Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51

51 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

அதை பிரித்தவள் உண்மையாகவே மிகவும் மகிழ்ந்தாள். அவளின் விரிந்த விழிகள் அவளது மகிழ்ச்சியை வெளிக்காட்டின..

அக்ஸா “இது இது அவர்கிட்டேயா இருந்தது?” என கேட்க

ஆதர்ஷ் “ம்ம்…நீ ஆசைபட்டு எனக்கு முதன்முதலா வாங்கினது.. நம்ம இரண்டுபேரோட பேரும்…” என தலையசைத்ததுடன் கையை நீட்டினான். அவளும் மகிழ்வுடன் அதை கட்டிவிட்டாள்.. அவளுக்கு தான் வாங்கிய எதுமே அவனுக்கு தர இயலவில்லை என்றிருந்த சிறு உறுத்தலும் போக அவளிடம் தங்களின் சின்ன வயது போட்டோ என ருத்திரா எடுத்ததை காட்டினான் . அவன் இத நம்ம இரண்டுபேரையும் திட்றதுக்காக வெச்சிருந்திருக்கான்..நான் எடுத்திட்டு வந்திட்டேன்.. என அதை பிரேம் செய்து அவளிடம் நீட்ட  மகிழ்ச்சியில் அவள் அந்த படத்தை ரசிக்க, இவன் அவளை ரசித்தான்.

ஆதர்ஷ் “இப்போ உங்க பொறந்தநாள் முழுமைஅடைஞ்சமாதிரி இருக்கா?” என

அக்ஸா “ரொம்ப.. மனசு நிறைஞ்சிடுச்சு…” என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதிக்க முதலில் இதை எதிர்பார்க்காதவன் அவள் விலகியதும் அவளை அணைத்து இதழில் இதழ் பதிக்க இருவரும் அந்த நிமிடங்களை மனதார ஏற்றனர் இனி வாழ போகும் ஒவ்வொரு நொடிகளையும் நினைவுகளாக்கி பொக்கிஷமாக்க எண்ணினர்…

இருவரும் விலகியதும் அவள் வெட்கத்தில் அவனை பார்ப்பதை தவிர்த்தாள். அவனும் சிரித்துவிட்டு “சரி இதுக்கு மேல இங்க இருக்கறது சரி வராது.. நான் என் ரூம்க்கு போறேன்..” என அவளும் புன்னகையுடன் தலையசைக்க அவன் கதவருகில் சென்றவன் “லவ் யூ அச்சு..” என்றான்..

அவளும் “லவ் யூ டூ தர்ஷு..” என்றாள்.

இருவருக்கும் மனம் நிறைய வராத உறக்கத்தை அழைக்க சென்று தோற்று தங்களின் கனவுலகில் சஞ்சரிக்க உறக்கம் தழுவும் வேளையில் ஆதவன் தன் துயில் கலைந்து வெளிவர துவங்கிவிட்டான்.

மறுநாள் இருவரும் நேரம் கழித்து எழுந்து வர அனைவரும் கிண்டல் செய்ய இவர்களின் குழந்தை பருவ கதையை இருவர் வீட்டு பெற்றோர்களிடம் கேட்டு  அதற்கும் விட்டுவைக்காமல் கிண்டல் செய்தனர் இப்படியே அந்நாள் வெகுவிரைவாக சென்றது.. அடுத்து இரு நாட்களில் சாந்தி, ரஞ்சித் திருமண வேலை இருக்க அன்று சாந்தியின் அம்மா அப்பா அவரின் தங்கை அபிநயா அனைவரும் வந்திருந்தனர். அவர்களை வரவேற்று பேசிக்கொண்டிருக்க திடீரென அக்ஸா “ஆதவ், ஆதவ்.. இங்க வாங்க…” என அவனை தனியாக அழைக்க

அவன் “ஐய்..தனியா கூப்பிட்ற.. வாட் டா பேபி…ஏதாவது வேணுமா? நான் ஏதாவது குடுக்கவா?” என

அக்ஸா “உதை தான் விழும். எனக்கு ஒரு டவுட்…”

