங்கலுக்கான பானை காரில் இருக்கு கிறு நீ போய் அதை எடுத்துட்டு வா மா” என்றார். 

 

அவளும் கார் இருக்கும் இடத்திற்கு நகர்ந்தாள். காரைத் திறக்க அங்கே எந்தப் பானையும் இருக்கவில்லை. மீண்டும் சாவியிடம் வந்தாள்.

 

“அம்மா, அங்க எந்ந பானையும் இல்லை. ஒரு வேளை நீ வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டியா? ” என்று கேட்க,

 

” இந்து நீ பொங்கலுக்கான பானையை காரில் வைக்க இல்லையா?” என்று கேட்க,

 

இந்து,” வினோ கையில் கொடுத்தேன் கா, அவன் வச்சிருப்பான்” என்று கூற

 

“அப்போ நீங்க அதை மறக்க வேண்டியது தான், அவன் கண்டிப்பா அதை எடுத்து வச்சிருக்க மாட்டான்” என்றாள் கிறு.

 

“அடேய் எருமை வினோ ” என்று கத்த 

 

சாவி, ” என்னடி கோயில்ல போய் இப்படி பேசுற ” என்று அதட்ட,

 

“அவனுக்கெல்லாம் எதுக்கு மா மரியாதை?” என்று 

 

” டேய் எருமை ” என்று கத்த 

 

” என்னடி கோயில்ல போய் பேட் வேர்ட்ஸ் பேசுற? ” என்று அங்கே வந்தான் வினோ.

 

“எங்கடா பொங்கல் பானை?” என்று கேட்க, 

 

” யேன் நீங்க யாரும் எடுக்க இல்லையா?” என்றான் வினோ.

 

“அம்மா, நான் தான் சொன்னேனே” என்று சாவியிடம் குறை கூறியவள், 

 

“இவன் கிட்ட போய் சொல்லி இருக்கிங்களே இந்துமா இவனை ” என்று அவனுடை நெறிக்க போவது போல கையை கொண்டு செல்ல 

 

“கொலை கொலை” என்று வினோ கத்த, மற்ற சிறியவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

 

“எதுக்குடா கோயிலில் வச்சு மானத்தை வாங்குறிங்க? ” என்று கடிந்தான் அஸ்வின்.

 

“அஸ்வின், அவன் கையில் கொடுத்த பொங்கல் பானையை வீட்டுலேயே வச்சிட்டு வந்துட்டான் இந்த பக்கி” என்று கூற,

 

” யேன்டா “என்று அஸ்வின் முறைத்துக் கேட்க, 

 

“ஏதோ ஒரு ஞாபகத்துல டா, நானே போய் எடுத்துட்டு வரேன்” என்று வினோ கூற,

 

” நானும் உன் கூட வரேன். இல்லை வேற ஞாபகம் வந்து திரும்ப வச்சிட்டு வந்துருவாய்” என்று அவளுடன் பொங்கல் பானையை எடுத்து வருவதற்காக் கிளம்பினாள்.

 

மரத்தடியில் அமர்ந்து இருந்த சித்தர் 

 

” சிவன் தனது திருவிடையாளை ஆரம்பித்துவிட்டான்” என்று கூறி சிரித்து, 

 

மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.

 

இருவரும் காரில் செல்லும் போது, கிறு வினோவிற்குத் திட்டிக் கொண்டே வந்தாள். அவனும் வேறு வழியின்றி அதைக் கேட்டுக் கொண்டே சென்றான். பொங்கல் பானைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் வரும் போது டயர் பன்சர் ஆகியது. இதனால் அவர்கள் செல்ல நேரம் தாமதமாகியது. பூஜை முடிந்த பிறகே பொங்கல் வைக்கும் நிகழ்வு  இருந்ததால் அவசரம் இருவருக்கும் இருக்கவில்லை. ஆனால் நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாக இருக்கும்.

 

இந்தப் பூஜை இவ்வூரில் அதி முக்கிய பூஜைகளில் ஒன்றாகும். அதனால் ஊரில் உள்ள அனைவரும் அதில் கலந்துக் கொள்வார்கள். கிறுவிற்கு அதிக சன நெரிசலால் மூச்சு முட்டும் ஒரு பிரச்சனை இருப்பதால் தான் இருவரும் கோயிலுக்குச் செல்வதற்காக பதறினர். வினோவும் முடிந்த வரை அவசரமாக டயரை மாற்றி வேகமாக தனது காரை கோயிலை நோக்கிச் செலுத்தினான். கோயிலை அடைந்த போது கூட்டம் நிறைந்து வழிந்தது.

