Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 20

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 20

பனி 20

 

நேசன் அவன் நண்பனிடம் கிருஷியிற்கும் தனக்கும் திருமணத்திற்கு தன் மாமா ஒத்துக் கொண்டதாகக் கூற இதைக் கேட்ட பவி அதே இடத்தில் அதிர்ச்சியில் சிலையானாள். பின் சுதாகரித்து தான் வந்த தடையமே தெரியாமல் மீண்டும் அறைக்குச் சென்று ஆதியிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

 

“அண்ணா பிசியா இருக்கிங்களா?” என்று கேட்க,

 

“இல்லை மா, ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்டான் ஆதி.

 

“ஆமா அண்ணா ரொம்ப முக்கியமான விஷயம் தான்” என்று நேசன் கூறியதை கூறினாள்.

 

ஆதி அதிர்ச்சியாகினான்.

 

“அண்ணா நேசன் அவளோ நல்லவன் இல்லை. பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப மோசமானவன்” என்று பவி கூற

 

“சரி நான் உனக்கு பத்து நிமிடத்தில் பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

அன்றிரவு, ஆதி பவிக்கு மீண்டும் அழைத்தான்.

 

“பவி எங்க ஆளுங்க கிருஷியை கொல்றதுக்கு திட்டம் போட்டு இருக்கானுங்க. நாளைக்கு சிவன் கோயிலில் வச்சு. அதே நேரம் எங்க ஆளுங்க முன்னாடி எனக்கும், கிருஷிக்கும் கல்யாணம் நடக்கும்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

 

அடுத்த நாள் காலையில் தளிரும், பவியும் சிவன் கோயில் சென்று வருவதற்காக சிவபெருமாளிடம் அனுமதி கேட்க, அவரும் அனுமதி அளித்தார்.

 

“இப்போ எதுக்குடி சிவன் கோயிலுக்கு?” என்று தளிரிடம் கிருஷி கேட்க,

 

“நாங்க மூன்று பேரும் சேர்ந்து எங்கேயும் போக இல்லை. சிவன் கோயிலுக்கு நீயும் இன்னும் போக இல்லை. அதான் போயிட்டு வரலாம்னு” என்றாள்.

 

“சரி பத்து நிமிஷம் நான் போய் சேலை கட்டிட்டு வரேன்” என்று கூறி அறைக்குச் சென்றாள் கிருஷி.

 

பவி சேலையிலும், தளிர் தாவணியிலும் தயாராகி வந்தனர். கிருஷியும் தயாராகி வர மூவரும் ஒரு காரில் செல்ல இவர்களுக்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு கார்களில் ஐந்து பேர் வீதம் பாதுகாப்பிற்குச் சென்றார்கள்.

 

கோயிலில் சிவனின் முன் நின்று கண்களை மூடி மூவரும் தரிசிக்க கிருஷி கண்களைத் திறக்கும் போது ஆதி வெள்ளை வேஷ்டி சட்டையில் அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தான்.

 

கிருஷி அவன் கம்பீரமான தோற்றத்தில் மயங்கி இருந்தாள் என்பது உண்மையே.

 

“பொன்டாட்டி நம்ம கல்யாணத்துக்கு அப்பொறமா உன் புருஷனை எவளோ நேரமா இருந்தாலும் சைட் அடிச்சிக்க, இப்போ  கல்யாணம் பன்னலாம்” என்று கை பிடித்து அழைத்துச் செல்ல,

 

“என்ன பன்ற நீ என்னை விடு, ஆமா பவி, தளிர் எங்க?” என்று கேட்டாள்.

 

“அங்கே பாரு பொன்டாட்டி” என்று கை காட்ட

 

அங்கே இவர்களுக்கு பாதுகாபிற்காக வந்த அனைவரின் பின்னும் கத்தியை வைத்துக் கொண்டு ஆதியின் ஆட்கள் நின்று இருக்க,

 

தளிரின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு ராஜேஸ் நின்று இருந்தான். விகி,பவியின் கைகளை பிடித்து அவளை விடாமல் நின்று இருந்தான்.

