Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’

6 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

சிவா கடுப்புடன் இருக்க மித்ரா எப்போதும் போல வந்து “ஹே சீனியர்ஸ்…செம ஜாலியா உக்காந்திருக்கிங்க போல?”

மகேஷ் “எங்களை பாத்தா ஜாலியா இருக்கற மாதிரியா இருக்கு?”

“பின்ன? பாத்தா தெரில? அதான் முகமெல்லாம் செவந்திருக்கே..”

ராஜீவ் “கோபத்துல கூட முகம் சிவக்கும்..”

“அய்யயோ.கோபமா?..ஏய் குணா, இன்னைக்கு என்ன பண்ணி அவனுங்கள மாட்டிவிட்ட?” என அவள் எப்போதும் போல வம்பிழுக்க

குணா “ஆமா எல்லாத்துக்கும் என்னவே சொல்லு..எல்லாரும் கோபமா இருக்கறது உன்மேல..என்னால இல்லை..”

மித்ரா புரியாமல் நான் என்ன பண்ணேன்?

“மித்ரன லவ் பண்றேன்னு சொன்னியா?”

“திருத்தம் லவ் பண்றேனு பேச்சுக்கு சொல்லல. லவ் பண்றேன்..” என அவள் சிறிது வெட்கம் கலந்த சிரிப்புடன் அவள் சாதாரணமாக கூற

குணா ‘பாத்தியா நான் சொன்னேன்ல அவ விளையாட்டுக்கு சொல்லலனு..இப்போ அவ சொல்ற அழகுளையே தெரிதா?”

சிவா முறைக்க மகேஷ் ராஜீவ் இருவரும் தலையில் அடித்துக்கொண்டு தங்களுக்குள் பார்த்து எதுவும் செய்வதற்கில்லை என தலையசைக்க

 

சிவா “அப்போ நீ தெரிஞ்சு தான் லவ் பண்ற?”

“ஆமா..எனக்கு நான் என்ன குழந்தையா தெரியாம லவ் பண்ண?”

“ம்ச்…அவனுக்கும் எங்களுக்கும் செட் ஆகாதுன்னு தெரிஞ்சு தான் லவ் பண்றியா?”

“சாரி பாஸ்…நான் அவளோ கேள்வி வெச்சு யோசிக்கல..வேணா யோசிச்சு சொல்லட்டுமா?” என அவள் அதே போல வம்பிழுக்க பேச

சிவா அங்கிருந்து எழுந்தவன் “எல்லாரும் சொன்னானுங்க..என்னதான் பிரண்ட் பிரண்ட்னு சொன்னாலும் பொண்ணுங்க வேறடா..அவங்கவங்க விருப்பம்னு வரும்போது அதுக்கு தான் இம்போர்ட்டன்ஸ் குடுப்பாங்கன்னு..ஆனா உன்னை நம்புனோம்..ச்ச..நியூம் இவ்ளோதான்ல..இதுக்கு மேல பிரண்ட்னு சொல்லிட்டு எங்ககிட்ட வந்திடாத..” என கத்திவிட்டு செல்ல

ராஜீவ், மகேஷ், குணா அனைவரும் “டேய் இருடா…அவகிட்ட பேசிப்பாக்கலாம்…மித்து அவன்தான் இவளோ சொல்றானே..நம்ம கேங்க்கும் அவனுங்களுக்கும் செட் ஆகாது..நீ வேற யாரை வேணும்னாலும் லவ் பண்ணு..அவனை விட்டறேனு சொல்லு..நாங்க உன்னோட பிரண்ட்ஸ்..மித்ரன் உன் லவர் இது ஒத்து வராது..” என

மித்ரா “அது எதுக்கு அப்டி சொல்லணும்..அவன் என் லவர்..நீங்க எப்போவுமே என் பிரண்ட்ஸ்..எனக்கு இது பிரச்சனையா தெரிலையே..” என புரியாமல் ஆனால் நிதானமாக கூற

இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல சிவா கையை உதறிவிட்டு சென்றுவிட பின்னோடு “உன்னை திருத்தவே முடியாது..எப்டியோ போ” என திட்டிவிட்டு நகர்ந்துவிட மித்ராவிற்கு என்னவோபோல் ஆகிவிட்டது.

