Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46

46 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி இரண்டுபேரும் சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா சரி அது எப்போ எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, லவ் அட் பஸ்ட் சைட்டா, என்ன நடந்ததுனு எங்களுக்கு முதல இருந்து சொல்லு” என ஆர்வமாக கேட்க அவர்களோடு இணைந்து கொண்டு பிரியா, சஞ்சுவும் கூட கதை கேட்க அவனும் அவளை பார்த்தது முதல் இன்று வரை நடந்தது அனைத்தும் கூறினான். எந்த நிமிஷம் உடனே வந்ததுன்னு தெரியாது. ஆனா எப்போவுமே அவளை பாத்தா ஒரு நிம்மதி இருக்கும். அவகூட இருக்கும் போது நான் நானா இருப்பேன். அது எனக்கு எப்போவுமே பிடிக்கும். எல்லாத்துக்கும் மேல இங்க வரதா இந்த பிரச்சனையா எல்லாம் சால்வ் பண்றதா இல்ல அம்மா அண்ணியை மட்டும் பேசி அங்க கூட்டிட்டு போறதுன்னு கூட ஒரு எண்ணம் இருந்தது. அவகிட்ட தான் கடைசி முடிவு இருந்தது. யோசிச்சு சொல்லுன்னு சொல்லிட்டு நான் போய்ட்டேன். திரும்பி வந்து கேட்டும் இந்த ரிஸ்க் எடுத்தா நிறையா பிரச்சனை வரும் தனியா இருக்க வேண்டியது இருக்கும். ஒருவேளை எனக்கே கூட ஏதாவது ஆகலாம்னு சொல்லி பாத்தேன். ஆனா அவ அப்போ தான் சித்திக்கு நடந்த பிரச்சனை பத்தி சொன்னா. இதுக்கு காரணமானவங்கள பழிவாங்குங்கனு சொல்லல. ஆனா உங்க சித்தி பட்ட கஷ்டத்துக்கு அவமானத்துக்கு அவங்களுக்கு தண்டனையாவது கிடைக்கணும். ஒருவேளை இப்போ அவங்க உயிரோட இருந்திருந்து இந்த சமயத்துல உங்களுக்கு விஷயம் தெரிய வந்தா நீங்க இப்படித்தான் எனக்கு குடும்பம் இருக்கு. இல்லை இனி பிரச்சனை வேண்டாம். ஒதுங்கி இருக்கலாம்னு சொல்லுவிங்களா? அப்படி சொல்லி அத அவங்க ஏத்துக்கிட்டாலும் அவங்க மனசுல ஓரத்துல ஒரு வலி இருந்திட்டே இருக்கும். என்ன பாவம் பண்ணோம், எந்த லைப்ம் ஏத்துக்கமுடியாம என்னடா வாழ்க்கை இதுனு. இதுக்கு காரணமானவன் இன்னும் நல்லா தானே இருக்கான்னு ஒரு விரக்தி வராதா?

