42 – மனதை மாற்றிவிட்டாய்
மறுநாள் திவியை பார்க்க சென்றான். கதவை திறந்தவள் விழிவிரித்து பார்க்க அது, ஆச்சரியம், அதிர்ச்சி என அனைத்தும் கலந்து இருந்தது. அவள் அப்டியே நிற்க அவளை நகர்த்திக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தான். இவளுக்கு ச்சா. வீட்டுக்கு வந்தவனை உள்ளே கூட கூப்பிடமா அப்டியே நின்னுட்டோமேன்னு தலைல அடித்துக்கொண்டு உள்ளே வந்தவள் “எப்படி இருக்கீங்க ஆதி, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என “ம்ம்….பைன் ” என்றான்.
“உன்கிட்ட பேசத்தான் வந்தேன்.”
நல்ல வேளை அன்னைக்கு கோபத்துல போக சொன்னாலும் இப்போவது என்கிட்ட நடந்ததை பத்தி கேட்க வந்தானே. இதுக்கு மேல பிரச்னை சரி ஆய்டும் னு தோண அவளும் மகிழ்வுடன் பேச ஆரம்பிக்க, அவளை கையமர்த்தி நிறுத்தியவன் “நாளைக்கு எனக்கும், உனக்கும் கல்யாணம்” என்றான்.
இவள் புரியாமல் விழிக்க அவனே “மோர்னிங் கோவில்ல போயி நானும், நீயும் கல்யாணம் பண்ணிட்டு அப்டியே ரெஜிஸ்டரும் பண்ணிட்டு வீட்டுக்கு போய்டலாம். ஆபீஸ்க்கு வரமுடியாதுனு சொல்லிடு. “
“ஆதி, என்ன பேசுறீங்க? வீட்ல தெரியுமா? “
“தெரியாது. நாளைக்கு கல்யாணம் முடிச்சு போனா அவங்களே பாத்து தெரிஞ்சுக்க போறாங்க? ” என்றான் கூலாக.
“விளையாடாதீங்க ஆதி, யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்றது தப்புன்னு படல? “
“தப்பு இல்லை. வாழப்போறவங்களுக்கு பிடிச்சா ஓகேதானே. தென் வாட்? மத்தவங்க எல்லாரும் போக போக புரிஞ்சுப்பாங்க “
அவளுக்கு கோபம் இவன் முடிவெடுத்துவிட்டால் மாறமாட்டான் என தெரிந்ததால் வேற என்ன கேள்வி ‘கேட்டாலும் பேசினாலும் ஒப்புக்கொள்ள மாட்டான். இப்போதைக்கு இந்த ஐடியாவ ஆதி ட்ராப் பண்ணனும். அப்புறம் உண்மையா சொல்லி எல்லாரையும் சமாளிச்சுக்கலாம். என்றவள் அவனை காயப்படுத்த எண்ணி “அப்போ வாழப்போற எனக்காவது பிடிக்கணும்ல.(இந்த மாதிரி கல்யாணம் பண்ணறது பிடிக்கல என நினைத்து சொல்ல) உங்களுக்கு மட்டும் புடிச்சா பத்தாது. சோ ப்ளீஸ் என வெளியே கை காட்டினாள். “
இவளின் செய்கையில் வெறிகொண்டவனாக வேகமாக எழுந்து வந்து அவளை கைகளை பற்றி சுவரோடு தள்ளியவன் “என்ன வெளில போக சொல்றியா? (அவன் தவறாக புரிந்துகொண்டு) உனக்கு என்ன பிடிக்கமாத்தான் நிச்சயம் பண்ண ஒத்துகிட்டேயா? ” அவள் ஏதோ பேசவர “சும்மா, வீட்ல சொன்னாங்க, அதனால அக்ஸப்ட் பண்ணணு அதே பொய்ய சொல்லாத. அது மத்தவங்க நம்பலாம். நான் இல்ல. உனக்கா விரும்பம் இல்லாம யாரும் உன்ன போர்ஸ் பண்ணமுடியாது. நீ அதுக்கு அடங்குற ஆளும் இலேன்னு எனக்கு தெரியும்“
“அதுதான் அன்னைக்கே பாத்தீங்கள்ல? நான் சொத்துக்காக தானே உங்களை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னேன். இப்போ மட்டும் அது இல்லேனு ஆகிடுமா என்ன? “
