Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 52

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 52

52 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

வாசு “எது ருத்திரா லவ் பண்ணானா?”

பிரியா “அதுக்கு எதுக்கு இவளோ ஷாக்?”

“இல்லை கல்லுக்குள் ஈரம்னு சொல்லுவாங்களே அது இதுதானா? அவனுக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.” என விக்ரம் கூற

சஞ்சு “ஆனா இவங்க ஒத்துக்கிட்டாங்க… அவரு உண்மையாவே லவ் பண்ணாரா என்ன? சும்மா தெரிஞ்ச பொண்ணுனு கூட ஹெல்ப் பண்ணிருக்கலாம்ல?”

பிரியா “அதானே.. அதுக்கப்புறம் அபி அக்கா பத்தி அவரு எதுமே கேட்கல. தெரிஞ்சுக்கல.. அவரு பாட்டுக்கு பாரின் போயி உக்காந்திட்டாரு.. நடுவுல இவளை வேற கல்யாணம் பண்ண பிரச்சனை பண்ணாரு.. அப்போ எல்லாம் கூடவா அவருக்கு இவங்க ஞாபகம் வரல..?”

வாசு “ஆமால.. எப்படி அந்த அளவுக்கு இருக்க முடியும். ஒருவேளை ருத்திரா லவ் பண்ணலையோ?”

ஆதர்ஷ் புன்னகையுடன் “அவன் இவங்கள தான் லவ் பண்ணிருப்பான்.. அவன் அப்படியெல்லாம் சும்மா யாருக்கோ ஹெல்ப் பண்ணிட்டு போற ஆள் இல்லை. சரி அதுகூட நீங்க சொன்னமாதிரி வெச்சுக்கிட்டாலும் அவன் கடைசியா அவங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு போனானே.. அதுல இருந்தே கன்பார்ம் ஆகிடுச்சு. இதுவரைக்கும் அவனா ஒருத்தர் மேல அக்கறை பட்டு அட்வைஸ் பண்றது எல்லாம்..ம்ம்ஹூம்…ஆனா அவனுக்கு எங்க மேல இருந்த கோபம் எப்படியும் இது எல்லாம் நடக்காதுனு அவன் முடிவு பண்ணிருப்பான்.. வீணா அவங்க மனசுல ஆசைய வழக்க வேண்டாம்னு மொத்தமா விலகிருப்பான்.. அதான் அவங்கள பத்தி கொஞ்சம் கூட விசாரிக்காம இருந்திருக்கான். ஒருவேளை விசாரிச்சு அவங்க வெயிட் பண்றது தெரிஞ்சிருந்தா கூட சார் மனசு மாறிருப்பாரோ என்னவோ…மத்தபடி சாராவை மேரேஜ் பண்றதுக்கு சொன்னது எல்லாம் கோபத்துல அது எல்லாம் ஒரு விஷயமே இல்லை. .. முததடவையா ருத்திரா ஒரு பொண்ணுக்காக தன்னை மாத்திக்ககூடாதுனு நினச்சு தன்னை ஏமாத்திட்டு விட்டு விலகி போயி தோத்திட்டான்..” என்றவன் அக்ஸாவை பார்த்தவன்

“சரி வீட்ல பேசிட்டு அவன்கிட்ட பேசலாம்..” என்றான்.

அன்றே வீட்டில் அனைவரிடமும் பேச முதலில் அபியின் பெற்றோர்கள் சற்று தயங்கினாலும் அனைவரும் பேச இறுதியில் அவர்களும் ஒப்புக்கொண்டனர். மறுநாள் ருத்திராவை பார்க்க செல்ல அவன் வந்தவன் ஆதர்ஸை பார்த்து “என்னடா போன வாரம் தானே வந்த? அதுக்குள்ள என்ன விஷயம்..திரும்ப வந்திருக்க? அக்ஸா வந்திருக்காளா என்ன?”

ஆதர்ஷ் “ம்ம்… வெளில போன் பேசிட்டு இருக்கா.. வருவா…நீ என்ன நினைக்கிற? விஷயம் இருந்தாதான் வருவேனா?”

ருத்திரா “ம்ம்… என யோசித்தவன் ஏதோ விஷயம் இருக்கு.. .. அப்டி எல்லாம் நீ காரணம் இல்லாம வரமாட்ட..”

மெலிதாக புன்னகைத்த ஆதர்ஷ் “குட்.. சரி அப்போ சொல்லு.. காரணம் என்னவா இருக்கும்னு நினைக்கிற?”

“என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்?”

“நீ ஜீனியஸ் ஸ்மார்ட் தானே கண்டுபுடி..” என ஆதர்ஷ் கூற அங்கே அக்ஸா உள்ளே வந்தவள் அவளை கவனியாமல் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

விரக்தியாக சிரித்த ருத்திரா  “அது எல்லாம் நீ வரவரைக்கும் தானே.. அதுக்கப்புறம் எல்லாமே சார் தானே. எல்லாருக்கும் கூட நீ தானே ஸ்மார்ட் ஜீனியஸ் எல்லாம்..” என அவன் எதையோ நினைத்து கூற

ஆதர்ஷ் “அதுதான் புடிக்காம எல்லாமே கெடுத்திட்டேயே.. இன்னமும் உனக்கு என்ன?” என சற்று காட்டமாகவே வினவ

ருத்திரா “ஏன் அதுதான் திரும்ப எல்லாமே உனக்கு கிடைச்சிடுச்சே.. அப்புறம் என்ன?”