“யா எதுன்னாலும் சொல்லு.. நான் ரொம்ப ஜீனியஸ் உனக்கு கண்டிப்பா கிளாரிஃப்பை பண்றேன்.. தியரியா இல்ல ப்ரேக்டிகலா?” என அவன் கேள்வியில் தலையில் தட்டிவிட்டு “சொல்றது கேளுங்க..ரொம்ப உங்களுக்கு இப்போ எல்லாம் சேட்டை ஓவரா போயிடிச்சு.. இப்படியே ஒளறிட்டு இருந்திங்க இன்னும் 2 வாரம் கழிச்சு வர கல்யாணத்தை 2 மாசம் தள்ளி போட்ருவேன்..” என மிரட்ட

அதிர்ச்சியான ஆதர்ஷ் “கல்நெஞ்சுக்காரி…. விடு கல்யாணம் முடியட்டும் அப்புறம் கவனிச்சுக்கறேன்.. என்றவன் எதுக்கு இப்போ கூப்பிட்ட?” என விட்டெறியாக கேட்க அதை பொருட்படுத்தாமல் அக்ஸா “அபி அக்கா இருக்காங்கள்ல..”

“ஆமா இருக்காங்க… அவங்க சாந்தி அண்ணியோட தங்கச்சி.. இப்போ அதுக்கு என்ன..?”

மீண்டும் தலையில் ஒன்று கொடுத்துவிட்டு “குறுக்க பேசாம கேளுங்க.. அவங்க ஏன் இவளோ நாள் கல்யாணம் பண்ணிக்கல?” என வினவ

ஆதர்ஷ் முதலில் முழித்தவன் “அது.. முதல பாத்தாங்க..ஆனா அவங்க யாரை கேட்டாலும் வேண்டாம் வேண்டாம்னே சொல்லிட்டு இருந்தாங்களாம்.. அண்ணி எல்லாரும் பேசிட்டு இருக்கும்போது கேட்டிருக்கேன்.. அப்டியே கொஞ்ச வருஷம் ஆனதும் விட்டுட்டாங்க போல.. வேற எதுவும் எனக்கு காரணம் தெரிலையே.. ஏன் கேக்கற?” என

அவள் “அவங்க லவ் பண்ராங்கன்னு நினைக்கிறேன்..”

ஆதர்ஸ் “அவங்களா?..ச்ச்ச்சா… அவங்க ரொம்ப சைலண்ட் அச்சு..அதிகமா பேசக்கூட மாட்டாங்க.. ”

அவள் அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு மாதிரியாக பார்த்தாள்

ஆதர்ஷ் “என்ன டி ஏதோ விசித்திர ஜந்துவ பாக்குற மாதிரி இப்டி பாக்குற?”

அக்ஸா “பின்ன…அமைதியா இருந்தா பேசாம இருந்தா லவ் பண்ணக்கூடாதுனு இருக்கா என்ன?”

“ஆ..ஆ…அது அப்படினு சொல்லல.. அவங்க லவ் பண்ணிருப்பாங்கன்னு தோணவே இல்லை.. அதான்..சரி லவ் பண்ராங்களா? யாரு? எப்படினு கன்பார்ம் பண்றது?”

அக்ஸா “கன்பார்ம் பண்றத நான் பாத்துக்கறேன். பிரியா, சாஞ்சுவை வெச்சு  இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன்.. யாரா இருக்கும்னு யோசிச்சு வைங்க.. உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க தான்….” என்றவள் ஓடிவிட்டாள்.

அவனும் யோசித்துக்கொண்டே வந்தவன் வாசு,விக்ரம், ரஞ்சித்திடம் சொல்ல அவர்களும் குழப்பிக்கொள்ள இறுதியில் ஆதர்ஷ்க்கு மின்னல் அடிக்க அப்படியும் இருக்குமோ..என்றவன் யாரென அனைவரும் வினவ அவன் கூறியதும் எல்லோரும் முதலில் அது அவ்வாறு இருக்குமா என சந்தேகித்தவர்கள் அப்டியே இருந்தாலும்  எப்படி இப்போ நடக்கும்? என கேட்க ஆதர்ஸ் “நான் சாராகிட்ட கேட்டுட்டு வரேன்..” என சென்றான்.

அவள், ப்ரியா, சஞ்சு, அபி அனைவரும் பேசிக்கொண்டிருக்க சற்று காத்திருந்தான். பின் அவர்கள் அருகே வரவும் அதற்குள் வாசு, விக்ரம் அனைவரும் அங்கே வந்துவிட்டனர்.

