Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 04

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 04

4 – மனதை மாற்றிவிட்டாய்

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து குளித்துமுடித்து ஆதியின் வீட்டிற்கு கிளம்பினாள் திவ்யா.ஒரு நிமிடம் அவரு என்ன பாத்தா என்ன சொல்லுவாரு. நேத்துமாதிரி கோபப்பட்டா என்ன பண்றது, மதி அத்தைக்கு தெரியாம பாத்துக்கணும், தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. எப்படியாவது இன்னைக்கு ஆதிய தனியா மீட் பண்ணி சொல்லிடனும், அவரு அம்மாகூட நான் சண்டை எல்லாம் போடல, தப்பா நினைக்கவேணாம் உங்கள மேரேஜ் பண்ற ஐடியாவும் இல்லேனு சொல்லி பிரண்ட்ஸ் ஆகணும் என்று சிரித்தவள் சரி மணி 6 தான் ஆகுது, எப்படியும் இப்போ எழுந்திரிச்சுக்க மாட்டாங்க. சோ அத்தைய பாத்திட்டு கொஞ்ச நேரத்துல வந்தடலாம்னு” நினச்சு கிளம்பினாள்.

அவள் நினைத்தது போலவே அனைத்து எதிராக நடந்தது. அவனும் அதிகாலை எழுந்து தோட்டத்தில் ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தான். இவள் போனதும் முதலில் சந்தித்தது அவனைத்தான். இவளை கண்டவன் இப்பவும் வந்திட்டாளா.. இவ அடங்கமாட்டா போல.. இவள என்று வேகமாக அவள் அருகில் வந்தான். அவள் “கொஞ்சம் நான் சொல்றத கோபப்படாம கேளுங்க, அத்த.. “என்று ஆரம்பித்தவளை, “போதும்… என்ன ஜென்மம் நீயெல்லாம், பணத்துக்காக இப்படியா? கொஞ்சம்கூட கூச்சமாவே இல்லையா ?” என்றதும் அவளுக்கும் கோபம் வர இருப்பினும் பொறுமையாக “கத்தாதிங்க… யாராவது கேக்கபோறாங்க, ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க. நான் பக்கத்து வீ…” என ஆரம்பித்தவளை “என் வீட்டுக்கு வந்து என்ன கத்தாதேனு சொல்ல நீ யாருடி என்று கத்தியதும் சந்திரா வெளியில் வந்தார். ஆதியோ அவளை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் செல்லப்பார்த்தான்.

அவள் “ப்ளீஸ், கைய விடுங்க வலிக்கிது” என்று சொல்வதை கேளாமல் இழுத்து செல்ல, சந்திரமதி “ராஜா, என்னடா இது அவள விடு” எனவும், “அம்மா நீங்க விடுங்க மா, இவ இஷ்டத்துக்கு உள்ள வரா, இவள மாதிரி பொண்ணுங்கள சும்மா விடக்கூடாது, நேத்து அடிச்சும் புத்தி வரல..எல்லாம் பணத்துக்காக …” என்றவனை சந்திரா அடிக்க கை ஓங்கியதை முதலில் பார்த்த திவி “அத்தை வேண்டாம்” எனவும் தான் அவன் பார்த்தான் அவன் அம்மா இவளுக்காக தன்னை அடிக்க வருகிறாளா என்றவன் கையை விட்டான். சந்திரா “வா திவி என்று அவளை உள்ளே அழைத்து சென்றாள்” திவி என்று பெயரை கேட்டதும் ஆதிதான் திகைத்து நின்றான்.

என்ன செய்வது இரவு இவர்கள் திவியை பற்றி சொன்னதையே நினைத்து படுத்தவனுக்கு அவளை பற்றியே எண்ணம் சுற்றி வந்தது. எப்படியும் காலைல வருவாள் நம்ம அவகிட்ட பேசணும். இவ்வளோ நாள் ஏன் இவங்க யாருமே அவள பத்தி சொல்லல என்றவன் சரி அதையும் அவகிட்டேயே கேப்போம் என்று ஒரு பட்டியலையே தயார் செய்து படுத்தவனுக்கு அதிகாலையில் உறக்கம் விலக தோட்டத்தில் அவள் வரவை எதிர்பார்த்து ஜாக்கிங் என்ற பெயரில் உலா வந்துகொண்டிருந்தான். அந்த நேரத்தில் இவளை கண்டதும் இவள் எங்கே திரும்ப வந்தாள். நேத்து அம்மாகிட்ட உங்க மருமகன்னு சொன்னமாதிரி இன்னைக்கு திவி முன்னாடி ஏதாவது சொல்லிட்டா திவி என்ன பத்தி என்ன நினைப்பா?” என்று எண்ணியதும் தான் அவ்வளோ கோபமும். ஆனால் இப்போது அவளுடனா நேத்திலிருந்தது சண்டையிட்டேன். இவள் தான் திவி என்று தெரியாமல் அடித்துவேறு விட்டேனே.. கண்டிப்பா அவகிட்ட மன்னிப்பு கேக்கணும் என்று யோசித்தவனுக்கு தன் தவறு புரிந்தது இருப்பினும் அவன் அம்மா அவனை அடிக்கவந்ததை எண்ணி கொஞ்சம் மனக்குமுறலோடு நின்றுகொண்டிருந்தான்.

