Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’

34 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

இவை அனைத்தையும் கவனித்த மித்ரன் அவர் வருந்துவதையும் எண்ணி கவலைகொண்டான்..முன்னொரு நாள் தியாவிடம் பேசியது நினைவுக்கு வந்தது..”அப்போவும் அவரு அம்மாவுக்காக தானே பாக்க வந்தாரு..என்னை அப்டி ஒரு வார்த்தை சொல்லிட்டு போனாரு..எப்படி தியா எந்த அப்பாவாது இப்டி இருப்பாங்களா? அவருக்கு என்னை சுத்தமா புடிக்கல..அவ்ளோ வெறுப்பு அதனால தான் அந்த நிலைமையிலும் அப்டி பாவம் பாக்காம சொல்லிட்டு போயிருக்காரு..” என

மித்து “என்ன ஆதி ஒளர? அப்டிப்பாத்தா நீ கூட அந்த விசயத்துல உன் அப்பா மாதிரி தான் நடந்துக்கிட்ட..உன்னை சொன்னா ஒத்துக்குவியா?”

“நானா? நான் எப்போ?”

“நம்ம பாப்பா பொறக்கும்போது யாராவது ஒருத்தர் தான் பொழைக்க வெக்கமுடியும் அது  நானா, அவளானு கேட்டதும் நீ யோசிக்கக்கூட இல்லாம தியா தான் வேணும்னு சொன்னேல..எல்லாரும் சொன்னாங்க..அப்டினா நம்ம பாப்பா மேல உனக்கு பாசம் இல்லேனு அர்த்தமா என்ன? இல்லையே அவளை விட அதிகமா உன் வாழ்க்கைல நான் இருந்திருக்கேன், வேணும்னு நீ நினைச்சிருக்க..அதேமாதிரி தான் உன் அப்பாவுக்கு இவளோ காலம் கூட வாழ்ந்த அவங்களை தான் தெரியும்..அவங்களை தான் ரொம்ப பிடிக்கும் வேணும்னு சொன்னாரே தவிர உன்னை பிடிக்காது, வெறுக்கறேன்னு சொல்லல..நீயா ஏதாவது நினச்சுட்டு இருக்காத..”

“இப்போ என்ன என்னை அவர்கிட்ட நீ பேசசொல்றியா?”

“அப்டினு நான் எங்க சொன்னேன்..ஒருத்தர் மேல அதிகமா பாசம் வெச்சா இன்னொருத்தரை கண்டுக்காம விடுறாங்கனு அர்த்தம் இல்ல அதை புரிஞ்சுக்கோனு சொன்னேன்..மத்தபடி அவங்ககிட்ட பேசுறது பேசாதது உன் இஷ்டம் தான்..” என எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி சப்போர்ட் பண்ணிட்டு இறுதியாக முடிவை கேட்டாலோ அது உன் இஷ்டம் தான் என நழுவிவிடும் இவளின் தந்திரத்தை கண்டு மித்ரனுக்கு சிரிப்புதான் வந்தது..

இன்றும் அவள் முதலில் அவர் செய்த தவறை சொல்லி கோபப்பட்டாலும் மற்றவர்களின் மனபாரம் கண்டு தாங்காமல் பின்னோடு சென்று அவர்களது எண்ணத்தை மாற்றும் விதமாக இவள் ஆலோசனை சொல்லிவிட்டு வருவது எண்ணி இவனே புன்னகைபூத்தான்…

 

அவனும் ஒரு முடிவுடன் வயலுக்கு போக அங்கே யோசித்துக்கொண்டிருந்த முருகனும் ‘சரி இன்னைக்கு எப்படியும் அவன்கிட்ட பேசிடனும்..’ என முடிவுடன் எழுந்தவர் அருகே வந்த மித்ரனை கண்டதும் மௌனமானார்.. இருவரும் ஒன்றாக தான் நடந்து வந்தனர்..இருந்தும் பேசவில்லை..

