Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 39

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 39

நிலவு 39

 

இந்தியன் நெட்போல் போர்டில்

 

“ஏ.கே பற்றி ஏதாவது தெரிஞ்சுதா?” என்று அவன் கேட்க,

 

“நோ சேர் அவங்க பிரன்ஸ் பற்றி கூட ஏதும் தெரியவில்லை” என்றார் மெம்பர் ஒருவர்.

 

“அது எப்படி நான்கு பொண்ணும் ஒரே நேரத்தில் காணமல் போவாங்க? மூன்று வருஷமா தேடியும் ஒருத்தரை பற்றியும் தெரியவராமல் இருக்கும். ஒழுங்கா விசாரிங்க” என்றான் அவன்.

 

“மிஸ்டர். அதர்வா நாங்க விசாரிச்சுட்டு தான் இருக்கோம்” என்றார் வேறு ஒரு மெம்பர்.

 

‘கிறுஸ்திகா உன்னை கண்டுபிடிக்காம விட மாட்டேன் டி, உன்னை அடைஞ்சே தீருவேன். என்னை சந்திக்க தயாராயிரு’ என்று சூழுறைத்துக் கொண்டான்.

 

அன்று காலையில் office வந்த அஸ்வினுக்கு அதிக வேலைப் பழுவினால் பகல் உணவும் உண்ணாமல் வேலையில் மூழ்கிக் கிடந்தான். மாலை நேரம் தனது டான்ஸ் பிரக்டிசை முடித்து அஸ்வின் அறைக்குள் நுழைந்தாள். அவன் சோர்வான முகத்தைப் பார்க்கும் போதே மீராவிற்கு கவலையாக இருந்தது.

 

“அச்சு சாப்படியா?” என்று கேட்க,

 

“இல்லை டி, இன்னைக்கு ரொம்ப பிசி டைம் இல்லை. இப்போ கூட முக்கியமான பைலை தான் பார்த்துட்டு இருக்கேன்” என்றான் பைலில் கண்ணைப் பதித்துக் கொண்டே.

 

“டேய், சாப்பிடாம உடம்பை கெடுத்துக்க போறியா?” என்று அவள் திட்ட 

 

“பிளீஸ் புரிஞ்சுக்க மீரு எனக்கு டைம் இல்லை டி இந்த பைல பார்த்துட்டு பெரிப்பாக்கு நான் இதை இன்றைக்கு அனுப்பியாகனும் டி” என்றான்.

 

அவளே நேராக கென்டீனிற்குச் சென்று அஸ்வினுக்காக உணவை வாங்கி வந்தாள்.

 

“அச்சு நீ வேலையை பாரு நான் உனக்கு ஊட்டிவிடுறேன்” என்று ஊட்டிவிட அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டது தன்னவளின் அன்பில் நெகிழ்ந்து.

 

“ஐ லவ் யூ டி பொன்டாட்டி” என்று கூற

 

“லவ் யூ டூ புருஷா” என்று சிரித்தாள்.

 

அவள் தொடர்ந்து ஊட்டிவிடும் போது தீப்தி உள்ளே வர மீரா அஸ்வினிற்கு ஊட்டுவதைப் பார்த்து அவளது பொறாமைத் தீ இன்னும் வேகமாக எரிந்தது.

 

“சேர் நாளைக்கு மிஸ்டர் ஷேகர் உங்களை சந்திக்க முடியுமான்னு கேட்டாரு?”என்று கேட்க,

 

அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு “ஒகே” என்றதும் அவள் அவன் கெபினை விட்டு வெளியேறினாள். தீப்திக்கு மீராவின் மீது கோபம் இன்னும் அதிகரித்தது.

 

“இவளோ பசியை வச்சிகிட்டு தான் சாப்பிடாமல் இருந்தியா?” என்று திட்ட அவன் சிரித்தான்.

 

“என் மீரு குட்டிக்காக இனி நான் டைமுக்கு சாபிடுறேன்” என்று கூற மீரா புன்னகைத்து அங்கிருந்து கைகழுவச் சென்றாள்.

 

அந்த நாள் மாலை அஸ்வின்,மீரா இருவரும் கிளம்ப அவர்களை அறியாமல் தீப்தி பின் தொடர ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் அஸ்வின் வீட்டிற்குள்ளே நுழைய குழம்பினாள். அங்கிருந்த சிலரிடம் விசாரிக்க முதலில் அவளை விசித்திரமாக பார்க்க, இருவரும் ஒன்றாகவே தங்கி இருப்பதாகக் கூற இன்னும் மீராவின் மேல் கோபம் அதிகரித்தது. அஸ்வினுடன் நொடிப் பொழுதும் அவனுடன் இருப்பதால்.

