Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14

14 – மனதை மாற்றிவிட்டாய்

அனைவரும் இரவு உணவு வேளையில் இருக்கும்போது சந்திரா கூறினார். “என்னங்க, நாளைக்கு ஈஸ்வரி அண்ணி, சோபனா, சுரேந்தர், சுபத்ரா எல்லாரும் வரங்களாம். அண்ணா மட்டும் ஊர்ல வேலை இருக்குன்னு அப்புறம் வரேனிருக்காங்க. சந்திரசேகரும் “ஓ. .. அப்படியா, இனி மேடம் நாளைல இருந்து புடிக்க முடியாது. அண்ணா பேமிலி எல்லாரும் வராங்க…” என அவரும் சிரித்துக்கொண்டே ஆமோதித்தார்.

சந்திரமதியின் பெற்றோர் மாணிக்கம் – செல்லத்தாய்க்கு 2 பிள்ளைகள் பெரியவர் பரமேஸ்வரன், அடுத்து சந்திரமதி. ஊரில் பண்ணை நிலம், தோப்பு என ஓரளவிற்கு செழிப்பாக வாழ்ந்தவர்கள் தான். சந்திரசேகரும் அதே ஊர் தான். இவரின் பெற்றோருக்கு நல்ல குணவதி மருமகளாக கிடைத்தால் போதும் என எண்ணியதால் அவர்கள் அளவிற்கு சொத்து இல்லாவிடினும் சந்திரமதியை மருமகளாக்க எண்ணினார். 2 குடும்ப பெரியவர்களும் பண்பு, பாசம் என ஒரே போல எதிர்பார்க்க அந்த வகையில் எந்த குறையும் யாருக்கும் இல்லை. சந்திரசேகர், சந்திரமதி திருமணம் சிறப்பாகவே நடந்தது. சேகரின் பெற்றோர்கள் அனு பிறந்த 2 வருடத்தில் அடுத்தடுத்து உயிர் பிரிந்தனர்.

சந்திரமதீயின் பெற்றோர்கள் தான் இனி குடும்பத்தில் மூத்தவர்கள் என்ற முறையில் சேகரும் அனைத்திற்கும் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க, மருமகன் மேல் எப்போதும் ஒரு மரியாதை, பெருமை. இப்போதும் ஊரில் மாணிக்கம் – செல்லத்தாயுடன் தான் பரமேஸ்வரனும் அவர்கள் குடும்பமும் வசித்துவருகின்றனர்.

