Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 22

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 22

அத்தியாயம் – 22

 

ரபரப்பான காலை வேளையில் அந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் குரல் மட்டுமே ஒலித்தது. முதல் பீரியட் என்பதால் மாணவர்களின் முழுக்கவனமும் பாடத்திலேயே இருந்தது. 

 

“ஸ்போர்ட்ஸ் மீட்டுக்கு தயார் பண்ணிட்டிங்களா? பார்ட்டிசிபேட் பண்ணுற ஸ்டுடென்ட்ஸ் எல்லாருக்கும் கடைசி ரெண்டு பீரியட்ஸ் பிராக்டிஸ் பண்ணனும். கிளாஸ் டீச்சர்ஸ் கு ஈமெயில் பண்ணிடுங்க. மீட் முடிஞ்சதும் மிஸ் பண்ண பாடமெல்லாம் இவங்களுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வச்சு கவர் பண்ணிடுங்க” மங்கையர்கரசி பேசி முடிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்த ப்யூன் அவரைப் பார்க்கஒரு பெண் வெளியில் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். 

 

“வரச்சொல்லு”

 

உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணின் கட்டுக்கோப்பான உடல் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருபவள் என்று சொன்னது. ஒரு அழகான வெளுப்பு. 

 

மங்கையர்கரசியின்  கம்பீரத் தோற்றத்தைக் கண்டவுடன் மரியாதை தோன்றியது “வணக்கம் மேம் நான் ராதிகா, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருந்தேனே..” 

 

“எஸ், சேவாசங்கத்திலிருந்து நீங்க சந்திக்க வருவிங்கன்னு சொல்லிருந்தாங்க. சொல்லுங்க…”

 

“எங்களோட ஆர்கனைசேஷன் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வாழ்க்கைல நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கோம்”

 

“தெரியும். உங்களுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாத்தான் உங்க இல்லத்தில் இருந்து எங்க பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எல்லாருக்கும் இலவசப் படிப்பு, உணவு, சீருடைன்னு தர்றோம்”

 

“தெரியும் மேம். அது தவிர இன்னொரு உதவியும் கேட்டுதான் நான் இங்க வந்திருக்கேன்”

 

“சொல்லுங்க”

 

“நான் மீடியால வொர்க் செஞ்சிருக்கேன். இப்பத்தான் இந்த வாலண்டியரிங் ஜாப் எடுத்திருக்கேன். மீடியால என்னோட ப்ராஜெக்ட் விஷயமா இந்தியா முழுசும் சுத்தினப்ப  குழந்தைகள் எல்லாரும் பள்ளிக்கு வர எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு பார்த்தேன். அவர்களில் சிலருக்கு உதவி செய்ய லிஸ்ட் போட்டிருக்கேன். உங்களோட சப்போர்ட்டும் கிடைச்சா அவங்க வாழ்க்கைக்கு ஒளி ஏத்தின மாதிரி இருக்கும்”

 

“ஏற்கனவே நாங்க எங்க ட்ரஸ்ட் மூலம் செஞ்சுட்டுதான் வர்றோம் ராதிகா. அவங்களை காண்டாக்ட் பண்ண சொல்லுங்களேன். அவங்களை அப்ளை பண்ண சொல்லுங்க இங்க ஸ்கூலில் சேர்த்துக்குறேன் ”

 

“உங்களைத் தேடி வர்றவங்களுக்குத் தானே இவ்வளவு நாள் உதவி செஞ்சிருக்கிங்க. இவங்கெல்லாம் அந்த அளவுக்கு வரத் தெம்பில்லாதவங்க மேம்”

 

“புரியலையே… “

“இதில் ஹிமாலயாஸ்லிருந்து கன்யாகுமரி வரைல இருக்குற குழந்தைகளோட லிஸ்ட் இருக்கு. தமிழ்நாட்டில் அகரம்ல கூட பல குழந்தைகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனால் சவுத் இந்தியால படிப்புக்கு கொடுக்குற முக்கியத்துவமும் சப்போர்ட்டும் கிடைக்காத பல பகுதிகள் இந்தியாவில் இருக்கு. இந்த பையனைப் பாருங்க மேம்”

 

அழகாக தயாரிக்கப் பட்டிருந்த ஆல்பம் ஒன்றைக் காட்டினாள். 