 

அடுத்த நாள் மீரா அஸ்வின் ஒபீசிற்கு  வந்த போது, ஜீவி அழைப்பை ஏற்படுத்தினாள். 

 

“என்ன மெடம் என்ன பன்றிங்க?” என்று மீரா கேட்க,

 

“நான் சூப்பரா இருக்கேன். உன்னோட அரங்கேற்றதுக்கு இன்னும் ஒரு கிழமை தான் இருக்கு? அப்போ எல்லோருமே திரும்ப சந்திக்க போறம் இல்லை?” என்று சந்தோஷமாக கூற

 

“ஆமா ஜீவி என்னோட கனவா மாறிருச்சு, அந்த அரங்கேற்றத்துல நல்லா டான்ஸ் பன்னனும் ஆனால் கொஞ்சம் பயமாவும் இருக்கு இன்னும் ஒரு கிழமை தான் இருக்கு” என்றாள்.

 

“விடு மீரு எல்லாம் நல்லபடியாவே நடக்கும்” என்று ஜீவி கூறி சில பல கதைகளைப் பேசிய பின்னர் அழைப்பைத் துண்டித்தனர்.

 

மீரா அரங்கேற்றத்தைப் பற்றி பேசும் போது உள்ளே நுழைந்த தீப்தி; ஒரு திட்டம் தீட்டி குரூரப் புன்னகையுடன் வந்த சுவடே இல்லாமல் சென்றாள்.  

 

அன்று மாலை அஸ்வினுடன் செல்ல மழை பெய்ய ஆரம்பித்தது. உள்ளே நுழைந்தவள் தனது பையை வீசிவிட்டு மழையை இரசிக்க ஆரம்பித்தாள். அவள் மழையை இரசிக்க அவளை அஸ்வின் இரசிக்க ஆரம்பித்தான்.

 

அவளை பின்னிருந்து அணைத்த அஸ்வின் 

 

“ரொம்ப குளிரா இருக்குல்ல?” என்று கேட்க,

 

“ஆமா அச்சு” என்றாள் மழைச் சாரலை அனுபவித்தபடியே 

 

“மீரு” என்று அவன் அழைக்க

 

“என்னடா?” என்றாள்.

 

“சீக்கிரம் கல்யாணம் பன்னிக்கலாம் டி” என்று கூற

 

அவளும் சரி என்று தலை அசைத்தாள்.

 

அவளைத் தன்புறம் திருப்பியவன் தன் கண்களைப் பார்க்க வைத்தான். அவன் கண்களில் தெரிந்த காதலைப் பார்த்தவள் மேலும் அவனை பார்க்க முடியாமல் தலையை குனிய அவளை நிமிர்த்தி அவள் முகம் பார்த்து அவள் இதழைச் சிறையிட்டான். அவளும் அவனுடன் ஒன்றினாள்.

 

அடுத்த நாள் காலை கிறு எழாமல் கட்டிலிலேயே வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்திருந்தாள்.

 

ஆரவ் அவள் அருகில் வந்தவன்,

 

“என்னாச்சு டி?” என்று தலையை வருடிக் கொடுத்துக் கேட்க,

 

“ஒன்னும் இல்லை கண்ணா, கொஞ்சம் வயிற்று வலி அவளோ தான், நீ போய் ரெடியாகு நான் வரேன். இன்றைக்கு நீ பெக்டிரியை போய் பார்த்துட்டு புரொடக்சை மும்பைக்கு அனுப்ப இருக்கு. அதனால சீக்கிரமா கிளம்பு” என்றாள் படுத்துக் கொண்டே.

 

“உனக்கு கஷ்டமா இருந்தால் இன்றைக்கு லீவ் எடுத்துக்க” என்றான்.

 

“இல்லை நான் வரேன், நீ போ” என்றாள்.

 

அவனும் தயாராகி கிறுவிற்காக இருக்க, கிறுவும் தயாராகி கீழே வந்தாள். அவள் முகம் பொலிவு இழந்து இருப்பதைப் பார்த்தவன் அவள் அருகில் வந்து,

 

“கண்ணமா உனக்கு ரொம்ப முடியல்லைன்னு உன் முகத்தை பார்க்கும் போதே புரியிது. நீ போய் ரெஸ்ட் எடு” என்றான்.

