நிலவு 58
அன்று ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக் கொண்டே குளித்தனர்.
“டேய் முட்டை நாற்றம் அடிக்குது டா, முடியல்லை” என்று கிறு கூறி குளியலறையின் வாயிலில் நிற்க,
“இங்க பாரு என் தலையில் முட்டையை உடைச்சாய். இப்போ பிசுபிசுன்னு இருக்கு” என்று திட்டிக் கொண்டே குளித்தான் ஆரவ்.
கிறு வெளியில் நின்று சிரித்தாள்.
இவ்வாறு அனேக போராட்டங்களின் பிறகு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“இன்றைக்கு தான் எங்க வீடு வாசமா இருக்கு, இல்லையா அரவிந்?” என்று கிண்டலாக தாத்தா கேட்க,
“ஆமா அப்பா, விதவிதமான ஷம்பூ வாசம் வீடு பூரா வருது” என்றார் சிரிப்புடன்.
“அப்போ நீங்க யாருமே இதுவரை குளிக்க இல்லைன்னு அங்கிள் சொல்றாரு” என்றாள் தர்ஷூ.
“என்ன டி சொல்ற?” என்று மீரா கேட்க,
“நீங்க பக்கத்துல வந்தாலே இத்தனை நாளாக நாற்றமா இருந்ததாம்” என்று ஜீவி கூற
“அப்பா,” என்று கிறு பார்க்க, மற்றவர்கள் அனைவரும் அரவிந்தைப் பார்க்க
“யேன் மா, நான் உங்களுக்கு எதுவுமே பன்னது இல்லையே” என்றார் பாவமாக.
“இவங்க எல்லாருமே எக்ஸ்பென்சிவ் பர்பியம்ஸ் தான் யூஸ் பன்றாங்க, அப்படி இருக்கும் போது எப்படி நாற்றம் வரும்? தர்ஷூ, ஜீவி” என்று தன் அண்ணனை காப்பாற்றும் விதமாக பேசினார் ராம்.
அனைவரும் இதைக் கேட்டு சிரித்தனர். மாலை நேரம் அனைவருமே ரிசப்ஷனிற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர். பிங்க், வைட் நிற புரொக் அணிந்து மீராவும், அதே நிறத்தில் கோர்ட் சூட் அணிந்து அஸ்வினும் தயாராகி இருவரும் அவ் ஹோட்டலிற்குள் நுழைய அவர்களுக்கு மலரிதழ்கள் அவர்களுக்கு தூவப்பட்டது.
முக்கியமான பிரமுகர்கள், தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் புள்ளிகள், இன்னும் நட்பு வட்டாரங்கள், உறவினர்கள் போன்றோர் பங்கெடுத்தனர். மாலை ஏழுமணி போல் ஆரம்பித்த ரிசப்ஷன் இரவு பதினொரு மணிபோல் நிறைவடைந்தது. அதற்கிடையில் ஆரவ் கிறுவை சமாதானப்படுத்தி இருந்தான். சிறியவர்களின் கலாட்டாக்களுடனும், சீண்டல்களுடனும் இனிதே நிறைவடைந்தது.
அடுத்த நாள் அனைவரும் தத்தமது வீடுகளை நோக்கிப் பயணிக்க கிறு, சௌமி, ஜெசி, கீது கேரளாவை நோக்கி பயணமானார்கள். அவர்கள் அங்கே செல்ல மற்ற எட்டு வீராங்கனைகளும் அங்கே சென்று இருந்தனர். இன்னும் நான்கு நாட்களில் கேரளா vs தமிழ்நாடு மெச் நடக்க இருந்தது. அவர்கள் சென்றவுடன் மூன்று நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டார்கள். அடுத்த நாள் அனைவரும் ஓய்வு எடுத்தனர்
அடுத்த நாள் அழகாக விடிந்தது. நடைபெறும் இடம் கேரளாவாக இருந்தாலும் தமிழ்நாட்டு இரசிகர்கள் அதிகமானோரே இருந்தனர். Four stars பிரசித்துப் பெற்று இருந்தார்கள். தமிழ்நாடு களம் இறங்கிய போது பலத்த கரகோஷங்கள் அனைவரின் காதுகளையும் கிழித்தது. மெச் ஆரம்பமாக அன்று பயன்படுத்திய அதே யுக்தியைப் பயன்படுத்தி இன்றும் வெற்றியை ஈட்டினர்.
