Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55

நிலவு 55

 

“என்ன ஆச்சு கண்ணம்மா?” என்று ஆரவ் கேட்க, 

 

“கால் வலிக்குது டா” என்றாள்.

 

அவள் கால்களைப் பார்க்க வீங்கி இருந்தது.

 

அவள் முன்னே இருந்த சோபாவில் அமர்ந்தவன், அவள் கால்களை தன் மடியின் மேல் வைத்து தைலம் தேய்த்து விட ஆரம்பித்தான்.

 

“கண்ணா நீ என்ன பன்ற?” என்று கால்களை எடுக்க முயல அவன் முறைத்த முறைப்பில் அமைதியாய் இருந்தாள்.

 

“உனக்கு கால் வலிக்குதுன்னு எதுக்குடி சொல்ல இல்லை? பாரு எப்படி வீங்கி இருக்கு?” என்றான் ஆரவ் கவலையாக.

 

“ஆரவ் இன்னும் இரண்டு நாளில் நெஷனல் லெவல் மெச் இருக்கு, அதற்கு பிரக்டிஸ் பன்ன இருக்கு. நான் இன்றைக்கு அதிகமா நின்று இருந்தேன், அதனால் வீங்கி இருக்கும்” என்றாள் அவன் கேச்தை கலைத்தபடி.

 

“போடி, ரொம்ப வீங்கி இருக்கு, ரொம்ப வலிக்குதாடி?” என்று அவன் அக்கறையாக கேட்க,

 

“என்னை நினைச்சி இவளோ கஷ்டபடுற, எதுக்கு என்னை விளையாட வைக்குற?” என்று கேட்க,

 

“இது என் பொன்டாட்டியோட கனவு, அதை கண்டிப்பா நான் நனவாக்குவேன்” என்றான்.

 

“மிஸ்டர் ஆரவ் கண்ணா உங்க பொன்டாட்டி இந்த ஒரு வாட்டி மட்டுமே விளையாடுவா அதுவும் இந்தியாவுக்காக விளையாடி இந்தியாவிற்கு செம்பியன்ஷிப் எடுத்து கொடுத்ததுக்கு அப்பொறமா உங்க பொன்டாட்டி விளையாடுவதற்கு எப்போவும் பந்து எடுக்கமாட்டா, அதற்கு அப்பொறமா அவளுக்கு அவ புருஷன் மட்டும் தான் அதை மறக்காதிங்க” என்றாள்.

 

அவன் சிரித்து “சரி பொன்டாட்டி” என்று கண் சிமிட்டினான்.

 

“விடு டா நீயும் எவளோ நேரம் தான் காலை பிடிச்சி விடுவாய்” என்று காலை எடுக்க அப்போதே தங்கள் பின்னே நின்று இருந்த குடும்பத்தினரை இருவரும் பார்க்க, அதில் இருவரும் நெளிய,

 

“தாத்தா கிறுஸ்திக்கு கால் வலி, அதனால் நான் அவளை ரூம்ல விட்டுட்டு வரேன்” என்று அவளை கையிலேந்தி அங்கிருந்து எஸ் ஆகினான்.

 

அவன் அறியவில்லை வெகு நேரமாகவே அவர்கள் இங்கு இருக்கின்றனர் என்பதை.

 

அறைக்கு வந்தவள் ” எதுக்கு டா என்னை எல்லோர் முன்னாடி தூக்கிட்டு வந்த?” என்று கேட்க,

 

“நான் மட்டும் முளிச்சி பார்த்துட்டு இருக்கவா? அதான் உன்னை வச்சி எஸ் ஆகிட்டேன்” என்று கூற

 

அவள் சிரித்து இரவுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் வெளியே வந்தவள் கட்டிலில் விழ, ஆரவ் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். அவனும் வெளியே வர கிறு கட்டிலில் குறுக்காக களைப்பினால் உறங்குவதைப் பார்த்தவன், அவளை சரியாக உறங்க வைத்து அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

 

அடுத்த இரண்டு நாளும் அனைவருமே டென்ஷனிலேயே களித்தனர். தமிழ் நாட்டில் இருந்த சென்னையிலேயே முதலாவது மெச் நடக்க இருந்தது.  

 

ஆம் இன்று முதல் நெஷனல் லெவல் மெச் ஆரம்பமாக இருந்தது. முதல் மெச்சாக தமிழ் நாட்டு அணிக்கும், தெலுங்கானா அணிக்கும் சென்னையில் மெச் நடக்க இருந்தது.

