Tamil Madhura தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 60

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 60

60 – மனதை மாற்றிவிட்டாய்

காலை எழுந்த திவி ஆதியின் கைக்குள் இருப்பதை கண்டு புன்னகைத்து மீண்டும் அவனிடம் நெருங்கி படுத்துக்கொள்ள ஒரு சில நிமிடம் கழித்து எழுந்தவள் மணியை பார்த்து ‘அட்ச்சோ இவன்கூட இருந்தா எல்லாமே மறந்திடறேன். வேலை இருக்கு…என்னை இப்படி சொகமா தூங்கவெச்சே பழக்கிடறான்…கொஞ்சம் நாள்ல முழுசா சோம்பேறியாக போறேன். அப்புறம் இவன் தான் எல்லா வேலையும் செய்யனும்’ என மெத்தையை விட்டு இறங்கி குளிக்க சென்றவள் மீண்டும் வேகமா உறங்கிக்கொண்டிருந்தவனிடம் வந்து அவனது நெற்றியில் இதழ் பதித்து ‘பட் எனக்கு இதுவும் புடிச்சிருக்கு.’ என ஓடிவிட்டாள்.

எப்போவும் போல காலை வேலைகளை அனைவரும் பார்க்க இவள் நடுவே சென்று அவனுக்கு வேண்டியதையும் கவனித்துவிட்டு வந்தாள். திவியும் என்னை திட்டுணேல உனக்கு ஏன் செய்யணும்.. வேணும்னா நீயா கேளு என இருக்கவில்லை. நேத்து என்கிட்ட சண்டை போடேல்ல. நீ ஒன்னும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம் என ஆதியும் தடுக்கவில்லை. அந்த நேரம் அர்ஜுன் வர கதவை தட்டி விட்டு உள்ளே வர ஆதி அவனை கண்டு புன்னகைக்க அர்ஜுன் “திவி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான். ஆதிக்கும் ரொம்ப பன்றான். என நினைத்து முகத்தை திருப்பி கொண்டான்.

திவி “எமெர்ஜென்சியா அண்ணா, ஒரு 5 மின்ஸ் என”

அர்ஜுனும் “நோ ப்ரோப்லேம் டா. நீ வேலை முடிச்சிட்டு சொல்லு”

திவியும் சிரித்துவிட்டு ஆதிக்கு வாட்ச், மொபைல், டை என அனைத்தும் எடுத்து கொடுக்க ஆதியே “அதான் எடுத்துவெச்சுடேயே? நீ போம்மா. உன் பாசமலர் பேச வெயிட் பன்றான். என அர்ஜுனை பார்த்துக்கொண்டே சொன்ன விதத்தில் அர்ஜுனும், திவியும் மெலிதாக சிரித்துக்கொள்ள அதை கண்டவன் “போதும், இரண்டு பேரும் சிரிச்சது. திவி எனக்கு ஆபீஸ் ல கிளைண்ட் மீட்டிங் இருக்கு. சாப்பிட டைம் இல்லை. நான் கிளம்புறேன். மதியம் முடிஞ்சா வரேன். இல்ல வெளில சாப்பிட்டுக்கறேன். என்னனு அப்போ சொல்றேன். என கூற இவளும் “சரி ஓகே பாத்து அவசரமில்லாம போயிடு வாங்க. நான் அர்ஜுன் அண்ணாகிட்ட டிபன் குடுத்துவிடறேன்” என அவளும் கூற இவனும் சிரிக்க இவர்களின் இந்த இணக்கம் கண்ட அர்ஜுனுக்கு ஏனோ மனம் லேசானது.

ஆதி அர்ஜுனிடம் திரும்பி “டேய் சீக்கிரம் பேசிட்டு ஆபீஸ் வந்து சேரு.. இரண்டுபேரும் பாசத்துல மூழ்கிடாதிங்க. ” என

அர்ஜுன் “உனக்கு தான் டா கால். எனக்கில்லை. சைட் வேலை தான். வருவேன் போ. ” என அவனும் முகத்தை திருப்பிக்கொள்ள இவனுக்கு சிரிப்பு வந்தது. திவியிடம் “நான் என் மேல தப்ப வெச்சுகிட்டு திட்டுனா கூட என்கிட்ட வந்து பேசுறவன் இன்னைக்கு உனக்காக சண்டை போட்டுட்டு என்கிட்ட மூஞ்சை தூக்கிட்டு இருக்கான் பாரேன். ஒரிஜினல் அண்ணனாவே மாறிட்டான்ல ” என அவன் குறையாக ஆனால் மகிழ்வுடன் கூற இவளும் “கண்ணுவெக்காதிங்க கிளம்புங்க” என சிரித்துக்கொண்டே அனுப்பிவைத்தாள்.