அபியிடம் “எல்லாமே பாத்துக்கலாம் அக்கா… நீங்க கவலைப்படாம இருங்க..” என அனுப்பிவிட்டு

இவர்களை பார்க்க அபி சென்றதும் “என்ன சார் கண்டுபுடிச்சிட்டீங்க போல?”

ஆதர்ஷ் “ம்ம்.. ருத்திரா?”

அவள் சிரித்துக்கொண்டே தலையாட்ட அவர்கள் “ஆனா ருத்திரா லவ் பண்ணுவானா?”

அக்ஸா “அது நீங்க தான் கண்டுபுடிக்கணும்..” என ஆதர்ஷ் “நீ முதல என்ன இதெல்லாம் எப்படினு சொல்லு..” என “அதுவா, அவங்க வந்ததுல இருந்தா சோகமா தான் இருந்தாங்க.. பேசுனா பதில் மட்டும்.. அப்புறமா வேலை செய்றது. அவங்க அம்மா அப்பா சாந்தி அக்கா எல்லாருக்கும் இவங்கள நினச்சு கவலை புலம்பல்.. காரணமே இல்லாம இவங்க ஏன் கல்யாணத்தை வேண்டாம்னு சொன்னாங்கனு நான் பிரியா சஞ்சு மூணு பேரும் யோசிச்சிட்டே இருந்தோம். அப்புறம் அவங்கள நேத்துல இருந்து வாட்ச் பண்ணோம். ருத்திரா பத்தி அத்தை பேசிட்டு இருக்கும்போது இவங்க அழுதிட்டே போனதை நான் பாத்தேன். இவளுங்ககிட்ட சொன்னேன்.. அப்போ அப்போ அவங்க காது பட அவரை பத்தி பேசுனோம்.அவங்க ரியாக்ஷன்ஸ்ல கொஞ்சம் தெரிஞ்சது.. அதுதான் இன்னைக்கு காலைல உங்ககிட்ட கேட்டேன். தென் சரி இன்னைக்கு கண்டுபுடிக்கணும்னு தான் அபி அக்கா, ப்ரியா, சஞ்சு மூணு பேருக்கும் வேலை குடுத்து ஒரே இடத்துல தனியா விட்டுட்டோம்.. அவளுங்கள விடாம ருத்திரா பண்ணதை பத்தி அவரு நம்மகிட்ட பேசுனது பத்தி எல்லாமே அபி அக்கா முன்னாடியும் பேசி அவங்ககிட்டேயே இதுல ஒப்பீனியன் வேற கேட்டா அவங்க பாவம் கண்ட்ரோல் பண்ணமுடியாம அழுதிட்டே வெளில வந்திட்டாங்க.. இதுக்கு மேல எதுக்கு ட்ராமானு அபி அக்காகிட்டேயே போயி கேட்டுட்டேன்..” என்றாள் விக்ரம் “என்ன கேட்ட? என்ன சொன்னாங்க?”

சஞ்சு “ருத்திராவை அவங்க லவ் பண்ணேன்னு சொன்னாங்க..”

பிரியா “அபி அக்கா ருத்திராவை சாந்தி அக்கா கல்யாணத்துல தான் பாத்திருக்காங்க.. அப்போவே பிடிச்சதாம்… ” என அபி கூறியதை கூறினாள்