 

காவ்யா : நாம எல்லாருமே எதிர்பார்த்தது போலவே நெஷனல் லெவல் நெட்போல் மெச் இன்றிலிருந்து ஆரம்பமாகுது குமார். முதல் மெச் தமிழ் நாடு vs தெலுங்கானா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கின்றது.

 

குமார் : நம்ம தமிழ்நாடு சார்பா அன்றைக்கு ஸ்டார்ஸா மின்னிய AGC அணியோட நான்கு பிளேயர்சும் விளையாட இருக்காங்க. அதனால் சுவாரசியம் அதிகமா இருக்கு.

 

காவ்யா : இன்னும் இருபது நிமிடங்களில் மெச் ஆரம்பமாகிரும். இப்போ இரண்டு அணிகளும் தங்களுடைய பிளேயர்ஸ் கூட பேசிட்டு இருக்காங்க.

 

குமார் : ஆமா காவ்யா இன்றைக்கு வழமைக்கு மாறா கூட்டம் அதிகமாவே இருக்கு. ஸ்டேடியமுக்குள்ள வர முடியாமல் நிறைய பேர் வெளியில் இருக்காங்க. அவங்களை உள்ள விடுறதுக்கான வேலைகளை பொலிஸ் பார்த்துட்டு இருக்கு

 

அதே நேரம், கிறுஸ்தி தன் டீமிடம் பேசினாள்.

 

“கேர்ள்ஸ் நல்லா கேட்டுகங்க, நமளுக்கு மூன்று பிரேக் இருக்கு அதை நாம பிளேன் பன்னி யூஸ் பன்னனும்” என்றாள் கீது.

 

“ஒரு பிளேயரோட பிளஸ், மைனஸ், அவங்க மென்டலா எந்த அளவு ஸ்ட்ரோங்கா இருக்காங்க, அவங்க யூஸ் பன்ற டெக்னிக்ஸ் தெரிந்தாலே அவங்களை எப்படி வீழ்த்தலாம்னு முடிவு பன்ன முடியும்” என்றாள் சௌமி.

 

“இப்போ நம்ம எதிரணியை பற்றி எதுவுமே தெரியாது, நாம இந்த மூன்று பிரேக் முடிய முன்னாடி அவங்களை பற்றி தெரிந்தாலே கடைசி நேரம் நமளால ஸ்கோர் பன்ன முடியும்” என்று ஜெசி கூற

 

“புரியல்ல அக்கா” என்றனர் மற்ற மூவரும்.

 

“நான் சொல்றேன், நமளோட மூன்று பிரேகையும் நாம பிரிச்சி வைச்சு விளையாட போறோம். அதாவது நம்ம பர்ஸ்ட் பிரேகிற்கு முன்னாடி அவங்க எந்த அளவு ஸ்பீடானவங்க அப்படி பார்க்க போகிறோம், நாம சாதாரணமா விளையாட வேணும். நம்ம இரண்டாவது பிரேக்குக்கு முன்னாடி, ஒவ்வொருத்தரோட பிளஸ் என்ன? மைனஸ் என்னன்னு பார்க்க போறோம்? அதனால நம்ம பிளஸ்சை அப்போ காட்ட கூடாது. அதற்காக நம்ம மைனசையும் காட்டிக் கொடுக்காமல் எவரேஜா விளையாடனும், மூன்றாவது பிரேகுக்கு முன்னாடி, அவங்க யூஸ் பன்ர டெக்னிக்சை கண்டு பிடிக்கனும், அப்போ நீங்க ஓரளவுக்கு நல்லா விளையாடனும். மூன்றாவது பிரேக் முடிந்து விளையாட போகும் போது அவங்க மைனசையும், நம்ம பிளசையும் பயன்படுத்தி மெக்சிமம் ஸ்கோர் பன்ன வேணும்” என்று கிறு கூறி முடித்தாள்.

 

“சரி அக்கா புரிஞ்சது” என்று கூற

 

“நெட்போல் விளையாடும் போது நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இருக்கு. இத்தனை நாளா இதை நாங்க நான்கு பேரும் உங்க கிட்ட சொல்ல இல்லை. இப்போ சொல்ல போகிறோம் நல்லா கேட்டுக்கங்க” என்றாள் கீது.

