Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

couple-kissing-and-holding-heart_23-2147736074
முத்தம் தந்திடு!!
 
முட்களோடு சொற்கள் செய்து
காயம் தந்தாய் – எனது
கண்ணீரும் சிகப்பாய் மாறி
சிறகு கிழிந்ததே!

தென்றல் எந்தன் வாசல் வர
காத்து நிற்கிறேன் – இன்றோ 
புயல் வீசி என் கூடு சிதைய
பார்த்திருக்கிறேன்!!

மருகி மருகி எந்தன் உள்ளம்
குழந்தை ஆனதே – நீயும்
விலகிச் சென்ற நொடியை எண்ணி
அழுது கரையுதே!!

பகலெல்லாம் காத்திருக்கும் 
மல்லி அல்லியும் – இரவில்
சந்திரனைக் கண்ட பின்னே 
மெல்ல அவிழுமே!

காலமெல்லாம் காத்திருப்பேன்
காதல் சேமித்து – நீயும்
காதல் சொல்ல தவம் கிடப்பேன்
எனது உயிர் காத்து!!

மனம் இரங்கி விழிகளாலே
காதல் சொல்லிடு – இல்லை,
மரித்த பின்னே கல்லறைக்கு
முத்தம் தந்திடு!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேதையின் பிதற்றல் – (கவிதை)பேதையின் பிதற்றல் – (கவிதை)

  பேதையின் பிதற்றலில் பெண் மனதின் பொருள்   எப்போது? எப்படி? என எதிர்பார்த்த தருணத்தை தர கனவை நனவாக்க வருபவனே உன்னுடனான என் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்? உன் உருவத்தைப் பருகும் வகையில் உன்னைப் பார்ப்பேனோ? உன்னைக் கண்டதால்

தேய்ந்துபோன கனவுகள் – கவிதைதேய்ந்துபோன கனவுகள் – கவிதை

  தேய்ந்துபோன கனவுகள் வானவில்லை ரசித்திருந்தேன் வண்ணத்துணிகள் பெற்றேன் வெளுப்பதற்கு.. வயிற்றுப்பசியார விழைந்தேன் பற்றுப் பாத்திரங்கள் கிடைத்தன தேய்ப்பதற்கு..   நான் செய்வதும் அகழ்வுதான்; குடைந்தெடுப்பது கற்சிலைகள் அல்ல கருங்கற்கள்.. அருகருகே அமர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை அதனால் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்துகிறேன்