Tamil Madhura தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 68

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 68

68 – மனதை மாற்றிவிட்டாய்

ஏதாவது செய்யவேண்டுமென நேரம் பார்த்துக்கொண்டிருந்த சோபிக்கு இவர்களின் இந்த செயல் கோபத்தை தூண்ட வெளியே சென்று விட்டு மாலை வீடு வந்து சேர அங்கே எப்போவும் போல பேசுவோம் திவியை பற்றி ஆரம்பிக்க அவள் வீட்டில் இல்லை என்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு சோபியையும் ஈஸ்வரியையும் எதிர்க்க முக்கியமாக மதியும், அபியும் “இங்க பாரு சும்மா சும்மா திவியை கூப்பிடறது, பேசுறது, வேலை வாங்குறதுனு ஏதாவது பண்ணணும்ன்னு நினைச்ச அவ்ளோதான். நீ அவளை மனச சங்கடப்படுத்தணும்னு என்ன பண்ணாலும் நடக்காது. எல்லாரும் அவகூடவே தான் இருப்போம். அவளுக்கு தான் சப்போர்ட். ஏற்கனவே நீ பண்ண எல்லா பிரச்னையும் எங்களுக்கு தெரிஞ்சிடிச்சு. இப்போவும் போனா போகுதுனு தான் எதுவும் பண்ணாம விட்டுருக்கோம். இல்ல எல்லாருக்கும் இருக்கற கோபத்துக்கு நீங்க 2 பேரும் இந்த வீடு இல்ல, ஊர்லையே இருக்கமுடியாது.” என இன்னும் ஆளாளுக்கு திட்ட

சோபி “பாருடா திடீர் பாசத்தை. என்ன எல்லாரும் சவுண்ட் ஓவரா குடுக்கறீங்க. என்னமோ நான் தான் அவ இப்டி இருக்க காரணம்ங்கிற மாதிரி பேசுறிங்க. ஞாபகம் இல்லையா? அன்னைக்கு நிச்சயதார்த்தம் நடந்தப்போ அவ உங்க எல்லார்கிட்டயும் தானே கெஞ்சுனா. சொல்றத கேளுங்க கேளுங்கன்னு . கேக்காம அவளை தப்பா நினைச்சது யாரு? நானா? உங்களுக்கு பிரச்னைனதும் அவ யோசிக்காம உள்ள வந்து பலியாடு மாதிரி தலையை குடுத்திட்டா..ஆனா நீங்க யாருமே கொஞ்சம் கூட யோசிக்காம திவிய தப்பா நினைச்சுடீங்க.. அவளுக்கும் எனக்கும் வாக்குவாதம் நடந்த போது அவ இப்பிடி ஆகல. அவ என்கிட்ட பொய் சொல்லும் போதும் சரி, அவளுக்கு உங்க வீட்ல இருந்து நான் பிரச்சனை கொடுக்கும் போதும் சரி அவ அப்படி ஆகல. நீங்க நம்பலேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அவ கொஞ்சம் ஆடிட்டா. நீங்க எல்லாரும் வெறுத்து மொத்தமா அவளை விலக்குனதுனால தான் அவளுக்கு இப்போ இப்டி ஒரு நிலைமை. என்கிட்ட இருந்து அவளை பாதுகாக்கணும்னு நினைக்கிறீங்க.. ஆனா உண்மையை சொன்னா அவளுக்கு பிரச்சனையே நீங்க எல்லாரும் தான். அவளை பைத்தியமாக்குனது நீங்க எல்லாரும் தான் நான் இல்லை.. ரொம்ப பாசம் காட்டி அவளை நம்ப வெச்சு ஆனா நீங்க யாரும் நம்பாம விட்டுடீங்க, இப்போ மறுபடியும் பாசம் காட்டறீங்க இன்னும் இதே மாதிரி கொஞ்ச நாள்ல அவளை மறுபடியும் ஏதாவது வந்தா திட்ட போறீங்க. உங்க எல்லார்னாலையும் தான் அவ முழு பைத்தியமா மாற போறா. ” என

ஆதி ஆதி “சோபனா ஜஸ்ட் எனாஃப்.. அவளை பைத்தியம் அது இதுன்னு சொன்ன, நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்.”

