Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 60

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 60

நிலவு 60

 

“நீ உன் அம்மா, அப்பா நேரில் வந்தால் அவங்களை ஏத்துப்பியா?” என்று  கிறு கேட்டாள்.

 

“கிறுஸ்தி இந்த டொபிக்கை விடு, காலையில் இருந்தே ரொம்ப டயர்டா இருக்க, கொஞ்சம் தூங்கி எந்திரி” என்று மறுபுறம் திரும்பிப்படுத்தான்.

 

“கண்ணா” என்று அவனை எழுப்பி அமர வைத்தாள்.

 

“என்னடி உன் பிரச்சனை?” என்று ஆரவ் சலித்துக் கொண்டே கேட்க,

 

அவன் முகத்தை தன் கையில் ஏந்தி “பதில் சொல்லிட்டு தூங்கு டா, மனசை தொட்டு உண்மையை மட்டும் சொல்லு” என்றாள் அவன் கண்களைப் பார்த்து.

 

அவளை அணைத்துக் கொண்டவன் 

 

“நான் என்னை வளர்த்தவங்களை விட, பெற்றவர்களை தான் அடியோடு வெறுக்குறேன். அவங்க என்னை பார்த்துகிட்டு இருந்தால் எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா டி? நான் இப்படி எல்லோராலையும் வெறுத்த ஒருத்தனா வாழ்ந்து இருக்க மாட்டேனே டி, எனக்கு அவங்க வேணாம்” என்றான். 

 

அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை உணர்ந்தவள் அவனை அவசரமாக விலக்கி கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

 

அவன் நெற்றியில் இதழ் பதித்தவள், 

“இன்றைக்கு நீயும் தூங்க கூடாது, நானும் தூங்க மாட்டேன்” என்றாள் கதையை மாற்றி

 

“யேன்டி இந்த கொலை வெறி?” என்று அவன் கேட்க,

 

“நீ தானே எனக்கு காலையிலே axe oil பூசிவிட்ட? இப்ப கூட அந்த எரிவு இருக்கு, கண்ணை மூட முடியல்லை” என்றாள்.

 

“இதான் உன் பிரச்சனை, என் கிட்ட அதற்கு ஒரு வழி இருக்கு” என்று அவளை கையிலேந்தி பல்கனிக்கு தூக்கிச் சென்றான். 

 

அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் அவளை மடியில் அமரவைத்தான்.

 

“சரி நம்ம லைபை எப்படி பிளேன் பன்னி இருக்க?” என்று அவன் கேட்க,

 

“இந்தியாவிற்காக கப்பை ஜெயிச்சி கொடுக்கனும், அப்பொறம் முழுசா உன் வைபா இருக்கனும், நம்ம குழந்தைகளுக்கு வாழனும்” என்றாள்.

 

“மம் பாரவால்லியே, இந்த அளவிற்கு யோசிச்சு வச்சிருக்கியே” என்றான்.

 

அவள் புன்னகைக்க,

 

“கண்ணம்மா உன்னை போல எத்தனையோ பொண்ணுங்க தப்பான கோச் இருக்கிறதால தன்னோட திறமைகளை மறைச்சி வாழுறாங்க, அவங்களுக்கு உன்னை போல ஒரு கோச் தேவை” என்றான்.

 

“அதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றாள்.

 

“சரி, எனக்கு தூக்கம் வருது டி” என்று கூற

 

“நீ போய் தூங்கு, நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்து பிறகு வரேன்” என்று கூற

 

“உன் கண் எரிவு எப்படி இருக்கு?” என்று கேட்க,

 

“நான் சும்மா சொன்னேன்” என்று கண்ணடிக்க,

 

“அடிபாவி, உன்னை நம்பி இத்தனை நேரம் பேச்சு கொடுத்தேன் பாரு என்னை சொல்லனும்” என்று அவள் நெற்றியை முட்டினான்.

 

“நீ போ நான் வரேன்” என்று அவனை அனுப்பி வைத்தவள் ஊஞ்சலிலேயே அமர்ந்து கண்களை மூடினாள்.

 

‘கண்ணா உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு அவங்க கூட உன்னை சேர்த்து வைக்கவே வேணும், எனக்காக நீ நிறைய பன்னி இருக்க, உனக்காக நான் உன்னோட பெத்தவங்களை கண்டுபிடிப்பேன். நீ இழந்த பெத்தவங்க பாசத்தை அவங்க மூலமா திருப்பி கொடுப்பேன்’ என்று நினைத்தாள்.

 

அறைக்குள் நுழைந்தவள் தனது மொபைலை எடுத்துக் கொண்டு மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்தாள்.

 

ஒரு எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்த, 

 

“ஹலோ” என்று தூக்கக் கலக்கத்தில் கூற

 

“பாம்பு பாம்பு” என்று கிறு கத்த 

 

எதிர்முனையில் இருந்தவர் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார்.