அந்தநேரத்தில் தொண்டையை செருமிக்கொண்டு திவி வந்தாள் “என்ன ராஜா கொஞ்சம்கூட பொறுமையே இல்லையா, பாரு இப்போ உனக்கு தான் கஷ்டம் அத்தை உங்க மேல கோவமா இருக்காங்க, உங்ககிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டு இருக்காங்க..இதுக்கு மேலேயாவது அடுத்தவங்க பேசறத கேட்டுட்டு எதுனாலும் பண்ணுங்க சரியா?” என்று அவள் சொன்னதும் இவனுக்கு அடங்கியிருந்த கோபம் ஆவேஷமாக வெளியில் வந்தது.

“எனக்கு தெரியும். நீ உன் வேலைய பாரு, என் அம்மா என்கிட்ட பேசுவாங்க. அவங்க கோபம் நான் பண்ண விசயத்தாலதானே தவிர என் மேல இல்ல” என்றவனை

ஆச்சிரியமாக பார்த்தாள் ஒரு நொடி தான். பின்பு சிரித்து கொண்டு திரும்பியவளை அண்ட் இன்னொரு விஷயம் “டோன்ட் கால் மீ ராஜா. அது என் அம்மா, பாட்டி மட்டும் தான் கூப்பிடுவாங்க. வேற யாரும் என்ன கூப்பிட்டா எனக்கு பிடிக்காது.” என்றதும் மீண்டும் அவள் குறும்புடன் “தாங்க் பார் யுவர் இன்போர்மசன், எப்படியும் இனிமேல் அத்தை கூப்பிடமாட்டாங்க அதனால இனிமேல் இதுக்காகவே உங்களை நான் ராஜான்னு தான் கூப்பிடப்போறேன். ” என்று கண்ணடித்துவிட்டு சென்று விட்டாள்.

அவள் செல்வதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். இவகிட்ட போயா மன்னிப்பு கேக்கணும்னு நினச்சேன். சொல்றத கேக்றதுமில்லை, அதிகப்பிரசங்கி, என்னமா வாயடிக்கறா, அடுத்தவங்க பீல் பண்றங்களேன்னு கொஞ்சம்கூட எதுமில்லாம இப்படி வந்து குத்திக்காமிச்சிட்டு சீண்டிட்டு போறா. என் அம்மா இவளுக்காகத்தானே என்ன அடிக்கவந்தாங்க கொஞ்சமாவது ஒரு கில்ட்டிநெஸ் இருக்கா. ச்சா … இவளை எப்படி எல்லாருக்கும் புடிச்சதோ? என சந்தேகத்துடன் உள்ளே சென்றான்.

ஹாலில் சென்றுகொண்டு இருந்தவனை சந்திரா, “ராஜா வந்து காபி எடுத்துக்கோ டா, அப்புறம் காலைலைக்கு என்ன டிபன் செய்யட்டும்?” என்றார்.

அவர் தன்னுடன் சகஜமாக பேசியதோடு, ராஜா என்று எப்போதும் போல் அழைத்ததை கேட்டவனுக்கு மனது லேசானது. இருப்பினும் திவியை திரும்பி ஒரு ஏளன பார்வையை வீசினான். அதில் “பாத்தியா?.. என் அம்மா என்கிட்ட எப்போவும் போல பேசிட்டாங்க..உனக்கு எல்லாம் அவ்லோ ஸீன் இல்லேனு” சொல்லாமல் சொல்லியது. அந்த பார்வை.

