Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41

நிலவு 41

 

“கண்ணா உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியாது. நாம எல்லோருமே இந்த வாட்டி வீட்டிற்கு போன நேரம் நான் தோட்டத்தில் வெளியே உட்கார்ந்து இருந்தப்போ நீ என் கூட பேசின அப்ப கூட நான் வெளிச்சம் இருக்கிற இடத்துல தான் உட்கார்ந்து இருந்தேன், உன்னை அறைஞ்ச அன்றைக்கு தர்ஷூ உங்களை போட்டோ எடுத்து இருந்தாள், அன்றைக்கு கூட நாங்க எல்லாருமே இருட்டுல இருந்தோம். ஆனால் நான் பெல்கனி வெளிச்சத்துல தான் நின்னுட்டு இருந்தேன். நமளுக்கு முதலிரவு அன்றைக்கு நான் உன் லெப்போட வெளிச்சத்துல தான் தூங்கினேன். நீ டெல்லி வந்துட்டு திரும்ப வீட்டுக்கு வந்தபோ நான் வெளியில குளிரில் பயத்துல தான் இருந்தேன். நீ என் பக்கத்துல இருக்கும் போது மட்டும் தான் தைரியமா இருக்கேன். அதனால் தான் என்னை விட்டு தனியா போயிறாதன்னு சொன்னேன், இந்த நிமிஷம் வரைக்கும் அந்த பயம் என்னை விட்டு போகல்ல டா. அவன் வந்துருவானோன்னு பயந்துட்டே இருக்க வேண்டியதா இருக்கு” 

 

“ஜெசி எங்க இருக்கான்னு தெரியாது. கீதாவைப் பார்க்க ஆசையா இருந்தாலும் அவளை பார்க்க முடியல்லை. சௌமியை மட்டும் என்னால பார்க்க முடிஞ்சது. அதுவும் வினோவோட ஷொபிங் மோலில், இந்த ஷ்ரவன் அப்பாவோட கம்பனியை விட்டுட்டு உங்க கிட்ட மாத சம்பளத்துக்கு வேலை பார்க்குறான்”

 

என்று அழ அவள் கண்ணீரைத் துடைத்தாள்.

 

“கீதா எங்க இருக்கான்னு தெரியாதா?” என்று ஆரவ் கேட்க,

 

“அவளை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஷ்ரவனுக்காக கண்டிப்பா அவ திரும்ப வருவா” என்று கூற

 

“அப்போ சரண்” என்று கேட்க,

 

“அவ சூசைட் பன்னிட்டான்னு தெரிஞ்ச உடனேயே அவளை பார்க்க வந்துட்டு அப்போவே அவன் அவளை விட்டுட்டு போயிட்டான். அவன் காதல் உண்மையில்லை. ஆனால் ஷ்ரவனோட காதல் உண்மையானது, அவன் இன்னும் அவளை தான் காதலிக்கிறான்” என்றாள்.

 

“கீதா திரும்ப வந்தாலும் அந்த வீடியோ அவளை பாதிக்குமே கிறுஸ்தி” என்று கூற

 

“கண்ணா எனக்கு என் பிரன்சுங்களை பற்றி நல்லாவே தெரியும். ஷ்ரவன் கீதுக்கு இப்படியானதால ரொம்ப உடைஞ்சி போயிட்டான். அதனால் அவன் ஒன்னும் பன்னி இருக்கமாட்டான். ஆனால் ஹபீஸ் கண்டிப்பா அவன் மொபைலை ஹெக் பன்னி அந்த வீடியோவை டெலீட் பன்னி இருப்பான்” என்றாள். 

 

“ஆனால் கிறுஸ்தி உன் மேலே தான் தப்பு இருக்கு” என்று கூற

 

அவள் அதிர்ச்சியாய் ஆரவைப் பார்க்க,

 

“நீ யாரோட பொண்ணுன்னு உனக்கு சொல்லவே தேவையில்லை. உன் அப்பாவோட பவரை யூஸ் பன்னி அவனை தண்டிச்சு இருந்தன்னா, இன்னொரு பொண்ணு காப்பாத்தபட்டு இருப்பா. நீ சுயநலமா நடந்திருக்க கிறுஸ்தி” என்றான்.