ஆதி சென்ற பின் அர்ஜுனும், திவியும் பால்கனிக்கு சென்றனர். அர்ஜுன் விசாரித்தான். “நேத்து போன் பேச பேசவே என்ன அப்படி கோபம் அவன்கிட்ட சண்டை போட்டியா? ”

“பின்ன கோபம் வராம அவர் எப்படி அண்ணா உங்கள உங்க பிரண்ட்ஸிப் ஆஹ் மறந்துட்டு அப்டி கேட்கலாம்?” என்றவள் நேத்து நடந்து விவாதம் அனைத்தையும் கூறி முடித்தாள்.

‘பெருமூச்சுடன் அர்ஜுனும் ஒரு சத்தியத்தை பண்ணிட்டு நீ பண்ணிவெச்சுருக்கற பிரச்சனை இருக்கே. … இதுல அன்னைக்கே “அண்ணா இதெலாம் ஆதி பேமிலி, எங்க பேமிலி யார்கிட்டேயும் நீங்களும் சொல்லக்கூடாது வீனா எல்லாரும் சங்கடப்படுவாங்க. நாம ஆதிகிட்ட மட்டும் சொல்லிக்கலாம்..

சரி நான் யார்கிட்டேயும் சொல்லலேனு சொல்லியும் உங்கள பாத்தா நம்பமுடில அண்ணான்னு என் மேல ப்ரோமிஸ் பண்ணுங்க, சத்தியத்தை மீறினா பொய் ப்ரோமிஸ் பண்ணா அப்புறம் எனக்கு ஏதாவது ஆய்டும்னு சொல்லி பிளாக் மைல் பண்ணி சத்தியம் வாங்கி என்னையும் இப்படி யார்கிட்டையும் சொல்லமுடியாம பனிவெச்சிருக்கற…உன்னை நம்பி நானும் சத்தியம் பண்ணேன் பாரு. என்னை சொல்லணும் ” என அவன் சலித்துக்கொள்ள

இவள் “என்ன அண்ணா அப்போ நீங்களும் என்னை நம்பக்கூடாதுனு சொல்றிங்களா? ” என பாவமாக கேட்க “திவி விளையாடாத, இப்டி பாவமா முகத்தை வெச்சே எல்லா சேட்டையும் பன்னிடு. இதுல நம்பமாட்டீங்களா அண்ணா னு கேள்வி வேற. எல்லாரும் உன்மேல கோபமா இருக்காங்க. தப்பா நினைக்கறாங்களேன்னு நானே என்ன பண்றதுன்னு புரியாம இருக்கேன் இதுல இப்போதான் இந்த ஆதி வேற இம்ச பன்றான். நீ சொன்ன மாதிரி அவன் அரைலூசு தான் ” அவன் ஆதங்கமாக கூற

முகத்தை சுருக்கி “அண்ணா, ப்ளீஸ் ஆதியை திட்டாதீங்க. அவரு ரொம்ப ஸ்வீட். ரொம்ப லவ். இப்போகூட காராணமே தெரியாட்டியும் அவரு என்னை நம்பலேனு சொல்லல. எனக்காக தானே யோசிக்கறாரு. நான் அவருக்கு நிக் நேம் தான் வெச்சேன். பட் நீங்க எப்படி அதை திட்ட யூஸ் பண்ணலாம் ” என அவள் செயலில் வாய்விட்டு சிரித்தவன் “புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இதுல நல்லா பொருந்தும் போ. உங்களுக்காக அவன்கிட்ட பேச போனா அவன் திட்றான். உன்கிட்ட பேசும்போது நீயும் திட்ற. எப்பிடியோ சந்தோசமா இருந்தா சரி…அதெலாம் இருக்கட்டும். அவன்கிட்டேயும் சொல்லாம எப்படி இந்த பிரச்சனைய சமாளிக்கிறது”