அதை பார்த்து மெலிதாக புன்னகைத்த திவி அவனை இன்னும் வெறுப்பேற்ற எண்ணி “அத்தை, என்ன வா வா ன்னு கூப்பிட்டு உங்க பையனுக்கு உபச்சாரம் பண்ணிட்டு இருக்கிங்களா. அவரு தான் கூடவே இருக்கபோறார்ல, நீங்க எப்போ வேணாலும் செஞ்சுக்குடுத்துகோங்க அதனால எனக்கு புடிச்சது தான் இப்போ செய்யணும்” என்றாள்.

சந்திராவும்,”அதுவும் சரி தான், உனக்கு லீவே சனி. ஞாயிறு மட்டும் தான், சரி உனக்கு என்ன வேணும்னு சொல்லுடா மா, அதே செய்யறேன்” என்றார்.

திவி,” எனக்கு ஆனியன் நெறைய போட்டு தோசை, பணியாரம் வேணும் கொஞ்சம் தேங்கா சட்னி, புளி சட்னி, தேங்கா சட்னில ஆனியன் போட்டு தாளிக்கணும்” என்று லிஸ்ட் கொடுத்தாள்.

சந்திராவும் திவியின் கன்னத்தில் செல்லமாக அடித்துவிட்டு, ” உன்ன… எவ்வளோ ருசியா கேக்குது?,” என்று விட்டு சென்றாள்.

இதை பார்த்துக்கொண்டு இருந்த ஆதியோ “என்ன இவ, நம்ம வீட்ல வந்திட்டு நம்மளையே அதிகாரம் பண்றா, இந்த அம்மாவும் அவ கேக்கறது செய்யறேன்னு சொல்லிட்டு போறாங்க. எல்லாம் இவங்க குடுக்கிற இடம். சரி, இவ்வளோ நாள் எல்லாரையும் ஒரு ஒரு ரூட்ல இவ ஏமாத்திட்டா, இனிமேல் நம்ம பாத்துக்கலாம். இவள கொஞ்சம் தூரமா நிறுத்தி வெக்கிறதுதான் நம்ம மொத வேலையா இருக்கனும்” என்று முடிவெடுத்துக்கொண்டான்.

ஆனாலும் அவ கேட்ட எல்லா ஐட்டமும் எனக்கு மிகவும் பிடித்தவை, எப்படி ஒன்னு மாறாம அதே காம்பினேஷன்ல சொன்னா என்று யோசித்துக்கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க இவனும் வேகமாக சென்றான். டைனிங் டேபிளில் அனைவரும் திவியுடன் பேசிக்கொண்டு, கதை கேட்டுக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர். தன்னை பார்த்ததும் அவள் பேசுவதை நிறுத்திவிட்டு கீழே குனிந்து சிரித்துக்கொண்டு இருந்தாள். அனைவரும் அமைதியாக அதேபோல தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். இவனுக்கு பொறுமை பறக்க “என்னாச்சு, என்ன பேசிட்டுஇருந்திங்க, எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றான். ஒண்ணுமில்லை என்று திவி கூறவும், ஆதியோ “ஒன்னுமே இல்லாததுக்கா இவளோ நேரம் பேசிட்டு நான் வந்ததும் சிரிக்கிறீங்க ?” என்றான் அவளோ “அட, எதுவுமில்லை பா” என்றாள்.

ஆதியோ கொஞ்சம் காட்டமாக, ” இப்போ என்ன பேசுனீங்கன்னு சொல்ல போறியா இல்லையா ?” என்றதும், திவியோ நன்றாக ‘வாய் விட்டு சிரித்து விட்டு “நான்தான் சொன்னேன்ல” என்று அனு, அமுதாவை வம்பிழுத்துக்கொண்டிருந்தாள்.

அமுதாவோ, ” போ அண்ணா, எல்லாம் உன்னால தான். நீ ஏன் இப்டி பண்ண?, இது என்ன புது பழக்கம்?” என்றாள்.