 

“சென்டர் பாஸ் நேரம் கிறு கையில் பந்து இருக்கும் அவளுக்கு அப்போ மூன்று நிமிஷம் தான் டைம். அவ கிட்ட இருந்து பந்து வெளிவந்தால் மத்தவங்களுக்கு அந்த பந்தை மூன்று செக்கன் தான் வைக்கலாம், யேன் திரும்ப கிறு கைக்கு பந்து வந்தாலும் அவளுக்கு மூன்று செக்கன் தான் டைம். இது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் நாம கோல் எடுக்கனும் அப்படினா, சீக்கிரமா பாஸ் பன்னும்” என்று ஜெசி கூற

 

“அதற்கு எல்லோர் முன்னாடியும் பெயர் சொல்லியோ, வேறு முறையில் உங்களை சத்தம் போட்டு அழைக்க முடியாது. அது எதிர் அணி கண்டுபிச்சாங்கன்னா நம்மளை பீரீ ஆக விடமாட்டாங்க” என்று கூற

 

“அப்போ என்ன பன்றது?” என்று ஒருவள் கேட்க,

 

“யார் கையில் பந்து இருக்கோ அவங்களோட கண்ணை மட்டும் தான் மத்தவங்க எல்லோரும் பார்க்க வேணும், பந்து வச்சிருக்கவங்க யாரை கண்ணால் காட்டுகிறாங்களோ, அவங்க முன்னாடி போய் பந்தை எடுங்க” என்று சௌமி கூறினாள்.

 

“கண்ணை எப்பவும் பந்தை வச்சிருக்கவங்க மேலே மட்டும் தான் இருக்கனும், யேன்னா கண்ணால் நாம பேசுறதை அவங்க கவனிக்க ஆரம்பித்தாலும் நஷ்டம் அவங்களுக்கு தான். யேன்னா அதில் அவங்க கவனம் சிதைந்துவிடும்” என்றாள் கிறு.

 

“ஒகே, இதையே போலோ பன்றோம்” என்றனர் மற்ற மூவரும்.

 

கிறு, சௌமி, கீது, ஜெசி நால்வரும் தங்களது சிக்னேசர் ஸடெப்பை செய்த பிறகு கோர்டிற்குள் சென்றனர்.

 

காவ்யா : குமார் பிளேயர்ஸ் எல்லாருமே கோர்டுக்குள்ள வராங்க. ஒவ்வொருத்தரும் கையை கொடுத்துகுறாங்க. 

 

குமார் : தெலுங்கான பிளேயர்ஸ் கூட ஒப்பிடும் போது நம்ம தமிழ் நாட்டு பிளேயரஸ் சின்ன குழந்தைகள் போல தான் இருக்காங்க. ஐயோ இப்ப என்ன பன்ன போறாங்களோ தெரியாது

 

காவ்யா : ஆமா குமார் எனக்கும் பதட்டமா  தான் இருக்கு, தமிழ் நாடு இதுவரைக்கும் ஒரு முறையேனும் செமி பைனல் வந்தது இல்லை. இந்த டீமை பார்க்கும் போது இவங்க பைனல் வரைக்கும் போவாங்க அந்த நம்பிக்கை எனக்கு துளிர்விட ஆரம்பிச்சிருச்சி.

 

குமார் : இப்போ டொஸ் அப் வாவ் நம்ம TN (தமிழ்நாடு) சென்டர் பாய்ந்து பந்தை தட்டிவிட்டு தன்னோட பக்கம் பிடித்துகொண்டாங்க. பார்க்கலாம் இதே வேகத்துல விளையாடுறாங்களான்னு?

 

காவ்யா : இப்போ சென்டர் பாஸ் 

 

கண்களைப் பார்த்து இருக்க சௌமியைப் பார்க்க சௌமி பீராயாகி பந்தைப் பெற்று அதை ஜெசியிற்கு வழங்க அவள் GS ற்கு வழங்கி முதல் புள்ளியைப் பெற்றனர். 

 

முதலில் இவள் ஜெசியை எதிர்பார்த்து இருக்க அவள் பார்ட்னர் 

அவளை விட்டு நகரவேயில்லை. இதைப் போல் ஒவ்வொரு பிளேயர்சையும் TN பிளேயர்ஸ் கவனிக்க ஆரம்பித்தனர்.

 

குமார் : நெஷனல் லெவல் முதல் நாளில் முதல் மெச்சில் முதல் கோல் நம்ம தமிழ்நாடு அணி தான் பெற்றுக் கொண்டு இருக்கு

 

காவ்யா : ஆமா இதனால் சுற்றி இருக்கிற மக்களிடம் இருந்து நல்ல ரெஸ்பொன்ஸ் கிடைக்கிறது.

