Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 13

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 13

கிறுஸ்தி பாடி முடியும் போது மீரா எழுந்து செல்ல அவள் பின்னே அஸ்வினும் சென்றான். மற்றவர்கள் பயத்துடனேயே அமர்ந்து இருந்தனர் என்ன நடக்குமோ என்று. இங்கு கிறுவும் ஆரவும் ஒருவரை ஒருவர் பாரத்துக் கொண்டு இருந்தனர். எவ்வளவு நேரம் பார்த்தார்கள் என்று அவர்களே அறியார். மற்றவர்கள் தம் இடையே அரத்தப் பார்வை பார்த்துக் கொண்டனர்.

 

தன்னை சமன்படுத்திக் கொண்ட கிறு அங்கிருந்து எழுந்து செல்ல,

 

“கிறுஸ்தி ஒரு நிமிஷம்” என்றான் ஆரவ்.

 

“என்ன?” என்று அவள் கேட்க,

 

“நான் உன் கூட கொஞ்சம் பேசனும்” என்றான்.

 

“அதான் காலையில் இருந்தே பேசினோமே ஆரவ், இப்போ என்ன பேச இருக்கு?” என்று விலகிச் செல்ல அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியவன்,

 

“நீ பேச இல்லை, நானா தான் உன் கிட்ட பேசுறேன்” என்றான்.

 

“ஆரவ் இதைபற்றி பேச என்ன இருக்கு? விடு” என்று செல்ல

 

“please கண்ணம்மா” என்று அவன் கூற அவனுடைய கண்ணம்மா என்ற அழைப்பில் உருகியவள் அதே இடத்தில் நின்றாள்.

 

“உனக்குன்னு ஒரு அழகான குடும்பம் இருக்கு. எனக்குன்னு யாரும் இல்லை, தனியா தான் இருக்கேன் கிறுஸ்தி உனக்கு நான் சரியான பாட்னர் இல்லை” என்று கூறும் போதே, தனக்கு எழுந்த கோபத்தை அடக்கிய கிறு அவன் பேசட்டும் என்று அமைதியானாள்.

 

“எனக்கு தேவிமாவை ரொம்ப பிடிக்கும் கிறுஸ்தி, அருணப்பாவையும் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். ஆனால் நான் பன்ன காரியத்தால் இந்த நிமிஷம் வரைக்கும் அவரு என் கூட பேசவே இல்லை. முன்னாடி ஆரவ்னு பேசும் போது எனக்கு அவரு கிட்ட இருந்து உண்மையான அப்பா பாசத்தை உணர்ந்தேன். உன் குடும்பத்துல ஒவ்வொருத்தர் கிட்டவும் ஒவ்வொரு விதமான பாசத்தை உணர்ந்தேன்.

 

நான் உங்க வீட்ல இருந்த அந்த பதினைந்து நாளும் சொர்கத்தில் இருங்கிறது போல் அவளோ சந்தோஷமா இருந்தேன், அது கடவுளுக்கு கூட பிடிக்கல்லை டி. நான் போகும் போது உங்க எல்லோரோட சந்தோஷத்தையும் கெடுத்துட்டு போயிட்டேன். அவரு சொன்னது போல் நான் இருக்கிற இடத்துல யாரும் நிம்மதியா இருக்கமாட்டங்கன்னு, இப்போ அது உண்மையாயிடுச்சு” என்றதும்,

 

கவின் “டேய் லூசு மாதிரி பேசாத நீ தேவையில்லாம யோசிக்கிற, விதி படி என்ன நடக்குமோ அது தான் நடக்குது நீயே உன் மேல பழி போட்டுக்காத” என்றான் கோபமாக.

 

மாதேஷோ அமைதியாய் இருந்தான், அவனிடம் பேசும் போது அடித்து விடுவோமோ என்று.

 

கிறு, “சரி ஆரவ் இப்போ நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்றாள்.

 

“உங்க வீட்டில் ஆரம்பத்தில் உனக்கு வினோவைத் தான் கல்யாணம் பன்னி வைக்கலாம்னு இருந்தாங்க, அவன் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கான், உன்னை நல்லா பாத்துப்பான், பெரியவங்க ஆசை படி நீ வினோவை கல்யாணம் பன்னிக்க” என்றதுமே

 

“நிறுத்து ஆரவ்” என்று கிறு கோபத்தில் கத்தும் போதே தோட்டத்திற்கு ஓடி வந்தனர் அஸ்வினும் மீராவும்.

 

வினோ, “ஆரவ் அண்ணா அவ என்னோட best friend, நான் கனவில் கூட அப்படி நினைத்து பாரத்தது இல்லை” என்றான்.

