Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 46

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 46

46 – மனதை மாற்றிவிட்டாய்

யாரிடமும் எதுவும் கூறாமல் மீண்டும் அமைதியாக அறைக்கு வந்து அமர்ந்தாள். ஆதியும் அவளை தொந்தரவு செய்யவில்லை. மதிய வேளை தாண்டியும் அவள் அதே இடத்தில இருக்க ஆதி அவளிடம் வந்து சாப்பிட சொல்லி தட்டை நீட்டினான்.


எனக்கு வேண்டாம். தயவு செஞ்சு கொஞ்ச நேரம் தனியா விடுங்க

இங்க பாரு, எவ்ளோ நேரம் இப்டியே இருப்ப. விடு எல்லாரும் கோபத்துல பேசுறாங்க. கொஞ்ச நாள் போகட்டும்சரி ஆய்டும்.”

இதேதானே நானும் உங்ககிட்ட சொன்னேன். கோபத்துல முடிவெடுக்கிறிங்க ஆதி, கொஞ்ச நாள் போகட்டும். யாருக்கும் தெரியாம இப்பிடி கல்யாணம் வேண்டாம்னு கெஞ்சுனேன்ல. நீங்க கேட்டீங்களா? “

புரிஞ்சுக்காம பேசாத, அது வேற, இது வேற. மொதல்ல நீ சாப்பிடு. எல்லாம் சரி ஆய்டும்.” என மீண்டும் சொல்ல இவளுக்கு கோபம் வர

என்ன சரி ஆய்டும். என்ன தெரியும் உங்களுக்கு, மத்தவங்கள பத்தி யோசிச்சீங்களா? உங்களுக்கு உங்க பிடிவாதம் தான் பெருசில்ல. …அந்த வீடியோ பாத்தப்புறமும் கூட நான்தான் அப்டி பேசுனேன்னு சொன்னதால கோபத்துல அன்னைக்கு திட்டினாலும் எல்லாரும் என் மேல கொஞ்சமாவது நம்பிக்கையோட தான் இருந்திருக்காங்க. ஆனா இப்போ இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னதால இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் போச்சு…..அவங்க என் மேல வெச்சிருந்த பாசம், நம்பிக்கை எல்லாமே மொத்தமா போச்சு. இப்போ உங்களுக்கு சந்தோசமா? எப்படி இதெல்லாம் சரி ஆகும்னு சொல்ரீங்க?”


போதும் நிறுத்து டி. நம்பிக்கை போச்சு, பாசம் போச்சுன்னா, அதுக்கு யாரு காரணம்? நீதானே. பணம் தான் முக்கியம், சொத்துக்காக தான் பழகுன்னேனு சொன்ன நீதானே இது எல்லாத்துக்கும் ஆரம்பமே. அடுத்தவங்களை பத்தி யோசிச்சீங்களான்னு கேக்கிறியா? நீ அவ்ளோ கரெக்டானவளா இருந்திருந்திருந்தா இப்பிடி பணத்துக்காக இத்தனை பேரோட பாசத்துல விளையாடிருக்கமாட்ட. அந்த மாதிரி பேசிருக்கமாட்ட. “


அப்படி நான் பேசுனது பிரச்னையில்லை. உங்ககிட்ட அதுக்கான காரணத்தை சொல்றேன் அப்புறம் முடிவெடுங்கன்னு சொன்னேன்ல, கெஞ்சுனேன்லஅப்போவே கேட்டுஇருக்கலாம்ல. இன்னைக்கும் யாரோட விரும்பமும் இல்லாம தான் கல்யாணம் பன்னிருக்கிங்க. யாருக்கும் நீங்க பதில் சொல்லல. இதுதான் என் முடிவுன்னு நேருக்கு நேர் நின்னு சொல்றிங்கள்ல? அதேமாதிரி அவ சொல்ற காரணத்தை நான் கேட்டுட்டு முடிவு பன்றேன்னு சொல்லிருந்தா இவ்ளோ பிரச்னை வந்திருக்காதே.”


