நிலவு 66
“கேர்ள்ஸ் நீங்க ஒரு நாளை சரி வேஸ்ட் பன்ன கூடாது” என்று ஆரவ் கூற
“நீங்க சொன்னதுக்காக திடீர்னு ஒரு ஆளை எங்க கோர்ச்சா ஏத்துக்க முடியாது” என்றாள் ஒருவள்.
“இங்க பாருங்க இப்போ இருக்கிற நிலமையில் நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுக்கனும். இவரு உங்களுக்கு சில நுணுக்கங்களை சொல்லி கொடுப்பாரு” என்று ஆரவ் பொறுமையாகக் கூற
“சேர் முடியாதுன்னா விடுங்களேன்” என்றாள் இன்னொருவள்.
“இந்த கோர்ச் யாருக்கு வேணாம்?” என்று கேட்க, அவர்கள் ஐவருடன் சேர்ந்து மேலும் இரண்டு பெண்கள் கை உயர்த்த மற்றவர்கள் அமைதியாய் நின்று இருந்தனர்.
“சரி இப்போ இரண்டு டீமா இப்போ இருக்கிறது போல ஒரு மெச் விளையாடுங்க, அதில் யாரு வெற்றி பெறுகிறாங்களோ அவங்க சொல்கிறதை போலவே செய்யலாம், பட் நோ பிரேக்” என்றான் ஆரவ்.
“சேர் நாங்க ஏழு பேர், அவங்க ஐந்து பேர் எப்படி விளையாட முடியும்?” என்று கேட்க,
“அதை விளையாடுவாங்க, நீங்க தயாராகுங்க” என்றான் ஆரவ்.
பின் ஏழு பேர் கொண்ட அணிக்கும், ஐவர் கொண்ட அணிக்கும் மெச் ஆரம்பமானது. அதில் கிறு ஐந்தாவதாக இருக்கும் பெண்ணிடம் அவளுடைய பார்ட்னரை மட்டும் பீரி ஆக விடாமல் கவனிக்குமாறு கூறினாள். அவளும் கிறுவைப் பற்றி தெரிந்ததால் சரி என்றாள். மற்றவர்களிடம் அவர்களுக்கு இரண்டு கோல் போடும் வரையில் சாதாரணமாக விளையாடுமாறு கூற அவளும் அதை ஏற்றுக்கொண்டாள்.
முதலில் டொசப்பில் பந்து எதிரணிக்கு கிடைத்தது. அதனால் அவள் கிறுவைப் பார்த்து நக்கலாக சிரிக்க, கிறுவும் பதிலுக்கு புன்னகைத்தாள். பின் சென்டர் பாஸ் மூலமாக ஒரு புள்ளியைப் பெற ஆரவ் நடப்பதை ஓரளவு யூகித்துக் கொண்டான். கிறுவிற்கு சென்டர் பாஸ் வரும் போது ஒரு புள்ளியை எடுத்தனர். அடுத்ததாக எதிரணிக்கு பந்து கிடைத்தது.
அவர்கள் மீண்டும் ஒரு புள்ளியைப் பெற்றனர். எதிரணி சென்டர் அவள் கையில் பந்தை வழங்கும் போது,
“தோத்து போக தயாராக இரு” என்று கூற கிறு அவளுக்கு புன்னகையை பரிசாக அளித்தாள்.
அடுத்ததாக கிறுவின் ஆட்டம் ஆரம்பமானது. 3 passes ல் பந்தைக் கொண்டுச் சென்று தன் அணிக்கு ஒரு புள்ளியைப் பெற்றுக் கொண்டாள். எதிரணி சென்டரிடம் பந்தை வழங்க அவர்களிடம் இருந்த பந்தை ஜெசி பிடித்து தனது அணிக்கு கொடுத்து கோலைப் பெற்று மீண்டும் ஒரு புள்ளியைப் பெற்றது கிறுவின் அணி. இவ்வாறு தொடர்ந்து கிறுவின் அணி புள்ளிகளைப் பெற்றனர்.