 

“ஹிமாலயாஸ்ல இருக்குற  உறைஞ்ச  நதியைத் தாண்டித்தான் இவனோட ஸ்கூல். வீட்டிலிருந்து ஸ்கூலுக்குப் போகவே  நாலு நாள் ஆகும். இவனோட அப்பாவும் இவனும்  கையில் டென்ட், குட்டி அடுப்பு, குட்டி சாக்கில் மாவு எல்லாம் எடுத்துட்டு பள்ளிக்குக் கிளம்புறாங்க. 

 

வழியில் எங்கயாவது தங்கி ரொட்டி சுட்டு, பனியை உருக்கிக் குடிச்சுட்டு இவங்களோட பயணம் தொடருது. வழியில் காட்டு விலங்கு, பனிப் பொழிவு, காத்து, பனிச்சரிவு, செங்குத்தான மலைத்தொடர்ன்னு இவங்க சந்திக்கிற இன்னல்கள் பத்தி ஒரு படமே எடுக்கலாம். 

 

ஆபத்தான இந்த ரூட்டில் குழந்தைகளைத் தனியா அனுப்ப முடியாததால் அப்பா நாலு நாள் பயணம் செஞ்சு ஸ்கூலுக்குப் பக்கத்தில் இருக்கும் சொந்தக்காரங்க வீட்டில்  விட்டுட்டு மறுபடியும் நாலு நாள் பயணம் செஞ்சு வீட்டுக்கு வருவார். வருஷத்துக்கு நாலைஞ்சு தரம் இந்தப் பயணம் நடக்குது”

 

கேட்கவே பயமாக இருந்தது மங்கையர்கரசிக்கு. 

 

“கேட்கவே பயம்மா இருக்கு. இவ்வளவு ஆபத்து இருந்தாலும் படிச்சே ஆகணும்னு நினைக்கிற அந்தப் பெற்றோர்களோட உறுதி என்னை பிரமிக்க வைக்குது”

“அதுதான் மேடம். அதே தான். எந்த ஒரு வேலையும் கஷ்டமா இருக்கும்போது பாதில கைவிட ஒரு நல்ல சாக்கு மனசுக்குக் கிடைச்சுடுதே. இந்தத் தகப்பன்கள் கூட இயலாமையால் படிப்பைக் கை விட்டவர்தான்.  இருபத்தி வருஷத்துக்கு முன்னாடி இவரைப் பள்ளியில் விட்டுட்டு வர்ற வழியில் இவங்க அப்பாவை ஓநாய்கள் வேட்டை ஆடிடுச்சு. அதுக்கப்பறம் இவருக்கும் இவரோட தோழர்களுக்கும் மொத்தமா படிப்பு நின்னுடுச்சு”

 

“இருந்தும் தன்  பிள்ளையாவது  படிக்கணும்னு இப்ப இவர் பாடு படுறார். இருபத்தி அஞ்சு வருடமா இவங்களோட நிலை இன்னமும் அப்படியே தான் இருக்குது. இது வெட்கப்படவேண்டிய உண்மை. இவங்களுக்கு எந்த மாதிரி உதவி எதிர்பார்க்குற”

 

“இன்னதுதான் வேணும்னு ஒரு பொதுவான முடிவுக்கு வராம கேஸ் பை கேஸ் பரிசீலிச்சு முடிவெடுக்கணும்”

 

“அது பெரிய வேலையாச்சேம்மா… அந்த அளவுக்கு இங்க யாருக்கும் நேரமில்லை”

 

“அதுக்காக அவங்களை அப்படியே தவிக்க விடமுடியாதே”