 

அங்கே வந்த மித்ரன், குமார் மித்ராவை பார்த்தனர். மித்ரன் “என்னை பத்தி லவ், அதுல வர பிரச்னை அந்த லைப் பத்தி அவ்ளோ யோசிச்சவ இதை நீ யோசிக்கலையா? நீ எதுவும் தெரியாத பொண்ணு இல்ல உனக்கு சொல்லி திட்டி பயமுறுத்துனா எல்லாம் நீ அடங்கமாட்டேனு தான் நிதானமா சொல்லிட்டு இருக்கேன்..என்னை நீ லவ் பண்றதால உனக்கு எந்த யூஸ்மே இல்ல..நீ ரேஷ்மாகிட்ட சொன்னது தான்..கடைசிவரைக்கும் லவ்வே வராட்டி அது ரொம்ப கஷ்டம்..யாருக்காகவும் நான் என்னை மாத்திக்கற மாதிரி இல்லை..இது டோடல் வேஸ்ட்..நீ என்னை லவ் பண்றேன்னு சுத்திட்டு இருந்தா உனக்கு நானும் கிடைக்கமாட்டேன், உன்னோட பிரண்ட்ஸ் அவனுங்களையும் இழக்கவேண்டியதா தான் இருக்கும்..சோ என்னை லவ் பண்ணலனு நீ முடிவு பண்ணா உன் வாழ்க்கை இப்போ இருக்கறமாதிரி ஜாலியா ஸ்மூத்தா போகும்..இல்லாட்டி உனக்கு இழப்புகள் தான் அதிகம் வரும்…ஆனா அதுக்காக எல்லாம் திங்க் பண்ணி ஐயோ எனக்காக இவளோ தனியா இருக்காளே பீல் பண்றாளேனு எல்லாம் யோசிச்சு நான் லவ் பண்ணுவேன்னு நினைக்காத..நான் அப்டி இல்ல..என்னோட திங்கிங் அது அவ எடுத்த முடிவு அவ லைப்..தப்பான முடிவு எடுத்தாலும் அவ தான் அதை ஏத்துக்கணும்னு நான் சொல்லுவேன்..இந்த மாதிரி ஒருத்தன் உனக்கு தேவையில்லன்னு நினைக்கிறேன்..யோசிச்சு வேணாம்னு முடிவு பண்ணிடு..அதான் எல்லாத்துக்கும் நல்லது..” என கூறிவிட்டு சென்றுவிட்டான்..

 

மித்ரா அதே இடத்தில மௌனமாக அமர்ந்திருந்தாள்..அவளது தோழிகள் அவளை சுற்றி அமர்ந்து ஆளாளுக்கு ஒவ்வொன்றாக கூறிக்கொண்டிருந்தனர்..சிலர் சிவாவிற்கு ஆதரவாக, சிலர் மித்ரன் கூறுவதை யோசித்துப்பார்க்க கூறினர்.

 

எதுவும் கூறாமல் எழுந்து சென்றாள். ஹாஸ்டல் பசங்க, மித்திரனின் நண்பர்கள் என்பதற்காகவே ஒரு ஜாலிக்கு என்றே சிவா சிலரை தொல்லை செய்வது பிரச்சனை கொடுப்பது என்றிருந்தான். அதை கொஞ்ச காலமாக மித்ராவிற்காக அவள் கேள்வி கேட்கிறாள் என்பதற்காகவே யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தான். ஆனால் அது மீண்டும் ஆரம்பிக்க யாரும் எதுவும் செய்யமுடியாமல் இருந்தனர். மித்ரா சிவா மற்றும் நண்பர்களிடம் செல்ல அவர்கள் இவளை பார்த்ததும் எழுந்து போக ஒதுங்கி போக என இருந்தனர். அவளை வெறுப்பேற்ற எண்ணியே அதிகமாக அவளுக்கு விருப்பமில்லா காரியங்களை செய்ய இதேபோல இரண்டு நாட்களும் தொடர இதற்கு மேல் முடியாது என்றவள் அன்று மாலை தனியே வெளியே இருக்கும் பாஸ்கெட் பால் கிரௌண்டில் மித்ரா நேரே அவர்களிடம் சென்று “சிவா உன்கிட்ட பேசணும்..”