 

கிறு அக்கூட்டத்தை பார்க்கும் போதே பயத்தில் ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள். சித்தர் கண்களை மூடிக் கொண்டே புன்னகைத்தார். வினோ அவளது கைகளைப் பிடித்து படிகளில் ஏறி கோயில் பிரகாரத்தை அடைந்தான். அங்கே இவர்கள் எதிர்பார்க்காத அளவு கூட்டம் இருந்தது. அதற்கிடையில் பூஜையும் ஆரம்பமாகியது. பெரியவர்கள் இவர்கள் இருவரையும் காணாது தவிக்க, சிறியவர்கள் ‘அவர்கள் வந்து சேர்வார்கள்’ என்று சமாதானப்படுத்தினர்.

 

கிறு கூட்டத்தைப் பார்த்து பயந்து வினோவின் கைகளை இறுகப் பற்றினாள். அவர்கள் கூட்டத்திற்குள் நுழைந்தனர். சித்தர் மீணடும் பூஜை செய்துக் கொண்டே புன்னகைக்க, கூட்டத்தின் நடுவே கிறுவின் கைகள் அவன் கைகளில் இருந்து விடுபட்டது. ஆரவின் மனதோ ஒரு நிலையில் இருக்கவில்லை. அவன் அறியாமலேயே அவன் கண்கள் கிறுவை தேடின. பெரியவர்களும் பதறிக் கொண்டு இருந்தனர் இருவரையும் காணாமல். அப்போதே வினோ அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். 

 

அஸ்வின் அவனைப் பார்த்து, “கிறு எங்கே?”என்று கேட்க,

 

அப்போதே அவனும் பின்னால் திரும்பினான். அங்கே கிறு இருக்கவில்லை. அவனும் பதறி தேட ஆரம்பிக்க அஸ்வினும் அவளைத் தேடினான்.

 

ஆரவ் தொடர்ந்து அவன் கண்களைச் சுழற்ற கூட்டத்தின் நடுவே மூச்சு விட முடியாமல் திணறும் தன்னவளைக் கண்டவன், அனைவரையும் தாண்டி அவளின் அருகில் செல்ல ஆரவ் வந்தைக் கண்டவள் அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். அவனும் அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அனைவரும் இருக்கும் இடத்திற்கு அவளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அவளைக் கண்ட பெரியவர்கள் நிம்மதியடைய அவள் அங்கேயே மயங்கி விழ ஆரவ் அவளை தாங்கிப் பிடித்து அவன் மடியில் கிடத்தினான்.

 

பெரியவர்கள் அவளை எழ வைக்க அவள் எழவில்லை. தண்ணீர் தெளித்தும் அவள் எழாமல் போக, அங்கிருந்த ஒரு பாட்டி மூக்கின் அருகே அவர் கையைக் கொண்டு சென்று மூச்சு விடுவதைப் பார்த்தார். பின் அவசரமாக, அவள் நாடியைப் பிடிக்க அவர் அதிரந்து அனைவரையும் நோக்கினார். 

 

அரவிந் “கிறுவுக்கு என்னாச்சு?” என்று பதற,

 

“ஐயா அவளோட மூச்சும் வெளியே வருது இல்லை. இதயமும் துடிக்குது இல்லை” என்று கூற அனைவரின் இதயமும் ஒரு நிமிடமும் நின்று துடித்தது.

 

ஆரவிற்கோ பாட்டி கூறியதே அவன் காதில் எதிரொலிக்க, அவன் அருகில் பூஜைத் தட்டுடன் அவன் அருகில் சித்தர் வருகை தந்து அவன் தோளைத் தொட, அவரைப் பார்த்தான். அப்போதே அவர் கூறியது நினைவு வர ‘இவள் என்னவள்’ என்று எவரைப் பற்றியும் யோசிக்காது, அவர் கொண்டு வந்த பூஜைத் தட்டில் உள்ள குங்குமத்தை அவள் நெற்றிவகுட்டில் வைத்தான். பின் தன் வாய் மூலமாக அவளுக்கு தன் மூச்சை வழங்க சில நிமிடங்களில் கிறு வேகமாக தன் மூச்சை இழுத்து விட்டு கண்களை திறந்து ஆரவைப் பார்த்து விட்டு மீணடும் மயங்கினாள்.

 

அப்பாட்டி ‘மீணடும் அவளுக்கு மூச்சும், இதயத்துடிப்பும் இருக்கிறதா?’ என்று பார்க்க அது சீராக இருப்பதைப் பாரத்து புன்னகைத்து அவள் நலமாக இருப்பதாகக் கூறினார். ஆரவோ சுற்றி இருந்த எவரையும் பார்க்கவில்லை. தன்னவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். பெரியவர்களோ அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. 

 

சாவி தன்னை சமன்படுத்திக் கொண்டு “சித்தரே அப்போ ஆரவ் தான் கிறுவை கல்யாணம் பன்னிக்க போறவனா?” என்று கேட்டார்.

 

சித்தர் சிரித்து,” அவங்க இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிந்து மூன்று நிமிடங்களாகிவிட்டது” என்று கூற மீண்டும் அனைவரும் அதிர்ச்சியாகினர்.

