Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57

நிலவு 57

 

அடுத்த நாள் காலையில் நலங்கு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணமக்கள் இருவரும் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்திருக்க, மற்றவர்கள் மஞ்சள் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து இருந்தார்கள். ரகு வம்சத்தின் வழக்கப்படி இருவரும் அருகருகாக அமரவைக்கப்பட்டனர். 

 

அஸ்வினிற்கு தாத்தா மஞ்சள் பூச ஆரம்பிக்க,

 

“தாத்தா நான் அஸ்வினுக்கு முதலில் ஆரம்பிக்கிறேனே ?” என்று மீரா கேட்க,

 

“மீரா, பெரியவங்க தான் இதை ஆரம்பிக்கனும்” என்று தேவி கூற

 

“அம்மா பிளீஸ், நான் என் புருஷனுக்கு முதலில் ஆரம்பிக்கிறேனே” என்று கெஞ்சலாய் கேட்க, அனைவரும் ஒப்புக் கொள்ள அஸ்வின் தானே அவளிற்கு முதலில் ஆரம்பிப்பதாகக் கூறினான்.

 

பின் மீரா எழுந்து அவன் கன்னங்கள், நெற்றி கைகளுக்கு மஞ்சள் பூசிவிட்டாள். மீராவிற்கு அஸ்வின் அதே போல் பூசி, கால்களுக்கும் பூசி விட்டான். அவள் கன்னங்கள் இரண்டும் சிகப்பைக் காட்ட, அவள் அருகில் சென்று 

 

“சிகப்பு, மஞ்சள் நிறத்துல நீ ரொம்ப அழகா இருக்க மீரு” என்றான்.

 

அவள் வெட்கத்தில் புன்னகைத்து தலைக் குனிந்துக் கொண்டாள்.

 

“ஐயோ போதும் பா உங்க இரண்டு பேரோட அலப்பறை, பெரியவங்க, நாங்க எல்லாரும் மஞ்சள் பூச இருக்கு, அப்பொறமா ரொமேன்ஸ் பன்னுங்க” என்றாள் கிறு.

 

இதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க அஸ்வின் அவளை முறைத்தான்.

 

பின் பெரியவர்கள் மஞ்சள் பூசினர், சிறியவர்கள் அவர்களைத் தொடர்ந்து மஞ்சள் பூச ஆரம்பித்தனர். ஆரவ் மஞ்சள் பூசிய பிறகு அக்கையை மறைத்துக் கொண்டு சமையலறையில் சென்று நின்றுக் கொண்டான். கிறு அடுத்ததாக இருவருக்கும் மஞ்சள் பூசிய பிறகு கைகளை கழுவுவதற்காக சமையலறைக்குச் சென்றாள்.

 

அவள் சென்றவுடன் அவளை இழுத்து ஸ்டோர் அறையில் சுவரில் சாய்த்து நின்றுக் கொண்டான். 

 

“எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்த?” என்று கண்புருவத்தை உயர்த்தி கிறு கேட்க,

 

அதை இரசித்தவன், “நம்ம கல்யாண நேரத்தில் நான் உனக்கு மஞ்சள் பூசவே இல்லையே” என்றான்.

 

“அதற்கு?” என்று கேட்க,

 

“இப்போ பூச போறேன்” என்று அவள் இரண்டு கன்னங்களிலும் பூசுவதற்கு கையை தூக்க,

 

“கண்ணா விளையாடாத, வெளியில் எல்லோருமே இருக்காங்க, மீராவை தயார்படுத்தனும், நிறைய வேலை இருக்கு” என்று கிறு கூற

 

“சரி நான் என் கையால உனக்கு மஞ்சள் பூசிவிடமாட்டேன்” என்று கூறி தன் கன்னங்களில் பூசிக் கொண்டான். பின் அவன் கன்னங்களால் அவள் கன்னத்தில் தேய்த்துவிட பேதையவள் தடுமாறிப் போனாள். 

 

அவனை தள்ளிவிட்டவள் “போடா” என்று கூறி அங்கிருந்து ஓடினாள். வைபவம் நடக்கும் இடத்திற்குச் செல்லும் போது முகத்தை கழுவ மறக்கவில்லை. நலங்கு வைபவம் இனிதே நடைப் பெற்றது. பின் மீராவை திருமணத்திற்காக தயார்படுத்தினர். அடர்நீலநிற அரக்கு பட்டுப் புடவையில், நகைகள் அணிந்து வான் உலக தேவதையென இருந்தாள்.

