Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 48

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 48

உனக்கென நான் 48

சந்துருவை கடக்கும்போது அந்த பெண் டிக்டாக் என சைகை செய்ய நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர். அவள் சிரித்துகொண்டே செல்ல அந்த நேரம் “சந்துரு இந்தா இத அன்புக்கு!!” என சன்முகம் வந்த நேரம் அவரது கையிலிருந்த அந்த சிகப்பு பெட்டிகீழே விழுந்தது.

அதை தன் கையால் லாவகமாக பிடித்த அந்த இளைஞன் ஒரு சுழற்று சுழற்றி மேலே எடுத்தான். அங்கிருந்த அனைவரையும் கவர்ந்துவிட்டான். அனைத்து பெண்களும் அவனை பார்க்க சிரித்தவன். “இந்தாங்க சார் பத்துபிடிங்க” என்றான்.

“நீங்க??” என்றார் சன்முகம்

அந்த பெண் சிரித்துகொண்டே “நான் ஜான்சி இது என் தம்பி சேகர்”

“இல்ல நீங்க என்ன பன்றீங்க” என்றார் சன்முகம்.

“உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் உங்க ஒயிப் காவேரி ஆரம்பிச்ச காவேரி மில்ஸ்க்கு இருந்த ஒரே எதிரி மில்ஸ் ஒனரோட பொண்ணு ஜான்சி அப்புறம தம்பி சேகர். பயப்படாதீங்க நாங்க அந்த காட்டன் பிஸினஸ் விட்டுட்டு இப்ப சாப்ட்வேர் இன்டஸ்டரி சப்ளைக்கு மாறிட்டோம் அதனால உங்க பையனுக்கு இடையூரா இருக்க மாட்டடோம்” என சென்று முதல் இருக்கையில் அமர்ந்தனர்.

அந்த பெண்ணிற்கும் முப்பது வயது இருக்கலாம் என மதித்தனர். அதற்கு ஏற்ற அழகு சேலையில் மிக அழகாக இருந்தாள். சந்துரு குழப்பத்துடன் நின்றான். “சரிப்பா இது உங்க அம்மா ஆசையா வச்சுருந்த செயின் இத மருமக அன்புக்காக எடுத்து வச்சிருந்தா இத அன்புகிட்ட குடுத்துட்டு வா” என சன்முகம் கிளம்பினார்.

அதற்குள் சுகு சந்துருவை இழுத்துகொண்டு நடந்தான். “டேய் மச்சி இங்க பாரு போன வருசம் நம்ம தமிழ்நாட்டுல ஒரு சைபர் அட்டாக் நடந்துச்சு. முக்கியமான பிரபலங்களோட டேட்டா பேஸ் அக்ஸப்ட் பன்னாங்க. அதுல இந்த கம்பெனி மேல ஒரு கண்ணு கவர்மன்ட் எங்க டீம்கிட்ட சொல்லி வைக்க சொன்னாங்க. இவங்கதான் அந்த ஜான்சினு எனக்கு தெரியாதுடா! இன்னொரு முக்கியமான விஷயம்” என சுகு கூறும்போது சுவேதா அங்கு வந்தாள்.

“யேய் பொண்ணுகூட ரெடிப்பா நீங்க இன்னும் என்ன பன்ன்றீங்க”

“சுவேதா இத அன்புகிட்ட குடு அப்பா குடுக்க சொன்னாங்க” என்றான் சந்துரு.

“உன்னதான குடுக்க சொன்னாங்க நீ போய் குடு” என்று கூறிகொண்டே சுகுவை பார்த்து கன்னத்தை காட்டினாள். அசை கவனித்து கவனிகாத மாதிரி “சரி” என அன்பின் அறைக்கு சென்றான்.

அவன் சென்றதும் “சுகு மாமா!” என்றாள். சுகு இன்னும் அதிர்ச்சியிலேயேதான் இருந்தான்.

“டேய் மாமா நான் ஒருத்தி கத்திகிட்டு இருக்கேன் உனக்கு கேக்குதா” என கன்னத்தில் முத்தம் வைக்க நிகழ்காலத்திற்கு வந்தான். “என்ன செல்லம் திடிர்னு மாமான்னு கூப்பிடுற” என்றான்.

