Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),உன்னிடம் மயங்குகிறேன்,Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 4’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 4’

அத்தியாயம் – 4

 

 

வளேன் இந்த மாதிரி’ யோசனையுடன் தாவணியை நதிக்குத் தாரை வார்த்திருந்தவளுக்கு அவசரமாக தனது சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டான். பேய் மழையால் ஊரே அடங்கியிருக்க, அவளை யாருமறியாமல் ராஜேந்திரன் வீட்டிற்கு தூக்கிச் செல்வது ப்ரித்விக்குப் பிரச்சனையாக இல்லை.

 

திகைத்து நின்ற ராஜேந்திரனிடம் நடந்ததை சுருக்கமாகச் சொன்னான். காய்ந்த துண்டால் அவளது கைகளையும் கால்களையும் சூடு பறக்கத் தேய்த்துவிட்டவன், வெறும் மயக்கம்தான் என்றறிந்து திருப்தியடைந்தான். காப்பி ஒன்று தயாரித்து வரும்படி ராஜேந்திரனை சொன்னான்.

 

“முதல்ல அவ வீட்டுல சொல்லிடலாம்டா” என்றான் ராஜேந்திரன் தயக்கத்துடன்.

 

சற்று அசைவு தெரிந்தது நந்தனாவிடம்.

 

“இவளை இப்படியே வீட்டுக்கு அழைச்சுட்டு போக முடியாது. அப்பறம் இவளுக்குத்தான் பிரச்சனை. முதல்ல இவளுக்கு மாத்துத் துணி வேணும். பக்கத்து வீடுன்றதால பின்பக்க கொடில தாவணி எதுவும் காய்ஞ்சிருந்தா எடுத்துட்டு வரலாம்”

 

இருவரும் அதிகம் பேசாமல் நந்தனாவின் வீட்டிற்கு சென்றனர். பின் வாசல் வழியாக வந்திருப்பாள் போலும் அதனால் வாசல் திறந்திருந்தது. பூனை போல் அடி வைத்து கொடியருகே சென்றவர்களுக்கு ஆரியமாலாவும் செந்தூரநாதனும் பேசியது காதில் விழுந்தது. ஜன்னலுக்கு கீழே மறைந்து அமர்ந்து  கொண்டார்கள்.

 

“ஆரி எனக்கு மனசே ஆரலடி. இந்த வீடு சொத்து எல்லாம் அவளிது… ஒரு நாள் கூட அதுக்கு உரிமை கொண்டாடினதில்ல அவளைக் கொல்ல  எப்படித்தான் மனசு வந்ததோ…. நீ இப்படி கொலைகாரியா மாறுவேன்னு நினைக்கல”

 

“ஏதேது தம்பி பொண்ணு மேல பாசம் பொத்துகிட்டு ஊத்துதோ? நீங்களே போதும் போலிருக்கே என்னை போலிஸ்ல பிடிச்சுக் கொடுக்க. நான் பிரதாப்பைக் கட்டிக்கத் தானே ஏற்பாடு செய்தேன். கல்யாணம் பிடிக்காம அவளாத்தான் ஆத்துல விழுந்தா. இதுக்குப்  பேர் கொலையா? தற்கொலை…. ”

 

“நீ நேரடியா கொலை செய்யலடி. தூண்டி விட்டிருக்க. உன்கொண்ணன் மகன் பிரதாப்பைக் கட்டிக்கிறதுக்கு அவ சாகலாம். என்னம்மா  ப்ளான் போட்டிருக்கடி… நாளன்னிக்கு அவளுக்கும் ப்ரதாப்புக்கும் கல்யாணத்தை ஏற்பாடு செய்துட்டு, அதையும் தெனாவெட்டா அவகிட்ட சொல்லிட்டு, ராத்திரி பின்கட்டுல அவ சாக வசதியா கதவைத் திறந்து வச்சுட்டு, முழிச்சிருந்து பின்னாடியே போய் அவ ஆத்துல விழுந்துட்டாளான்னு பார்த்துட்டு, இத்தனை வேலையையும் ஒண்டியா செய்துட்டு கடைசில என்னை எழுப்பி சொல்றியே. உன் சாமர்த்தியத்தை  நெனச்சாலே எனக்குத் திகிலாயிருக்கு”

 

“இந்த சாமர்த்தியம் இருக்குறதாலத்தான் இப்ப இத்தனை சொத்துக்கும் உங்களை அதிபதியாக்கியிருக்கேன். இல்லைன்னா வாய்க்கால்பாறைல இன்னமும் வீடு வீடா அஞ்சு பத்துக்குப் பிச்சை எடுத்திருக்கணும்”

 

அவர்கள் இல்லாமலிருந்த சமயத்தை அவரது இல்லாள் நினைவுபடுத்தினாள்.