 

“கண்ணா அப்போ எனக்கு என்ன பன்னும் கூட தோணல்ல, அதுமட்டும் இல்லை டா, நான் ஒரு பொண்ணு என்னால என்ன பன்ன முடியும்? அவனை தண்டிச்சிட்டு, திரும்ப வந்து பெரிய அளவில் ஏதாவது பன்னிட்டான்னா?” என்று கூற

 

“யேன் பொண்ணுன்னா திருப்பி அடிக்க முடியாதா? பொண்ணுங்க நினைச்சால் உலகத்துல எதை வேணுன்னாலும் செய்யலாம். நீங்களே உங்களால முடியாதுன்னு நினைக்கிறிங்க. பொண்ணுங்களை மென்மையானவங்கன்னு சொல்லி சொல்லியே அவங்களோட தைரியத்தை புதைச்சிட்டாங்க”

 

“யேன் கிறுஸ்தி நீயே சொல்லு, உன்னோட இவளோ கஷ்டத்தையும் மறைச்சிட்டு தானே அங்க எல்லாரு கூடவும் சகஜமா இருந்த? இந்த அளவுக்கு மன தைரியம் பொண்ணுங்களுக்கு தான் இருக்கு. ஆம்மளைங்களுக்கு இப்படி இருக்கிறது ரொம்ப குறைவு. ஒரு மனிஷன் மனதளவில் தைரியமா இருந்தால் உடலாலேயும் உறுதியா இருப்பாங்க. நீ மூதல்ல மனதளவில் தைரியமா, உறுதியா இரு எல்லாமே நல்லதா நடக்கும். பொண்ணுன்னா வீக்கா இருப்பாங்கன்னு நினைக்குறதை முதல்ல நிறுத்து” என்றான்.

 

அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்தவன்

 

“புரிஞ்சுதா?” என்று கேட்க,

 

அவள் ஆமென்று தலையை ஆடினாள்.

 

“அப்போ நெட்போல் இதற்கு அப்பொறமா விளையாடமாட்ட?” என்று கேட்க,

 

“நீ என்ன சொன்னாலும் திருப்பி என்னால நெட்போல் விளையாட முடியாது. அது மேல இருந்த லவ்வே போயிருச்சு” என்று கூறி சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

‘உன்னை கண்டிப்பா நான் ஒரு இன்டர்நெஷனல் பிளேயரா மாற்றாமல் விட மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

 

அடுத்த நான்கு நாட்களும் ஆரவே கிறுஸ்தியை கவனித்துக் கொண்டான். அவள் வயிற்று வலியைக் குறைப்பதற்கு வீட்டில் வேலை செய்யும் லக்ஷமி அம்மாவை பாடாய்படுத்தி எடுத்துவிட்டான் ஆரவ். இடையில் ஆரவ் அலுவலகத்திற்கு சென்றாலும் கிறு செல்லவில்லை. அதில் ஒரு நாள்,

 

“சேர் உங்க கிட்ட ஒன்னு கேட்கவா?” என்று பவ்யமாய் ஷ்ரவன் கேட்க,

 

“நீ கேட்குறதை பார்த்தால் ஏதோ பெரிய விஷயம் தான் போலயே, ம் சொல்லு” என்றான்.

 

“சேர் ஏ.கே க்கு நிகாரிகாவைப் பற்றி தெரியுமா?” என்று கேட்க,

 

“அட ஆமா, அப்படி ஒரு கெரெக்டர் இருக்கிறதையே மறந்துட்டேன், அதனால கிறுஸ்தி கிட்ட சொல்லவே இல்லை” என்றான் ஆரவ்.

 

“சேர் உங்களுக்கு அவளை மறந்திருச்சா? இந்த மூன்று வருஷமா உங்க பின்னாடியே சுத்திட்டு இருந்தா. இப்போ அவ பிஸ்னஸ் விஷயமா லண்டன் போயிருக்கா. உங்களுக்கு கல்யாணம் ஆச்சுன்னு தெரிஞ்சுதுன்னா என்ன  பன்னுவாளோ? எதுக்கு ஏ.கேயும் நீங்களும் ஜாக்கிரதையாவே இருங்க” என்றான் ஷ்ரவன்.

 

“அதைப் பார்த்துக்கலாம் ஷ்ரவன். யாருக்காகவும் கிறுஸ்தியை விட்டு கொடுக்க மாட்டேன், அவ மேலே ஒரு துரும்பும் பட விட மாட்டேன். இப்போ அவ மிஸஸ் ஆரவ் கண்ணா” என்றான். 

