Tamil Madhura சுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்?' சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 10

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 10

அடுத்த நாள் எப்போதும் போல் லட்சுமியை செக் செய்ய சென்றவன்.சுவாதி வீடு கும்பலாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க “சுவாதி அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம் அதனால் இன்றே நிச்சயமும்.ஒரு வாரத்தில் திருமணம்” என்று ராம் வீட்டில் இருந்து வந்து பேசி சென்றனர் என்று ஒரு வயதான பாட்டி சொல்லிவிட்டு “அந்த பொண்ணு என்ன பாவம் செஞ்சதோ இப்படி ஒரு அப்பனுக்கு மகளா பிறக்க,எந்த அப்பனாவது சொந்த மகளை ஒரு பாளங்கிணற்றில் தள்ளுவனா… எல்லாம் விதி” என்று புலம்பிவிட்டு சென்றார்.

அவர் சொல்வதை கேட்ட அர்ஜூனுக்கு முதலில் தோன்றிய எண்ணம் “என் வதுக்கு திருமணமா” என்பதுதான்.

லட்சுமி இருக்கும் அறைக்கு சென்றான்.கிளிந்த நாறாக ஒரு உருவம் கட்டிலில் படுத்து இருக்கிறதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்த லட்சுமியை செக் செய்ய போனான்.ஆனால் லட்சுமி “வேண்டாம் என்பது போல் கண்களால் கெஞ்சி இன்னும் நான் இருந்து என்ன செய்ய போகிறேன்”.

“என் உயிரை வைத்து என் மகளை நாசம் செய்ய பார்க்கிறார்கள்.நான் சாகிறேன் எனக்கு எந்த மாத்திரையும் வேண்டாம்,எந்த மருந்தும் வேண்டாம்” என்று ஈன சுவரத்தில் பேச முடியாமல் பேசினார்.இது பேசியதே அதிகம் என்பது போல் அவருக்கு மூச்சு வாங்கியது.

லட்சுமி இவ்வாறு சொன்னது சுவாதியிடம் சொன்னாள் அவளது அம்மாவை பார்த்து கொள்ள வைத்திருக்கும் வேலைகார பெண்.அம்மா சொன்ன விஷயத்தை கேட்ட சுவாதி வேகமாக லட்சுமி இருக்கும் அறைக்கு சென்றாள்.

லட்சுமி படுத்திருக்க அவரிடம் சென்ற சுதி “ஏன் மா.நீ மட்டும் போக வேண்டும் என்று நினைக்கிறாய் நீ இப்போது செக் செய்ய விடவில்லை என்றால் வா இருவரும் சாகலாம்.எனக்கு அது சம்மதமே.உங்களை எல்லாம் இழந்து அனாதையாக இந்த உலகத்தில் நான் வாழ்வதற்கு நானும் உங்களுடனே வந்துவிடுகிறேன் அனைவரும் சேர்ந்தே இருப்போம்” என்று அமைதியாக அதே சமயம் அழுத்தமாக கூறினாள் சுதி லட்சுமி அமைதியானார்.

சுவாதியின் ஒவ்வொரு சொல்லும் அர்ஜூனுக்கு அதிக வலியை தந்தது.ஆனால் அது எதனால் என்று யோசிக்க பிடிக்காமல்,சுவாதியிடம் மெதுவாக போலிஸ் கம்ப்ளெய்ண்ட் பற்றி பேசினான்.இவர்கள் பேசுவதை கேட்ட லட்சுமி “என் ஒரு மகளாவது எனக்கு வேண்டும் அவர்களுக்கு தெரிந்தாள் என் மகளை கொல்லவும் தயங்கமாட்டார்கள்” என்று தடை கூறினார்.சுவாதி என்ன சொல்கிறாள் என்று அவள் முகம் பார்க்க அவள் பிறகு பேசலாம் என்று சைகையில் கூறி சென்றாள்.

அன்று மாலை நேரத்தில் அர்ஜூன் காற்றாட நடந்து வரலாம் என்று நடக்க ஆரம்பித்தான்.எதிரில் ஒரு சேலை வியாபாரி வருவதை பார்த்தவனுக்கு நேற்று நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்தது. “ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை அந்த மாமியே கட்டி கொள் என்று நான் வாங்கி வந்த சேலையை தருகிறார்கள் இவளுக்கு என்ன வாங்கி கட்டி கொள்ள வேண்டியது தானே”,என்று திட்டி கொண்டே நடந்தான்.

அவன் வருவதற்கு எதிர் புறத்தில் வந்த சுவாதி “காலையில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று கேட்டாள்”.அர்ஜூன் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக கூறி, “நாம் நாளை சென்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு வந்து விடலாம்.என் மாமாக்கு தெரிந்தவர்தான் டி.ஐ.ஜி.அவர் மூலமாக பிரஸர் கொடுத்தால் சீக்கிரம் வேலையாகும்” என்று அந்த வெட்டவெளியை வெறித்து கொண்டு சொன்னான்.

“ராஜாவையும் உடன் அழைத்து செல்லலாம்.உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு. “ராமிற்கு இப்போதைக்கு இந்த விஷயம் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும்” என்று அவளை எச்சரித்து அனுப்பினான்.