 

சிவா வேண்டுமென்றே “டேய் யாரோ வந்து நம்மகிட்ட பேசுறாங்க…

ஏன்டா இந்த பொண்ணு உங்களை தேடி வந்ததா? பாத்துபா சொல்லிவைங்க…ரொம்ப மோசமான பசங்க இருக்கற ஏரியா..தோணும்போதெல்லாம் அடிதடி நடக்குற இடம்….ஏதாவது பிரச்சனைனா அப்புறம் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை…” என யாரோ போல பேச ராஜீவ் மகேஷ் “நீ எதுக்கு இங்க வந்த முதல கிளம்பு..” என மித்ராவை சொல்ல மித்ரா “நான் தான் உங்ககிட்ட பேசணும்னு சொல்றேன்ல…” என

சிவா “எனக்கு யார்கிட்டேயும் பேச விரும்பமில்லை..”

மற்ற பசங்க இவளை கிண்டல் செய்ய மித்ரா நிதானமாக “என்ன சிவா…என்னை இன்சல்ட் பண்ண பாக்குறியா? இப்போதைக்கு என்னை அவமானப்படுத்திட்டா நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுவியா?” என்றாள்

“டேய் என்ன பிரச்னையாம் இவளுக்கு…அசிங்கப்படுத்தறதுக்குனே வந்திட்டா..”

“ஆப்போசிட் கேங் இரண்டுமே இந்த பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்ணணும்ணு எதிர்பார்க்க வேண்டியது…எப்போவுமே சேஃப்பா இருக்க பாக்குறது..பசங்க பிரண்ட்ஷிப் மாதிரி வராது மச்சி..அடிச்சுவிடு..” என இவர்கள் நால்வர் இல்லாத மற்ற பசங்க கத்த

மித்ரா “டேய் கருமூஞ்சி பேசாம இரு..மூஞ்சில கரப்பான்பூச்சி புடிச்சு விட்ருவேன்..சிவாக்கு பிரச்னை வரும்போதெல்லாம் நீ கூட வந்து இருந்திட்ட பாரு..பேச வந்துட்டான்…”

“ஹே இந்த பொண்ணுங்களே இப்டி தான்..சும்மா வந்து சீன போட்டுட்டு…போகச்சொல்லுடா..மேட்ச் விளையாடணும்..” என கூட்டத்தில் ஒருவன் கத்த

மித்ரா “ஆமா பெரிய நேஷனல் பிலேயேர்ஸ்..இன்னைக்கு ஒருநாள் விளையாடாட்டி ஊரு அழிஞ்சுபோயிடும்..”

“ஏய்..”

“ஏய்ய்… என்ன? இவளோ நாள் அவன் முன்னாடி பேசவே அவ்ளோ பம்முவிங்க..சிவாக்கு எதிரா அவ்ளோ வேலையும் பண்ணிட்டு இன்னைக்கு அவன்கூடவே ஜோயின் அடிக்கபாக்கறீங்களா? நீ என்னென்ன  பண்ணனு தெரியாதுனு நினைக்கிறியா? இப்போ எனக்கு அவங்களுக்கு சண்டைன்னதும் உடனே வந்து ஆட்டைய கலைக்க பாக்கறியா? நான் என் பிரண்ட்ஸ பாக்க வந்திருக்கேன்..அவனுங்ககிட்ட பேசணும்..எவனாவது லூசு மாதிரி பேசிட்டு குறுக்க வந்திங்க பாலலையே மண்டைய ஒடைச்சிடுவேன்..” என அவள் மிரட்ட அவனுங்களோ “இவ என்ன இப்டி பட்டுனு சொல்லிட்டா…”

“ஏய் என்னடி ஒவரா பேசுற..”

“டி சொல்லி கூப்பிடாத..”

“அப்டித்தான்டி சொல்லுவேன்..பெரிய இவள நீ..முடிஞ்சா அடிடி பாக்கலாம்…” என அவன் கத்த குணா “சனியன சண்டைக்கு கூப்படறானே..” என கூறி முடிக்கும் முன் பட்டென கையில் வைத்திருந்த பாலை மித்ரா தன்னிடம் கத்தியவன் தலையில் போட்டுவிட

“என்ன பாவம் பாப்பேன்னு நினைச்சியா..” என அவள் மீண்டும் பாலை எடுக்க

“ஹே லூசுடா இது..”

மித்ரா திரும்பி முறைத்துவிட்டு “ஆமா லூசு..போங்கடா முதல இங்கிருந்து..இல்ல அடுத்து…” என அவள் கத்த

அவனுங்களோ திட்டிக்கொண்டே “பைத்தியம் டா..வந்துருங்க…” என ஓடினர்..

