வணக்கம் தோழமைகளே,
நமது தளத்தில் தனது கதையைப் பதிவிட வந்திருக்கும் எழுத்தாளர் சுதி அவர்களை வரவேற்கிறோம்.
முதல் அத்தியாயமே அடுத்து என்ன எதனால் என்ற ஆவலைத் தூண்டும் விதத்தில் படைத்துள்ளார் ஆசிரியர். வாசகர்களாகிய நாமும் படித்துவிட்டு அவரிடம் நமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்.
அன்புடன்
தமிழ் மதுரா
அத்தியாயம் – 1
உலகில் உள்ள இருளை நீக்கி ஆதவன் தன்னுடைய பணியை ஆரம்பிக்க ஆயத்தமாகும் அதிகாலை வேலையில் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க,நம் நாயகி சுவாதி அயர்வாக அமர்ந்திருந்தாள்.
இரவு முழுவதும் பயணம் செய்த களைப்புடனும் அழுது வீங்கிய முகத்துடனும் இருந்தவளின் அருகில் கண்டைக்டர் வந்தவுடன் திருச்சிக்கு டிக்கெட் எடுத்தவள் சீட்டின் பின் பக்கமாக சாய்ந்தாள்.
இனி தன் வாழ்வில் தனிமைக்கு மட்டும்தான் இடம் இருக்க போகிறதா என்று எண்ணும்போதே நான் இருக்கிறேன், என்றது அவளின் வயிற்று சிசு.
தன்னுடைய வயிற்றை தடவியவள் குழந்தையை நினைத்து மனதை தேற்றிக்கொண்ட வேலையில் அவனின் நினைவும் அழையா விருந்தாளியாக வந்தது. அவனின் நினைவு வரும் பொழுது, தான் கோபமாக உணர்கிறோமா, இல்லை தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்துகிறோமா என்று அவளுக்கே தெரியவில்லை. தூங்க எண்ணி கண்ணை மூடியவள் பழைய நினைவுகளின் தாக்கத்தால் தூங்காமல் வேடிக்கை பார்க்க துவங்கினாள்.
திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியவள். தன் தோழி கீதாவின் வீட்டுக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்தாள். கீதாவை பற்றி நினைக்கையில் எப்போதும் தோன்றும் புன்னகை இன்றும் அவள் இதழ்களில்,கீதாவும் சுவாதியும் நெருங்கிய தோழிகள். கீதாவின் அப்பா ராகவன் மத்திய அரசு ஊழியர் அம்மா வள்ளி வீட்டு நிர்வாகி வேலை காரணமாக நாகப்பட்டினம் வந்தார்கள். சுவாதி சொந்த ஊரே நாகபட்டினம்தான், இருவரும் பக்கத்து வீடு என்பதால் நெருங்கிய தோழி ஆனார்கள்.
சுவாதியின் தந்தை கோவிந்தன் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று குடிக்க ஆரம்பித்தார் இதனால் கோபமுற்ற கோவிந்தனின் தந்தை ராஜீ சொத்துக்கள் அனைத்தையும் கோவிந்தனின் இரட்டை மகள்களான மாலதி சுவாதி இருவருக்கும் சரிசமமாக பிரித்து எழுதியவர், அவர்களின் திருமணம் முடிந்து கணவனுடன் வந்து கையொப்பம் இட்டாள் மட்டுமே சொத்தை விற்க முடியும் என்றும் அதுவரை சொத்தில் வரும் வருமானத்தை அனுபவிக்கலாம் என்றும் எழுதி இறுதியாக சொத்துக்கள் அனைத்துக்கும் மருமகள் லட்சுமியை கார்டியனாகவும் நியமித்தார்.
ராஜீ இறந்து சொத்து விவரம் தெரிந்த பிறகு கோவிந்தனின் கோபம் முழுவதும் மனைவியின் மீதும் மகள்களின் மீதும் பாய்ந்தது. எப்போதும் மகள்களுக்கு சொத்தை பறிக்க வந்தவர்கள் என்ற திட்டு விழும் நான்கு வயதான குழந்தைகளுக்கு என்ன தெரியும், எதற்கு அப்பா திட்டுகிறார் என்று தெரியாமல் முழித்து அதற்காக அடியும் வாங்கிய பின்னர் இருவரையும் கோவிந்தனின் கண்ணில் படாமல் பார்த்துக்கொண்டார் லட்சுமி. இந்த சூழ்நிலையில் தான் கீதாவின் குடும்பம் அவர்களின் பக்கத்து வீட்டுக்கு வந்தனர். கீதா சுவாதி, மாலதி அனைவரும் ஒரே வயதுடையவர்கள் ஆதலாலும் விரைவிலேயே நட்பாகினர்.