 

வரும்வழியில் தெரிந்தவர்கள் டீக்கடையில் பார்க்க “என்னப்பா முருகா எப்படி இருக்க? இந்த தம்பி..” என இழுக்க முருகனோ தன் மகன் என கூறினால் மித்ரன் எப்படி எடுத்துகொள்வானோ என்னவோ தயங்க கூட்டத்தில் அட வக்கீல் சார் கூட பாத்தோமே, மித்ரன் சார் தானே நீங்க? என கேட்டவன் அட இவரு தான் இவங்க சொத்து பிரச்னை எல்லாம் முடிய ஏற்பாடு பண்ணது என பொதுப்படையாக கூற அந்நேரம் பார்த்து மித்ரனுக்கு கால் வர பேசிவிட்டு திரும்பியவன் அங்கிருந்தே “அப்பா, பொங்கல் வெச்சிட்டாங்களாம்..கோவிலுக்கே நேரா போகலாம் வாங்க..” என சாதாரணமாக பேச முருகனுக்கு எதுவுமே புரியவில்லை..

“அட உன் மவன் தானா..அத சொல்றதுக்கு என்ன?

திடிர்னு வந்து இந்த தம்பி எதுக்கு எல்லாமே செய்யணும்னு அப்போவே யோசிச்சோம்..இப்பல விஷயம் புரியுது..இவளோ நாள் எங்கேய்யா வெச்சுயிருந்த உன் புள்ளையா? ராஜாவாட்டம் இருக்கான்..” என ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று கூற முருகன் மகிழ்ச்சியில் “சொல்றேன் சொல்றேன்..எல்லாமே நான் வந்து சொல்றேன்..இன்னைக்கு என் பேத்திக்கு காது குத்து..கோவிலுக்கு போறோம்..என் பையன் வேற கூப்படறான்..நான் உடனே போறேன்..” என அவர் ஓடாத குறையாக வர

“அப்பா பாத்து..மெதுவா வாங்க..”

“இல்லையா..எனக்கு ஒண்ணுமில்ல..அது நீ கூப்பிட்டதும்..சரி வா வா நேரமாச்சுல..நாம அங்க போலாம்..” என அவர் திணறியபடியே பேசினாலும் அவரது மகிழ்ச்சி நன்றாகவே தெரிந்தது..இருவரும் சிரித்து பேசியபடியே கோவிலுக்கு வர இதை கண்ட அனைவரும் மகிழ்ச்சியாக தியா ஆச்சரியமாக பார்க்க “மற்றவர்களை முன்னே செல்ல சொல்லிவிட்டு தியாவுடன் பின் தங்கியவன் அவளின் திறந்த வாயை மெதுவாக விரல்வைத்து மூடிவிட்டு “ஷாக்ல நீ ரொம்ப அழகா இருக்க தியா..” என கண்ணடிக்க அவளுக்கு மேலும் ஷாக் ஆக அவன் சிரிப்புடன் “இப்டியே நீ இருந்தா உன்னை கூட்டிட்டு கோவிலுக்கு உள்ள போகமாட்டேன்..தூக்கிட்டு வெளில ஓடிடுவேன்.. ஒருவேளை நீ அதைத்தான் எதிர்பார்க்கிறியோ?” என கிண்டல் செய்ய

சகஜநிலைக்கு வந்த மித்து “ஆ..அதெல்லாம் ஒண்ணுமில்ல..முதல வா சாமி கும்பிடலாம்..”

என அவள் திணறியபடி உள்ளே ஓட இவனும் சிரிப்புடன் பின்னே சென்றான்..

கோவில் பூஜை, விருந்து, காது குத்து என அனைத்தும் சிறப்பாக நடக்க மாலையில் அனைவரும் கிளம்பினர்..மாலை வரை பேத்தியை தன்னுடனே வைத்துக்கொண்டார் முருகன்..தனியே போன் பேசிக்கொண்டிருந்த மித்ரனிடம் கிளம்பும் போது முருகன் தயக்கத்துடனே வந்து  நின்றார்..

“சொல்லுங்கப்பா..”