அண்ணன் – பரமேஸ்வரன் ஒரு வாயில்லா பூச்சி. அம்மா, அப்பா, தங்கை இவர்கள் தான் உலகம். இப்பொது அவர்களுடன் தமது மனைவி மக்கள். அவராக எதையும் முடிவெடுத்து பேசமாட்டார். சண்டை வேண்டாம், பிரச்சனை வேண்டாமென ஒதுங்கியே வாழ்வார். பிறர் உடமைக்கு ஆசைப்படமாட்டார். ஏன் தன்னுடைதையே பிறருக்கு விட்டுக்கொடுத்துவிடுவார். கடிந்து பேச தெரியாது. தங்கை மீது மிகுந்த பாசம். பரமேஸ்வரத்தின் மனைவி ஈஸ்வரி அப்படியே கணவருக்கு நேர் எதிர். எப்போதும் பணம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். பிறர் உடமை என்றாலும் தனக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா? என ஆசைகொள்ளுவாள். சொற்கள் ஈட்டிகளாக பாயும். எவ்வளவு செய்தாலும் போதாது என்ற குணம். ஒருவகையில் சந்திரசேகருக்கும் தூரத்து உறவு முறைதான். கணவன் மனைவி இருவர் வகையிலும் உறவு அதோடு நல்ல பணம் செழிப்பாக வாழ்வதால் ஈஸ்வரி இவர்களிடத்தில் அதிக உரிமை என்று இங்கே வந்து , அதிகாரம் செய்வாள். அவர்களுக்கு மகன் சுரேந்தர், 2 மகள்கள், மூத்தவள் சோபனா, இளையவள் சுபத்ரா. சுரேந்தர் மென்பொருள் துறையில் 5 வருடம் வேலை பார்த்துவிட்டு, கொஞ்ச நாட்கள் கழித்து பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்ற நோக்கில் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான். சிறு வயது முதல் தாத்தா பாட்டியுடன் வளர்ந்ததால் அம்மாவின் பணத்தாசை, அடுத்தவரை மனம் நோக பேசுவது என தவறான போதனைகள் அவனுக்கு முழுமையாக இறங்கவில்லை. அவனும் அந்த வகையில் தந்தையை போலவே இருந்தான். பிறர்க்கு விட்டுக்கொடுத்துவிடுவான். போனால் போகட்டும் என்ற ரகம்.. ஆனால் தனக்கு பிடித்தவைகளை பிறர்க்கு கொடுக்கும் அளவிற்கு இல்லை. ஆனால் மகன் தன் போல இல்லை என்பதில் ஈஸ்வரிக்கும் கொஞ்சம் மனவருத்தம் தான். இப்படி இருந்தால் எப்படி பிழைப்பது என அங்கலாய்த்துக்கொள்வாள். அதனாலே அடுத்து பிறந்த மகள் சோபனாவை இவர்களுடன் இருக்கவிடாமல் அவளின் பிறந்தகம் அனுப்பி படிக்கவைத்தாள். அதற்கு மூத்தவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் சின்ன அண்ணாவிற்கு குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி அவர்கள் வளர்க்க ஆசைப்படுகிறார்கள் என கூறி அனுப்பிவிட்டாள். அவர்களிடம் இருக்கும் சொத்தும் வேண்டும் என்ற நப்பாசையில். சோபனாவும் அம்மாவிற்கு 2 மடங்காக வளர்ந்தாள். பிடிவாதம், பொய், நடிப்பு, தனக்கு வேண்டும் என்றால் எப்படியும் அடைந்தே தீருவாள். தான் அழகி என்ற கர்வமும் கூட. அவளது ஒப்பனைகளும் அதற்கு உதவின. அனைவரும் பொறாமை கொள்ளும் அளவிற்கு தான் எப்போதும் இருக்கவேண்டும் என எண்ணுவாள். பணமும் நீராய் வாரி இறைப்பாள். ஆதாயம் இல்லாமல் யாரிடமும் பேசக்கூட மாட்டாள். யாரையும் மதிக்கமாட்டாள். முதல் பேத்தியின் குணங்களை பார்த்த மூத்தோர்கள் அடுத்து பிறந்த சுபத்தராவை தங்களுடன் தான் வளர வேண்டும் என கூறிவிட்டனர். ஈஸ்வரியும் ஏதும் செய்ய முடியவில்லை. சுபத்ரா மூத்தவளுக்கு நேர் எதிராக வளர்ந்தாள், படிப்பு, விளையாட்டில் சுட்டி எப்போவும் முதல் தான். அமைதி, பொறுமை, பாசம், அதிர்ந்து பேச தெரியாதவள். இப்பொது கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கிறாள்.

இவர்களில் ஈஸ்வரி திட்டம் ஆதியை எப்படியாவது சோபனாவிற்கு திருமணம் செய்துவைக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் சொத்து வெளியே போகாது என்ற எண்ணம். சோபனாவை அதற்கு தயார் செய்தாள். அவளும் தன் அழகு, பிடிவாதம், திறமை அனைத்திலும் கொண்ட கர்வத்தால் ஆதியை என்னை சுற்றி வரவைக்கிறேன். என கூறி கிளம்பிவந்துவிட்டாள். சுரேந்தர், சுபத்ராவிற்கு அத்தை மாமா அவர்கள் குடும்பத்தை பார்க்கும் ஆவல். அதே போல திவியையும். 2 முறை இங்கே வந்திருந்த போதும் நல்ல பழக்கம். சுபத்ராவிற்கு திவி போல ஒரு சகோதரி தனக்கு வேண்டும் என்ற ஆவல், பாசமாக, வம்பிழுக்க, தனக்கு அறிவுரை கூற, அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்ற ஆசை. இவை அனைத்தும் சோபனாவிடம் எதிர்பார்த்து அவளுக்கு கிடைக்காமல் போனது. சுரேந்தர்க்கும் திவியின் மேல் ஒரு ஈர்ப்பு, பெரிதாக எதையும் வேண்டும் எனும் ஆசை கொள்ளாதவனுக்கு திவியின் பேச்சு, விளையாட்டு, அக்கறை என அனைத்திலும் கவரப்பட்டான். அடுத்து முறை எல்லாம் அவளை பார்ப்பதற்காகவே இங்கே வருகிறான். அவளும் சுந்தருடன் நல்ல நட்புணர்வில் பழகினாள்.