“ஓ..அதுவேற சார்க்கு இன்னும் கோபம் இருக்கா? உனக்கு கிடைக்காம போனதுக்கு யாருடா காரணம்.. நீயா நினைச்சிட்டு உன் வாழ்க்கையும் கெடுத்திட்டு எல்லார் வாழ்க்கையும் அழிச்சிட்டு இப்போ பேசுறான் பெரிய இவன் மாதிரி ” என இவன் இன்னும் கோபமாக கத்த

ருத்திரா “ம்ச்.. இத சொல்ல தான் வந்தியா?” என அவனும் கத்த

அக்ஸா “அச்சோ.. என்னாச்சு இரண்டுபேருக்கும்.. ஏன் இன்னும் இப்டி?” என

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டே இருக்க அக்ஸா “ம்ச்.. இப்போ இரண்டுபேரும் முறைக்கறத நிறுத்த போறிங்களா இல்லையா?” என

ருத்திரா “அக்ஸா இனிமேல் இவன் கூட இங்க வராத..”

ஆதர்ஷ் “சாரா, இனிமேல் இவனை பாக்க இங்க வராத..ரொம்ப ஓவரா பண்றான்.. ”

ருத்திரா “யாரு நானா.. என்ன விஷயம்னு கேட்டா சொல்லவேண்டியதுதானே.. ஜீனியஸ் ஸ்மார்ட்ன்னு ஓவரா சீன் போட்டது யாருடா?”

“ஸ்மார்ட்தானே சொன்னேன்.. தப்பவோ இல்ல நீ சொன்னமாதிரி உன்னால தான் என் வாழ்க்கை போச்சுன்னா ஒளறிட்டு இருக்கேன்..” என மீண்டும் ஆரம்பிக்க

அக்ஸா “அச்சோ..நிறுத்துங்க..”

இருவரும் சற்று அமைதியானவர்கள் கோபத்தை அடக்க நெற்றியில் கை வைத்து தேய்த்துக்கொண்டே ஒரேபோல நடக்க இவளுக்கு சிரிப்பும் வந்தது..

ருத்திரா “என்ன சிரிக்கிற..” என மிரட்டுவது போல கேட்க

ஆதர்ஷ் “எதுக்கு நீ இப்போ அவகிட்ட கத்துற? என்கிட்ட கோபம்னா என்கிட்ட காட்டு..” என

அக்ஸா “ஆதவ்..”

“ம்ச்.. நீ எப்போவுமே என் பேரை சரியா சொல்லமாட்டியா.. அப்போதான் கரெக்டா கூப்பிட வரல..இப்போ என்ன?” என இவனும் கத்த

ருத்திரா “ஏன் இவளோ நாள் அது பிரச்சனையா தெரிலையா? இப்போ கேட்கவந்திட்டான்..அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி அவ எப்படி கூப்பிட்டாலும் நீ அவளை விடல.. அப்புறம் என்ன.. நீயும் என்மேல கோபம்னா என்கிட்ட மட்டும் காட்டு. தேவையில்லாம அவகிட்ட கத்தாத..”

அக்ஸா அழைப்பதை இருவரும் பொருட்படுத்தாமல் மீண்டும் கத்த அவள் “என்னவோ பண்ணி தொலைங்க..” என்று கத்திவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க “அக்ஸா..சாரா..” என இருவரும் ஒன்றாக அழைக்க நின்றவள் மீண்டும் வர அவர்களை முறைத்துக்கொண்டே அவள் இருக்க என்ன நினைத்தார்களோ “சாரி” என்றனர்…

பெருமூச்சுடன் அக்ஸா “இரண்டுபேரும் எப்படிதானோ..” என்றவள் அவன் தான் இவன் தான் என இருவரும் மீண்டும் ஆரம்பிக்க டென்ஷன் ஆனவள் “ம்ச்..நிறுத்துங்கடா… கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம்னு பாத்தா அடங்கமாட்டீங்க போல.. இத்தனை வருஷம் இல்லாம இப்போ என்ன இரண்டுபேருக்கும் சின்ன பசங்கனு நினைப்பா.. நான் கெஞ்சிட்டு எல்லாம் இருக்கமாட்டேன்.. அடுச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு போய்டுவேன்.. ஆதர்ஷ் பார்த்து நீங்க சண்டை போடத்தான் இங்க வந்திங்களா? என்றவள் ருத்திராவை பார்த்து இன்னும் சார் எவ்ளோ வருஷம் இப்டியே கோபப்படுறதா இருக்கீங்க?”

