Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28

நிலவு 28

 

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அது கோயிலின் மகா பூஜைக்கு முன்னைய தினமாகும். அனைவரும் காலை உணவை உண்ட பிறகு, சோபாவில் அமர்ந்து இருக்க,

 

சாவி, “இன்றைக்கு கோயிலுக்கு போகனும், சீக்கிரமா ரெடியாகுங்க” என்று கூற,

 

அனைவரும் கோயிலுக்குச் செல்லத் தயாராகினர். ஆனால் கிறு மாத்திரம் அமைதியாக சோபாவில் அமர்ந்து இருந்தாள். 

 

மற்றவர்கள் தயாராகி வர, மீரா” நீ இன்னும் கிளம்ப இல்லையா?” என்று கேட்க,

 

“நான் எதுக்கு வரனும்? என்னால் வர முடியாது மீரு. அங்க நிறைய கேள்விகள் வரும். என்னால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. அதனால் நான் வீட்டிலேயே இருக்கேன்” என்றாள் கிறுஸ்தி.

 

“கிறு நாங்க எல்லோரும் இருக்கோம். எந்த கேள்வி வந்தாலும் நாங்க சமாளிக்கிறோம். நீ போய் ரெடியாகி வா” என்றார் ராம்.

 

“நான் வராமல் இருந்தால் அந்த கஷ்டமே வராதே ராம்பா” என்றாள்.

 

சாவி தன் கணவனைக் கவலையாக பார்க்க, 

 

ஆரவ் அஸ்வினிடம் “மற்றவர்களை அழைத்துச் செல்லுமாறும், அவன் கிறுவை அழைத்து வருவதாகவும்” கூறினான். 

 

அவனும் பெரியவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான். ஆரவும் போகவில்லை என்பதை அப்போதே கிறு கவனித்தாள்.

 

கிறு,” நீ கோயிலுக்கு போக இல்லையா?” என்று கேட்க,

 

“என்னை பார்த்தாலும் கேள்வி கேட்பாங்களே நான் எப்படி போறது?” என்றான் ஆரவ்.

 

“நீ ரொம்ப நடிக்க டிரை பன்னாத, உன்னால முடியாது, அதுவும் என் கிட்ட செல்லாது போஸ்” என்றாள்.

 

“பரவால்லியே இவளோ சீக்கிரமா  கண்டுபிடிச்ச அப்போ நான் எதுக்காக நடிச்சேன்னும் உனக்கு தெரிஞ்சி இருக்குமே?” என்றான்.

 

“தெரியும், நான் சொல்ல தேவை இல்லை ஆரவ், அவங்க கேட்குற கேள்விகளுக்கு பதில் நம்ம கிட்ட இல்லை ஆரவ், திரும்பவும் அவங்க எல்லாருமே பழைய விஷயங்களை ஞாபகப்படுத்துவாங்க, அப்போ எல்லாருக்குமே சங்கடமா இருக்கும். அதை விட நான் அங்க போகாமல் இங்கே இருக்கிறது பெடர்” என்றாள்.

 

“அவங்க எல்லோரோட கேள்விகளுக்கும் என் கிட்ட பதில் இருக்கு, நான் உன் அப்பா, சித்தப்பா, மாமா, உன் அண்ணன் எல்லாருமே பதில் சொல்றோம். உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தால் போய் தயாரிகி வா” என்றான்.

 

சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தவள் எழுந்து மாடிப்படிகளில் ஏறிவிட்டு, மீண்டும் கீழிறங்கி அவன் அருகில் வந்தாள். 

 

“என்ன புளூ கலர் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி கட்டி, அதே கலர் லோங் ஸ்லீவ் சேர்ட்டை மடிச்சு  மாப்பிள்ளை போல இருக்க?” என்று புருவங்கள் சுருங்க கேட்டாள்.

 

அதில் தன்னைத் தொலைத்தவன் தன் கையால் முடியைக் கோதி தன்னை சமன்படுத்தி, 

 

“நீ எப்படியும் என்னை சைட் அடிக்க மாட்ட, அதான் என்னை சைட் அடிக்க கோயில்லில் பொண்ணுங்க நிறைய பேர் இருக்காங்க, அவங்களுக்காக தான் டிரஸ் பன்னேன். நல்லா இருக்கா?” என்று கேட்க,

 

“கேவலமா இருக்க, இரண்டு விஷயம் சொல்லியே ஆகனும், ஒன்னு கட்டின பொன்டாட்டி கிட்டவே இப்படி தைரியமா அடுத்தவங்களுக்காக தான் டிரஸ் பன்னன்னு பேசுற அந்த தைரியத்தை பாராட்டியாகனும்.  இரண்டாவது விஷயம் நீ இதை போல பேசுவியான்னு ஷொக்கிங்காக இருக்கு, அதனால் நான் உன்னை அடிக்காம விடுறேன்” என்று அவனை முறைத்து மாடிப்படிகளில் ஏறினாள்.