உங்க அண்ணா கடைசில கூட என் தம்பிகிட்ட சொல்லு, அவன் வந்தா எல்லாமே சரி பண்ணிடுவான்னு எவ்ளோ நம்பிக்கை இருந்திருந்தா சொல்லிருப்பாரு. உங்க அப்பா வெளில சொல்லலேன்னாலும் அவருக்கு நம்பிக்கை இருந்ததால தானே உங்கள பிஸ்னஸ பாதுக்க அண்ணாகிட்ட சொல்லி கூப்பிட்டிருப்பாரு. உங்க அம்மாவும் அண்ணியும் கூட உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயத்துல தான் அப்டி சொல்லி போக சொல்லிருப்பாங்களே தவிர அவங்க மனுசுலையும் இந்த தப்புக்கு இவனுங்களுக்கு தண்டனை கிடைக்காதனு ஒரு எண்ணம் இருந்திட்டே தானே இருக்கும். இத்தனை பேரோட நம்பிக்கை, வருத்தம் இத எல்லாமே தூக்கி போட்டுட்டு எல்லாரையும் மன்னிச்சு விட்டுட்டு வா அவங்களையும் கூட்டிட்டு வந்து நம்மகூட வெச்சுக்கலாம். நாம கல்யாணம் பண்ணிட்டு இந்த லைப் போதும்னாலும் எனக்கு ஓகே. ஆனா என்னால மனசார அந்த வாழ்க்கையை ஏத்துக்க முடியுமான்னு கேட்டா தெரிலனு தான் பதில் வரும். உங்க சித்தியோட இடத்துல நான் இருந்து எனக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்திருந்தா அந்த தப்பு பண்ணவன் யாருனு தெரிஞ்சும் நான் மனசார அவனை விட்டுட்டு வருவேனா. நீங்க தான் விட்ருவீங்களா? இந்த பிரச்சனைல நீங்க நுழைஞ்சிட்டா பாதில வர முடியாது. எனக்கு நல்லாவே தெரியும். உங்களை விட்டு நான் பிரிஞ்சு இருக்கணும் தான். ஆனா உங்க மனசுல எப்போவும் நான் இருப்பேன். கண்டிப்பா வெயிட் பண்றேன். இதனால எனக்கு மத்தவங்களுக்கு பிரச்சனை வரும்னு யோசிச்சீங்கனா அதையும் எப்படி சமாளிக்கலாம்னு யோசிங்க. நீங்க உங்க இடத்துல இருந்து பிரச்னையை எப்படி சமாளிக்கணும்னு யோசிக்கறதை விட எதிரியோட இடத்துல இருந்து யோசிங்க. என்னென்ன பிரச்சனை குடுக்க நினைப்பிங்கனு அப்போ உங்களால அதுக்கான எல்லா வழியையும் அடைக்க முடியும். எல்லாத்துக்கும் மீறி எனக்கு பிரச்சனை வந்தாலும் நான் வருத்தப்படமாட்டேன். எந்த நிமிசத்துலையும் ஏன் இப்டி ஒரு முடிவு எடுத்தோம்னு யோசிக்கமாட்டேன். உங்கள நான் முழுசா நம்புறேன். என் ஆதவ் எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு வந்து என்னை கூட்டிட்டு போவாருனு. எனக்கு இந்த விசயத்துல ஒரு துளிகூட பயம் கவலை இல்ல. அதனால நீங்க என்னை நினச்சு யோசிக்காம செய்யவேண்டியதை பாருங்கனு” சொல்லி அதன் பின் தான் இங்கே வந்தது நடந்தவை அனைத்தும்.

உங்க எல்லாருக்காகவும் பேசுனது அவ தான். அதனால தான் அவ உங்கள மதிக்கல. யாரும் வேண்டாம்னு முடிவு பண்ணியானு கேட்டதும் அவ எவ்ளோ வருத்தப்பட்டிருப்பா. அதான் மா அப்டி பேசிட்டேன்.” என

பைரவி “புரியுது… உண்மையாவே அவ உனக்கு கிடைச்சதுல லக்கி தான்டா.” என ஆதர்ஷ் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான்.

பைரவியிடம் திடிரென்று தோன்ற ருத்திரா கூறியதை சொல்லிவிட்டு “ஆண்ட்டி நானும் சாராவும் இதுக்கு முன்னாடி அப்போ மீட் பண்ணிருக்கோமா?” என வினவினான்.

அம்பிகா சிரித்துவிட்டு அது ஒரு 1 நாள் 2 நாள் அவ்ளோதான். இரண்டுபேருமே குட்டிஸ் தானே. அப்போ நீ 2ண்ட் ஸ்டாண்டர்ட், அவ யூகேஜி என்னவோ தான் இருக்கும்.”