 

கிறு, “ஆரவ் அவன் என்னோட பிரன்ட், என்னால் எப்படி அவனை கல்யாணம் பன்னிக்க முடியும்? நான் என் அப்பா கிட்ட இருக்கும் போது எப்படி பீல் பன்னுவேனோ அதே போல ஒரு அப்பா தான் அவன்” என்றாள்.

 

அமைதி அங்கு குடிகொள்ள, பெரியவர்கள் எவரும் இதில் தலையிடாமல் நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

 

மூச்சை இழுத்து விட்டவள், “சரி நீ என்ன பன்னலாம்னு இருக்க?” என்றாள்.

 

“எப்பவும் போல் கடைசி மூச்சு வரைக்கும் தனியா தான் வாழனும்” என்றான்.

 

“இவளோ நாளா நீ தனியா வாழ்ந்து உனக்கு என்ன கிடைச்சது? ஆரவ் இவளோ பெரிய கம்பனிய தனியா நடத்துற அதற்கு உன்னை பாராட்டனும் பட் இதெல்லாம் யாரை சந்தோஷபடுத்துறதுக்காக பன்கிறாய்? யார் கிட்ட இதை share பன்னுவ?”

 

“நீ அநாதைகளுக்கு கொடுக்கனும்னு நினைத்தால், இப்போ உன் கிட்ட இருக்கிற அந்த சொத்தே போதும். உனக்கு ஒரு இலட்சியம் இருக்கு அது எனக்கு தெரியும், அதை சாதிச்சதுக்கு அப்பொறமா என்ன பன்னுவ? உனக்குன்னு யார் இருப்பா?” என்றாள்.

 

“போதும் கிறுஸ்தி” என்று கத்தினான் ஆரவ்.

 

“நான் இருபது வருஷமா ஒரு குடும்பத்துல வாழ்ந்தும் ஒரு அநாதையா தான் இருந்தேன். இந்த தனிமை எதுவுமே எனக்கு புதுசு இல்லை நான் தனியாவே வாழ்ந்துப்பேன், நீ உன் வாழ்க்கைய வீணாக்கிக்காத” என்றான்.

 

“இப்போ என்ன நான் இன்னொருத்தன கல்யாணம் பன்னனுமா? உலகத்துலேயே தன்னோட மனைவி கிட்ட நீ இன்னொருத்தனை கல்யாணம் பன்னிக்க சொல்ற முதல் ஆம்பள நீ தான் டா”என்று அவனது டீசர்டின் கொலரை கெத்தாக பிடித்தவள்,

 

“ஒருத்தன் என் கழுத்தில் தாலி கட்டுவான், அவன் என்னை தோளோட அணைச்சுப்பான், அவன் என் கூட குடும்பம் நடத்துவான் உன்னால இதை பார்க்க முடியுமா? சொல்லு டா உன்னால் பார்க்க முடியுமா?” என்று கத்த ஆரவ் அப்படியே நிலத்தில் அமர்ந்தான்.

 

“பேசுடா” என்று இவள் கத்த.

 

“லீவ் மீ எலோன்” என்று கத்தினான் ஆரவ்.

 

“உன்னை தனியா௧ விட்டதால் தான் டா நீ இப்படி இருக்க” என்று அவன் முன்னே அவள் மண்டியிட்டு அமர்ந்தாள்.

 

“சொல்லு ஆரவ் உன்னால் உன் மனைவியை இன்னொருத்தன் கூட பார்க்க முடியுமா?” என்று கேட்டாள்.

 

அவன் அவளை இழுத்து அணைத்தான். அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. ஆரவின் மனதில் கிறுவிற்கு இடம் ஒன்று உள்ளது என்று அனைவரும் அகம் மகிழ்ந்தனர். அப்போது கவினின் மொபைலின் ரிங் டோன் அவர்கள் இருவருக்கும் ஏற்ற ஒரு பாடலாக இருந்தது.

 

விழியே கலங்காதே

உயிரே பிரியாதே

விழியே கலங்காதே

உயிரே பிரியாதே

 

வானம் தான் வீழ்ந்தாலும்

யார் உன்னை பிரிந்தாலும்

எப்போதும் உனக்காக நான் இருப்பேன்

 

வானம் தான் வீழ்ந்தாலும்

யார் உன்னை பிரிந்தாலும்

எப்போதும் உனக்காக நான் இருப்பேன்

 

விழியே கலங்காதே

உயிரே பிரியாதே

விழியே கலங்காதே

உயிரே பிரியாதே

 

என்று பாட, ஏதோ நினைவு வந்தவனாய் கிறுஸ்தியை விலக்கி விட்டு எழுந்தான். கவினும் அழைப்பை துண்டித்தான்.

 

“வேண்டாம் கிறுஸ்தி, நான் உனக்கு வேண்டாம், நீ சந்தோஷமா வாழனும் டி” என்றான்.

