Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 42

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 42

நிலவு 42

 

ஆரவின் ஆபிசிற்குள் புயலென நுழைந்தாள் நிகாரிகா. ஆரவின் கேபினிற்குள் உள்ளே நுழைந்தவள்,

 

“எங்க மிஸ்டர் ஆரவ் உன் கூட சுத்திட்டு இருப்பாளே ஒருத்தி எங்க அவ?” என்று அவள் கேட்க,

 

“யாரு? கிறுஸ்திகாவா? உனக்கு எதுக்கு அவ? ஆமா உன்னை யாரு உள்ள வர சொன்ன?” என்று ஆரவ் கோபத்தில் கேட்க,

 

“அவளை பற்றி உனக்கு எதுவும் தெரியாது. இன்றைக்கு அவளை பற்றி எல்லாவற்றையும் சொல்றேன்” என்று கூறி அவள் கதவைத் திறந்து வெளியேறி வர ஆரவும் அவளைத் தொடர்ந்து கோபத்தில் வெளியே வந்தான்.

 

அதே நேரம் ஷ்ரவனும், கிறுவும் ஒன்றாக வர

 

“அதோ வராளே அந்த மேனாமினுக்கி” என்றாள் நிகாரிகா. அனைவரும் கிறுவைத் திரும்பிப் பார்க்க அதே நேரம் கிறுவும் நிகாரிகாவைப் பார்த்தாள்.

 

நவநாகரிக யுவதிக்கு உதாரணமாக இருந்தாள். உடலோட ஒட்டிய உடை அணிந்து முழங்காழுக்கும் மேலாக ஆடை அணிந்து, காதுகளுக்கு பெரிய காதணி அணிந்து கண்களுக்கு இனி முடியாது என்ற அளவுக்கு மையிட்டு, வெள்ளை நிறத்தில் தோலுடன் சிகப்பு நிற உதட்டுச்சாயம் அளவுக்கு அதிகமாக இட்டு இருந்தாள்.

 

கிறு அவள் யாரென்று ஷ்ரவனை கேள்வியாய் நோக்க, அதைப் புரிந்துக் கொண்டவன் ஆரவைப் பார்த்தான்.

 

கிறுவின் அருகில் வந்த நிகாரிகா, அவளது கைகளைப் பிடித்து இழுத்து வந்த நிகாரிகா,

 

“இவ உன் கூட லிவின் ரிலேஷன்ஷிப்ல இருக்கா இல்லையா?, அவ அது மட்டும் பன்ன இல்ல ஆரவ்” என்று கூறும் போது,

 

“என்ன லிவின் ரிலேஷன்ஷிப்பா” என்று அவள் கோபத்தில் திட்ட எடுக்கும் போது, அவள் அடுத்து கூறியவைகளைக் கேட்ட கிறு சிலையாக நின்றாள்.

 

“இவ அகோமா குரூப்ஸ் என்ட் கம்பனி ஓட எம்.டி அஸ்வின் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கா, அது மட்டும் இல்லை அமாரா புரொடக்ட்ஸ் எம்.டி கவின் கூட அன்றைக்கு ஹோட்டலில் ஒன் அவரா உல்லாசமா இருந்து இருக்கா, அது மட்டும் இல்லை கோல்டன் ஷிப் கம்பனி எம்.டி மாதேஷ் கூட கூத்தடிச்சு இருக்கா, இந்தியாவோட பெரிய ஷொபிங் மோல் வச்சி இருக்கிற வினோத் கூட தொடர்புல இருக்கா” என்று கூறி முடியும் முன்னே

 

ப்ரியா “ஆமா சேர் இவ அவளோ நல்லவ இல்லை. இங்க ஷ்ரவன் கூட கூத்தடிக்கிறா, உங்க பணத்தை கறக்க வந்திருக்கா” என்றாள்

 

நிகாரிகா,” சுருக்கமா சொல்ல போனால் உடம்ப வித்து பொலக்கிற விபச்சாரி” என்று கூறி முடியும் போதே அவள் கன்னத்தில் இடி என இறங்கியது ஆரவின் அரை.

 

நிகாரிகா, ப்ரியா கூறும் போதே ஸ்டாப்ஸ் அனைவரும் கிறுவை அருவெருப்பாகப் பார்த்தனர். தற்போது ஆரவ் அறைந்த அரையில் அனைவருமே பயந்து நடுங்கினர். கைகளை முறுக்கி, நரம்புகள் புடைக்க சிவந்த கண்களுடன் ஆரவ் அவர்கள் முன் நின்றிருந்தான். அதே நேரம் வெளியிலிருந்து சிலர் ஓடி வந்து அவ்விடத்தை முற்றுகை இட்டனர். அத்தனை பேரின் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன.