“ஐயையோ, ஆதி உங்கள எப்படி மறந்தேன். இதுல மெயின் ஆளே நீங்க தானே. சும்மா இருந்தவளை லவ் கல்யாணம்னு கமிட்மெண்ட்ல கொண்டு வந்து நிறுத்தி அவளை இப்டி ஆக்குனதே நீங்கதானே. அவங்க எல்லாரும் குறை சொல்லும் போதும் விலகும் போதும்கூட அவ அசராம தான் இருந்தா என்ன கொஞ்சமா அடக்கி வாசிச்சா. ஆனா நீங்களே அவளை விட்டு விலகுறீங்கன்னு ஒரு நிலைமை வந்த போது தான் அவ இப்படி ஆனா. அவ்ளோ சந்தோசமா சுத்தி திரிஞ்சு இருந்த பொண்ணு, உங்கள அவ்ளோ லவ் பண்ணவளை நீங்களே இப்டி டிரீட் பண்ணீட்டீங்களே ஆதி. அவளோட இந்த நிலைமைக்கு நீங்க தான் முக்கிய காரணம், முழு காரணமும் கூட. நீங்க அவளை நம்பலை. ஆனா வெளில நம்பறேன் நம்புறேன்னு சொல்லிக்கிட்டிங்க. நம்பிருந்தா அவ சொல்ல வரத கேட்டு இருப்பிங்கள்ல? உங்க உள் மனசுல ஒரு ஓரமா கூட அவ மேல நம்பிக்கை இல்லாம இருந்திருக்கலாம். நீங்க அவகிட்ட நம்புறேன்னு சொல்லி நம்பாம நடிச்சிருக்கீங்க. இப்படி ஒரு நம்பாத நடிக்கற ஹஸ்பண்ட் கிடைக்கறதுக்கு அவ என்ன பாவம் பண்ணாலோ?…” என சொல்லி முடிக்கும் முன் அவள் கன்னத்தில் வந்து இறங்கியது திவியின் கைகள். எதிர்பாரா தாக்குதலில் தள்ளாடி சுதாரித்து விழிக்க சோபியின் கண் முன் திவி பத்ரகாளியாய் நின்று கொண்டிருந்தாள்.

திவி “போனா போகுதுன்னு விட்டா ரொம்ப ஓவரா பேசற? ஆதியை பத்தி பேச, ஏன் அவரு முன்னாடி நிக்க கூட உனக்கு எல்லாம் தகுதி இல்லை.”

“என்னவே அடிச்சிட்டேல்ல…உன்னை என்ன பன்றேன்னு பாரு. என் அவள் யாருக்கோ கால் செய்துக்கொண்டே ‘உன் புருஷனே உன்னை நம்பாம இருக்கும் போதே நீ இப்டி இருக்க, கரெக்டா இருக்கறவனா கிடைச்சிருந்தா என்ன பண்ணிருப்ப?'” என்க திவி, சோபி கையில் வைத்திருந்த போனை பிடிங்கி சுவற்றில் வீசி எறிய, அதில் பட்டு சுக்கு நூறாக நொறுங்கியது.

“இன்னொரு வார்த்தை ஆதியை பத்தி பேசுன நொறுங்கிய போனை சுட்டிக்காட்டி அந்த நிலைமை தான் உனக்கும்.” என சோபி அமைதியாக இருந்தும் முறைத்துக்கொண்டிருக்க