இவ்வாறு தொடர் மெச் நடைப் பெற்று அனைத்திலும் வெற்றியைப் பெற்ற தமிழ்நாடு அணி sami finale ற்கு ஹர்யானாவுடன் போட்டியிட தெரிவு செய்ப்பட்டது. அன்றைய தினத்தில் மெச் ஆரம்பமாக சற்று நேரத்திற்கு முன்,
கிறு “girls இப்போ நம்ம டெக்னிக் எல்லாருக்குமே தெரிஞ்சு போச்சு, அதனால ஆட்டத்தை மாத்தலாம்” என்றாள்.
சௌமி, “இப்போ எப்படி மாத்துறது ஏ.கே?” என்று பதற
கீது, ஜெசி இருவருமே புரியாமல் கிறுவைப் பார்க்க, மற்ற மூன்று வீராங்கனைகளும் அவளைப் புரியாமல் பார்த்தனர்.
“கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பன்னுங்க, நாம கடைசி பிரேக்குக்கு அப்பொறம் தான் ஸ்கோர் எடுப்போம் நினைச்சி அதற்கு ஏற்றது போல இப்போ ஹர்யானா டீம் பிரிபெயார் ஆகி இருப்பாங்க. நாம ஆரம்பத்துல நோர்மலா விளையாடுவோமனு தான் நினைப்பாங்க. அந்த நம்பிக்கையை முதலில் உடைக்கனும்” என்று கிறு கூற
“புரியிது” என்று சௌமி சிரிக்க
மற்றவர்கள் அவர்கள் இருவரையும் கேள்வியாய் பார்த்தனர்.
“நாம கடைசியில எப்படி விளையாடுவோமோ அதை ஆரம்பத்துல விளையாடனும். நாம முதல் இரண்டு பிரேக்கு முன்னாடி நம்ம ஸ்கோர் அவங்க தொட முடியாத அளவிற்கு வரனும். அதாவது நாம ஆரம்பத்துலேயே வெறித்னமா விளையாடினோம் என்றால் அவங்க குழம்பி மென்டலா டிஸ்டர்ப் ஆகுவாங்க. அவங்களை ஒரு கோலும் போட விட கூடாது, கடைசி பிரேக் டைம் நாம எவரேஜா விளையாடினா, நாம தான் வெற்றி பெறுவோம்” என்று கிறு கூறியது அனைவருக்கும் புரிய அதன்படி விளையாடுவதாக முடிவு எடுத்தனர்.
மெச் ஆரம்பிக்க, முதல் பிரேக்கிற்கு முதல் 3 passes ல் தொடர்ந்து கொண்டு சென்று ஸ்கோர் ஹர்யானா vs தமிழ்நாடு 0:5 ஆக இருந்தது. இதை அங்கிருந்த எவருமே எதிர்பார்க்க இல்லை. அடுத்த பிரேகிற்கு ஹர்யானா vs தமிழ்நாடு 2:9 என்ற புள்ளிகளைப் பெற்றது. கேரளா வீராங்கனைகளின் குழம்பிய முகங்கள் தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு இன்னும் உற்சாகமளிக்க ஹர்யானா vs தமிழ்நாடு 4:13 என்று இருந்தது.
இது தமிழ்நாடு இரசிகர்களுக்கு இன்னும் உற்சாகமளித்தது. இறுதியில் சாதரணமாக விளையாடி 6:15 என்ற புள்ளிகளைப் பெற்று semi finaleல் வெற்றிப் பெற்று finale ற்கு பீகார் உடன் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த வெற்றி மற்றைய மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்பட்டது. அதனால் தமிழ்நாட்டிற்கு மற்றைய மாநிலங்களின் ஆதரவும் கிடைக்க ஆரம்பித்தது. அதிலும் four stars பற்றி அதிகமாகப் பரவ, அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகியது. அது மட்டுமல்லாது இவர்களின் அணுகு முறைப்பற்றி தெரிந்தவர்கள் அரை இறுதிச் சுற்றில் அவர்கள் விளையாடிய முறையைப் பற்றி குழம்பினார்கள் என்பது உண்மையே.
