Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 08

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 08

8 – மனதை மாற்றிவிட்டாய்

வீட்டினுள் நுழைந்த ஆதி, திவி நந்துக்கு ரசகுல்லா ஊட்டிவிட, நந்து திவிக்கு ஸ்வீட் ஊட்டிவிடுவதை பார்த்து ‘குடுத்துவெச்சவன் நந்து’ என்று நினைத்துக்கொண்டு அவளை சீண்டும் விதமாக “ஏன் மேடம்க்கு இன்னும் குழந்தைன்னு நினைப்போ? ஊட்டிவிடாம அவங்களுக்கா சாப்பிட முடியாதாம்?” என்று வினவ இதற்காகவே காத்திருந்தது போல திவி வந்து “நாங்க இப்படி தான் எப்பவும் சாப்பிடுவோம். உங்களுக்கு ஏன் பொறாமை?” என்று வினவினாள்.

“ஆமா, இவளுக்கு ஊட்டிவிடவும், இவ ஊட்டிவிடறத சாப்பிடவும் 100 பேரு கியூல நிக்கிறாங்க பாரு, பொறாமைப்பட.” என்று ஏளனமாக கேக்க,

“என்ன கணக்கெடுத்திட்டு வந்த மாதிரி பேசுறீங்க, இதுதான் வேலையா?” என்று அவனை வெறுப்பேற்ற, அவன் “ஏய் … உன்ன..” என்று ஆதி அவளை நெருங்கிய வேளையில் சரியாக அவனுக்கு போன் கால் வர அவன் அவளை முறைத்தபடி அதோடு விட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான். அவளும் ஆதியை முறைத்துக்கொண்டே சென்று நந்துவிடம் மீண்டும் ஒட்டிக்கொண்டாள்.

இவர்களின் சண்டையை பார்த்த ஒவ்வொருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது. அபி அரவிந்திடம் , ” ஏதோ சும்மா கலாட்டா பண்ண ஆரம்பிச்ச பேச்சு, ஏனோ சண்டைல முடிஞ்சமாறி இருக்கு .. ” என்று அரவிந்தை பார்க்க அவனோ “ம்ம்.. ஏதோ சரி இல்லை” என்றான்.

அனு அமுதாவிடம் “அம்மு காலைல திவிய அண்ணா திட்டுனாண்ல, அதுனால தான் இப்போ திவி அண்ணாகிட்ட இப்படி பேசிட்டாளா?” என்று வினவ “ஒருவேளை இருக்கலாம். அவளுக்கு அந்த கோபமா கூட இருக்கும். ” என்று அமுதாவும் கூறினாள்.

சந்திரமதியோ தன் கணவரிடம் , ” ஏங்க, ஆதி திவிய அடிச்சத மனசுல வெச்சுட்டு தான் இப்படி பேசுறாளோ, அவ கோபப்படமாட்டாளே? ஆனா இப்போ அவ விளையாட்டுக்கு சொன்னத கூட ஏன் இப்படி சீரியஸ்ஸ எடுத்துக்கிட்டா.?” என்று பாவமாக வினவ சந்திரசேகரோ “ஏன் மா உன் புள்ளைக்கு மட்டும் தான் கோபம் எழுதி வெச்சிருக்கா. ஆதி அவள அடிச்சி, என்னவெல்லாம் பேசிருக்கான்னு உனக்கு தெரியாதா, இல்லை உன் புள்ளைங்கறதால மறந்திட்டயா ? நாம அவ்வளோ சொன்னதுக்கப்புறமும் அவன் ஒருவார்த்தை திவிகிட்ட மன்னிப்பு கேக்கல. ஆனா அவளை சீண்டி பேசமட்டும் தெரியுதா? அவ நமக்காக தான் இதோட விட்டிருக்கா, இதுல நீ அவமேல வேற கொரசொல்ற.” என்றதும் சந்திராவோ “நான் அவளை குறை சொல்லல. எனக்கு 2 பேருமே முக்கியம் தான். 2 பேருக்குள்ளையும் சண்டை வேண்டாம்னு நினச்சேன்.” என்றாள்.

அரவிந்த் அபிக்கு ஏதும் புரியாததால் அவர்கள் விழிப்பதை பார்த்து சந்திரசேகர் விஷயத்தை சுருக்கமாக சொன்னார், ஆதி திவியை அடித்ததை தவிர.. மகனை விட்டுக்கொடுக்க அவருக்கும் மனமில்லை.