அவனை கட்டிகொண்டாவள் “இல்லடா இங்க எல்லாரும் அப்புடின்னுதான் கூப்பிடுறாங்க அன்புகூட அப்புடிதான் கூப்பிடுறாங்க அதான் நானும் ட்ரை பன்னிபாத்தேன்” என்றவளை அனைத்தவன்.

“சுவேதா நீ இப்ப கிளம்பனும்”

“அப்போ என்ன கல்யானம் பன்னிகோ வாரேன்” என்று காதை கடித்தாள்.

“எனக்கு உன் உயிர்தான்டி முக்கியம் ப்ளீஸ் புரிஞ்சுகோ”

“டேய் மாமா என்னடா உளறிகிட்டு இருக்க” என அவனிடமிருந்து விலக முயற்சித்தாள். ஆனால் அவன் இறுக்கம் விடவில்லை. அவன் அழுகிறான் என்பதை உணர்ந்தாள்.

“நல்ல நாள்ள ஏன்டா அழற”

“என்ன மன்னிச்சிடுடி” என அவளை திருப்பியவன் அவள் முகத்தில் அந்த மயக்கமருந்து தடவிய கர்சீப்பை வைத்து அவளது கன்னத்தில் முத்தம் வைத்தான்.

அன்று சுகு இனையத்தை சலித்துகொண்டிருந்த நேரம் அவனதி கைபேசி ஒலித்தது அதில் எண்களே இல்லை. வெறும் கருப்புதிரை மட்டுமே அதிலும் அதுவை கால் அட்டன்ட் செய்து ஒலிபெருக்கியில் போட்டது.

“ஹாஹாஹா ஹலோ சாப்ட்வேர் கிங் எப்புடி இருக்கீங்க”

“நீ யாரு”

“நீ ரொம்ப கஷ்டபட்டு என்னதான் தேடிகிட்டு இருக்க அது உனக்கு தெரியுமா?”

“ம்ம் நான் உன்ன கன்டுபிடிச்சுடுவேன்” உறுதியாக கூறினான் சுகு.

“கிழிச்ச! இந்த வேகத்துல தேடுனா என்ன கண்டுபிடிக்க இன்னும் முப்பது வருசம் ஆகும் உனக்கு குழந்தைபையா! எப்புடிதான் இந்த நாட்டோட செக்யூரிட்டி மெயின்டனன்ஸ்ல உனக்கு வேலை குடுத்தாங்களோ! இதுல நீயெல்லாம் சீக்ரட் ஒர்க்கர் வேற” என மீண்டும் சிரித்தாள்.

“ஹே அது எப்படி உனக்கு தெரியும்”

“அது குழந்தைங்களுக்கு புரியாதுப்பா! சரி அத விடு என்னதான தேடுற! என் பேரு ஜான்சி என தம்பி சேகர்! இப்பொதைக்கு இது போதும் உனக்கு! ம்ம் சுவேதா சுவேதா அவள ஏன்டா நீ காதலிச்ச பாவம் அவ சாக போற உன்னால”

“ஏய் அவளுக்கு எதாவது ஆச்சு”

“என்னடா பன்னுவ! உனக்கு தில்லிருந்தா இது என போட்டோ முடிஞ்சா என்ன பிடிடா பாக்கலாம்” என அந்த திரையில் ஒரு போட்டோ வந்து ஒரு வினாடியில் மறைந்தது.

“ஏய் அவள ஒன்னும் பன்னிடாதடி”

“நான் நேர்ல வரும்போது அவ இருக்கமாட்டா” என இனைப்பு துண்டிக்கபட்டது. அப்படியே பதறிகொண்டு சந்துருக்கு போன் செய்தான். அதன்பின்தான் நடந்தது அனைவரின் இட மாற்றம்.

அந்த நாள் நினைவில் இருக்கவே மயங்கிய சுவேதாவை தூக்கிகொண்டு ஒரு அறையில் பூட்டினான் சுகு.

“அன்பு இத அப்பா குடுக்க சொன்னாங்க” என சந்துரு நுழைந்த்தும் அவள் பதட்டத்துடன் தன் உடையை சரி செய்தாள். அங்கிருந்த பெண்கள் “பாருடி மாமாவுக்கு அதுகுள்ள அவசரத்த எதாவது சாக்கு வச்சு எங்க அக்காவ சைட் அடிக்காம இருக்க முடியலையா” என்று கூற “சும்மா இருங்கடி” என அன்பு சமாதானம் செய்தாள்.

