Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 30

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 30

நிலவு 30

 

அன்றைய நாள் மாலை மருதாணி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டு இருந்தன. அனைவரும், பச்சை மற்றும் படர் நிறத்தில் விதவிதமான ஆடைகளை அணிந்து இருந்தனர். கிறு, ஆரவ் அவர்களை விட சற்று வித்தியாசமாக தெரிவதற்காக, அவர்களது ஆடைகளில் தங்க நிறத்தில் வேலைப்பாடுகள் அமைந்து இருந்தன.

 

மாருதாணி விழா ஆரம்பமாக, மருதாணி வைப்பதற்கான ஆட்களும் வந்திருந்தனர். கிறு அவர்களது வீட்டில் உள்ள சோபாவில் நடுநாயகமாக அமர்ந்து இருக்க அவளின் இருபுறங்களில் இருந்தும் அவள் கையை தர்ஷூ, மற்றும் ஜீவி பிடித்து இருந்தனர். ஆரவ் தூரத்தில் நின்று அதைப் பார்த்தான். கிறுவின் ஒரு கைக்கு, மீரா மருதாணியிட, மற்றைய கைக்கு மருதணி இடும் பெண் வைத்தாள்.

 

வந்தவர்களை கவனிக்கும் வேலைகளை பெரியவர்களும், மாதேஷ், அஸ்வின், கவின் பார்த்துக் கொண்டு இருந்தனர். அங்கு கவின், மாதேஷ், ஜீவி, தர்ஷூ குடும்பத்தினரும் வருகைத் தந்தனர். அவர்களும் கிறுவை தமது வீட்டு பெண்ணாகவே பார்த்தனர். அதனால் அவர்களும் வந்தவுடனேயே வேலைகளை இழுத்துச் செய்ய ஆரம்பித்தனர்.

 

கவின், “வீட்டிற்கு வந்தவங்களை பொண்ணுங்க நீங்க தான் கவனிக்கனும், இப்போ பாரு நாங்க தான் அதைப் பாக்குறோம். நீங்க வெட்டியாக உட்காந்து இருக்கிங்க” என்றான்.

 

“யாருடா வெட்டியா உட்கார்ந்து இருக்கா? இப்படி கையை பிடிச்சிட்டு இருக்கிறது எவளோ கஷ்டம் தெரியுமா?” என்று தர்ஷூ கோபமாக கேட்க,

 

“அடியேய் இவனுக்கு எல்லாம் வாயால் சொன்ன புரியாது, அனுபவத்தை காட்டனும்” என்றாள் ஜீவி.

 

மீரா, “இவளுக்கு கம்பிலீட் ஆனதுக்கு அப்பொறமா நாங்க மூன்று பேரும் மருதாணி வைக்கிறோம். இவனுங்க மூன்று பேரும் தான் நம்ம கையை பிடிக்கனும்” என்றாள்.

 

“மீரு நான் ஒரு வார்த்தை எதுவும் பேசவே இல்லையே” என்று அஸ்வின் பாவமாய் கூற,

 

“ஒரு பிரன்ஸ் கேங்கில் ஒருத்தன் தப்பு பன்னாங்கன்னா அந்த பையனை மட்டும் யாரும் தப்பு சொல்ல மாட்டாங்க எல்லா பிரன்சையும் சேர்த்து தான் தப்பு சொல்லுவாங்க, அதே போல தான் இவனுக்கு தண்டனைன்னு சொன்னா அது உங்க மூன்று பேருக்கும் தான்” என்றாள்.

 

“அப்போ ஆரவுக்கு” என்று மூவரும் ஒரு சேரக் கேட்க,

 

“நல்ல பிரன்ஸ் டா நீங்க, உங்களை போல தான் இருக்கனும்” என்றான் ஆரவ்.

 

அதற்கு அங்கிருந்த பெண்கள் அனைவரும் சிரிக்க, கிறுவும் சிரித்தாள். ஆரவ் கிறுவையே பார்க்க, பின் தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

 

“நீங்க மூன்று பேரும் இவளுங்க கையை பிடிச்சிட்டு இருந்தால், என் கையை யாரு பிடிப்பா? அதற்கு உங்க பிரன்ட் தான் வரனும்” என்றாள் கிறு.