 

“சேர் மேம்” என்று அதில் ஒருவன் கத்த,

 

அப்போதே அவனும்  கிறுவைத் திரும்பிப் பார்க்க அவள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிச் சரிய, 

 

“கிறுஸ்தி” என்று கத்தி அவளை தாங்கிக் கொண்டான்.

 

அவள் மூச்சற்று நின்றிருக்க அனைவரின் முன்னிலையிலும் தன் வாய் மூலமாக அவளுக்கு மூச்சு வழங்க, வேகமாக ஒரு மூச்சை இழுத்து எழுந்தாள். 

 

மீணடும் ப்ரியா, நிகாரிகா கூறியவை நினைவு வர 

 

“கண்ணா நான் நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை டா, நம்பு டா, நான் அப்படிபட்ட பொண்ணு இல்லை நம்பு டா” என்று பிதற்றிக் கொண்டே  அவன் சேர்ட் கொலரைப் பற்றி அழ,

 

“இங்க பாரு கண்ணம்மா, எனக்கு தெரியும் டா உன்னை பத்தி” என்றான் அவள் முகத்தை கையில் ஏந்தி

 

அவளே எழுந்து எல்லார் முன்னிலையிலும் “நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை” என்று கூற ஆரவும் அவளை அணைத்துக் கொண்டு கண்கலங்கினான்.

 

“சேர் ஏதாவது ஹெல்ப் வேனுமா? மேமை ஹொஸ்பிடல் கூட்டிட்டு போக ஏற்பாடு பன்னட்டுமா?” என்று அதில் ஒருவர் கேட்க,

 

“இவளை நான் பாத்துக்குறேன்” என்று அணைப்பை இறுக்கினான்.

 

“என்ன சேர் இவளோ சொல்றோம், இவ எதை வச்சி அப்படி மயக்கி வச்சிருக்கா?” என்று ப்ரியா கேட்க, அவள் கன்னத்தில் அறைந்தான் ஷ்ரவன்.

 

“சீ வாயை மூடு, நீ எல்லாம் பொண்ணா? அசிங்கமா இருக்கு” என்றான் கோபத்தில் கத்தினான். 

 

இதுவரை சாந்தமாக இருந்தவனை கோபத்தில் கண்டவர்கள் அரண்டு போனார்கள்.

 

“இவ யாரு தெரியுமா? இந்தியா முழுவதையும் ஆட்சி செய்த (கற்பனை) ரகுவம்சத்தோட கடைசி வாரிசு. இதோ இங்க இவளோ பேர் வந்து இருக்காங்களே இவங்க யாருன்னு தெரியுமா? இதோ என் கைக்குள்ள சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்காளே இவளோட பொடிகார்ட்ஸ்” என்று கூறும் போது அனைவரின் முகத்திலும் அப்பாட்டமாக அதிர்ச்சி தெரிந்தது.

 

“இந்தியாவோட முதல் பணக்காரங்க, இந்தியாவோட முதல் கம்பனியான  அகோமி குரூப்ஸ் ஒப் கம்பனியோட  சி.இ.ஓ அரவிந்நாதனோட ஓரே பொண்ணு கிறுஸ்திகா அரவிந்நாதன், இவ சொன்னாலே அஸ்வின், அவனோட ஒரே செல்ல தங்கச்சி, மாதேஷ், கவினோட கூட பிறக்காத தங்கச்சி என்ட் என்னோட மனைவி மிஸஸ் கிறுஸ்திகா ஆரவ் கண்ணா” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

 

இதைக் கேட்ட அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிய, ப்ரியா, நிகாரிகாவின் முகத்தில் ஈஈ ஆடவில்லை. அவளை திருப்பி அவள் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக் காட்டினான். 

 

“வினோதோட முறைபொண்ணு, பட் அவனுக்கு இவ இன்னொரு அம்மா. ஷ்ரவனோட பெஸ்ட் பிரன்ட்டு, ஷ்ரவனை யாருன்னு நினைச்சு இருக்கிங்க? ஜி.கே கம்பனி சி.இ.ஓ வோட ஓரே பையன், இதோ என் வைபோட புனிதமான நட்புகாக என் கிட்ட வேலை பார்த்துட்டு இருக்கான்” என்றான் ஆரவ்.

