Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 31

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 31

பனி 31

 

கிருஷியின் கால்களில் ஆதி வாங்கிக் கொடுத்த கொலுசைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.

 

‘அப்போ மாமாவிற்கு என்னை விட அவளை தான் பிடிக்குமா? என்னை விட எப்படி அவளை மாமாவிற்கு பிடிச்சு போச்சு? இல்லை இல்லை மாமாவிற்கு என்னை தான் பிடிக்கும், அப்படி விட மாட்டேன், மாமா எனக்கு மட்டும் தான்’ என்று தன்னுள் கூறி அங்கிருந்து நகர்ந்தாள் திவி.

 

பின் அவளை வேலை செய்ய விடாமல் அனைத்து வேலைகளையும் ஆதியே முடித்தான். அவர்களுடைய அறையில் இருந்து தேவையான அனைத்தும் புதிய அறைக்கு மாற்றப்பட்டது. கிருஷி ஆதிக்கு சிறு உதவிகளைச் செய்தாள். பின் இருவரும் குளித்து இரண்டு மணி போல் பகல் உணவை உண்டனர்.

 

“லக்ஷன் உனக்கு எதுக்கு இரண்டு குடும்பமும் எதிரியானங்கன்னு தெரியுமா?” என்று கிருஷி கேட்டாள்.

 

“ஆமா நவி, கிட்டதட்ட எழுபது வருஷங்களுக்கு முன்னாடி, நம்ம முப்பாட்டங்க தான் இரண்டு ஊரோட தலைவர்கள். அப்போ இரண்டு பேருக்கும் இடையில் போட்டி, பொறாமை இருந்து இருக்கு. இரண்டு பேருமே தனக்கு தான் முன்னிரிமை கொடுக்கனும்னு எதிர்பாக்குற ஆளுங்க.

 

ஒரு முறை கோயில் திருவிழா நடக்கும் போது யாருக்கு முதல் மரியாதை கொடுக்கனும்னு பிரச்சனை எழுந்து இருக்கு. இரண்டு ஊருமே தங்களோட ஊர் தலைவருக்கு தான் கொடுக்கனும்னு வாதிட்டு இருக்காங்க. அப்போ உருவாகிய வாய்ச்சண்டை கைகலப்பாக மாறி வெட்டு குத்துக்கு போயிருச்சு. அப்போ இரண்டு ஊருக்கும் பலத்த காயம்.

 

ஆனால் இரண்டு ஊர் தலைவர்களுமே சீரியசா ஹொஸ்பிடலில் இருந்தாங்க. அடுத்த அடுத்த நாள் இறந்து போயிட்டாங்க. அன்றைக்கு ஆரம்பிச்ச பிரச்சனை தான் இத்தனை பரம்பரையா பகையா இருக்கு” என்று கூறி பெருமூச்சை வெளியிட்டான்.

 

“எதுக்கு இந்த திடீர் கேள்வி?” என்று ஆதி கேட்க,

 

“சும்மா, நம்ம பகை வரலாற்றுச் சரித்திரத்தை தெரிஞ்சுக்கலாம்னு” என்று ஒரு டோனில் கிருஷி கூற

 

அதைப் பார்த்து ஆதி சிரிக்க, அவளும் சிரித்தாள்.

 

அன்றைய தினம் பிரச்சனை ஏதும் இன்றி சுமூகமாகவே சென்றது. நாட்கள் நகர கிருஷி அனைவரிடமும் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள். மகா, திவியின் தாய் இருவராலும் சில நேரங்களில் அவளின் செயல்களை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் இறுய முகத்தின் மூகமூடியை இருவருமே அணிந்துக் கொண்டனர். ஆதியோ யார் அந்த MLL? என்பதை கண்டு பிடிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்தான்.

 

ஒரு நாள் ஆதி காலையில் எழும் போதே அவன் மனம் ஓர் நிலையில் இருக்கவில்லை. இன்று அந்த MLL இருக்கும் இடத்திற்கு அவனும் அவன் டீமும் செல்ல இருந்தனர்.அருகில் தன்னை அணைத்து உறங்கும் தன்னவளைப் பார்த்த போது அவன் இதழ்கள் தானாக விரிந்தன. மெல்ல அவளை தள்ளி உறங்க வைத்தவன் குளித்து கீழே சென்று இருவருக்கும் சேர்த்து காபியை எடுத்து வந்தான். கிருஷியும் அப்போதே குளித்து வெள்ளை, வான் நீல நிற சுடி அணிந்து இருந்தாள்.