 

“ஹப்பா இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று கவின் கூற, அவனை முறைத்தான் ஆரவ்.

 

கிறுவின் இருகைகள், கால்களில் மருதாணி வைக்கப்பட்டது. மீரா கூறியபடி அவர்கள் மூவரின் கைகளிலும் மருதாணி வைக்கப் பட அவர்களின் துணைகளே கைகளைப் பிடித்தனர். ஆரவ் கிறுவிற்கு அருகில் அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். சிறியவர்களின் வற்புறுத்தலின் பேரில் பெரியவர்களில் பெண்களுக்கு மருதாணி வைக்கப்பட்டது. அவர்களுக்கும் தத்தமது துணைகளே கைகளைப் பிடித்து இருந்தனர்.

 

வினோவுக்கு போடோ எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.

 

வினோ, “எல்லாருமே ஜோடி ஜோடியா நின்று என்னை அசிங்கபடுத்துறிங்க” என்றான்.

 

“விடுடா உன் விதி மொரட்டு சிங்கல்லாவே இருக்கனும்னு இருக்கு” என்றாள் மீரா.

 

“மாமா, என் கல்யாணப் பரிசா நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கவா?” என்று கேட்டாள் கிறு.

 

“அடி பரிசெல்லாம் அவங்களா தான் தரணும். நாம கேட்டு வாங்கக் கூடாது” என்றான் மாதேஷ்.

 

“பராவால்லை, நான் என் மாமா கிட்ட கேட்பேன், மாமா நான் கேட்கிறதை தருவிங்களா?” என்று கேட்க,

 

“கண்டிப்பா மா, நீ என்ன வேணுன்னு சொல்லு நான் வாங்கி கொடுக்குறேன்” என்றார் அருண்.

 

“மாமா இது வாங்குற பொருள் இல்லை. உரிமை வேணுன்னு சொல்கிறது. அதாவது அந்த விஷயத்துல என்னைத் தவிற வேறு யாரும் தலையிடக் கூடாது” என்றாள்.

 

“மாமா, இவ பொடி வச்சி பேசுறதை பார்த்தா பெரிசா எதாவது கேட்பா போல இருக்கு” என்றான் கவின்.

 

கவினை பார்த்து கண்ணடித்து, “செய்விங்களா மாமா?” என்று கேட்க,

 

அவரும் “ஆம்” என்றார்.

 

“வினோவுக்கு நான் தான் பொண்ணை பார்ப்பேன். அவளை தான் உங்க வீட்டு மருமகளா மனப்பூர்வமா ஏத்துக்கனும்” என்றாள்.

 

அனைவரும் அதிர்ச்சியாய் அவளைப் பார்க்க,  

 

இந்து, “கிறு என்ன இது?” என்று சற்று உயர் தொனியில் கேட்க,

 

அருண் சிரித்த முகமாக “சரி” என்றார்

 

“அண்ணா அவ சின்ன பொண்ணு, அதற்கு நீங்களும் ஒகே சொல்றிங்க?” என்று சாவி பதறிக் கேட்க,

 

“அவ எதையும் யோசிக்காமல் பன்ன மாட்டா மா, எனக்கு அவ மேலே நம்பிக்கை இருக்கு” என்றார். 

 

கிறு புன்னகைத்து, வினோவைப் பார்க்க, அவன் கண்கள் கலங்கிவிட்டன. ஏதும் கூறாமல் அங்கிருந்து அறைக்குச் சென்றான்.

 

மருதாணி நிகழ்ச்சி ஆடல் பாடல்களுடன் நிறைவுற்றது. அப்போதே ஆண்களுக்கு எத்தனை வலிகள் கைபிடித்திருப்பது, கையை அதேபோல் வைத்திருப்பது என்று புரிந்தது. அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்கவும் தவறவில்லை. கிறு வெகு நேரமாக அதே இடத்தில் அமர்ந்து இருந்தபடியால் கை,கால்கள், முதுகுப்புறம் வலிக்க ஆரம்பித்தது.

 

“ஆரவ் என்னை வெளியில் கூட்டிட்டு போறியா? கஷ்டமா இருக்கு” என்று கூற,

 

மருதாணி அவன் ஆடையிலும், அவளது ஆடையிலும் படாமல் அவளை அலேகாக கையிலேந்தி வெளியே அழைத்துச் சென்றான். மற்றவர்கள் இதைப் பார்த்தும் பார்க்காமல் இருந்தனர்.