 

“நீ சொல்றது சரிதான். ஏற்கனவே ஒரு லிஸ்ட் வச்சிருக்கேன்னு சொன்னியே. அதைத் தா… நான் முதலில் பார்க்குறேன். எனக்கு திருப்தியா இருந்தால் ரெகமெண்ட் பண்ணி  எங்க ட்ரஸ்ட்ல ஒரு ஆளை உனக்கு சப்போர்ட் பண்ண அசைன் பண்ணுறோம். ஆனால் வெரிஃபை  பண்ணாம எந்த உதவியும் செய்ய முடியாதும்மா”

 

“ரொம்ப நன்றி மேம். நான் டாகுமெண்டரி எடுத்திருக்கேன். அதைப் பார்த்தால் உங்களுக்கு இன்னமும் தெளிவு கிடைக்கும்”

 

“கண்டிப்பா பாக்குறேன். ட்ரைவ்ல போட்டிருந்தா லிங்க் அனுப்பி வைம்மா”

 

“இப்பயே ஷேர் பண்ணிடுறேன் மேம். உங்க ஈமெயில் அட்ரஸ் சொல்லுங்க”

 

அவர் சொல்லிக் கொண்டிருந்த பொழுதே அலைப்பேசி அழைத்தது. அவினாஷ் வேலை நேரத்தில் அனாவசியமாக அழைக்க மாட்டானே. ஏதாவது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும். உடனே எடுத்தார். 

 

“இந்த முறையும் அபிராமைக் காப்பாத்திட்டோம்மா”

 

ஒரே சமயத்தில் தீயை மூட்டி அது பரவிய கணமே தண்ணீரை ஊற்றி அணைத்தது போன்ற உணர்வு. ஒரு சில வினாடிகள் என்றாலும் அந்தத் தீயின் காந்தல் இருக்குமே. 

 

“இந்த தடவை என்னாச்சு”

 

“ட்ரக்ஸ்னு சொல்லுறாங்க”

 

“ஓவர் டோஸா… “  போதை மருந்து  அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது  மூச்சு விட முடியாது ஆக்சிஜனுக்காகத் தவிப்பவர்கள்  தொண்டையைக் கிழித்து… அபிராம் உன்னை எத்தனை தடவைடா காப்பாத்துறது. அச்சமாக இருந்தது மங்கையற்கரசிக்கு. 

 

“அந்த அளவுக்குப் போகல… நிலை தெரியாம ஸ்விம்மிங் பூலில் விழுந்துட்டான். காப்பாத்தியாச்சு”

 

“எப்படி அவன் கைக்கு போதை மருந்து போச்சு”

 

“அதுதான்மா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம்”

 

“இந்த அளவுக்கு அவனுக்கு சரக்கு கிடைச்சிருக்குன்னா நமக்கு நல்லா அறிமுகமான நபராலதான் அது நடந்திருக்கும். யாரது?”

 

“அதுதான்…. விசாரிச்சுட்டு இருக்கேன்மா” தயக்கத்துடன் வெளிவந்தது அவினாஷின் குரல். 

 

“குரலில் ஏன் இத்தனை தயக்கம்? இது நீ இல்லையே அவி. யாரா இருக்கும் ஒரு வேளை செம்பருத்தியோ?” அவன் அம்மாவிடம் எதையும் அவனால் மறைக்க முடிந்ததில்லை. 

 

“தெரியலைம்மா… “ அவன் குரலில் ஒரு கலக்கம். இப்படி ஒரு குரலை அவர் கேட்டதே இல்லை. சோ அவனுக்கு ஒரு சப்போர்ட்  இப்போது கட்டாயம் தேவை. 

 

“அபிராமை கேர்புல்லா பாத்துக்கோ. நான் இன்னைக்கு நைட்டே கிளம்பி அங்க வரேன்” 

 

அவர் எதிரே அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்த ராதிகா அப்படியே திகைத்து நிமிர்ந்தாள். அது சரியாக மங்கையர்க்கரசியின் கண்களில் பட்டது. அவர் மனதில் மின்னல் வெட்டியது. உடனே ஒரு முடிவிற்கு வந்தார். 

