Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 21

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 21

பனி 21

 

சிவபெருமாள், அவரது குடும்பம் முழுவதுமே அவர்கள் இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்தது. தளிர் ஆதியைப் பார்த்து ஒருவரும் கவனியா வண்ணம் புன்னகைத்தாள். சிவபெருமாளின் ஆட்கள் அவர் அருகில் வந்து,

 

“ஐயா மன்னிச்சிருங்க, எங்களால் ஒன்னும் பன்ன முடியாதது போல தளிரம்மாவோட கழுத்துல கத்தியை வச்சி இருந்தாங்க. சின்னமா இதனால் கல்யாணம் பன்னிகிட்டாங்க” என்றான் ஒருவன்.

 

அதே நேரம் நேசன் உள்ளே நுழைந்து பார்க்க, கிருஷி, ஆதி இருவரும் மணக் கோலத்தில் இருப்பதைக் கண்டவன் அதிர்ச்சியில் அங்கேயே நின்றான்.

 

“ஐயோ மாமா, நான் உங்க வீட்டு மாப்பிள்ளை இப்படி தான் என்னை நிற்க வைத்து பேசுவிங்களா?” என்று கேட்டு அவனே கிருஷியை கைபிடித்து அழைத்துச் சென்று அமர்ந்தான்.

 

ராம் அவனை முறைக்க,

 

“மச்சான் என்னை அப்படி பார்க்காதிங்க, எனக்கு வெட்கமா வருது, புதுமாப்பிள்ளை இல்லையா?” என்று ஆதி கூறினான் வெட்கப்பட்டவாறே.

 

விகியும், பவியும், தளிரும் கடினப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தனர்.

 

“யாருக்கு யாருடா மச்சான்? நீ இந்த வீட்டு மாப்பிள்ளையா? வெட்கமா இல்லை எங்க வீட்டு ஆளுங்களை பழிவாங்குறதுக்காக என் ஒரு தங்கையை வச்சி இன்னொரு தங்கையை மிரட்டி கல்யாணம் பன்னி இருக்க?” என்று கோபமாக பேச,

 

“அட என்ன மச்சான் விஷயம் தெரியாமல் பேசுறிங்க? கொஞ்சம் அப்டேட்டா இருக்கனும். நந்தனி தங்கச்சி அணணாவிற்கு ஒரு நல்ல காபி போட்டு எடுத்து வா. நான் உன் புருஷனோடு சில விஷயங்களை கிளியர் பன்னிருவேன்” என்று கூறினான் ஆதி.

 

அவள் ராமைப் பார்க்க அவன் அவளை முறைத்துக் கொண்டு இருந்தான்.

 

“அண்ணா நான் சொல்றேன் போமா” என்று கூற அவள் செய்வது அறியாது கைகளை பிசைந்துக் கொண்டு நின்றாள்.

 

“போன்னு சொல்றேன்” அருகில் உள்ள மேசையில் குத்த அந்த தேக்கு மரத்தாலான மேசை துண்டுகளானது. அனைவரும் அதை மிரட்சியுடன் பார்க்க, இத்தனை நேரமாக சுயநினைவற்று இருந்த கிருஷி விழித்துக் கொள்ள அதிர்ந்து ஆதியைப் பார்த்தாள்.

 

அவனது கோபத்தை இரண்டாவது முறை பார்க்க அவளுக்கே பயம் எட்டிப்பார்த்தது. ஆதியின் கோபத்தை பார்த்திராத அவனுடைய ஆட்களும் பயந்தார்கள் என்பது உண்மையே. அவன் கையில் இரத்தம் வழிவதைப் பார்த்த கிருஷி அவனது கையை அவசரமாக எடுத்துப் பார்க்க, அவனை முறைத்தாள். பின் அவன் கையை விட்டவள் பவியிடம் கண்களால் அவன் காயத்தைக் காட்டினாள்.

 

அதைப் புரிந்துக் கொண்ட பவி பர்ஸ்ட் எய்ட் கிட்டை எடுத்து வந்து அவனக்கு மருந்து இட ஆரம்பித்தாள்.

 

“என்னடா எங்க வீட்டு பொண்ணை கல்யாணம் பன்னிட்டு இன்னொருத்தி கையை பிடிச்சிட்டு இருக்க” என்று நேசன் தவறாக கூறி முடியும் முன்னே மூன்றடி தூரத்தில் ஒரு கபோர்டில் விழ அது உடைந்தது.