 

“லக்ஷன் இன்றைக்கு கோயிலுக்கு போயிட்டு வரட்டுமா?” என்று கேட்க,

 

“வேணாம் டி, என் மனசு காலையில் இருந்து சரியே இல்லை” என்றான்.

 

“டேய் உன் மனசு காலையிலே இருந்து தான் சரி இல்லை. நான் இப்போ தான் கோயிலுக்கு போலாம்னு முடிவு எடுத்தேன். நான் போயிட்டு வரேன் டா. யேன்னு தெரியல்லை, கோயிலுக்கு போகனும்னு மனசு சொல்லிட்டே இருக்கு” என்றாள்.

 

“சரி டி பத்துரமா போயிட்டு வா எனக்கு இன்றைக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் வரும் வரைக்கும் சாப்பிடாமல் இருக்காத புரியிதா?” என்று ஆதி கேட்டான். இருவருமே அவளுக்காக காத்திருக்கும் ஆபத்தை அறியவில்லை.

 

“புரியிது டா” என்றாள் புன்னகைத்து.

 

இருவரும் காபியைப் பருகி கீழே வர மற்றவர்களும் சோபாவில் அமர்ந்து இருந்தனர். அனைவரிடமும் பொதுவாகக் கூறி விடைப் பெற்றான்.

 

“அத்தை நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்” என்று கூற

 

“சரி மா, பத்துரமா போயிட்டு வா, காரை ஏற்பாடு பன்றேன்” என்று ராஜேஸ்வரி கூற

 

“சரிங்க அத்தை” என்று காரில் கோயிலுக்குச் சென்றாள் கிருஷி.

 

கோயிலுக்கு வந்தவள், அர்ச்சணை தட்டு ஒன்றை வாங்கி, உள்ளே நுழைய அவளைப் பார்த்த ஒருவன் மொபைலில் எவருக்கோ அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“ஐயா, வேணி மா கோயிலுக்கு வந்து இருக்காங்க, தனியா” என்று கூற

 

எதிர்ப்புறம் “அவளை நம்ம இடத்திற்கு தூக்கிட்டு வாங்க டா” என்று கூற

 

“சரிங்க ஐயா” என்று அழைப்பை துண்டித்தான்.

 

கண்களை மூடி கடவுளிடம் வேண்டியவள், குளத்தில் கால் கழுவிய பிறகு கோயிலில் இருந்து வெளியே வந்தாள்.

 

அப்போது வேகமாக வந்த ஒரு வண்டி அவளை உள்ளே இழுத்துப் போட்டுப் பறந்தது.

 

இவை அனைத்தும் கண்மூடித் திறக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்தது.

 

ஆதி பொலிஸ் ஸ்டேஷனிற்கு வந்தவன்,

 

“விக்ரமன் எல்லாமே ஒகே தானே? தயாரா இருக்காங்களா எல்லோரும்?” என்று கேட்க,

 

“ஆமா சேர், நமக்கு கிடைச்சி இருக்கிற தகவல் படி சிங்கம்பெட்டி, அம்பாசமுத்திரம் இரண்டு ஊரிற்கும் நடுவில் இருக்கிற இடத்துல தான் அவங்க குடோன் இருக்கிறதா தகவல் கிடைச்சு இருக்கு” என்றான் விகி.

 

“லெட்ஸ் கோ” என்று துப்பாக்கியைச் தன் சட்டையின் உள்ளே முதுகுப்புறம் சொருகிக் கொண்டு அனைவருடனும் மப்டியில் கிளம்பினான்.

 

கிருஷியின் கண்கள், கால்கள், வாய் என்பவை கட்டப்பட்ட நிலையில் ஓரிடத்தில் இருந்தாள்.

 

அவளுடைய கட்டுக்கள் அனைத்துமே அவிழ்கப்பட்டன. அவள் கண்களை கசக்கிக் கொண்டு திறந்து பார்க்க அவள் முன்னே ஒருவர் கால் மேல் மற்றைய காலை இட்டு அமர்ந்து இருந்தார். அவளுக்கு அவர் யார்  என்று தெளிவாகத் தெரியாமல் போக மீண்டும் கண்களை கசக்கிப் பார்த்தாள். அவள் முன்னே சிவபெருமாள் அமர்ந்து இருக்க நேசன் அவர் அருகில் நின்று இருந்தான்.

