Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6

6 – மீண்டும் வருவாயா?

அன்று அனைவரும் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட்டனர். நிருவிற்கு இன்னும் சிறுது வேலை இருக்க மாலை குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கோப்புகளை எடுத்துக்கொண்டே கிளம்பிவிட்டாள். நிருவை பார்த்ததும் ஜீவி, ஜீவா இருவரும் எப்போதும் போல ஓடி வந்து கட்டிக்கொண்டனர். வரும் வழியில் அன்று பள்ளியில் நடந்தவற்றை கூறிவிட்டு பின் மறுநாளில் இருந்து ஜீவா கராத்தே கிளாஸ் போய்விடுவான் தான் மட்டும் தனியாக இருக்கவேண்டும் என கூறி ஜீவி வருந்தினாள்.

அவள் முகம் சுருங்கியதும் ஜீவா “நிரு மா, ஜீவியும் என்கூட கராத்தே கிளாஸ் அனுப்புங்க. ஒன் ஆர் கிளாஸ் முடிச்சிட்டு எங்களை கூட்டிட்டு வந்துடுங்க. ப்ளீஸ்..” என கேட்க

சட்டென்று கேட்டதில் நிரு யோசிக்க ஜீவிக்கும் அவன் கூறியதே சரியென பட “ஆமா மா, ப்ளீஸ்… நானும் ஜீவா கூட போறேன் மா. நாங்க வந்ததும் கண்டிப்பா ஹோம் ஒர்க் பண்ணிடுவோம். இல்ல ஜீவா?”

ஜீவாவும் “ஆமா ஆமா… கண்டிப்பா சீக்கிரம் முடிச்சுடுவோம் மா.” என இரண்டும் வேகமாக தலையாட்ட ப்ளீஸ் ப்ளீஸ் என இரண்டும் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்க நிருவிற்கு சிரிப்பு தான் வந்தது.

நிரு “சரி, சரி ஆனா கிளாஸ் யாரு எங்க எடுக்கறாங்க. எவ்ளோ பீஸ் எப்போ வரணும். எதுமே கேக்கலையே. எனக்கு அவங்க அட்ரஸ், போன் நம்பர் கூட இல்லையே. உடனே எப்படி அவளை சேத்த முடியும்?” என வினவ ஜீவி முகம் வாட ஜீவா “நீ பீல் பண்ணாத.. அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அப்பா இன்னைக்கு வந்ததும் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் நாம வாங்கிக்கலாம். அம்மா நீங்க இன்னைக்கே பேசுங்க.” என்றான்.

ராமு வந்து விஷயம் கேட்டறிந்தவர் “ஜீவா தம்பி, அப்பா இன்னைக்கு நேரமே வந்திட்டாங்க. வீட்ல தான் கொஞ்சம் வேலையா இருக்காங்க.” என்றதும் ஜீவா “ஹே..ஜாலி… அப்டினா அம்மா வாங்க இப்போவே போயி போன் நம்பர் வாங்கி ஜீவிக்கும் கிளாஸ் கேட்கலாம்.” என மீண்டும் குதிக்க ஆரம்பித்துவிட

நிரு யோசிக்க உடன் இருந்த வாணி விசாரிக்க “வேலை இருக்கு டி. எப்படியும் D  – பிளாக் போயிட்டு கொஞ்ச நேரம் இருந்திட்டு திரும்ப வர எப்படியும் 30மின்ஸ் ஆகும். அதுவும் இந்த குட்டிஸ்ங்க விளையாட ஆரம்பிச்சா எப்படியும் ஒரு மணி நேரம் மேலையே ஆகும். நைட் வீட்லயும் வேலை இருக்கும். அதான் யோசிக்கிறேன்.” என்றதும்

வாணி “சரி, அப்போ நான் இவங்களோட போயிட்டு டீடெயில்ஸ் வாங்கிட்டு வரேன்.” என கூறி கிளம்பினாள்.

காலிங் பெல் அடித்ததும் சென்று திறந்த ஜீவன் “பே.. என கத்திகொண்டே முன்னே வந்து நின்றாள் குட்டி.. ஜீவன் அவளை சிரிப்புடன் பார்க்க

ஜீவி “நான் யாருன்னு கண்டுபுடிங்க பாக்கலாம்” என இடுப்பில் கை வைத்து ஆடிக்கொண்டே கேட்டதில் ஜீவன் முற்றிலும் தன்னை தொலைத்துவிட்டான்.

