Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 4’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 4’

4 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

குணா “நீங்க எல்லாரும் என்ன ஜென்மங்கடா.. அவ அந்த திட்டு திட்றா.. கொஞ்சமாவது வந்து ஹெல்ப் பண்ணலாம்ல..”

சிவா “நாங்க சொன்னோம்டா. ஆனா மித்து தான் வேணாம்னு சொல்லிட்டா..”

“அவ சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி.. அடுத்த தடவ அவ சிக்கட்டும்.. அவளை நான் கவனிச்சுக்கறேன்..” என கடுப்பில் கத்த இவர்களும் சிரித்துக்கொண்டே “டேய் மகேஷ் என்னடா….உன் லுக்கு அந்த பக்கமே இருக்கு?” என சிவா வினவ

ராஜீவ் “இப்போதான் மச்சி ஒரு பறவை பறந்துபோச்சு.. பாவம் அதோட அழகுல மயங்கிட்டான் போல?” என

சிவா “அழகு விட இந்த போஸ பாத்தா அதிர்ச்சி மாதிரி தானே தெரியுது..” என கிண்டல் செய்ய

மகேஷ் “கரெக்ட் மச்சி.. நேத்து பேசும்போது அமைதியான பொண்ணா தெரிஞ்சா.. நம்புனேன்..இப்போ இந்த வாங்கு வாங்குறா..”

குணா “விடு மச்சான்… ஆனா நீ ஒருத்தனாவது எனக்காக பீல் பண்றியே..அது போதும்டா..” என உணர்ச்சி பொங்க

ராஜீவ் “இவன் இன்னும் திருந்தல…டேய் அவன் உனக்காக பீல் பண்ணல..அவனுக்காக பீல் பண்றான்..”

குணா “ஏன் மச்சி ..உன்னையும் திட்டுனாளா..?”

சிவா “ம்ம்..அடிச்சுட்டா…”

குணா “எப்போ மச்சான்..சொல்லுடா…மகேஷ் தயங்காம சொல்லு.. எனக்காகன்னா நான் தாங்கிப்பேன்..ஆனா என் நண்பனுக்கு ஒண்ணுன்னா…அவளை சும்மா விடமாட்டேன்..இப்போவே போயி அவளை..”

என்பதற்குள் முதுகில் சுரீர் என்க குணா “டேய் பைத்தியக்காரா எதுக்கு டா என்ன அடிச்ச..?”

மகேஷ் “பின்ன நான் லவ் பண்ற பொண்ணை நீ சும்மா விடமாட்டேன்..அடிப்பேன்னு எல்லாம் சொன்னா உன்னை கொஞ்சுவாங்களா?”

குணா “என்னது லவ்வா? இது எப்போ இருந்து..”

சிவா குணாவின் தோளில் கைபோட்டு “உன்னை அடிக்க போகும்போது இடிச்சாளே அப்போ ஸ்லிப் ஆனவன் உன்னை அவ மானாவரிய திட்டிட்டு இருந்தாளே அப்போ மொத்தமா பிளாட் ஆகிட்டான்…”

ராஜீவ் “அவன் பிரீஸ் ஆனது நீ திட்டு வாங்குறத பாத்து இல்லை..வருங்காலத்துல அவனும் இப்டி எல்லாமா திட்டுவாங்குவானு பயத்துல தான்..”

குணா “டேய் மகேஷ் இவனுங்க எல்லாம் என்ன டா சொல்றா..” என திரும்பி அவனை பார்க்க அவனோ விண்ணை பார்த்து சிரித்துக்கொண்டிருக்க குணா பேச்சின்றி “அவனை கைத்தாங்கலா கூட்டிட்டு வாங்கடா..” என கூறிவிட்டு மெல்ல நகர்ந்தான்..நண்பர்களும் சிரித்துக்கொண்டே நகர்ந்தனர்.

 

பவ்யா “ஹே மித்து, இது உனக்கே நியாயமா? மூணு மாசமா பாத்துட்டே இருக்க? என்ன தான்டி உன் ஐடியா?

சுஜா “லவ் பண்றேன்னா சொல்லித்தான் தொலையேன்..”

விஜயா “எது லவ்வா இவளா? யார?”

மகிளா “நம்ம சீனியர் மித்ராதித்தன்..”