 

குமார் : இப்போ TG (தெலுங்கானா) சென்டரிடம் பந்து வழங்கப்பட்டு சென்டர் பாஸ்..

 

காவ்யா : நைச் செம்ம TG அணி  C to WA to GA to C to GS போய் இப்போ தெலுங்கான அணியும் ஒரு புள்ளியை பெற்றுக் கொண்டுள்ளது.

 

குமார் : இப்பா TN சென்டர் கிறுஸ்திகாவிடம் பந்து இருக்கு அவங்க  WA ஐ நோக்கி வீசுறாங்க,  மாவலஸ்  தெலுங்கானா சென்டர் பாய்ந்து அதை பிடிச்சிட்டாங்க.

 

காவ்யா : இப்போ பந்தை அவங்க அணி GA ஐ நோக்கி வீசுறாங்க ஓஓஓ நோ ரெப்ரி ஸ்டெபிங் சொல்லிட்டாங்க. திரும்ப. TN சென்டரிடம் பந்து கொடுக்கப்படுகிறது வாவ் வாவ் நைஸ் மீண்டும் தமிழ்நாடு அணி ஒரு புள்ளி 

 

குமார். : இப்போ சென்டர் பாஸ் தெலுங்கானா அணிக்கு 

 

காவ்யா : வாவ் வாவ் செமையா பந்தை மாத்துறாங்க எல்லாமே upper pass தான், நம்ம தமிழ்நாடு அணி உயரம் குறைவா இருக்கிறதால அவங்களால பிடிக்க முடியாம போய் ஒரு புள்ளியை தெலுங்கானா அணி எடுத்து இருக்கு 

 

குமார் : இப்போ தமிழ்நாடு vs  தெலுங்கானா 2:2 பார்க்கலாம், இன்னும் ஐந்து நிமிஷத்துல பர்ஸட் பிரேக் கொடுப்பாங்க.

 

காவ்யா : நம்ம தமிழ் நாடு சென்டர் கையில பந்து சூப்பர் WA to GA to C ற்கு திரும்ப போயிருச்சு. அவங்க GS கொடுக்குறாங்க ஓஓஓ நோ அவங்க கோல் போடவே இல்லை. 

 

குமார் : இப்போ ரெப்ரி தெலுங்கானா  GD கிட்ட பந்தை கொடுக்குறாங்க. GD to C to WD to C கொடுக்குறாங்க. ப்பாஹ் தமிழ்நாட்டு WA திரும்ப பிடிச்சிட்டாங்க அவங்க பந்தை TN C கிட்ட கொடுக்குறாங்க. 

 

“கிறுஸ்தி” என்ற அவளது டீமின் கத்தும் சத்தம் கேட்டது.

 

காவ்யா : OMG தெலுங்கானா செனடர் பந்தை பிடிக்க போய் தமிழ்நாட்டு சென்டர் பிளேயரோட சேரந்து விழுந்துட்டாங்க.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54

நிலவு 54   “என்ன கிறுஸ்திகா அரவிந்நாதன், என்னை மறந்திட்டிங்க போல” என்ற அவள் பின்னிருந்த ஒரு குரல் கேட்க,   அந்தக் குரல் காதுவழியாக மூளைக்குச் சென்று அக்குரலுக்கு சொந்தமானவரை படம்பிடித்து காட்ட அவள் உதடுகள் ” அதர்வா” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 40

நிலவு 40   “நீ விருப்பம் இல்லாமல் தான் நெட்போலை விட்டு இருக்க. அன்றைக்கு டிரஸ் எடுக்க போகும் போது நீ ஸ்போர்ட்ஸ் டீ சர்டை பார்த்து கண்கலங்கின. அன்றைக்கு மீரா உன் கிட்ட பேசினப்ப கூட கண் கலங்கியது. அப்போ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 39யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 39

நிலவு 39   இந்தியன் நெட்போல் போர்டில்   “ஏ.கே பற்றி ஏதாவது தெரிஞ்சுதா?” என்று அவன் கேட்க,   “நோ சேர் அவங்க பிரன்ஸ் பற்றி கூட ஏதும் தெரியவில்லை” என்றார் மெம்பர் ஒருவர்.   “அது எப்படி நான்கு