Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62

உனக்கென நான் 62

“நீ யாருடா முதல்ல அத சொல்லு” என்றான் சந்துரு.

“இந்த பூபதிய மறந்துட்டியாடா? சரி உன்னதான் நான் மறக்கமுடியாது ஆனா நீ என்ன மறக்குறதுல தப்பு இல்லடா” என்று திமிராக பேச “யேய் பூபதி இப்ப உனக்கு என்னடா பிரட்சனை! பேசாம போயிரு”

“ஆமா டியூட் நான் பேசாம போயிடுறேன் ஆனா பூபதினா யாருன்னு உனக்கு தெரியனும்ல அதான் அந்த சுவேதாவுக்கு என் வாரிச குடுக்கலாம்னு இருக்கேன் முடிஞசா  காப்பாத்திகோபா”

“டேய் நீ ஒன்னும் பன்னு முடியாதுடா முடிஞ்சா பன்னிகோ” என திமிராக கூறினான் சந்துரு. குலைக்கிற நாய் கடிக்காது எனபதை இந்த பூபதி மூலமாக பார்த்தவன் சந்துரு அதானல் இந்த அலட்சியம் ஆனால் இது மிக பெரிய பிழை என அவன் உணர்ந்திருக்கவில்லை. கூடவே இனைப்பையும் துண்டித்தான். கார் வீட்டை நோக்கி விரைந்தது.

“என்னம்மா இங்கயும் செஸ் ஆரம்பிச்சுட்டியா?” என்ற குரல் கேட்க இருவரும் திரும்பிகொண்டிருக்க “அப்பா” என ஓடினாள் அன்பு. வாசலில் செருப்பினை கழற்றிகொண்டிருந்தார் போஸ்.

“அப்பா வாங்க” என சுவேதாவும் ஓடினாள். “அம்மா வாங்க யாரு வந்திருக்கா பாருங்க” என்ற சத்தம் யார் எழுப்பியது தெரியவில்லை. ஆனால் அதற்கு விடையாக பார்வதி வெளியே வந்தார்.

“என்னங்க எப்போ வந்தீங்க”

“நான் வர்ரது இருக்கட்டும்மா! நீ ஊருக்கு வர்ர ஐடியா இருக்கா” என கிண்டலாக கேட்டார்.

“டேய் போஸ் எப்ப வந்த” இது சன்முகம் சிறிய டீ கிடைக்கும் என வெளியே வந்தவருக்கு இவ்வளவு பெரிய சஸ்பென்ஸ் கிடைக்கும் என அறிந்திருக்கவில்லை.

“டேய் நான் இந்த பூமிக்கு வந்து பல வருசம் ஆச்சுடா” என போஸ் கூற “அப்பா சாமி உன்கிட்ட பேசமுடியுமாடா”

“அப்ப பேசாதடா” என புல் ஃபார்மில் இருந்தார் போஸ்.

“சரி எப்புடி வந்த”

“கடவுள் எனக்கு இறக்கை குடுத்துட்டாருடா கீழ மாதிரி மேல டிராபிக் இல்லப்பா ஒரு பிளைட்ல மோதுரமாதிரி போயிட்டேன் எனக்கு பக்குனு ஆகிருச்சு” என கூற “முடியலடா இன்னுமா இந்த மாதிரி கடிச்சுகிட்டு இருக்க? தங்கச்சி உன்கூட எப்புடிதான் இத்தனை வருசம் காலம் தள்ளுச்சோ” என புலம்ப

“பின்ன என்னடா பஸ்லதான் வந்தேன்”

“அட பாவி நீ வர்ரேன்னு தெரிஞ்சிருந்தா பிளைட் புக் பன்னிருப்பேன்ல”

“இல்லப்பா எனக்கு பஸ்தான் வசதி” என கையிலிருந்த அந்த தின்பன்டங்களையும் தன் மகளுக்கு பிடித்த பால்கவாவையும் கொடுத்தார். கூடவே “இத மறந்துட்டேன் பாத்தியா” என அந்த இடிச்ச புளிமாதிரி இருந்த பார்சலை குடூக்க அன்பு வாங்கினாள்.

“ஐ அப்பா கடலை உருண்டை” என கண்கள் விரிய ஆசையை அடக்க முடியாமல் ஒரு கையால் எடுத்தாள். அப்போதுதான் உணர்ந்தாள் தான் சிறு குழந்தை அல்ல என. அதனால் “இந்தாங்க அன்னி” என சுவேதாவிடம் நீட்ட

“ஐய்ய அன்னி இது பாக்கவே ஒருமாதிரி இருக்கு எனக்கு வேனாம்” என்று முகம் சுளித்தாள். “சுவேதாம்மா தின்னு பாரு நல்லா இருக்கும்” என போஸ் கூற சிறிதளவு கிள்ளி வாயில் போட்டாள். அதற்குள் “இது என் பங்குப்பா” என சன்முகம் ஒரு உருண்டையை எடுத்துகொண்டு கிளம்பினார்.

சுவேதாவின் முகம் சுவிட்ச் போட்ட பல்பு போல பிரகாசம் ஆகியது. “அப்பா சூப்பர்ப்பா செம்மயா இருக்கு” என ஆனந்தமாக கூற அன்பரசி கை வைத்தாள்.