அபி “ஏனோ ஆனந்த் மாமா குடும்பத்தோட ஒட்டாமலே இருப்பாங்க.. எனக்கு கஷ்டமா இருக்கும்.. எனக்கும் அவருக்கும் சரிவராது போலன்னு விட்டுட்டேன்.. அப்புறம் அக்காவை பாக்க சென்னை ஒருதடவை வந்தேன். காலேஜ் டூர் முடிஞ்சு நேரா வந்துட்டேன். பிளான் பண்ணல. சும்மா இன்னும் இரண்டு நாள் லீவு இருக்கே.. ஒரு சர்ப்ரைஸ இருக்கட்டும்னு யாருக்கும் சொல்லாம அப்டியே இங்க வந்துட்டேன். ஏர்லி மோர்னிங் டைம்.. காலேஜ் பஸ்ல இருந்து என்னை பீச் பக்கம் இருந்த மெயின் ரோடுல ட்ராப் பண்ணிட்டு அவங்க வேற வழியா போய்ட்டாங்க. வீட்லயும் யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நான் இறங்குன இடத்துல இருந்து ஆட்டோ பிடிச்சு வந்தர்லாம்னு நினைச்சேன். ஆனா நான் ரொம்ப பயப்படுவேன்.. கொஞ்ச பேரு அங்க இருந்தவங்க 3 பேரு ஒரு மாதிரி பாத்ததும் பயந்துட்டேன். சரி ஆனந்த் மாமாவுக்கு கூப்பிடலாம்னு பாத்தேன். அவசரத்துல மொபைல் பேக்ல இருந்து எடுக்கும் போது கீழ போட்டுட்டேன். உடைஞ்சிடுச்சு… அப்புறம் எங்கேயாவது போன் பண்ண முடியுதான்னு பாக்க கொஞ்ச தூரம் நடந்திட்டே போனேன். அந்த 3 பேரும் பின்னாடியே வந்தாங்க.. அதுல ஒருத்தன் பக்கத்துல வந்து லிப்ட் வேணுமா மேடம்.. ஆட்டோ ஷேர் தான் வாங்கன்னு சொன்னான்.. உள்ள மீதி இரண்டு பேர் இருந்தானுங்க.. நான் பயந்து வேகமா நடந்து போய்ட்டேன். அவங்க பாலோ பண்ணிட்டே வந்தாங்க.. அப்போ அங்க யாரோ மேல மோதிட்டேன்.. பாத்தா ருத்திரா தான் வந்திருந்தாரு.. எனக்கு கொஞ்சம் தைரியம் சந்தோசம்.. ஆனா அவருக்கு என்னை ஞாபகம் கூட இருக்காதேனு ஒரு கவலை எல்லாமே வந்தது.. ஏன்னா அவரு என்னை கல்யாணத்துல சரியா பாக்ககூட இல்ல. என்னை மட்டுமில்ல.. யாரையுமே..ஏன்டா கல்யாணத்துக்கு வந்தோமங்கிற மாதிரி வந்து இருந்திட்டு போய்ட்டாரு.. சோ அவருகிட்ட பேசுறதா என்ன பண்றதுனு நான் யோசிச்சிட்டு இருந்தேன்.. “ஆனா அவரு ‘நீ இங்க என்ன பண்ற?’னு கேட்டதும் எனக்கு வார்த்தையே வரல..

‘அக்கா பாக்க வந்தேன் என்றவள் திரும்பி அந்த ஆட்டோவில் பாலோ செய்தவர்களை பயத்துடன் பார்க்க அவங்க பின்னாடியே வந்தாங்க..’ என

ருத்திரா அவர்களை பார்த்து “என்ன” என்பது போல கேட்க

“சார் இல்லை.. தனியா போயிட்டு இருந்தாங்க.. அதான் அட்ரஸ் தெரியுமான்னு.. ஆட்டோ டிரைவர் சார்..” என பின் வாங்க அவன் ஆட்டோவில் இருந்து மீதி இருவரையும் முறைக்க “சார் இல்ல, பிரெண்ட்ஸ் தான் சார்.. சாரி சார். எதுவும் ப்ரோப்லேம் எல்லாம் இல்லை. சிஸ்டர் பாத்து போங்க..” என்றவன் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட நிம்மதி பெருமூச்சு விட்டவள் “எனக்கு வேற ஆட்டோ பிடிச்சு தரீங்களா நான் போய்க்கறேன்…” என வினவ அவன் அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு “வா..” என்றவன் காரில் ஏற சொன்னான்..

அபி “இது யாரோட கார்?”

“ஏன் அம்பானி கார்ன்னு சொன்னாதான் ஏறுவியா?”

“இல்லை.. அப்டியில்லை..” என முடிப்பதற்குள் அவன் உள்ளே சென்று ஏறி அமர்ந்தான்.. இவளும் அமர்ந்துகொள்ள வண்டியை கிளப்பினான்..

ருத்திரா “ஏன் யார்கிட்டேயும் சொல்லாம வந்த?”