ஆதர்ஷ் ஆர்வமாகி “சொல்லுங்க, சொல்லுங்க… எப்போ மீட் பண்ணோம், நாங்க அப்போ சண்டை போடுவோமா, நம்ம பேமிலி எல்லாருமே மீட் பண்ணோமா? அப்பறம் ஏன் இவங்க யாருக்கும் தெரில. அவ அம்மா அப்பாவுக்கும் கூட தெரியாதா?” என கேள்வி மேல் கேள்வி கேட்டு அணைத்து கதையையும் கேட்டுக்கொண்டான். இதை கேட்டு கொண்டிருந்த அனைவர்க்கும் ஆச்சரியம் என்றாலும் அதோடு பைரவி சில விஷயங்கள் கூற அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்ல.. அவன் அனைவரிடமும் இது அவளுக்கு தெரியக்கூடாது. இன்னும் ஒரு வாரத்துல அவ பொறந்தநாள் வருது. அன்னைக்கு இத சொல்றேன் அவகிட்ட.” என்று விட்டு அவன் மேலே சென்று எதையோ தேடி எடுக்க அக்ஸாவின் அம்மா அவனிடம் வந்து பேசினத்துக்கு மன்னிப்பு கேட்க அவனும் “விடுங்க அத்தை, உங்க பயம், கவலை எனக்கு புரியுது. சோ கோபம் எல்லாம் இல்லை. ஆனா கண்டிப்பா நான் சாராவை பத்திரமா பாத்துக்குவேன். என்ன நீங்க நம்பலாம்.” என

கனகா “அதுல எங்களுக்கு சந்தேகமே இல்ல மாப்பிளை. அக்ஸா உங்கள எந்த அளவுக்கு நம்புறான்னு நாங்க கண்கூடா பாத்துட்டோம். அதோட உங்ககூட இருந்தா மட்டும் தான் அவளுக்கு சந்தோஷமே… பாலா, நந்தா எல்லாருமே கூட சொன்னானுங்க… கோபத்துல உங்களுக்கு தரமாட்டோம்னு தான் சொன்னாங்களே தவிர எந்த சூழ்நிலையிலும் வேற ஒருத்தருக்கு அவளை கட்டிக்குடுக்க அவனுங்களுக்கு மனசு இல்லையாம்.. பிரச்சனை வந்திடுமேனு பயம் தானே தவிர உங்ககிட்ட இருந்து அவளை பிரிக்கிறது இல்லை. உங்கள தவிர வேற ஒருத்தர சொன்னாலும் முத ஆளா எதித்து நிக்கிறது அவனுங்களா தான் இருக்கும். அவளை குழந்தையாவே பாத்து வளத்திட்டானுங்க. அதான் கோபத்துல அப்டி பேசிட்டானுங்க. மனசுல எதுவும் வெட்சுக்காதிங்க. தப்பா நினைச்சிட்டிங்களோனு உங்ககிட்ட பேச தான் தயங்கி வெளில நிக்கிறாங்க ” என

ஆதர்ஷ் “ஐயோ என்ன அத்தை நீங்க என்று அறையை விட்டு வெளியே வந்தவன் நீங்க யார் பேசுனதையும் நான் தப்பாவே எடுத்துக்கல.  என் சாராவை பாத்துக்க அவ மேல பாசமா இருக்கற உங்கள எப்படி நான் குறை சொல்லுவேன் சொல்லுங்க. விடுங்க சித்தப்பா..” என அனைவரிடமும் அவன் சாதரணமாக பேசி சகஜநிலை வந்த பின் உமா “கையில என்ன தம்பி அது பொம்மை?” என

ஆதர்ஷ் “அது, சாராவுக்கு தான்..” என

பார்வதி “ம்ம்.. உங்ககிட்டேயும் கேட்டு கடைசியா இந்த பொம்மைய கண்டுபுடிச்சிட்டாளா?” என ஆதர்ஷ் புரியாமல் விழிக்க “அதென்னமோ தெரில. இதுல மட்டும் ரொம்ப அடம்..” என கூற

ஆதர்ஷ் “இல்ல நீங்க சொல்றது எனக்கு புரியல இது அவ என்கிட்ட கேட்கல. அவளுக்கு குடுக்க தான் எடுத்தேன். ஆனா அவளுக்கு இந்த பொம்மை பிடிக்குமா?” என கேட்க