சுவாதி அர்ஜூனிடம் தலையாட்டினாலும்,மாலதி விஷயம் தெரிந்ததில் இருந்து விலகி செல்லும் அவன் குணத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.                                                                                            சுவாதியை எச்சரித்த அர்ஜூன் அறியவில்லை அவள் மூலமாக இல்லை என்றாலும் ராமிற்கு விஷயம் தெரிந்து.அவனால் சுவாதி மரணத்தின் வாசல் வரை செல்ல போவதையும்.சுவாதியை விட்டு விலகி இருக்க வேண்டும் ராமிற்கு தண்டனை வாங்கி கொடுத்த பிறகு இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று நினைத்த அர்ஜூன் எந்த அளவுக்கு தான் சுவாதியை காதலிக்கிறோம் என்றும்.

தன் மனதில் இருந்த குழப்பம் நீங்கி உண்மையான காதலை அறிந்து கொண்டபின் அவன் பட போகும் நரக வேதனை பற்றி அறியாமல் இருவரும் அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்தனர்.       காலையில் எழுந்த சுவாதிக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. இருக்காதா பின்னே தன் அக்காவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க போகிறதே.வேகவேகமாக கிளம்பியவள் தன் தோழியை பார்த்து வருவதாக தாயிடம் பொய் உரைத்துவிட்டு,மனதில் “இந்த முறை என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா நம்முடைய குடும்பத்தை அழித்தவனுக்கு தண்டனை வாங்கி தராமல் நான் ஓய போவது இல்லை”.

“மாலதிக்கு நான் கொடுத்த சத்தியத்தை நிறை வேற்ற என் உயிரையும் தருவேன் என்று மனதுக்குள் சொல்லி கொண்டுபுறப்பட்டாள்”.அவர்கள் இருவரும் பேசி வைத்தது போல் ஊருக்கு வெளியே சென்று காரில் காத்திருந்த அர்ஜூனுடன் இணைந்து கொண்டாள்.கார் பயணத்தின் போது போகும் போதும் சரி வரும் போதும் சரி இருவரும் பேசி கொள்ளவில்லை.

அர்ஜூன் மட்டும் கண்ணாடி வழியாக அவளை பார்த்து கொண்டு வந்தவன் மனதில் பெரும் சுமை. “உன்னைவிட்டு என்னால் பிரியவும் முடியவில்லை,சேரவும் முடியவில்லை. உன்னை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது” என்று மனதுக்குள் பேசி கொண்டான்.

இருவரும் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு வீடு வர மாலை ஆறு மணி ஆகிவிட்டது.காரைவிட்டு இறங்கும் போதும் அவள் ராஜாவை பார்த்தே நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.அவளை பொறுத்த வரை அர்ஜூன் அக்கா காதலித்தவன் என்ற எண்ணத்தை ஆழமாக அவள் மனதில் பதிய வைத்தாள்.

அவள் அறியாதது வதுவாக அர்ஜூனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது சுவாதி தான் என்றும்.அவன் மனதில் வதுவுக்கு மட்டுமே இடம் அவனின் காதல் அவளுக்கு மட்டுமே என்பதை அறியாமல் போனது விதியின் சதியே.

மறுநாள் காலை எழுந்து வந்தவளை வரவேற்றது ராமின் நக்கலான சிரிப்பே. “என்ன மேடம் எனக்கு எதிரா கம்ப்ளெய்ண்ட் எல்லாம் குடுத்துட்டு வந்துருக்கீங்க போல” என்றவனின் முகம் விகாரமாக மாறியது.

“பாவம் சின்ன பொண்ணு அப்புடினு விட்டா ரொம்ப துள்ளுற இன்னைக்கு உன்னை அடக்கறேன்” என்றவன்.

“கல்யாணத்துக்கு அப்பறம் நீ எனக்கு பையன் பெத்து தர தயாரா இல்லைங்கும் போது உன் வழிக்கே வருகிறேன்.பையன பெத்துட்டே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவளை நெருங்கியவன் அவளின் தாவணியை  இழுத்தான்.                                                                    “விடுடா…….விடுடா…….என்னை என்று போராடியவள் வேகமாக கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.உதவிக்கு யாரை அழைத்தாலும் யாரும் இவனுக்கு  பயந்து கொண்டு வர போவது இல்லை.நாம் இருந்தால்தானே இவன் எதுவும் செய்வதற்கு நான் இறந்துவிட்டால் என்ன செய்வான்.கம்ப்ளெய்ண்ட் வேறு கொடுத்திருப்பதால் நிச்சயம் என்னையும் கொல்ல பார்க்கிறான் என்ற கேசில் மாட்டிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவள்.கத்தியை எடுத்து வயிற்றில் குத்தி கொண்டாள்”.