அர்ஜுனை தேடி கொண்டு அங்கு அம்மு வர திவி “மொதல்ல வீட்ல அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்து உங்களுக்கும் அம்முவுக்கும் கல்யாணம் பண்ண எல்லா ஏற்படும் பண்ணலாம். எல்லாரும் இந்த பிரச்னையை கொஞ்சம் விட்டுட்டு கல்யாண வேலை விசேஷம்னு கொஞ்சம் மாறுவங்க. அதுக்குள்ள எப்படியாவது எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா கரெக்ட் பண்ணி என்மேல இருக்கற கோபம் கொஞ்சம் குறையமாதிரி முடிஞ்சா பழையமாதிரி என்கிட்ட க்ளோஸ் ஆஹ் பேசுறமாதிரி பண்ணிட்றேன். எல்லாரும் என்கிட்ட கொஞ்சம் நல்லபடியா பேசிட்டாலே ஆதி கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேப்பாரு. அப்போ அவருகிட்ட நான் சொத்து விஷயமா பேசுன எல்லாத்தையும் சொல்றேன். கண்டிப்பா அவரு அதுக்கப்புறம் எல்லாரையும் சமாளிச்சுப்பாரு. திஸ் ஸ் தி பிளான் ஓகே வா? ”

அர்ஜுன் “நீ சொல்றத தான் கேட்டாகணும்..வேற வழி. என்னதான் முழுசா லாக் பண்ணி வெச்சுயிருக்கியே? நல்லா பிளாக் மைல் பண்ண இப்டி பிளான் போட மட்டும் தெரிஞ்சுவெச்சுயிருக்க” என அவன் முகத்தை கோபமாக வைத்துக்கொள்ள அவளும் சிரித்துக்கொண்டே இருவரும் கீழே வந்தனர்.

அம்முவுக்கு “அர்ஜுனை இவ எதுல பிளாக் மைல் பன்னிருப்பா. அவரு ஏன் இவ சொல்றத கேக்கறாரு என அர்ஜுன் மேல் சந்தேகம் இல்லை எனினும் திவியின் இப்போதைய பேச்சு செயல் எல்லாத்துக்கும் வேற அர்த்தம் பார்க்கும் மனநிலையில் இருந்ததால் இதையும் தவறாகவே புரிந்துகொண்டாள். ஆனால் அவள் யாரிடமும் இதை சொல்லி பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என விட்டுவிட்டு அவளுக்குளேயே குழம்பிக்கொள்ள ஆரம்பித்தாள்.

பின் அவரவர் தங்களது வேலையில் மூழ்கிவிட, மாலையில் அர்ஜுன் அம்மா, அப்பாவுடன் வர கல்யாண தேதியை குறிச்சிடலாம்ணு கேக்க மகிழ்வுடன் அனைவரும் இருக்க மல்லிகா அனுவை அழைத்து திவியின் வீட்டு ஆளுங்களையும் அழைத்துக்கொண்டு வர சொல்ல அவர்களும் வந்த பின் ஏனோ அனைவரும் ஒன்றாக மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் யாரும் திவியை கண்டுகொள்ளவே இல்லை. ஆதிக்கும் அது சற்று மன வருத்தமாகவே இருந்தது. தெளிவாக ஆதி, திவி கல்யாணம் பற்றி மட்டும் பேசுவதை தவிர்த்து மற்றதை பேசியது நல்லதே என தோன்றியது திவிக்கு. அந்த நேரம் வந்த ஈஸ்வரி திவி ஜூஸ் எடுத்து வருவதை பார்து எப்போவும் மேல பழையதை கிளறி பேச்சை ஆரம்பிக்க இந்த முறை