“அன்னி கல்யானம் ஆனவங்களுக்கு இது கிடையாது அதனால உங்களுக்கும் அன்னாக்கும் சேத்து நான் தின்னுகிறேன்” என முழுதாக தூக்கிகொள்ள அரிசிக்கு ஏமாற்றம் இருந்தாலும் சுவேதா தன் மகள் அல்லவா அதனால் மகிழ்ந்தாள்.

“இந்தாங்க அன்னி நீங்க எடுத்து குடுங்க” என அரிசியிடம் கொடுக்க அனைவருக்கும் கொடுத்தாள். அனைவரும் அங்கு அமர்ந்து கடலை உருண்டையுடன் அரட்டையை துவங்கினர்.

“ஆமா அப்ப இது இவ்வளவு டேஸ்டா இருக்கு எப்புடி பன்னுவாங்க” ஒரு விசயம் பிடித்துவிட்டது என்றால் அதை முழுவதுமாக அறியும் ஆவல் அவளுக்கு.

“இது கடலை சீசன்மா நம்ம ஊர்ல அதனால விதப்புக்கு எடுத்து வச்சிருந்த தானியத்த குலுக்கைல இருந்து எடுப்பாங்க இப்ப நம்ம காட்டுல கடலை”

“அப்பா குலுக்கைனா அந்த பெரிய வீட்டல பெரிய சைஸ் சிலின்டர் மாதிரி இருந்துச்சுல அதுதான” என்று கேட்க

“ஓஓ சுவேதா அத நீ பாத்துருக்கியா”

“ஆமா கிராமத்தோட ஸ்டோரேஜ் யார்ட்”

“ம்ம் அதுதான் அதுல கடலைய எடுப்போம். அப்புறமா ஊர்கூடி உட்காந்து அரட்டை அடிச்சுகிட்டு கடலைய உடைச்சு விதைய பிரிப்போம். அப்புடி உடைக்கும் போது சில பருப்பு ரெண்டா உடஞ்சிடும்மா அத பாட்டிங்க எடுத்து வச்சிருப்பாங்க பின்ன விதச்சதுக்கு அப்புறமா சும்மா இருக்குற நேரத்துல கேப்பைனு ஒரு தானியம் நீ பாத்துருக்க மாட்ட. அத மாவா அரச்சு ரொட்டி சுடுவாங்க”

“அப்புறம் அப்பா?” சுவேதா ஆர்வமானாள்.

“அப்புறம் இந்த கடலைய வருத்து கூட இந்த ரொட்டி அப்புறம் வெல்லம் போட்டு உலக்கைய வச்சு இடிப்பாங்க இப்ப நீ சாப்புடிறியே அந்த மாதிரி பதத்துக்கு வர்ர வரைக்கும்”

“ஓ இதுல இவ்வளவு வேலை இருக்கா அதான் டேஸ்டா இருக்கு” என சுவேதா சுவைத்துகொண்டே கூறினாள்.

“அப்புறம் நீ சாப்புடும்போது முகத்து சுளிச்ச?”

“அது பாக்க புளி மாதிரி இருந்துச்சு அதான் அப்பா அப்புடி இப்ப குடுத்து பாருங்க யாருக்கும் இருக்காது. அப்புறம் இடிச்ச அந்த பாட்டிக்கு தங்க வளையல்தான் போடனும் மெச்சினாளா சுவேதா”

“என்னமா நீங்களே சாப்புடுறீங்க மாப்பிள்ளைக்கு எடுத்து வைங்க! ஏ பார்வதி சின்ன புள்ளைங்க ஆசையில சாப்புடுதுங்க உனக்காவது மாப்பிள்ளைக்கு எடுத்து வைக்க தோனுச்சா” என திட்ட அங்கிருந்த அனைவருக்கும் சுருக்கெ இருந்தது.

கல்யானம் ஆனதிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என்று எப்படி கூற முடியும் தன் தந்தையிடம். “இல்லப்பா அவரு வர லேட் ஆகும்பா”

“இது என்னமா கெட்டா போக போகுது எடுத்து வை”

“அது வந்துப்பா” என தயங்கினாள்.

“அதான் வந்துட்டேனே” என வெளியிலிருந்து ஒருகுரல் வர திரும்பி பார்த்தனர்.

அங்கு சந்துரு நின்று கொண்டு சூவை கழற்றினான். கூடவே “எனக்கு தராம உள்ள என்னப்பா சாப்புடுறீங்க” என சிரித்தான். அவனை பார்த்த அரிசி பசுவை பார்த்த கன்று போல மின்னலென ஓடி அட்டையாக அவன் மேல் ஓட்டிகொள்ள அவன் அவளை தூக்கி ஒரு சுழற்று சுழற்றினான்.

“பாத்தியாடி நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளைமேல எவ்வளவு பாசம் நீயும் இருக்கியை உருகி உருகி காதலிச்ச ஆனா ஒரு மாசத்துல மாமாங்குற மரியாதையே போக்கிட்டியேடி! உன் பொண்ண பாத்து கத்துக்க” என பார்வதியின் காதில் ரகசியமாக ஓதினார்.

அரிசிக்கு அழவேண்டும்போர இருந்தது ஆனால் அப்பா முன் அழுதால் பிரட்சனை என்பதை புரிந்திருந்தாள. அதனால் அமைதியாக இருந்தாள். “அப்பாகிட்ட எதுவும் சொல்லலையே” என சந்துரு கேட்க

“இல்லைங்க” இப்பதான் வந்தாங்க”

“அப்ப அப்போவே வந்துருந்தா எல்லாதையும் சொல்லிருப்ப?” என சிரித்தான்.