ஆனால் அரவிந்த் கூறியது “ஆதி திவிய தப்பா நினைக்குற அளவுக்கு எல்லா சூழ்நிலையும் அமைஞ்சிடுச்சு ..எல்லாம் சரி மாமா, ஆனா 2 பேரோட இயல்பே மாறின மாதிரி இருக்கே.. ஆதி கோபப்படுவான் தான். ஆனா அது அவன் ரூட்ல கிராஸ் பண்ணி அவனுக்கு ப்ரோப்ளேம் வந்தா மட்டும் தான், மத்தபடி பெருசா எதுக்கும் ரியாக்ட் பண்ணமாட்டான். எல்லாரையும் கரெக்ட்டா எடை போடுவான். புது ஆள் யாருகிட்டேயும் இவனா வம்பிழுத்து பேசமாட்டான். ஆனா திவிகிட்ட வம்பிழுக்கறான். அவ மேல தேவைல்லாம கோபத்த காட்றான். திவியும் எதுக்குமே ரியாக்ட் பண்ணாம எல்லாத்தையும் சிரிச்சிட்டே ஏத்துக்கற பொண்ணு, யாரானாலும் இவளா போயி பேசுவா, ஆனா அவளும் இப்போ சாதாரண கமெண்ட்கே கோபப்படறா, வந்ததுல இருந்து ஆதிகிட்ட ஒரு வார்த்தைகூட பேசாம மூஞ்சி திருப்பிக்கறா, 2 பேரும் இப்படி மொறச்சுக்கிட்டு போறாங்க.

இரண்டு பேருமே நல்லவங்கதான் ..இவங்கள பாக்கிற எல்லாருமே இவங்களோட திறமை கேரக்டர்ர பாத்து ‘இவங்களால மட்டும் தான் இப்படி யோசிக்கமுடியுமோன்னு நினைக்கற அளவுக்கு இருக்கறவங்க ‘ அப்படிப்பட்ட 2 பேருமே இப்படி சண்டை போட்டா என்ன பண்ணறது.

சரி பாப்போம்.. புரிஞ்சுப்பாங்கன்னு நம்பலாம்.” என்றான்.

அதற்குள் திவியும், நந்துவும் விளையாடிக்கொண்டே வந்தனர். நந்து “பாட்டி நைட் என்னனென்ன டிஸெஸ் செய்யணும்னு நானும் திவியும் லிஸ்ட் சொல்றோம்” என்று சொல்ல அபி ,”ஏன் டா உங்க 2 பேருக்கும் எங்க அம்மாவ பாத்தா எப்படி தெரியுது, வேலை வாங்குறதுக்கு லிஸ்ட் போடற ஆளுங்கள பாரு” என்றவளை முறைத்துவிட்டு “பாட்டி நான் உங்க செல்ல பேரன் தானே. எனக்காக பண்ணித்தரமாட்டீங்களா ?” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவனிடம் “ஆமாடா தங்கம் உனக்கு செய்யாமலா?” என்று சந்திரா கூற அபி “அம்மா நீங்க செய்யாதீங்க ” என்க திவி “ஆமா அத்தை செய்யாதீங்க ” என்றவுடன் நந்து அவளை அதிர்ச்சியாய் பார்க்க அவளோ” நீங்க மட்டும் செய்யாதீங்க அத்தை அப்பு அம்மு எல்லாரையும் ஹெல்ப்புக்கு கூப்பிட்டு போயி செய்ங்க.” என்றதும் நந்து “திவின்னா திவி தான்” என்று கை அடித்துக்கொண்டனர் இருவரும். அரவிந்த் “டேய், திவி எனக்கு தான் தங்கச்சி உனக்கில்லை, கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம அவள பேர் சொல்லி கூப்பிட்ற ஒழுங்கா அத்தைன்னு கூப்புட்றா” என்றவனை பார்த்து நந்து ” அம்மாவ அம்மு சித்தி, அனு சித்தி எல்லாரும் பேர் சொல்லித்தானே கூப்பிட்றாங்க, உங்கள ஆதி மாமாவும் பேர் சொல்லித்தானே கூப்பிட்றாங்க, ஏன் ?” என்று வினா எழுப்பினான்.