மல்லிகாவே “பாருங்க, இதுல வருத்தப்பட எதுவும் இல்லை. ஆதிக்கு திவிக்கும் முன்னாடியே பேசி வெச்சதுதானே. யாரும் இல்லாம கல்யாணம் பண்ணாலும் இப்போ என்ன? வாழப்போறது அவங்க இரண்டு பேரும். நாம திரும்ப திரும்ப பேசுறதால ஏதாவது மாறப்போகுதா என்ன. திவி சொத்துக்காக பழகுன்னா இதுவரைக்கும் அவளால எதுவும் பிரச்சனை வரல. இதுக்கும் மேலையும் வராதுன்னு நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அவ நல்லவைதான் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அந்த மாதிரி பேசிருப்பான்னு நிரூபிக்காதது மாதிரியே அவ மேல இருக்கற பழி நிரூபிக்கல..அதனால சும்மா அவளை வெச்சு குறை சொல்றது நிறுத்திடுங்க. அதுவுமில்லாம இது என் பையனோட கல்யாணத்துக்காக பேசுற விஷயம். .இதுல தேவையில்லாம பேசி எல்லாரும் சண்டை போட்டுக்கறதா நானும் விரும்பமாட்டேன். அன்னைக்கு சொன்னதே தான். திவியும் எனக்கு பொண்ணு மாதிரி தான். அர்ஜூன்க்கு தங்கச்சிய இருந்து எல்லாமே அவ தான் செய்யப்போறா. இதுதான் எங்க முடிவு. இதேமாதிரி அவளை ஒண்ணுனுக்கும் குறை சொல்லிட்டு இருக்கிறத நாங்க விரும்பல… அர்ஜூனும் தான். எல்லாருக்கும் புரியும்னு நினைக்கிறேன். ஆதியோட மனைவியை நீங்க எப்படி பாப்பிங்க நடத்துவீங்கன்னு நான் கேட்கமாட்டேன். ஆனா என் பொண்ண என் பையனோட கல்யாணத்துல இப்டி தான் நடத்தணும் அவளுக்கு ஒரு இடம் வேணும்னு நான் எதிர்க்கலாம் தானே அதுல தப்பிருக்கா சம்பந்தி? என நேருக்கு நேர் கேட்கவும் சேகரும், மதியும் எதுவும் கூறும் வழியற்று “இல்லை சம்பந்தி. கண்டிப்பா இல்ல. உங்க பொண்ண இந்த கல்யாணத்துல எந்த குறையும் இல்லாம நடத்துவோம். ” என சேகர் கூற மல்லிகா “ரொம்ப சந்தோசம், திவி எல்லாருக்கும் ஜூஸ் குடும்மா…” என அனைவரும் எதுவும் கூறாமல் எடுத்துக்கொண்டனர். மல்லிகாவிடம் வர “தேங்க்ஸ் மா.” என்றாள்.

அவள் தலையை வருடிவிட்டு “எல்லாமே நல்லதா நடக்கும் டா ” என்றார்.

பின் அனைவரும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் வைக்க நாள் குறிக்கப்பட்டது. பின் அனைவரும் கிளம்பும் போது திவியை அழைத்த மல்லிகா “அர்ஜுன் எல்லாத்தையும் சொன்னான் மா..உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும். ” அவள் அர்ஜுனை வேகமாக பார்க்க மல்லிகா சிரித்துவிட்டு “அவனும் சத்தியம் பண்ணத மீறலை. உங்க வீட்லயும், ஆதி வீட்லயும் தான் யார்கிட்டேயும் சொல்லக்கூடாது சொல்லிருக்க… என்கிட்ட இல்லேல்ல?” எனவும் திவியும் சிரித்துவிட்டாள். “அர்ஜுனும் ரொம்ப வருத்தப்பட்டான். அதான் கேட்டதும் வெச்சுக்கமுடியாம எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்.”

என்று அவர்களும் பேசிவிட்டு கிளம்பிவிட அனைவரும் சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றனர்.

அறைக்கு வந்த திவி மிகவும் மகிழ்ச்சியுடன் ஆதியிடம் வந்து அவன் லேப்டாப் பார்த்துக்கொண்டிருக்க “என்னை பண்றீங்க ஆதி, இனிமேல் கல்யாண வேலை எல்லாம் இருக்கு. ஒழுங்கா சாப்பிட்டு தூங்கி அந்த வேலைய பாக்கணும். இன்னும் இதோட உக்காந்திட்டு இருக்கீங்க.” என அவனும் அதை எடுத்து ஓரங்கட்டி வைத்துவிட்டு சிரித்துக்கொண்டே இவளை பார்க்க இவளோ “அர்ஜுன் அம்மு கல்யாணம் பற்றி பட்டியலிட்டு விட்டு நாளைல இருந்து நெறைய வேலை இருக்கும். எல்லாரும் நல்லா என்ஜோய் பண்ணனும். எதுவுமே குறையே சொல்லக்கூடாது. நம்ம கல்யாணத்துல அவங்களுக்கு கிடைக்காத சந்தோசம் இதுல கிடைக்கணும்.” என அவள் உணர்ச்சி வேகத்தில் சொல்ல பின்பே ஆதியை பார்க்க அவனும் அமைதியாக இருக்க இவளுக்கும் கஷ்டமாக இருந்தது. பின் எதுவும் கூறாமல் தூங்கலாமா ஆதி, காலைல சீக்கிரம் எந்திரிக்கணும். என சரி என்று இருவரும் படுத்தனர்.