“சும்மா பாத்துட்டு தானே டி இருந்தா? முடிவே பண்ணியாட்சா? எப்போ இருந்து? எப்படி இது நடந்தது?”

“அதுவா ஓரு நாள் எப்போவும் போல சிவா கேங் கூட பேசிட்டு இருக்கும்போது, சொல்லிருக்காங்க”

 

[ராஜீவ் “உன்னை கூப்பிட அந்த சொட்டைத்தல மித்ரனை கூப்பிட்டுவிட்டாரு.  அவனுங்க போய்ட்டானுங்கனு நினைச்ச எல்லாமே கேட்டுட்டு கிண்டல் பண்ணிட்டு இருக்கானுங்க..அதுலயும் அந்த குமார் குரங்கு இருக்கானே…ரொம்ப பண்ரான்…ஏதோ நீ எங்ககூட பிரண்ட்ஸ் ஆகிட்டதால அதுக்கு மேல பிரச்சனை பண்ணல…இல்லாட்டி எப்போவும் போல சிவாவுக்கும், மித்ரனுக்கும் பிரச்னை வந்திருக்கும்”

மித்ரா “ஏன் அவன் ரொம்ப மோசமா?”

மகேஷ் “அப்டினு சொல்லமுடியாது.. அவன் இருக்கற மாதிரி எங்களால இருக்க முடியாது..நாங்க என்ஜோய் பண்றது அவனுக்கு பிடிக்காது…எல்லாத்துக்கும் குறை சொல்லிட்டே இருப்பான்..அப்புறம் என்ன சண்டை தான்.. டாப்பர் திமிரு வேற.. கிட்டத்தட்ட சாமியார் மாதிரி.. படிப்பு ஹாஸ்டல் அவன் வேலை இதுல மட்டும் தான் இருப்பான்.. அப்டி இல்லாட்டி ஏதாவது ப்ரோப்ளேம்னா வருவான்..”

“அந்த ரோபோ பத்தி இங்க என்ன பேச்சு?” என குணா

“அதானே அதுக்கு காரணமான அவனுக்கு விஷயம் தெரியற அளவுக்கு வெச்ச உன்னை தான்டா முதல கொல்லணும்..” என அவர்கள் சாதாரணமாக அடித்துக்கொள்ள மித்ரனை பற்றி கேட்டவளுக்கு ஏனோ அவனை பார்க்கவேண்டுமென தோன்ற அதன் பின் பலமுறை முயன்றும் அவனை பார்க்கமுடியாமல் போக ஆனால் நாளுக்கு நாள் அவனை பற்றிய விஷயங்கள் அவள் காதில் விழுந்துகொண்டே இருக்க அவளுக்கு ஆர்வம் இன்னும் அதிகமானது..

ஒரு நாள் அவள் கிரௌண்டில் நின்று வாலிபால் விளையாடுபவர்களை பார்த்துக்கொண்டிருக்க இவளை நோக்கி வேகமாக பந்து அவள் பின்னால் நகர பார்க்க பள்ளம் இருக்க நகரமுடியாமல் ‘அயோ என்ன இவளோ போர்ஸ வருது..திருப்பி அடிச்ச கை போய்டும்..போச்சு பால் வர ஸ்பீட்க்கு இன்னைக்கே எனக்கு பால் தான் போல’ என அவள் கண்களை மூடி கைகளால் மறைத்துக்கொள்ள சட் என சத்தத்தில் கண் விழித்து பார்க்க மித்ரன் அந்த பாலை வேறு புறம் அடித்துவிட்டான்.

இவளிடம் வந்தவன் அவளின் வியந்த விழிகளை பார்த்தவன் “உனக்கு ஒண்ணுமில்லையே..ஓகே தானே?” என அவள் “ம்ம்”

“காலேஜ் முடிஞ்சு டைம் ஆச்சே..இன்னும் நீ கிளம்பல?” என பொதுவாக கேட்க

“இல்லை, ஒருத்தருக்கு வெயிட் பண்றேன்..அதான் அதுவரைக்கும் மேட்ச் பாக்கலாம்னு..”