பத்து நிமிடத்தில் புள்ளிகள் கிறு அணி : எதிரணி 6:2 என்ற ரீதியில் புள்ளிகளைப் பெற்றது. அடுத்த பத்து நிமிடத்தில் 10: 2 என்ற புள்ளிகளைப் பெற்று வெற்றியை ஈட்டியது கிறுவின் அணி. எதிரணிக்கு அவமானம் தாங்கமுடியவில்லை.
“எப்போவும் ஒருத்தரோட வெளித் தோற்றத்தை பார்த்து திறமையை எடை போடக்கூடாது. அது தப்பான விஷயம்” என்றாள் கீது.
மற்றவர்களும் அவள் கூறியதை அமைதியாகக் கேட்டனர்.
“உங்க யார் மேலேயும் எங்களுக்கு கோபம் இல்லை, ஆனால் நீங்க புரிஞ்சிக்கிறதுக்காக தான் அவ அப்படி சொன்னா” என்றாள் சௌமி.
பின் அவர்களுக்கான பயிற்சியும் ஆரம்பமானது. அன்றைய தினம் முழுவதும் ஆரவ் அங்கேயே இருந்தான். பின் பயிற்சி முடிந்தவுடன் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தான். இரவு உணவிற்கு ஆஜராக இன்று நடந்த அனைத்தையும் பேசியபடி அனைவரும் உண்டு முடித்து அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.
ஆரவ் அஸ்வினிற்கு அழைத்து அவனுடன் பேசிய பிறகு மீராவுடன் பேச ஆரம்பித்தான். அவளுடன் பேச கிறுவும் இரவு உடைக்கு மாறிய பிறகு அங்கு வந்தாள்.
“இன்றைக்கு பர்ஸ்டே பிரக்டிஸ் எப்படி இருந்தது?” என்று மீரா கேட்க,
“அக்ஷன் மூவியை பார்த்தது போல இருந்தது” என்றாள் கிறு.
“என்னடி சொல்ற?” என்று கேட்க,
இன்று நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள்.
“இவனை மாதிரி இன்னும் மனிஷ மிருகங்கள் நம்ம கண்ணுக்கு தெரியாமல் இருக்காங்க டி. அவன் பணம் இருந்த திமிரில் தானே இப்படி பன்னான், அதற்கான நல்ல தண்டனையை தான் கொடுத்து இருக்க” என்று கூற
“நம்ம அண்ணனுங்களும் பணத்திலேயே வாழ்ந்தவங்க தானே? ஆனால் இப்படி கேவலமான ஒரு புத்தி அவனுக்கு இல்லையே?” என்று கிறு கூற
“அது பெற்றவர்களோட வளர்ப்பில் தான் இருக்கு டி, அவங்க வளர்ப்பு சரியாக இருந்தால் எந்த பிள்ளையும் தப்பு பன்னாது, ஆனால் இந்த காலத்தில் எல்லா பெற்றவர்களும் பணத்திற்கு பின்னாடி போகிறாங்க, பிள்ளைகளுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்க நேரம் இல்லை. யாருக்காக பணம் சம்பாதிக்கிறாங்களோ அவங்க கூட நேரத்தை செலவளிக்கிறது இல்லை, இதனாலேயே முக்கால்வாசி பிள்ளைகள் வழி தவறி தப்பான வழிக்கு போகிறாங்க” என்றாள் மீரா ஆற்றாமையுடன்.
“ஆமா டி இது மிடிள் கிளாஸ் பிள்ளைகளுக்கு சரி, பணக்காரவங்க பணத்தை கொடுத்து அதன் மூலமா எதையும் சாதிக்கலாம்னு சொல்லி கொடுக்குறாங்க, அவங்களுக்கு அதிகமா செல்லமும், அதிகமா பீரீடமும் கொடுக்குறாங்க. கண்டிப்பு அங்கே குறைவு டி. தன் பிள்ளை ஒரு சின்ன தப்பு பன்னா பணத்தை கொடுத்து, அதை சரி பன்னிடுறாங்க பெத்தவங்க அவங்க மரியாதையை காப்பாத்திக்க. இதனால் தான் நான் என்ன தப்பு பன்னாலும் என் பெத்தவங்க பணத்தை வச்சி என்னை காப்பாத்துவாங்கன்னுற நம்பிக்கையில் தப்பு பன்றாங்க” என்றாள் கிறு.