. … அந்த ரீசன நான் கேட்காததால தான் இவ்ளோ பிரச்னைனு சொல்ற. சரி, அப்டி என்ன கரணம் இப்போ சொல்லு. ” என அவன் கேட்ட விதத்தில் இருந்தது கேலியா? ஏளனமா? இல்லை அலட்சியமா என திவியால் புரிந்துகொள்ள முடியவில்லை. “

அன்னைக்கு பிரச்னை நடந்த அப்போவே கேட்டு இருக்கலாம். அடலீஸ்ட் அதுக்கப்புறமாவது கேட்டுஇருக்கலாம். எதுவுமே பண்ணாம எல்லா பிரச்சனையும் இப்போ நடந்து எதுவும் மாத்த முடியாதுனு நிலைமை வந்த அப்புறமா நீங்க எதுக்கு ஆதி காரணம் கேக்கறீங்க? எது நடக்கூடாதுனு நினைச்சேனோ அது எல்லாமே நடந்திடிச்சு இப்போ நீங்க கேட்டும் எந்த யூஸும் இல்ல.

அதுவும் உங்களோட இந்த பார்வை ஏதோ சமாளிக்க சொல்றா. சரி சொல்லிட்டு போங்கர மாதிரி நீங்க குடுக்கற ரியாக்ஷனே தெரியுது. நீங்க முழுசா அத தெரிஞ்சுக்க கேக்கல. எப்டியு இதுவும் பொய் தான்னு ஒரு அலட்சியம்ல.” என வெளிவந்த கோபத்தை தள்ளிவிட்டுஎன்ன நம்பாதவங்க யாருக்கும் நான் பதில் சொல்லல. விடுங்க நான் உங்ககிட்ட இனி எந்த விளக்கமும் சொல்லமாட்டேன் ஆதி… “ஆனா கடைசிவரைக்கும் நான் அப்டி பேசுனத்துக்கான காரணம் உங்களுக்கு தெரியாமலே இருக்கட்டும்னு தான் நான் வேண்டிக்கறேன். . “என்று கூறிவிட்டு பால்கனிக்கு சென்றுவிட்டாள்.

வெகு நேரம் இருவரும் தனி தனியே தங்களின் சிந்தையில் குமுறிக்கொண்டு இருந்தனர்.

ஆதியும் அவளிடம் பொறுமையாக பேசவேண்டுமெனவே எண்ணினான். ஆனால் நான் இப்போ கஷ்டப்படறேன், உங்களுக்கு சந்தோசமா? என கேட்டது எல்லா பிரச்சனைக்கும் தானே காரணம் என கூறியது, எல்லாம் அவனை இப்டி பேசவைத்தது. அவ அந்த மாதிரி சொத்து பணம் முக்கியம்னு பேசாம இருந்திருந்தா இன்னைக்கு என் தியாவோட நான் சந்தோசமா இருந்திருப்பேன். எல்லாமே ஒன்னுமில்லாம போனது அவளால தானே. அதுக்கு என்ன காரணமா வேணாலும் இருக்கலாம். ஆனா என் தியவ என்கிட்ட இருந்து பிரிச்சு எதுவும் எனக்கு பிடிக்கல. உன்ன தப்பா காட்டுன எந்த சூழ்நிலையும் எனக்கு பிடிக்கல தியா. எனக்கு வேண்டாம். அந்த காரணம் நான் தெரிஞ்சுக்க விரும்பல. கடைசிவரைக்கும் சொல்லாத.” என ஆதி அறையில் அடைந்து புலம்பிக்கொண்டு இருக்க


வெளியில் திவிநீங்க என்ன நம்பலேல ஆதி, நான் எப்போவும் பொய் தான் சொல்லுவேன்னு நினைக்கிறிங்களா? ” என குமுறிக்கொண்டு இருந்தாள்.

அவரு ஏதோ கோபத்துல அப்டியெல்லாம் சொல்றாரு. இல்லாட்டி இவ்வளோதூரம் எல்லாரையும் எதித்து கல்யாணம் பண்ற அளவுக்கு என்ன இருக்கு. அவரு என்ன நம்பாம இதெல்லாம் பண்ணமாட்டாரு. ச்சாஇப்பவும் எனக்காக தானே சாப்பாடு எடுத்துட்டு வந்தாரு. என் மேல பாசம் அக்கறை எல்லாமே இருக்கு. ஆனா அத விட அதிகமா கோபம், பிடிவாதம்என அவனை திட்டியும், நல்லவிதமாவும் அவனை பற்றி நினைத்துக்கொண்டாள்.