ஆதியை விட 4 மாதம் பெரியவன் சுரேந்தர். அவனும் சுரேந்தரும் ஒரே ஊரில் பள்ளியில் தான் படித்தார்கள். தாய் வழி, தந்தை வழி என இரண்டு பாட்டி தாத்தா வீட்டிலும் இருந்து வளர்ந்தவன் ஆதி. அதனால் செல்லம் அதிகமும்கூட. பாசம், பரிவு, பண்பு எந்த அளவிற்கோ அதே அளவு கோபம், பிடிவாதம், ஆளுமை அனைத்தும் கலந்த வாரிசாக திகழ்ந்தான். படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் ஆதி முதலிடம். வீட்டிலும் ஏதேனும் என்றால் ஆதிக்கு தான் முதலில். அதனால் ஈஸ்வரிக்கு தான் கோபம் வரும். “அவனே அப்போப்போ தானே கண்ணு வாரான். அதனாலதான், நீ பெரியவன் தானே” என பாட்டி கேட்க சுரேந்தர் அவைகளை பெரிதாக கண்டுகொள்ள மாட்டான். ஒரு வயது வரை இருவரும் ஒன்றாக இருந்தாலும் அடுத்து வளர வளர அவர்கள் பார்த்த விஷயங்கள் அவனுக்கு தான் எல்லாமே கிடைக்குதுன்னு சொன்ன பேச்சுகள் சுந்தரை ஆதியுடன் நெருங்கியும் பழகவிடாமல் பாதியிலேயே தடுத்தது.. இவனின் இந்த செய்கையோ, இல்லை இவர்களின் குணங்களோ இருவரும் ஒருவரிடம் ஒருவர் அதிக உரிமை எடுத்துக்கொண்டதில்லை, எட்டியே நின்றனர். ஆனால் இருவருக்கும் மற்ற அனைவரிடமும் அதிக அன்பு. சுரேந்தரும் சந்திரா அத்தை, சேகர் மாமா, அபி, அமுதா, அனு என அனைவரிடத்தும் ஒட்டுதலோடு இருப்பான். ஆதியும் சுபத்ரா, பரமசிவம் மாமா, தாத்தா, பாட்டி என அனைவரிடத்தும் நன்றாக பழகுவான். ஏனோ ஈஸ்வரி, சோபனா இவனை என்னதான் தங்கினாலும் இருவரிடமும் அவனால் ஒட்ட இயலவில்லை. அவர்களின் குணங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆதியையும், அவன் சொத்தையும் அடையறதுக்கு எனக்கு எதிரா யாரவது குறுக்க வந்தா அவங்கள என்ன வேணும்னாலும் பண்ணுவேன் என்ற நோக்கில் சோபனா, திவியை தன்னுடையவள் ஆக்கிக்கொள்ள என்னும் சுந்தர், திவி தனக்கு மட்டுமே என அவளோடு கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதி, இதை எதையும் அறியாமல் உறக்கத்திலும் ஒரு இன்முகத்தோடு இருக்கும் திவி. இதில் யாருக்கு ஏமாற்றம். யார் ஆசை நிறைவேறுமோ விதியிடம் தான் பதில்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 7ராணி மங்கம்மாள் – 7

7. வஞ்சப் புகழ்ச்சி வலை  இரகுநாத சேதுபதி தாம் மிகவும் சிக்கலான எதிரிதான் என்பதை நிரூபித்திருந்தார். மானாமதுரையிலேயே படைகளைத் தங்க வைத்துக் கொண்டு ரங்ககிருஷ்ணன் இராமநாதபுரத்துக்கு தூது அனுப்பியும் பயனில்ல்லை. போய் வந்த தூதுவன் இராமநாதபுரத்தில் பொறுப்புள்ள யாரையும் சந்திக்கவும் முடியாமல்