மகேஷ், ராஜீவ் தங்களுக்குள் சிரிக்க சிவா “ம்ச்..இப்போ உணக்கு என்ன வேணும்? என்ன எப்போவும் போல ஃப்பன் பண்ணிட்டு டாபிக்க டைவர்ட் பண்ணி திரும்பவும் பிரண்ட்ஸ் ஆகிடலாம்னு பிளான் பண்றியா?”

“இல்லை சிவா..எனக்கு அந்தளவுக்கு சீரியஸ்னெஸ் தெரியாம இல்லை..ஆனா எல்லாமே பேசி முடிவு பண்ணிக்கலாம்னு வந்திருக்கேன்..”

“ஓ…ஓகே…பேசலாமே…சொல்லு..” என கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு கேட்க

மித்ரா “உனக்கு நான் லவ் பண்ணது பிரச்னையா? இல்ல மித்ரனை லவ் பண்றது பிரச்னையா?”

“ஏன் அதுக்கு உனக்கு பதில் தெரியாதா?”

“சரி மித்ரன் கேவலமானவன், தப்பானவன், அவனை மாதிரி ஒருத்தன் யாருக்குமே வேண்டாம்னு நீங்க சொல்ற அளவுக்கு மோசமா?…ஒருவேளை அப்டி ஒரு கேவலமானவனை பார்த்து நான் லவ் பண்ணிருந்து என் வாழ்க்கை அழிச்சு போனாகூட பரவால்லை..ஆனா உங்களுக்கு பிடிக்கலேங்கிற ஒரே காரணத்துக்காக இவனை வேண்டாம்னு சொல்றிங்க..மொத்தத்துல உங்க பிரண்ட் என்னோட லைப் பத்தியோ சந்தோசம் பத்தியோ உங்களுக்கு கவலை இல்ல அப்படித்தானே..இதுக்கு பேர் தான் கிளோஸ் பிரண்ட்ஷிப்..ம்ம்?

அதெப்படி டா பசங்க பிரண்ட்ஸ்ல அந்த பொண்ணு உன் பிரண்ட்ட கழுவி கழுவி ஊத்துனாலும் கண்டுக்காம அந்த பொண்ணும் வேணும், இங்க உங்க பிரண்ட்ஷிப்பும் வேணும்னு இருக்கீங்க…நீங்களும் என்னதான் அந்த பொண்ணு கேவலமா பேசுனாலும் என் பிரண்ட்க்காக ஹெல்ப் பண்றேன்னு அவளோ ரிஸ்க் எடுக்க தெரியுது..இன்பாக்ட் அவங்க லவ் பண்றதுக்கு, பண்ணதை சேத்தி வெக்க ஐடியா குடுக்கறதுல இருந்து உயிரை குடுக்கிற வரைக்கும் ரிஸ்க் எடுக்க தெரியுது..அத சாதாரணமா எடுத்துட்டு போகமுடியுது..இதுவே உங்க பிரண்ட் ஒருத்தர் பொண்ணு அவ லவ் பண்றவன் உங்களுக்கு பிடிக்காம இருந்தா ஒரு பெர்ஸன்ட் கூட ஏத்துக்கமுடில…மூச்சுக்கு முன்னூறு தடவ சொல்லவேண்டியது இந்த பொண்ணுங்களே இப்டி தான் இப்டி தான்னு அவ்ளோ பொலம்பல்..அப்டி என்ன நீங்க அதுல தப்பு கண்டுபுடிச்சிட்டீங்க? எல்லாருமே மனுசங்க தானே..உணர்ச்சிங்கிறது எல்லாருக்கும் இருக்கும்தானே.. இப்போ நான் சொல்றேன் மித்ரனை நான் லவ் பண்றேன்….எனக்காக நீங்க அவனோட பிரண்ட் ஆகிடுங்கனு நான் சொன்னா நீங்க ஏத்துப்பீங்களா? முடியுமா? அப்புறம் ஏன்டா என்னை மட்டும் அதேமாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்கிறிங்க..