 

“சீ, அசிங்கமா இல்லை அவ என் தங்கச்சி” என்றான் ஆதி அடித்த கையில் இருந்த பிரேஸ்லட்டை பின் கையில் இறுக்கியபடி.

 

நேசன் அருகில் சென்ற விகி அவனை எழ வைத்து முகத்தில் இரண்டு குத்து விட, அவன் இரத்தம் வழிய கீழே தடுமாறி விழுந்தான். பின் பவியின் அருகில் நின்று அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்,

 

“இவ என் பொன்டாட்டி. இவளை பற்றி தப்பா பேசின, உயிரோட இருக்க மாட்ட” என்று கூறி முடியும் போது பொலிஸார் உள் நுழைந்தனர்.

 

“சேர் இந்த தேவும், அவனோட பிரன்டு ஆட்கள் எல்லாருமே எங்க வீட்டு பொண்ணை மிரட்டி கல்யாணம் பன்னது மட்டுமில்லாமல், ஆராஜகம் பன்றாங்க” என்றான் நேசன்.

 

பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆதியின் புறம் திரும்ப அங்கே ஆதியையும், விகியையும் பார்த்து செலூட் அடிக்க அனைவருமே குழம்பியது உண்மை.

 

“ஆதி சேர்,விகி சேர் நீங்க இரண்டு பேருமே இங்கே எப்படி?” என்று கிருஷியைப் பார்த்து குழம்பினார் அந்த பொலிஸ்.

 

“மெடம் நீங்க சென்னையில் இருந்திங்க இந்த ஊரில் எப்படி?” என்று கேட்க,

 

ராம் “இன்ஸ்பெக்டர் இவங்களை உங்களுக்கு தெரியுமா? என் தங்கையையும் தெரியுமா?” என்று கேட்டான்.

 

“கிருஷி மெடம் உங்க தங்கையா?” என்று அதிர்ந்து மீண்டும் குழம்பினார் அந்த இன்சி.

 

“மோகன் நீங்க குழம்பாதிங்க நானே எல்லாவற்றையும் தெளிவுபடுத்துறேன்” என்றான் ஆதி.

 

“நான் கல்யாணம் பன்னது சிவபெருமாளோட பொண்ணு கிருஷ்ணவேனியை. நான் ராஜேஸ்வரி, வாசுதேவனோட பையன் ஆதிலக்ஷதேவன்” என்றான்.

 

“சேர்” என்று அவன் கண்களை விரிக்க,

 

“இன்ஸ்பெக்டர் அவனுக்கு எதுக்கு மரியாதை கொடுக்குறிங்க” என்று ராம் கத்த

 

“அவன் சென்னை சிடியோ DSP ” என்றார் சிவபெருமாள்.

 

ராம் அதிர்ச்சியாய் தன் தந்தையைப் பார்க்க,

 

மோகன் “விக்ரமன் சேர் சென்னையோட ACP” என்றார்.

 

நேசனின் முகத்தில் ஈஈஈ ஆடவில்லை.

 

“அவனை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று ராம் கேட்க,

 

“அதற்கான பதிலை நான் சொல்றேன்” என்றான் ஆதி. அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

 

“நான் உங்க தங்கையை பெண் கேட்டு அவரோடு போனில் பேசினேன். அவரும் ஓகே சொல்லி என்னை மாப்பிள்ளையா ஏத்துகிட்டாரு” என்று கூறினான்.

 

“ஏன் பொய் சொல்ற? என் அப்பா உன்னை மாப்பிள்ளையா ஏற்றுக் கொண்டாராம். இதை போய் எவனாவது இழிச்சவாயனிடம் போய் சொல்லு அவன் நம்புவான்” என்றான் ராம்.

 

“அட என்ன மச்சான், நீங்க நம்பமாட்டேங்கிறிங்க?, சரி நான் ஆதரத்தை உங்களிடம் காட்றேன்” என்று விகியை அழைத்தான்.

 

“இது உங்க அப்பா பேசினதை ரெகோட் பன்னி இருக்கேன், கேட்டுப் பாருங்க” என்று அதை ஒலிற விட்டான்.

 

‘உங்க குடும்பத்து கிட்ட சொல்லி கிருஷியை முறைப்படி பொண்ணு கேட்டு வாங்க மாப்பிள்ளை’ என்று அவர் பேசி இருந்தார்.

 

“எவனோ ஒருத்தனை மிமிகிரி பன்ன வச்சிட்டு எங்க அப்பா பேசினேன்னு பொய் சொல்ற” என்று கோபமாகக் கூற

 

“876432145 நம்பர் உங்க அப்பாவோட பேர்சனல் நம்பர் தானே?” என்று கேட்க,

 

ராமும் ‘ஆம்’ என்றான்.