“என்ன மாப்பிள்ள ரகசியம்”

“அப்பா புருஷன் பொண்டாட்டிகுள்ள ஆயிரம் இருக்கும் அது ஏன் உங்களுக்கு” என சுவேதா நகையூட்ட “ஆமா எனக்கு எதுக்குப்பா ஊரு வம்பு” என போஸ் பதுங்க அந்த இடமே சிரிப்பால நனைந்தது. ஆனால் அது அதிக நேரம் நீடிக்க போவதில்லை.

அன்பை அனைத்தபடி வந்தவன் அவள் காதில் ரகசியமாக “இனிமே நான் உன்ன விட்டு போக மாட்டேன் சரியா” எனகூற அவளுக்கு ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி.

“ம்ம் மாமா என்ன திடீர்னு”

“உங்க அத்தய எழுதிகுடுத்துட்டுபோகலாமுனு வந்தேன் மாப்புள்ள”

“அங்களதான் அன்புகூட எங்களுக்கு இனாமா தந்துட்டீங்கள்ள அப்புறம் என்ன” என சுவேதா முடித்தாள்.

“அப்ப நீயே வச்சுகோமா என்ன அடுத்த பஸ்ல ஏத்திவிட்டுடுங்க” என அவரும் சலைக்கவில்லை.

“இப்ப நீங்க இங்க வந்துட்டீங்கள்ள உங்களையும் குத்தகைக்கு எடுத்தாச்சு” என சுவேதா கைகலால் அனைத்துகொண்டாள் சன்முகத்தை.

“என் மறுமக இல்ல மக என்ன அரஸ்ட் பன்னிட்டா யாராவது ஜாமின் எடுக்க முடியுமாப்பா” என பறிதாபமாக கேட்டார்.

“இங்க ஒருத்தி இருக்கேனே ஒருமாசம் ஒரு ஃபோன்கூட பன்னல நீங்க உங்களுக்கு அரஸ்ட்தான் நீ விடாதமா” என பார்வதி சுவேதாவிடம் கூற மேலும் பிடியை இறுக்கினாள்.

சிரிப்பு சத்தங்களுக்கு ஊடே அந்த காரின் சத்தம்கேட்க சிறிது நேரத்தில் சுகு வந்தான். “வாடா சுகு” இது சந்துரு.

அவன் எதுவும் பேசாமல் சுவேதாவின் கையை பிடித்து இழுக்க அவள் நழுவி கொண்டு சந்துருவின் பின்னால் ஒழிந்துகொண்டாள். “சுவேதா இப்ப நீ வர்ரியா இல்லையா” என்றான் எரிச்சலாக.

“டேய் இருடா என்ன பிரட்சனைடா” இது சந்துரு

“சுவேதா “ என மீண்டும் அழைத்தான் அவள் முகத்தில் பயம் தெரிந்தது.

“சுகு என்னப்பா பிரட்சனை சுவேதாவ ஏன் கூப்பிடுற அதுவும் இவ்வளவு கோபமா”

“அன்கிள் இவளுக்கு ட்ரீட்மன்டுக்கு நான் எல்லாவேலையும் பாத்துட்டேன் ஆனா நான் சாக வேண்டியவ சுகு என்ன சாக விடுன்னு சின்னபுள்ள மாதிரி அடம் பிடிக்குறா”

“சுவேதா போயிட்டு வாம்மா அவன் உன் ஹெல்த்துக்குதான கூப்பிடுறான்”

“இல்லடா அண்ணா இப்பதான் எனக்கு ஒரு குடும்பம் அண்ணன் அண்ணி அப்பா அத்த மாமான்னு கிடச்சு சந்தோஷமா இருக்கேன். அங்க ஆபரேஷன்ல எதாவது தப்பு நடந்து நான் உங்கள திரும்ப பாக்கமுடியாம போயிருச்சுனா அதான்டா என்ன ஒரு ரெண்டு வருசம் உங்க்கூட வாழ விடுங்க நான் அப்புறம் நிம்மதியா செத்துடுவேன்டா! இந்த சுவேதாங்க்குற வாழ்கைக்கு இது போதும்” என கண்ணீர் முட்டியது.

ஆனால் சுகுவுக்கு தன் காதலியை சுகமாக்க வேண்டும் என்ற ஆதங்கம். ஆனால் அவள் ஒத்துழைக்கவில்லை.

“சுவேதா உன் நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகாதுமா நீ நூறு வருசம் எங்க்கூட வாழுவ” என போஸ் கூற சன்முகம் வெளியே வந்திருந்தார். “இல்ல அப்பா” என அழுதாள்.

“அன்னி நீங்க சந்தோஷமா இருந்தாதான உங்க அண்ணா நிம்மதியா இருப்பாரு ப்ளீஸ் போயிட்டு வாங்க அன்னி நீங்க எங்க்கூடதான் வாழனும் உங்கள பாக்காம என்னால இருக்க முடியாது” என்றாள் அரிசி.