 

“யஷூ, எந்திரிசிட்டியா?” என்று கிறு கேட்க,

 

“எருமையே, இப்போ எதுக்குடி பாம்பு ன்னு கத்துன?” என்று யஷூ கேட்க,

 

“ஹிஹி, நீ தூக்கத்துல பேசுவ அதான், தெளிவா பேசுறதுக்காக” என்றாள்.

 

“டைமை பார்த்தியா? அர்த்த ராத்திரி பன்னிரென்டு நாற்பது, இப்போ எதுக்கு கூபிட்ட?” என்று யஷூ கடுப்புடன் கேட்க, 

 

“எல்லாம் முக்கியமான விஷயமா தான்” என்றாள் கிறு.

 

“என்ன டி தலைபோற விஷயம்?” என்று யஷூ கேட்க,

 

“கண்ணாவோட பெத்த அம்மா, அப்பா யாருன்னு கண்டுபிடிக்கனும்” என்றாள் கிறு.

 

“அது எல்லாருக்குமே தெரியும் அம்மா தேவிகா, அப்பா வாசுதேவன்” என்றாள் யஷூ.

 

“என்ன கிண்டலா?” என்று கிறு கேட்க,

 

“ஆமான்டி, ஒரு மனிஷன் நிம்மதியா தூங்குற நேரம் கூப்பிட்டு, பாம்பு ன்னு கத்தினா வேறு என்ன பன்றதாம்? உனக்கு நாளைக்கு காலையிலேயே சொல்ல கூடாதா டி?” என்று பாவமாய் கேட்க, 

 

“நாளைக்கு நானும், ஆரவும் டெல்லிக்கு கிளம்புறோம், அவன் என் கூடவே இருப்பான் அதனால் இதைப் பற்றி எதுவுமே பேச முடியாது, முக்கியமான விஷயம் எந்த காரணத்தைக் கொண்டும் கண்ணாவிற்கு அவனை பெத்தவங்களை தேட சொன்னது தெரிய கூடாது” என்றாள்.

 

“புருஷனுக்கும், பொன்டாட்டிக்கும் இதே வேலையா போச்சு, நான் யாரையாவது தேடி கொடுக்கனும், பட் அவங்க புருஷனுக்கோ பொன்டாட்டிக்கோ இது தெரிய கூடாது. குட் பெமிலி” என்றாள் யஷூ.

 

“அதிகமா பேசாத, வேலையை முடிச்சுட்டு கூப்பிடு” என்று கிறு கூற

 

“ஏய் நில்லுடி, சிவனேன்னு தூங்கிட்டு இருந்த என்னை எழ வச்சி, கண்டுபிடிக்க சொல்லிட்டு, நீ நிம்மதியா தூங்க போறியா?” என்று யஷூ எகிற

 

“ஆமா” என்றாள் கிறு கூலாக

 

“உன்னை..” என்று திட்ட ஆரமபித்தவள் நிறுத்தி,

 

“வாழ்த்துக்கள் டி , மறந்துட்டேன்” என்று யஷூ கூற

 

“அடுத்த வருஷம் சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்” என்றாள் கிறு.

 

யஷூ சிரித்து, “ஒகே பாய் ஏ.கே” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

 

கிறு மொபைலை சார்ஜில் இட்டு ஆரவை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.

 

அடுத்த நாள் காலையில் தன் குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து விடைப் பெற்று இருவரும் டெல்லியை நோக்கி பயணித்தார்கள். அஸ்வினும், மீராவும் மும்பைக்குச் சென்றனர்.

 

கிறு ஏயார்போட்டில் இறங்கி வீட்டிற்குச் செல்ல ஆரவ் ஓபிசிற்குச் சென்றான். அனைத்து வேலைகளையும் முடித்து மாலை எட்டுமணி போல் வீடு வந்து சேர்ந்தான். கிறுவே இருவருக்கும் சேர்த்து சமைத்து வைத்தாள். 

 

“பசிக்குது டி” என்று டயனிங் டேபளில் அமர அவன் முதுகில் அடி வைத்தாள் கிறு.

 

“போடா, போய் குளிச்சிட்டு வா” என்று விரட்டினாள்.

 

“பசிக்குது டி, கொஞ்சம் சாப்பிட்டு அப்பொறமா குளிக்கிறேனே” என்று கெஞ்சலாய் கூற

 

“இங்க பாரு நீ வரும் போது ஜேர்ம்சையும் சேர்த்து அழைச்சிட்டு வந்திருப்ப, அதனால போய் குளிசிட்டு வா” என்று மிரட்டினாள்.

 

அவளைப் பாவமாகப் பார்த்து, வேகமாக படிகளில் ஏறினான். 

 

அதே நேரம் கிறுவிற்கு மீரா அழைப்பை ஏற்படுத்தினாள்.

 

“சொல்லு மீரா, என்ன அதிசயமா இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்க?” என்று கேட்க,

 

“கிறு பருப்பிற்கு உப்பை ஆரம்பத்துல போடுறதா? இல்லை சமைச்சதுக்கு அப்பொறமா போடுறதா?” என்று மீரா கேட்க,

 

“யேன் டி நீ இன்னும் சமைக்கவே இல்லையா?” என்று கிறு கேட்க,

 

“நாளைக்கு பிரேக்பஸ்டிற்கு” என்று மீரா கூற

 

“நீ முழுமையான குடும்பத் தலைவியாகவே மாறிட்ட டி” என்றாள் கிறு.