காலையில் ஏழு மணிக்கு என்ன சத்தம் என்று எழுந்து வந்த அர்ஜூன்.சுவாதி வீட்டின் முன் ராமின் கார் இருப்பதையும் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்ப்பதை பார்த்தவன்.இவர்கள் எல்லாம் மனிதர்கள்தான ஒரு பெண்ணை இவன் தொல்லை செய்கிறான்.இவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.இன்று அவனுக்கு முடிவு கட்டுகிறேன் என்று வீட்டின் உள்ளே சென்று பாதுகாப்புக்கு அவன் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு நேராக சுவாதி வீட்டிற்குள் நுழைந்தான்.

அர்ஜூனை அங்கு எதிர் பார்க்காத ராம் ஒரு நிமிடம் திகைத்தாலும் அவனால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்தில் ஆனவமாக பேச ஆரம்பித்தான்.

“வாடா……… டாக்டர் நான் நீ வந்த அன்றே என்ன சொன்னேன் வந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று சொன்னேனா இல்லையா யாரை கேட்டு அவளை கம்ப்ளெய்ட் கொடுக்க கூட்டி சென்றாய்.உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று அர்ஜூனை தாக்க சென்றவன் அவன் கையில் இருக்கும் துப்பாக்கியை பார்த்து தயங்கியவன் அப்போதும் தன் கெத்தை விடாமல்

“என்ன டா பொம்ம துப்பாக்கி வைத்து பயமுறுத்துகிறாயா?”என்று மிரட்டினான்.

அவனின் பேச்சை கேட்ட அர்ஜூன் துப்பாக்கியை மேல் நோக்கி சுட்டான்.

உண்மை துப்பாக்கி என்று தெரிந்த ராம் அமைதியாக நின்றான்.வரும் போது அவன் சொன்னதுக்கு ஏற்ப போலிஸிற்கு போன் செய்த ராஜா அவர்களுடன் உள்ளே நுழைந்தான்.ராமை அரெஸ்ட் செய்து ஊரே பார்க்கும் மாறு அழைத்து சென்ற பிறகுதான் சுவாதி அங்கு இல்லை என்பதை உணர்ந்து அர்ஜூன் அவளை தேட தொடங்கினான்.

வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடி அவளை காணாமல் இறுதியாக கிட்சனுக்கு வந்தவன் ஆடி போனான்.தாவணி இல்லாமல் இறத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவளை தூக்கி மடியில் படுக்க வைத்தவன் துடித்து போனான்.

தனது சட்டையை கழட்டி அவளுக்கு போட்டு விட்டவன். “ஏன் டி இப்படி பண்ணுன என்ன பத்தி யோசிக்கவே மாட்டியா?ஏன் இப்படி செய்தாய்” என்று அவளை உழுக்க வலியில் அவள் முகம் சுளித்தாள்.அப்போது அங்கு வந்த ராஜா “சார் என்ன சார் இவ்வளவு இரத்தம் போய்விட்டது என்று சொன்னான்”.

ராஜா பேசிய பிறகே தன்னிலை இன்றி அழுது கொண்டிருந்த அர்ஜூன் அழுவதற்கான நேரம் இல்லை என்பதை உணர்ந்த அவளை கைகளில் தூக்கி கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தான்.

பிளட் பேங்கில் அவளது குரூப் இரத்தம் கிடைக்காமல் தடுமாறினான்.மரணத்தின் வாசலை மிதித்தவளின் கைகளை பற்றி கொண்டு “வதுமா வந்து விடுடா நிஜம் எது நிழல் எது என்று தெரிந்து கொண்டேன்.நான் உன்னோடு சேர்ந்து பல ஆண்டு வாழ வேண்டும் நிறைய குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.நீ இல்லாவிட்டால் எனக்கு வாழ்வே கிடையாது.பத்து தையல் போட்டிருக்கிறது உனக்கு தையல் போடும் போது எவ்வளவு துடித்தேன் தெரியுமா?வந்துவிடுடா என்று கதறினான்”.

“நீ இல்லை என்றால் நானும் இருக்க மாட்டேன் இது சத்தியம்” என்று உறுதியான குரலில் கூற,அந்த குரலில் என்ன இருந்ததோ பிறகு அவளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.                                                                                                                                                                                             அர்ஜூனே சுதியுடன் இருந்து அவளை கவனித்து கொண்டான்.எப்படி கத்தி காயம் ஏற்பட்டது என்று யோசித்து கொண்டு இருந்தவன் தன் மாமாவிற்கு போன் செய்து அந்த ராம் வெளியில் வராமல் இருக்க என்ன சாட்சி வேண்டுமோ அனைத்தையும் தயார் செய்து அனுப்பி வைத்தான்.       ஒவ்வொரு முறை சுவாதியை பெட்டில் பார்க்கும் போதும் அந்த ராமை தன் கையால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தடுக்க முடியாமல் போனது.அப்போது தான் உணர்ந்தான் நிஜ காதல் எது நிழல் எது என்று.

“சுவாதியை இரத்த வெள்ளத்தில் பார்த்த போது வாழ்வே முடிந்தது போன்ற எண்ணம் தோன்றியதே” ஆனால் மாலதி இறந்த செய்தி கேட்டு சக மனிதனாக அவளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தானே தோன்றியது “நான் பார்த்தது மாலதியாக இருக்கலாம் பழகியது என் சுவாதியுடன்தான்.அவள் தான் என் வாழ்க்கை” என்று தெளிவான முடிவெடுத்தான்.

