Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10

10 – மீண்டும் வருவாயா?

வீட்டிற்கு வந்த பின்னும் வாணியிடமும், நிருவிடமும் பேசி ஜீவிதாவை தன்னுடன் வைத்துக்கொண்டான். அவனுக்கு சற்று தனிமையில் இருக்கவேண்டும், ஏதோ யோசிக்கவேண்டுமென தோன்றினாலும் குழந்தைகள் பேசிக்கொண்டே உடன் சுற்றிக்கொண்டே இருக்க அன்றிரவு அவனும் அவர்களோடு விளையாடி விட்டு உறங்கவைத்தான். மறுநாள் மூவரும், நேரம் கழித்து எழுந்து காலை வேலைகளை முடித்துகொண்டு, வசந்த் வீட்டிற்கு சென்றனர். அவனது அம்மா ராஜீயிடம் இரு குழந்தைகளும் நன்றாக ஒட்டிக்கொண்டனர். சற்று வேலை விஷயமாக ஜீவன், வசந்த் இருவரும் வெளியே சென்றுவிட்டு வந்தனர். பின் ஜீவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றான். ஏனோ அவன் மனம் எதையோ எண்ணி குழம்பியது. அவன் தடுமாற்றம், என்னதான் கேட்டதற்கு பதில் கூறினாலும் அவன் மனம் இங்கே இல்லை என்பதை உணர்ந்த வசந்த் நானே உங்களை கொண்டுவந்து விடுறேன் என உடன் வந்தான். ஜீவனும் எதுவும் கூறாமல் வந்தான். அபார்ட்மெண்ட் வந்து பார்க்கில் வாணியை கண்டதும் குழந்தைகள் ஓடிச்சென்று அவளுடன் ஐக்கியமாக கிடைத்த தனிமையில் வசந்த் விசாரித்தான்.

ஜீவன் மறைக்காமல் “என்னனு தெரிலடா… காரணம், பதில் தெரியாத பல கேள்விகள். என் நித்து என் பக்கத்துல இருக்கானு தோணிட்டே இருக்கு.. ஆனா அவளா என்கிட்ட வரமாட்டான்னும் ஒரு மனசு சொல்லுது.. ஜீவிதா – அவளை பாக்கும் போது எல்லாம் ஏனோ அப்டி ஒரு சந்தோசம், ஜீவா கூட நான் இருக்கறத எவ்ளோ விரும்பறேனோ அந்த அளவுக்கு. இது சாதாரணமா குழந்தைங்க மேல வர பாசம் மாதிரி தோணல. ஏதோ என் குழந்தைகூட இருக்கறமாதிரி ஒரு எண்ணம். எல்லாத்துக்கும் மேல, நிரு.. நிரு ஜீவா இவங்க இரண்டுபேரும் கொஞ்சம் விலகி இருக்க சொல்றதே ஏதோ ஒரு மாதிரி பீல் ஆகுதுன்னு சொன்னேன்ல.. அது நான் நித்துவ ஜீவாகிட்ட இருந்து பிரிக்கிறது எவ்ளோ தப்போ அந்த மாதிரி இதுவும் தப்புனு தோணுது. ஆனா அது எப்பிடிடா. நித்து ஜீவாவோட அம்மா. ஆனா நிருவ ஜீவா அம்மா இடத்துல வெச்சு பாக்குறான். அது என் மூளைக்கு புரிஞ்சாலும் மனசு ஏத்துக்கமாட்டேங்கிதுடா. இது தப்பு அப்டி நினைக்கக்கூடாதுனு சொல்லி என்னை நான் அடக்கலாம். ஆனா வசந்த் என் மனசுல தோன்ற விஷயம் அத என்னால நிறுத்தமுடில. எனக்கே என்னால பொய்யா இருக்கமுடிலடா. ஒரு மனசு நிருகிட்ட பேசுனு சொல்லுது. இன்னொன்னு வேண்டாம் விலகி இருன்னு சொல்லுது. எத கேக்கறது, என்ன பண்றது ஒண்ணுமே புரிலடா.” என