அனைவரின் நோக்கமும் சுவேதாவின் நலனை நோக்கி திரும்பியிருக்க அவளுக்கு எப்படி தப்பிக்க என்று தெரியவில்லை. “சுகு உன்கூட நான் வர்ரதுக்கு என்ன உரிமை இருக்கு எனக்கு” என கோபமாக வார்த்தையை விட்டாள். விருப்பமில்லா விசயத்தில் காதலனாக இருந்தாலும் அழுத்தம் கொடுக்கும் போது அழுகையும் இயலாமையும் கோபமாக வெளிவர கத்தினாள்.

ஆனாலும் அவன் அவ்வாறு செய்திருக்ககூடாது. சிறிதுநேரம் என்ன செய்வது என்று தெரியாது சுகு. சட்டேன ஏதோ யோசித்து பூஜை அறைக்கு சென்றான். பின் சுவேதாவின் கையை பிடித்து இழுத்து சென்று காவேரியின் புகைபடத்தின் முன் நிற்க வைத்து அங்கு எடுத்த அந்த மஞ்சள் கயிற்றினை அவளுது கழுத்தில் கட்டிட சுவேதா திகைப்பில் சிலையாக நின்றாள்.

“இப்ப நான் உன் புருஷன் போதுமாடி” என சுகுகூற அனைவரும் ஆனந்தமாக மாறினர்.

“என்ன பாக்குற விசாகூட உன்ன என் பொண்டாட்டின் பதிஞ்சுதான் வாங்குனது” என அவன் கூற அவர்கள் ரகசியமாக பத்திரபதிவு திருமனம் செய்த சான்றிதழ் அவனிடமிருந்ததை உணர்ந்தாள். அதறுகு சான்றாக இருவரிடமும் ஒரே மாதிரியான வைர மோதிம் கையில் மின்னும் கேட்டால் இது என் லவ்வுக்கு அடையாளம் என சமாளிப்பதுண்டு. ஆனால் அதுதான் இவர்களின் திருமன சாட்சி என யாரும் அறிந்திருக்கவில்லை. இன்று சுவேதாவின் சொந்தங்களின் முன்னிலையில் தாலிகட்டி அவளை தன் மன எனும் கூட்டின் அரிசியாக ஆக்கிவிட்டான் சுகு எனும் சுகுமார்.

உடனே சுவேதா சுகுவின் தோளில் கண்ணீருடன் சாய்ந்துகொள்ள அது ஆனந்த கண்ணீர். எனக்கெல்லாம் திருமனம் ஒரு தேவையா என நினைத்துகொண்டிருந்தவளின் மனதில் இந்த தாலி ஒரு நொடியில் புது பந்தம் ஏற்படுத்திவிட்டது. அதை உணரும்போது கண்களில் ஆனந்த கண்ணீர்.

“எங்க அம்மா அப்பா” என போஸ் பார்வதி காலில் விழ “நல்லா இருங்கப்பா” என ஆசிர்வாதம் செய்தனர். பின் சன்முகத்தின் காலில் விழுந்தனர். “காவேரி உங்கள நல்லா வச்சுக்குவாம்மா” என அவர் வாழ்த்த.சந்துரு அன்பின் காலில் விழ முனைந்தனர் “ஏய் என்னடா இது” என சந்துரு கூற “அன்னி நீங்க எனக்கு அம்மா மாதிரி” என சுவேதா கூறவே “நல்லா இருப்பீங்க அன்னி உங்க அண்ணா நல்லா பத்துகுவாரு” என அன்பு கண்ணீருடன் கூறினாள் முதல்மகள் திருமனம் அல்லவா.

சுகு அவளை பார்த்துவிட்டு நடக்க அவன் பின்னால் குழந்தையென நடந்துசென்றாள். நரகத்துக்கே என்றாலும் அவன் பின்னால் செல்வதில் மகிழ்ச்சி அவளுக்கு.

சுகு காரில் ஏற சுவேதாவும் ஏறிகொள்ள இருவரும் சிரித்தனர் பின் கார்  சுகுவின் வீட்டை நோக்கி புறப்பட சந்துரு அனைவரையும் அழைத்துகொண்டு தனது காரில் சுகுவின் வீட்டை நோக்கி சென்றான். கூடவே கோபியிடம் சொல்லி நந்தினி அம்மாவை கூட்டி வரவும் ஏற்பாடுகள் தயாரிகிவிட்டது.

சுகுவையும் சுவேதாவையும் பார்த்த அவனுது தங்கை “அம்மா இவன் என பன்னிட்டு வந்துருக்கான் பாரு” என கோபத்துடன் கத்திகொண்டு ஓடினாள். அதற்குள் சந்துரு என அனைவரும் வர சுவேதாவிற்கு உள்ளூர பயம். இவங்க ஜாதி பாப்பாங்கள்ள அன்னைக்கு ஃபோன்ல கூட அப்புடி பேசுனாங்க. நீ யாரடி என் பையன கட்டிகிறதுக்கு அப்புடின்னு என்னவெறுத்து ஒதுக்குனாலும் பரவாயில்ல ஆனா சுகுவ ஒதுகிட்டாங்கன்னா நான் என்ன பன்றது. என வேதனையில் வாடினாள். இருவரும் வாசலில் நிற்க சந்துரு இருவரையும் தனது ஹெஸ்ட் ஹவுசில் தங்கவைக்கலாம் என மனதில் எண்ணங்கள் ஓடின எப்படியும் துரத்த போகிறார்கள் அதற்குள் ஆசிர்வாதம் வாங்கிகொள்ளளாம் என நினைத்து வந்திருப்பான் போலும் சுகு.