 

அவன் சிரித்து சோபாவில் அமர, தன் மொபைலில் தன்  P.A உடன் பேசிக் கொண்டு இருந்தான். அதே நேரத்தில் கிறுவும் தயாராகி வந்தாள். ஆரவோ அன்று போலவே இன்றும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அடர் நீலம், இள நீல தாவணியில் அழகிய ஓவியமாய் படிகளில் இறங்கி வந்தாள். அவள் ஒவ்வொரு படியில் இறங்கும் போதும், அவள் முழந்தாளை நீண்டு இருந்த கூந்தல் அங்குமிங்கும் ஆடியது.

 

அவளது அழகில் மெய்மற்ந்து இருந்தவனின் முன் வந்து நிற்க, கிறு, ” சைட் அடிச்சு முடிஞ்சதுன்னா போலாமா?” என்று கண்களில் குறும்பு மின்ன கேட்டவளிடம்,

 

“நான் உன்னை சைட் அடிக்கவே இல்லை கிறுஸ்தி, உன்னோட டிரஸ்ஸை தான் பார்த்துட்டு இருந்தேன். போடரா கோல்ட் வந்து இருந்தா நல்லா இருக்குமான்னு கற்பனை பன்னி பார்த்தேன்” என்று கூற

 

அவன் மனசாட்சி, “த்தூ… இவளோ கேவலமா சமாளிக்கிற, நீயெல்லாம் வேஸ்டா” என்றதும் 

 

“ஓஓ, சரி ஆரவ் நம்பிட்டேன்” என்று காரில் ஏறி மறுபுறம் அமர்ந்துக் கொண்டாள்.

 

‘சே, அவளோ கேவலமா சமாளிச்சு இருக்கோமே’ தன்னுள்ளே பேசிக் கொண்டு காரைக் கோயிலை நோக்கிக் கிளப்பினான்.

 

காரும் கோயிலை வந்தடைந்தது. காரிலிருந்து இறங்கி கோயில் வாசலில் நிற்க மீணடும் அன்றைய நாள் நடந்தது அனைத்தும் அவள் ஞாபகத்திற்கு வந்தது. அதை புரிந்துக் கொண்ட ஆரவ் அவள் அருகில் வந்து நின்று கையை நீட்டினான். அவள் புரியாமல் அவனைப் பார்க்க, அவள் கையைத் தருமாறு கண்களால் கூற அவளும் மறுக்காமல் தன் கைகளை வழங்கி இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறினர்.

 

இடையில் செல்லும் போது, சிலர் இவர்களைப் பார்த்துப் புன்னகைக்க சிலர் ஏதோ இரகசியமாக பேசினர். சிலர் இவர்கள் கைப்பிடித்துச் செல்வதைப் பார்க்க, அதைப் பார்த்த ஒரு மாதிரியாக உணர்ந்தாள். அவள் கைகளை ஆரவின் கைகளில் பிரித்து எடுக்க முயல அது முடியாமல் போனது. இனி எதுவும்  செய்ய முடியாது என்று உணர்ந்து அமைதியாக அவனுடனே சென்றாள். 

 

இருவரும் கைபிடித்து வருவதைப் பார்த்த அனைவரும் நிம்மதியை உணர்ந்தனர். அங்கு சில பூஜைகள் நடந்தன. பின் அங்கு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். 

 

கிறு, ‘எதுக்காக ஊரில் உள்ளவங்க எல்லாரும் வந்து இருக்காங்க? என்ன நடக்கப் போகுது?’ என்று ஆவலாய் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

தாத்தா அனைவரின்  முன்னிலையிலும், “நாளைக்கு காலையில் ஆறு முப்பதுக்கு இருக்கின்ற சுப முகூர்த்தத்தில் என் பேத்தி கிறுஸ்திகவுக்கும் என் பேரன் ஆரவுக்கும் சாஸ்திர சம்ரதாயப்படி கல்யாணம் நடக்கும். எல்லோரும் கலந்துக்கங்க” என்று கூற, 

 

கிறுவோ விரித்த கண்களை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தாத்தாவை.

 

அனைவரும் இவளின் முழியை வைத்தே இவள் இன்று சாமி ஆடப்போகிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டனர். கோயிலில் அனைவரின் முன்னிலையில் மட்டும் அவள் எதுவும் பேசக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொண்டனர். கிறு தாத்தா திருமணத்தைப் பற்றி பேசும் போது, ஆரவைப் பார்க்க அவன் இயல்பாக இருப்பதைக் கொண்டு அவனுக்கும் இதைப் பற்றி முன்பே தெரிந்துள்ளது என்பதை யூகித்தாள்.