 

கிறு தனக்கு சுகமாகிய பிறகு ஆரவின் அலுவலகத்திற்கு வந்தாள். பின்னர் தனக்கு வழங்கப்பட்ட வேலைகளை செய்தாள். ஷ்ரவனும் அவளுக்கு உதவிகளை செய்துக் கொண்டு இருந்தான். அப்போது மெயில் ஒன்று வந்திருப்பதைப் பார்த்தவள், உடனடியாக ஆரவின் கெபினிற்குள் அனுமதியோடு நுழைந்தாள்.

 

“சேர், நாளைக்கு காலையில் பத்து மணிக்கு இங்கேயே கோல்டன் ஷிப் கம்பனி எம்.டி மாதேஷ் உங்க கூட மீடிங் ஒன்னு அரேன்ஜ் பன்ன முடியுமான்னு கேட்டு இருக்காரு” என்று கேட்க,

 

“ஒகே” என்றான். 

 

அவளும் சென்று சரியென்று பதிலுக்கு மெயில் அனுப்பி வந்தாள். 

 

அடுத்த நாள் அனைவருக்கும் பல கேள்விகளுக்கு விடை அளிப்பதாகவும் கிறுஸ்திக்கு அவப்பெயரையும் மாதேஷ், கிறுஸ்தி உறவில் விரிசலை ஏற்படுத்தும் நாளாகவும், ஆரவ் கிறுஸ்தியின் வாழ்க்கையில் முக்கியநாளாகவும் இருக்க அழகாக விடிந்ததது.

 

அன்று காலை பத்து மணிக்கு மீடிங் இருப்பதால் ஆரவ், கிறுஸ்தி இருவரும் விரைவாகவே ஆபிசைச் சென்றடைந்தனர். மீடிங்கிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துக் கொண்டு இருந்தாள். ஒன்பது முப்பது மணியளவில் மாதேஷூம் வருகை தர ஆரவ், மாதேஷ் இருவரும் நண்பர்களாக பேசினர்.

 

“தர்ஷூ வந்திருக்காளா?” என்று கேட்க,

 

“ஆமா டா, ஈவினிங் வீட்டுக்கு வரனும்னு சொன்னா, ஆமா எங்க டா என் அருமை தங்கச்சி?” என்று கேட்க,

 

“அவ வேலையில் பிசியா இருக்காடா” என்று சிரித்தான்.

 

“கிறுக்கு பொறுப்பு வந்திருச்சா?” என்று கேட்க,

 

“தைரியமா இருந்தால் இதை அவ முன்னாடி கேட்டுப் பாறேன்” என்று ஆரவ் கேட்க

 

“நான் முழுசா டேமேஜ் இல்லாமல் திரும்பி போகனும்னு ஆசைபடுறேன் மச்சான்” என்றான் மாதேஷ் பாவமாக.

 

பத்து மணியளவில் ஆரவின் கெபினிற்குள் ஷ்ரவன் வருகை தந்து மீடிங்கிற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிந்ததாகக் கூற 

 

இருவரும் மீடிங் நடைபெறும் இடத்திற்கு செல்லும் போது, கிறு அவர்களின் முன் வந்தாள்.

 

மாதேஷ்,” என்ன ஞாபகம் இருக்கா மெடம்?” என்று கேட்க,

 

“உங்களை மறக்க முடியுமா சேர்?” என்று கிறு கூற,

 

“சரி மீடிங் முடிச்சிட்டு உன் கிட்ட பேசுறேன்” என்று கூறி அங்கிருந்து புன்னகைத்துச் சென்றான்.

 

அவளும் புன்னகைத்து அங்கிருந்து செல்ல மற்றைய ஸ்டாப்ஸ் கிறுவை விநோதமாகப் பார்த்தனர். அனைத்து பணக்காரர்களையும் இவளுக்கு தெரிந்து இருக்கின்றதே என்று.

 

ஆரவ், மாதேஷ் இருவரும் மீடிங்கை முடித்த பிறகு கிறுவை அங்கேயே அழைத்தனர். அவளும் மீடிங் ஹோலிற்குச் சென்றாள்.

 

“இப்போ உன் பிரச்சனை என்ன? எதுக்கு நீ டிஸ்டர்ப் பன்ற மாதேஷ்?” என்று கோபமாக கேட்க,

 

ஆரவ் இருவரின் சம்பாஷனைகளை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான். 