 

“ஆரவ் இப்போ கூட உன் பிடிவாதத்தில் தான் இருக்க” என்றாள் மனதில் வலியுடன் கிறுஸ்திகா.

 

“ஏன் டி என்னை புரிஞ்சிக்க மாட்டேங்குற, அஸ்வின் நீயாவது சொல்லு டா நான் அவளுக்கு ஏத்தவன் இல்லன்னு” என்று ஆரவ் பதற,

 

“ஆரவ் என்னை பாத்து பேசுடா” என்று அவள் அவனை தன் புறம் திருப்பினாள் கிறு.

 

“கிறு எனக்கு எந்த அன்பும் வேண்டாம் டி, எனக்கு என் குடும்பத்துக்கிட்ட இருந்து கிடைத்த அன்பே போதும் டி. அவங்க என் காட்டின பாசம் பொய்னு தெரியும் போது எனக்கு ரொம்ப வலிச்சுதுடி, என்னால இதே போல ஒரு சிடுவேஷன் வந்தால் என்னால் தாங்க முடியாது” என்றான்.

 

“நான் உன்னை ஏமாத்தி விட்டுட்டு போவேன் என்று நினைக்கிறியா?” என்று கேட்க,

 

“இல்லை டி நிச்சயமா இல்லை, ஆனால் என்னால் ஒரு சிடுவேஷன் உருவாகிருச்சின்னா, அப்படியொரு நிலமை எனக்கும் வேண்டாம் டி உனக்கும் வேண்டாம் டி” என்றான்.

 

“என்ன ஆரவ் சொல்ற?” என்று அவள் அழுதுக் கேட்க,

 

அவள் முகத்தை கையில் ஏந்தியவன் “கிறு நீ ரொம்ப நல்லவடி, நீ கடைசி வரைக்கும் சந்தோஷமா வாழனும் டி, நீ இந்த வீட்டு இளவரசி டி, கடைசி வரைக்கும் நீ அதே போல் தான் வாழனும் டி” என்றான்.

 

“உன்னால் மட்டும் தான் டா என்னை அப்படி பாத்துக்க முடியும்” என்று கண்ணீர் வடியக் கூறினாள் கிறு.

 

“இல்லை டி நீ என் கூட வாழ்ந்தால் உன் சந்தோஷம், நிம்மதி எல்லாமே போயிடும். நான் எல்லோரோட நிம்மதியையும் கெடுக்க பிறந்தவன், நான் இருக்கிற இடம் எல்லாமே சாபம் பிடிச்ச மாதிரி டி சுருக்கமா சொல்ல போனா அந்த கடவுளால அநியாயமா௧ படைக்கப்பட்ட இராசி கெட்டவன்” என்று கூறினான்.

 

அந்த நொடி கோபம் தலைக்கேறி மாதேஷ் அவனை அடிக்க முன் ஆரவின் கன்னத்தை பதம் பாரத்து ஒரு கை. அவன் கன்னத்தில் கை வைத்துப் பார்க்க, அவன் முன் காளியாய் நின்று இருந்தாள் கிறு.

 

“இதற்கு அப்பொறம் உன்னை தாழ்த்தி ஒரு வார்த்தை பேசினாய் என்றால் கொன்னுடுவேன்” என்றாள் கண்கள் சிவக்க.

 

இன்று அனைவரும் பார்ப்பது புதிய கிறுவை. கவினும், அஸ்வினும் அவர்களுக்கு அடித்தது போல அவர்கள் கன்னத்தில் கை வைத்து இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 63யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 63

நிலவு 63   “அம்மா நான் அவனோட பெத்த அம்மா அப்பாவைப் பற்றி தேட சொல்லி யஷூ கிட்ட கொடுத்து இருந்தேன். அவை தேடி கண்டு பிடிச்சு என்கிட்ட சொன்னாள். ஆரவ் கண்ணா வேறுயாரும் இல்லை அருணாச்சலம் மாமா, தேவி அத்தையோட

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 30யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 30

நிலவு 30   அன்றைய நாள் மாலை மருதாணி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டு இருந்தன. அனைவரும், பச்சை மற்றும் படர் நிறத்தில் விதவிதமான ஆடைகளை அணிந்து இருந்தனர். கிறு, ஆரவ் அவர்களை விட சற்று வித்தியாசமாக தெரிவதற்காக, அவர்களது ஆடைகளில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61

நிலவு 61   ‘வணக்கம் தமிழ்நாட்டு எம்.பி ஜெகனாதனின் ஒரே மகனான அதர்வா சற்று முன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், இந்திய வலைப்பாந்தாட்ட சம்மேளத்தில் ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி’ என்று