 

“அந்த நம்பர் உங்க குடும்பத்து ஆளுங்களை தவிற யார்கிட்டவும் இல்லை. அப்போ எனக்கு எப்படி கிடைச்சி இருக்கும்” என்று கேட்டான் ஆதி.

 

ராமும் புரியாமல் தன் தந்தையைப் பார்த்தான்.

 

“என்ன மாமா நான் சொல்வது எல்லாமே உண்மை தானே?” என்று கேட்க

 

அவரும் ‘ஆம்’ என்று தலை அசைக்க,

மற்றவர்கள் அதிர்ச்சியாய் அவரைப் பார்த்து நின்று இருந்தனர்.

 

” இவ என் பொன்டாட்டி. என் வீட்டிற்கு அவளை அழைச்சிட்டு போறேன். வரேன் மச்சான் வரேன் மாமா, வரேன் தங்கச்சி, அத்தை, தளிர்” என்று கூறி அழைத்துச் செல்ல

 

“எங்க பொண்ணு உன் கூட வரேன்னு சொல்லவே இல்லையே தேவ்” என்று நேசன் கூற

 

‘இவன் திருந்த மாட்டான், அடிவாங்காமல் போகிற ஐடியா இவனுக்கு இல்லை’ என்று பவி அவனைப் பார்க்க,

 

“சித்தப்பு அவ இப்போ கிருஷ்ண வேனி சிவபெருமாள் இல்லை. கிருஷ்ணவேனி ஆதிலக்ஷதேவன், என் பொன்டாட்டி என் கூட தான் இருப்பா” என்றான் ஆதி.

 

“யாருடா சித்தப்பா” என்று நேசன் எகிற

 

“நீ தான் நேசன். வேறு யாரு? என் பொன்டாட்டிக்கு மாமா ன்னா எனக்கு சித்தப்பு தானே? என்ன உனக்கு உறவுமுறை தெரியாத அளவிற்கு என் மாமா உன்னை வளர்த்து வச்சிருக்காரு? அத்தை நீங்களாவது உங்க தம்பிக்கு இதெல்லாம் சொல்லி கொடுங்க”என்று கூறிய பிறகு

 

“பவி நீயும் எங்க கூட என் வீட்டிற்கு வா” என்று கூற அவளும் சென்று தன் பேகை எடுத்துக் கொண்டு அவர்களுடன் சென்றாள்.

 

காரில் அமர, ராஜேஸைத் தவிற மற்றவர்களுக்கு ஆதி சிவபெருமாளிடம் பெண் கேட்டிருப்பது குழப்பத்தையே அதிகரித்து. ஆதியிடம் இதைப் பற்றி தனியாக கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டனர்.

 

கிருஷி, தன் கணவனையும் ஏற்க முடியாமல் தன் பெற்ற குடும்பத்தை விட்டு எதிரியின் குடும்பத்திற்கு மருமகளாக செல்வதில் உள்ளுக்குள் துடிதுடித்தாள். தன்னவனுடன் கைபிடித்து பெருமையாக அவன் வீட்டிற்கு செல்ல வேண்டிய பயணம், அவனை வெறுக்க வைத்து இந்த பயணம் செல்கின்றதே என்று கவலைக் கொண்டாள். எப்போது தளிரை மிரட்டி தன் கழுத்தில் தாலியைக் கட்டினானோ, அப்போதே அவனை வெறுக்க ஆரம்பித்துவிட்டாள்.

 

விகி, பவி இவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்குமோ என்ற எண்ணத்தில் இருக்க, ஆதி தன் ஆட்களிடம் எவ்வாறு திருமணத்தை நடத்த ஒப்புகொள்ள வைத்தது என்பதைப் பற்றி யோசித்தான்.

 

நேற்றிரவு ஆதியின் நண்பன் ராஜேஸ் நாளை கிருஷியை கொல்வதற்கு தீட்டிய திட்டத்தைப் பற்றி அறிவிக்க, ஆதி அவர்கள் அனைவரையும் உடனே சந்திக்க வேண்டும் என்று கூறினான்..

 

அவர்கள் அனைவரும் வருகை தந்த பிறகு,

 

“நாளைக்கு சிவபெருமாளோட பொண்ணை தூக்க போறிங்களா?” என்று கேட்க,

 

“ஆமா” என்றான்.