ஆதிக்கு “இவளும் தான் எங்க கல்யாணத்தை எவ்வளோ எதிர்பார்த்திருப்பா. எதுவுமே நடக்காம போயிடிச்சே…. இப்போவாரைக்கும் அத பத்தி என்கிட்ட குறையவே சொல்லவேயில்லை. அன்னைக்கும் கூட மத்தவங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு சொன்னா அதுவும் அவங்க எல்லாம் தப்பா புரிஞ்சுகிட்டு திட்டுனதால. ஆனா என் தியாவுக்கு அவ கல்யாணத்தை பத்தின கனவை நானே அழுச்சிட்டேனே.” என நினைக்க நினைக்க அவனுக்கு வேதனையாக இருந்தது.

திவிக்கோ ” ச்சா. ..ஒரு வேகத்துல சொல்லிட்டேன். .பாவம் அவரு பீல் பன்னிருப்பாரே. . அவரை கஷ்டப்படுத்த எல்லாம் சொல்லல.. இருந்தாலும் ஒரு வார்த்தை கூட அவரு ஏன்னு கேட்கல.” என இருவரும் பிறருக்காக யோசித்துக்கொண்டே திரும்பி பார்க்க இருவரும் பார்வையில் எதை உணர்ந்தரோ என்னவோ எதுவும் கூறாமல் அமைதியாக அவன் கையை விரிக்க இவளும் அதற்குள் அடக்கிவிட இதுவே போதுமென தோன்ற அப்படியே அணைத்துக்கொண்டே உறங்கிவிட்டனர்.

கல்யாண வேலைகளில் அனைவரும் மும்பரமாக இருக்க பாட்டி திவியை அழைத்து “ஏண்டி மா, என் மருமக என்ன இப்படி அமைதியா நடமாட்றா? வீட்ல அதிகம் இருக்கிறதே இல்லை? அவ வாய் சும்மா இருக்காதே? என்னாச்சு அவளுக்கு உன்னை பாத்தா வேற பக்கமா வேற போய்டுறா? நீ ஏதாவது அவகிட்ட பேசுனா? ” திவி சிரித்துக்கொண்டே “அதுவா பாட்டி அன்னைக்கு ஒரு நாள் ஒரு விஷயம் சொன்னேன்…” என நடந்ததை கூறினாள்.

ஈஸ்வரி அவ்வப்போது ஏதேனும் பேச, சங்கடப்படுத்த என இருக்க திவி தனியாக ஈஸ்வரி இருக்கும் போது அவரிடம் “ஆண்ட்டி, நீங்க தேவையில்லாம ரொம்ப பேசுறீங்க. நான் மத்தவங்க பாவமே சங்கடப்படறாங்களேன்னு பாக்கிறேன். பிரச்சனை வேணாம்னு பாத்தா நீங்க எல்லாரையும் குழப்ப பாக்கறீங்க. இதோட நிறுத்திக்கோங்க, அம்மு கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை பண்ணணுன்னு நினைச்சீங்க …”

“என்ன டி பண்ணுவ? பெரிய இவளா நீ. ..போ போயி எல்லார்கிட்டேயும் சொல்லு. யாரு வேண்டமானது. உன்னை யாரு நம்புறாங்கனு நான் பாக்கிறேன். உனக்கே உன் நிலைமை மறந்தடிச்சா.” என ஏளனமாக கேட்க

“கண்டிப்பா இல்ல ஆண்ட்டி… என்னை பத்தி நீங்க தான் மறந்துட்டீங்கனு நினைக்கிறேன். நான் உங்ககிட்ட கெஞ்சிட்டு இருப்பேன்னு நினைக்கிறிங்களா? இல்ல மத்தவங்ககிட்ட சொல்லி நான் திட்டுவாங்குவேன்னு நினைக்கிறிங்களா? நோ வே. உங்களுக்கு வேணும்கிறதா நானே பாத்து பாத்து செய்வேன். ..நீங்க சாப்பிடற சாப்பாட்ல ஏதாவது கலந்து கொடுத்துடுவேன். ”