“இதி கலியுகம் டி, அதனால் தப்பு அதிகமா நடக்கும் டி, ஆனால் கடவுள் ஒருத்தர் தப்பு பன்னா அதற்கான தண்டனையை இந்த உலகத்துலேயே கொடுத்துருவாரு. அதனலே இன்னும் அதிகமானோர் கடவுள் நம்பிக்கை வச்சிருக்காங்க” என்றாள் மீரா.
“நீ ரொம்ப எமோஷன் ஆகாத என் பையனை அதை பாதிக்கும், அவனை நல்லா பார்த்துக்க, பாப்பா கிட்ட போனை பிடி” என்று கிறு கூற
மீரு பாப்பாவின் அருகில் மொபைலை கொண்டு சென்றாள்.
“இங்க பாருங்க குட்டி பாப்பா உன் மாமா, உன் அப்பா போல அதிகமா கோபடாத” என்றாள்.
“அடியேய் போதும் டி, என் பிள்ளை கிட்ட நானே இன்னும் பேச இல்லை” என்று அங்கே வந்தான் அஸ்வின்.
அஸ்வினுடன் சிறிது நேரம் பேசியவள் அழைப்பைத் துண்டித்தாள்.
ஆரவ் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் அருகில் கிறு உறங்க அவளை அணைத்தவாறே மீண்டும் ஆரவ உறங்க ஆரம்பித்தான். கிறுவின் இதழ்கள் தானாக விரிந்தன. சிறிது நேரத்தில் நித்திரா தேவியும் அவளை ஆட்கொண்டாள்.
அடுத்த நாள் அவர்கள் நேற்று போல் நடந்துக் கொள்ளாமல் புன்னகையுடன் கடத்தினர். இவ்வாறு நாட்கள் நகர இவர்களுக்கு இடையில் நட்பு என்ற புனிதமான உறவும் மலர ஆரம்பித்தது. இன்னும் ஒரு கிழமையில் முதல் மெச் அவுஸ்திரேலியாவில் இலங்கை அணியுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு இடையில் அனைவருக்குமான போஸ்ட் பிரித்து வழங்கப்பட்டது.
கிறுவிற்கு Cம், கீதுவிற்கு WAம், ஜெசியிற்கு WDம், சௌமியிற்கு GAம், மற்றைய ஐவரில் மற்றைய மூவருக்கு மற்றைய மூன்று போஸ்டுகளும் வழங்கப்பட்டு தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. மிகுதியாக இருந்த ஐவரும் ரிசோ என தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் தொடர் பயிற்சிகள் வழங்கப்படன. இதற்கு இடையில் ஜீவி, தர்ஷூ வின் வளகாப்பு நாளும் வந்தது.
இருவருக்கும் ஒரே மண்டபத்தில் ஒன்றாக வளகாப்பு நிகழ்வு இடம்பெற அனைத்து நண்பர் பட்டாளமும், உறவினர்களும் மண்டபம் முழுவதுமே நிறைந்து வழிந்தனர். வளகாப்பு நிகழ்வு ஆரம்பமாக ஜீவி, தர்ஷூ இருவருமே ஒரே நிறத்தில் பட்டு புடவை அணிந்து தன் மேடிட்ட வயிறுடன் அடிமேல் அடி எடுத்து வைத்து நடக்க அவர்களின் கணவன்கள் இருவரையும் கைதாங்கலாக மேடைக்கு அழைத்து வந்தனர்.
இரு ஜோடியினதும் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து அனைவருமே பிரம்மித்தனர். இத்தனை நாட்கள் இருவரின் முகத்திலும் இல்லாத ஒரு பொலிவு இன்று அதிகமாகவே இருந்தது. போடோகிராபர் ஒரு நிகழ்வையும் தவறாமல் கமாராவில் பதித்துக் கொண்டார்.