ஒரு மாதம் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு வந்தவளை வீட்டின் வெறுமை முகத்தில் அடித்தது.அங்கு ஹாஸ்பிட்டலில் தன்னையே சுற்றி சுற்றி வந்து கவனித்த அர்ஜூனின் நினைவு வந்தது.

“எதற்காக இப்படி கவனிக்கிறார்.என்னை தொந்தரவு செய்யதீர்கள்” என்று எத்தனை முறை திட்டியிருப்பேன், “என்னை நர்ஸாக நினைத்து கொள்” என்று செய்தானே, “ஏன்அஜூ ஏன் இப்படி செய்கிறீர்கள்.நான் கஷ்டபட்டு உங்களையும்,உங்கள் நினைவுகளையும் மறக்க நினைக்கிறேன்.நீங்கள் உங்கள் கவனிப்பாள் என்னை மறக்க விட மாட்டிகிறீர்கள்” என்று தன் அறையில் அழுது கொண்டு இருந்தவள் ஆனால் அஜூ என் இந்த பலவீனம் உங்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வேன் என்று தனக்குள் கூறி கொண்டாள்.

“அஜூ என் மனம் உங்களிடம் தடுமாறி நிற்கிறது என்ற விஷயம் உங்களுக்கு தெரிந்தால் என்னைபற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்.நீங்கள் ஒரு டாக்டர் வேலையைதான் செய்தீர்கள்,என் நிலையில் யார் இருந்தாலும் நீங்கள் அவர்களை கவனிப்பீர்கள்.ஆனால் அந்த விஷயம் எல்லாம் மூளைக்கு தெரிகிறது உங்களை நேசித்த இதயத்திற்கு தெரியவில்லையே” என்று புலம்பியவளுக்கு,அவள் மயக்கத்தில் இருக்கும் போது அர்ஜூன் பேசியது நினைவு வராமல் போனது விதியின் சதியே………

நாட்கள் அதன் போக்கில் செல்ல ராமின் மீது மாலதி கொலை வழக்கு,சுவாதி மற்றும் லட்சுமியின் கொலை முயற்சி என பல குற்றத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கபட்டது.

ஜெயிலில் கூண்டு புலியாக இருந்த ராம் அந்த சுவாதியை பலி வாங்க தன் கையாட்களின் மூலம் சுவாதியை கடத்தி மும்பையில் தனக்கு தெரிந்த புரோக்கரிடம் விற்க சொன்னான். “எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்க கூடாது.உன் வாழ்வை நாசமாக்குகிறேன்” என்று கருவி கொண்டான்.

ராம் சொன்னதற்கு ஏற்ப அவனின் கையாட்கள் நேரம் பார்த்துகொண்டிருந்தனர்.அந்த நாளும் விரைவில் வந்தது. கோவிந்தனை அன்று அவர்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து வீட்டில் வந்து விடுவது போல் வந்து அவள் சாப்பிட வைத்திருந்த உணவில் போதை மருந்தை அவளுக்கு தெரியாமல் கலந்துவிட்டு வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர்.அப்போது அவர்களில் ஒருவன்  “மருது இது தப்புடா பொம்பள புள்ள பாவம் சும்மாவிடாதுனு சொல்வாங்க” என்று சொன்னான்.

“டேய் அதெல்லாம் பாத்த காசு பாக்க முடியாது.இனிமேல் பின் வாங்கவும் முடியாது.அந்த ராம் ஒரு அடிப்பட்ட பாம்பு நாம செய்யலனாலும் வேற யாராவது வச்சி செய்யதான் போறான்.  அது மட்டும் இல்லாம நமக்கு விஷயம் தெரிஞ்சதால நம்மையும் சும்மா விட மாட்டான்.அதனால பாவம் கூவம்னு உளறாம வா அந்த மரத்துகிட்ட மறஞ்சு நிப்போம்.அந்த மருந்து வேலை செய்ய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்” என்று இருவரும் மறைந்து நின்று கொண்டனர்.

சாப்பிட பிடிக்காமல் தன் அறையில் நடந்து கொண்டிருந்த சுவாதிக்கு மனம் பாரமாக இருந்தது.இருக்காத பின்னே அவள் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததில் இருந்து அர்ஜூன் அவளிடம் பேச முயற்சிக்கிறான்.இவள் அவனுடன் பேசாமல் தவிர்த்து கொண்டே இருந்தாள்.இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தவிர்க்க முடியும்

“அன்று ஒருநாள் கோவிலில் கையை பிடித்து தடுத்து பேசியது போல் பேச நினைத்தால் என்ன செய்வது” என்று யோசித்து கொண்டு இருந்தவள் மணி பத்தரை என்று காட்டவும் சரசக்கா சமைத்ததை கொஞ்சமாவது சாப்பிட்டு வைப்போம் இல்லை என்றால் அவர்கள் வருத்தபடுவார்கள் என்று தன் அறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு இட்லியை சாப்பிட்டுவிட்டு தூக்கம் வராமல் இருந்தவள் மழைவருவது போல் மண் வாசனை வரவும் மூச்சை நன்கு இழுத்து சுவாசித்து மாடியில் கொஞ்ச நேரம் நிற்போம் என்று மாடிக்கு சென்றாள்.