“ஒ…ஓகே..தென் அங்க போய்க்கோ..இங்க எல்லாம் பள்ளமா இருக்கும்..அதோட பால் வரும்..” என அவன் சென்றுவிட

மித்ராவிற்கு அவனை பார்த்ததும் ஏனோ பிடித்துவிட்டது…

 

“டி..இந்தா நீ கேட்ட மாதிரியே மித்ரனோட போட்டோ..இதோட என்னை விட்று..தயவுசெஞ்சு இனி அவனை நேர்ல பாக்க பேச எல்லாம் என்னை இம்சை பண்ணாத..” என அவள் தோழி சலித்துக்கொள்ள

போட்டோவை வாங்கி வேகமாக பார்த்தவளுக்கு மேலும் புன்னகை பூத்தது..தன் மனதை சஞ்சலப்படுத்தியவன், தன்னை காத்தவன் இருவனும் ஒருவனே என எண்ணியவள் தோழியை பார்த்து கண் சிமிட்டி “கேட்க மாட்டேன்..நானே பாத்துக்கறேன்..வா” என அழைத்து சென்றாள்..

அது வரை அவளுக்கு அவன் யாரெனெ பார்க்கவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இருந்தது..ஆனால் ஒவ்வொரு நாளும் அவனை பார்ப்பதில், அவனை பற்றி தெரிந்துகொள்வதில் அவளின் ஆர்வம் அதிகரிக்க ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்டாள்..ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல அவளின் மனதில் மித்ரனும் உள்ளே சென்று கொண்டிருப்பதை..அதன் விளைவாக தான் இன்று கான்டீனில் இந்த மீட்டிங் எப்படி காதலை சொல்வது என..]

 

அவளிடம் கேட்க மித்ரா ஏனோ தானோவென ஜூஸ் குடித்துக்கொண்டே “இல்லடி எப்படி பேசுறதுனு தெரில…அதான்..” என இழுக்க அனைவரும் அவளை  ஒரு சேர ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு கோரஸாக “உனக்கு பேசத்தெரில?” இத நாங்க நம்பணுமா? என

மித்ரா மௌனமாக தலை கவிழ்ந்து “என்ன இருந்தாலும் நானும் பொண்ணுதானே..கொஞ்சம் ஒரு மாதிரி கூச்சமா இருக்கும்ல..அதோட இந்த லவ் எல்லாம் நான் என்ன வருசத்துக்கு ஒண்ணா பண்ணிட்டு இருக்கேன்.. அவனுக்கு ஸ்பெஷல ப்ரொபோஸ் பண்ணனும்னு தோணுது..சரி அட்லீஸ்ட் ப்ரொபோஸ் பண்ணாலாவது போதும்னு இப்போ இறங்கி வந்துட்டேன்..உங்க எல்லாருக்கும் எவ்ளோ விஷயம் ஹெல்ப் பண்ணிருப்பேன். எனக்கு  ப்ரொபோஸ் பண்ண ஹெல்ப் பண்ணகூடாதா? இப்டி நீங்களே சலிச்சுக்கிட்டா என்ன பண்றது? என பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள அவர்களுக்கும் ஆமால புள்ளை பாவம்..என கூறி உதவி செய்ய ஒப்புக்கொண்டு எப்படி லவ் சொல்வது என ஒரு விவாதமே நடந்தது..ஆளாளுக்கு ஒரு ஒரு ஐடியா தர அதை மற்றவர்கள் குறை சொல்லி மறுக்க என நேரம் சென்றுகொண்டே இருந்தது…இதற்கு காரணமானவளோ அமைதியாக அடுத்த ஜூஸை அபேஸ் செய்துவிட்டு ஸ்னாக்ஸ் செக்ஷனுக்கு தாவிவிட்டாள்..

ஒரு கட்டத்திற்கு மேல் மகிளா “ஏய் உனக்காக நாங்க இங்க அடுச்சுக்கிட்டு இருக்கோம்..நீ என்ன டி தின்னுகிட்டே இருக்க?”

மித்ரா “என்னை என்ன பண்ண சொல்ற மக்கு..நானும் யோசிச்சிட்டு தான் இருக்கேன்..ஆனா உனக்கு தெரியும்ல யோசிச்சாலே பசிக்கிது…அதான்..ப்ரொபோஸ் பண்ண நீங்க பைனல் ஐடியா சொல்லும்போது டையர்டு ஆகிடக்கூடாதில்லை..” என விளக்கம் கூற அவர்களோ தலையில் அடித்துக்கொண்டு “அப்போ இவளோ நேரம் நாங்க பேசுனதை நீ கேட்கவேயில்லை உன்னை?”