அவள் பேசியதில் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் முழித்தவனை பார்த்து சந்திரசேகர் கூறினார், “இல்ல ஆதி, பொதுவா வெளியாள் கிட்ட தேவை இல்லாம ஆதி பேசமாட்டான், பெருசா யார்கிட்டேயும் ஏதும் கேக்கமாட்டான் , எதிர்பாக்கமாட்டான் , அடம்பிடிக்கமாட்டான்னு,ஆனா செமையா கோபம் வரும், வந்தா எதும் கண்டுக்காம பேசிடுவான் என்று சொல்லிட்டு இருந்தாங்க.. அதுக்கு நம்ம திவி சொன்னா, அப்படியெல்லாம் அந்த அளவுக்கு ஒண்ணுமில்லேனு சொல்லிட்டு இருந்தா. அதுல தான் ஆர்கியூ பண்ணிட்டு இருந்தாங்க., அதுக்கு அமுதா சொன்னா சரி என் அண்ணாவ உங்கிட்ட பேசவை பாக்கலாம்னு சொன்னா, நம்ம அனு ஜஸ்ட் உங்கள திரும்பி பாக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க. நீ வந்ததும், நேரா திவிய தான் பாத்த அண்ட் அவகிட்ட மட்டும் தான் பேசுன, ஒண்ணுமேயில்லண்ணு சொல்லியும் கேக்காம அந்த விஷயத்தை சொல்லுன்னு அடம்பிடிச்ச, அவள இன்னைக்கு தான் பஸ்ட் டைம் பாக்குற, ஆனா நல்ல சண்டைபோடற… சோ உன்ன பத்தி சொன்ன எல்லா ஸ்டேட்மெண்ட்ஸ்ம் திவி இல்லேனு ப்ரூப் பண்ணிட்டா, அதனால திவி தான் வின்னிங், திவி கேக்கிறத அமுதாவும், அனுவும் செய்யணும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

அமுதாவும், அனுவும், ” எல்லாம் அண்ணனாலதான், உங்கள நம்புனதுக்கு நாங்க தான் தோத்துட்டோம் என்றுவிட்டு திவியிடம் அண்ணனாலதானே இப்டி ஆச்சு, சோ எதுனாலும் எங்க சார்பா அவனே வாங்கித்தருவான், இதுதான் அவனுக்கு பனிஷ்மென்ட் ” என்றுவிட்டு அவனை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“ஸ்பெஷல் ஆ பாக்கணும்னு எல்லாம் பாக்கல. காலைலையே இவள பாத்துட்டேன். அம்மாகூடத்தானே இவளோ நேரமும் பேசிட்டு இருந்தா. இப்போ நீங்க எல்லாரும் வேற ரொம்ப கத்திட்டு இருந்திங்களே. அதான் யாரு குடும்பத்துல பிரச்சனை பண்ணிவிட்டதுனு பாத்தேன். அதுவும் வெளியாளா இருக்காங்களேன்னு” என்று கூறி நீ இந்த குடும்பத்தில் ஒருத்தி இல்லை என சொல்லாமல் சொன்னான் ஆதி.

அவனது நோக்கம் புரிய அதை கேட்டும் மெலிதாய் சிரித்தாள் திவி. அதுவே அவனை மேலும் சீண்டிவிட அவளை வெறுப்பேற்றவேண்டுமென நினைத்தான்.

அனைவரும் அவனை வெறித்து பார்க்க அவனோ கூலாக திவியிடம் திரும்பி ” நீ உங்க வீட்டுக்கு போகமாட்டீயா?” என வினவ திவி புருவம் உயர்த்தி அவனை பார்த்தாள்.

அவனோ தன் அம்மாவிடம் திரும்பி “ஏன் மா நம்ம வீட்ல எல்லாம் பொண்ணுங்கள இப்படி எங்கேயோ போகட்டும் எவ்வளோ நேரமானாலும் இருக்கட்டும்னு விடமாட்டீங்கள? ஒருவேளை சமாளிக்க முடியாம எங்கேயோ போயிட்டு பிரச்னை பண்ணிட்டு வரட்டும்னு நிம்மதியா உக்காந்துட்டாங்களோ? ம் ம்…என்ன சொல்றது எல்லாம் வளத்த.. …” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே திவி எழுந்து கை கழுவ சென்றாள்.

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வார்த்தை தவறிவிட்டாய் – 13வார்த்தை தவறிவிட்டாய் – 13

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதியில் பானுவுக்கு நீங்க தந்த சப்போர்ட் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். நன்றி நன்றி. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நிதர்சனத்தை பிரதிபலிப்பதாகவும், பானுவின் கதாபாத்திரம் மிக நன்றாக இருப்பதாய் நான் பெரிதும் மதிக்கும்  பெரியவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு

ராணி மங்கம்மாள் – 28ராணி மங்கம்மாள் – 28

28. மங்கம்மாள் சிறைப்பட்டாள் விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி மூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது.

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16

16 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மாலையில் பார்க்கில் சந்திப்பதாக அனைவரும் முடிவெடுக்க ஆதர்ஷ் நேராக அங்கே வர வாசுவும் ஏதோ வேலையாக விக்ரமை காண சென்றவன் விக்ரம், சஞ்சு அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கே வரவும் சரியாக இருந்தது. பிரியா, ரஞ்சித்,