சிறிது நேரம் செல்ல சுகுவின் தாய் “இந்த தீப்பட்டிய எங்கதான் வப்பாளோ” என திட்டிகொண்டே கையில் ஒருதட்டுடன் வந்தார்.

ஆரத்தி எடுத்துகொண்டே “என்னமா அத்தய பாக்க இப்பதான் நேரம் கிடைச்சதா” என சிரித்துகொண்டே இருந்தவர். பின்னால் சுகுவின் தங்கை நிற்க “அன்னி உங்களுக்க வந்த கவிதை இவனோது இல்ல அதுக்கு ராயல்டி எனக்குதான் நீங்க குடுக்கனும் இந்த முன்டம் கம்ப்யூட்டரும் கையுமா சுத்தும் அதனால சேட் பன்னு அப்புடின்னு என்கிட்ட ஃபோன குடுத்துட்டு போயிடும் நானும் அவன் பேசற மாதிரி உங்க்கிட்ட பேசிகிட்டு இருப்பேன்! அட போங்கப்பா உங்க லவ்வுக்கு ஹெல்ப் பன்னி எனக்கு லவ் செட் ஆகலப்பா அம்மா நீதான் நல்ல பையனா கட்டி வை” என கூற “படிக்குற வயசுல பேச்சப்பாத்தியா இவளுக்கு அடி கழுத” என திட்ட சுவேதா குழப்பத்தில் இருந்தாள். அவளது குழப்பதை புரிந்த சுகு சிரித்தான்.

“டேய் அன்னா எப்ப பாத்தாலும் அன்னிகூட கடலை போடுறதுக்கு பேசாம இங்க கூட்டகிட்டு வந்துடுடா” எனற தன் தங்கையின் குரலை ஒருகாதில் வாங்க மறுகாதில் சுவேதா பேசிகொண்டிருந்தாள்.

ஃபோனை கையால் அழுத்தியவன் “நான் கூட்டி வரு ரெடியாதான் இருக்கேன் அவதான் ஒத்துக்க மாட்டேங்குறா”

“சரி சும்மா விளையாடலாமா”

“என்ன!!”

“நான் அப்புறம் கூப்புடுறேன்னு சொல்லு” என அவள்கூற ஃபோனை காதில் வைத்தான்.

“அம்மா கூப்பிடுறாங்க சுவேதா நான் அப்பறமா கூப்பிடுறேன்” என அவன் கூற ஃபோனை பிடுங்க சத்தமாக போட்டு தன் தாயிடம் சென்றாள்.

“அம்மா இவன் யாருகூடயோ கடலை போடுறான்” என தங்கைதன் தாய்க்கு கண்ணடித்து சிக்னல் செய்ய அவர் புரிந்துகொண்டார்.

யாருடா அந்த சிறுக்கி உன்ன வழச்சு போட பாக்குறாளா! இந்த குடும்பத்துக்கு மறுமகளா வர்ரதுக்கு ஒரு மதிப்பு வேனும்

தங்கச்சிஆமா அம்மா இவன் ஒயிஃப்னு போட்டு ஒரு நம்பர்ல பேசிகிட்டே இருக்கான்மா என அவள் கூற இனைப்பை துண்டித்தாள் சுவேதா.

“என்னடா அன்னி கோவபட்டுடாங்களோ”

“ஆமா உங்கள வச்சுகிட்டு ஒரு லவ் நிம்மதியா பன்ன முடியுதா இப்ப நான் எப்படி அவள சமாதானம் செய்யபோறேனோ” என சுகு புலம்ப “நான் வேன ஹெல்ப் பன்றேன் அண்ணா”

“ஆமாடா ஃபோன் போடு நான் சேத்து வைக்குறேன்” என தாய் கூற “நீங்க ரெண்டு பேரும் பன்னது போதும் நான் பாத்துகுறேன்” என தலைமேல் கைகூப்ப “சரி போ அன்னி அழகா இருந்தா நீ தப்பிச்ச இல்லைனா செத்தடா” என தங்கை கூற “உன்னவிட அழகான தேவதை அவ” என தங்கையை சீண்டினான். இப்படியாக செல்ல சண்டைகள் தொடர ஃபோன் அடித்தது. “ஹலோ மஞ்சு சொல்லு”

“யாருடா அது அடுத்த லவ்வரா” என தங்கை கேட்க வாயில் விரல் வைத்தான்.

“சுகு சந்துருக்கு கல்யானமாம் நிச்சயம் பன்னபோராங்களாம்”

“அட ரஸ்கல் ஒரு வார்தைகூட சொல்லல எனகிட்ட”

“அதான் சுவேதா உன்கிட்ட சொல்லுறேன்னு சொன்னா சொல்லையா”

“இல்ல மஞ்சு அதுக்குள்ளதான் எங்கவீட்டுல ரெண்டு இருக்கே இதுங்கள வச்சுகிட்டு சரி நீ எப்ப கிளம்புற”

“ஆன் தி வேடா சுவேதாவ பிக்கப் பன்ன போய்கிட்டு இருக்கேன”

“ஓகே ஐ ஜாயின்” என்ற சம்பவம் ஓட சுகுவின் மனைவி சுவேதாவ மட்டம் குழப்பத்தில் நின்றாள். அதற்குள் “அப்பா கங்க்ராட்ஸ” என சுகுவின் தங்கை ஃபோன் போட