ஈஸ்வரி “என்ன? என அதிர்ச்சியாகி என்ன கலந்து கொடுப்ப? அப்டின்னாலும் எனக்கு ஏதாவது ஆச்சுன்ன எல்லாரும் உன்ன கேப்பாங்க. .என்ன என்னை மிரட்டரியா? ”

அவளும் சிரித்துவிட்டு “என்ன ஆண்ட்டி இதுகூடவ நான் யோசிக்கமாட்டேன். எத கலந்து குடுப்பேன்னா. …லைட்டா தொல்லை பண்ணா தூக்க மாத்திரை இல்ல மயக்கமருந்து ஒன்னு குடுத்துடுவேன். ரொம்ப தொல்லை பண்ணா ஸ்லொ பாய்சன் தான். அதுவும் கொஞ்சம் கொஞ்சமா தான் ஏறும்….. சட்டுனு ஒண்ணுமே ஆகாது. ஆனா எல்லா பிரச்சனையும் உடம்புல வந்திடுமாம். …சாப்பிடாமலே எவ்ளோ நாள் இருப்பீங்க சொல்லுங்க. இத யார்கிட்ட சொன்னாலும் உங்கள தான் ஏதாவது சொல்லுவாங்க. ஏன்னா நான் எப்போ உங்களுக்கு கொடுக்கறேன் எதுல கலந்து குடுக்கறேன்னு உங்களுக்கு தெரியாது. மத்தவங்ககிட்ட என்னனு சொல்லுவீங்கன்னு சொல்லுங்க…” என மேலும் குழம்பிப்போனாள். “கொஞ்ச கொஞ்சமா தான் விஷம் ஏறும்க்ராதாலா யாருக்கும் டவுட்டும் வராது. அதையும் மீறி எப்போவது கண்டுபுடிச்சு கேஸ் ஆச்சுன்னா என் பிரண்ட் போலீஸ் ல இருக்கான். அவனை வெச்சு தப்பிச்சிடலாம். டாக்டர்லையும் ஒருத்தி இருக்கா. சோ ரிபோர்டும் மாத்தி குடுக்க வெச்சடலாம். ஆனா இவ்வளவும் பண்ணணுமான்னு பாக்கிறேன். பாவம் மூணு புள்ளைங்க வெச்சு யாரு கல்யாணத்தை கூட முழுசா பாக்கல. யோசிங்க. இதுக்கு மேல எல்லாரையும் குழப்பணுமா? பிரச்சனை பண்ணணுமான்னு. ”

திவி பாட்டியிடம் இதை கூறி முடிக்க பாட்டியும் உடன் சிரித்துவிட்டு “அதனால தான் கொஞ்சம் பயந்தமாதிரியே சுத்தறாளா என் மருமக. ”

திவி “அது மட்டுமில்ல பாட்டி சாதாரணமாக ஏதாவது குடுத்தாலும் வாங்கி சாப்பிடறதில்லை . முடிந்தளவுக்கு வீட்டில் சாப்பட்றதையே விட்டிட்டு சோபியை நச்சரித்து வெளியே போய்டுறாங்க..”

பாட்டியும் “நல்லவேளை மா அவ இருந்தா ஏதாவது நோட்டம்விட்டுட்டே எல்லாரையும் குறை சொல்லிட்டே பிரச்சனை பண்ணிட்டே இருப்பா…. நிம்மதியா மத்தவங்களாவது வேலை செய்வாங்க.” எனவும் இவளும் சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டாள்.

மிகவும் குறிகிய காலம் என்பதால் அனைவரும் திருமண வேலையில் மூழ்கிவிட யாருக்கும் திவி ஆதி பிரச்சனை பற்றி பேச நேரமும் இல்லை. திரும்ப அதை பற்றி பேசி சங்கடப்பட விருப்பமும் இல்லை. திருமணத்திற்கு இரு தினங்கள் முன்பு நெருங்கிய உறவினர்கள் மூத்தவர்கள் என அனைவரும் வீட்டிற்கு வர சிறிது நேரத்தில் ஆதியின் அவசர திருமணம் பற்றி சலசலப்பு ஏற்பட்டது. சிலருக்கு மட்டும் திவியை பக்கத்து வீட்டு பெண் என தெரியும்…

அம்மு, அனு பதட்டமாக சமையல் அறையினுள் வர மதி, பாட்டி அனைவரும் விசாரிக்க “அம்மா, ராஜேஸ்வரி அத்தை வந்திருக்காங்க. மத்தவங்க எல்லாம் பேசுனத வெச்சு ஆதி அண்ணா கல்யாணம் சொல்லாம பண்ணிட்டோம்னு கொஞ்சம் கோபமா இருகாங்க எனவும் மதியும் அவங்களா என தயங்க பாட்டியோ “எதுக்கு இவளோ பதட்டம்? ”

மதி “என்னமா நீங்களும் புரியாம பேசுறீங்க. அவங்க குணம் உங்களுக்கு தெரியாதா?”