அவனும் அவளுடன் விளையாட எண்ணி “யாருனு சொல்லிட்டா எனக்கு என்ன தருவீங்க குட்டி மேடம்?” என

ஜீவி யோசித்துவிட்டு “நீங்க ஜீனியஸ்னு அவார்ட் தரேன்..” என மாட்டிக்கொள்ளாமல் பதில் சொல்ல ஜீவன் வாய் விட்டு சிரிக்க

ஜீவன் “எனக்கு அவார்ட் வேணாம். ஒரு கிஸ் கிப்ட் தருவியா?” என

ஜீவி வேகமாக தலையாட்டினாள்.

ஜீவி “ஆனா ஒரு தடவ தான் சான்ஸ். கரெக்டா சொல்லணும்.” என கை நீட்டி செல்லமாக மிரட்ட, உள்ளிருந்து வசந்த் வந்து யாரென வினவினான்.  ஜீவன் “நம்ம ஜீவா சாரோட பிரண்ட் ஜீவிதா மேடம்..” என கூறிவிட்டு ஜீவியை பார்த்து கண்ணடித்து என்ன கரெக்ட்டா?” என வினவினான்.

அவளின் விரிந்த விழிகள் சொன்னது சரியென.

வெளியே மறைந்திருந்த ஜீவா “ஹே..சூப்பர் டாடி.. நான் சொன்னேன்ல..அப்பா ரொம்ப பிரில்லியண்ட், கண்டுபுடிச்சுடுவாருனு…” என்றதும் ஜீவன் சிரித்துக்கொண்டே அவளை அழைத்தான் “உங்க அம்மா தனியா அனுப்பிச்சிருக்க மாட்டாங்களே …கூட யாரு வந்தாங்க?” என வினவ ஜீவி “கூட, ராமு தாத்தா, அம்மாவோட பிரண்ட் வாணி ஆண்ட்டி. வந்தாங்க.. அவங்க பேசிட்டு நடந்து வராங்க. நாங்க 2பேரும் முன்னாடி ஓடி வந்துட்டோம்.” என கூற “அம்மா வரல?” என்றான்.

ஜீவா “இல்லப்பா.. அம்மாவுக்கு வேலை இருக்காம். அதான் அவங்க வரல..” என ஜீவன் “ஓ..” என சுதி இருங்க ஏதோ ஏமாற்றமாக உணர்ந்தான்.. ஜீவன் அவர்களை உள்ளே அழைத்து செல்ல ராமு, வாணி இருவரும் வந்தனர். அவர் வாணியை அறிமுகப்படுத்த ஏனோ வசந்திற்கு அவளை பார்த்ததும் பிடித்துவிட்டது..”

ஜீவன் பொதுப்படையாக பேசிவிட்டு அவன் குடிக்க ஜூஸ், ஸ்னாக்ஸ் ஏதேனும் எடுத்துவருவதாக சென்றுவிட உடன் ராமு செல்ல, ஜீவியை அழைத்துக்கொண்டு ஜீவா தன் அறை, பொம்மை என அனைத்தையும் காட்டிக்கொண்டிருந்தான்.

தனியே விடப்பட்ட வாணியிடம் வசந்த் கேட்ட முதல் கேள்வி “கல்யாணம் ஆகிடிச்சா?” என்பதுதான்.

வாணி சற்று அதிர்ச்சியாக பார்க்க அவனோ “இல்ல, தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.. என் பேரு வசந்த்.. அம்மா  மட்டும் தான்..நானும் ஜீவன் ஒர்க் பண்ற கிரைம் பிரான்ச் டிபார்ட்மென்ட்ல தான் ஒர்க் பண்றேன்.. சம்பளம் எல்லாம் ரொம்ப மோசம் இருக்காது. ரொம்ப அதிகமாவும் இருக்காது.. கண்டிப்பா நல்லா வெச்சு பாத்துக்கற அளவுக்கு இருக்கும்.. ஆனா வேலைல கொஞ்சம் ரிஸ்க் இருக்கும்… சோ….என இழுத்தான்.