 

“இருந்தாலும் நந்தனா வாயில்லாத பொண்ணு. அவள் உயிரோட இருந்தா உனக்கு என்ன கஷ்டம்”

 

“சும்மா பேசாதைய்யா. நான் என்னமோ வில்லி மாதிரி பேசுற. அவளை கொல்லணும்னு எண்ணம் இருந்திருந்தா அவ அப்பன் செத்தப்பையே கொன்னிருக்க மாட்டேனா? ஏன் இவ்வளவு நாள் தள்ளிப் போடணும்? ஏற்கனவே ஏகப்பட்ட தகிடுதத்தம் பண்ணி நந்தனாவுக்கு வந்த மாப்பிள்ளையை ராதாவுக்குப் பேசி முடிச்சிருக்கோம். மாப்பிள்ளை வீட்டுக்கு உண்மை தெரிஞ்சா கல்யாணக் கனவோட இருக்குற நம்ம பொண்ணு நிலமை என்னாகும். இந்த பிரதாப் கூட நந்தனாவுக்கு கல்யானம் நடந்தாலும், பிரதாப் ஒரு கிரிமினல், இப்ப நம்ம சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு அப்பறம்  அவனும் எப்ப வேணும்னாலும் சொத்தெல்லாம் கேட்பான். அவ செத்துட்டா இப்ப நம்ம அனுபவிச்சிட்டிருக்குற சொத்தெல்லாம் சட்டப்படியும் நமக்கே கிடைச்சுடும். அதனால நான் முடிவு செய்துட்டேன் நந்தனா சாகிறதுதான் நல்லது. இன்னைக்கு பொழைச்சா இன்னொரு நாள் எப்படியும் அவ சாகத்தான் போறா. இப்ப செத்து நமக்காவது நல்லது செய்யட்டுமே”

 

 

மூச்சு கூட விட பயந்தபடியே ஜன்னலருகே அவர்கள் பேசியதைக் கேட்டபடியே நின்றுருந்தனர் இரு நண்பர்களும்.

 

பின் கட்டை எட்டிப் பார்த்து கதவு திறந்திருப்பதை உறுதி செய்தாள் ஆரியமாலா.

“பின் கதவை தாப்பா போட்டுடாதிங்க. அவ பின் வாசல் வழியாப் போய்தான் தற்கொலை செய்துட்டான்னு ஊருல எல்லாரும் சொல்லணும். இப்ப ஒரு தூக்க மாத்திரை போட்டுட்டு மாடில தூங்கலாம் . அப்பத்தான் காலைல ஆளுங்க சாவு செய்தி சொல்ல வரப்ப கீழ நடந்ததே நமக்குத் தெரியாத மாதிரி இருக்கும்”

 

சில நிமிடங்களில் இருவரும் மாடிக்கு ஏறிச் செல்லும் ஓசை கேட்டது. அவ்வளவு நேரமும் மழை நண்பர்கள் இருவரும் மறைந்திருக்க பெரிதும் உதவி செய்தது.

 

ப்ரித்வி நண்பனைப் பார்க்க.

 

“சமையல்ரூம்லருந்து  வலதுபுறம் திரும்பினா சின்ன ரூமிருக்கும். அதுதான் நந்துவோடது. அவ துணியெல்லாம் அங்கதானிருக்கும். ஒரு பைல எடுத்துட்டு வா. நான் வீட்டுக்குப் போய் அவளுக்கு சூடா குடிக்கத்  தரேன்” மெதுவாய் சொல்லிவிட்டு முடிவோடு சென்றான் ராஜேந்திரன். அவன் சொல்லியபடியே நந்தனாவின் அறையை அடைந்தவன் அங்கிருந்த துணிப்பையில் கையில் அகப்பட்ட துணிகளை அடைத்தான். அருகிலிருந்த பெட்டியைத் திறந்தவன் அதில் தென்பட்ட அவளது சான்றிதழ்களை பையில் பத்திரப்படுத்தினான்.

 

 

மூலையில் எழுதிக் கசக்கி எறியப்பட்ட ஒரு காகிதம் கிடந்தது. அதனைப் பிரித்து ஜன்னல் வழியே கசிந்த வெளிச்சத்தில்  படித்தான். முத்து முத்து கையெழுத்தில் அதிலிருந்த எழுத்து கேள்வி கேட்டது

 

 

“ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)சாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)

  “தம்பி, அப்படின்னா என்ன செய்யப் போறீங்க? டிராமா தான் இல்லையாமே. எங்களோடு பூவேலிக்கு வந்துடுங்களேன்,” பாப்பாவின் முகத்தைப் பார்த்து, “என்னம்மா, நான் சொல்றது சரிதானே?” அவள் சாமண்ணாவின் முகத்தைப் பார்த்தாள். சாமண்ணா சொன்னான். “நீங்க ஏதோ டிராமாவுக்கு வந்தீங்க. வந்த

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 12தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 12

லக்ஷ்மியின் கல்யாணம் முடிந்ததும் சரஸ்வதிக்கும் நல்ல வரன் வர அதை முடித்துவிட நெல்லையப்பன் விரும்பி ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். முதலில் மாப்பிள்ளைகளை நொள்ளை நொட்டை சொல்லிய சரசு பின் ஒரு நல்ல நாளில் நெல்லையப்பனின் கடையில் வேலை செய்த செல்வத்தை ஓடிப்