கொஞ்சம் யோசித்த பாட்டி அங்கே கவனித்துக்கொண்டிருந்த திவியை அழைத்து “இப்போ கூப்பிடறது உன் மாமனாரோட பெரியப்பா பொண்ணு.. ஆதிக்கு பெரிய அத்தை அவங்க தான். மொத்த குடும்பத்துக்கும் மூத்த பொண்ணு. ரொம்ப மரியாதையை எதிர்பார்ப்பாங்க. எல்லாத்துலயும் ரொம்ப கரெக்ட்டா இருக்கனும். எந்த அளவுக்கு நல்லவங்களோ அந்த அளவுக்கு அதிகாரமும் ஆளுமையும் இருக்கும். நல்லவங்க தான். ஆனா அவங்களுக்கு ஒருத்தர பிடிக்கலன்னா மாத்துறது ரொம்ப கஷ்டம். எல்லாரையும் ரொம்ப சரியா கணிச்சிடுவாங்க. அவங்களுக்கு குழந்தைங்க இல்ல. அவங்க அப்பா இறந்த பிறகு அவங்க புருஷனுக்கும் சோகமில்லாம போனதால எல்லா பொறுப்பும் இவங்க தான் எடுத்து நடத்துனாங்க. கொஞ்சம் கூட தைரியம் இழக்கல. அதுக்கப்புறம் எந்த விசேசத்துக்கும் அதிகமா போகமாட்டாங்க. ஆனா அவங்களுக்கும் ஆதின்னா ரொம்ப பிரியம். அவனுக்கும் தான். அவன் கல்யாணம் சொல்லாம பண்ணதுல அவங்களுக்கு வருத்தம் மட்டுமில்ல கோபமும் இருக்கும். இப்போ வந்திருக்கறவங்க யாருக்கும் நிச்சயம் அன்னைக்கு நடந்த பிரச்சனை தெரியாது. முக்கியமா கல்யாணம் எப்படி நடந்ததுன்னு சொன்னா பிரச்சனை தான் பெருசாகும். அவங்க உன்னை ஏத்துக்கிட்டா போதும் வேற யாரும் உன்னை ஒரு வார்த்தை பேசமாட்டாங்க. ” என முடித்துவிட்டு அவளை பார்க்க

திவி ஒரு முடிவுக்கு வந்தவளாக “அவர்களிடம் சில விஷயம் கூறிவிட்டு தானே அவர்களுக்கு ஜூஸ் எடுத்து செல்கிறேன்” என சென்றாள். மற்றவர்களுக்கு எப்படியோ பாட்டிக்கு சிறிது நம்பிக்கை பிறந்தது. அவளுடன் பின்னாடியே சென்றனர்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 7வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 7

குறுக்கு சிறுத்தவளே  பாகம் ஏழு  “இப்போ நான் என்ன கேட்டேன்! ஒரு ஆறு மாசம் ஜிம்முக்கு போனா வெயிட் குறைஞ்சிடுவேன். அதுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா என்னவாம்! அதுக்கு பெறுமானம் இல்லாதவளா ஆகிட்டேனா?”, காலை கண் விழித்ததில் இருந்து அந்த அரை

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08

அத்தியாயம் – 08   அன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் வடமராட்சி வலய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவர் இரண்டு போட்டிகளில் பங்குபெற முடியும். வைஷாலி வழக்கம் போல நடனத்திற்கும் முதல் தடவையாகப் பேச்சுப் போட்டியில் கலந்து

ராணி மங்கம்மாள் – 5ராணி மங்கம்மாள் – 5

5. பக்கத்து வீட்டுப் பகைமை கட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரிய நிறமும் கொண்ட மறவர்சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான்.   மின்னலைப் போல் சரேலேன்று உள்ளே நுழைந்த அவன், “மறவர் நாட்டு