மாலதி எப்போதும் அமைதி லட்சுமியுடனே இருப்பாள். சுவாதியையும் கீதாவையும் அடக்க முடியாமல் பெற்றோர்கள் திண்டாடுவார்கள். இருவரும் என்ன குறும்பு செய்தாலும் படிப்பில் முதலாவதாக இருப்பதால் இவர்கள் செய்யும் குறும்பை கண்டு கொள்ளாமல் இருந்தனர். இப்படியே இவர்களின் நாட்கள் சுதி,கீதுவின் குறும்பு தனத்திலும் மாலதியின் நாட்கள் அம்மாவுடனும் சென்று இதோ தோழிகள் இருவரும் நல்ல மதிப்பெண் பெற்று ஒன்றாக கல்லூரியில் சேர முடிவு செய்யதனர்.
மாலதி படிப்பில் சுமார்தான் என்றாலும் அவளும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று தேறினாள். அந்த நேரம் கீதுவின் தந்தை ராகவ்கு டெல்லியில் உயர் பதவியோடு டிரான்ஸ்பர் கிடைக்க மனம் இல்லாமல் தோழிகள் இருவரும் பிரிந்தனர்.
தில்லை நகர் ஐந்தாவது கிராஸ் இறங்குங்கள் என்ற கண்டைக்டரின் குரலில் தன்னிலை பெற்ற சுவாதி இறங்கியவள், இவ்வளவு நேரம் இல்லாத பயம் தன்னை சூழ்வதை உணர்ந்தாள். என்ன இது ஏன் எனக்கு இப்படி தோன்றுகிறது என்று யோசித்தவள் இல்லை சுவாதி இது போல் பயம் என்ற உணர்வே உனக்கு இருக்க கூடாது. உன் தாத்தா கூறிய தைரியம் என்ன ஆகிவிட்டது, உன்னை வேண்டாம் என்று யாரும் ஒதுக்கவில்லை நீதான் அவர்களை ஒதுக்கி வந்துள்ளாய் உன் தைரியம் எங்கே போனது, உனக்காக உன் குழந்தை இருக்கிறது என்று தனக்குள் கூறிக் கொண்டவள்.கீதாவின் வீட்டை அடைந்தாள்.
கேட்டை திறந்து உள்ள போனவளை வரவேற்றது தோழியின் ஆர்ப்பாட்டமான வரவேற்பு குரல்தான்.
ஹாய் சுதி எப்படி இருக்கிறாய்? அம்மா எப்படி இருக்கிறார்கள்? மாலதி எப்படி இருக்கிறாள்? அப்பா டிரான்ஸ்பர் கிடைத்து டெல்லி சென்ற பிறகு தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
அப்பா ரிட்டையர் ஆகி திருச்சி வந்ததும் உன் பழைய போன் நம்பர்கு டிரை செய்தேன் நல்ல வேளை நீ உன் நம்பரை மாத்தவில்லை. உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் தெரியுமா என்று சுவாதி பேச இடம் தராமல் பேசியவள், என்னடி நான் பாட்டுக்கு பேசி கொண்டிருக்கிறேன் நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய் என்றவளை, முறைத்த சுவாதி எங்க டி நீ பேச விட்ட? என்றாள் கிண்டலாக.
அசடு வழிந்த கீதா கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில், சரி சரி கிண்டல் பண்ணாமல் கேட்டதற்கு பதில் சொல் என்றாள் கெத்தாக.
பேசும் சத்தம் கேட்டு மகள் இன்று யாருடன் வம்பை ஆரம்பித்து இருக்கிறாள் என்று பார்க்க வந்த ராகவ் வாசலில் நிற்கும் சுவாதியை பார்த்து மகிழ்ந்து போனார். ராகவ்கு எப்போதுமே சுவாதி என்றாள் பிடிக்கும் அதற்கு காரணம் அவள் எப்போதும் தைரியமாக இருப்பதுதான். தப்பு என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் முகத்திற்கு நேராக கேட்டு விடுவாள். அதுபோல் பல முறை அவளின் தந்தை திட்டும் போது எதிர்த்து பேசி அடி வாங்கிக்கொண்டு வருபவளை ராகவ்வே பல முறை சமாதானம் பண்ணி வைத்துள்ளார். அப்பாவின் பாசம் என்ன என்பதை ராகவ்தான் சுவாதிக்கு காட்டினார். அதனால் சுவாதி ராகவ்வை அப்பா என்றே கூப்பிடுவாள்.