“அது..அது வந்துப்பா, முடிஞ்சா இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிட்டு நாளைக்கு கிளம்புறீங்களா? உனக்கு ரொம்ப வேலை இருக்குன்னா பரவால்லப்பா, அப்புறமா வந்து பாத்துக்கறேன்..” என தயங்கியபடியே கேட்க

அவன் புன்னகையுடன் “என்னப்பா இதை கேட்க ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க? இப்போ என்ன, உங்களுக்கு நாங்க இன்னைக்கு இருக்கணும் அவ்ளோதானே..விடுங்க..தியாகிட்ட மட்டும் கேக்கறேன்..ஏதாவது அவளுக்கு வேலை இருக்கானு..இருக்குன்னா போயிட்டு 2 நாள்ல திரும்ப வந்து கூட நாங்க இருந்திட்டு போறோம்..இல்லாட்டி இன்னைக்கே இருக்கோம்..போதுமா?”

அவர் வேகமாக “மருமககிட்ட அப்போவே கேட்டுட்டேன்பா..நீ சரினு சொன்னா அவள் இருக்கேன்னு சொல்லிட்டா…” என சொல்ல

அவனுக்கு இவர்களின் செயல் கண்டு சிரிப்பு தான் வந்தது..”சரிப்பா இருக்கோம்..வாங்க உள்ள போலாம்..” என்றான்..

திரும்பி நடக்கும்போது “அப்பா, நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கவா? செய்விங்களா?”

முருகன் “கண்டிப்பாயா..இதுவரைக்கும் நீ என்கிட்ட எதுவுமே கேட்கமாட்டியானு இருந்தது..என்னால உன்கிட்ட இல்லாதது என்ன தரமுடியும்னு ஒரு தயக்கம் இருந்திட்டே இருந்தது..இப்போ நீயே கேட்கும் போது நான் வேணாம்னா சொல்லப்போறேன்..நீ என்ன வேணுமோ கேளு..எப்படியாவது நான் அதை உனக்கு கொடுக்கறேன்..” என அவர் கூற

மித்ரன் புன்னகையுடன் “நீங்க இனிமேல் எப்போவுமே என்கிட்ட எதை கேக்றதுக்கும், சொல்றதுக்கும் தயங்கக்கூடாது..அவன் என்ன நினைச்சுப்பானோ? மத்தவங்க என்ன சொல்லுவாங்களோ? நாம அவனுக்கு ஏதும் செய்யலையே, அவன் தகுதி என்ன? நம்ம தகுதி என்னனு? ரொம்ப எல்லாம் யோசிச்சு குழப்பிகாதிங்க..சாதரணமா உங்க பையன்கிட்ட எப்படி இருக்கணும்னு பேசணும்னு நீங்க ஆசைப்படுறீங்களோ தயங்காம அதை பண்ணுங்க..இதுதான் உங்ககிட்ட கேக்கறது..”

 

அவருக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வர மித்ரன் அவரது கைப்பற்றி “அப்பா, வாழ்க்கையில எல்லாரும் ஒரு ஒரு கட்டத்துல தப்பு பண்ணுவோம் தான்..அதை புரியும் போது திருத்திகிட்டாளே பெரியவிஷயம்..அப்டிப்பாத்த நீங்க இத்தனை வருஷம் அந்த தப்பை உணர்ந்து வருத்தப்பட்டதே போதும்பா..இனிமேல் நான் சொன்ன மாதிரி இருப்பிங்க தானே?”

 

முருகன் கண்ணீருடன் இருப்பேன் என்பது போல தலையசைக்க அவனும் புன்னகையுடன் அவரை உள்ளே அழைத்துச்சென்றான்..

அன்று இரவு மித்ரன் பின்புற தோப்பில் அமர்ந்திருக்க அங்கே வந்த மித்ரா “ஆதி, இங்க என்ன பண்ற?”

“சும்மா தான் வேடிக்கை பாத்திட்டு உக்காந்திருந்தேன்…பாப்பா தூங்கிட்டாளா?”