“இது அம்மா உனக்கு எடுத்து வச்சது அதான் அப்பா குடுக்க சொன்னாரு” என்றான்

உடனே தன் கழுதிலிருந்த ஒரு நகையை கழற்றியவள் அந்த இடத்தை அந்த நகைக்கு கொடுத்தாள். என்ன அக்கா தங்கத்த விட்டுட்டு பாசிய போட்டுகிறீங்க” என கிண்டல் பேச்சுகள் தொடர்ந்தன.

அவளோ நல்லா இருக்கா என கண்ணாலயே சைகை செய்தாள். சந்துரு புருவத்தை உயர்த்தி சூப்பர் என சைகை செய்து நகர்ந்தான்.

சிறிது நேரம் ஒட அனைவரும் கூட சந்துரு காத்திரிந்தான் அந்த மேடையில். அரிசியை அன்பரசியாக மாற்றி அழைத்துவந்தனர் சில பெண்கள். கண்ணை எடுக்கவிடாத அழுகு. அதிலும் அந்த சிகப்பு பட்டு புடவை சந்துருவின் ரசனையை பறைசாற்றியது.

அவளருகில் அமர முன்னால் ஒரு பெண் ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்தால். “அது யாரு” என்றான் அன்பின் காதில்.

“அது வளர்மதி என சித்தப்பா பொண்ண் ஏன் என்ன ஆச்சு”

“இல்ல உன்னவிட அழகா இருக்காலே அதான்” அடுத்ததாக அவனது தொடையில் கிள்ளினாள். “ஹே இல்லடி அந்த பொண்ணுதான் காப்பு எடுத்து குடுத்துச்சு நீதான் வரலையே” என்றான்.

இருவரும் அவளை பார்க்க அவள் அந்த சேகரின் அருகில் நின்றாள். சந்துருவுக்கு அது சரியாக படவில்லை. சேகரும் வளர்மதியும் ஏதோ பேசிகொள்ள வளர்மதி வெட்கபட்டாள்.

“ம்ம் மாப்பிளை தங்கச்சி எங்கப்பா” என ஒரு குரல்.

அங்கு நின்றிருந்த சுகுவை பார்த்து “டேய் சுவேதா எங்கடா” என்றான்.

“டேய் அவ லூசுடா எங்கயாவது சுத்திகிட்டு இருப்பாடா” என்றான் சுகு அந்த கொட்டு சத்ததில் சுவேதா அந்த ஜன்னல் வழியே அழுவது தெரியவில்லை.

“சீக்கிரம்பா தங்கச்சிதான் மூனூவது முடிச்சு போடனும்” என்று அவசரபடுத்தினார் அந்த பெரியவர்.

உடனே மஞ்சு அங்கு வந்து “நானும் தங்கச்சிதான் நான் பன்னுறேன்” என்றாள். அடுத்தாக தாலி கட்டும் வைபவம் அறங்கேறியது. மூன்றாவது முடிச்சை மஞ்சுபோட பூமாலைகள்தூவி அன்பரசி என்னும் அமிர்தம் இந்திரனாகிய சந்துருவை சேர்ந்தாள்.

பாவைமேனியதில் புதுஅணிகலனாக

சூட்டிய கண்ணாலன் இன்று மன்னவனாக

மாறிய நேரம் தாய் தந்தை கண்ணில்

ஆனந்த கண்ணீர் மகனை வாழ்த்தினாள்தாய்

சொர்க்கபுரியிலிருந்து அத்துடன்

ஊரார் வாழ்த்திய மொழிகள்

மகராசி குடுத்து வச்சவ

இல்லை மகராசன் கவர்ந்துவிட்டான்

கள்ளிமனதை! என மலர் பொடிகளாய்

வந்து முத்தமிட்டது இந்த புறாக்களை

வெள்ளம் ஆனந்த வெள்ளமிது

அதில் நனைந்த இருவர் உள்ளம்

இனி ஒன்றுதான் என்றும்.