ஈஸ்வரி “ஏய் என்னடி, என் பொண்ணவே அடிக்கிறியா?” என மீண்டும் சோபிக்கு ஒரு அறை விழுந்தது. வாங்கியது இரு அறைகள் என்றாலும் கொஞ்சம் திவியை மிரட்சியோடு பார்க்க, ஈஸ்வரியிடம் திரும்பி “உங்களுக்கு இத குடுக்க ரொம்ப நேரம் ஆகாது. வயசுல பெரியவங்கனு பாக்கிறேன். இல்லாட்டி சோபிய இப்பிடி வளத்துனதுக்கு உங்கள தான் மொதல்ல தண்டிச்சிருக்கணும். உங்க இரண்டு பேர்கிட்டேயும் நான் அன்னைக்கே சொல்லிட்டேன். நான் குடும்பத்து மேல பாசமா இருக்கேங்கிறதுக்காக ரொம்ப உண்மையா, நேர்மையா அவங்கள மாதிரி பொறுமையா பேசிட்டிருப்பேன்னு நினைக்காத, கண்டிப்பா பாதிப்பு வரும்னா நீ பண்ணத விட இரண்டு மடங்கா திருப்பி குடுப்பேன்ன்னு. அன்னைக்கே நீ பண்ண வேலைக்கு உன்னை சும்மா விட்டதுக்கு காரணம் ஆதிக்கும், உனக்கும் கல்யாணம் பண்ணிவெக்கமா உன்னை நிராகரிச்சதுக்கு கோபத்துல அந்த மாதிரி பண்ற? அண்ட் நீயும் இந்த குடும்பத்துல ஒருத்தி தான் நினச்சதுதான். ஆனா நீ உன் அண்ணனை வெச்சு அவரோட பீலிங்ஸ மிஸ்யூஸ் பண்ணி எது நடக்கக்கூடாதுனு நான் ரிஸ்க் எடுத்தேனோ அத இல்லேன்னு காட்டி மொத்த குடும்பத்தையும் கஷ்டப்படுத்தி குழப்பிவிட்டு இப்போ இந்த நிலைமைக்கு வந்திடிச்சு.

எல்லாருக்கும் உண்மையா நடந்தது என்னனு தெரிஞ்சும் உன்னை விலக்கி வெச்சும் உனக்கு கொஞ்ச கூட உறுத்தலே இல்லேல்ல..இதுக்கு மேல உன்னை விட்டுவெக்கணும்னு நினைக்கிற? ஆனா சோபி நீ உண்மையாவே கிரேட். உனக்கான பிரச்சனையும் நீயே போயி எடுத்துகிட்டே.யாருக்கும் வேலை வெக்கல. நீ பண்ண வேலைக்கு இந்த வாரத்துக்குள்ள ஜெயிலுக்கு போவ. அவள் புரியாமல் விழிக்க ஈஸ்வரி பதற “என்ன, என் பொண்ணு, ஜெயிலுக்கா? அந்த அளவுக்கு இப்போ யாருக்கு என்ன பிரச்னை நடந்துபோச்சு? ” என

திவி “அட, நம்ம வீட்ல மேடம் பண்ண பிரச்னைக்கு இல்ல. வெளில ட்ரக்ஸ் (drugs) கடத்தறதுல மேடம் பண்ண சாகசத்துக்கு தான் அரசு மரியாதையோட கூட்டிட்டு போக வருவாங்கனு சொன்னேன் ஆண்ட்டி. ”

அவர்கள் புரியாமல் மொத்த குடும்பத்துடன் சேர்ந்து அதிர்ச்சியாக “என்ன ஆண்ட்டி உங்களுக்கு விஷயம் தெரியாதா? என்ன சோபி, எவ்வளோ பாசமான அம்மா, இதுவரைக்கும் நீ பண்ண தப்ப எதையாவது அதட்டி கேட்டிருப்பங்களா? அப்படிப்பட்டவங்ககிட்ட உண்மையா மறச்சிட்டியே?”

“திவி நீ என்ன சொல்ற, நான் அந்த மாதிரி எல்லாம் எதுவும் பண்ணல.”