என்ன சொல்வதென்று யோசித்து பதில் சொல்லாமல் விட்டாலோ, அதட்டினாலோ அவன் அசரமாட்டான் என முடிவெடுத்து அரவிந்த் ” அதில்ல நந்து கண்ணா, நான் ஆதிமாமா, அம்மா சித்தி எல்லாரும் பிரண்ட்ஸ் மாதிரி அதான் அப்படி கூபிட்டுக்கறோம்” என்றதும் நந்து “எனக்கு அப்போ திவி தான் இங்க பெஸ்ட் பிரண்ட் சோ அப்படித்தானே கூப்பிடனும்.” என்று அதே பதிலை கேள்வியாக நீட்ட அரவிந்த்க்கு தான் கடவுளே என்றானது. “இதெல்லாம் உனக்கு யாரு டா சொல்லித்தரது” என அனு வினவ நந்துவின் பார்வை திவியை நோக்கி செல்ல”திவிகிட்ட லாஸ்ட் டைம்மே இப்படி கூப்பிட சொல்றிங்க ஆனா எனக்கு அதைவிட திவி தான் ஈஸியா வருதுன்னு சொன்னேன். அப்போதான் திவி சொன்னா இனிமேல் இப்படி யாராவது சொன்னா இந்த மாதிரி கேள்வி கேளுன்னு ” என்று அப்பொழுது நடந்த படத்தை மீண்டும் எடுத்தான். அம்முவோ “அதானே பாத்தேன், உங்கிட்ட ட்ரெயினிங் வேறையா, அப்போ இப்படித்தான் இருப்பான்.” என்றவளிடம் திவி “கேக்றதுல தப்பு இருந்தா சொல்லி புரியவெய்ங்க பா. அதைவிட்டுட்டு சும்மா குறைசொல்லாதிங்க, அதுமில்லாம வெளி ஆளுங்களையோ இல்ல நம்ம வீட்ல மத்தவங்களையோ நந்து மரியாதை இல்லாம கூப்பிட்டுஇருக்கனா? அப்புறம் என்ன பிரச்சனை” என்று திவி வாதிட “என்னமோ பண்ணுங்க” என்று விட்டு சமையல் அறைக்குள் சென்றாள் சந்திரமதி.

இதை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதி எப்போதும் தன்னை பார்த்து பிறர் கற்றுக்கொள்ள வேண்டும், சொல்லி கற்றுக்கொள்ளக்கூடாது, அவரகள் நம்மை மதிக்கும் அளவுக்கு முதலில் நாம் நடந்துகொள்ளவேண்டும் என எண்ணுபவன். இப்போதும் அதேபோல் ஏனோ நந்துவின் கேள்வி, அதற்கு அனைவரும் முழித்த விதம், அவனது பதில் எல்லாம் சரியென தோன்ற சிரித்து கொண்டு இருக்க, இவை அனைத்தும் திவி சொல்லிக்கொடுத்தது என அறிய ஏனோ வந்த சிரிப்பு பாதியில் நின்றது. அதன் பின் திவி கூறியதை கேட்டவனுக்கு “அதுவும் உண்மைதான், நந்து அவளை தவிர பிறரிடம் மரியாதையோடு பேசுகிறான், திவியிடம் உரிமையோடு பேசுகிறான் என்று தெளிவாக புரிந்தது, தனக்கு அவளிடம் அந்த உரிமை எப்போது வரும் என எண்ணியவனுக்கு வந்தது என்னவோ பெருமூச்சு தான். ஆனால் ஏன் தனக்கு அவளிடம் உரிமை வேண்டும் என மனம் ஏங்கியதை யோசிக்க மறந்துவிட்டான் போல.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

KSM by Rosei Kajan – 14KSM by Rosei Kajan – 14

அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ…   [googleapps domain=”drive” dir=”file/d/1bUKaZkyxjfSdpbx69pJmoJwyHb6mbZJL/preview” query=”” width=”640″ height=”480″ /] Download WordPress Themes FreeDownload WordPress Themes FreeDownload WordPress Themes FreeDownload Best WordPress Themes Free Downloadfree online coursedownload

தையல் – 1தையல் – 1

வணக்கம் தோழிகளே, ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்’ என்று நம் முன்னோர் சொல்லிச் சென்றுள்ளனர். கற்றுக் கொள்வதற்கு வயது பொருட்டல்ல. ஆர்வமும், முயற்சியுமே முக்கியம். அந்த வரிசையில் தையல் கலைப் பற்றிய காணொளிகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்தத் தையல் விடியோக்கள் துணிகளைத்