 

“அந்த அளவுக்கு அவசியமில்லைம்மா… “

 

“அவி… எத்தனை நாள் அபிராமைப் பொத்திப்  பொத்தி பாதுகாப்ப? அவன் ரியல் லைஃபை பேஸ் பண்ண வேண்டாமா? அவன் வெளிய வரணும். அவனோட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்கணும். அதுக்கு நான் அங்க வந்தாகணும்”

 

“அம்மா… அவன் உங்களை அவமானப் படுத்துவான்மா?”

 

“உன்னை அவமானப் படுத்தல? நீ எதுக்காக அதை எல்லாம் தாங்கிக்கணும்? அதே காரணத்துக்காகத்தான் நானும் தாங்கிக்கணும்”

 

“சரி, நீங்க என் சூட்டில் தங்கிக்கோங்க. நான் அபியோட உடம்பு சரியாகுற வரை இங்கதான் அவன் வீட்டில்தான் தங்குவேன்”

 

“நான் மட்டும் சூட்டில் இருந்து என்ன பண்ணப் போறேன். அங்கேயே உன் ரூமில் நானும் தங்கிக்கிறேன்”

 

“அம்மா புரிஞ்சுதான் பேசுறிங்களா? இந்த வீடு?”

 

“எஸ், அதே வீட்டில் அரேஞ் பண்ணு. ரொம்ப ஆர்ப்பாட்டம் எல்லாம் வேண்டாம். நம்ம இன்னும் மும்பைல ஒரு பிளாட்டில் தான் இருக்கோம்னு நினைவு வை. அப்படியே என் கூட இன்னொரு பொண்ணு வருவா… அவளுக்கும் ஒரு அறை ரெடி பண்ணு” அவர் உறுதியாக சொன்ன பின் அவினாஷால் எப்படி மறுக்க முடியும். 

 

“அம்மா… அவன் என்னை அவமானப் படுத்தினால் கூடப் பொறுத்துக்குவேன். உங்களை ஏதாவது சொன்னா தாங்கிட்டு நிக்கணும்னு எதிர் பார்க்காதிங்க” மகனும் அதே உறுதியுடன் நின்றான். 

 

வைத்ததும் அதற்காகவே காத்திருந்தாற்போல “மேம் அந்த அபிராம் கொச்சி தானே… மாரத்தான் ஓடுவாரே… அவருக்கு என்னாச்சு?” பட படவெனெக் கேட்டாள். 

 

“சொல்றேன்… ராதிகா நீ ஸ்போர்ட்ஸ் ஸ்கூலில் படிச்சேன்னு சொன்னேல்ல… அபிராமை அங்கதான் பார்த்தியா?”

 

“எஸ் மேம். அவரு நல்லாருக்காருல்ல” அவள் கண்களில் சற்று கலக்கம். 

 

“அதான் நேரில் பார்க்கப் போறியே… “

 

“நானா?”

 

“நீயே தான். உனக்கு சப்போர்ட் பண்ண ஆள் வேணும்னு சொன்னேல்ல… அதுக்கு ஒரு சான்ஸ் வந்திருக்கு. அதை உபயோகிக்கிறதா வேணாமான்னு நீதான் முடிவெடுக்கணும்”

 

“வரேன் மேம்” 

 

“மத்தியானம் பிளைட். வந்துடு” வேலை முடிந்தது என்பது போல எழுந்தார். 

 

ப்படி இது நடந்தது என்றே புரியவில்லை செம்பருத்திக்கு. காவ்யா அடித்து சொல்கிறாள் செம்பருத்திதான் ட்ரக் சப்ளயர் என்று. ஏதேது விட்டால் ரோலெக்சின் தங்கச்சி இவள்தான் பிடிச்சுட்டுப் போங்க என்று ஏஜென்ட் விக்ரமிடம் பிடித்துத் தந்துவிடுவாள் போலிருக்கிறது. 