அவள் விழி விரித்து பார்த்தவள் “உங்களுக்கு எப்படி தெரியும்.. ? யார் சொன்னது?” என பதற்றமாக கேட்க

அவன் அவளை முறைத்துவிட்டு “இத கண்டுபுடிக்க சிபிஐ ஆஃபீஸ்ர வருவாங்க.. வீட்ல சொல்லிருந்தா கண்டிப்பா ஆனந்த், இல்ல அவங்க அப்பா யாராவது கூட்டிட்டு போக வந்திருப்பாங்க.. உங்க வீட்லையும் உன்னை இப்டி தனியா அனுப்பமாட்டாங்க. யாராவது கூட வந்திருப்பாங்க. இல்ல கொஞ்சம் நேரம் கழிச்சு தான் வண்டி ஏத்தி விட்ருப்பாங்க. இப்பிடி விடிஞ்சும் விடியாம நீ ரோடில நிக்குற மாதிரி யாரும் விட்ருக்கமாட்டாங்க..” என

அவள் அதை ஒப்புக்கொண்டு தான் காலேஜ் டூர் வந்தது. போகும் முன் லீவ் இருப்பதால் அக்கா வீட்டிற்கு செல்வதாக திடீர் பிளான் போட்டது  என அனைத்தும் கூறினாள்.

“வந்ததும் அப்போ ஆனந்த்க்கு போன் பண்ணிருக்க வேண்டியதுதானே..”

“இல்ல எதுக்கு  டிஸ்டர்ப்னு முதல விட்டுட்டேன். அப்புறம் அவசரத்துல எடுக்கும் போது பயத்துல  கீழ போட்டுட்டேன்.” என

“எதுக்கு எல்லாத்துக்கும் பயப்படுவ.. இவளோ பயம் இருக்கறவ ஒழுங்கா யார்கிட்டேயாவது சொல்லிட்டு வரவேண்டியதுதானே..” என சற்று காட்டமாக வினவ அவள் மிரட்சியுடன் கண்கள் கலங்க “இப்போ எதுக்கு அழற?” என கேட்டதும் இப்போவோ அப்பவோ என இருந்த கண்ணீர் உடனே வெளி வர இரு நிமிடங்கள் அவள் அழுதுகொண்டே இருக்க அவன் வண்டியை ஓரம் கட்டிவிட்டு அமைதியாக வெளியே வெறித்து கொண்டு அமர்ந்துவிட்டான். ஆனால் அழாதே என்றோ அவளை திட்டவோ சமாதானம் செய்யவோ எதுவும் கூறவில்லை. 2 நிமிடம் கழித்து அவள் நிறுத்தியதும் இவன் வண்டியை கிளப்பினான். ஏதோ கடை முன் வண்டியை நிறுத்தினான். அதன் பின் வீடு இருந்தது. அங்கே இவளின் மொபைலை வாங்கியவன் இறங்கி யாரையோ அழைத்தான். வெளியே வந்தவன் “சார் என்ன சார் இவளோ காலைல?”

“அது ஒண்ணுமில்ல.. மொபைல் கீழ விழுந்திடிச்சு.. கொஞ்சம் அவசரம் ஊருக்கு போறதுக்குள்ள ரெடி பண்ணனும். பாக்கறியா?” என

அவன் “கண்டிப்பா சார்.. உங்களுக்கு இல்லாமலா… நீங்க மொபைல் குடுங்க. என வாங்கி பார்த்தவன் சரி சார் சரி பண்ண ஒரு 1 மணி ஆகும்.. நான் பண்ணி வெக்கட்டுமா?”

“சரி.. நீ பாரு.. நான் வரேன்..சாரி காலைல தூங்கும் போது தொந்தரவு பண்ணிட்டேன்..” என்றவன் தேங்க்ஸ் என கூறிவிட்டு வண்டியை கிளப்பி பஸ் ஸ்டாண்ட் சென்றான். அங்கே ஹோட்டல் திறந்திருக்க அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.. “மொபைல் சரியானதும் வாங்கிட்டே வீட்டுக்கு போய்டலாம்…ட்ரிப் முடிஞ்சா நேரா இங்க வந்திருப்ப.. எதுவும் சாப்பிட்ருக்க மாட்ட..அதான் வா..” என்றவன்

