Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 36

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 36

நிலவு 36

 

அடுத்த நாள் விடிந்தது. அதே போல் இருவரும் அணைத்து உறங்கி இருக்க முதலில் கண்விழித்தது ஆரவ். அவனை அணைத்து உறங்கும் தன்னவளை இரசித்தான். நேற்று இரவு கிறு கூறியவை ஞாபகம் வர அவனது இதழ்கள் விரிந்தன. அவள் தன் நெற்றியில் பதித்த முதல் முத்தம் நினைவு வர அவளின் நெற்றியில் இதழ்பதித்து அவள் எழா வண்ணம் அவனிடம் இருந்து அவளைப் பிரித்து உறங்க வைத்தான்.

 

அவன் குளித்து ஆடை மாற்றி கீழே செல்ல தயாராகும் போதே கிறு கண்விழித்தாள். 

 

“சீக்கிரம் எந்திரிச்சிட்டியா கண்ணா?” என்று கேட்க, 

 

“ஆமா, சந்தோஷம் கூடினாலும் என்னால தூங்க முடியாது, ரொம்ப கவலையா இருந்தாலும் என்னக்கு உறக்கம் வராது. இன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அதான் தூங்க முடியல்லை” என்றான்.

 

“காலையிலேயே விளக்கம் தர ஆரம்பிச்சிட்ட” என்று கூறிக் கொண்டே குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

குளித்து மஞ்சள், சிகப்பு நிற சுடியில் வெளியே வந்தாள். கண்ணாடி முன் நின்று தன் கூந்தலை துவட்ட, ஆரவ் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். கிறு அவனைப் பார்க்க அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் கீழே குனிந்துக் கொண்டாள். 

 

“வீட்டிற்கு போலாமா கிறுஸ்தி?” என்று ஆரவ் கேட்க, 

 

அவளும் “சரி” என்றாள். இருவருமே வீட்டிற்கு வர ஹாலில் அனைவருமே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

 

“வாங்க மாப்பிள்ளை, வா கிறு” என்று ராம் உள்ளே அழைக்க இருவருமே உள் நுழைந்தனர்.

 

“அம்மா இரண்டு காபி” என்று அவள் கத்த, 

 

“யேன்டி வந்ததும் வராததுமா கத்துற?” என்று சாவி கேட்க,

 

“இதற்கப்பொறமா யாருமா கத்த போறா?” என்று கேட்க, சாவியின் கண்கள் மகள் சென்றுவிடுவாளே என்று கலங்கின.

 

ஆரவ் அதைப் பார்த்து, “அத்தை கவலைப் படாதிங்க கிறுஸ்தி இங்கே ஒரு கிழமை தங்கட்டும். அப்பொறமா நான் அவளை இங்கே வந்து கூட்டிட்டு போறேன்” என்றான்.

 

“இல்லை மாப்பிள்ளை கல்யாணம் முடிந்த பிறகு தனியா போக கூடாது” என்று இந்து கூற

 

“அத்தை  இப்போ நான் வீட்லயே இருக்க மாட்டேன், ஒன் வீக் நான் என் புது புரொஜெகட் விஷயமா பிசியாக இருப்பேன். அவளுக்கும் அங்கே தனியா இருக்கிறது போர் அடிக்கும். அதுவரைக்கும் அவ இங்க இருந்து நல்லா என்ஜோய் பன்னிட்டு வரட்டும்” என்றான்.

 

“இல்லை மாப்பிள்ளை” என்று அரவிந் கூற,

 

“மாமா பிளீஸ்” என்றான்.

 

தாத்தா அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். பெரியவர்கள் அரைமனதாக சம்மதித்தனர். 

 

அருணாச்சலத்திடம் கிறு, “மாமா மீரா முறையா பரத நாட்டியம் கத்துக்குறதுக்கு ஒரு டீச்சர் பார்த்து இருந்தேன். அவங்க இப்போ மும்பையில் செடில் ஆகிட்டாங்கலாம்” என்றாள்.

 

“இப்போ என்ன மா பன்றது? மும்பைக்கு அவளை தனியா எப்படி அனுப்புறது?” என்று கேட்க,

 

“அதான் அஸ்வின் இருக்கானே மாமா எதுக்கு கவலைபடனும். அவ அங்கேயே தங்கட்டும்” என்றாள்.