 

மணமேடையில் ஆண்களுக்கு உரித்தான அழகுடன் அஸ்வின் அமர்ந்து இருக்க, அவனருகில் மீரா தேவதை என அமர்ந்து இருந்தாள். பின் அனைவருடைய ஆசிர்வாதத்துடன் பொன் தாலியை அணிவித்து மூன்றுமுடிச்சிட்டு அவளை தன்னில் பாதியாக்கிக் கொண்டான் அஸ்வின். பின் அனைவரும் சாப்பிடச் சென்றனர்.

 

மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்து மீராவின் கைகளால் விளக்கு ஏற்றப்பட்டு சில சம்பிரதாய நிகழ்வுகளும், சடங்குகள், விளையாட்டுகள் நடைப்பெற்றது. மாலை நேரம் அனைவரும் சிறிது ஓய்வு எடுத்தனர். சிறியவர்கள் அடுத்த நாள் மாலை நடைபெற இருக்கும் ரிசப்ஷன் வேலைகளை பார்த்து வீடு வந்து சேரும் போது இரவு ஏழுமணியானது.

 

சாந்தி முகூர்த்தத்திற்காக, மீராவை தயார் செய்ய சிறியவர்களும் பெரியவர்களுக்கு உதவினர். மீராவை அவளது அறையினில் விட்டு வந்தவர்கள் தத்தமது அறைகளைக்குச் சென்றனர். மீரா அறையினுள் பயத்துடனும், தயக்கத்துடனும் நுழைந்தாள். இளம் பிங்க் நிற டிசைனர் சாரி அணிந்து, சில நகைகள்,காலையில் கட்டிய 

மஞ்சள் தாலியுடன், கூந்தலை தளர்வாகப் பின்னலிட்டு அதில் மல்லிகைச் சூடி கையில் பால்செம்புடன் நுழைந்தாள்.

 

அவள் அழகில் அஸ்வின் தன்னை மறந்தான் என்பது உண்மையே. தன்னவளை நெருங்கி அவளின் அனுமதியுடன் அவளை முழுமையாக தன்னவளாக்கிக் கொண்டான். இனிதே அவர்களின் வாழ்க்கையும் ஆரம்பமானது. 

 

ஆரவ் “கண்ணம்மா, நான் எது பன்னாலும் சரியா இருக்குமா? அந்த நம்பிக்கை உனக்கு இருக்கா?” என்று அவள் மடியில் படுத்துக் கொண்டு கேட்க,

 

“ம்ம்ம், யேன் உனக்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு டவுட்?” என்று கிறு அவள் ஹெட்செட்டை கழற்றியபடி கேட்க, 

 

“சும்மா தான், ஆமா நீ பாட்டு கேக்குறியா?” என்று ஆரவ் கேட்க, 

 

“ஆமா டா, எனக்கு பிடிச்ச பாட்டு இரு நாம இரண்டு பேருமே கேட்கலாம்” என்று ஹெட்செட்டின் ஒரு பகுதியை அவனுக்கு வழங்கி இருவரும் கேட்க, ஆரம்பித்தனர்

 

“இது ஹிந்தி சோங் டி, நான் கூட தமிழ் பாட்டுன்னு நினைச்சேன்” என்றான் ஆரவ்.

 

“யேன் மற்ற மொழி பாட்டுகளை கேட்க கூடாதா?” என்று கேட்க,

 

“ஐயோ தெரியாமல் சொல்லிட்டேன், உன் கூட ஆர்கிவ் பன்றதுக்கு இன்றைக்கு எனக்கு சக்தி இல்லை மா பேசாம தூங்கு” என்று அவளை அணைத்துக் கொண்டு உறங்க,

 

“நீ இந்த சோங்கை முழுசா கேட்க விடவே இல்லை, நான் கேட்ட பிறகு தான் தூங்குவேன்” என்று ஹெட்செட்டை காதில் மாட்டியபடி கண்களை மூடி இரசிக்க பாடல் முடிய முன்னரே அவள் உறங்கி இருந்தாள். 

 

ஆரவ் தலையிலடித்துக் கொண்டு அவளுடைய மொபைலையும், ஹெட்செட்டையும் அருகில் இருந்த மேசையின் மேலே எடுத்து வைத்தான்.

 

அடுத்த நாள் காலையில், மாலை நடைபெற இருக்கும் ரிசப்ஷனிற்காக அனைவரும் பிசியாக இருக்க காலை பதினொரு மணி போல் மீராவும், அஸ்வினும் கீழே வந்தனர்.