பீகாரில் உள்ள ஒரு மாடிக் கட்டத்தில்,
“சேர் தமிழ்நாடு வின் பன்னும்னு பரவலா பேசிக்கிறாங்க” என்றான் பீகார் அணியின் ஸ்பொன்சரின் பி.ஏ.
“அவங்களை தோற்க வைக்கவே முடியாதா?” என்று கேட்க,
“சேர் நாம எல்லாருமே நினைத்து இருந்தோம் கடைசியில் தான் அவங்க ஸ்கோர் பன்னுவாங்கன்னு அது பிழையான அபிப்ராயம்னு இவங்க புரூவ் பன்னிட்டாங்க, அவங்க எப்படி விளையாடுவாங்கன்னு அவங்களுக்கு மட்டுமே தெரியும்” என்றான் பி.ஏ
“அதில் நல்லா விளையாடுறது யாரு? அவங்களை நம்ம பணத்தை கொடுத்து வாங்கிரு” என்றார் அவர்.
“சேர் அதில் கிறுஸ்திகா, கீதா, சௌமியா, ஜெசீரா நல்ல பிளேயர்ஸ் இவங்க நான்கு பெயரை மட்டுமில்லை அங்கிருக்கிற யாரையுமே பணத்தை கொடுத்து வாங்க முடியாது” என்றான்.
“பணத்துக்கு அடிமையாகதவங்க யாராவது இருக்காங்களா விக்டர்?” என்று புன்னகைத்தார் அவர்.
“சேர் கிறுஸ்திகா இந்தியாவோட முதல் பணக்காரி, அகோர்மா குரூப்ஸ் என்ட் கம்பனியோட சி. இ. ஓ அரவிந்நாதனோட பொண்ணு, ஏ.கே குரூப்ஸ் என்ட் கம்பனி எம்.டி ஆரவ் கண்ணாவோட மனைவி” என்றான்.
“அப்போ என்ன பன்னலாம் விக்டர் என் பொண்ணு டீம் தான் ஜெயிக்கனும், அதற்கு என்ன வேணும்னாலும் பன்னலாம்” என்று கர்ஜிக்க
அதில் நடுங்கிய விக்டர் “சேர் அவங்க டீமுக்கு ஸ்பெஷல் கார்ட்ஸ் போர்ம் பன்னி இருக்காங்க, பாதுகாப்பு ரொம்ப அதிகமா இருக்கு, யாராலையும் அவங்களை நெருங்க முடியாது” என்றான்.
சுற்றும் கதிரையில் அமர்ந்தவர் கண்களை மூடி அமர்ந்தவர் ஏதோ யோசணை செய்தவர் வன்மமாக புன்னகைத்தார்.
“ஒகே விக்டர் நான் சொல்கிறது போலவே பன்னு, யாருக்கும் சந்தேகம் வராது, அவங்க யாரும் ஒழுங்கா விளையாடமாட்டாங்க. என் பொண்ணு தான் ஜெயிப்பா” என்றார்.
அவனும் மனமே இல்லாமல் அவர் கூறியதைச் செய்வதற்கு ஒத்துக் கொண்டான்.
பல நாள் கடின உழைப்பிற்கு பின்னர் பைனல் மெச் தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக இருந்தது. அதைப்பார்ப்பதற்கு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் அலையலையாக திரண்டு வந்திருந்தனர். பொலிஸ் பாதுகாப்பு அதிகபடுத்தப்பட்டு இருந்தது. விளையாட்டு வீராங்கனைகளின் குடும்பத்தினருக்கு அதைக் கண்டுகளிக்க இடமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சில பெரும்புள்ளிகள் வருகை தர இருப்பதால் விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கிறு, மீரா, ஜெசி, கீதுவின் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வருகை தந்திருந்தனர். வீராங்கனைகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்தனர்.
தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு ஆரவ், அஸ்வின், கவின், மாதேஷ், ஹபீஸ், ஷ்ரவன்,வினோ அனைவருமே சென்றனர்.
“கர்ள்ஸ் குளுகோசை இப்போவே சாப்பிடுங்க” என்று அஸ்வின் கூற
அதை பிளேயரஸ் ஏற்றுக் கொண்டனர்.
“நீங்க குளுகோசை மினர் வோட்டர் போட்டடல்ல கரைச்சி குடிங்க பா, வேகமா வேலை செய்ய ஆரம்பிக்கும்” என்று ஆரவின் ஐடியாவிற்கு அனைவரும் ஒப்பு கொள்ள ஏழு வீராங்கனைகளுக்கும் ஒரு போத்தல் வழங்கப்பட்டு அதில் குளுகோசு கரைக்கப்பட்டது.
“யேன் சேர் வேகமா வேலை செய்யும்னு சொன்னிங்க?” என்று ஒருவள் கேட்க,
“அது திண்மமா இருக்கும் போது அதோட தொடுமேற்பரப்பளவு குறைவு, பட் அதோட திண்மத் தன்மை குறையும் போது தொடுமேற்பரப்பளவு அதிகமாகும். அதனால வேலையை வேகமாக செய்யும், திண்மத்தை விட திரவத்திற்கும் தொடுமேற்பரப்பளவு ரொம்ப அதிகம்” என்றான்.
“ப்பாஹ், கண்ணா நீ எங்கேயோ போயிட்ட, எப்படி டா?” என்று கிறு கேலியாய் கேட்க,
அவள் தலையில் குட்டியவன் “எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப பிடிச்ச பாடம், அப்போ படிச்சது ஞாபகம் இருக்கு” என்றான்.
“எதுக்குடா குட்டின? வலிக்குது” என்றாள் கிறு தலையைத் தேய்த்துக் கொண்டே.
அவன் புன்னகைத்து குளுகோசு கரைக்கப்பட்ட தண்ணீரை வழங்க அவள் கையில் வைத்தாள்.
“இன்னும் மெச் ஆரம்பிக்க எவளோ நேரம் இருக்கு?” என்று சௌமி கேட்க,
“இருபது நிமிஷம் இருக்கு” என்றான் வினோ கண்சிமிட்டி.
“அடேய் எருமை இது வீடு இல்லை” என்றாள் கிறு.
“எல்லோர் முன்னாடி மானத்தை வாங்காத” என்று வினோ திட்ட
“அப்படி ஒன்னு உனக்கு இருக்கா? பாரேன் இத்தனை நாளா உன் கூட இருந்தும் இது தெரியாமல் போச்சு” என்று கிறு கூற
“இரண்டு பேரும் நிறுத்துங்க” என்றான் அஸ்வின்.
மற்றவர்கள் சிரிக்க வீராங்கனைகள் அந்தத் தண்ணீரை குடிக்க ஆரம்பித்தனர். அரைவாசி குடிக்கும் போது, கிறுவின் கண்கள் சொருக ஆரம்பித்தது. அதற்கு மேல் குடிக்க முடியாமல் அவள் விழ அவளைத் தொடர்ந்து மற்ற வீராங்கனைகளும் கீழ விழ ஆரம்பித்தனர். அனைவரும் பதறி அங்கே வர,
” கிறுஸ்தி எந்திரி டி” என்று அவள் கன்னங்களைத் தட்ட
“தூக்கம் வருது டா, முடியல்லை” என்று முணகினாள்.
மற்றவர்களையும் தட்டி எழுப்ப அவர்களும் அதே போலவே இருந்தனர். உடனியாக வைத்தியர் வரவழைக்கப்பட்டனர். இறுதியாக அவர்கள் மினரல் வோடர் போட்டுலில் இருந்தே தண்ணீரைக் குடித்ததால் அதை அவசரமாக சோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.
அவர்களை மீண்டும் எழ வைக்க முயற்சிக்க அதில் பயன் இருக்கவில்லை.
இதைப் பார்த்து அனைத்து இரசிகர்களும் பதற பீகார் அணியும், அதன் ஸ்பொன்சரும் குரூரமாக சிரித்தனர்.