அவளுக்கு வேணும் என்பதை ஆர்டர் செய்ய சொன்னான். அவனும் கூறிவிட்டு உணவு வந்ததும் இருவரும் அமைதியாக உண்டனர். அவள் இவனை அவ்வப்போது பார்த்துக்கொண்டே சாப்பிட இவன் “அவள் காலேஜ் பற்றி, வீட்டில் இருப்பவர்களை பற்றி படிப்பு முடிச்சிட்டு என்ன பண்ணப்போற என பொதுப்படையாக பேசி அவளை சகஜமாக்கினான்.” இருவரும் உண்டு முடித்து வெளியே வந்து காரில் ஏறியதும் மொபைல் வாங்கி கொண்டு ஆனந்த் வீட்டின் தெருமுனைக்கு சென்றவன் அங்கேயே வண்டியை நிறுத்தி “சரி, இங்க இருந்து வீட்டுக்கு நடந்து போய்க்கோ.. வீட்டுல கேட்டாங்கன்னா பஸ் ஸ்டாண்ட்ல பிரண்ட்ஸ் இறக்கி விட்டாங்க. அங்க எல்லாரும் சாப்பிட்டு டாக்ஸில ஏத்தி விட்டுட்டு  போனாங்கன்னு சொல்லு.. மொபைல் உடைஞ்சது, சரிபண்ணது, அந்த பொறுக்கி பசங்க பாலோ பண்ணது, நான் உன்னை கூட்டிட்டு வந்து விட்டது எல்லாம் சொல்லவேண்டாம் ஓகே வா?” என

அபி “நீங்க பயப்படாதீங்க.. ஆனந்த் மாமாவும் ரொம்ப நல்லவரு.. அதிகமா அக்கறை எடுத்துப்பாரு.. அதனால தான் கேர்புல்லா இருக்கணும்னு சில நேரம் திட்டுவாங்க.. அவரு அதுல கொஞ்சம் கோபக்காரர் தான். ஆனா உங்களுக்கு அவருக்கு இடைல ப்ரோப்லேம் இருந்து அவரு உங்கள திட்டிருந்தாலும் நீங்க இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணது சொன்னா எல்லாம் உங்கள எதுவும் திட்ட மாட்டாரு.. கவலைப்படாதீங்க..அவரு உங்க அளவுக்கு சாப்ட் இல்லேன்னாலும் நல்லவர் தான் ” என

ருத்திரா அவளை வினோதமாக பார்த்தவன் “நான் சாப்ட்.. ஆனந்த் கோபக்காரனா? எத வெச்சு அப்டி சொல்ற.. இன்னும் இந்த மாதிரி என்னவெல்லாம் நினைச்சிருக்க..?” என அவன் கதை கேட்பது போல கிண்டலாக கேட்க

அவளும் சீரியசாக பதில் கூறினாள் “ஆமா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் அழுத போது நீங்க ரொம்ப பீல் பண்ணி உடனே அமைதியாகிட்டீங்க. என்கிட்ட அடுத்து ஒண்ணுமே கேக்கல.. இதுவே ஆனந்த் மாமா எல்லாம் இருந்தா இப்போ எதுக்கு அழுகற? ஒண்ணு சொல்லிட கூடாது உன்னை.. உடனே அழுகை வந்திடும்னு ஒரு 2 நிமிஷமாவது திட்டிருப்பாரு.. ஊர்ல இப்டி ஒருத்தன் என்கிட்ட வம்பிழுக்க ஆனந்த் மாமா எங்க பெரியப்பா பையன் அண்ணா எல்லாரும் போயி செம சண்டை.. அவனை அடிச்சிட்டாங்க… ஆனா நீங்க இப்போகூட அவனுங்ககிட்ட சாதாரணமா பேசி தானே அனுப்பிச்சிங்க. அதான் சொன்னேன் நீங்க சாப்ட்.. ஆனந்த் மாமா வீட்டுல அவங்க அப்பா அம்மா சித்தி எல்லாருமே கூட என்கிட்ட தனியா நல்லா பேசுவாங்க..ஆனா ஆனந்த் மாமா தம்பி இருப்பாங்களே ஆதர்ஷ் அவங்க நீங்க எல்லாருமே எனக்கு ரொம்ப சைலன்ட்…ஷை டைப்.. அப்டித்தான்னு எனக்கு தெரியும் …ஆனா என் அண்ணா மாமா எல்லாம் அப்டி இல்ல..” என அவள் விளக்கம் கூற இவனுக்கு மெலிதாக புன்னகை வந்தது… பீச்சில் பிரச்சனை செய்தவன் ஏற்கனவே இவனிடம் ஆதி வாங்கியதில் பயந்து கொண்டு சென்று விட்டான். இவள் அழுததும் வந்த கோபத்தை அடக்க அவள் அமைதியானால் இவள் அனைத்தையும் எப்படி எடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று எண்ணியவன் இறுதியாக “அப்போ நான் ஆதர்ஷ் எல்லாம் ரொம்ப சைலன்ட், சாப்ட் இல்ல? உங்க ஆனந்த் மாமா ரொம்ப கோபக்காரனா?” என மீண்டும் கேட்க அவள் ஆமாம் என்பது போல தலையசைக்க இவன் வந்த சிரிப்பை அடக்கியவன் “சரிதான்.. இவளோ கரெக்டா யாரும் மாத்தி சொல்லவே மாட்டாங்க…. நாங்க ஷை டைப் சாப்ட்னு யாருகிட்டேயும் சொல்லிடாத ….” என்றவன் அவளிடம் மீண்டும் தான் விட்டுட்டு போனது பற்றி யாரிடமும் கூறவேண்டாம் என்றதோடு “எப்போவுமே பொண்ணுங்க தைரியமா இருக்கணும். எதுக்கு எடுத்தாலும் பயந்து அழக்கூடாது.. உங்க பாதி பலமே உங்க தைரியம் தான். புரிஞ்சதா.. அதேமாதிரி எந்த விஷயமும் முன்னாடி யோசிக்காம பண்ணாத.. இந்த மாதிரி எங்கேயாவது போகணும் வரணும்னா கூட யாரும் இல்லனாலும் நீ தனியா அங்க எப்படி சமாளிப்பேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கணும் நம்பிக்கை இருக்கணும.. எப்போவுமே பயப்படாத.. அதோட நாம எதிர்பார்த்த மாதிரியே எல்லாமே இருக்காது.. அது இல்லேன்னு தெரியவரும்போது அது ஏத்துக்கிட்டு அதுல இருந்து வெளிய வர பாரு.. டேக் கேர்..” என்றவன் அவளை கிளம்ப சொன்னான். அவளுக்கு பாதி புரிந்தும் புரியாமலும் வீட்டிற்கு சென்றாள். இவன் அவள் உள்ளே சென்றதும் கிளம்பிவிட்டான்.”