“சரி போகுது போ..முதல அவனை பத்தின டீடைல்ஸ் பொதுவா தெரிஞ்சது இல்லாம பர்சனல எல்லாமே தெரிஞ்சுக்கோ..அப்புறம் அவனுக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்கோ..தென் ஸ்பெஷல கேட்டேல? பிப்ரவரி 14 அன்னைக்கு அவனுக்கு பிடிச்ச எல்லாத்தையும் செஞ்சு ப்ரொபோஸ் பண்ணிடு..அதுக்குள்ள நாம டீடெயில்ஸ் கேதர் பண்ணிடலாம்..” என அவர்கள் ஒரு பக்க நீளத்துக்கு பேசி லிஸ்ட் குடுக்க அனைத்தையும் மிக பொறுமையாக ஆர்வமாக கேட்டவள் “பிப்ரவரி 14 க்கா?” என இழுக்க

தோழிகள் அனைவரும் அவ்ளோ சீக்கிரம் சொல்லணுமானு தயங்குறா போல என நினைத்து அவளுக்கு மேலும் “இங்க பாரு மித்து எல்லாமே நல்லபடியா நடக்கும்…பயப்படாத…நாங்க சொன்னமாதிரி நீ பண்ணா பக்காவா இருக்கும்…” என அட்வைஸ் செய்தனர்.

 

அந்த நேரம் பார்த்து மித்ராதித்தன் இருந்த டேபிள்க்கு 2 பெண்கள் வந்தனர்.

“யாரு டி அவ உன் ஆளுகிட்ட பேசுறது?”

சுஜா “வேற டிபார்ட்மென்ட்..அவளும் சீனியர் தான் டி.. காலேஜ்ல மட்டுமில்லமா உன் ஆளுக்கு ரூட் விட்றதுளையும் தான். பேர் ரேஷ்மா..” என

மித்ரா அவர்களையே பார்த்துக்கொண்டிருக்க ரேஷ்மா மித்ரனிடம் “ஹாய் மித்ரன்…ஹௌ ஆர் யூ?”

“ஹாய்..யா பைன்…நீங்க?”

“ஐம் ரேஷ்மா? ECE டிபார்ட்மென்ட்…”

“ஒ..சொல்லுங்க”

“உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..” என

குமார் இதை ஏற்கனவே எதிர்பார்த்ததால் கிண்டலுடன் தொண்டையை செருமிக்கொண்டு “ஓகேடா நாம கிளம்பலாம் என மித்ரன் காதில் அவ உனக்கு ப்ரொபோஸ் பண்ணப்போறா போல..என்ஜோய் மச்சி..” என மித்ரனை தவிர மீதி நால்வரும் எழுந்திருக்க மித்ரன் அவர்களை தடுத்து “இல்ல பரவால்லேங்க..எதுன்னாலும் இங்கேயே சொல்லுங்க..இவங்க என் பிரண்ட்ஸ் தான்..”

“இல்ல கொஞ்சம் பர்சனல பேசணும்..”

“எனக்கு அப்டி பர்சனல யாருகிட்டேயும் பேசுற அளவுக்கு எதுவுமில்லை..சோ சொல்றதுன்னா இப்டியே சொல்லுங்க..இல்லாட்டி ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல..” என

ரேஷ்மா “ஓகே..நான் நேராவே சொல்லிடறேன்..எனக்கு உன்னை பிடிச்சிருக்கு…ஐ லவ் யூ..” என அவன் நண்பர்கள் தங்களுக்குள் சிரிக்க

மித்ரன் பொறுமையாக “பட் சாரி ரேஷ்மா…எனக்கு லவ்ல இன்டெரெஸ்ட் இல்லை..” என அவர்களுக்கு சப்பென போய்விட்டது..

ரேஷ்மா “என்னை பிடிக்கலேன்னு சொல்றதுக்கு என்ன காரணம்?” என

அவன் நிதானமாக “நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..நான் உங்ககிட்ட குறை, உங்கள பிடிக்கலைனு சொல்லல…அப்டி யாரையும் இதுவரைக்கும் நான் சொன்னதில்லை..எனக்கு லவ் இந்த மாதிரி எல்லாம் ஐடியா இல்லை..இன்டெரெஸ்ட் இல்ல..”

“சரி நான் வெயிட் பண்றேன்.. இப்போத்தானே இல்ல..பழகி பாக்கலாம்..உங்களுக்கு கண்டிப்பா என்னை பிடிக்கும்.”