 

“உன்னால சொல்ல முடியுமா? முடியாதா?” என்று மீரா கேட்க,

 

“பருப்பு நல்ல பதமா வெந்ததுக்கு அப்பொறம் தான் உப்பு இட வேணும்” என்றாள் கிறு.

 

“ஒகே டி” என்றாள் மீரா.

 

“இதை உன் அம்மாவிடமோ, உன் அத்தையிடமோ கேட்க இருந்ததே மெடம்” என்று கிறு கேட்டாள்.

 

“அம்மாவிடம் கேட்டால் திட்டுவாங்கனும், இதற்கு தான் சமைக்க பழக சொன்னேன்னு, உன் அம்மாவிடம் கேட்டால் உன்னை, என்னை இரண்டு பேரையுமே திட்டுவாங்க அதான்” என்றாள் மீரா.

 

பின் இருவருமே சில பல விடயங்களைப் பேசி அழைப்பைத் துண்டித்தனர்.

 

ஆரவும் குளித்து வந்த பிறகு ஆரவிற்கு இவளே உணவை ஊட்டிவிட்டாள். பின் இவளும் சாப்பிட்டு முடித்து பல கதைகள் பேசினர்.

 

ஆரவ், கிறு இருவருமே அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்பித்தனர்.

 

“ஆரவ் சன் மியூசிக் செனலை போடு” என்று கிறு கூற

 

“இல்லை டி நியூஸ் பார்க்க வேணும்” என்று கூறினான்.

 

“அடேய் நைட்டு பத்து மணிக்கு தான் நியூஸ் இருக்கும் இன்னும் ஒன் அவர் இருக்கு, அதுவரைக்கும் சன் மியூசிக் செனலை பார்க்கலாம்” என்றாள் கிறு. 

 

“நீ பாட்டை இரசிச்சால் பத்து மணியை மறந்துவிடுவோம்” என்றான்.

 

“அப்போ பத்து மணிக்கு அலார்ம் வைக்கலாம்” என்று கிறு கூற 

 

அவனும் ஆமோதித்து, அலார்ம் வைத்தான். 

 

பின் சன்மியூசிக் செனலைப் பார்க்க, அதில் 

 

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன

கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

 

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்

தீயாய் மாறும் தேகம் தேகம்

உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்

வாழ்வின் எல்லை தேடும் தேடும்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

 

ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து

இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்

நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்

என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்

நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு

நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்

தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்

காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

 

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன

கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

 

பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்

நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்

வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்

தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்

தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே

தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு

உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்

வாசல் தூணாய் நானும் ஆனேன்

 

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன

கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும் 

 

இருவருமே ஒருவரின் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்தனர். கண்களாலேயே பல காதல் மொழிகளைப் பேசினர். இருவரும் இருந்த மோனநிலையைக் களைத்தது அலார்ம்.

 

இருவருமே திடுகிட்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டு டிவியைப் பார்த்தனர். ஆரவ் நியூஸ் சேனலை மாற்றி பார்த்தான். இடையில் பிரேகிங்க நியூஸ் சென்றது.

 

‘வணக்கம் தமிழ்நாட்டு எம்.பி ஜெகனாதனின் ஒரே மகனான அதர்வா சற்று முன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், இந்திய வலைப்பாந்தாட்ட சம்மேளனத்தில் ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி’ என்று செய்தியைக் கேட்டு கிறு அதிர்ச்சி அடைய ஆரவ் மர்மமாகப் புன்னகைத்தான். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10

நிலவு 10   “ஆரவ் இன்னும் நீ என்னை உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையா?” என்று கிறுஸ்திகா கேட்க,    அவன் அமைதியாக கண்கள் கலங்க அவளையே பார்த்தான்.    அவன் அமைதியைப் பார்த்தவளுக்கு ‘இதயத்தில் எவரோ ஈட்டியைப் பாய்ச்சியது போல’

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 26யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 26

நிலவு 26   நேரம் செல்ல அரவிந் ஆரவ்விடம் கிறுவை வீட்டிற்கு அழைத்துவறுமாறு கூறினார். அவனும் அவர் பேச்சைத் தட்ட முடியாமல் அவளைத் தன் கையில் ஏந்தி காரிற்குச் சென்று, அவளை காரில் அமர வைத்து தானும் அமர்ந்து அவளை தன்னோடு

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44

நிலவு 44   “என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை காதலிச்சிட்டே இருப்பேன், என்னோட உயிருக்கும் அதிகமா உன்னை நேசிப்பேன், ஐ லவ் யூ கண்ணம்மா” என்று அவள் ரோஜா இதழ்களை மென்மையாக சிறைபிடித்தான்.   அவளும் கண்மூடி