அக்ஸாவின் அம்மா “ஆமா ரொம்ப பிடிக்கும். அவ சின்ன புள்ளைல இருக்கும்போது இதேமாதிரி தான் குலதெய்வம் கோவில் விசேஷம்னு எங்களால வேலை இருக்கு விசேஷம் அப்போதான் வரமுடியும்னு சொல்லிட்டு அம்பிகா கூட அவளை முன்னாடியே அனுப்பிச்சு வெச்சுட்டோம்.நாங்க அன்னைக்கு காலைல தான் வந்தோம். கையில இதேமாதிரி ஒரு பொம்மையை வெச்சுக்கிட்டே  சுத்துனா.. அப்புறம் விசேஷம் முடிச்சு கிளம்பும்போது வண்டி ஏறுனதும் ஒரே அழுகை பொம்மையை காணோம்னு. நாங்களும் வேற வாங்கி தந்தும் அழுகை நிக்கவே இல்ல. அது தர்ஷு கொடுத்ததுன்னு சொல்லி சொல்லி அழுதா. தர்ஷுகிட்ட போகணும்னு அழுகை வேற..அப்புறம் ஊருக்கு போயும் அதேமாதிரி பொம்மையை தேடி தேடி பாத்து கிடைக்கவும் இல்ல. அவளுக்கு தர்ஷுனு பேரை தவிர எதுவுமே தெளிவா சொல்ல தெரில..அவளும் அப்புறம் பேரை சொல்றத விட்டுட்டா. மறந்துட்டான்னு விட்டுட்டோம். ஆனா கொஞ்சம் வளந்ததும் மறுபடியும் அந்த மாதிரி ஒரு பொம்மையை வரைஞ்சிட்டு வந்து எனக்கு இந்த பொம்மை ஏனோ ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னா நாங்களும் பொம்மை தானே வாங்கிக்கலாம்னு விட்டுட்டோம். பின்ன மறுபடியும் யாரு அந்த தர்ஷுன்னு கேட்டு அவ முதல இருந்து அவங்களையும் கண்டுபுடிக்க சொன்னா நாம என்ன பண்றதுனு நாங்களும் கண்டுக்காம விட்டுட்டோம். ஆனா காலேஜ் எல்லாம் படிக்கும் போது இதேபொம்மையை அவ அப்டியே வரைஞ்சு அவ பீரோல வெச்சிருப்பா. அவ மனசுல அவ்ளோ ஆழமா பதிஞ்சிருக்கு.. ஆனா அந்த தர்ஷு யாரு நேர்ல திரும்ப பாத்தா அவளுக்கு ஞாபகம் வருமோ என்னவோ கூட சொல்ல தெரில. பேரு பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா அவ பையன்னு சொல்லுவா… ” என ஆதர்ஷ்க்கு எல்லையில்லா மகிழ்ச்சி “அட்ச்சோ அத்தை அது நான்தான்… இந்த பொம்மையை அவளுக்கு கொடுத்ததும் நான்தான்..” என அனைவர்க்கும் இன்னும் ஆச்சரியமாக போக அவர்கள் நம்பாமல் வினவ அம்பிகா, ருத்திரா சொன்ன அனைத்தையும் சொன்னவன் “வேற தர்ஷு பத்தி அவ என்னவெல்லாம் சொல்லுவா?” என கேட்க அவர்களும் தங்களுக்கு தெரிந்தவரை கூற அவன் அவர்களிடமும் இதை பற்றி அவளிடம் கூறவேண்டாமென கூறிவிட்டு  அனைத்தையும் எடுத்துவைத்தவன் நேரே அக்ஸாவிடம் வந்தவன் அவளை மகிழ்ச்சியில்

இறுக அணைத்துக்கொள்ள அவளோ “ஆதவ் என்னாச்சு.. ”

ஆதர்ஷ் “சோ ஹாப்பி டி செல்லம். லவ் யூ சோ மச்..” என்றவன் அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட அவனது மகிழ்ச்சியில் மகிழ்ந்தவள் “ஓகே ஓகே…என்ன என்னாச்சு?” என அவளை விட்டு விலகியவன் “அது அம்மா, ஆண்ட்டி, அத்தை மாமா, சித்தி சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பானு மொத்த சொந்தமும் வீட்ல இருக்கு. எல்லாரும் என்கிட்ட பேசுனாங்க.  காலைல பேசுனத்துக்கு வருத்தப்பட்டாங்க. நம்மள நம்புறாங்க. ஆண்ட்டி ருத்திராகிட்ட பேசுறேன்னு சொல்லிருக்காங்க.” என

அக்ஸா “எல்லாமே சந்தோஷமான விஷயம் தான். ஆனா அதுக்கா சார் இவளோ எக்ஸ்சைட் ஆகுறீங்க?” என அவனை சிரிப்புடன் பார்க்க