மாடியில் சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்தவள் பயத்தில் முகம் வெளிறி நின்றாள்.ஆம் அந்த இருவரும் இவர்கள் வீட்டை பார்த்து கொண்டிருப்பது அந்த அரை இருட்டில் கவனித்தாள்.யார் இவர்கள் ஏன் இங்கு என்று யோசித்தவளுக்கு அந்த மழை காற்றிலும் வேர்த்து மயக்கம் வருவது போல் இருந்தது.

தூரல் வேகமாக போட ஆரம்பிக்கவும் அவர்கள் ஓரமாக ஒதுங்கி நிற்பதும் தெரிந்தது.நேரம் ஆகஆக கைகள் எல்லாம் தன் பலத்தை இழந்து எங்கோ பறப்பது போல் உணர்ந்தவள்.தனக்கு என்னவோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

என்ன செய்வது என்று யோசிக்கையில் அவளுக்கு நினைவு வந்தது அர்ஜூன்தான்.உடனே பின்பக்கமாக அர்ஜூன் வீட்டுக்கு சென்று அவரிடம் உதவி கேட்க வேண்டும் என்று தட்டு தடுமாறி நடந்தால் வேகமாக மழை பெய்ததால் அந்த இருவரும் கொஞ்சம் தொலைவுக்கு சென்று ஒதுங்கினர்.

இங்கு அர்ஜூனோ தனக்குள் புலம்பி கொண்டு இருந்தான். “ஏன்டி இப்படி பண்ற ஹாஸ்பிடலில் இருந்து வந்ததில் இருந்து எத்தனை முறை உன்னுடன் பேச வந்தேன்.ஒரு முறையாவது என்னுடன் பேசினாயா?நான் உன்னைதான் காதலிக்கிறேன் உயிரைவிட அதிகமாக.அதை சொல்ல ஒரு சந்தர்பமாவது கொடு டி” என்று தனக்குள் புலம்பி கொண்டு இருந்தவன்.மழை வருவது போல் இருப்பதை பார்த்து ராஜாவை கூப்பிட்டான்.

“ராஜா”……. என்ற அவன் குரலுக்கு வேகமாக வந்தவன்.என்ன சார் என்று கேட்க.

“நீங்கள் ஹாஸ்பிட்டல் சென்று ஜன்னல் எல்லாம் சாத்தி இருக்கிறதா எனறு பார்த்துட்டு வாங்க மழை வழுவாக பெய்யும் போல் இருக்கிறது.ரொம்ப குளிராக இருந்தால் அங்கேயே படுத்து கொள்ளுங்கள்” என்று அனுப்பிவிட்டு வந்தவன் கண்ணில்பட்டது. அந்த பாட்டில் என்ன இது வெள்ளையாக இருக்கிறது.

“இளநீராக இருக்குமோ,நேற்று கேட்ட இளநீரை இன்று கொண்டு வந்து வைத்திருக்கிறான் இந்த ராஜா.இவனை என்ன செய்வது.அட்லீஸ்ட் கொண்டு வந்ததை சொல்லிவிட்டு போனானா அதுவும் இல்லை,காலை வரட்டும் அவனை பேசி கொள்கிறேன்” என்று அவனை திட்டி கொண்டே முழுவதையும் குடித்து முடித்தான்.

“இளநீர் வீணா போனாதாட்டுக்கு புளிப்பாக இருக்கிறது.ஒரு வேலையும் ஒழுங்காக செய்யமாட்டான் இந்த மடையன்” என்று சொல்லி எழுந்தவன் தடுமாறினான்.

அர்ஜூன் அறியாத ஒன்று ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒற்றை பனை மரத்து ‘கள்’ கிடைக்க அதை குடிக்க ராஜா எடுத்த நேரம் அர்ஜூன் வேலையை சொல்லவும் சரி வந்து குடித்து கொள்வோம் என்று அப்படியே அவன் வைத்துவிட்டு சென்றது.

அர்ஜூன் தடுமாறி கீழே விழ போனான்.

“அச்சச்சோ பூகம்பம் வந்துவிட்டதா?ஏன் வீடு இப்படி ஆடுகிறது” என்று புலம்பி கொண்டே எழுந்தான்.பின் பக்க கதவு தட்டும் சத்ததில் கதவை திறக்க போனவன் “யார் திடீரென்று பின் பக்க கதவை வளைத்து வளைத்து வைத்தது” என்று உளறி கொண்டே சென்று கதவை திறந்தான்.                  அங்கு சுவாதி மழையில் நன்றாக நனைந்து அரை மயக்க நிலையில் வந்திருந்தாள்.அந்த நேரத்தில் அவளை அங்கு எதிர் பாக்காத அர்ஜூன் “வது நீயா?”என்று ஆச்சரியமாக பார்த்தான்.       “அஜூ அஜூ என்னை காப்பாற்றுங்கள்.என்னே…….. காப்பாத்துங்கள்….. காப்பாத்”……….என்று சொல்லி கொண்டே அவனின் மேல் மயங்கி சரிந்தாள்.