வசந்த் “ஜீவன், என்னடா ஆச்சு உனக்கு. நீ இப்டி இருந்து நான் பாத்ததேயில்லை. நீ எதுக்கும் நிருகிட்ட பேசி பாரு… என்றவன் அவனது பெற்றோர்கள் முடிந்தால் நிர்மலாவை (நிரு) ஜீவனுக்கு கல்யாணம் பண்ணி வெக்கலாம் என்னும் வகையில் விசாரிக்க சொன்னதை இப்போது கூறினான்.

ஜீவன் கை முஷ்டிகளை முறுக்கியவன் “என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா வசந்த். உங்க எல்லாருக்கும் ஏன் இப்டி புத்தி போகுது. எனக்கு குழப்பமா இருக்குனு நான் சொன்னதுக்கான காரணம் வேற, ஆனா அதுக்கு நீங்க சொல்ற பதில் நிருவ கல்யாணம் பண்ணிக்கனும்ல. எப்படி நித்ரா இடத்துல இன்னொரு பொண்ண என்னால ச்சா…

ஆனா நீ கூடவாடா இப்டி கேக்கற.. ?”

வசந்த் “இல்லடா, உனக்கும் இந்த மாதிரி ஒரு குழப்பம் இருக்கும் போது நீ ஏன் நிருகிட்ட பேசிப்பாக்ககூடாது? இதுக்கு ஒரு வழி கிடைக்கணும்ல.”

ஜீவா வந்து “அப்பா, நிரு மா வரப்போறாங்களே. பஸ் ஸ்டாண்ட் வந்துட்டாங்களாம். கூப்பிட்டாங்க.” என கூறிவிட்டு ஓடிவிட்டான்.

வசந்த் “நீ இன்னைக்கு பேசுடா.. நித்ராவை நினைச்சுட்டே உன் வாழ்க்கையை வீணாக்கிக்க போறியா? ஜீவாவை நினச்சு பாருடா. அவனுக்கு அம்மா ஏக்கம் இல்லாம தான் நிருகிட்ட இவளோ நெருக்கமா பழகுவானா? இப்டியே எவ்ளோ காலத்துக்கு வெயிட் பண்ண போற? இதோட முடிவு என்னனு உன்னால சொல்ல முடியுமா? இந்த மாதிரி கொழப்பிக்கிட்டே இருக்கறதா? மத்தவங்களை பத்தி நீ யோசிச்சு பாத்தியா?” என அவன் பேசிக்கொண்டே போக

ஜீவன் அவனை கூர்மையாக பார்த்தவன் பின் குறுக்கும் நெடுக்கும் நடக்க, கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து விட்டவன் “இதோட முடிவு நித்ரா தான். அவ மேல எந்த அளவுக்கு காதல் இருக்கோ அந்த அளவுக்கு கோபமும் இருக்கு. மத்தவங்க பண்ண தப்புக்கு அவ என்னை தண்டிச்சிட்டு இருக்கா. இவளோ காலம் நான் பொறுமையா இருந்தது போதும். இன்னும் ஒரு நாள் டைம். அதுக்குள்ள என் நித்ராவ இந்த விதியே என்கிட்ட சேக்கும். இல்லை அவளே என்கிட்ட வருவா. இது எதுமே இல்லாட்டி அவ என் வாழ்க்கையை விட்டே போய்ட்டான்னு நான் முடிவு பண்ணிக்கறேன்.

அதுக்காக வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்குவேன்னு அர்த்தம் இல்லை. என் நித்து வருவான்னு எதிர்பார்க்கறதால தான் இந்த குழப்பம், ஆனா அவ என் வாழ்க்கைல இல்லேனு ஆகிடிச்சுனா அந்த குழப்பம் இருக்காது. நித்துக்கு நான் அவ வாழ்க்கைல எவ்ளோ முக்கியம்னு இந்த ஒரு நாள்ல தெரிஞ்சிடும். ஒருவேளை அந்த ஒரு நாளைக்கு அப்புறம் அவ வந்தாலும் என் வாழ்க்கைல இடமில்லை.” என்றான்.