 

“என்ன டா நடக்குது இங்க? எதுக்கு இப்படி பன்ற?” என்று கிருஷி கோபத்தில் கத்த

 

“உன்னை கொன்னா உன் அப்பா கொஞ்ச நாளைக்கு தான் கஷ்டபடுவான். தினம் தினம் கஷ்டபடும் அதனால நீ எங்க அண்ணனை கல்யாணம் பன்னும்” என்றான் ஒருவன்.

 

“தன்னோட பொண்ணை எதிரி வீட்டு பையன் கல்யாணம் பன்னிட்டான்னா உன் அப்பா துடிச்சு சாகுவாரு இல்லையா? அதற்காக தான் இந்த ஏற்பாடு” என்றான் இன்னொருவன்.

 

“இல்லை  இல்லை என்னால் இவனை கல்யாணம் பன்னிக்க முடியாது” என்று கிருஷி கத்த

 

“நீ கல்யாணம் பன்ன இல்லைன்னா உன் தங்கையோட கழுத்துல இருக்கிற கத்தி உள்ள இறங்கிரும்” என்றான் ஒருவன்.

 

ஆதியின் சட்டைக் கொலரைப் பற்றியவள் ” எதுக்குடா இப்படி பன்ற? அவ உனக்கு என்னடா துரோகம் பன்னா? யேன் இப்படி பிளெக்மைல் பன்ற? எதுக்குடா இவளோ கஷ்டத்தை கொடுக்குற?” என்று அழுது கீழே அமர்ந்தாள்.

 

‘சொரி நவி மா இதை தவிற எனக்கு வேறு வழி தெரியல்லை’ என்று தன் மனதுள் பேசினான்.

 

“இப்போ அண்ணா கூட போய் உட்காரியா? இல்லை உன் தங்கை கழுத்துல கத்தியை இறக்கட்டா” என்று கூறும் போதே

 

“அம்மா” என்று தளிரின் அலறல் கேட்க,

 

“நீங்க எல்லாரும் ரொம்ப தப்பு பன்றிங்க” என்று பவி கூற விகி அவளை முறைத்தான்.

 

“அக்கா நான் செத்தாலும் பரவால்லை, நீ அவனை கல்யாணம் பன்னிக்காத” என்று கத்தினாள்.

 

“டேய் முதலில் அவளை போடுங்க டா” என்று ஒருவன் கத்த

 

“இல்லை அவளை ஒன்னும் பன்னாதிங்க. நான் இவனை கல்யாணம் பன்றேன்” என்றாள் அவசரமாக.

 

அனைவரும் வெற்றிப் புன்னகை சிந்தினர். ஏனோ ஆதியின் மனது பாரமாகவே இருந்தது.

 

ஓம குண்டத்தின் முன் ஆதி மலர்மாலை அணிந்து அமர கிருஷி உணர்வற்ற சிலை போல் அமர்ந்து இருந்தாள்.

 

எத்தனை சொந்த பந்தங்களின் முன்னால் அனைவரின் ஆசிர்வாரத்துடனும், கிருஷி வெட்கமுற்று தன் முழுமனதுடன் சந்தோஷமாக தன்னிடம் அவளை அவள் ஒப்படைக்க வேண்டும். அவள் முழுமனதோடு அவள் கழுத்தில் தாலியைக் கட்ட வேண்டும் என்று எண்ணி இருந்தான்.

 

ஆனால் யாருமற்றவர்கள் போல் உணர்வற்ற தன்னவளுக்கு அவளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யப் போகின்றேனே என நினைக்கும் போது அவனது இதயத்தை யாரோ கசக்குவது போல இருந்தது. அவளைக் காக்க இதைத் தவிற வேறு வழி இல்லையே, திருமணத்திற்குப் பிறகு அவளை சமாதானப்படுத்த வேண்டும்  என்று எண்ணிக் கொண்டான்.