அதன் சாட்சியாக ஒரு குட்டி தேவதை

இருவர் சாயலில் பெற வாழ்த்தினர்

மக்கள்! மங்கையோ வெட்கத்தில்

தன்னவன் மார்பில் முகம் புதைத்தாள்

இதுதான் காதலா அங்ஙனம் மாரியும்

பொழிந்து வாழ்த்தியது இவர்களை

நாம்முடன் இருந்து!!

“என்னடி இப்புடி மழை பெய்யுது. அரிசியா தின்னியா” என்று கன்னதில் குத்தினாள் மலர்.

“என்னது அரிசியா தின்னாலா?” என்றான் சந்துரு.

“இப்புடி கல்யானத்தன்னைக்கு மழை பெஞ்சுச்சுனா பொண்ணு வயசுக்கு வந்ததும் அரிசியா தின்னுருக்கானு இங்க ஊர்ல பேசிக்குவாங்க” என மலர் கூற “சும்மா இருடி” என அன்பு வெட்கபட்டாள்.

“அட நீ வேற மலர் உன் பிரண்டு அரிசி அரிசியெல்லாம் தின்னுருக்கமாட்டா அவ பேருல கன்பிசனாகி மழை வந்துருக்கும். என்ன அப்புடிதானுங்க மேடம்” என அரிசியை பார்த்துகேட்டான்.

“போங்க” என அவனை செல்லமாக திட்டினாள்.

அடுத்து சில சம்பிரதாயங்கள் முடிய போட்டோ கிராபரோ அவசரமாக “எனக்கு பசிக்குதுப்பா கிப்ட் எதாவது இருந்தா குடுங்க” என தன்நிலையை கூறினார்.

“ஹேய் அன்பு செல்லம் கொஞசம் லேட் ஆகிடுச்சு” என ஆசிரிய தோழி இந்திரா வந்தார். அந்த பரிசை கொடுத்துவிட்டு “இதுதான் உன் உட்பியா செம்ம செலக்ஸன்டி” என தன் தோழிக்கு முத்தம் கொடுத்தாள். பின் “அப்பா எங்க இன்னைக்கு ட்ரீட் தர்ரேன்னு சொன்னாரு. நான் அவர்கிட்ட பேசிகிறேன்” என கிளம்பினாள். ‘உன்னமாதிரியே எல்லாம் வாயாடி பிரன்ட்ஸ்தானா’ இது சந்துருவின் மைன்ட் வாய்ஸ்.

அடுத்தாக ஜான்சி வந்தாள். சிரித்துகொண்டே போட்டோவில் விழுந்தவள். அன்பரசியின் காதில். “ஜெனி நியாபகம் இருக்கா” என்றதும் அவள் முகம் மாறியது. சந்துரு ஜான்சியை முறைத்து பார்த்தான்.

“இது அவளோட டைரி இந்தாபிடி” என வண்ணகாகிதம் சுற்றிய அந்த பரிசை கொடுத்தாள். பின் “இங்க பாரு அன்பரசி அந்த மாதிரி உன் புருசனும் சாவாகூடாதுன்னு நினைச்சேன்னா சீக்கிரம் ஒரு குழந்தைய பெத்துட்டு நீ செத்துடு” என கூறிவிட்டு சிரிக்க அன்பு அழுதாள். சந்துரு தன்னவளை மார்போடு அனைத்துகொண்டான். சுற்றி இருந்தவர்கள் “ஊருக்குள்ளயே சுத்திகிட்டு திரிஞ்ச பொண்ணுல அதான் ஊர விட்டு பிரிய முடியாம அழறா”என்று கிண்டல் செய்தனர்.

கீழே இருந்த சேகர் வளர்மதிக்கு தன் கையிலிருந்த மோதிரத்தை மாட்டிவிட்டான். பின் மேடை ஏறி வந்தவன்.”என்ன சந்துரு தம்பி நல்லாபடியா கல்யானம் முடிஞ்சிடுச்சு, என அக்கா சொன்னாங்களா டிக்டாக் ரூல். குழந்தை இருந்தா அன்புக்கு செக் இல்லைனா உனக்கு செக் நான் வாரேன்” என இறங்கியவன் கீழே இருந்த வளர்மதியை பார்த்து ரகசியமாக கன்னத்தில் கிள்ளிவிட்டு “நான் ஃபோன் பன்றேன் என்பதுபோல சைகை செய்து கிளம்ப அந்த கார் வந்த வேகத்தில் பறந்தது.