 

வசந்த் “டேய் ஜீவன்.. வேண்டாம். இவளோ சீரியஸ முடிவு பண்ணாத. நித்ரா பத்தி நமக்கு நல்லா தெரியும்டா. அவ வந்தா ரொம்ப சந்தோசம் தான். அன்னைக்கு எல்லாரும் பண்ண தப்ப இன்னைக்கு யாரும் பண்ணமாட்டாங்க. ஆனா அவ எங்கேனே தெரியாம என்ன பண்ணமுடியும். நீயும் ஜீவாவும் இப்டி தனியா இருக்கறது தான் வீட்ல எல்லாருக்கும் கவலை. அட்லீஸ்ட் அவங்ககூட சேந்தாவது இருக்கலாம். என அவன் முடிப்பதற்குள் ஜீவனின் தீப்பார்வை அவனை அடக்கியது.

 

வசந்த் “ஒருவேளை அவளுக்கு ஏதாவது ப்ரோப்லேம் இருந்து வரமுடியாம இருந்தா?”

 

ஜீவன் “அத அவ தாண்டி வருவா..நான் வேணும்னா..ஆனா நான் இனி அவளை தேடி போகமாட்டேன்.. பாத்தாலும் கூப்பிடமாட்டேன்.. அவளுக்கு வந்த பிரச்னை வெளில இருந்து இருக்கலாம். ஆனா எங்களை விட்டுட்டு இத்தனை வருஷம் இருக்க அவ எடுத்த முடிவுக்கு, என்னையும், ஜீவாவையும் விட்டுட்டு போனதுக்கு, தப்பே செய்யாம நாங்க அனுபவிக்கற தண்டனைக்கு அவ மட்டும் தானே காரணம்.. சோ இதுதான் அவளுக்கு கடைசி வாய்ப்பு.” என்றவன் முன்னே நகர ஒரு நிமிடம் நின்று திரும்பியவன் “தேங்க்ஸ் ஒன்னு நிருவுக்கு இந்த குழப்பத்துக்கு காரணமே நித்துதான்னு எனக்கு புரியவெச்சதுக்கு.. இன்னொரு தேங்க்ஸ் உனக்கு, நான் இவளோ கடுமையா இருந்தாலும் உறுதியா முடிவு பண்ணதுக்கு. நீங்க எல்லாரும் என்னை ரொம்ப போட்டு கம்பெல் பண்ணி பிரஷர் பண்ணாம இருந்திருந்தா நான் இப்டி ஒரு முடிவை உடனே எடுத்திருக்கமாட்டேன். இதுல எனக்கு முடிவு தெரிஞ்சிடும். சோ இன்னைக்கு நிருவ பாக்கல. 1 நாள் கழிச்சு பாக்குறேன். ஜீவா அம்மாவா பாக்குற ஒரு பொண்ணா மட்டும் தான் அப்பவும் நிருவ பாப்பேன்..” என்று அவன் சென்றுவிட்டான்.

 

வசந்த்க்கு பதட்டமாக கவலையாக இருந்தது. ஜீவனின் பிடிவாதம், இவன் கூறிய முடிவில் ஒரே நாளில் அவன் வாழ்க்கை என்னவாக போகிறதோ. நித்ரா வந்தால் மகிழ்ச்சியே. ஆனால் அவன் கூறியது போல நித்ரா வரவில்லை என்றால் அதன் பின் நித்ராவும் அவன் வாழ்வில் இல்லை, நிருவும் அவன் வாழ்வில் இல்லை.” என்றவன் வருத்தம் கலந்த சிந்தனையுடனே வீட்டிற்கு சென்றான்.

 

நிரு வந்ததும் குழந்தைகளோடு விளையாடிவிட்டு உள்ளே சென்றனர்.