“எதுக்குமா உனக்கு தம்பி பாப்ப பிறக்கபோறானா” என்றார் சிரித்துகொண்டே

“அதுக்கு உன் ஒயிப் சரியா வராது நீ வேற கல்யானம் பன்னாதான்”

“வேற என்ன”

“நீங்க மாமானார் ஆகட்டீங்க”

“என்னமா சொல்லுற”

“என்ன சந்தேக படாதீங்க உங்க பையன்தான் சுவேதா அன்னிய வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டான் கழுத்துல தாலியோட”

“வாவ் சூப்பர் ஓகே நான் ரிசப்சனுக்கு ஏற்பாடு பன்னுறேன். அப்பாட நிம்மதியா இனி இவன் அருவையில இருந்து தப்பிச்சு தூங்கலாம்பா” என இனைப்பைதுண்டிக்கும் நேரம்.

“இந்த முறை ஒத்துகிறேன் அன்னி என்னவிட அழகுதான் அவங்க போட்டோ அனுப்பிருக்கேன் வாட்ஸ்அப்ல பாத்துகோங்க”

“ஓகேமா”  என வைத்தார். பின் அவள் திருமனஜோடிகள் இருவரையும் தன் மொபைலில் ஒரு கிளுக்கிளுக்கினாள்.

அப்புறம் நந்தினி வந்து கண்ணீருடன் திருமனம் வைக்க “அத்த சுவேதா அன்னி மாதிரி உங்களுக்கு அழகான பையன்லாம் இல்லையா”

“ஏன்மா”

“இல்ல எனக்கு செட்பன்னி விட்டீங்கன்னா நல்லா இருக்கும் வயசு கம்மியா இருந்தாலும் பரவாயில்ல” என கூற சிரிப்பொலி அதிர்ந்தது. அனைவரின் உள்ளமும் நிறைய முழுமனதுடன் தன் வீட்டை அடைந்தனர் அனைவரும். சுகுவின் வீட்டில் சிறிய அளவில் கல்யான பந்தி நடந்த்தால் அங்கு சாப்பிட்டு விட்டு வந்திருந்தனர். “மச்சி ரிசப்ஸன்ல மாஸ் காட்டிடுறேன்” என சுகு வாக்கு கொடுத்துள்ளான்.

மனதும் வயிறும் நிறைய இங்கு வந்திருந்தனர். சந்துருவும் அரிசியும் தங்களது அறைக்குள் செல்ல “அரிசி மேடம் எதாவது கதை சொல்லுங்க” என்றான்.

“அதான் ஆபிஸல உங்களுக்க கதை சொல்ல ஆள் இல்லையா அதான் ஒருமாசமா இருந்தீங்கள்ள”

“அடி பாவி! அப்ப நீ சொல்ல மாட்டியா” என கூற அவள் அங்கிருந்த ஒரு மேஜையில் அமர்ந்துகொண்டு டைரி படிப்படுபோல் நடத்தாள். இவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்தாள். “நான் சொல்ல மாட்டேனபா”

“ம்ம் அப்ப நீ சேட்ட பன்ன கத எதாவது சொல்லு”

“நான் சேட்டலாம் பன்னலங்க”

என்ன கோவமா இருக்காளா என மனதில் நினைத்தவன் தன் அருகிலிருந்த டெடிபியரை திரும்பி உட்காந்திருந்த அரிசியின் மீது தூக்கி எறிந்தான்.

அந்தபுறமாக சிரித்துகொண்டிருந்தாள் தன்னவனின் அடுத்த நடவடிக்கை என்ன என்று அரிய ஆவளாக.

“அது கீழ விழுந்திருச்சு கொஞ்சம் எடுத்து தர்ரியா”

திரும்பியவள் சிரிப்பை முறைப்பாக மாற்றிகொண்டாள். அதை எடுத்து அவனருகில் தூக்கி வீசிவிட்டு திரும்பி அமர்ந்து சிரித்தாள். ‘என்ன பயங்கர கோவமா இருக்காளோ’

மீண்டும் தூக்கிவீசினான்.

“அரிசி எடுத்து குடேன்”

மீண்டும் எடுத்துகொடுத்தாள். கண்ணில் இந்த முறை அதிக கோபம் காட்டினாள்.

மறுபடியும் வீசினான். “அரிசி…!!!!!!” என இழுக்க “இன்னொரு தடவ வந்துச்சு அவ்வளவுதான்” என்று கூறிவிட்டு அவனருகில் வைத்தாள். கன்டிப்பாக அந்த டெடிக்கு வலித்திருக்கும்.

மீண்டும் தூக்கி எறிந்தவன் “என்னடி பன்ன இந்த ஒருமாசமா என் டெடி பியர என்கிட்ட இருந்து உன்கிட்ட ஓடி வந்துடுது” என சிரித்தான்.

அதை பார்த்தவள் அதோ மேஜையின் மீது வைத்துவிட்டு “இதுதான் என்கிட்டதான் இருப்பேன்னு சொல்லுதுல அப்புறம் ஏன் உங்களுக்கு” என எடுத்துவைக்க

“அப்ப நான் என்ன பன்றது” என எழுந்து வந்தான்.