பிரண்ட்ஸ்னா நம்ம எப்டியோ அதே இயல்போட ஏத்துக்குவாங்க..மத்த உறவுகள இருக்கற அளவுக்கு அவங்க ஆசைகள் எதிர்பார்ப்பை போட்டு திணிக்கமாட்டாங்க..பிடிக்கலேனா சண்டைபோட்டுட்டு புரிஞ்சுப்பாங்க..பிரச்னைனு வரும்போது கூட இருப்பாங்க…ஆனா இங்க அப்டியா இருக்கு?

இதுவே ராஜீவ் இல்ல குணா அவனுங்க கேங்ல இருக்கற எவனாவது ஒருத்தனோட தங்கச்சிய லவ் பண்ணிருந்தா என்ன சொல்லிருப்ப?

ஏன்டா மட்டும் கேட்டிட்டு,  அதையும் மீறி இல்ல மச்சான் அவளை ரொம்ப பிடிச்சிருக்கு லவ் பண்றேன்னு சொன்னா ‘சரி பாத்துக்கலாம் மச்சான்..அவங்க அண்ணன் என்ன பெரிய இவன?…நீ லவ் பண்ணுடா…உங்களை சேத்தி வெக்கவேண்டியது என் பொறுப்புனு சொல்லிருப்ப..இல்லேனு சொல்லு?

 

இப்போ நாங்கிறதால அவனை விட்டுட்டு வந்தாதான் நம்ம பிரண்ட்ஷிப்னு நிக்கிறிங்க…பசங்க நீங்க தான்டா போட்டு கொழப்பிக்கிறீங்க…

பொதுவா எல்லா பொண்ணுங்களுமே தன் லவர் இல்ல ஹஸ்பண்ட் கூட தன்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ், அண்ணா, தம்பி கூட கிளோஸ இருக்கணும்னு தான் நினைப்பா…நீங்க எப்படி உங்க அம்மா அக்கா தங்கச்சிகூட நாங்க கிளோஸ இருக்கணும்னு நினைக்கிறீங்க அப்டித்தான் நாங்களும்…அது ஏன் டா உங்களுக்கு புரியமாட்டேங்கிது..” என அவள் விடாமல் பேசிவிட்டு சில நிமிடம் குறுக்கும் நெடுக்கும் நடந்தவள் சற்று மூச்சை உள்ளித்துவிட்டவள் “சரி, எனக்கு முடிவா ஒரு பதில் சொல்லுங்க…நீங்க எனக்காக என்கூட பிரண்ட்ஷிப் வெச்சுக்கிட்டிங்களா? அப்டித்தான் இவளோ நாள் நான் நினச்சேன்…இல்ல உங்களுக்கு பிடிச்சதை நான் செய்வேன்னு என்னை பிரண்ட்னு சொல்லிட்டு இருக்கீங்களா?”

 

சிவா “பிடிச்சதை செய்றது தானே பிரண்ட்ஷிப் உனக்கு பிடிக்காததை நான் மாத்திக்கல…?” என இன்னும் அதுலையே நிற்க

 

மித்து “கண்டிப்பா..ஆனா அது உன் மனசுக்கு ஏத்துக்கற மாதிரி இருந்ததால பண்ண..இல்ல அந்த விஷயம் உன்னை பாதிக்காம இருக்கணும்… இப்போ போனானுங்களே அவனுங்க என்னை டீஸ் பண்ணாங்கடா…அவனை அடினு  நான் உன்கிட்ட சொன்னா நீ உடனே யோசிக்காம செய்வ..அவனுங்கள சாகுற அளவுக்கு அடிப்ப.. ஏன்னா அவனுங்க உன்னை பொறுத்தவரைக்கும் யாரோ..உன் பிரண்ட்க்கு பிரச்னை கொடுத்துட்டாங்கனு ஒரே எண்ணம் மட்டும் தான் உனக்குள்ள இருக்கும்…

 

இதுவே அதே மாதிரி நான் குணாவ குறை சொல்லி அடிக்க சொல்றேன்….நீ உடனே செஞ்சுடுவியா? சும்மா கிண்டல் பண்ணுவ, திட்டுவ, பேசாத போடானு இன்னைக்கு விரட்டி விட்டு நாளைக்கு சேத்துப்ப..ரொம்ப ப்ரோப்லேம இருந்தா என்கிட்டயும் பேசி சால்வ் பண்ணுவ…ஆனா இவனை சாகுற அளவுக்கு அடிக்கமாட்டேல்ல.. யோசிப்ப தானே..ஏன்னா உனக்கு இரண்டுபேருமே வேண்டப்பட்டவங்க..யாரு ஒருத்தருக்காக பேசமுடியும்…சோ அந்த தயக்கம் எல்லாருக்கும் இருக்கும்..