 

தேவி,”கல்யாணம் பன்னாம இரண்டு பேரும் ஒன்னா தங்குறது சரியில்லை கிறு” என்றார்.

 

“யேன் அவங்க மேல நம்பிக்கை இல்லையா?” என்று அவள் கேட்க,

 

“பெற்றவங்க பிள்ளைகளை நம்பாமல் வேறு யாரை நம்புவாங்க? ஊர் உலகம் தப்பா பேசும்” என்றார் தேவி.

 

“ஊர் உலகத்தில் ஆயிரம் சொல்லுவாங்க, அதை எல்லாம் நாம காது கொடுத்து கேட்டோம்னா நம்ளால் வாழ முடியாது அத்தை” என்றாள்.

 

அருணாச்சலம் சிறிது நேரம் யோசித்தவர் “சரி கிறு, மீரா அஸ்வின் கூட மும்பை போகட்டும்” என்றார்.

 

மற்றவர்கள் பேச வரும் போது, 

 

“நான் யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்து இருக்கேன், அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க இது ஒரு வாய்ப்பா இருக்கும். அவங்க இரண்டு பேரோட மேலேயும் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று கூறி தாத்தாவின் புறம் திரும்பினார் அருண். 

 

“மாமா நீங்க என்ன சொல்றிங்க?” என்று தாத்தாவிடம் கேட்டார்.

 

தாத்தா தன் மகன்கள் இருவரையும் பார்க்க, அவர்கள் இருவரும் சம்மதமாக தலை ஆட்ட அஸ்வினுடன் மீரா செல்வதாக முடிவானது. 

 

அன்று  மாலையே  தாலி மாற்றும் நிகழ்வும் இனிதே நடைப்பெற்று முடிய நண்பர்களும், அவர்களது குடும்பத்தினரும் வேலை இருப்பதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினர்.

 

மாதேஷ்” மச்சான் மீராவை உன்னை நம்பி தான் அனுப்புறாங்க அவளை நல்லா பார்த்துக்க” என்றான்.

 

கவின்” டேய் அதை தெளிவா பேசு. டபுள் மீனிங்ல எடுக்க போறான்” என்று கூற அஸ்வினின் கை அவனது முதுகைப் பதம் பார்த்தது. 

 

“மீரா மும்பை போறது இவனும், கிறுஸ்தியும் சேர்ந்து போட்ட பிளேன் மாதிரி இருக்குடா ” என்றான் ஆரவ்.

 

“எப்படி டா கண்டுபிடிச்ச?” என்று அஸ்வின் கேட்க,

 

“உங்க இரண்டு பேரைபற்றியும் எனக்கு தெரியும் டா” என்றான் ஆரவ்.

 

“கேடி டா நீ” என்றனர் மற்ற இருவரும். கண்ணீருடன், சிறு சமாதானங்களுடனும் அவர்கள் குடும்பம் அங்கிருந்து விடைப் பெற்றது.

 

அடுத்த நாள் ஆரவும் டெல்லிக்குச் செல்லத் தயாராகினான். 

 

“கண்ணா நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல? அதான் கன்டிஷன்” என்றாள்.

 

“இருக்கு கிறுஸ்தி. நான் அதை மீற மாட்டேன்” என்றான். 

 

அன்று இரவு ஆரவிற்கு தூங்கா இரவாக இருந்தது. தன்னவளை பிரிந்து இருப்பது துளியும் விருப்பம் இல்லை எனினும், அவள் சந்தோஷத்திற்காகவும், அவன் வேலைப் பழுவின் காரணமாகவும் செல்லத் தயாரானான். தன் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கும் தன்னவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். வெகு நேரத்திற்கு பிறகு அவனையும் நித்திரா தேவி ஆட்கொண்டாள்.

 

அடுத்த நாள் அனைவரிடமும் இருந்து விடைப் பெற்று டெல்லிக்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் கிறுவுடன் பேச அவன் மறக்கவில்லை. பேச முடியாத சந்தர்ப்பங்களில் மெசேஜ் செய்யவும் அவன் மறப்பதில்லை. அதற்கு அடுத்த நாள் மீரா, அஸ்வினும் மும்பை சென்றனர். அதே தினத்தில் அருணாச்சலம் குடும்பத்தினரும் அவர்களிடம் இருந்து விடைப் பெற்றுச் சென்றனர். வினோவிடம் சௌமியாவைப் பற்றி வெகு சீக்கிரமாக தேடி கூறுவதாகக் கூறினாள் கிறுஸ்திகா.