 

“இல்லை டா  எனக்கு எதுவுமே இல்லை டா வா கிளம்பலாம்” என்று காரிற்கு அழைத்துச் சென்றாள். 

 

இருவரும் கெபினுற்குள் நுழைய ஷ்ரவனும் வருகை தந்தான்.

 

“ஏ.கே உனக்கு என்னாச்சு? ஏன் டல்லா இருக்க?” என்று கேட்க,

 

“ஒன்னும் இல்லை. வா வேலையை பார்க்கலாம்” என்று கூறி வேலையை பார்த்தார்கள். நேரம் செல்லச் செல்ல அவள் வயிற்று வலி அதிகரித்ததே தவிற குறையவில்லை. அவள் அதை வெளிக்காட்டாமல் கடினப்பட்டு வலியை அடக்கி பொறுத்தாள்..

 

ஷ்ரவன், கிறு இருவருமே ஆரவுடன் பெக்டிரிக்குச் சென்றனர். அங்கு தனது வேலகளைப் பார்க்க கிறுவால் தனது வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆரவ் பெக்டிரியில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அருகில் இருந்த கிறு நிற்க முடியாமல் தள்ளாடி கீழே விழப்போக,

 

ஆரவ் அதைப் பார்த்தவன் “கிறுஸ்தி” என்று தாங்கிக் கொண்டு அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டான். 

 

அங்கு இருந்தவர்கள் ஆரவை அதிர்ச்சியாகவே பார்த்தனர். இதுவரையில் எந்தப் பெண்ணையும் தன்னருகில் விடாதவர் இன்று ஒரு பெண்ணை தன்னுடன் அணைத்துக் கொண்டு இருக்கிறாரே என்று.  

 

அவளை கையில் ஏந்தி அருகில் இருந்த கிடையான இடத்தில் கிடத்தி எழும்பும் போது, அவன் அணிந்த chain ல் அவளுடைய தாலி பிணைந்து இருக்க அவன் எழும் போது அவளுடைய தாலியும் ஆடைக்கு வெளியே வந்து விழ அவளது தாலியில் இருந்து தன் chain ஐப் பிரித்து எடுத்தான்.

 

பின் அவள் அணிந்து இருந்த ஷூவைக் கழற்றும் போதே காலில் அணிந்து இருந்த மெட்டியும் புலப்பட்டது. ஆரவ் அவள் மயக்கமடைவதைப் பார்த்து பதற

 

“கிறுஸ்தி என்னடி ஆச்சு?” என்று கன்னங்களில் தட்ட 

 

ஷ்ரவன் அவனிடம் தண்ணீரை வழங்க ஆரவ் அவள் முகத்தில் தெளித்தான்.

 

மெதுவாகக் கண்களைத் திறக்க,

 

“வா ஹொஸ்பிடல் போலாம்” என்று அவளை கையில் ஏந்தப் போக 

 

“கண்ணா நீ முதலில் போய் வேலையை முடி அப்பொறம் போலாம்” என்றாள் கெஞ்சும் விதமாக.

 

ஆரவ் அவள் கூறியதற்காக அவள் தலையை தன் மடியில் கிடத்தி பைலைப் பார்த்து ஷ்ரவனிடம் சில கட்டளைகளைப் பிறப்பித்தான். பின் ஷ்ரவினடம் கூறி அவளை கையில் ஏந்தி ஹொஸ்பிடலிற்கு அழைத்துச் சென்றான்.

 

மற்றவர்கள் ஷ்ரவனைக் கேள்வியாய்ப் பார்க்க அவன் சிரித்து,

 

“அந்த பொண்ணு கிறுஸ்திகா, ஆரவ் சேரோட வைப், எகோமா கம்பனி எம்.டி. அரவிந் சேராட பொண்ணு” என்றான்.

 

ஆரவ் கவலையாக அவளைப் பார்த்தான். கிறு,வயிற்றைப்பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். 

 

அவசரமாக  ஹொஸ்பிடலை  அடைந்தவன் தன் பவரை பயன்படுத்தி உடனடியாக கைனர்கொலோஜிஸ்டடை  சந்தித்தான். அவரும் கிறுஸ்தியை பரிசோதிவிட்டு டிரிப்ஸ் ஏற்றினார்.