மறுநாள் குழந்தைகள் பள்ளியில் விழா இருக்க அதில் பெற்றோர்கள் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது. ஜீவா, ஜீவி இருவரும் தாங்கள் பரிசு வாங்க போவதை குறித்து கூறினர். ஜீவி “அம்மா, நாளைக்கு ஜீவிப்பாவும் வருவாங்களே.. நான் ப்ரைஸ் வாங்கும்போது கண்டிப்பா வருவேன்னு சொன்னாங்களே..” என்றாள் குதூகலத்துடன்.

ஜீவாவும் “இந்த டைம் நிரு அம்மாவும் நான் ப்ரைஸ் வாங்கும்போது அங்க இருப்பாங்களே? இருப்பிங்க தானே மா? நீங்க நாளைக்கு ஒர்க் போய்டுவீங்களா?.” என பாவமாக கேட்க

நிரு இருவரையும் அணைத்துக்கொண்டு “கண்டிப்பா.. என் செல்லம்ஸ் இரண்டுபேரும் ப்ரைஸ் வாங்க போறீங்க.. நான் இல்லாமலா? நாளைக்கு லீவு போட்டறேன். ஓகேவா?” என இருவரும் இரு கன்னத்திலும் முத்தமிட, அவளுக்கும் அந்த மகிழ்ச்சி தொத்திக்கொண்டது.

 

வசந்த் முகம் வாடி செல்வதை கண்ட வாணி ஏனோ வருத்தமாக உணர்ந்தாள். அதை யோசிக்க முடிவெடுத்தவள் தன்னை புரிந்துகொண்டாள். தன்னுள் அவன் இருப்பதை உணர்ந்தவள் மறுநாள் அவனிடம் இதை நேரில் கூறலாம் என முடிவுடன் சென்று புன்னகையோடு  உறங்கினாள்.

அனைவரும் எதிர்பார்த்த அந்த விடியலும் ஆரவாரமில்லாமல் கண் திறந்தது. வாணி எழுந்ததும் வசந்த்திற்கு கால் செய்து “உங்க அம்மாவை  இன்னைக்கு பாக்கணும்.”

“எதுக்கு.. என்னாச்சு?” என்றான்.

“அவங்களுக்கு என்னை மருமகளா ஏத்துக்க ஓகேவான்னு கேக்கணும்.” என்றாள்.

அவன் முதலில் புரியாமல் விழித்தவன் பின் அதன் பொருள் உணர்ந்ததும் புன்னகையுடன் “நான் வந்து கூட்டிட்டு வரேன்.” என்றான்.

வாணியும் வெட்கத்துடன் “ம்ம்.. ஆனா இங்க இல்ல. நான் கோவிலுக்கு வரேன். நீங்க அங்க வந்து என்னை கூட்டிட்டு போங்க.” என்றாள்.

வாணியின் முடிவில் மகிழ்ச்சி கொண்டாலும் வசந்த்க்கு ஜீவனது முடிவு பற்றி கவலையாகவும் இருந்தது.

பின் கடவுளிடம் இதை ஒப்படைக்க அவனும் கிளம்பினார்.

ஜீவன் எதிர்பார்ப்பா, கோபமா என பிரிக்க முடியா நிலையில் தலைவலியுடன் எழுந்தான். அவன் மனம் முழுக்க நித்து நாமம் மட்டுமே ஜபித்தது. பின் ஜீவாவோடு சேர்ந்து பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமானான்.