சுதி செல்லம் என்று ராகவ்வின் குரலில் தோழிகள் இருவரும் திரும்பி பார்த்தனர்.
ராகவ் இருவருக்கும் அருகில் வந்தவர் என்றும் இல்லாத திருநாளாய் மகள் ஆறு மணிக்கு எழுந்து தன்னுடன் பேப்பர் படிக்கிறேன் என்று வம்பிழுத்து கொண்டிருக்கும் போதே நினைத்தேன் என்ன டா இது இன்றைக்கு சூரியன் மேற்கே உதிக்க போகிறாரா என்று, நல்ல வேளை அப்படி எல்லாம் இல்லை என்ற ரீதியில் நீ வந்திருக்கிறாய் நீ வருவதாக முதலிலேயே தெரிந்ததால்தான் சீக்கரம் எழுந்திருக்கிறாள் என்று மகளை கிண்டல் செய்தவர்
என்ன கீது இப்படி வாசலிலேயே பேசி அனுப்பிவிட முடிவு செய்திருக்கிறாயா என்றார். அவளே இவ்வளவு நேரம் பயணம் செய்த கலைப்பில் இருப்பாள் இருவரும் வெளியில் நிற்க வைத்து பேசி கொண்டிருகிறீர்கள் என்று கூறியவாறு வந்தார் வள்ளி.
“வாம்மா சுவாதி” என்று வீட்டினுள் மூவரும் நுழைந்தனர். வள்ளி அனைவருக்கும் காபி கொண்டு வந்தார். மூவரும் ஆளுக்கு ஒரு டம்ளர் எடுக்க கீதா பயங்கர யோசனையில் இருந்தாள். கீதாவின் தாய் காபி குடிக்கும் போது என்ன யோசனை என்றார். சுவாதி வருவதை நான் உங்களிடம் சொல்லவே இல்லை ஆனால் நீங்கள் அப்பாவை போல் ஆச்சரியபடவில்லையே என்று கேள்வியாக தாயை பார்க்க அவரோ சிரித்துக் கொண்டே
சுவாதி வருவதை என்னிடம் சொல்லவில்லை அது போல் வீட்டு அட்ரஸை நீ சுவாதியிடம் சொல்லவில்லை நேற்று நீ கோவிலுக்கு போகும் போது உன்னுடைய போனை வீட்டிலேயே வைத்து விட்டு போய் விட்டாய் அப்போதுதான் சுவாதி அட்ரஸ் கேட்க போன் செய்தால் நீ இல்லாததால் நான் போன் எடுத்து பேசினேன். என்னிடம் அட்ரஸ் கேட்டு குறித்துக் கொண்டாள். அது மட்டும் இல்லை எத்தனை மணிக்கு என்றாலும் பஸ் ஏறும் போது போன் பண்ண சொன்னேன் போதுமா விளக்கம் என்றார் வள்ளி.
கீதாவோ தாயை பார்த்து வரவர வாய் அதிகமாயிடுச்சி வள்ளி உனக்கு ஒரு கேள்வி கேட்டாள், ஒரு பக்கமாகவா பதில் சொல்வாய் என்றாள். ராகவ்வோ சுவாதி வருவதாக என்னிடம் இருவருமே சொல்லவில்லை முதலிலேயே சொல்லியிருக்கலாம் இல்லயா, நாமே சென்று அழைத்துவந்திருக்கலாம்.
நான் சொன்னேங்க சுதிதான் எதுக்குமா அப்பாக்கு வீண் அலைச்சல் நான் மொழி தெரியாமல் முழிக்கவா போகிறேன் என்று கேட்டுவிட்டு திடீர் என்று வந்தாள் அப்பாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாதிரி இருக்கும்னு சொல்லிட்டா என்றவர் கோபமாக கீதாவின் பக்கம் திரும்பினார்.
வீட்டிற்கு சுவாதியை வர சொல்லி விட்டு அட்ரஸ் கூட சொல்லவில்லை கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்லை என்று திட்ட ஆரம்பிக்க வெயிட் வள்ளி என்றவள் வேகமாக அவளது அறைக்கு ஓடினால்.