ஆதர்ஷ் அவளை கை வளைவில் கொண்டுவந்தவன் “அதுவா… எல்லாமே என் செல்லம் நீ என் லைப்ல வந்ததால தான்னு எல்லாருமே சொன்னாங்க. எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம் வேற. அம்மா ஆண்ட்டி அண்ணி எல்லாரும் உன்னை பத்தி ஒரே புகழ்ச்சி தான். நான் ரொம்ப லக்கினு சொன்னாங்க. என்னவோ தெரில.. இது எல்லாம் எனக்கு தெரிஞ்சாலும் இன்னைக்கு மத்தவங்க சொல்றத கேக்கும்போது முக்கியமா உன்னை பத்தி சொன்னதை கேக்கும்போது என்னால சந்தோசத்தை கண்ட்ரோல் பண்ண முடில. உன்னை பாக்கணும்னு தோணுச்சு.. இங்க இருந்தா கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம். நான் போறேன்” என்றவன் அவள் சிரிக்க மீண்டும் அவளிடம் வந்து அவளது கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து விட்டு சென்றுவிட்டான். அவன் மகிழ்ச்சி இவளை அடுத்து எதையும் யோசிக்கவிடாமல் புன்னகையுடனே வைத்துக்கொண்டது.

அடுத்து அவளது பிறந்தநாளுக்காக ஆதர்ஷ் காத்திருக்க இடையில் திருமண வேலைகளும் நடக்க இவர்கள் திருமணம் முடிந்த ஒரு 2 மாதத்தில் ப்ரியா, வாசு திருமணம் என முடிவானது. ரஞ்சித்தின் நடவடிக்கைகளை பார்த்து அக்ஸா அவனிடம் “என்ன சார், எங்க வீட்டு பொண்ண ஏதோ ரூட் விடுறமாதிரி இருக்கே..” என வம்பிழுக்க

ரஞ்சித் “அக்ஸா, அதுவந்து…உன்கிட்ட நானே சொல்லணும்னு நினச்சேன். எனக்கு சாந்தியை பிடிச்சிருக்கு.. ஆனா அவ தான் புரிஞ்சாலும் புரியத்தமாதிரி விலகி போறா…எனக்கு நீயே ஹெல்ப் பண்ணு ப்ளீஸ் .” என

அக்ஸா அவனை பாவமாக பார்த்தவள் “ஆக்சுவலி, சாந்தி அக்கா தான் என்கிட்ட கூப்பிட்டு உன் ரஞ்சித் அண்ணாகிட்ட சொல்லு.. அவரு ஆசைப்படுறது நடக்காதுன்னு அவருக்கு நீயே எடுத்து சொல்லு.. என்கிட்ட நேத்தே ஹெல்ப் கேட்டாங்க. இப்போ தான் நீ கேக்குற.. யாருக்கு நான் ஹெல்ப் பண்றது?” என ரஞ்சித் தலை கவிழ அமைதியாக இருந்தான்.

பிரியா, ஆதர்ஷ், வாசு அனைவரும் அங்கே வந்தவர்கள் அக்ஸாவிடம் “ஹே பாவம் டி.. சொல்லிடு” என பிரியா கூற வாசு “ஆமா சிஸ்டர், ரஞ்சித் ப்ரோ ஆஹ் இப்டி பாக்கவே கஷ்டமா இருக்கு.. கண்ணீர் விடாத குறையா சோககீதமா கேட்டுட்டு இருக்காரு.. சொல்லிடலாம்.” என அக்ஸா “அப்டி ஒன்னும் எனக்கு தெரிலையே..” என ஆதர்ஷை பார்க்க அவன் இறுதியாக “நீங்க பீல் பண்ணாதீங்க.. அக்ஸா முன்னாடியே என்கிட்ட வீட்ல எல்லார்கிட்டயும் பேசிட்டா.. அண்ணிகிட்டேயும் தான். முதல அண்ணி யோசிச்சாங்க. முடியாதுனு தான் நின்னாங்க.. எல்லாரும் சேத்தி கன்வின்ஸ் பண்ணிட்டோம். இப்போ அண்ணி கொஞ்சம் ஓகே.. இன்னைக்கு வீட்ல எல்லாரும் உங்கள கூப்பிட்டு பேசலாம்னு தான் சொல்லிருக்காங்க. அதான் மேடம் உங்கள காலைலயே வெச்சு செஞ்சிட்டு இருக்கா..” என