“இருக்கட்டும், ரீசன் ஏதுவாவேனாலும் இருக்கலாம். ஐ டோன்ட் கேர். நீ என்ன லவ் பண்ணறதால ஓகே சொல்லுவியோ, சொத்துக்காக ‘ஓகே சொல்லுவியோ, எனக்கு நீ வேணும், நமக்கு கல்யாணம் நடக்கணும். அவ்ளோதான். உனக்கு நான் தான். “
“ஆதி தயவுசெஞ்சு கொஞ்சம் சொல்றத கேளுங்க. நாம பொறுமையா பேசி முடிவு பண்ணலாம். யாருக்கும் தெரியாம நம்ம கல்யாணம் ஏன் நடக்கணும். எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு சங்கடபடுவாங்க.? அத்தைய நினைச்சு பாருங்க.. உங்க கல்யாணத்த அவங்க எவ்வளவு எதிர்பார்த்தாங்க..ஆனா இப்படி நடந்தா அவங்க உடஞ்சுபோய்டுவாங்க.. ப்ளீஸ் ஆதி…”
என
“ரியலி great நீ. முதல நான் கல்யாணம்ன்னு சொன்னதும் யோசிச்ச அப்புறம் மறுத்த.. நான் எப்படியும் கேட்கமாட்டேன்னு தெரிஞ்சதும் கோபமா கத்துன, அப்புறம் பிடிக்கல முடியாதுன்னு வெறுப்பேத்துன கடைசியா இப்போ familya வெச்சு சென்டிமென்ட்டா அடுத்த ஆயுதமா?
உனக்கு ஒன்னு வேணும்னா எப்படிவேணாலும் பேசலாம். குழப்பி விடலாம்னு நீ சொன்னபோது கூட உன்ன இந்தளவுக்கு நினைக்கல. இப்போ தான் தெரியுது உன் திறமை, திமிரு எல்லாம்.
ஆனா இதெல்லாம் மத்தவங்ககிட்ட வெச்சிக்கோ. நான் முடிவுபண்ணா பண்ணதுதான். நினச்சத எப்படியும் நடத்திடுவேன்.”
“ஆதி நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டிருக்கிங்க. நான் உண்மையாவே நம்ம familyகாக தான் சொன்னேன். உண்மை புரிஞ்சு பின்னாடி யோசிச்சு பார்த்தா உங்களுக்கே சங்கடமா இருக்கும். ஆனா அப்போ நம்மளால எதுவும் மாத்த முடியாது. அதுவுமில்லாம ஹஸ்பண்ட, வைஃப் வாழ்க்கைல நம்பிக்கை அன்பு புரிதல் ரொம்ப முக்கியம். நமக்குள்ள இன்னும் அதெல்லாம் முழுசா வரலேன்னு தோணுது. நீங்க இப்போ இருக்கற கோபத்தல அவசரமா கல்யாணம் பண்ணிக்க கேக்றீங்க. வேண்டாம் ஆதி. வெறுத்திட்டா ரொம்ப கஷ்டம்.”
அவனது பிடி இறுகியது. “என்கூட வாழ்க்கை வெறுக்கும்னு சொல்றியா. ?”
“ஐயோ அப்படி இல்ல…”
அவளை பார்த்து ஏளனமாக சிரித்தவன் “பரவாயில்லை. எதபத்தியும் நான் யோசிக்க விரும்பல. ஒருவேளை என்மேல தப்புன்னா அப்போ வர பிரச்சினையும் நானே பின்னாடி ஃபேஸ் பண்ணிக்கறேன்.
என்னை ஏமாத்த நினச்ச உனக்கு தண்டணை தான் இந்த கல்யாணம். உனக்கு இனி வாழ்வோ சாவோ அது என்கூடதான். நான் உன்னை லவ் பண்ணேன்னு உனக்கு தெரியும்ல. உனக்கு இஷ்டமில்லாட்டி அப்போவே நீ என்னை விட்டு விலகிருக்கனும். என் லவ்வ புரிஞ்சு நீ அத என்கரேஜ் பண்ணிட்டு இப்போ போறேன்னு சொன்னா விட்ருவேணா?எனக்கு நீ வேணும். இல்லாட்டி என் கோபம் எந்த அளவுக்கு வேணாலும் போகும். நாளைக்கு ரெடியா இரு.