 

தாத்தவிற்கும் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வீடே வெறிச்சோடி இருப்பது போல் தோன்றியது. நண்பர்கள் நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கான்பிரன்ஸில் பேசிக் கொள்வர். ஆண்களே இவ்வாறு இருந்தால் பெண்களைப் கூற வேண்டியது இல்லை. அவர்களுடைய கலாட்டக்களுக்கு குறைவே இருக்கவில்லை. 

 

ஆரவிற்கு வர முடியாத காரணத்தால் கிறுவே தனியாக டெல்லிக்குச் செல்ல அவனை அழைத்துச் செல்ல கவின் அங்கு வந்திருந்தான்.

 

“கவின் நீ எப்படி இங்கே?” என்று இன்ப அதிர்ச்சியில் கேட்க,

 

“இன்றைக்கு ஆரவின் ஒபீசில் அவனுக்கு இன்னொரு பி.ஏ சிலெக்ட் பன்றான். அதான் அவனால் வர முடியல்லை, நான் இங்கே பிஸ்னஸ் விஷயமா வந்தேன். உன்னை வீட்டில்  விட்டுட்டு நான் அடுத்த பிளைட்டில் சென்னை கிளம்பிருவேன்” என்றான்.

 

“நான் அந்த இன்டர்வியூவை அடென்ட் பன்னும். என்னை அங்கேயே அழைச்சிட்டு போறியா?” என்று கிறு கேட்க,

 

“லூசாடி அது உன் புருஷன் கம்பனி. அதற்கு நீ எதுக்கு வேலைக்கு போகனும்? அதுவும் எதுக்கு இன்டர்வியூ அடென்ட் பன்னனும்?” என்றான்.

 

“அவனுக்கு ஒரு சின்ன சப்ரைஸ் கொடுக்கலாம். உன்னால என்னை அங்க கூட்டிக்கிட்டு போக முடியுமா? முடியாதா?” என்று கேட்க,

 

“நான் சொன்னால் கேட்கவா போற? சரி கூட்டிகிட்டு போறேன்” என்றான்.

 

“அதற்கு முன்னாடி நீ தங்கி இருக்கிற ரூமுக்கு போயேன். நான் கொஞ்சம் பிரஷ் ஆகி வரேன்” என்று கூற அவனும் தனது ஹோட்டலிற்கு வண்டியை செலுத்தினான்.

 

கிறு அறியவில்லை. இது அவளுடைய வாழ்க்கையில் அவளுக்கு அவப் பெயரை எடுத்துக் கொடுக்கப் போகின்றது என்பதை.

 

அறைக்குச் சென்றவள் டெனிம் டொப் துப்பட்டா அணிந்து இருந்தவள் சுடிக்கு மாறி interview க்காக சென்றாள். அவளுடன் கவினும் சென்றான். ஆரவின் கம்பனியில் பார்கிங்கில் கவின் தனது காரை நிறுத்த கிறு தனது சர்டிபிகேட்ஸை எடுத்துக் கொண்டாள். நேராக ரிசப்ஷனிஸ்டிடம் இடம் சென்றவள் இன்டர்வியூ நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.

 

இவளைப் போலவே இங்கே பலர் வந்து இருந்தனர். கிறுவின் முறை உள்ளே வர கிறுவைக் கண்ட ஆரவ் அதிர்ச்சி அடைந்தான்.

 

“கிறுஸ்தி நீ” எனும் போது,

 

“சேர் நான் இன்டர்வியூ அடென்ட் பன்ன தான் வந்து இருக்கேன்” என்றாள்.

 

அவனும் பின் சில கேள்விகளைக் கேட்க, அவளும் சாமர்த்தியமாக பதில் கூறினாள்.  இதுவரை அவனுக்கு திருப்தி கிடைக்காத பதில்கள் இதற்கு முன்னர் நேர்முக தேரவிற்கு வந்தவர்களிடம் இருந்து கிடைத்தது. கிறுவின் பதில்களில் கவரப்பட்டவன் அவளையே தனது பி.ஏ வாக  தெரிவு செய்தான். அதே நேரம் கவினும் அவனறைக்குள் நுழைந்தான். 