அக்ஸா “ஆதவ், இது சீட்டிங்.. ” என முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள

ஆதர்ஷ் “விடுடா.. பாவமா இருந்தது. என்ன இருந்தாலும் என் அண்ணாவாச்சே..” என ரஞ்சித் அவனை பார்க்க “என் அண்ணாவா தான் உங்கள நான் பாக்குறேன். என் அண்ணி பாவம் இதுவரைக்கும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க.. இனிமேல் அவங்க எப்போவும் சந்தோசமா இருக்கனும்.. அவங்கள பத்திரமா சந்தோசமா பாத்துக்கோங்க…” என

ரஞ்சித் அவனை அணைத்து கொண்டு “கண்டிப்பா ஆதர்ஷ், நீ என் மேல வெச்ச நம்பிக்கையை நான் வீணாக்கமாட்டேன்..தேங்க்ஸ்” என

ஆதர்ஷ்ம் அணைத்துக்கொண்டு இருவரும் விலகியதும் ஆதர்ஷ் ரஞ்சித்திடம் அக்ஸாவை காட்ட அவள் இருவரையும் முறைத்துக்கொண்டு “எதுக்கு இப்போ அவன்கிட்ட சொன்னிங்க.. அண்ணா அண்ணானு சுத்தி சுத்தி வந்தேன். என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல..அவனுக்கு நீங்க ஏன் சப்போர்ட் பண்றீங்க.. கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டிருக்கணும்.” என கோபம் கொள்ள ரஞ்சித் “இல்லடா மா, இது சாதாரணமா இருந்திருந்தா நான் உன்கிட்ட தான் முதல சொல்லிட்டு பேசவே சொல்லிருப்பேன். எனக்கு அவ ஏற்கனவே கல்யாணம் ஆகி கணவனை இழந்த பொண்ணுங்கிறது ஒரு குறையாவே தெரியல. ஆனா அத அவ மனசு ஏத்துக்கணும்ல.. ஆனா சாந்தி இருக்கற நிலமைல உடனே என்னை சாதாரணமா ஏத்துக்கோனு சொல்ல முடியாது. எல்லார்கிட்டயும் சொன்னா இப்டியே எவ்ளோ நாள் இருக்கப்போற, குழந்தை இருக்கான் உனக்கு இன்னும் வயசு இருக்கு, துணை வேணும்னு அட்வைஸ் பண்ணி ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ணி வெக்கலாம் ஆனா  அவ யோசிக்கவோ முடிவெடுக்கவோ டைம் குடுக்காம அது திணிக்கற மாதிரி இருக்கும்ல. அதனால தான் நான் அவகிட்ட முதல என் விருப்பத்தை சொன்னேன். நான் முடிவு பண்ணிட்டேன். சாந்தி தான் என் மனைவின்னு .. சஞ்சீவ் தான் எங்க முதல் பையன்.. என்ன அத அவ ஒத்துக்கிட்டா ஊர் முழுக்க சொல்லி ஏத்துக்குவேன். இல்லாட்டி நான் அப்டியே நினச்சு அவ மனசு மாறுறவரைக்கும் வெயிட் பண்ணுவேன். அவ்ளோதான்.. வேற எதுவும் இதுல இல்ல.” என சாதாரணமாக கூற அக்ஸா “யூ சோ ஸ்வீட் அண்ணா..” என்று அவனை அனைத்துக்கொண்டவள் “சாந்தி அக்கா, பாத்திங்களா என் அண்ணாவை அவன் உங்களுக்காக தான் எல்லாமே யோசிச்சிருக்கான். இப்போவது புரியுதா அவன் பெருசா வாழ்க்கை குடுக்கற மாதிரி எல்லாம் நினைக்கமாட்டானு சொன்னா நம்பவே இல்லையே.. இதுக்கு மேல அவன்கிட்டயே நீங்க கேளுங்க” என பின்னால் நின்றிருந்த சாந்தியிடம் கூறிவிட்டு அனைவரும் வெளியே சென்றுவிட “ரஞ்சித், ஓ.. அப்போ உனக்கு அந்த கவலை தானா?”