 

ஐயர் மந்திரங்கள் ஓதிய பிறகு அவன் கையில் தாலியை வழங்க அதை அவள் சங்குக் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான். பின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.  அதைத் தொடர்ந்து அக்கினியைச் சுற்றி வலம் வந்தான். பிறகு மெட்டியை அணிவித்தான். அவர்களது திருமணம் இனிதே நிறைவு அடைந்தது. இதைப் பார்த்த ஐவரின் மனது நிம்மதியடைந்தது.

 

சிவபெருமாளின் ஆட்கள் தங்கள் சின்னமாவின் நிலையைக் கண்டு கண்ணீர் வடித்தனர். பின் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமாளின் வீட்டிற்குச் சென்றனர். ஆதியையும், அவனது ஆட்களையும் கண்ட வீட்டில் இருந்த சிவபெருமாளின் ஆட்கள் அவர்களை அடிக்க வர கிருஷியைப் பார்த்தவர்கள் சிலையாகி நின்றனர்.

 

கிருஷியின் கைபிடித்து உள்ளே அழைத்துச் செல்ல வீட்டில் உள்ள அனைவரும் இருவரையும் பார்த்து அதிர்ச்சியாக நின்றனர். சிவபெருமாளோ சொல்ல முடியா நிலையில் நின்று இருந்தார். பின் தளிர் அழுதுக் கொண்டே தன் அன்னையிடம் ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டாள். அவரை அணைத்தவாறே ஆதியைப் பார்த்து கண்ணடித்தாள். அப்போதே நேற்று நடந்ததை இருவரும் நினைத்துப் பார்த்தனர்…….

 

ஆதி அழைப்பைத் துண்டித்த அதே நேரம் தளிர் பவியின் பின்னே நின்று இருந்தாள்.

 

அக்கா நேசன் மாமா; வேணி அக்காவை கல்யாணம் பன்னிக்க போறாங்களா?” என்று அதிர்ச்சியாக கேட்க,

 

“ஆமா, இப்போ அவன் யாரிடமோ அதை சொன்னான்” என்றாள்.

 

“இதை யேன் அவங்களிடம் சொன்னிங்க?” என்று கேட்க,

 

“உன் அக்காவை ஆதி அண்ணா ரொம்ப காதலிக்கிறாங்க டா. உங்க அக்காவும் தான். ஒருத்தர் இல்லாமல் மத்தவங்களால் இருக்க முடியாது. ஆனால் உன் அக்கா அதை மறைக்க முயற்சி பன்றா” என்றாள் பவி.

 

“அவரு என்ன இருந்தாலும் எங்க பகை குடும்பத்தோடு வாரிசே அக்கா? அவரால் எப்படி அக்காவை நல்லா பார்த்துக்க முடியும்?” என்று கேட்க,

 

“உன் அக்காவோட உயிருக்கு ஆபத்து இருக்கு. அவளை ஆதி அண்ணாவால் மட்டும் தான் காப்பாற்ற முடியும். அவளை கடைசி வரைக்கும் சந்தோஷமா பார்த்துக்க முடியும் ” என்றாள்.

 

“ஆனால்…” என்று தளிர் இழுக்க

 

“உன் அக்காவை அப்போ நேசனுக்கே கட்டி வைக்கலாமா?” என்று திருப்பிக் கேட்டாள் பவி.

 

“இல்லை வேணாம். அவன் ஒரு பொம்பளை பொறூக்கி. எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது” என்றாள்.

 

“அவங்களை நம்பலாமா?” என்று தளிர் கேட்க,

 

“யாரை?” என்று பவி புரியாதவள் போல் கேட்க,

 

“அக்கா காதலிக்கிறவரை” என்று கூற

 

“நீயே அண்ணா கூட பேசு. இதை நீயே அவரிடம் கேளு” என்று ஆதியிற்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

 

“ஐயோ அக்கா என்ன பன்றிங்க?” என்று தளிர் பதற,

 

அவள் “தளிர் பதறாத” என்றாள் பவி.

 

“சொல்லு பவி” என்று கூற

 

“அண்ணா உங்க கூட தளிர் பேசனுமாம்” என்று மொபைலை தளிரின் கையில் திணித்தாள்.