 

எதுவாக இருந்தாலும் அவளது கவனக்குறைவுதான் காரணம். அதுவும் அவினாஷின் முன்பு கடமை தவறியதாகக் கூனிக் குறுகி நின்றதை இப்போது நினைத்தாலும் தன்னைத் தானே திட்டிக் கொள்ளத்தான் தோன்றுகிறது. 

 

கடற்கரை ஈர மணலில் அவினாஷ் பதித்து சென்ற காலடித் தடத்தை வேகவேகமாக வந்த அலை அழித்துச் சென்றதைப் போல அவளது கன்னி மனம் துடித்தது. 

 

சொல்லு அவினாஷ் நீ இதை நம்புறியா? நீ சொல்லுற வார்த்தையில்தான் என்னோட உயிரே இருக்கு. 

 

ஆனால் அவினாஷின் பார்வையோ எதையும் கணிக்க முடியாததாய் இருந்தது. ஒரு ஜட்ஜ் குற்றம் சாட்டப்பட்டவரை எந்த ஒரு தீர்மானமும் இல்லாமல் பிளாட்டாய் ஒரு பார்வை பார்ப்பாரே அது போல. 

 

எனக்கு நானேதான் வாதாடவேண்டும். காவ்யா இந்த அளவுக்கு உறுதியாக இருந்தால், எனக்குத் தெரியாதது  ஏதோ அவளுக்குத் தெரிந்திருக்கிறது. 

 

“எப்படி நான்தான் ட்ரக் சப்ளை பண்ணேன்னு உறுதியா சொல்றிங்க காவ்யா?”

 

“நீதானே அபிராம் கிட்ட க்ளோசா பழகுற. உன்னைத் தவிர வேற யாரா இருக்க முடியும்?”

 

“இல்லையே… நான் சாதாரண செக்கரேட்டரி, ஹெல்பர்ன்னு வேணும்னா சொல்லலாம். அபிராம் சாருக்கும் எனக்கும் இருக்கும் காண்டாக்ட் அவர்ஸ் அதாவது வேலை நேரம் 8-10 மணி நேரம் மட்டுமே”

 

“அதுக்கப்பறம் அவரை யார் பாக்க வராங்க. டின்னர் யாருகூட போறார் இதெல்லாம் உனக்குத்தான் தெரியும். நீதானே அபியோட  அப்பாய்ண்ட்மெண்ட்ஸ புக் பண்ற? ”

 

“ஒத்துக்குறேன். அதெல்லாம் முறைப்படி அபிஷியலா நான் அப்பாயிண்ட்மெண்ட் தந்திருந்தால், என்ட்ரி போட்டிருந்தால் எனக்குத் தெரியும். இந்த மாதிரி போதை மருந்து தரவங்க முறையா என்ட்ரி போட்டுட்டா வருவாங்க?”

 

அவினாஷின் கண்களில் சுவாரஸ்யம் தெரிந்தது. 

 

“குட்டையைக் குழப்ப ட்ரை பண்ணாதே. என்ட்ரி போடாதவங்க அபியைப் பார்க்க முடியாது.  முன்னாடி வேலை பார்த்த நிகிதாதான் இந்த போதை மாத்திரையைத் தந்து அபிராமை மயக்குனா. உன்கிட்டல்லாம் அவன் மயங்க வாய்ப்பில்லை. அதனால அதே போதை மாத்திரையைத் தான் நீயும் செஞ்சிருக்க?”