 

“கிறுஸ்தி உனக்கு இவங்க எல்லோருடனும்  இருந்து பழகிட்ட, டெல்லியில் உன்னால தனியா இருக்க முடியுமா?” என்று வானத்தைப் பார்த்துக் கேட்டான்.

 

“அங்கே நீ இருப்ப, அது மட்டும் இல்லை ஆரவ் உன்னோட தனிமை கூட ஒப்பிடும் போது இது எல்லாம் ஒன்றுமே இல்லை. நீ தேவையில்லாமல் எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத” என்றாள்.

 

“உனக்கு பசியா இல்லையா? எனக்கு ரொம்ப பசி” என்றான் ஆரவ்.

 

“எனக்கும் தான், ஆனால் நான் சென்றால் என்னை திரும்பவும் உட்கார வைப்பாங்க அதான் பேசாம இருக்கேன்” என்றாள்.

 

“சரி இரு நான் போய் இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து இங்கே வரேன்” என்று உள்ளே சென்றான் .

 

உணவைக் கொண்டு வந்தவன் அவளுக்கும் ஊட்டி, அவனும் உண்டான். இதை வினோ படமாகவும் எடுத்து அவர்கள் முன் வந்து நின்றான். 

 

“அண்ணா, எங்க கிறு ரொம்ப நல்லவ. இதே போல் அவளை கடைசி வரைக்கும் அன்பா பார்த்துக்கொங்க” என்று கண்கலங்கி கூற, கிறு வினோவை அருகில் அழைக்க அவன் அவள் அமர்ந்திருந்த கதிரைக்கு அருகில் தரையில் அமர்ந்தான். 

 

“வித் யுவர் பேர்மிஷன் நான் அவ மடியில் தலை வச்சிகட்டுமா? அவ எனக்கு இன்னொரு அம்மா தான். தப்பா எடுத்துக்காதிங்க” என்று வினோ ஆரவிடம் கூற,

 

“உன் அம்மா மடியில் படுக்க நீ அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கனுமா?” என்று கூற, 

 

“லவ் யூ  அண்ணா” என்றான்.

 

அன்றைய தினம் இவ்வாறே பாசப் போராட்டங்களுக்கு மத்தியில் நிறைவடைந்தது. நாளை அதிகாலையே எழுவதற்காக அனைவரும் உறங்கச் சென்றனர் காலையில் நலங்கிற்கு ஏற்பாடு செய்து விட்டு.

 

அதிகாலை மூன்று மணிக்கு சாவி கிறுவை எழுப்ப, 

 

“அம்மா பிளீஸ் ஒரு பத்து நிமிஷம்” என்று கூற

 

“மாப்பிள்ளையே எழுந்துட்டு நலங்குக்கு தயாராகுறாரு. நீ என்ன டி இன்னும் தூங்கிட்டு இருக்க?” என சாவி கூற,

 

“அம்மா பிளீஸ் மா, அவன் உங்க கிட்ட நல்ல பேர் எடுக்குறதுக்காக இப்படியெல்லாம் பன்றான் மா” என்று மறுபுறம் திரும்பி உறங்க, 

 

மீரா அறைக்குள் நுழைந்து, சாவியை வெளியே அனுப்பினாள். 

 

“இப்போ நீ எந்திரிக்க இல்லை என்றால், நான் போய் ஆரவ் அண்ணாவை இங்கே இப்போவே கூட்டிட்டு வந்திருவேன். நீ தூங்குற லட்சணத்தை பாருன்னு” என்றாள்.

 

“இராட்சிங்க” என்று அடித்துப் பிடித்து எழுந்தாள். 

 

“இப்போ என்ன நான் நலங்குக்கு தயாராகனும் அவளோ தானே போறேன்” என்று பாத்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள்.

 

அவள் மஞ்சள், வெள்ளை நிறத்தில் ஒரு மெல்லிய வேலைப் பாடுகளை உடைய ஒரு லெகங்காவை அணிந்தாள். அவளை மீரா, தர்ஷூ, ஜீவி அவர்களின் வழக்கப்படி பூக்களால் அலங்கரித்தனர்.