 

“சொல்லுமா தளிர்” என்று கூற

 

“அது, நீங்க” என்று தடுமாற,

 

“தளிர் நீ என்னை உன் பிரன்டா நினைச்சு பேசு மா. பயப்படாத” என்றான்.

 

“எங்க அக்காவை உண்மையாகவே காதலிக்கிறிங்களா?” என்று கேட்க,

 

“ஆமா மா. உனக்கு ஏன் அதில் சந்தேகம்?” என்று கேட்டான் ஆதி.

 

“எங்க குடும்பத்தை பழிவாங்க அக்காவை கல்யாணம் பன்றிங்கன்னா, அவளோட வாழ்க்கையே வீணாகிறுமே” என்று கூற

 

“புரியிது மா, நான் உன் அக்காவை நல்லா பார்த்துப்பேன். இது என் அம்மா மேலே சத்தியம். போதுமா? இப்போ என்னை நம்புறியா?” என்று ஆதி கேட்க,

 

“கண்டிப்பா நம்புறேன் மாமா, என் அக்கா பாவம் ரொம்ப உடைந்து போயிட்டா. நீங்க தான் அவளை சந்தோஷமா பார்த்துக்கனும். இப்போ அழுத பிறகு தூங்குறா” என்றாள் தளிர் கவலையாக.

 

தளிர் ஆதியை மாமா என்று கூறியதில் பவியும், ஆதியும் சந்தோஷப்பட்டனர்.

 

“இப்போ நீ ஸ்பீகரை ஒன் பன்னு, கொஞ்சம் பேச இருக்கு. அதற்கு முன்னாடி எல்லா கதவு, யன்னலை அடைச்சிரு” என்றான்.

 

“இப்போ ஸ்பீகரை ஒன் பன்னு” என்றான்.

 

பின் ஆதி “நாளைக்கு எனக்கும், உன் அக்காவிற்கும் கல்யாணம்” எனக் கூற

 

“என்ன நாளைக்கா?” என்று இருவருமே அதிர்ந்தனர்.

 

“உன் பெரியப்பா முடிவு எடுத்து இருக்காரு. நாம அதற்கு முன்னாடி அவளை இந்த கல்யாணத்துல இருந்து அவளை காப்பாற்ற முடியும்” என்றான்.

 

“ஆனால் நாளைக்கே கல்யாணம் பன்னனும் அதுல என்ன அவசரம்?” என்று பவி கேட்க,

 

“நாம தாமதிக்குற ஒவ்வொரு நிமிஷமும், நாம தோற்று போறதுக்கான வாய்ப்பு அதிகம். அதனால் தான் சொல்கிறேன். அவ என் பக்கத்து இருந்தால் மட்டுமே பாதுகாப்பா இருப்பா” என்று கூற

 

இருவருமே நாளை சிவன் கோயிலுக்கு அவளை அழைத்து வருவதாகக் கூறினர்.

 

“தளிர் நீ தைரியமா இருக்கனும். பயப்படாத, அந்த தைரியத்தை மட்டும் வெளியில காட்டிக்காத, நீ பயப்படாம தைரியமா இருக்கன்னு உங்க அக்கா கண்டுபிடிச்சா நம்ம திட்டம் பூரா தவிடு பொடியாகிறும்” என்று கூறினான்.

 

“மாமா என் நடிப்பை மட்டும் பாருங்க, நீங்களே அசந்திருவிங்க” என்றாள் தளிர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23

பனி 23   “மச்சான் தங்கச்சை சமாளித்தாலும் உன் குடும்பத்தை சமாளிக்க முடியுமா?” என்று விகி கேட்க,   “கேள்வியை மாற்றி கேக்குற டா” என்றான் ஆதி.   “புரியிர மாதிரி சொல்லு?” என்று கூற   “என் குடும்பத்தை சமாளிப்பேன்,

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 1

பனி 1   நிலா நடு வானத்தில் வந்து தனது ஒளியை முடியுமானளவு அந்த ஊரிற்கு வழங்க, அந்த நிலாவின் வெளிச்சத்தில் அந்த ஆள் அரவமற்ற வீதியில் உயிர் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனைத் தொடர்ந்து பலர் கைகளில் அறுவாளுடனும்,