எங்கேயாவது போயிட்லாம்னு பிளான் பண்ணா நீ யாரையோ லவ் பண்றேன்னு அங்க கொஞ்ச பேருக்கு டவுட். இப்போ அப்படி தான் யாரோடவோ ஓடிபோய்ட்டான்னு கத கட்டி விட்ருவாங்க. ஆல்ரெடி மகா அத்தைக்கு உடம்பு முடியல. இப்படின்னு தெரிஞ்சா ஈஸ்வரி அத்தை அவங்க பொண்ணு எல்லாரும் இன்னும் மோசமா பேசுவாங்க. இரண்டு குடும்பமும் நம்ம வளத்துன பொண்ணா இப்படி ன்னு நினச்சு ரொம்ப சஙகடபடுவாங்க. அண்ட் குடும்பத்துக்காகன்னு சொன்னேல்ல. இதையும் யோசிச்சு பாரு. “
“பிளாக்மைல் பண்றீங்களா ஆதி …?”
“நோ செக் வெக்கிறேன். உனக்கு நடக்கிறத சொல்லி உன்னையே முடிவு பண்ண சொல்றேன். பட் அது நான் எடுத்த முடிவா தான் இருக்கும்.”
அவனை பார்த்து நானே இல்லாட்டி என்ன பண்ணுவான் என நினைக்க,
அவளின் பார்வை பொருள் உணர்ந்தவன்
“நீ கண்டிப்பா சூசைடு அளவுக்கு போற கோழை இல்லனு எனக்கு தெரியும். நீ சூழ்நிலையை அந்த மாதிரி கிரியேட் பண்ண டிரை பண்ணாலும் காப்பாத்திட்டு கல்யாணம் பண்ணுவேன். ஒருவேளை செத்திட்டாலும் உன் ஹஸ்பண்ட்டா இருந்து செய்ய வேண்டியதெல்லாம் நான் தான் பண்ணுவேன். அதுக்கப்புறமும் என் லைஃப் இப்படி தான் இருக்கும். அப்பவும் அத பார்த்து அவங்க வருத்தம் தான் படுவாங்க..என் மனசுல நீ மட்டும் தான். எந்த ஜென்மத்திலயும் நீ மட்டும் தான். “
உனக்கு வேற வழி இல்லை be ready நாளைக்கு வரேன்.” என்று அவன் சென்றுவிட்டான். என்ன மாதிரியான அன்பு இது..என அதிர்ச்சியாகி அவள் அப்படியே நின்றாள்..
ஆதி சென்ற பின்பும் அதிர்ச்சியில் அப்படியே இருந்த திவிக்கு என்ன செய்வது என்ன சொல்வது என்றே புரியவில்லை.
ஆதியா இப்படி? குடும்பம், நம்மள புரிஞ்சுக்கிட்டவங்க, சுத்தி இருக்கறவங்கள சந்தோசமா வெச்சுக்கணும். சங்கடப்படுத்தக்கூடாது. அதுதான் வாழ்க்கைல சந்தோசம்னு சொல்ற ஆதியா இன்னைக்கு அவங்க கஷ்டப்படுவாங்க அவங்களுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இந்த கல்யாணத்த நடத்தியே ஆகணும்னு நிக்கறாரு?
அப்படி என்ன திடிர்னு நடந்திருக்கும்? எப்படி யாருமே இல்லாம கல்யாணம் பண்ணா வீட்ல எல்லாரும் ஏத்துப்பாங்க?
என்ன நடந்திருந்தாலும் ஆதியோட இந்த முடிவு தப்பு தான்.
ஆனா அவரு இப்போ கோபத்துல முடிவு பண்ணிருக்காரு. கண்டிப்பா என் மேல இருக்கற பழியையும் அவரு தெளிவாக்கிக்கல. என் மேல இருக்கற காதல் மட்டும் தான் அவருக்கு தெரியுது. கோபம், சந்தேகம், பொய்ன்னு, பிரச்சனையோட இந்த வாழ்க்கைல இரண்டுபேரும் ஆரம்பிக்கிறது ரொம்ப தப்பாய்டும். அவரே இத நினைச்சு ரொம்ப வருத்தப்படுவாரு. அதனால எப்படியாவது இத நிறுத்தணும்.