 

ஆரவிடம் வருகை தந்து, 

 

“மிஸ்டர் ஆரவ் உங்க வைப் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி பிஸிகலா ரொம்ப ஸ்ரோங்க இருந்து இருக்காங்க. நான் எதிர்பார்குறது போல அவங்க ஸ்போர்ட்ஸ்ல அதிகமா ஈடுபட்டு இருக்கனும். அவங்க ஓரேடியாக. ஸ்போர்ட்சை விட்டதால் அவங்க பிசிகலா வீக் ஆகி இருக்காங்க. அதோட சைட் எபெக்ட் தான் இந்த மாதிரி பீரியட்ஸ் வரும் போது வயிற்று வலியை கூட தாங்க முடியல்லை” என்றார்.

 

“ஆமா டொக்டர், அவ நெட்போல் விளையாடிட்டு இருந்தா இந்த மூன்று வருஷமா அவ விளையாட இல்லை. இதை சரி பன்ன முடியாதா?” என்றான்.

 

“உங்க வைப் வெறியோட விளையாடி இருக்காங்க. நேரம் காலம் பார்க்காமல் அப்படி தான் விளையாடி இருக்கனும். சாதாரணமா விளையாடி இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது, இது அவங்களுக்கு இயற்கையாக இருந்தால் கூட பிரச்சனை இல்லை. டெப்ளட் கொடுக்கக் கூடாது. அவங்களை பிசிகலா கொஞ்சம் ஸ்ட்ரோங் பன்ற வழியை பாருங்க” என்று கூறி அவனிடமிருந்து விடைப் பெற்றார். 

 

கிறுஸ்தியை மாலை நேரம் அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

அவள் ஓரளவு தேறியிருக்க, இரவு உறங்கும் போது அவளிடம் பேச ஆரம்பித்தான்.

 

“எதுக்கு நீ நெட்போல் விளையாடுறதை விட்ட?” என்று நேரடியாகவே கேட்க,

 

“படிப்பில் கன்சன்ட்ரேட் பன்ன முடியல்லை அதான்” என்றாள்.

 

“பொய் சொல்லாத, வேறு ஒரு பிரச்சனைக்கு தான் விட்டிருக்க. நீ வெறியா விளையாடி இருக்க, நீ பிசிகலா ஸ்ட்ரோங்கா இருந்து இருக்க. ஆனால் இப்போ ரொம்ப வீக்கா இருக்க. அதனால தான் உன்னால வயிற்று வலிய கூட தாங்க முடியல்லை”

 

“அது மட்டும் இல்லை. நீ விருப்பம் இல்லாமல் தான் நெட்போலை விட்டு இருக்க. அன்றைக்கு டிரஸ் எடுக்க போகும் போது நீ ஸ்போர்ட்ஸ் டீ சர்டை பார்த்து கண்கலங்கின. அன்றைக்கு மீரா உன் கிட்ட பேசினப்ப கூட கண் கலங்கியது. அப்போ பாவனையை மாற்றிட்டாய். இப்போ நீ உண்மையை சொல்லி தான் ஆகனும்” என்று கத்தினான் ஆரவ்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 30யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 30

நிலவு 30   அன்றைய நாள் மாலை மருதாணி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டு இருந்தன. அனைவரும், பச்சை மற்றும் படர் நிறத்தில் விதவிதமான ஆடைகளை அணிந்து இருந்தனர். கிறு, ஆரவ் அவர்களை விட சற்று வித்தியாசமாக தெரிவதற்காக, அவர்களது ஆடைகளில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28

நிலவு 28   அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அது கோயிலின் மகா பூஜைக்கு முன்னைய தினமாகும். அனைவரும் காலை உணவை உண்ட பிறகு, சோபாவில் அமர்ந்து இருக்க,   சாவி, “இன்றைக்கு கோயிலுக்கு போகனும், சீக்கிரமா ரெடியாகுங்க” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 31யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 31

நிலவு 31   சிறிது நேரத்தில் ஐயர் தாலியை வழங்க அதை அவளுடைய சங்குக் கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு சாஸ்திர சம்பிரதாயப்படி முழுமையாக அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் ஆரவ் கண்ணா. பின் இருவரும் விரல் பிடித்து அக்னியை வலம் வந்தனர். பெரியவர்கள்