 

அப்போது, 

 

“நான் தான் வெற்றி பெற்றேன்” என்று கிறு கவினுடன் சண்டையிட அதை மற்ற சிறியவர்கள் நமட்டுப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

“என்ன டா நடக்குது இங்கே?” என்று அஸ்வின் கேட்க,

 

“அது….” என்று கவின் ஆரம்பிக்க ஜீவி அவன் வாயை கையால் மூடினாள்.

 

“ஒன்னும் இல்லை அஸ்வின், உனக்கு தெரியாதா? இதுங்க இரண்டும் ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு சண்டை போடுங்க” என்று அவனை அங்கிருந்நு அழைத்துச் சென்றாள்.

 

கிறுவை ஆரவ் முறைத்து அங்கு இருந்து அழைத்துச் சென்றான்.

 

“கிறுஸ்தி நீ என்ன சின்ன குழந்தையா? இப்படி எல்லாம் பெட் பன்ற?” என்று கோபமாக திட்ட

 

“டேய் எனக்கு மட்டும் திட்ற? உன் பிரன்டுக்கும் போய் திட்டு டா அவன் தானே முதலில் ஆரம்பிச்சி வச்சான்” என்றாள் கோபமாக

 

“நீ பொண்ணு டி, கொஞ்சமாவது வெட்கம், நாணம், அச்சம் எல்லாம் இருக்கனும்” என்றான். 

 

“ஆமா டா, யேன் சொல்ல மாட்ட? மவனே என் கிட்ட வா உன்னை கொன்னுடுவேன்” என்று அங்கு இருந்து சென்றாள்.

 

“ஐயோ, நாமளே நமக்கு ஆப்பு வச்சிகிட்டோமே” என்று கிறுஸ்தியை சமாதானம் செய்வதற்காக அவளை தேடிச் சென்றான்.

 

“டேய் நீ மட்டும் உண்மையை சொல்ல இல்லை, உன் கல்யாணத்தை இரண்டு வருஷம் கழிச்சி வைக்க சொல்லி மாமா கிட்ட சொல்லிருவேன்” என்று அஸ்வின் வினோவை மிரட்ட

 

“யேன்டா உனக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம்?” என்று பற்களை கடித்து சொல்லிவிட்டு

 

“கேளு” என்றான் வினோ.

 

“எல்லோரும் உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். அப்போ கவின் நீ ஸ்ட்ரேயிட்டா ரிசப்ஷனுக்கு தான் வருவ, இப்போவே ரூமை விட்டு வெளியில வர மாட்டன்னு சொன்னான், கிறு இல்லை நீ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவ, யேன்னா மீரா மேலே அவளோ நம்பிக்கைன்னு சொன்னா, அப்படி யாரு ஜெயிக்காராங்கன்னு பார்க்கலாம்னு சொன்னோம், தோக்குரவங்க நாளைக்கு எல்லோரையும் pizza hut க்கு அழைச்சிட்டு போய் டிரீட் வாங்கி கொடுக்கனும்னு பெட் வச்சிகிட்டாங்க. கிறு சொன்னது போலவே நீங்க இரண்டு பேருமே வந்திங்க, அதான் நாளைக்கு டீரீட் தரும்படி சண்டை போட்டுட்டு இருந்தா” என்று கூறி முடித்தான்.

 

“பாவி பயலுங்களா? எந்த விஷயத்துல எல்லாம் பெட் வக்கிறிங்க?” என்று வாயில் கை வைத்தான் அஸ்வின். 

 

“இதுக்கே இப்படி இருந்தா எப்படி மச்சான்? உனக்கு பெரிய ஆப்பு ரெடியாகிட்டு இருக்கு” என்று கூறி அங்கிருந்து ஓடிவிட்டான் வினோ.

 

“என்ன ஆப்பு?” என்று யோசித்தபடி மீரா கொடுத்த காபியை பருகினான்.

 

“அஸ்வின், மீரா இரண்டு பேருமே கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சாவி கூற

 

“சரி அத்தை, மற்றவர்களும் வருகிறாங்களா?” என்று மீரா கேட்க,

 

“இல்லை டா, இன்றைக்கு ரிசப்ஷன் வேலையை பார்க்க போறாங்க” என்று கூறி சமையலறைக்குள் புகுந்துக் கொண்டார் இந்து.

 

அஸ்வின், மீரா இருவரும் தயாராகி கோயிலுக்குச் சென்றனர். 