ஆனா என்ன பண்ணி என்ன பிரயோஜனம் எல்லாரும் இவளோ சங்கடப்படறமாதிரி எல்லாமே நடந்திடுச்சே.”

சரி, விடு திவி எல்லாருமே கோபத்துல அப்டி சொல்ராங்க. எல்லாரையும் பத்தி உனக்கும் தெரியும்ல. நீயும் இந்த நேரத்துல சரிக்கு சரியா சண்டை போடாம பொறுமையா அவங்களுக்கு புரியவை.

நான் என்ன பண்றது சில நேரம் அவங்க எல்லாரும் ஓவரா பேசும்போது கோபம் வந்திடுது அண்ட் என்ன இவங்களே நம்பலையேன்னு நினைக்கும் போது எதுக்கு இவங்ககிட்ட எல்லாம் பேசணும்னு கோவிச்சுகாதான் தோணுது..ஆனா அது எல்லாமே கொஞ்ச நேரம் தான். இப்போவே எல்லார்கிட்டயும் பேசணும்.

எஸ் அதுதான் கரெக்ட். எப்டியோ இங்கேயே இருக்கறதால எல்லார்கிட்டயும் பேசி கெஞ்சி கொஞ்சி எப்படியும் பழைய மாதிரி குளோஸ் ஆகிடலாம்.

ஆனா அதுக்கு நீ தான் கரெக்டா இருக்கனும். உண்மையா சொல்லி பிரச்னையை முடிக்கற வரைக்கும் அவங்க எல்லாரும் கோபமா பேசுனாலும் நீ ரியாக்ட் பண்ணாத.. கஷ்டப்படுத்திடக்கூடாது.

ம்ம்…. திவி நீ பண்ண ஒரு சத்யம் உன்ன என்ன பாடு படுத்துது பாத்தியா? தேவையில்லாம இவ்ளோ பொறுமையா இருந்தும் இத்தனை பிரச்சனையா?”

நான் சத்தியம் பண்ணதால ஒன்னுமில்ல. அப்போவும் தெளிவா ஆதிகிட்ட சொல்லுவேன்னு சொல்லித்தானே சத்யம் பண்ணேன். எல்லாம் அந்த காண்டு காட்ஜில்லாவல வந்தது. அவனும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் பண்ணி சொல்ல வரதையும் கேக்காம இப்டி பண்ணிவெச்சு இருக்கான். “

ஓகே ஓகே ரொம்ப திட்டாத. எல்லாரையும் எப்படி பழைய மாதிரி பேசவெக்கிறதுன்னு யோசி.”

டிரெக்டா அடிதடில இறங்கிடலாமா? “

லூசுஇருக்கற பிரச்னை போதாதா? மத்த நேரம் மாதிரி இல்ல. நீ சேட்டை பண்ணா அவங்க கொஞ்சிட்டு திட்டுட்டு விட்டுட்டு போவாங்கனு நினைக்காத. இப்போ அவங்க உன் மேல இருக்கற கோபத்துக்கு நீ என்ன பண்ணாலும் இத்தனை நாள் இதுக்காக தான் இப்டி பண்ணியானு உடனே லிங்க் பண்ணி கத்துறாங்க.

சோ அடாவடியா எல்லாம் வேண்டாம். கிறுக்குத்தனமா எதுவும் பண்ணாம கொஞ்ச சீரியஸ இருமொதல்ல பொறுமையா பேசு. நார்மல் ஆக்கலாம். ஒருவேளை எதுக்குமே பிடிக்காடுகாட்டி திவி ஸ்டைல இறங்கிடலாம்.

என திவி தனக்குள்ளே பல விவாதங்களை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 23ராணி மங்கம்மாள் – 23

23. சேதுபதியின் மூலபலம்  மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம்

Chitrangatha – 48, 49Chitrangatha – 48, 49

ஹாய் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. போன அப்டேட் உங்களை நெகிழ வைத்ததுன்னு உங்க கமெண்ட்ஸ், மெயில் மற்றும் முகநூல் மெசேஜ் மூலம்  படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி நன்றி. நான் தனித்தனியா நன்றி சொல்லாம, மொத்தமா ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04

கனவு – 04   வைஷாலி வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிய போது அதுல்யா வீட்டில் இருந்தாள். தாயாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவள், வைஷாலியைக் கண்டதும் பேச்சை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அதற்குள்