அக்ஸா, “அப்புறம் சார் 2டேஸ் முன்னாடி என்ன நாள்னு நியாபகம் இருக்கா?”

மெலிதான புன்னகயுடன் ருத்திரா, “உன் பிறந்தநாள் தானே.. பிலேட்டட் ஹேப்பி பர்த்டே..” என வாழ்த்த, ரொம்ப நன்றி.. அவ்ளோதானா எனக்கு கிப்ட் எங்க?

ஏன் அதான் அன்னைக்கே அம்மாகிட்டேயும் இவன்கிட்டேயும் சொல்லிருந்தேனே.. குடுக்கலையா?

ஹலோ அது என்கிட்ட இருந்து சுட்டத திரும்ப குடுத்தது. என்னவோ நீங்களா வாங்கி தந்த மாதிரி பேசுறிங்க? எனக்கு கிப்ட் தான் வேணும் என் பர்த்டேக்கு, மேரேஜ்க்கு எல்லாமே சேத்தி என்று அவள் வம்பிழுக்க

இங்கிருந்து நான் என்ன வாங்கி தரமுடியும்?

அதெல்லாம் தெரியாது.. நான் கேட்கறத தரேன்னு சொல்லுங்க போனாபோகட்டும்னு உங்களால முடிஞ்சதே கேட்கறேன்.. என அவள் விடாபிடியாக நிற்க

அவன் ஆதர்ஷை பார்த்து என்னடா உன் ஆளு என்ன வெச்சு ஏதோ பிளான் போட்டுட்டா போல… இந்த ருத்திரா பத்தி இன்னும் முழுசா தெரில சொல்லிவை..பாவம் தோத்திட போறா.. போனா போகுதுன்னு ஆப்ஷன் தர ஆள பாரு என அவன் கெத்தாக பேச

ஆதர்ஷ் எங்களுக்கு உன்னபத்தி நல்லாவே தெரியும்.. பாவம் உனக்கு தான் தெரில.. என அவனை சீண்ட

ஏன் உன் மேல அவ்ளோ நம்பிக்கை கேட்டத செய்யமுடியும்னு தைரியம் இருந்தா அவ கேட்கற கிப்ட் தருவேன்னு ஒத்துக்க வேண்டியதுதானே என

அவனும் சிரித்துகொண்டே இந்த ருத்திரா சொன்னா சொன்னதுதான்… சரி சொல்லு அக்ஸா போனாபோகுதுன்னு எல்லாம் பார்க்க வேண்டாம் உனக்கு என்னவேணுமோ கேளு. அது என்ன கிப்ட்னாலும் எங்க இருந்தாலும் உனக்கு வந்து சேரும் என்றான்.

அக்ஸா நல்லா யோசிச்சுக்கோங்க அப்புறம் பேச்சு மாறகூடாது. என் மேல பிராமிஸ்? பின்னாடி பிராமிஸ் மீறிட்டா எனக்கு தான் பிராப்லேம் வரும் தென் ஆதர்ஷ் உங்ககிட்ட சண்டை போடுவாரு..பரவால்லயா?

ஆதர்ஷ் யோசிச்சு சொல்லு என்றான்

இவனோ அவன்கூட சண்டை போடறதுக்காக பயந்து நான் ஒன்னும் அக்சப்ட் பண்ணல. நீ என்கிட்ட முததடவையா கேட்டத கஷ்டப்படுத்தாம செய்யணும்னு தான் அதோட என்னால எதுன்னாலும் என்னால முடியும்னு நம்பிக்கைல தான் சொல்றேன். பிராமிஸ் என்ன வேணும் கேளு என்றான்.

சூப்பர்… அப்டியே நாங்க வெளிய போய்ட்டு அபி அக்காவ வர சொல்றோம். அக்காகிட்ட அவங்கள லவ் பண்ற உண்மைய ஒத்துகிட்டு எப்போ உங்க கல்யாணத்த வெச்சுக்கலாம்னு சேத்தி சொல்லிடுங்க என அவள் விஷயத்தை சாதாரணமாக சொல்லிவிட்டு வாங்க ஆதவ் நாம போலாம் என இருவரும் சிரித்துகொண்டே வெளியேற அதிர்ச்சியானது ருத்திரா தான்..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் வரம் யாசித்தேன் – 7காதல் வரம் யாசித்தேன் – 7

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு. [scribd id=298766189 key=key-XBP54j6jIVWiVUZUEHpQ mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

ராணி மங்கம்மாள் – 25ராணி மங்கம்மாள் – 25

25. பாவமும் பரிகாரங்களும் அன்றொரு நாள் அரண்மனை நந்தவனத்தின் அதிகாலை இருளில் பணிப் பெண்கள் தங்களுக்குள் ஒட்டுப் பேசியதை இன்று வெளிப்படையாகவே தனக்கும் அச்சையாவுக்கும் முன்னால் விஜயரங்கன் பேசக் கண்டாள் ராணி மங்கம்மாள்.   முதலில் பணிப்பெண்கள் மத்தியில் முளைவிட்ட ஓர்