“ம்ம்..நீ சும்மா வேடிக்கை பாக்குறமாதிரி தெரிலையே..எதையோ யோசிக்கிற மாதிரி இருக்கே?” என அவள் தூண்டில் போட

உண்மையாகவே அப்டி எதுவும் அவன் யோசிக்கவில்லை என்பதால் மித்ரன் புரியாமல் அவளை பார்த்தான்..அவளும் இவனை பார்க்காமல் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்க, கையாட்ட, காலட்ட என இருக்க அடுத்த நொடியே புன்னகையுடன் “ம்கூம்…நான் எதுவும் யோசிக்கிற மாதிரி தெரில..நீ தான் என்கிட்ட ஏதோ கேட்க வந்து எப்படி கேட்கலாம்னு யோசிக்கிறமாதிரி தெரியுதே?”

“நானா? நான் எதுக்கு? சும்மா தான் நீ தனியே உக்காந்திருக்கியேனு வந்தேன்..எனக்கு என்ன கேட்க இருக்க போகுது? சொல்லு..”

“அப்பாகிட்ட பேசுனத பத்தி இருக்குமோனு நினச்சேன்..ஏன்னா ஒரு ஒருதடவையும் உன் முடிவு தான் ஆதி, உன் விரும்பம் தான்னு நீ சொல்லிட்டதால இப்போ எப்படி அதை பத்தி கேக்கிறதுனு யோசிக்கிறியோனு தோணுச்சு..இல்லாட்டினா விடு..”

“ச்ச..ச்ச..நீ உங்க அப்பாகிட்ட பேசியிருக்க..இதுல நான் கேட்க தெரிஞ்சுக்க என்ன இருக்கு..” என கெத்தாக கேட்க

“அப்போ சரி” என அவனும் மௌனமாக வேடிக்கை பார்க்க

சில வினாடிகள் பொறுத்து “வேணும்னா உனக்கு அதை பத்தி ஏதாவது சொல்லணும்னு தோணுச்சுனா சொல்லு..” என்றதும்

“என் இஷ்டம் தானே அது எதுக்கு போயி சொல்லிட்டு? யாரோ இங்க எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாம்னு சொன்னாங்க..வேணும்னா நேராவே சொல்லி கேட்கலாம்..”

“இங்க பாரு ஆதி, ஏதோ தனியே இருக்கியே..என்ன ஏதுன்னு கேட்கத்தான் வந்தேன்..நீ சொல்றமாதிரி எல்லாம் இல்ல..நீ என்ன நினச்ச..ஒரு விஷயம் நடந்திட்டா அதை முழுசா தெரிஞ்சுக்க பொண்ணுங்க ரொம்ப கியூரியாசிட்டியோட வெயிட் பண்ணுவாங்கன்னா?”

“ஓ..அதுதான் அப்போ விஷயமா?” என அவன் அதிலிருந்து வினவ

கடுப்பானவள்  “அப்டி எல்லாம் ஒண்ணுமில்ல..நீ எதுவும் சொல்ல வேண்டாம்..நான் போறேன் போ..” என எழுந்து நடக்க அவன் புன்னகையுடன் அவள் கைப்பற்றி இழுத்தான்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 16’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 16’

16 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மறுநாள் ஆசிரமத்தில் இருவருக்கும் கல்யாணம் நடந்தேறியது..அடுத்து பதிவு செய்துவிட்டு வீட்டிற்க்கு வந்து சிறிது நேரம் இருந்தனர். அவள் பொதுவாக செல்லும் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர். அவள் வீட்டில் சந்தியாவின் அறையில் சிந்து,

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

13 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அதன் பின் நடந்தவை,  கனடா வந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவன் அப்டியே உறங்கியும் விட்டான். ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது..எதிலும் ஆர்வமும் இன்றி பிடிப்பும் இன்றி அவன் தனது அன்றாட பணிகளை

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

27 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “ஓகே ஓகே சொல்றேன்..சிவா, நம்ம பிரண்ட்ஸ், அம்மா அப்பா எல்லாரும் மேரேஜ்க்கு சொல்லிட்டே இருந்தாங்க..நானும் மேரேஜ் ஓகே சொன்னேன்..அன்னைக்கு ராத்திரி நான் மாடில தனியா நின்னுட்டு இருந்தேன்..அம்மா வந்து என்கிட்ட பேசுனாங்க..”