 

“எதுக்கு கோபமா இருக்க?” என்று கேட்க,

 

“ஓஓஓ அப்போ எதுக்கு கோபமா இருக்கேன்னு கூட உனக்கு தெரியாது? நீ எல்லாம் என்ன அண்ணன் டா? என் இந்துமாக்கு ஒருத்தன் பொறந்திருக்கான், கவின்னு ஒருத்தன் இருக்கான் எல்லாரும் ஒரே சேத்துக் குழியில உரிச்ச மட்டைங்க தானே” என்று கத்திவிட்டு வெளியே சென்றாள்.

 

மாதேஷ் அவள் பின்னே ஓடி வந்தான் 

“ஏய் நில்லுடி” என்று அவளின் கையைப் பிடிக்க,

 

ஸ்டாப்ஸ் அனைவரும் இருவரையும் விநோதமாகப் பார்த்தனர். ஆனால் இவர்கள் வீட்டில் சண்டையிடுவது போல சண்டைப் பிடித்தனர்.

 

“என்ன டா? இப்போ என் கையை விட இல்லை, மண்டையிலேயே கொட்டுவேன்” என்றாள்.

 

“நீ அவளோ ஹையிட் இல்லையே” என்று கூறி சிரிக்க

 

“எருமையே ஹைட்டை பற்றி பேசாதன்னு சொல்லி இருக்கேன்” என்று கூறி கையை உதறி விட்டு நடக்க,

 

மாதேஷ் மீண்டும் அவள் கையைப் பிடித்து ஆரவின் கெபினிற்கு அழைத்துச் செல்ல, ஆரவ் இருவரையும் புன்னகையுடன் பின் தொடர்ந்தான். 

 

அங்கே அஸ்வின், கவின் வீடியோ கோலில் வந்தனர்.

 

“இன்றைய நாளை எப்படி டி மறக்க முடியும்?” என்று மூவரும் கேட்க,

 

“அப்போ இன்றைக்கு ரக்ஷா பந்தன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்க,

 

“ஆமா ஒரு சின்ன சப்ரைஸ் கொடுக்கலாமனு நினைச்சோம்” என்றான் கவின்.

 

“நான் எப்படி ராகி கட்றது?” என்று கேட்க, 

 

“இன்னும் இரண்டு நாளில் மீராவோட அரங்கேற்றத்துக்கு வரும் போது மூன்று பேருக்கும் அந்த அன்றே கட்டு” என்று அஸ்வின் கூற

 

“டபுள் ஒகே, கிப்ட் மூன்று பேரும் ரெடியா வச்சிருங்க” என்று கூறி சிறிது நேரம் ஐவரும் பேசிவிட்டு மாலை தர்ஷூவுடன் வீட்டிற்கு வருவதாகக் கூறி விடைபெற்றான் மாதேஷ்.

 

பகல் வேளையில் சாப்பிடுவதற்காக ஷ்ரவனுடன் கிறு கென்டீன் சென்று இருந்தாள். 

 

“எதோ தப்பா நடக்க போற மாதிரி இருக்கு டா” என்றாள் கிறு.

 

“என்ன சொல்ற?” என்று கேட்க,

 

“இப்போ ஏதோ தப்பா நடக்க போறது போல இருக்கு டா என் ஹார்ட் பீட் கூட எகிறிரிச்சு, மனசு கூட ஒரு நிலையில இல்லை” என்றாள் கிறு. ஷ்ரவன் அவளை சமாதானப்படுத்தி உண்ண வைத்தான்.

 

அதே நேரம் ஆரவின் ஆபிசிற்கு புயலென உள்ளே நுழைந்தாள் நிகாரிகா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5

நிலவு 5   கீழே உருண்டு விழுந்த அஸ்வின் ‘யார் அவன் கையணைப்பில் உள்ளார்’ எனப் பார்த்த போது மீரா கண்கள் சிவக்க அவன் கீழ் விழுந்து இருந்தாள். அவனோ தன்னவள் நெருக்கத்தில் அவளை இரசித்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49

நிலவு 49   “இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே விறுவிறுப்பா மெச் ஆரம்பமாக போகுது. இதுக்காக இங்கே உள்ள எல்லோருமே ஆர்வமாக இருக்காங்க, எந்த கம்பனி செம்பியன்ஷிப் எடுக்க போகிறாங்கன்னு பார்க்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. யேன்னா இங்க ஸ்டேட் லெவல்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 47யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 47

நிலவு 47   மீரா, அஸ்வின் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பணியாள்,   “மேம் உங்களை அங்கே வர சொன்னாங்க” என்று கூற   “அச்சு அவளுங்க தான் என்னை கூப்பிடுறாங்க  நான் போய் என்ன என்று பார்த்துட்டு வரேன்”