திவி “ஆண்ட்டி சோபி மறந்துட்டாளா? இல்ல சொல்ல சங்கடப்படறாளான்னு தெரில. நானே விஷயத்தை சொல்றேன். நீங்க ஊருக்கு இங்க வந்த அப்புறம், உங்களுக்கு பணம் புழக்கம் அதிகம் இல்லாத மாதிரி முக்கியமா பணமே கிடைக்காத மாதிரி பரமேஷ் அங்கிளும், சுந்தரும் பாத்துக்கிட்டாங்க. உங்களுக்கு சந்தேகம் வந்ததால இந்த பிரச்சனைய விட்டுட்டு உங்க அண்ணா வீட்ல இருந்து பணம் வாங்கி தந்தீங்க. ஆனா என்ன பண்றது, சோபி செல்லம்க்கு அது பத்தாம வெளில பணம் கேட்டு அதுக்கு ஒரு வேலை செஞ்சிருக்காங்க. அது தான் போதை பொருள் கடத்தல். பார்சல் பார்சல கொண்டு போயி குடுத்து 10 லட்சம் பக்கம் வாங்கிருக்கா. அது எல்லாமே குழந்தைங்களுக்கு குடுக்கற பால் பவுடர், தினமும் சாப்பிடற சாப்பாடு பேக்கிங்கில கலக்குறதுக்காக. கிப்ட் பாக்ஸ் மாதிரி பேக் பண்ணிட்டு பெரிய இடத்து பொண்ணுகிறதால எந்த பிரச்னையும் இல்லாம நீட்டா கொண்டு போயி சேத்திட்ட. எல்லாமே சரியா பன்னிருக்க சோபி. ஆனா உன்னோட பேட் டைம், போலீஸ் ட்ரேஸ் பண்ணி புடிச்சிட்டாங்க. இதெல்லாம் எனக்கெப்படி தெரியும்னு பாக்கறியா? என் பிரண்ட் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருக்காங்கன்னு சொன்னேனே. சோ விஷயம் தெரிஞ்சதும் குடும்பத்தை விசாரிச்சதும் என்கிட்ட கேட்டுட்டாங்க. வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்கபோகுது. அவ தங்கச்சிக்கு கல்யாணம். இவளை கல்யாணம் முடிஞ்சு அரெஸ்ட் பண்ணிக்க முடியுமான்னு கேட்டேன். அவங்களும் சரி இன்னும் மெயின் காங் பிடிக்கணும். இவங்க மூவையும் வாட்ச் பண்ணிட்டே இருப்போம் அதுவரைக்கும் தப்பிக்காம பாத்துக்கோங்கன்னு சொல்லிருக்காங்க.. ஆண்ட்டி உங்க பொண்ண ரொம்ப சந்தோசமா செழிப்பா வாழ வெக்கறேன்னு சொல்லி சாதாரண வாழ்க்கை கூட இல்லாம பண்ணிடீங்களே… இதுக்கு மேல அவ வாழ்க்கையே அவ்ளோதான்ல?”

ஈஸ்வரி திகைத்து நிற்க அனைவரும் பணத்துக்காக இந்த அளவுக்கு போவியா? இப்பிடி குழந்தைங்களை கொல்றதுக்கு நீயே செத்திருக்கலாம், இப்போவே இவளை போலீஸ்ல புடிச்சு குடுங்க என வாய்க்கு வந்தபடி அனைவரும் பேச சோபி ” இல்ல, நான் அப்படி பண்ணல. இவ பொய் சொல்றா.” என பதற

திவி பொறுமையாக “உனக்கு ஆதாரம் காட்டுனா ரொம்ப பிடிக்கும்ல” என சில போட்டோஸ், ஒரு வீடியோ காட்ட அதில் சோபி ஒருவருடன் பணம் வேண்டும் என கேட்க அவர் ஒரு பார்சல் பேக் பண்ணி தருவது, இவள் வாங்கி கொண்டு சென்றது என பேச்சு வார்த்தை இல்லாமல் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இருந்தது. அவனும் இவளும் பரிச்சயமானவர்கள் போல தான் தெரிந்தனர். அடுத்து அவள் அந்த பார்சலை ஒரு குடோன் முன்பு நிறுத்தி ஒருத்தனுக்கு கால் செய்தது, அந்த பார்சல் கைமாறுவது, இவள் பணம் பெற்று கொள்வது, அவன் அந்த குடோனில் அதை பிரித்து மற்ற பொருட்களுடன் கலப்பது போன்ற பல விதத்தில் போட்டோஸ் இருக்க அனைவரும் இவளை திட்டி தீர்த்தனர்.