சந்துருவுக்கு அன்பு அழுவது தாங்கமுடியவில்லை. “ஏய் கிறுக்கி அது என் காலேஜ் சீனியர் அக்கா அவங்க கல்யானத்துல நாங்க இப்புடிதான் மாப்பிள்ளைய பயமுறுத்துனோம். இப்ப பதிலுக்கு பன்றாங்க இது எங்களுக்குள்ள சகஜம்டி” என அவளை இறுக்கமாக அனைத்துகொண்டான்.

அவனது கண்களை பார்த்தாள் அன்பு. உதட்டில் சிரிப்பை வைத்திருந்தான். அவனிடம் கேட்பதாக நினைத்து தன்னையே கேட்டுகொண்டாள்.

‘சந்துரு ஏன் பொய் சொல்லற! உன் பிரண்டுக்கு எப்படி ஜெனிய பத்தி தெரியும்! இப்ப என்ன நான் அழகூடாது அதுதான உன் விருப்பம். நான் அழமாட்டேன் சந்துரு’ என கூறிவிட்டு. “நிஜமாவாங்க நான் பயந்துட்டேன்” என்றாள் சினுங்கிகொண்டே.

“ஆமாடி என செல்ல அரிசி! என பொண்டாட்டி” என இறுக்கினான், “விடுங்க எல்லாரும் பாக்குறாங்க”

“ஓ இப்பதான் அது உனக்கு தெரியுதா! என் மேல சாஞசுகிட்டு என சட்டைய ஈரமா ஆக்குனியே அப்ப தெரியலாயா” என்றான். அவள் வெட்கபட்டுகொண்டு சற்று தள்ளி நிற்க அவன் அவளை உரசிகொண்டு நின்றான். “மாப்ள கொஞ்சம் சென்டர் பன்னி நில்லுங்க” இது போட்டோகிராபரின் கதறல்.

சுகு அந்த கார் சென்றதும் சுவேதாவின் அறைக்கு சென்றான் மெதுவாக கதவினை திறக்க சுவேதா வெளியே வந்தாள். “சுவேதா என்ன மன்னிச்சிடு நான் ஏன் அப்புடி பன்..” என சுகு கூறும் முன்னே சுவேதாவின் கையின் ரேகை சுகுவை நோக்கி நிற்க அவள் கோபத்தில் தலைகுனிந்து நின்றாள்.

“இனி என்கிட்ட பேசாத சுகு” என அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

அங்கே அவளை பார்த்த சந்துரு “என் தங்கச்சிகிட்ட மட்டும்தான் நான் பேசுவேன்” என முகத்தை திருப்ப சுவேதாவின் கண்கள் கலங்கியது. அதை பார்த்த அன்பு.

“அன்னி நீங்க இங்க வாங்க அவரு அப்புடிதான்” என சுவேதாவை தன்னோடு இழுத்து அனைத்துகொண்டாள் அன்பு.

சுவேதாவோ என்ன சொல்வது என்று தெரியாமல் கண்கள் கலங்க சந்துருவையே பார்த்துகொண்டே நின்றாள்

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 58ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 58

உனக்கென நான் 58 அன்பரசியின் குழந்தை உள்ளத்தை ரசித்துகொண்டே தூக்கதை தொலைத்த சந்துரு காலத்தின் ஓட்டதை உணர்ந்திருக்கவில்லை. அவனுக்கு அது தேவைபடவில்லை எனபதே உண்மை. மணிமுள் ஐந்தை அடைய அன்பரசி விழித்துகொண்டாள். “தூங்கு அரசி நாலுமணிதான் ஆகுது” என்று அவன் கூறியதன்

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 12பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 12

உயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம்

சாவியின் ‘ஊரார்’ – 03சாவியின் ‘ஊரார்’ – 03

3 “ஜக்கம்மா, ஜக்கம்மா!” – சிவாஜி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நடு நசி நேரத்தில் அந்த சிம்மக் குரல், டெண்ட் சினிமாவிலிருந்து பயங்கரமாக ஒலித்தது. சாமியார் அந்தப் படத்தை மூன்று முறை பார்த்தாயிற்று. ‘வானம் பொழியுது, பூமி விளையுது’ டயலாக் அவருக்கு மனப்பாடம்.