இவள் எங்கு ஓடுகிறாள் என்று புரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கா, இருக்க இருக்க நீ சின்ன புள்ளைய பெரிய புள்ளைய என்ற வள்ளியின் குரல் கேட்டு வள்ளி என்ன இது என்பது போல் மகளை முறைக்க, கீதா குறும்பாக சிரித்துக் கொண்டே போன முறை என்னை திட்டும் போது என்ன சொன்னீங்க என்றாள் வள்ளியை பார்த்து.
வள்ளி என்ன சொன்னேன், என்பது போல் பார்க்க வயசாகிடுச்சுல அதனால மறந்திருப்பீங்க நானே சொல்றேன். என்னை திட்டி திட்டி ப்ரசர் வர போகுதுனு சொன்னீங்க இல்ல அதனால போன டைம் நீங்க திட்டும் போதே ரெக்கார்டு பண்ணிட்டேன் என்ற மகளை வள்ளி கொலை வெறியோடு பார்க்க ராகவ் மகளை மெச்சுதலாக பார்க்க இதை பார்த்த சுவாதி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கவில்லை என்றாலும் மெல்லிய புன்னகையை தவழ விட்டாள்.
வள்ளி சுவாதியை கவனித்து யோசனையில் ஆழ்ந்தார். சாதாரணமாய் கீதா வள்ளியை கிண்டல் செய்தாள் கீதாவை கிண்டலடித்து கீதா அம்மா தாயே தெரியாமல் சொல்லிவிட்டேன் ஆளைவிடு என்று கூறும் வரை விட மாட்டாள். ஆனால் இன்று ஏதோ யோசனையிலும் மெல்லிய புன்னகையோடும் அமர்ந்திருந்த சுவாதி புதிதாக தெரிந்தாள். ராகவ்வையும் கீதாவையும் பார்த்தார் அவர்களும் சுவாதியை ஆராச்சியாக பார்க்க இதை பற்றி பிறகு பேசலாம் என்று இருவருக்கும் விழியால் கூறினாள்.
கீதாவிடம் சுவாதியை அறைக்கு அழைத்து சென்று முகம் கழுவி வாருங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டே ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார். இவ்வளவு நேரமும் இவர்களிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் மூவரும் தன்னை ஆராய்ச்சியாக பார்த்ததை கவனிக்கவில்லை. கீதாவிடம் வள்ளி சொல்லியவுடன் எழுந்து வந்த கீதா அவளை தொட்டு உளுக்கும் வரை யோசனையிலேயே இருந்தாள்.
என்னடி யோசனை எத்தனை முறை கூப்பிடுவது வா போய் ரெபிரஸ் ஆகி வரலாம் என்றவளுடன் அமைதியாக சென்றாள். ஒருவழியாக அனைவரும் சாப்பிட வந்து அமர்ந்தனர். ஆனால் அப்போதும் சுவாதி எதுவும் பேசாமல் தீவிர ஆலோசனையில் இருக்க பெரியவர்கள் இருவரும் இவளின் முகம் பார்த்தாள் பிரச்சனை பெரிது என்று தெரிகிறது. இவள் அக்கா அம்மா எங்கே எதற்கும் இதுவரை வாய் திறந்து பதில் சொல்லவில்லை என்ற எண்ணத்துடன் சாப்பட்டு முடித்தார்கள்.
சாப்பிட்டு முடித்தவுடன் வள்ளி அனைத்தையும் எடுத்து வைக்க சுவாதி அவருக்கு உதவினாள். வள்ளி அவளை பயணம் செய்த கலைப்பு நீங்க உறங்க சொல்ல அவளோ பிடிவாதமாக எல்லா வேளையும் செய்தாள், அனைவரும் ஓய்வாக ஹால் சோபாவில் அமர சொல்வதற்க்கான நேரம் வந்ததை உணர்ந்தவள். அனைவரிடமும் சொல்ல தயாரானாள். அம்மா அப்பா நீங்கள் வந்ததில் இருந்து ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தீர்களே அதற்கான பதில் அம்மா அக்கா இருவருமே உயிருடன் இல்லை. சுவாதியின் குரல் மரத்து எந்த உணர்ச்சியும் காட்டாததாக இருந்தது. தன் வாழ்வில் நடந்த அனைத்து கஷ்டங்களையும் சொன்னவள், கைகளில் முகம் பதித்து அழ ஆரம்பித்தாள். சுவாதி கூறியதை கேட்ட அனைவரும் திகைப்பில் இருந்தனர். அவர்களின் முகத்தை நிமிர்ந்து பார்கும் திறன் அற்றவளாக,தான் கர்ப்பமாக இருப்பதை கூறினாள்,குரலில் சிறு தடுமாற்றத்துடன்.