ஒவ்வொரு குழந்தையின் முதல் சிரிப்பும் விலை மதிப்பில்லாதது. பொக்கை வாய் சிரிப்பிலிருந்து ஒரு தேவதை பிறக்கிறாள் என்ற முன்னுரையுடன் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது டிஸ்னியின் டிங்கர்பெல். டிங்கர் என்றால் உலோகத்தில் செய்த பொருட்களை ரிப்பேர் செய்பவர் என்ற பொருள் உண்டு.