 

ஆச்சிரியமாக கண்களை விரித்துப் பார்த்த செம்பருத்தி “காவ்யா நீங்க படிச்சவங்க, புத்தியோட சிந்திச்சுப் பார்ப்பிங்கன்னு தப்பா நினைச்சுட்டேன். நிகிதான்னு யாரோ ஒரு பொண்ணு செஞ்சா அதே போஸ்டில் வேலை பாக்குற நானும் செஞ்சிருப்பேன்னு நீங்க நம்புறது உங்க தனிப்பட்ட விஷயமா இருக்கலாம். ஆனால் நான்தான் செஞ்சேன்னு சாதிக்கிறிங்க பாருங்க அது சிறுபிள்ளைத்தனமான முடிவு. செக்கரேட்டரி எல்லாரும் போதை மருந்து தந்து மயக்கப் பார்ப்பங்கன்னு நீங்க சொல்றது வெள்ளையா இருக்குறவனெல்லாம் பொய் சொல்ல மாட்டான்னு சொல்ற மாதிரி இல்ல”

 

அவினாஷுக்கும் காவ்யா எதையோ மறைக்கிறாள் என்றே தோன்றியது. ஆனால் அது என்ன என்று தெரிய வேண்டும். ஆனால் செம்பருத்திக்கு அவன் சப்போர்ட் பண்ண தேவை அங்கு இருக்கவில்லை. அவளே வாளை எடுத்து சுழற்றுகிறாளே. சிறுபிள்ளைத்தனம், புத்தி இல்லை என்று அவளது பதிலில் இருந்த ஊசிகள் காவ்யாவுக்குத் தேவையே…

 

“நான் சிறுபிள்ளையா? புத்தி கெட்டவளா எவ்வளவு தைரியம்டி உனக்கு. இப்ப சொல்றேன் நீதான் தினமும் அவினாஷுக்கு கூல்ட்ரின்க்ஸ் வாங்கிக் கொடுத்த, அதில்தான் ட்ரக்ஸ் கலந்து தந்திருக்க”

 

“அதை எப்படி உறுதியா சொல்ற காவ்யா?” என்றான் அவினாஷ். 

 

“வந்து… அபிராம் நிறைய கூல்ட்ரின்க்ஸ் குடிச்சுட்டு பாட்டிலை போட்டு வச்சிருந்தார். கூல்ட்ரின்க்ஸ்ல போதை மருந்து கலக்குறதுதான் ஈஸி. அதைத்தான் இவ செஞ்சிருக்கா”

 

“எது? இந்த ப்ராண்டா?” தனது கைப்பையில் எடுத்துச் சென்றிருந்த குளிர்பானத்தைக் காட்ட

 

“இதேதான்… இப்ப மாட்டிக்கிட்டியா… அவி இப்பயாவது இவதான் அபிராமோட இந்த நிலைமைக்குக் காரணம்னு சொல்லி கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளுங்க”

 

“நான்தான் அந்த கூல்ட்ரிங்சை அபிராமுக்கு வாங்கிட்டு வந்து தந்தேன். அவினாஷ் நான் செஞ்ச தப்பை முழு மனசோட ஏத்துக்குறேன்”

 

அவினாஷ் திகைத்துப் போய் பார்க்க, காவ்யாவின் முகத்தில் வெற்றிச் சிரிப்பு.  

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28

அத்தியாயம் – 28    அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது  “நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை.    “உங்க பொண்ணா யாரது?”   “கட்டிக்கரும்பா ஒண்ணே

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 20தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 20

அத்தியாயம் – 20   ‘ஐ’ என்றால் அது காந்தம் என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா?  ‘ஐ’ என்றால் அது அன்பு என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா?    அவினாஷ் வந்துவிட்டான், அவள் கண் முன் நின்றுவிட்டான் என்பதை

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 33தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 33

அத்தியாயம் – 33   “மந்தாகினி இது சரியான முட்டாள் தனம்.மந்திரத்தால மாங்காய் பழுப்பது எல்லாம் கதைல வேணா நடக்கலாம். மந்திரம் செஞ்சு ஒருத்தரோட மனச எப்படி காதலிக்க வைக்க முடியும்? அதுவும் அந்த நாகேந்திரன் உன்னை திரும்பிக் கூட பாக்க