எனக்கு சொல்லணும் கேக்கணும்னு தோணுச்சு.. உங்களை பிடிச்சிருக்குன்னு. சொல்லிட்டேன்… உங்க முடிவு எதுன்னாலும் நீங்க யோசிச்சு பொறுமையா சொல்லுங்க…” என்று அவன் நேரடியாக பட்டென்று விஷயத்தை கூறிவிட இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

அதற்குள் ஜீவன் “குட்டிஸ், வாங்க வந்து ஜூஸ் எடுத்துக்கோங்க.” என்றான்.

வசந்த் சாதாரணமாக “ஜீவியை அழைத்து பேசினான். அவளும் சிறிது நேரத்தில் வசந்த் அங்கிள் வசந்த் அங்கிள் என அவனிடமும் ஒட்டிக்கொண்டாள்.”

ஜீவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை “ஆமா, ஜீவி குட்டி என்ன என்னென்னு கூப்பிடுவீங்க?” என்றான்

ஜீவி ஜீவாவை பார்க்க, யோசிக்க, விழிக்க என்றிருந்தாள். ஜீவா “நான் உன் அம்மாவை நிரு மான்னு தானே கூப்பிடறேன். நீயும் என் அப்பாவை அப்பான்னே கூப்பிடு.” என ஜீவியும் “ம்ம்..ஓகே. உங்க நேம் என்ன?” என வினவினாள்.

ஜீவன்  “விஜய  ஜீவிதன்” என்றான்

ஜீவி யோசித்துவிட்டு “ஓகே, இனிமேல் நான் உங்களை ஜீவிப்பான்னு கூப்பிடறேன். ஓகேவா?” என வினவ அவனும் சிரித்துக்கொண்டே சரி என்றான். பின் வந்த விஷயத்தை விசாரித்து அவனே கராத்தே கிளாஸ்க்கு கால் செய்து மாஸ்டரிடம் ஜீவி வருவதற்கும் பேசிவிட்டு வந்தவன் விபரம் வாணியிடம் கூறிவிட்டு “பீஸ் நானே அவருக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டேன். நாளைக்கு ஜீவி கிளாஸ்க்கு மட்டும் போனா போதும்” என்றான்.

வாணி “அய்யயோ.. நீங்க ஏன் சார் பீஸ் கட்டுனீங்க. நிருவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்…அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது சார். நீங்க எவளோ சொல்லுங்க” என்றாள்.

ஜீவன் புன்னகையுடன் பீஸ் அமௌண்ட் கூறிவிட்டு “ஆனா நான் பணத்தை வாங்கிக்கற ஐடியா இல்லை. உங்க பிரண்ட்கிட்டேயே சொல்லிடுங்க” என்றவன் ஜீவியை தூக்கிக்கொண்டு “ஏன் ஜீவா என்னை ஜீவி  அப்பான்னு தானே கூப்பிட்றா.. அப்பாக்கு அமௌன்ட் குடுப்பாங்களா என்ன?” என வினவ

ஜீவா “நோ.. குடுக்க மாட்டாங்க டாடி.” என்றான்.

அவனும் புன்னகையுடன் திரும்பி வாணியிடம் “ஏனோ எனக்கு ஜீவாவையும், ஜீவியையும் வேற வேறையா பாக்க தோணல. ப்ளீஸ் இத இப்டியே விட்ருங்க.” என அவன் கூற வாணிக்கு அதற்கு மீறி காட்டாயப்படுத்த தோணவில்லை. பின் அவர்கள் கிளம்ப ஜீவன் “ஜீவி குட்டி என்றழைத்து மண்டியிட்டு கிப்ட்? என்றான். அவளும் நாக்கை கடித்துக்கொண்டு ஓடிவந்து கிஸ் குடுத்துவிட்டு “மறந்துட்டேன் ஜீவிப்பா.. சாரி” என்றான்.

அவனும் ஏனோ அவளை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன் பின் புன்னகையுடன் முத்தமிட்டு விட்டு அனுப்பிவைத்தான்.

அவன் சென்றதும், ஜீவா உள்ளே ரெப்பிரேஷ் ஆகிறேன் என ஓடிவிட்டான்.