அபி “அந்த ஒரு நாள் கொஞ்ச நேரம் அவ்ளோதான் என் வாழ்க்கைல அவரோட நான் இருந்தது.. ஆனா எப்போ அவரால தான் இவங்க எல்லாருக்கும் அவ்ளோ பிரச்சனை வந்தது ஆனந்த் மாமா இறந்தாங்கன்னு தெரியவந்ததோ அப்போவே நான் முழுசா செத்திட்டேன்..” இப்போ எல்லாரும் என்னதான் அவரை மாறிட்டாருன்னு சொன்னாலும் என்னால அக்காவோட வாழ்க்கையை அழிச்ச அவரோட நிம்மதியா வாழ முடியும்னு தோணல..” என அழுக

அக்ஸா “அக்கா வாழ்க்கையில தப்பு பண்ணவங்க திருந்தவே கூடாதா? நீங்களும் இப்டியே உங்க வாழ்க்கையை அழிச்சிட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்தணும்னு இருக்கீங்களா? சாந்தி அக்கா வாழ்க்கை இப்டி ஆனதுக்கு அவரும் காரணம் தான். ஆனா அவங்க வாழ்கையவே மாத்த நாங்க எல்லாரும் இவளோ செய்றோம். உங்களுக்கு அதுல ஆசை இருக்கு தானே. அப்டி இருக்கும்போது நீங்க மட்டும் இப்டி இருந்தா அதுவும் தன் வாழ்க்கைக்காக தான் தங்கச்சி இப்டி தனக்கே தண்டனை குடுத்துக்கறானு தெரிஞ்சா சாந்தி அக்கா இந்த கல்யாணம் நடந்தாலும் சந்தோசமா வாழ்வாங்களா சொல்லுங்க? எங்ககிட்ட அக்கா உங்களுக்கு கல்யாணம் ஆகலேன்னு எவ்ளோ வருத்தப்பட்டாங்க தெரியுமா? அதுல இப்டி நான் வேற இரண்டாவது கல்யாணம் பண்ணனுமானு கவலைபடுறாங்க.. உங்ககிட்ட அதுதான் பேசுறோம்னு சொல்லிட்டோம். இப்போ நீங்க சொன்னதை கண்டிப்பா அக்காகிட்ட சொல்லிடுவோம்.. அப்புறம் சாந்தி அக்கா வாழ்க்கை என்ன ஆகும்னு நீங்களே யோசிச்சுக்கோங்க..”

அபி “அக்ஸா ப்ளீஸ். அப்டி பண்ணிடாத.. அவ இதுக்கு மேலையாவது நிம்மதியா இருக்கட்டும்.”