சுவாதியை பார்த்தவுடன் ஓரளவு தெளிவான அர்ஜூன். “வது இங்க பாரு மா என்னச்சு?யாரு என்ன செய்தார்கள் என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் மயங்கி இருந்தால் சுவாதி. இவளுக்கு திடீரென்று என்னாச்சு?ஏன் மயங்கிவிட்டாள்?”என்று யோசித்து கொண்டே அவளை அழைத்து சென்று ஒரு அறையில் படுக்க வைத்தான்.தனக்கே ஒரு மாதிரி இருப்பதை உணர்ந்தவன் பாத்ரூமிற்கு சென்று நீரை முகத்தில் அடித்து நன்றாக கழுவினான்.அப்போது கொஞ்சம் பரவா இல்லாமல் இருக்கவும் மீண்டும் சுவாதியை பார்க்க சென்றான்.

சுவாதி மழையில் நன்கு நனைந்ததாலும்,பழக்கமில்லாத போதை மருந்தின் ஓவர் டோஸாலும் நடுங்கி கொண்டு படுத்திருந்தாள்.உடனே அவளிடம் சென்றவன் முதலுதவி செய்ய வேண்டும் என்று நினைத்தான்.ஆனால் அவளின் ஆடையை மாற்ற நர்ஸ் யாரும் இல்லாததால்,அவனே அவளுக்கு உடை மாற்ற எண்ணி அவளை நெருங்கினான்.

அவன் சிறு வயதில் கேட்ட இளவரசி கதைகளில் வரும் அந்த அழகான இளவரசி இவளை போல் தான இருந்திருப்பாளோ என்று எண்ண தோன்றும் அழகு.பிறை நிலா போல் நெற்றி வானவில் போல் வளைந்த புருவம்.கூர் நாசி,கொழுகொழு வென்ற கன்னம், மழையில் நனைந்த ரோஜா காற்றில் ஆடுவது போல் அவளது அதரங்கள் குளிரால் நடுங்கி கொண்டு இருந்தது.அதற்கு கீழே சென்ற அவனின் கண்களை இது தவறு என்று அவனின் மனசாட்சி எச்சரிக்க, “இவள் என்னுடையவள்.எனக்கானவள்.என்னுடையதை நான் பார்க்கிறேன் என்று அடக்கினான்”.அவளின் முழு அழகையும் பார்த்து பித்தம் கொண்டான்.

அவளின் உடையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அருகில் சென்று நனைந்த அவள் தாவணியை எடுத்தான்.சுவாதியோ ஈன சுரத்தில் “வேண்டாம் என்னை விட்டு….விட்”….என்று புலம்ப அவள் காதருகில் சென்று “ஸ்….வது நான்தான் என்று சொல்ல அவள் அப்போது அஜூ …அஜூ” என்று சொல்லி கொண்டே நினைவிழந்தாள்.

அவளின் மேலாடையில் கை வைக்கும் போது ஏற்பட்ட கை நடுக்கத்தை சரி செய்து,ஒரு வழியாக அவளுக்கு ஆடையை மாற்றியவன் வேர்த்து விறு விறுத்து போனான்.எப்பா என்ன அழகு உனக்கு டிரஸ் மாத்தறத்துக்குள்ள நான் ஒரு வழி ஆகிட்டேன் என்று தன்னுடைய குறுத்தாவை நன்கு இழுத்துவிட்டான்.                                                                                                                                                                            அர்ஜூனின் ஆறடி உயரத்துக்கு சரியாக இருந்த அவனுடைய குறுத்தா அவளுக்கு மிகவும் லூசாக இருந்தது.இன்னும் அவள் நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன் சூடாக பால் கொடுப்போம் என்று அதை கொண்டு வந்து குழந்தையை போல் தன்மேல் சாய்த்து புகட்டினான்.ஆனால் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டு நடுங்கினாள்.

ஜன்னல் வழியாக காற்று வேகமாக அடிப்பதால் நடுங்குகிறாளோ என்று அவளை கட்டிலில் படுக்க வைத்தவன் கதவுகள் அனைத்தையும் சாற்றி வந்தான்.பேனை ஆப் செய்து விட்டு இரண்டு மூன்று கம்பளியை அவள் மேல் போட்டான் போதையில் மழையில் நனைந்ததால் அவள் உடலில் சூடு ஏறாமல் நடுங்கி கொண்டே இருந்தாள்.

வெளியில் பெய்த மழையும்,உள்ளே சென்ற போதையும் மதி இழக்க செய்ததுடன்.சுவாதியின் அழகு அவனை நிலை இழக்க செய்து அர்ஜூனின் கட்டுபாடுகளை தகர்த்தெறிய செய்து சுவாதி என்னவள் என்ற உரிமையை எடுத்து கொள்ள வைத்தது.