 

“அவளை கொன்னுட்டு என்ன பன்ன போறிங்க?” என்று கேட்டான் ஆதி.

 

அவர்கள் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தனர்.

 

“அவ உங்களை என்ன பன்னா?” என்று கேட்க,

 

“அண்ணா நீங்களே இப்படி பேசறிங்களே? அவ சிவபெருமாளோட பொண்ணு” என்று ஒருவன் கூற

 

“நம்ம நிலாவை இதே போல கொல்வதற்கு பிளேன் பன்னா” என்று கூறி முடியும் முன்னே

 

“அண்ணா” என்ற எதிரொலி கேட்டது.

 

“அவ ஒரு பொண்ணு. பத்து வருஷமா ஊரு பக்கமே அவ வரவே இல்லை. அப்படி இருக்கும் போது அவளை கொல்றதுல என்ன நியாயம்? நம்ம எல்லாருமே பொண்ணை மதிக்க தெரிந்த பரம்பரையில பிறந்தவங்க, அப்படி இருக்கும் போது ஒருத்தரை பழிவாங்குவதற்காக, ஒரு பொண்ண எப்படி கொல்லாம்?” என்று கேட்டான்.

 

அவர்கள் அனைவருமே அமைதியாக இருந்தனர்.

 

“சிவபெருமாளை பழிவாங்கனும் அதுவும் அந்த பொண்ணை வச்சி, இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு” என்று ஆதி கூற

 

‘என்ன’ என்று அவனைப் பார்க்க,

 

“நான் அவளை கல்யாணம் பன்னனும்” என்று கூறினான்.

 

“அண்ணா அவ நம்ம எதிரியோட பொண்ணு” என்று இன்னொருவன் கூற

 

“அதனால தான் இப்படி ஒரு முடிவு எவனுக்கு தான் பெத்த பொண்ணு எதிரி வீட்டிற்கு மருமகளா போய் அந்த குடும்பத்துக்கு வாரிசை பெத்து கொடுக்குறதை தாங்க முடியும்? அவன் அதில் அணு அணுவா செத்துருவான்” என்றான் ஆதி.

 

“இப்போ சொன்னிங்க பொண்ணுக்கு மரியாதை கொடுக்கனும்னு, ஆனால் அந்த பொண்ணு வாரிசு” என்று ஒருவன் தடுமாற

 

” அவ அனுமதி இல்லாமல் அவ மேலே என்னோட சுண்டு விரல் படாது. அவ கல்யாணம் பன்னதுல இருந்து அவ என் பொன்டாட்டி. அவளுக்கு இந்த வாழ்க்கை ஏத்துக்க நேரம் வேணும் எனக்கும் வேணும். அதற்குள்ள நான் அவளுக்கு எங்க பக்கம் இருக்கிற நியாயத்தை புரிய வைப்பேன். நம்ம பக்கம் இருக்கிற சில பிழைகளையும் திருத்துவேன்” என்று தீர்க்கமாக கூற

 

அவன் கண்களில் இருந்த உறுதியைப் பார்த்து, அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதே நேரம் அவன் வீட்டின் முன் அவர்களது கார் நின்றது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13

பனி 13   சிவபெருமாளின் வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் ஏறியவன் தன் நண்பன் ஒருவனிடம்   “வீட்டில் யாரு யாரு இருக்காங்க?, மற்றவர்கள் எல்லோருமே போயிட்டாங்களா? இல்லை கொஞ்சம் பேர் சரி வீட்டில் இருக்காங்களா?” என்று கேட்க,   “மச்சான் நமளுக்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 35யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 35

பனி 35   ஒரு நாள் ஆதி கிருஷியின் ரிபோர்ட் எடுக்கச் சென்று இருந்தான். கிருஷி அறையில் அடைந்திருக்க முடியாமல் கீழே செல்ல வர மாடிப்படிகளில் இறங்கும் போது அவளுக்கு தலைவலி ஏற்பட்டது. அவள் ஒரு கையால் தலையைப் பிடித்து மறு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 25யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 25

பனி 25   கிருஷி சாப்பிட அமர்ந்து ஒருவரையும் பார்க்காமல் சாப்பிடுவதிலேயே குறியாய் இருந்தாள்.   ‘புருஷன் சாப்பிட்டானான்னு ஒரு வார்த்தை கேட்குறாளா? ஐயோ இவ சாபிடுற வேகத்தை பார்த்தால் நமளுக்கு சாப்பாடு இருக்காது’ என்று நினைத்தவன் அவசரமாக கைகளை கழுவி