“நீங்க வேற டெடி வாங்கிகோங்க”

“அதான் என் டெடி இருக்கே” என அரிசியை தூக்கி கட்டிலில் போட்டு இருக்கமாக கட்டிகொண்டான். அவளால் தப்பிக்க முடயவில்லை. “ஏங்க இன்னைக்கு வேனாம்”

“என்ன வேனாம்”

“ம்ம் நான் என் டெடி கட்டிபிடிச்சு தூங்கனும் அவ்வளவுதான்” என கட்டிகொண்டான்.

“ஏன் அரிசி கோபிதான் புரியவச்சாங்க”

“என்ன”

“பேசுனா தீராத பிரட்சனை இல்லையாம்”

“ஆமாங்க பேசுனா எல்ல பிரட்சனையும் தீந்துடும்”

“ம்ம் நான் உனக்கு ஒன்னு சொல்ல போறேன் கோவபட கூடாது”

“சொல்லுங்க”

“நான் அந்த டைரிய படிச்சிட்டேன் உன் வலி எனக்கு தெரியும் அரிசி என்ன மன்னிச்சிடு”

அவளுக்கு அதிர்ச்சியா பயமா என தெரியவில்லை வார்த்தைகள் வரவில்லை.

“அந்த ஜான்சிகிட்ட பேசி பாக்கலாம்னு இருக்கேன்”

“வேனாம்ங்க” என பதறினாள்.

“ப்ளீஸ்டா அரிசி என்ன இந்த ஒரு விசயத்துல மட்டம் விட்டுடு நான் அந்த அக்காகிட்ட எப்புடியாவது பேசி முடிஞ்சா கால்ல விழுந்தாவது சமாதனத்துக்கு கொண்டு வாரேன்”

“இல்லைங்க என் மனசுக்கு சரியா படல”

“அரிசி அவங்க்கிட்ட பேசி நல்லது நடந்துச்சுனா நாம தடயில்லாம குழந்தை பெத்துகலாம் அதான் எல்லாரோட நிம்மதியும் கெடுக்குறதுக்கு பதிலா பேசிபாக்கலாம் அரிசி”

“ம்ம் சரிங்க” என மெல்லிய குரலில் வாய் கூறினாலும் மனமோ மறுதத்து.

“இதுதான் என செல்ல பொண்டாட்டி அரிசி” என இறுக்கமாக கட்டிபிடித்து தூங்க ஆரம்பித்தான்.

அதிகாலை விடிய அரிசியோ குளியலறையில் இருக்க எழுந்தவன் மேஜையிலிருந்த டெடியை எடுத்து கட்டிலில் வைத்துவிட்டு செல்ஃபோன் கேமிராவை ஆன் செய்துவிட்டு வெளியே சென்றான். அவனுக்கு அந்த பொக்கிஷ்ம் சிக்கியது.

அரிசி வெளியே வந்தாள். அந்த டெடி அங்கிருப்பதை பார்த்து. “என்ன என் ஆளு வந்ததும் உன்ன கழட்டி விட்டுடேன்ன் பாத்தியா”

“என்ன முழிக்குற”

“….!” டெடி அமைதியாக இருந்தது.

“நீ அவருகிட்ட இருந்து என்கிட்ட ஒட்டிகிட்ட இப்ப அவருகிட்ட மறுபடியும் ஒட்டிகலாம்னு பாக்குறியா” அதன் கண்ணில் குத்தினாள். “அப்புடியே முழிய புடுங்கிடுவேன் பாத்துக்க” என அதனுடன் சண்டையிட்டாள்.

அது என்ன செய்வது என்று தெரியாமல் மௌனமாக அமர்ந்திருநத்து.

“நீ இருக்குற இடத்த நான் பிடிச்சுட்டேன் பாத்தியா இன்னும கொஞ்சநாள்தான் பாரு இந்த ரூம்ல இருந்து உன்ன மொத்தமா வெளியேத்துறேன் பாரு” என சக்கலாத்தி சண்டை நிகழ்ந்தது அந்த டெடியுடன்.

அந்த நேரம் ஃபோன் அடிக்க டெடியை தூக்கி மேஜையில் வைத்துவிட்டு “நீ இங்கதான் இருக்கனும் அங்க வரகூடாது” என கட்டிலைகாட்டிவிட்டு “மாமா ஃபோன்” என வெளியை எடுத்து செல்ல அங்க சாவி துவாரத்தின் வழியே பார்த்துகொண்டிருந்தான் சந்துரு.

“என்னங்க பன்றீங்க”

“இல்ல இதுக்கு எப்புடி சாவி செய்றாங்கனு பாக்குறேன்”

“ச்சீ போங்க” என போனை அவனிடம் கொடுத்துவிட்டு ஓடினாள்.

“ஹலோ சொல்லுடா சுகு”

“மச்சி நானும் சுவேதாவும் ரெண்டு நாள்ள அமெரிக்க கிளம்புறோம் மூனு மாசம் ஆகும்டா திரும்ப வர”

“ஓகேடா நான் டிராப் பன்ன வாரேன் சரி வீட்டுக்கு வாங்க புதுதம்பதிகள்”

“இல்லடா கொஞ்சம் ஒர்க் இருக்கு புதுசா ஏதோ வைரஸ் ரிலிஸ்பன்னி நம்ம தாலிய அறுக்குறானுக”

“நீ கம்ப்யூட்டர்லயே இருக்காம தங்கச்சிய ஒழுங்கா பாத்துகோடா”

“நான் எங்க பாக்குறது நீ போகும் போது விட்டுடுட்டு போனவதான்டா இன்னும் என் தங்கச்சி கூடதான் இருக்கா! பேசாம என் தங்கச்சிக்கு அவள கட்டி வச்சிருக்கலாம்”

“அதுக்கு நம்ம  ஊர்ல சட்டம் இல்லடா” என சந்துரு சிரிக்க சுகுவும் சிரித்துகொண்டு “சரிடா நான் கூப்புடுறேன்” என வைத்தான். பின் அந்த வீடியோவை பார்த்து சிரித்துகொண்டிருந்தான் சந்துரு.