ஆம் பெரியவர்களின் ஆசிர்வாதம் இல்லை,சிவன் சக்தியின் அம்சமாக இருக்கும் திருமாங்கல்யம் அவளின் கழுத்தில் ஏறாமல்,சுய நினைவு இல்லாமல்,இவ்வளவு நாட்கள் தன் தாய் கூட பார்த்திராமல் தன் பெண்மையை பொக்கிஷமாக எவன் கைகளில் முழு மனதுடனும் காதலுடனும் தர வேண்டும் என்று பொத்தி பாதுகாத்து வைத்தாளோ,அவனே அவளது விருப்பம் தெரியாமல் அவள் மீது படர்ந்து அவளை முழுவதுமாக ஆண்டு முடித்தான்.

நாட்டின் கடை கோடியில் பூத்த சுவாதி என்னும் மலர் தலைநகரான சென்னையில் பிறந்து வளர்ந்தவனின் தோளில் மாலையாக மாறியது.வெளியில் மழை தன் ஆதிக்கத்தைகாட்ட உள்ளே அர்ஜூன் சுவாதியிடம் தன் ஆதிக்கத்தைகாட்டி கொண்டு இருந்தான்.

காலையில் கனத்த தன் தலையை கையில் தடவியவள்.தன் இடையில் கனமாக ஒரு பொருள் கிடப்பதாக நினைத்து தொட்டு பார்த்தாள்.அது ஒருவனின் கை என்பதை அறிந்து கையை வெடுக்கென தள்ளி துள்ளி எழுந்தாள் அப்போதுதான் உணர்ந்தாள்  தன் நிலையை.

போர்வையை நன்றாக சுருட்டி தன்னை மூடி கொண்டவள் பக்கத்தில் பார்க்க இதழில் வசீகர சிரிப்புடன் அர்ஜூன் படுத்திருந்தான்.                                                                                                                             என்ன முயன்றும் முடியாமல் தன்னிலையை நினைத்து அழுதாள்.கைகளை அவள் தள்ளிய வேகத்திலும் சுதியின் விசும்பல் சத்தத்திலும் கண் விழித்த அர்ஜூன் அவள் இருந்த கோலத்தை பார்த்து வேறு புறம் திரும்பி கொண்டான்.

சுவாதியின் விசும்பல் சத்ததில் அவளிடம் பேச வேண்டும் என்று திரும்பியவன் அவள் அதே கோலத்தில் இருப்பதை பார்த்து “சா….ரி சாரி வது.ஒரு நிமிடம் நான் இதோ வருகிறேன்” என்று அவளை பார்க்காமல் அறையில் இருக்கும் பாத்ரூமில் அவன் இரவு காய போட்ட அவளது உடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.

“இதை போட்டு கொண்டு வா உன்னிடம் பேச வேண்டும்” என்று அறையைவிட்டு வெளியேறினான்.சென்றவனையே கண் இமைக்காமல் பார்த்தவள். “காப்பாற்றுவாய் என்று உன்னை நம்பி வந்தேன்.ஆனால் நீயும் மற்ற ஆண்களை போல்தான் என்று நிரூபித்துவிட்டாய்”.    “ஆண்கள் அனைவருமே சந்தர்பவாதிகள்தானா?உன்னை போய் காதலித்தேனே இப்போது அதை நினைத்து வெட்கபடுகிறேன். இந்த நிமிடம் நான் இந்த உலகத்தில் அதிகம் வெறுப்பது உன்னைதான் உன்னை மட்டும்தான்”.

“அக்காவை காதலித்தவன்.எந்த உரிமையில் என்னை தொட்டான் நானே தேடி வந்ததாலா?எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்” என்று மனதுக்குள் கணன்று கொண்டு இருந்தவளின் முன்பு டீயை கொண்டு வந்து வைத்தான்.

அர்ஜூனையே வெறுப்புடன் பார்த்து கொண்டு  இருந்தவளை பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல்,தலையை குனிந்து கொண்டு “நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம்,நீ இரவு குளிரால் ரொம்ப நடுங்கினாய்” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே,அவன் கொண்டு வந்து கொடுத்த டீ கப் சிலீர்………என்ற சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது.

விரிந்திருந்த தலை முடியை அள்ளி கொண்டையாக போட்டவள்.அவன் சட்டையை பிடித்து உளுக்கி “என்ன சொன்னாய்?மறுபடியும் சொல்.உன்னை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?என்னிடம் இதை சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னிடம் இப்படி சொல்வாய்.என் அக்காவை காதலித்தாய் அவளைதான் மணப்பேன் என்றாய்.இன்று  என்னை மணக்க கேட்கிறாய். இவ்வளவுதான் உன் காதலா”.

“குளிரால் நடுங்கினாய் வேறு வழி இல்லாமல் என்றாயே,உன்னிடம் வரும் எல்லா பேசண்டிடமும் இப்படிதான் நடந்து கொள்வாயா?உன்னை எவ்வளவு நம்பினேன்.அந்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பிக்க உன்னிடம் வந்தேன். கடைசியில் அவர்கள் என்ன நினைத்து எனக்கு மயக்க மருந்து கொடுத்தார்களோ,அதை நீ செய்து விட்டாய்”.

“உனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.என்னை பொருத்தவரை இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.இந்த நிமிடம் நான் சொல்வதை நன்றாக காதில் வாங்கி கொள்”.