 

இப்போ நானும் அதே ஸ்டேஜ்ல தான் நிக்கிறேன்… ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ சும்மா வாய் வார்த்தைக்கு வேணா உனக்காக மாத்திக்கிட்டேன்னு சொல்லிக்கலாமே தவிர இங்க ஒருத்தரும் அப்டி இல்லை..இருக்கவும் முடியாது…அவங்க மனசுலையும் ஒரு ஓரத்துல இது வேணுமா, கொஞ்சம் விலகி இருந்தா என்னனு ஒரு நிமிஷமாவது தோணிருக்கும்…அதனால தான் மாத்திக்கிறாங்க…நீயும் அப்டித்தான் யோசிச்சு பாத்தா உனக்கே புரியும்..

 

இவளோ நாள் நான் உங்களுக்காக தான் உங்ககூட பிரண்ட்டா இருந்தேன்….நான் எது சொன்னாலும் நீங்க தலையாட்டுவீங்கனு எதிர்பார்த்து இல்ல..அதை புரிஞ்சுக்கோ..எனக்கு மத்தபடி ஈகோ எல்லாம் ஒண்ணுமில்ல..இப்போவும் உன்கிட்ட வந்து எல்லார் முன்னாடியும் இப்டி கேட்டுட்டு கெஞ்ச சொல்றியா..தாராளமா பண்றேன்..

சண்டை போட்டு என்னை அடிக்கணுமா? திட்டணுமா? அப்போ நீ கூல் ஆகிடுவியா? எனக்கு எல்லாமே ஓகே..ஏன்னா நீங்க என் பிரண்ட்ஸ்..உங்களுக்கு நான் எப்படினு நீங்க தான் முடிவு பண்ணனும்…அப்டி பிரண்ட்னு தோணுச்சுனா என்கிட்ட சாதாரணமா பேசுனாலே போதும்…நான் வேற எதையுமே உங்ககிட்ட எதிர்பார்கல…” என கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்..மற்ற நால்வரும் அங்கேயே மௌனமாக நின்றனர்..

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் மித்ராவின் அருகில் வேகமாக ஒரு பைக் வந்து நிற்க அவள் பதறி “டேய் பைத்தி..” என ஆரம்பித்தவள் யாரென பார்த்துவிட்டு விலகி செல்ல சிவா “ஓய்…என்ன நீ பாட்டுக்கு போற..நாங்களும் எங்க பிரண்ட்ட அப்டி எல்லாம் விட்ரமாட்டோம்…இப்போ எங்க உருண்டு போயிட்டு இருக்க? வந்து வண்டில ஏறு…” என

அவள் முறைத்துவிட்டு “எங்க போறதுக்கு முன்னாடியும் எனக்கு பயங்கர பசி..சாப்பிட கூட்டிட்டு போங்க..இல்ல இங்க எத்தனை கொலை விழுகும்னு தெரியாது..” என அவளும் வண்டியில் ஏறினாள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’

34 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   இவை அனைத்தையும் கவனித்த மித்ரன் அவர் வருந்துவதையும் எண்ணி கவலைகொண்டான்..முன்னொரு நாள் தியாவிடம் பேசியது நினைவுக்கு வந்தது..”அப்போவும் அவரு அம்மாவுக்காக தானே பாக்க வந்தாரு..என்னை அப்டி ஒரு வார்த்தை சொல்லிட்டு போனாரு..எப்படி

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’

26 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “அன்னைக்கு ராத்திரியே…உன்னை விட்டுட்டு கொஞ்ச தூரம் நடந்து போனான்..கொஞ்ச நேரம் யோசிச்சேன்..நேரா சிவா வீட்டுக்கு போனேன்..” “அந்த நேரத்துலையா? அதுவும் சிவா பாக்க?” என ஆச்சரியமாக கேட்க “ம்ம்..அப்போவே தான் போனேன்…நான்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’

35 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் தோளில் முகம் வைத்தபடி “எனக்கு மத்த பொண்ணுங்க பத்தி எல்லாம் தெரியாது..ஆனா என் தியாவ பத்தி நல்லா தெரியும்..நீ அப்டித்தான்..அவள் திரும்பி முறைக்க அவன்