“ஏங்க சிரிக்குறீங்க” என அவள் கேட்டாள்.

“உன் வாலுதனத்த நினைச்சு சிரிக்குறேன்” என மீண்டும் சிரிக்க அவள் சினுங்கிகொண்டே நகர்வாள்.

பின் போஸ் “சரிங்க மாப்ள நாங்க கிளம்புறோம்”

“என்ன மாமா அதுக்குள்ள அத்த நீங்களூமா”

“ஆமா மாப்ள காட்டல போட்ட வேல அப்புடியே கிடக்கு இவள கூப்பிடதான் வந்தேன் அப்புறம இவள ஊர் திருவிழா வருது அதான் ஊர் பொண்ணுங்க மூனு நாளைக்கு வெளிய தங்க்கூடாதுனு சொல்லுவாங்க அதான் வந்தேன்”

“சரிங்க மாமா” என்றான் சோகமாக அரிசி பிரியமனமில்லாமல் நின்றாள் கல்லூரி விடுதியில் பெண்ணை விட்டுசெல்லும் பெற்றோர்போல அவர்களும் சோகமாகதான் சென்றனர்.

“மாப்ள திருவிழாக்கு வந்துடுங்க”

“நான் கூட்டிகிட்டு வந்துடுறேன்டா” என சன்முகம் உறுதியளித்தார்

பின் அவர்கள் கிளம்பிசெல்ல காலம் எந்திரத்தை வேகமாக சுழற்ற சுவேதாவை வழியனுப்ப ஏர்போர்ட்டில் காத்திருந்தனர் சந்தருவும் அன்பும்.

“டேய் சுகு வந்துட்டீங்களா”

“2 min டா பார்கிங்ல இருக்கேன்”

“ஓகேடா” என இனைப்பு துண்டித்த அடுத்த அவன் கூறிய இரண்டு நிமிடத்தில் மீண்டும் அழைத்தான். “என்னடா சுகு உள்ளதான் நிக்குறோம் பாத்துட்டியா இல்லையா”

“….!!!” பதில் இல்லை.

“டேய் எங்கடா இருக்க”

“பார்கிஙலடா” என வாய் குலறியது சுகுக்கு

“இன்னும் பார்கிங்கலதானா”

“டேய் சந்துர் சுவேதாவ காணோம்டா” என குரல் உடைந்தது.

சந்தருவின் முகத்தில் சலனம் “என்னடா சொல்லுற” என கூறும் போது கைபேசி திரை கருப்பாக மாறியது.

:”ஹலா ஜான்சி அக்கா சுவேதாவ விட்டுடுங்க” என்று குரல் உடைய கூறினான் சந்துரு.

“யூ பிரில்லியன்ட் காய்; நான்தான் சொன்னேன்ல உன் கல்யானத்துக்கு கிப்ட் சுவேதாதான்னு கொஞ்சம் லேட் ஆகிருச்சுப்பா”

“சுவேதாவ விட்டுடுங்க அக்கா”

“அந்த கிப்ட நீ ஜெனி ஸ்பாட்ல வந்து வாங்கிகோ முக்கிய குறிப்பு குடும்பத்தோட வந்தா உயிரோட குடுத்துடுவேன்” என இனைப்பு துண்டிக்க மீண்டும் அழைப்பு “என்னப்பா சந்துரு முடிஞ்சா” என பூபதியின் குரல். சந்துரு எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தான்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 6உள்ளம் குழையுதடி கிளியே – 6

அத்தியாயம் – 6 சென்னை வீட்டில் பொருட்கள் அதிகமில்லை. அருகிலிருந்தவர்களுக்கு உபயோகப்படும் என்று நினைத்தவற்றை அவர்களிடம் தந்தாள். மர சாமான்களையும் பொக்கிஷமாய் பாதுகாக்கும் சில பொருட்களையும் க்ரிஸ்ட்டியின் வீட்டில் அனுமதி பெற்று பத்திரமாக வைத்தாள்.  “பத்திரமா பாத்துக்கோடி மூணு வருஷம் கழிச்சு

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 12ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 12

12 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   சன்னலின் வழியே சலனமேயில்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகே சென்ற ஆதர்ஷை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் திரும்பிக்கொள்ள “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நான் ஏன் இப்படி எல்லாம் பேசணுன்னு உங்கிட்ட காரணம் சொல்றேன். அத

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 33ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 33

உனக்கென நான் 33 வெளியே ஓடி வந்த சுவேதாவை பார்த்து “என்னடி இப்புடி வந்துருக்க இன்னைக்கு மெண்டல் ஆகிட்டியா?!”என கேட்டான் சந்துரு. “ஏன்டா பிடிக்கலையா?!” இது சுவேதா ஏக்கமாக. “அழகா இருக்கடி அதான் சொல்றேன் என்னாலையே நம்ப முடியலை” என்றான். அதற்கு