 

சித்தர், “அவன் உங்க வீட்டு பொண்ணோட நெற்றியில வச்சி விட்டது சாதாரண குங்குமத்தை இல்லை. பவள மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த புனிதமான குங்குமத்தை. கல்யாணம் ஆக போறவங்க தன்னோட வருங்கால மனைவியோட நெற்றியில வச்சி விட்டா அது சத்தியம் போல, சுமங்கலி பெண்கள் வச்சிக்கிறது வேறு, ஆனால் ஒரு கன்னிப் பொண்ணான திருமணமாகாத ஒரு பொண்ணோட நெற்றி வகுட்டில் குங்குமத்தை வச்சிவிட்டா அது திருமணம் முடிந்ததுக்கு சமன். இந்த விஷயத்தை ரகு வம்சத்துல உன் பொண்ணு தான் எல்லாருக்கும் சொல்லி இருக்கா. இவங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் வாழனும். அது கடவுளோட விருப்பம். இவங்களை இந்த ஜென்மத்துல மட்டும் இல்லை எந்த ஜென்மத்துலேயும் யாராலையும் பிரிக்க முடியாது” என்று கூறி பூஜைத் தட்டை ஐயரிடம் வழங்கி அங்கிருந்து தான் தியானம் செய்யும் மரத்தடியிற்குச் சென்றார்.

 

மற்றவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, தாத்தா மாத்திரம் புன்னகைத்தார். 

 

ஆரவோ இவை அனைத்தையும் கேட்டு எதுவும் கூற முடியா நிலையில் அமர்ந்து இருந்தான். 

 

அருணாச்சலம் கோபம், அதிரச்சி என்று இருவகையான உணர்ச்சிப்பிடியில் இருந்தார். அவர் தனது மகனான வினோத்திற்கு கிறுவை மணமுடித்து வைக்க தீர்மானித்து இருந்தார். தன் மகனின் வாழ்க்கை வீணாகிவிட்டதே என்று கோபத்திலும், சித்தர் கூறியது, நடந்தது என்ற அதிர்ச்சியிலும் இருந்தார்.

 

ஆரவின் நண்பர்கள் பெரியவர்களுக்கு ஆறுதல் கூறுவதா? இல்லை தன் நண்பனை தேற்றுவதா என்ற நிலையில் இருந்தனர். 

 

அஸ்வினிற்கு சந்தோஷம், அதிரச்சி, நிம்மதி என்று இருந்தான். 

 

பெண்கள் அடுத்து என்ன செய்வது என்று ஆரவ், கிறுவைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். 

 

ஆரவ் குற்ற உணர்வின் மிகுதியில் கிறுவைப் பார்த்தவன் ‘அவள் தன்னை மீண்டும் பார்க்க முடியாதவாறு செய்து விட்டோமே’ என்று அவன் எழப் போக கிறு ஆரவின் கையைப் பிடித்திருந்த கைப்பிடி இறுகியது.

 

இதைப் பார்த்து பெரியவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவன் எழவும் முடியாமல், அமர்ந்து இருக்கவும் முடியாமல் தவித்தான். 

 

‘தான் இத்தனை பெரிய துரோகத்தை தன் நண்பனுக்கும், அவன் குடும்பத்திற்கும் செய்து விட்டோமே’ என்று வருந்தி அமர்ந்துக் கொண்டே கண்கள் கலங்கினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56

நிலவு 56   கிறு, மற்றும் தெலுங்கானா சென்டர் பிளேயர் எழுந்து நிற்க இருவருக்கும் மீண்டும் டொஸ்அப் செய்பட்டு பந்து தெலுங்கான அணிக்குச் சென்றது. அதில் பந்து வேகமாக மாற்றபட்டு தெலுங்கான அணிக்கு இன்னுமொரு புள்ளி கிடைத்தது. அத்தோடு முதலாம் இடைவேளையும்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 69யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 69

நிலவு 69   “கண்ணா, உன் ஆசை படி இந்தியா ஜெயிச்சிரிச்சி டா, என்னையும் என் குழந்தையையும் காப்பாத்தி கொடு” என்று அவன் நெஞ்சில் சாய அப்படியே மயங்கினாள்.   நினைவடைந்தவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு காரில் சென்று வேகமாக

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 6

நிலவு 6   ‘கிறுஸ்தி துரத்தி வருகிறாள்’ என்று ஓடியவர்கள், பின்னால் திரும்பிப் பார்க்க, அவர்களின் நெற்றியை பதம் பார்த்தது இரண்டு அப்பிள்கள்.    அதனால் “ஆஆஆ” என்று கத்தினர்.    “அப்பிள் ரொம்ப நல்லா இருக்குடா வேன்னா டேஸ்ட் பன்னி