சாந்தி “அதுவும் தான்..”

ரஞ்சித் “அதுவும் தான்னு சொன்னா? அப்போ இன்னும் என்னவெல்லாம் உன் யோசிச்சிருக்க சொல்லு? இப்போவே பேசி முடிவு பண்ணிடலாம்.”

சாந்தி தயங்கி தயங்கி சொல்ல ரஞ்சித் “நல்லா கேட்டுக்கோ, நான் வாழ்க்கை குடுக்கறதுக்காகவோ, தியாகம் பண்ணவோ எல்லாம் இத பண்ணல. எனக்கு உன்னை உனக்காக மட்டுமே தான் பிடிச்சிருக்கு. உன் குணத்தை பாத்து மட்டும் தான் விரும்பறேன். நீ ஆனந்தோட வாழ்ந்த வாழ்க்கையை மறந்துட்டு என்னை முழுசா ஏத்துக்கோனு நான் கேட்கமாட்டேன். நான் ஆனந்துக்கு பதிலா அந்த இடத்துல வரல. அத நீ நல்லா புரிஞ்சுக்கோ.. எனக்கு பிடிச்ச பொண்ணுகூட அவகிட்ட இருக்கற நிறை குறைகளோட சேந்து குடும்பமா வாழணும்னு ஆசைப்படுறேன் அவ்ளோதான். சஞ்சீவ் உன் குழந்தை இல்ல.. நம்ம குழந்தை எப்போவுமே அது மாறாது. உனக்கு அதுல நம்பிக்கை இல்லாட்டி நமக்கு இவன் மட்டுமே போதும் வேற குழந்தையே வேண்டாம் எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா எனக்கு உன் சம்மதம் முழுசா வேணும்… மத்த எந்த பிரச்சனை பத்தியும் யோசிக்காம என்னை உனக்கு பிடிச்சிருக்கா அத மட்டும் சொல்லு .” என

சாந்தி கண்ணீரோடு தன்னை இத்தனை தூரம் நேசிக்கும் ஒருவன் கிடைக்க மகிழ்வுடன் தலை அசைத்தாள். ஆதர்ஷ் அக்சரா அனைவரும் அவர்களின் மனப்பூர்வமான சம்மதம் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 32ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 32

உனக்கென நான் 32 அன்பரசியின் கைபைசியிலிருந்து கற்றைகள் காற்றில் கடுகி சென்று சந்துருவின் வீட்டை அடைந்தன. அதன் எண்ணம் சந்துரு எங்கே என்று இருக்க சந்துருவின் அறையை தேடின. மிகவும் ஆர்வமுடன் சந்துருவின் கைபேசியை பார்க்க அவனோ வேறு யாருடனோ உரையாடி

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 4’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 4’

காப்பி ஷாப்பில்… “ஒரு எக்ஸ்பிரஸோ” என்று ஆர்டர் செய்தவுடன் சூடான டபுள் ஸ்ட்ராங் கருப்பு டிகாஷனை சிறிய கோப்பையில் கொடுத்தான் பரிஸ்டா. சர்க்கரை இல்லாத அந்த கடுங்காப்பியைப் பருகி தனது மனதின் கசப்பைக் குறைக்க முயன்றாள் காதம்பரி. காலையிலேயே டென்சனில் சரியாக

ராணி மங்கம்மாள் – 11ராணி மங்கம்மாள் – 11

11. உதயத்தில் நேர்ந்த அஸ்தமனம்  சின்ன முத்தம்மாளும், ரங்ககிருஷ்ணனும் அரசியற் கவலைகள் ஏதுமின்றிச் சிறிது நிம்மதியாக வாழ முடிந்தது. எந்தப் பிரச்சனையும் ரங்ககிருஷ்ணனைச் சின்ன முத்தம்மாளிடமிருந்து பிரிக்கவில்லை. கிழவன் சேதுபதியை அவன் வெற்றி கொள்ள முடியாமலே திரும்பியதில்கூட ராணி மங்கம்மாளுக்கு வருத்தம்