 

“நான் உன் மனைவியா வந்தால் உங்க கூட பிரன்லியா பழக முடியாது. அதனால் இப்போதைக்கு சொல்லாதன்னு சொனல்லி உங்க எல்லார் கூடவும் பிரன்டாவே பழகினா, ஆனால் நீங்க என் வைபை பார்த்திங்க பாருங்க ஒரு பார்வை, அப்போவே என் மனசுல இருந்து நீங்க எல்லாருமே கீழ இறங்கிட்டிங்க” என்றான் உடைந்த குரலில்.

 

இது மற்றவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. அதே நேரம்  ஆபிசிற்கு மாதேஷ், தர்ஷூ வந்தனர். 

 

அனைவரூம் ஆபிசில் எழுந்து இருக்க, ஆரவின் கைவளைவிற்குள் கிறு இருப்பதைப் பார்த்தவன்,

 

“என்னடா ஆச்சு? இவ யேன் இப்படி இருக்கா? இங்க பாருடி உனக்காக ஆசையா தர்ஷூ குலாப்ஜாமூன் வாங்கிட்டு வந்து இருக்கா கிறு” என்று மாதேஷ் கூற கிறுவின் கேவல் அதிமாகியது.

 

“ஏய் லூசு கிரு என்னடி ஆச்சு? எதுக்கு அழற?” என்று தர்ஷூ அவள் அருகில் சென்று தோளைத் தொட 

 

“நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை. என்னை தொடாத” என்று ஆரவை அனைத்துக் கொண்டு அழ ஆரவின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.

 

தர்ஷூவிற்கு தலைசுற்றல் வர மாதேஷ் அவளைப் பிடித்து அமர வைத்தான். நடந்ததை ஓரளவு யூகித்தவன் 

 

“இப்போ என்ன நடந்ததுன்னு சொல்ல போறிங்களா? இல்லையா?” என்று மாதேஷ் கர்ஜிக்க, அவ்விடமே நிசப்தமானது.

 

ஷ்ரவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நடந்ததைக் கூற அவன் கண்கள் சிவக்க நேரடியாக பிரியா,நிகாரிகா இருவரின் கழுத்தையும் நெறிக்க இருவரின் கண்களும் மேலே செல்ல ஷ்ரவன், பொர்டி கார்ட்ஸ், தர்ஷூ அனைவரும் அவனை தடுக்க ஒரு கட்டத்தில் தர்ஷூவின் கெஞ்சலில் கையை விட்டான். அவன் கோபம் மட்டும் குறையவில்லை. 

 

அவர்கள் இருவரும் தொண்டையைச் செருமி தண்ணீர் கேட்க, ஒருவர் எடுக்கச் செல்லும் போது,

 

“ஒரு சொட்டு தண்ணீர் இவங்களுக்கு கொடுக்கக் கூடாது” என்ற ஆரவின் குரலில் அனைவரும் அமைதியாக இருக்க அவ்விருவருமே சென்று தண்ணீரை குடித்து வந்தனர்.

 

மாதேஷின் கோபம் குறையாமல் இருக்க ஆரவின் கெபின் கண்ணாடியால் ஆனதாக இருந்ததால் அதில் சென்று தன் கைகளை மடக்கி குத்த ஒரே தடவையில் அந்த கண்ணாடி முழுவதும் துகளாக இருக்க,  அவன் கைகள் முழுவதும் இரத்தத்தால் நனைந்தது.

 

அதில் அதிர்ச்சியில் இருந்தோர் அனைவரும் சுயநினைவு வர கிறுவும் மாதேஷைப் பார்த்தாள். அவன் அருகில் ஓடியவள் கையைப் பற்றி,

 

“அறிவிருக்காடா இப்படி ரத்தம் வருது” என்று கூறி தன் துப்பட்டாவை கிழிக்க அப்போதே நிகாரிகா,ப்ரியா கூறியது நினைவிற்கு வர அவனது கையை உதறித் தள்ளிவிட்டு ஆரவிடம் தஞ்சம் புகுந்தாள்.