சோபியும் “பணம் எனக்கு தேவைப்பட்டது. நான் அவன்கிட்ட கேட்ட்து உண்மை பார்சல் வாங்கிட்டு போயி குடுத்தது உண்மை. ஆனா அதுல போதை பொருள் இருந்ததுன்னு எனக்கு தெரியாது. என்னை நம்புங்க. ஜஸ்ட் கிப்ட் தான் அவன் சொன்னான். ”

திவி “இது என்ன சோபி, இப்படி பதட்டத்துல சின்ன பிள்ளை மாதிரி பொய் சொல்ற. எல்லாத்தையும் எப்படி பிளான் பண்ணி பக்காவா காய் நகுத்துற உனக்கு விஷயம் தெரியாம ஒருத்தன் உன்னை யூஸ் பண்ணிட்டானு சொன்னா இங்க இருக்கற யாரு நம்புவா. அதுவுமில்லாம வெறும் கிப்ட் கொண்டு போயி குடுக்கறதுக்கு எதுக்கு 10 லட்சம் குடுக்கப்போறாங்கனு உனக்கு கூடவா சந்தேகம் வரல. இதுல இருந்தே தெரில, நீ சொல்றது பொய்னு..இத சொன்னா உங்க அம்மாவே நம்பமாட்டாங்க…” என அனைவரின் பார்வையும் கேள்விகளுமே சோபிக்கு புரிந்தது தன்னை யாரும் நம்பவில்லை என்று.

திவி தொடர்ந்து “சரி சோபி, இனி நீ இங்க இருக்கப்போற கொஞ்ச நாள் ஹவுஸ் அரெஸ்ட் தான். உன் ரூம்ல மட்டும் இருந்துக்கோ. போனையும் நான் கோபத்துல உடைச்சிட்டேன். சோ யார்கிட்டேயும் பேசவும் முடியாது. வெளில போக, தப்பிக்க ட்ரை பண்ணாத. உன்னை போலீஸ் ஆளுங்க கண்காணிச்சிட்டே இருக்காங்க. அண்ட் ஆண்ட்டி உங்களுக்கான தண்டனை ரொம்ப சின்னது தான். உங்க பொண்ணுகிட்ட நீங்க பேசவே கூடாது. அது தண்டனை கூட இல்லை வேலை practice எப்படி வேணாலும் சொல்லலாம். ஏன்னா அவ ஜெயிலுக்கு போன பிறகு நீங்க அப்படித்தானே இருக்கனும். அதுக்கு இப்போவே பழகிக்கோங்க. தெரியாம அவகிட்ட பேசணும்னு நினைச்சீங்க கொஞ்ச நாள் கழிச்சு அர்ரெஸ்ட் பண்ண வேண்டியவளுக்கு நானே தப்பிக்க ட்ரை பண்ணறான்னு தகவல் சொல்லி உடனே அரெஸ்ட் பண்ண வெச்சுடுவேன். அவளோட இந்த நிலைமைக்கு நீங்க தானே காரணம். வேணும்னா நல்லா உக்காந்து பீல் பண்ணுங்க. முடிஞ்சா அவளை ஜாமீன்ல எடுக்க இல்லை கேஸ் இல்லாம பண்ணமுடியுமான்னு கூட பாருங்க.”

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 9கபாடபுரம் – 9

9. முதியவர் முன்னிலையில்   அந்த நேரத்தில் பெரிய பாண்டியரை அங்கே எதிர்பாராத காரணத்தால் முடிநாகனும், இளையபாண்டியனும் சிறிது திகைத்தனர். ஆனாலும் பெரியவர் அப்படிக் கவலைப்பட்டுக் கண் விழித்திருப்பதை முடிநாகன் வியக்கவில்லை. அவரெதிரில் இருவரும் அடக்க ஒடுக்கமாகச் சென்று நின்றார்கள். பெரியவர்

ஒகே என் கள்வனின் மடியில் – 3ஒகே என் கள்வனின் மடியில் – 3

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றிப்பா. இந்த பகுதியில் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஹீரோ ஹீரோயின் சந்திப்பு. படிச்சுட்டு ஒரு நிமிடம் செலவழிச்சு கமெண்ட்ஸ்ல உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கலாமே. பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கவங்க அதே ஐடியை 

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41

  41 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சிறிது நேரத்தில் ஆதர்ஷ் வந்துவிட இருவரும் அமைதியாக புன்னகைக்க ஆதர்ஷ் “விக்ரம் எல்லாரும் எப்போ கிளம்புனாங்க? அமைதியா போய்ட்டானா?” அக்சரா ” ஒரு மணி  பக்கம் இருக்கும்… அமைதியாவா? நேத்து நீங்க வந்து