“இந்த உலகத்தில் நான் அதிகமாக வெறுக்கும்,மீண்டும் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் ஒரே ஆள் நீ .நீ மட்டும்தான் இனி என் முகத்தில் முழிக்காதே” என்றவள் வெளியே செல்ல திரும்பியவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க தலையை பிடித்து கொண்டு அங்கிருந்த சுவரில் சாய்ந்தாள்.

சுவாதியின் ஒவ்வொரு கேள்விக்கும் “ஆமாம்டி, நீ என்னுடையவள் என்னை மணந்து கொள்.எனக்கானவளை மணந்து கொள்ள கேட்பதில் எதுக்குடி வெட்கம்.என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் வது நீ என்னுடையவள் என்ற உரிமைதான் என்னை உன்னிடம் அப்படி நடந்து கொள்ள வைத்தது”.

“உன்னை தவிர வேறு யாராக இருந்தாலும் என்னால் நல்ல டாக்டராக அவர்களை பாதுகாத்திருக்க முடியும். ஆனால் நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை”. “யாராக இருந்தாலும் இப்படிதான் செய்வீர்களா? என்று கேட்டதற்கு பதிலாக நீ உன் கையாலேயே என்னை கொன்னு போட்டு இருக்கலாம்” என்று அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் மனதுக்குள் பதில் சொல்லி கொண்டு இருந்தான்.

சுவாதி சுவரில் சாய்ந்து நிற்பதை பார்த்து, “என்ன வதுமா? என்ன ஆச்சு?” என்று அவளின் கையை பிடித்து பார்த்தான்.அவன் தொட்ட வேகத்தில் கையை உதறியவள். “இனி ஒருமுறை என்னை தொட்டாய் அதுதான் நீ என்னை கடைசியாக பார்ப்பதாக இருக்கும்”.

“நீ தொட்ட கரை நீங்க என்னை நானே எரித்து கொள்வேன்” என்று சொன்னவுடன் அவள் கையைவிட்டவன் அடிபட்ட பார்வை பார்த்தான்.இப்போது பேச கூடிய நிலையில் அவள் இல்லை என்பதை உணர்ந்து பிறகு பேசி கொள்ளலாம் என்று அமைதி ஆனான்.

அவளின் சோர்ந்த நிலையை உணர்ந்தவன் அவளை நெருங்கி “உனக்கு ரொம்ப டயர்டாக இருக்கும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு போ.நான் உனக்கு சூடாக ஏதாவது எடுத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றவன் திரும்பி வந்து பார்க்கும் போது வெறும் அறையே வரவேற்றது.

“அதற்குள் சென்று விட்டாளா?”என்று நினைத்தவன். “நீ செய்த வேலைக்கு இங்கிருந்து போகாமல் நீ சொல்வதை எல்லாம் கேட்பாள் என்று நினைத்தாயா?என்ற மனசாட்சியின் கேள்வியில் தப்புதான். நான் செய்தது மிக பெரிய தப்புதான்.எதனால் எனக்கு அந்த சூழ்நிலையில் அப்படி தோன்றியது என்று புரியவில்லை.

ஆனால் ஒன்று உறுதி சுவாதி சொன்னது போல் அவளிடத்தில் வேறு யாரு இருந்திருந்தாலும் நிச்சயம் நான் அப்படி நடந்து கொண்டிருக்கமாட்டேன்.அவளை விரைவில் மணமுடிப்பேன்.அவளுக்கு விருப்பம் என்றாலும் இல்லை என்றாலும் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும்” என்று முடிவெடுத்தவனை நோக்கி வேகமாக ஓடி வந்தான் ராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 18சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 18

“என்னடா வது குட்டி ஒன்னோட மாமாகிட்ட பேச உனக்கு என்ன தயக்கம்?நான்தான் என் மேல் நீ கோபமாக இருப்பாயோ என்று லேட்டாக வந்து இவ்வளவு நாளை வேஸ்ட் செய்துவிட்டேனா?கவலையே படாதே இதோ மாமா வந்துகிட்டே இருக்கேன்” என்று தனக்குள் பேசி கொண்டவன்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 11சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 11

“என்ன ராஜா ஏன் இப்படி ஓடி வருகிறாய்” என்று கேட்க. “சார் அந்த லட்சுமி அம்மா இறந்துட்டாங்க சார்.சுவாதி பொண்ணு எப்பவும் போல் பார்க்க போய் இருக்கும் போதுதான் பார்த்தது போல”,என்று சுவாதி இங்கு வந்தது,அப்போதுதான் அங்கிருந்து சென்றாள் என்பதை அறியாமல்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 17

திருமணத்தில் நடந்ததை சொன்ன ரம்யா. “எவ்வளவு கஷ்டபட்டு அந்த போட்டோ எல்லாம் வாங்கினாள் தெரியுமா அவரோட வீட்டு அட்ரஸ் அவரோட வேலை எல்லாம் கலெக்ட் பண்ணி சேட்டிஷ்பைட் ஆனவுடன் உனக்கு சர்ப்ரைஸா,நீ டூர்ல இருந்து வந்ததும் சொல்லலாம்னு காத்திருந்தோம் ஆன அதுக்குள்ள