“இல்லைங்க அது சரி வராது..அப்டி எல்லாம் பழகி பாக்குறதுக்கு எல்லாம் என்ன இருக்கு?அதான் சொல்றேனே எனக்கு இன்டெரெஸ்ட்டே இலேனு.. நீங்க உங்க லைப் பாருங்க..பழகி பாத்தா உங்களுக்கு வேணும்னா என்னை பிடிக்காம போகலாம்..சோ உங்க டைம் என் டைம் இரண்டுமே வேஸ்ட் பண்றதை விட்டுட்டு அவங்கவங்க லைப் பாத்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்..” என அவன் அவளுக்கு எடுத்து சொல்ல

அவளோ தனக்கான மறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் “இல்ல..அதெல்லாம் மாறிடும்..உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்..புரிஞ்சுக்கோ மித்ரன்…நான் உன்னை அவ்ளோ லவ் பண்றேன்..உனக்கு யாருமிலேன்னு நினச்சு பீல் பண்ணாத..உன்னோட அந்த வீக்னஸ் தான் உன்னை இப்டி எல்லாம் விலகி ஓடவெக்கிது..அதெல்லாம் நான் மாத்திடுவேன்..எனக்கு ஒரு சான்ஸ் குடு..” என மித்ரனை பேசவிடாமல் அவள் பேசிக்கொண்டே

“நீ சும்மா சொல்ற.. இப்போவும் நீ லவ்ல இன்டெரெஸ்ட் இலேனு தான் சொன்னியே தவிர என்னை பிடிக்கலேன்னு சொல்லலையே..சோ உனக்கு பிடிச்சிருக்கு தானே..நான் உன்னை விட்டுட்டு போற அளவுக்கு என்ன காரணம் இருக்க போகுது…சும்மா ஏதாவது சொல்லாத..நீ எதுக்கும் பயப்படாத…பணம், ஸ்டேட்டஸ் இந்த மாதிரி ஏதாவது ப்ரோப்லேம் வரும்னு யோசிக்கிறியா? எல்லாமே நான் பாத்துக்கறேன்..நீ லவ்க்கு ஓகே மட்டும் சொல்லு..எல்லாமே நான் பாத்துக்கறேன்…எனக்கு நீ வேணும்” என அதே பிடியில் நிற்க மித்ரனுக்கு இவளை என்ன செய்வது என்றிருந்தது.. திரும்பி ஏதாவது பண்ணுங்கடா என்பது போல பார்க்க

மித்ரனின் நண்பர்களும் கூட அவனை பரிதாபமாக பார்த்தனர்.. அவள் விடாமல் புலம்பிக்கொண்டே இருக்க மித்ரா காதை தேய்த்துக்கொண்டே சட்டென எழுந்தவள் “எக்சிகியூஸ் மீ…ஹாய் ரேஷ்மா…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 14’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 14’

14 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மறுநாள் கால் வர “ஹலோ..” “குட் மோர்னிங் இன்னும் 2 மினியானும் எந்திரிகலையா?” “ஹா ஹா ஹா..பெருசு ஆதி எழுப்பறதுகாக வெய்ட்டிங்…எழுப்பிட்டா இன்னொன்ன அது பாத்துக்கும்..” “சரி..எந்திரிச்சு பிரெஷ் ஆகிட்டு உன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’

அன்பு அரவணைப்பு ஏதுமின்றி யாருமற்று தனிமரமாய் வளர்ந்து  தனக்கென்று பாதையை அமைத்து விருட்சமாய் வாழ்வில் தன்னோடு பிறரையும் முன்னேற்ற எண்ணும் நாயகன். தன் வாழ்க்கை பாதைக்கு   தனியாளாய் இருப்பதே சிறந்தது என்ற எண்ணத்தோடு வாழ்பவன். உறவு நட்பு என சுற்றம் சூழ

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 16’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 16’

16 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மறுநாள் ஆசிரமத்தில் இருவருக்கும் கல்யாணம் நடந்தேறியது..அடுத்து பதிவு செய்துவிட்டு வீட்டிற்க்கு வந்து சிறிது நேரம் இருந்தனர். அவள் பொதுவாக செல்லும் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர். அவள் வீட்டில் சந்தியாவின் அறையில் சிந்து,