 

“டேய் எல்லாம் ரெடியா இருக்கா?” என்று மாதேஷிடம் கிறு கேட்க,

 

“ஆமா டி, அவங்க வர முன்னாடி எல்லோரும் நாம எல்லாரும் ஒவ்வொரு இடத்துல ஒளிஞ்சி இருக்கனும். அவங்க வந்ததுக்கு அப்பொறமா, சுற்றி வளைச்சி இருக்கனும்” என்றான் மாதேஷ்.

 

“ஜீவி, தர்ஷூ நீங்க இரண்டு பேரும் மாடியில் இருந்து பாருங்க” என்று கவின் கூற அவர்களும் உள்ளே சென்றனர்.

 

“டேய் பெரியவங்க இருக்காங்க பார்த்துடா” என்றார் அரவிந்

 

“நேற்று கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்குள்ள நுழைய முன்னே இப்படி பன்னறதுக்கு சடங்குகளை காரணமா சொன்னிங்க, இன்றைக்கு அப்படியெல்லாம் பன்ன முடியாது” என்றாள் கிறு.

 

“ஏதோ பன்னுங்க, வீட்டிற்குள்ள வந்திங்க, அடி வாங்குவிங்க” என்றார் சாவி.

 

அஸ்வினுடைய கார் தூரத்தில் வருவதைப் பார்த்து ஒரு வேலைக்காரர் கூற அனைவரும் ஒவ்வொரு இடத்தில் ஒளிய பெரியவர்கள் உள்ளே சென்றனர்.

 

காரிலிருந்து அஸ்வினும், மீராவும் இறங்க அஸ்வினின் சர்டில் ‘பசக்’ என்று ஏதோ விழ அதைப் பார்த்த மீரா,

 

“டேய் முட்டை” என்று அவள் கூறி முடியும் முன்னே அவளை நோக்கி ஒரு முட்டை வீசிப்பட்டு அவளது சாரியில் உடைந்தது. 

 

அவர்கள் இருவரையும் சிறியவர்கள் அனைவரும் சுற்றி வளைத்தனர். ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி முட்டையை வீசி அடிக்கத் தொடங்கினர். அவர்களால் அசையவே முடியவில்லை. இவர்கள் இருவரும் முட்டையால் குளித்து முடித்து இருந்தனர். அது முடிவடைய மாவை அவர்கள் மீதுவீசினர். 

 

அதை தர்ஷூ, ஜீவி போடோ, வீடியோக்களாக எடுத்தனர். அவர்கள் இருவரும் நிற்கும் கோலத்தைப் பார்த்து அனைவருமே சிரித்தனர்.

 

“மச்சான் ஆப்பு எப்படி இருக்கு?” என்று வினோ கேட்க, அவனை இழுத்து அஸ்வின் அவனோடு உருள ஆரம்பித்தான். 

 

வினோவிற்கும் முட்டை அடிக்க ஆரம்பிக்க, அவனும் மற்றவர்களுக்கு முட்டை அடித்தான். இவ்வாறு அனைவருமே முட்டையால் குளித்து இருந்தனர். ஆரவ் கிறுவை கைவளைவிற்குள் கொண்டு வந்தவன், அவள் மேல் மாவைக் கொட்டினான்.

 

“சொரி, கண்ணம்மா” என்றான் காதோரத்தில், அவனைத் தள்ளியவள் அவன் தலையில் ஒரு முட்டையை உடைத்தாள். 

 

“மன்னிக்க முடியாதுடா” என்று அங்கிருந்து ஓடிவிட்டாள். இவ்வாறு அனைத்து கலாட்டாக்களும் முடிந்து புறவாசல் வழியாக சென்று அருகில் இருந்த இரண்டு குளியலறைகளை, ஆண்கள், பெண்கள் என்று குளித்து தமது அறைகளுக்குள் சென்றவர்கள் மீண்டும் ஒரு முறைக் குளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 62யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 62

நிலவு 62   அடுத்த நாள் காலையில் கண்விழித்த கிறு ஆரவின் முகத்தைப் பார்த்தாள். நேற்று இரவு நடந்தவைகள் நினைவு வர வெட்கத்தில் மீண்டும் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். அவன் உறக்கம் கலையாமல் மெதுவாக எழுந்தவள் குளித்து இருவருக்கும்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52   “வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான்.    “ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,   “வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.   அத்தை,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 29யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 29

நிலவு 29   அறைக்குள் அவளை இழுத்துச் சென்றான் ஆரவ்.   “என்ன பேச இருக்கு ஆரவ்?” என்று அவள் கேட்க,   “எதற்கு கல்யாணம் வேணாங்குற?” என்று ஆரவ் கேட்க,   “அதான் சொன்னேனே ஆரவ், காதல் இல்லாத ஒரு