பின் பெரியவர்கள் அவர்களுக்கு மஞ்சள் பூசிய பிறகு அருகில் இருந்த வளையல்களை அவர்களுக்கு போட்டுவிட ஆரம்பித்தனர். பின் ஒவ்வொருவராக மஞ்சள் பூசி வளையல் மாட்டிவிட இருவருமே அதில் நிறைவாக உணர்ந்தனர். அவர்களது கணவன்கள் அவர்களுக்கு பரிசளித்து மஞ்சள் பூசிவிட அந்தத் தருணம் அழகாக புகைப்படமாக்கப்பட்டது. மீராவின் முறை வர அவனை அஸ்வின் அழைத்துச் சென்று இருவருக்கும் தங்க வளையல்களை போட்டு விட்டாள்.
அங்கிருந்த ஒரு பாட்டி,
“யாராவது ஒரு பாட்டு பாடுங்க” என்று கூற
கிறு நன்றாக பாடுவாள் என்பதால் அவளை பாட்டுப்பாடக் கூறினர் நண்பர்கள்.
அவளும் மறுக்காமல் தன் அண்ணனின் மனைவிகளுக்காகவும், அவளுடைய தோழிகளுக்காவும் பாட ஆரம்பித்தாள்.
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ
தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும் இதை மறவா எந்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே
ஆரவ் அவள் பாடுவதை மெய் மறந்து கேட்டுக் கொண்டு இருந்தான். பின் கிறு அவன் தோளில் இடித்து சுயநினைவிற்கு அழைத்து அவனை மேடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் இருவருக்கும் தங்க வளையல்களை போட்டுவிட நண்பிகளும் அவ்வாறே செய்தனர். பின் அவர்கள் இருவரையும் ஒவ்வொரு கோணத்திலும் போடோகிரபர் புகைபடங்களை எடுத்துக் கொண்டார். ஆரவ் கிறுவிடம்,
“கண்ணம்மா உனக்கும் இதே போல பங்சன் நடக்கும் போது நான் தான் உனக்கு தேவையாண எல்லாவற்றையும் தெரிவு செய்வேன்” என்றான்.
“அதற்கு என்ன புருஷா, நீயே எல்லாவற்றையும் பார்த்துக்க” என்றாள் கிறு.
“நீ கன்சிவா இருக்கும் போது உன்னை விட்டு ஒரு அடி நகர மாட்டேன், உள்ளங்கையில் வச்சி தாங்குவேன் டி, என்னோட எல்லா வேலைகளையுமே உன் பக்கத்துல இருந்தே செய்வேன், அது மட்டும் இல்லை உன்னோட எல்லா வேலைகளையும் நான் தான் பன்னுவேன்” என்றான் கண்கள் மின்ன.
“எல்லோரும் சொல்கிறதை போல் உன்னை போல ஒரு புருஷன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்” என்றாள் காதல் பொங்க.
“இல்லை டி உன்னை போல ஒரு மனைவி கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும்” என்றான் அதே காதலுடன்.
“சரி இரண்டு பேருமே கொடுத்து வச்சவங்க தான் ஒகேயா?” என்று கிறு கேட்க,
“ஓகே” என்றான் அவள் நெற்றி முட்டி.
தாத்தாவிற்கு அனைத்து ஜோடிகளும் சந்தோஷமாக இவ்விடத்தை வலம் வருவதைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. ஆனால் விதியோ அவரைப் பார்த்து சிரித்தது.
அன்றைய தினம் அனைவருக்கும் இனிமையான நாளாகவே இருந்தது. அடுத்த நாள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கே சென்றுவிட்டனர். அடுத்த இரண்டு நாட்களில் நான்கு நண்பிகளும் அவர்களின் கணவன்களோடு தங்கள் கனவிற்காக அவுஸ்திரேலியாவை நோக்கி குடும்பத்தை விட்டு பயணமானார்கள்.