நிரு ஏனோ மனதில் ஒரு பதட்டம், பயம் என தோன்ற அவள் முகம் குழப்பமாக இருந்தது. ஆனாலும் எல்லாமே நல்லதுக்கு தான்னு ஒரு குரல் அதோடு எதையோ நினைத்துக்கொண்டே “ஏன் இவளோ பதட்டமா இருக்கு.. இன்னைக்கு என்ன ஆக போகுது?” என மனதில் கேட்டுக்கொண்டே நடந்தவள் தடுக்கி விழ போக அவள் கழுத்தில் இருந்து வெளியேறிய  செயின் அவள் கண் முன் ஆடியது. அதை பார்த்ததும் ‘இது எப்போவும் உன் கழுத்துல இருக்கணும். நானே உன்கூட இருக்கறமாதிரி’ என அவன் கூறிய வார்த்தைகள் நினைவு வர அவளுக்கு எப்போவும் போல நம்பிக்கை பரவ தோன்றிய அனைத்து குழப்பங்களையும் தூர எறிந்துவிட்டு நிம்மதியாக புறப்படத்தயாரானாள்.

 

வாணி கோவிலுக்கு சென்றுவிட்டு விழாவின் போது பள்ளிக்கு நேராக வருவதாக கூறிவிட்டு சென்றாள்.

வசந்த் ஜீவாவிடம் “டேய் ஜீவா செல்லம், இன்னைக்கு அங்கிள்க்கு கொஞ்சம் ஒர்க்டா. நீ அப்பாகூட போ. நான் நேரா ஸ்கூல் வந்துடறேன். கண்டிப்பா நீ ப்ரைஸ் வாங்கும்போது நான் இருப்பேன். ப்ரோமிஸ்” என அவனிடம் கெஞ்சி கொஞ்சி அனுமதி வாங்கினான்.

 

கோவிலில் வாணியை கண்ட புன்னகையுடன் வந்தான். ஆனால் அந்த சிரிப்பு அவன் கண்களில் இல்லை என்பது இவளுக்கும் புரிந்தது. பின் இருவரும் கோவிலை சுற்றிவிட்டு வீட்டிற்கு சென்றனர். வசந்த் அம்மா ராஜீயிடம் அவளை பற்றி முன்னமே சொல்லிவிட்டதால் அவரும் வாணியை மருமகளாகவே வரவேற்று உபசரித்தார். ராஜீயும் வாணியும் பேசிக்கொண்டிருக்க இவன் எதையோ யோசித்துக்கொண்டிருக்க வாணி இம்முறை கேட்டுவிட ராஜீயே “அது அவன் பிரண்ட் ஜீவன் பத்தி தான் மா நினச்சு பீல் பண்ணிட்டு இருக்கான்.. வசந்த், எல்லாமே நல்லபடியா நடக்கும்டா. ஜீவன் நல்லா இருப்பான். நீ மனச போட்டு கொழப்பிக்காத.” என இருவருக்கும் பதில் கூற

வசந்த் “சுருக்கமாக முன் தினம் நடந்தது, ஜீவன் குடும்பத்தினர் விரும்புவது, ஜீவனின் முடிவு என அனைத்தையும்  சுருக்கமாக  கூறினான்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21

21 – மீண்டும் வருவாயா?   வசந்த் “ஆனா ஏன்டா. அவங்க திரும்ப நேத்ரா வந்தாலும் ஏத்துக்கற மனநிலைல தானே இருந்தாங்க. அதுனால என்ன பிரச்சனை வரப்போகுது. ஏன் மறைக்க சொல்ற? அதோட இப்போ இந்த கல்யாணத்துக்கு என்ன அவசியம்?” ஜீவன்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-17ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-17

17 – மீண்டும் வருவாயா? சுந்தரம் “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில வசந்த். நேத்ராவை நாங்க குறை சொல்லணும்னு நினைக்கல. ஆனா நடந்தது நடக்கறது எல்லாமே பாத்தா இவங்க சொல்றத நம்பாமலும் இருக்கமுடில. இனி யாரை சொல்லி என்ன லாபம். என்ன

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-4ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-4

4 – மீண்டும் வருவாயா?   ஜீவன் வீட்டிற்கு வந்ததும் ஜீவா பேச ஆரம்பித்தவன் தான். நிருமா நிருமா என அதே மந்திரம். முதன் முறையாக தன் மகன் வெளியாள் ஒருவரை இத்தனை தூரம் நம்புகிறான். உரிமையாக அதுவும் அம்மா என