 

“என்ன மச்சான் உன் பொன்டாட்டி என்ன சொல்றா?” என்று கேட்க,

 

“நீ தான் இவளை இங்க அழைச்சிட்டு வந்தியா?” என்று கேட்க,

 

“ஐயோ, நான் எவளவோ சொன்னேன் டா, இவ தான் அடம்பிடிச்சு என்னை இங்க கூட்டிக் கிட்டு வந்தா” என்றான் கவின்.

 

ஆரவ் அவளைப் பார்க்க அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல மொபைலை நோண்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்கான அபோய்ன்மன்ட் லெடரை ரிசப்ஷனிஸ்ட்  அவனிடம் வழங்கிச் சென்றாள். அவளிடம் லெடரை வழங்க அதை சிரித்த முகத்துடன் பெற்றுக் கொண்டாள். 

 

“ஆரவ் நான் தான் உன் வைப் அதை யார்கிட்டவும் சொல்லாத. நான் உன் வைப்னு தெரிஞ்சா என் கூட பீரியா பழக மாட்டாங்க” என்று கூற அவனும் அதை ஒத்துக் கொண்டான்.

 

கவின் “மச்சான் எனக்கு டைமாச்சு நான் கிளம்புறேன். கிறுவை நல்லா பார்த்துக்கோ” என்று கூறி வெளியேற அவனை அனுப்பி வைப்மதற்காக இருவருமே பார்கிங்கிற்குச் சென்றனர்..

 

கிறு கவினின் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு இருந்தாள். அவன் அவளது பையை செகியூரிடியின் உதவி மூலம் ஆரவின் காரில் வைத்தான். அவனும் காரில் ஏறும் வரையில் கிறுவின் கையைப் பற்றி இருந்தான். 

 

“இங்க பாரு கிறு, உனக்கு கல்யாணம் ஆகிருச்சு. உன் சேட்டையெல்லாம் தள்ளி வச்சிட்டு ஆரவைத் தொல்லை பன்னாமல் இரு” என்று அவள் கையிலிருந்து தன் கையைப் பிரிக்க அதே நேரம் அவளது மற்றைய கையை ஆரவ் இறுகப்பற்றிக் கொண்டான். கவின் சென்ற பிறகு அவளது கண்கள் கலங்கிவிட்டன. 

 

“வா கிறுஸ்தி, என்னோட மற்றைய பி.ஏ ஐ அறிமுகப்படுத்துறேன். அதற்கு அப்பொறமா வீட்டுக்கு போலாம்” என்று ஷ்ரவனைப் பார்க்க அழைத்துச் சென்றான்.

 

அவனது அறைக்குள் அழைத்துச் சென்று அவளை அமர வைத்தவன் ஷ்ரவனை தனது அறைக்கு அழைக்க அவனும் நுழைந்தான்.

 

“ஷ்ரவன் இவங்க என்னோட புதிய பி.ஏ கிறுஸ்திகா ஆரவ் கண்ணா” என்றும், 

 

ஷ்ரவனையும் அறிமுகப்படுத்தினான் 

கிறு, ஷ்ரவன் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவர் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 8யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 8

நிலவு 8   கிறுஸ்தியின் அருகில் கதிரையில்  அமர்ந்து கட்டிலின் ஓரத்தில் ஆரவ் தலைவைத்து உறங்கினான். இவனைப் பாரக்க வந்த நண்பர்கள் விழித்தனர் இதைப் பார்த்து,    மாதேஷ், “இவனை யோசிச்சு ஒரு முடிவு எடுன்னா தூங்கிட்டு இருக்கான்டா” என்றான்.   

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52   “வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான்.    “ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,   “வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.   அத்தை,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 39யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 39

நிலவு 39   இந்தியன் நெட்போல் போர்டில்   “ஏ.கே பற்றி ஏதாவது தெரிஞ்சுதா?” என்று அவன் கேட்க,   “நோ சேர் அவங்க பிரன்ஸ் பற்றி கூட ஏதும் தெரியவில்லை” என்றார் மெம்பர் ஒருவர்.   “அது எப்படி நான்கு