வசந்த் ஜீவனின் தோளில் தட்டி “என்னடா, அப்டியே இருக்க? என்னாச்சு. ஏன் ஜீவிக்கிட்ட இவளோ எமோஷனல் ஆகுற?”

ஜீவன் “தெரிலடா.. ஜீவிய பாத்தா எனக்கு எதையோ ஞாபகப்படுத்திற மாதிரி இருக்கு.. என்னவோ ஜீவி என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கற மாதிரி தோணுது.”

வசந்த் புன்னகையுடன் “இருக்கலாம்..ரொம்ப சமத்து சுட்டி.. நல்லா பேசுறாள்ல?” என கூறிவிட்டு அவனும் சென்று வேலையில் மூழ்கிவிட்டான்.

ஜீவன் மனதினுள் “சாரி வசந்த், எதையோ இல்ல. ஜீவியோட செயல் எனக்கு என் நித்துவ ஞாபகப்படுத்துது.. இத சொன்னா நீயும் பீல் பண்ணுவ.” என்றெண்ணியவன் பெருமூச்சுடன் சென்று வேலை பார்த்தான்.

 

வீட்டிற்கு திரும்பிய ஜீவி நடந்த அனைத்தையும் கூறியவள் ஜீவிப்பா ஜீவிப்பா என உருக ஆரம்பித்துவிட்டாள். ஏனோ நேற்று இரவு தன் மனதில் இருந்த பாரம் குறைந்தது போல ஒரு உணர்வு. ஆனால் அவளுக்கே புரியவில்லை “யாரோ ஒருவரை ஜீவிதா அப்பா என அழைக்க எப்படி தன் மனம் நிலை கொண்டது என குழம்பினாள்.”

வாணி பீஸ் கட்டியது ஜீவன் கூறியது என அனைத்தும் கூறிவிட்டு எப்படியும் ஏன் நீ குடுக்கவிட்ட என திட்டப்போகிறாள் என்று காத்திருக்க நிரு சில நிமிடம் அமைதியாக இருந்தவள் என்ன எண்ணினாலோ தெரியவில்லை பெருமூச்சுடன் நகர்ந்துவிட்டாள்.

வாணிக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரிக்க நிரு “பரவால்லை விடு டி. இந்த மாசம் ஜீவா, ஜீவி இரண்டுபேருக்குமே அவரு கட்டிட்டாரு. நான் முன்னாடியே போயி அடுத்த மாசத்துக்கு இரண்டுபேருக்கும் பீஸ் குடுத்திட்டு வந்துடறேன். அப்போ சரியா போயிடும்ல. ஆனா அவரு இவளோ சொன்னதுக்கப்புறமும் அவருக்கு இத பணமா திருப்பிதரவேணாம். தந்து சங்கடப்படுத்தவேணாம் என்றாள்.

வாணிக்கு ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் அவள் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து செய்வது பற்றி கூற அவளும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் சென்றுவிட்டாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32

32 – மீண்டும் வருவாயா?   இரண்டு நாள் முன்பு நேத்ராவிடம் அனைவரும் “நீ, ஜீவன் குழந்தைங்க எல்லாரும் இங்கேயே இருக்கலாம்ல மா?” நேத்ரா “ஆ..அது வேண்டாமே.. அப்போ அப்போ வர போக இருந்திட்டு பாத்துக்கலாம்.. ஒண்ணா வேண்டாம்னு தோணுது மாமா..”

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13

13 – மீண்டும் வருவாயா?     சிவகாமி “அதோட உங்க குடும்பமோ பெரிய குடும்பம், நிறையா பேர் இருப்பாங்க. நீங்க கூட இருந்தாலாவது பரவால்லை. கல்யாணம் பண்ணி அவங்ககிட்ட விட்டுட்டு போறது, எப்படி ஒத்துவரும்னு தெரில..தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இப்போ

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33

33 – மீண்டும் வருவாயா? விஜய் “ம்ம்.. எப்போ உன்கிட்ட பேசுனா? என்ன சொன்னா?” “வசந்த் அண்ணா வீட்ல இருந்து வந்த அன்னைக்கு ஈவினிங் நீங்க வெளில போய்ட்டாங்கல… அப்போ பேசுனா. ஜீவா நான் ஜீவி மூணு பேரும் கொஞ்ச நேரம்