 

“நான் தப்பா கையை பிடிக்க இல்லை ஆரவ், அண்ணாவா தான் கையை பிடிச்சேன், நான் அப்படி பட்ட பொண்ணு” என்று கூற 

 

கிறு ஓடி வந்து தன்னுடன் பேசும் போது அந்த வலியிலும் புன்னகைத்தவன், பின் உதறி தள்ளிவிட கவலை மேலிட அவள் கூற்றில் முழுவதும் உடைந்து அழ தர்ஷூ அவனை அணைத்துக் கொண்டு கண்கலங்க, மற்றவர்களும் இதைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். கிறு அவன் அழுவதைப் பார்த்தவள், 

 

நிகாரிகா “நீ அவளை காதலிச்சு தான் கல்யாணம் பன்னியா? இல்லை சுடிவேஷனால கல்யாணம் பன்னியா? எனக்கு என்னமோ இரண்டாவது ரீசனா தான. இருக்குமனு நினைக்குறேன்” என்று அதே திமிரில் கூற

 

“நீ அடங்கவே மாட்டியா” என அனைவரும் அவளைப் பார்க்க,

 

“என் கண்ணம்மாவை நான் காதலிச்சு தான் கல்யாணம் பன்னேன்” என்றான் ஆரவ் அடக்கப்பட்ட கோபத்துடன்.

 

“இதோ பாரு, நீயாருன்னு தெரியாது ஆனால், என் கிறுவையும், என் புருஷனையும் பிரிச்சுட்ட இல்லை? அதற்கான தண்டனை உனக்கு கண்டிப்பா கிடைக்கும். இப்போ உயிரோட வீடு போய் சேரு” என்றாள் தர்ஷூ.

 

“என்ன மிரட்டுறியா?” என்று நிகாரிகா கேட்க,

 

“நான் கண் அசைச்சா போதும் நிகாரிகா, அடுத்த செகன் உன்  நெத்தியில புலட் இறங்கிரும். இவங்க எல்லாருமே சி.எம் ஓட பேர்மிசன்ல வந்த பொர்டி கார்ட்ஸ். உன்னை கொன்னுட்டு, நீ இவளை கொல்ல பார்த்த அதனால தான் சூட் பன்னாங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன், இதற்கு மேலே எங்க ல்ய்ப்ல குரொஸ் பன்ன உன்னை உரு தெரியாம அழிச்சிருவேன்” என்றான் ஆரவன் உறுமலாக.

 

அதில் பயந்தவள் அங்கிருந்து வெளியேறினாள். கிறு அழுகையுடனேயே மயங்கி இருக்க, அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

இரண்டுமணி நேரத்திற்கு பிறகு விழித்தவள், ஆரவைப் பார்த்து மீண்டும் அழ ஆரவ் அவளை திட்டி அமைதிப்படுத்தினான்.

 

“எதுக்கு ஆரவ் என்னை காதலிச்சு கல்யாணம் பன்னன்னு பொய் சொன்ன?” என்று கேட்க,

 

“நான் பொய் சொல்ல இல்லை கண்ணம்மா. உண்மைய தான் சொன்னேன். நான் உன்னை காதலிச்சு தான் கல்யாணம் பன்னேன்” என்று கூற இம்முறை அதிர்வது கிறுவின் முறையாயிற்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 67யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 67

நிலவு 67   நான்கு நண்பிகளும் அவர்களின் கணவன்களோடு தங்கள் கனவிற்காக அவுஸ்திரேலியாவை நோக்கி குடும்பத்தை விட்டு பயணமானார்கள். அங்கு சென்றவர்கள் முதலில் ஓய்வு எடுத்தனர். அடுத்த இரண்டு நாட்களில் மெச் நடைபெற இருந்தது. கோர்ச் இரண்டு நாட்களும் இவர்களுக்கு தமது

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 29யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 29

நிலவு 29   அறைக்குள் அவளை இழுத்துச் சென்றான் ஆரவ்.   “என்ன பேச இருக்கு ஆரவ்?” என்று அவள் கேட்க,   “எதற்கு கல்யாணம் வேணாங்குற?” என்று ஆரவ் கேட்க,   “அதான் சொன்னேனே ஆரவ், காதல் இல்லாத ஒரு

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12

அஸ்வினும், கிறுவும் வீட்டிற்கு வந்தனர்.   இந்து “அண்ணனும் , தங்கச்சியும் எங்க போனிங்க இவளோ நேரமா?” என்று கேட்க,   இந்துவின் அருகில் அமர்ந்தவள் அவர் கன்னத்தைக் கிள்ளி   “இந்துமா, அஸ்வின் என்னை சில்ரன்ஸ் பார்க்கிற்க்கு கூட்டிட்டு போனான்”