 

எதையும் பேசாது அமைதியாக காரில் ஏறினாள் கிறு. அவள் அமைதி புயலுக்கு முன் அமைதியைப் போன்று தோன்ற, உள்ளுக்குள் பயந்தாலும் அனைவரும் தங்களை இயல்பாகவே வெளியில்  காட்டிக் கொண்டனர். வீட்டிற்குள் நுழைந்தவள் சோபாவில் அமர்ந்தாள். அனைவரும் உள்ளே வந்தவுடன் அனைவரையுமே ஒரு முறைப் பார்த்தாள்.

 

“யாரைக் கேட்டு இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்னிங்க?” என்று கத்த அந்தக் கத்தலில் மாதேஷும், கவினும் தத்தமது துணைகளின் பின் சென்று நின்றுக் கொண்டனர். 

 

“யாரைக் கேட்கனும் கிறு? உங்க இரண்டு பேருக்கும் சாஸ்திர சம்பிரதாயப்படி இன்னும் கல்யாணம் நடக்க இல்லை. அதனால் பன்றோம்” என்றார் அரவிந்.

 

“அப்பா கல்யாணம்னு சொல்றது இரண்டு பேர் ஒரு உறவில் இணைகிறது இல்லை. இரண்டு பேரோட மனசும் இணைகிறது தான். இதை நீங்க சொல்லி இருக்கிங்களே பா. ஆனால் எனக்கும் ஆரவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும் கூட்டி கழிச்சு பார்த்தா ஒரு இருபது நாள் அவளோ தானே… பா” என்றாள் கண்கள் கலங்க.

 

“சரி இப்போ எதுக்கு கல்யாணம் வேணாங்குற?” என்று அஸ்வின் கேட்க, 

 

“அதான் சொன்னேனே டா, காதல் இருந்தால் மட்டும் தான் கணவன், மனைவி உறவு சாகுற வரைக்கும் நிலைக்கும். ஆனால் அந்த காதல் எங்களிடையே இல்லையே” என்று கூற

 

“நீ அப்போ வேற யாரையாவது காதலிக்கிறியா கிறு?” என்று கவின் கேட்க,

 

“நீ ஜீவியைத் தவிற வேறு யாரையாவது காதலிக்கிறியா?” என்றாள் கிறு

 

“ஏய் என்னடி பேசுற?” என்று மீரா கேட்க

 

“பின்ன என்னடி, ஆரவ் என் புருஷன், அவனை தவிற என்னால் வேறு ஒருத்தனை புருஷனா பார்க்கவும் முடியாது, மனசால் நினைக்கவும் முடியாது, அப்படி இருக்கும் போது இவன் லூசு மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கான்” என்றாள் கிறு.

 

ஜீவி “கவின் நீ அவ கிட்ட கேட்ட கேள்வி ரொம்ப தப்பு டா, சொரி கேளு, இதே கேள்வியை ஆரவ் என் கிட்ட கேட்டால் நான் எப்படி பீல் பன்னி இருப்பேனோ அதே போல தானே அவளும் பீல் பன்னி இருப்பா” என்றாள் கவலையாக

 

“கிறு சொரி டி” என்று மனதார மன்னிப்பு கேட்க, 

 

“அதை விடுடா எனக்கு இப்போ கல்யாணத்தை நிறுத்த சொல்லு அது போதும்” என்றாள்.

 

“வாயை மூடு கிறுஸ்தி” என்று கத்தி, 

 

“மாமா நான் கொஞ்சம் உங்க பொண்ணு கூட பேசனும்” என்றான் ஆரவ்

 

“தாராளமா மாப்பிள்ளை” என்று கூற,அவளை கைப்பிடித்து ஒரு அறைக்குள் இழுத்துச் சென்றான் ஆரவ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 36யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 36

நிலவு 36   அடுத்த நாள் விடிந்தது. அதே போல் இருவரும் அணைத்து உறங்கி இருக்க முதலில் கண்விழித்தது ஆரவ். அவனை அணைத்து உறங்கும் தன்னவளை இரசித்தான். நேற்று இரவு கிறு கூறியவை ஞாபகம் வர அவனது இதழ்கள் விரிந்தன. அவள்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 32யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 32

  நிலவு 32   “மீரா, இப்போ நீ நிற்க இல்லை, இனிமேல் உன் கூட பேசவே மாட்டேன்” என்று அவள் பின்னே சென்றான் அஸ்வின் அவள் அறைக்கு.   “அச்சு, இது சின்ன குழந்தைகள் பேசுறது போல இருக்குடா” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24

நிலவு 24   மகா பூஜைக்கு முன்னைய நாள் வீட்டில் அனைவரும்  கோயிலை நோக்கிச் சென்றனர். அனைவரும் சாமி கும்பிட்டு வெளியேறும் போது சித்தர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். அதில் ஒவ்வொருவராக சென்று ஆசிர்வாதம் பெறச் சென்றனர்.    அவர் அருகில்