 

“அப்பா நீங்களா? நான் ரொம்ப பயந்தேன்” என்றாள்.

 

அவர் ஏளனமாக புன்னகைக்க, அது அறியாத அப்பேதை,

 

“யேன் இப்படி பன்னிங்க? நீங்க கூப்பிட்டு இருந்தால் நானே வந்து இருப்பேனே?” என்றாள்.

 

“நீ எங்கே இருக்கன்னு உன் புருஷனுக்கு தெரிய கூடாது இல்லையா?” என்றான் நேசன்.

 

“அவனுக்கு எதற்கு தெரிய கூடாது?” என்று அவள் கேட்டாள்.

 

“உன்னை கொன்னது நாங்க தான்னு கண்டு பிடிக்காமல் இருக்கிறதுக்கு தான்” என்று நேசன் கூற

 

அவள் அதிர்ந்து நின்றாள்.

 

“என்ன வேணி அப்படி அதிர்ச்சியா பார்க்குற?” என்று நேசன் ஏளனமாகக் கேட்க,

 

“அப்பா என்ன இவரு ஏதோ கொலைன்னு சொல்றாரு? நீங்களும் ஏதும் பேசாமல் இருக்கிறிங்க?” என்று கிருஷி தழுதழுக்கும் குரலில் கேட்க,

 

“அவன் சரியா தான் பேசுறான் வேணி” என்றார் சிவபெருமாள்.

 

“என்ன பா இங்கே நடக்குது?” என்று அவள் ஏமாற்றமான குரலில் கேட்க,

 

“நான் என்ன பன்றது மா? நீ அவன் கட்டின தாலியை கழற்றி வீசி வந்து இருக்கனும், நீ அதை பன்னாமல் அவன் கூட சேர்ந்து வாழுற? என்னை ஏமாற்றியவனை கொல்ல நினைத்தேன். பட் அவன் தப்பிச்சிட்டான். நீ அவனை ஏத்துகிட்டு சந்தோஷமா வாழுற. அதுவும் உன் அப்பாவை ஏமாற்றியவன் கூட, என்னால் என் எதிரி குடும்பத்துல போய் நீ வாழுறதை பார்க்க முடியாது மா. அதான் நீ என் மகளாவே செத்து போயிடு மா” என்றார்.

 

அப்போதே கிருஷிக்கு தன் தந்தையின் உண்மையான குணம் தெரியவந்தது. அவள் அவ் அதிர்ச்சியில் இருந்து மீள முன் நேசன் கூறியதில் அதிர்ச்சியின் உச்சத்தையே தொட்டாள்.

 

“அந்த தேவ் என் வழியில் எப்போதுமே குறுக்க வருகிறான். உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சதே அவன் தான். அவன் மட்டும் உன்னை கல்யாணம் பன்னாமல் இருந்தால் நீ இந்த நிமிஷம் என் மனைவியா உயிரோட வாழ்ந்து இருப்ப” என்று நேசன் கத்தினான்.

 

கிருஷிக்கு தன் தந்தை இப்படி ஒரு அநீதியை இழைப்பார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதுவும் நேசனுக்கு மனைவியாக என்று நினைக்கும் போதே அவளுக்கு அறுவெறுப்பாக இருந்தது.

 

தன்னுடன் இத்தனை நாட்கள் தவறான எண்ணத்திலா பழகி இருக்கிறான். அன்று பவியும் இதைப் பற்றி தான் கூறினாளா?

 

அன்று பவி நேசனைப் பற்றிக் கூறியதைப் பற்றி நினைத்தாள்.

 

“ஆமா, எதுக்கு சாப்பிடும் போது நேசன் மாமா கிட்ட அப்படி பேசுன?” என்று கிருஷி கேட்க,

 

“உண்மையை சொல்லட்டுமா?, பொய் சொல்லட்டுமா?” என்று பவி கேட்க,

 

“உண்மையை சொல்லு” என்றாள் கிருஷி.

 

“அவன் பார்வையே சரி இல்லை. அவன் பொண்ணுங்க கண்ணை பார்த்து பேசுற ரகம் இல்லை, கழுத்திற்கு கீழே பார்த்து பேசுற ரகம்” என்றாள் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக.