 

“உலகத்துலேயே நலங்கு பங்சனை விடிய காலை மூன்று முப்பதுக்கு கொண்டாடுற ஒரே பொண்ணு நான் தான்” என்று கூறி கீழே சென்றாள். 

 

அவர்களின் முறைப்படி மணமகன், மணகள் இருவருமே ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நலங்கு வைப்பர். அதனால், ஆரவ் அமர்ந்திருந்த சோபாவில் அவனுக்கு அருகில் கிறு அமரவைக்கப்பட்டாள். ஆரவ் ஒருவரும் அறியாமல் கிறுவை இரசித்தான். அங்கு வந்திருந்தோரும் மஞ்சள், வெள்ளை நிறம் கலந்த ஆடைகளையே அணிந்து இருந்தனர். 

 

“உனக்கு தூக்கமே வராதாடா?” என்று கிறு ஆரவிற்கு அருகில் சென்று கேட்க,

 

“நான் எந்திரிக்காமல் இருந்தால் மற்றவங்க கஷ்டப்படுவாங்க, அதான் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் எந்திரிச்சு தயாராகிட்டேன்” என்றான் ஆரவ்.

 

“அவளோ நல்லவனா டா நீ?” என்று அவள் கேட்க, ஆரவ் கண்ணடித்தான்.

 

அழகான முறையில் நலங்கும் முடிந்து திருமணத்திற்கு தயாராக இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். கிறு சிகப்பு நிற அரக்குப்பட்டு அணிந்து, நகைகளை அணிந்தாள். அவளது ஒப்பனைகளும் முடிய அனைவருமே அவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

இந்து அவளருகில் வந்து நெற்றி முறிக்க, சாவி கண்கலங்கினார். சிறியவர்களின் கேலிப் பேச்சில் இத்தனை நாட்களாக வராத வெட்கமும் அவளை ஆட்கொண்டது. இத்தனை வருடங்களாக இல்லாத ஒரு தயக்கம் இவளிடம் வந்தது.

 

ஆரவோ ஆண்மகனுக்குரிய அத்தனை அம்சங்களுடன் வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் கம்பீரமான தோற்றத்துடன் பெண்கள் மனதைக் கவரும் இளவரசனாக இருந்தான். முதலில் ஆரவை அழைத்துக் கொண்டு நண்பர்கள் , சில பெரியவர்களும் கோயிலை நோக்கிச் சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கிறுவுடன் வீட்டில் மற்றவர்களும் சேர்ந்துக் கோயிலுக்குச் சென்றனர்.

 

மணமகன் அக்கினிக்கு முன் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கூற, சிறிது நேரத்தில் கிறுவையும் அங்கே அழைத்து வந்தனர். அவள் அருகில் அமர்ந்த பின்னரே ஓரக் கண்ணால் பார்க்க, ஓர் அழகோவியம் அவன் அருகில் அமர்ந்து இருப்பது போல் தோன்றியது அவனுக்கு.

 

சிறிது நேரத்தில் ஐயர் தாலியை வழங்க அதை அவளுடைய சங்குக் கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு சாஸ்திர சம்பிரதாயப்படி முழுமையாக அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் ஆரவ் கண்ணா………

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19

காலை 6 மணிக்கு ஹொஸ்டலின் முன் கார் வந்து நின்றது. வார்டன் அறைக் கதவைத் தட்ட, ஒருவரும் விழிக்காமல் தூங்கினர்.   “மீரா” என்று பலமாகத் தட்ட அதில் விழித்த கிறு, அறைக் கதவை திறக்க வார்டன் கார் வந்திருப்பதாகக் கூறி

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1

அறிமுகம்   அவரை நோக்கி, அந்த சித்தர் கூறினார்.    “உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது. அவளுக்காக இவன் இரவாக மாறி அவளை

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10

நிலவு 10   “ஆரவ் இன்னும் நீ என்னை உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையா?” என்று கிறுஸ்திகா கேட்க,    அவன் அமைதியாக கண்கள் கலங்க அவளையே பார்த்தான்.    அவன் அமைதியைப் பார்த்தவளுக்கு ‘இதயத்தில் எவரோ ஈட்டியைப் பாய்ச்சியது போல’