“அந்த நிம்மதி உங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சாதான் நடக்கும்..”

“அது எப்படி அவரை தவிர என்னால வேற யாரையும் நினைச்சுக்கூட பாக்கமுடியாது.”

“சரி அவரு மட்டுமே நினைச்சுக்கோங்க.. வேற யாரையும் நாங்க சொல்லலையே?”

“என்ன புரியாம பேசுற.. எப்படி சாந்தி அக்கா அத்தை அம்மா அப்பா எல்லாரும் ஒத்துப்பாங்க… அவரால தானே இவளோ பிரச்னையும்…”

“அவங்க ஏத்துக்கமாட்டோம்னு உங்ககிட்ட சொன்னாங்களா? அதோட ஒண்ணு புரிஞ்சுக்கோங்ககா..நடந்த முடிஞ்ச எதையும் நாம மாத்த முடியாது.. அதுக்காக தப்பு பண்ற எல்லாரையும் மன்னிச்சு விடுங்கனு சொல்லல… அவங்க உணர்ந்து வரும்போதாவது இனி அவங்க அதே தப்ப திருப்ப பண்ணாம இருக்கற அளவுக்கு நாம பாத்துக்கலாமே.. ஏற்கனவே குற்ற உணர்ச்சில இருக்கறவனை சும்மா நீ தப்பு பண்ணிட்டே பண்ணிட்டேனு குத்தி காட்டிட்டே இருந்தா அது சரினு சொல்றிங்களா? அன்னைக்கு அவரோட பிரச்சனை அவரு கொஞ்சம் விலகுனதும் யாரும் அவரை கண்டுக்காம ஒதுக்கனது தான்… இப்போவும் அதுவே திரும்ப பண்ணனுமா என்ன? அவரு கொஞ்சம் இறங்கி வர மனசுல இருக்கும்போது உனக்காக குடும்பம் பிரண்ட்ஸ்னு  நாங்க இருக்கோம்.. எந்த பிரச்சனை கஷ்டம் வந்தாலும் சொல்லு பேசி சரி பண்ணாலும் இல்ல யோசிச்சு முடிவு பண்ணலாம்னு கூட சப்போர்ட் பண்ணா அந்த நம்பிக்கை ஒரு ஒருத்தருக்கும் யாரோ ஒருத்தர் மேல வந்தாலும் யாராவது எடுத்ததும் இந்த அளவுக்கு கொடுமை பண்ணனும்னு நினைப்பாங்களா? அவரு மாறமாட்டார்னு நீங்க முடிவு பண்ணிட்டா விட்ருங்க.. கம்பெல் பண்ணி கல்யாண வாழ்க்கையில இணையறதுல எனக்கு நம்பிக்கை இல்லை.. ” என இறுதியாக அவள் விட்டுவிட

அபி சற்று யோசித்தவள் “அக்கா அண்ட் வீட்டுல எல்லாருக்கும் ஓகேனா எனக்கும் ஓகே.”

ப்ரியா “சூப்பர் கா… யூ சோ ஸ்வீட்..” என கட்டிக்கொள்ள

“ஆனா அவரு என்ன சொல்லுவார்னு தெரிலையே..?”

சஞ்சு “யாரந்த அவர்?” என கிண்டல் செய்ய அதோடு அவளின் சம்மதம் கிடைத்தது பற்றி அனைவரிடமும் கூறினர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08

அத்தியாயம் – 08   அன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் வடமராட்சி வலய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவர் இரண்டு போட்டிகளில் பங்குபெற முடியும். வைஷாலி வழக்கம் போல நடனத்திற்கும் முதல் தடவையாகப் பேச்சுப் போட்டியில் கலந்து

கடவுள் அமைத்த மேடை – 13கடவுள் அமைத்த மேடை – 13

ஹாய் பிரெண்ட்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. இன்றைக்கு சற்றே பெரிய அப்டேட். முக்கியமானதும் கூட. உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கடவுள் அமைத்த மேடை 13 அன்புடன், தமிழ் மதுரா.

உள்ளம் குழையுதடி கிளியே – 25உள்ளம் குழையுதடி கிளியே – 25

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இன்றைய முக்கியமான பகுதிக்கு செல்வோம். உள்ளம் குழையுதடி கிளியே – 25 அன்புடன், தமிழ் மதுரா