 

“என்ன டி சொல்ற?” என்று அவள் கேட்க,

 

“கிருஷி நான் எதிர்பார்க்குறதை போல நீ அவன் முன்னாடி அதிகமா போய் இருக்கமாட்ட. அதனால் உனக்கு புரியல்லை. நான் அவளோ சீக்கிரமா ஒருத்தரை பற்றி தப்பா சொல்ல மாட்டேன். அது உனக்கு நன்றாகவே தெரியும்” என்று அங்கு இருந்து எழுந்துச் சென்றாள்.

 

கிருஷியால் அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை……

 

ஆனால் இன்று அதை உறுதிபடுத்தும் முகமாவே அவனுடைய பார்வை அவளைத் தழுவிச் சென்றது.

 

அவளுடைய மனமோ இவை அனைத்துமே கனவாக இருகக் கூடாதா என்று ஏங்கியது. இது கனவு அல்ல என்று நிரூபிக்கும் முகமாக நேசனே பேசினான்.

 

“என்ன வேணி நம்பமுடிய இல்லையா?” என்றான் சிரித்து.

 

“அப்பா, நீங்களா இப்படி? இது எல்லாம் தப்பு பா” என்றாள் ஒரு மகளாய் தந்தைக்கு.

 

“இல்லை வேணி, நான் ஆசைப்பட்டது போல நீ நேசனை கல்யாணம் பன்னி இருந்தால் அவன் சொன்னது போல் இந்த நிலமை வந்திருக்காது. அதை விட செத்துப் போ மா” என்றார் அக்கறையுடன் பேசுவது போல்

 

“அப்பா இவனை எனக்கு கல்யாணம் பன்னி வைக்க பார்த்திங்களா? இவன் பொண்ணுங்களை தப்பா பார்க்குற ரகம். இவனை போய் சீ அறுவெறுப்பா இருக்கு” என்று கோபமாக கூற

 

அவளை அறைந்தான் நேசன்,

 

“என்ன டி எகிறுர? இதற்கே இப்படின்னா, உன்னை நான் அடைஞ்சதுக்கு அப்பொறமா தான் கொல்லவே போறேன், அதற்கு என்ன பன்னுவ?” என்று நேசன் அரக்கனாகக் கூற

 

கிருஷி அதிரந்து தன் தந்தையைப் பார்த்தாள். அவரோ அமைதியாகவே இருக்க,

 

“அப்பா உங்க முன்னாடியே இப்படி பேசுறான் பா, இவன் நல்லவன் இல்லைன்னு புரிஞ்சிக்கொங்க பா” என்றாள் கெஞ்சலாய்

 

“அவன் கெட்டவன் என்றால் நானும் கெட்டவன் தான்” என்றார் சிவபெருமாள்.

 

“நான் லக்ஷனோட மனைவி பா, இதெல்லாம் தப்பு பா” என்று கூற

 

“இந்த அடையாளத்தோட வாழ்ந்த, இப்போ வேறு அடையாளத்தோடு சாகு” என்று அங்கிருந்து நகர

 

“அப்பா நான் உங்க பொண்ணு பா” என்றாள் அழுகையுடன்.

 

“நீ என் பொண்ணே இல்லை. நான் பெத்த பொண்ணு இருபத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டா” என்று சென்றுவிட்டார்.

 

கிருஷி இதைக்கேட்டு அதே இடத்தில் உறைந்தாள். மற்றவர்கள் வெளியேற கிருஷியை நேசன் நெருங்கினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 4

பனி 4   “அக்கா, அக்கா” என்று உள்ளே வந்தான் நேசன்.   “ஏன் டா கத்துற? மாமா தூங்குறாரு. நேற்று இராத்திரி அவரு வர ரொம்ப லேட் ஆகிறிச்சி” என்றார் சிவபெருமாளின் மனைவியான கனகவள்ளி.   ‘பசிக்குது அக்கா” என்று

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1

பனி 1   நிலா நடு வானத்தில் வந்து தனது ஒளியை முடியுமானளவு அந்த ஊரிற்கு வழங்க, அந்த நிலாவின் வெளிச்சத்தில் அந்த ஆள் அரவமற்ற வீதியில் உயிர் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனைத் தொடர்ந்து பலர் கைகளில் அறுவாளுடனும்,