Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 20

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 20

அடுத்த நாள் சூரியன் அழகாக வெளியே வந்தான். காலையில் அனைவரும் தத்தமது வேலைகளை முடித்து காலை உணவை உண்ண டைனிங் டேபளில் அமர்ந்தனர். அனைவரும் கதையளந்துக் கொண்டே சாப்பிட

 

“இன்றைக்கு எங்கேயும் போக இல்லையா அஸ்வின்?” என்று தாத்தா கேட்க,

 

“நம்ம தோப்பிற்கு போலாம்னு இருக்கோம்” என்றான்.

 

“இன்றைக்கு கோயிலுக்கு போயிட்டு வாங்க, நாளைக்கு தோப்புக்கு போங்க” என்று தாத்தா கூற

 

“சரி” என்றனர் அனைவரும்.

 

சிறியவர்கள் கோயிலுக்குச் செல்ல தயாராகினர். முதலில் வந்த கிறுஸ்தி மற்றவர்கள் வரும் வரை சோபாவில் அமர்ந்தாள்.

 

வெகு நேரமாகியும் வராததால் கடுப்பாகியவள், “பொம்பளை பிள்ளை நானே ரெடியாகிட்டேன், இவனுங்க என்ன பன்றானுங்க?” என்று பொரிந்து தள்ளினாள் கிறு.

 

அதே நேரம் தேவதையென தாவணி அணிந்து வந்தாள் மீரா.

 

“ஓஓஓ அதான் மெடமுக்கு இவளோ நேரம் தேவைப்பட்டுதா? அஸ்வின் பார்த்தான், பிலெட் ஆகிறுவான்” என்று கிறு காதருகில் கூற,

 

“சீ போடி” என்று வெட்கி முகம் சிவந்தாள் மீரா.

 

அஸ்வினும் அதே நிறத்தில் டீசர்ட் அணிந்து வர,

 

“கிறு எப்படி டா இரண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் பன்னிங்க? உண்மைய சொல்லுங்க இரண்டு பேரும் பேசி தானே டிரஸ் பன்னிங்க” என்று கேட்க,

 

அஸ்வின் “இல்லை டி இட் இஸ் அ கோ இன்சிடினட்” என்றான்.

 

“ம்ம்ம் கலக்குங்க இரண்டு பேரும் கலக்குங்க” என்றாள் கிறு.

 

மற்ற நால்வரும் வந்து சேர்ந்தனர். அங்கே வந்த சாவி மீராவைக் கண்டு நெட்டி முறித்தார்.

 

“யேன்டி, இவ பொண்ணு மாதிரி எவளோ அழகா தாவணி உடித்திருக்கா? நீயும் இருக்கியே” என்றார்.

 

கிறு “இந்து மா எனக்கு இந்த சுடி நல்லா இல்லையா?” என்று கேட்க,

 

“அழகா தான் டா இருக்கு, நீயும் தாவணி உடுத்தா தேவதை மாதிரி இருப்ப” என்றார்.

 

“இந்து மா அவ அழகா டிரஸ் பன்னா அவளை இரசிக்கிறதுக்கு அவளோட வருங்கால புருஷன் மிஸ்டர் அஸ்வின் இருக்காரு, எனக்கு யாரு இருக்கா? அதனால் தான் நான் டிரஸ் பன்ன இல்லை”என்றாள்.

 

“கிறு சான்சே இல்லை, என்னமா விளக்கம் கொடுக்குற” என்று கவின் கூற,

 

“நெஜமா டா நம்பு” என்று கூற

 

“உனக்கு தாவணி டிரஸ் பன்ன தெரியாததை சொல்லாமல் இந்த மாதிரி சொல்ற இதை நாங்க நம்பனும்” என்றார் சாவி.

 

‘ஐயோ இந்த அம்மா கண்டுபிடிச்சிரிச்சே’ என்று உள்ளுக்குள் நினைத்தவள்

 

“அம்மா உன்னால் நம்ப முடியல்லன்னா போ” என்றாள் கிறுஸ்தி.

 

“சரி காதுக்கு ஒரு ஜிமிக்கி சரி போடேன் டி” என்று கூற

 

“போ மா” என்று வெளியேறினாள் கிறு.

 

மற்றவர்கள் நடந்த சம்பாஷனைகளை கண்டு சிரித்து அவர்களும் வெளியேறினர். கோயிலை நெருங்கும் போது ஊர் தோழிகளும் அவர்களுடன் சேர்ந்தனர். மீரா, கிறு தோழிகள் அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டே கோயிலினுள் சென்றனர்.

 

“யேன்டி உங்க அண்ணனும் அவன் பிரன்சும் வராங்கன்னு சொல்லவே இல்லை” என ஒருவள் கேட்க,

 

“உனக்கு எதுக்கு நான் சொல்லனும்?” என்று கேட்டாள் கிறு.

 

“கொஞ்சம் அழாக வந்திருப்போம்” என்றாள் இன்னொருவள்.

 

கிறு அவர்களை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்.

 

“இதை விட உங்களால் மேகப் போட முடியுமாடி?” என்று கிறு கேட்க,

 

“இப்போ கொஞ்சமா தான் போட்டிருக்கோம்” என்றனர்.

 

“மீரா உன் வாழ்க்கையில் இவளுங்க விளையாட பாக்குறாளுங்க” என்றாள் கிறு.

 

மீரா அவர்களை முறைக்க,

 

“ஐயோ உன் ஆளை இல்லை டி மத்தவங்களை சொன்னோம்” என்றனர்.

 

“அடியேய் அவனுங்களுக்கு ஒல்ரெடி ஆளுங்க இருக்காங்க” என்றாள் மீரா.

 

“லோங் ஸ்லீவ் வச்சி இருக்குற பிளக் டீசர்ட்டுக்கும் இருக்கா?” என்று ஒருவள் கேட்க,

 

மீராவும், கிறுவும் யாரது? என்று பார்க்க அங்கு ஆரவ் வந்துக் கொண்டு இருந்தான்.

 

மீரா “எதுக்கு கேட்குற?” கூற,

 

“செமையா இருக்கான் டி, அப்பிடியே ஹீரோ மாதிரி” என்றாள் அவள்.

 

கிறு ஆரவைப் பார்த்து “இல்லையே நீ சொல்கிற அளவிற்கு அவன் கிட்ட எதுவும் இல்லையே” என்றாள்.

 

“உன் கண்ணுல பிரச்சினை இருக்கு, இப்படி ஒருத்தனை பார்த்து அழகு இல்லை என்று சொல்கிறாயே” என்றாள் இன்னொருவள்.

 

கிறு உதட்டைச் சுழிக்க, “உன் அண்ணனுக்கு ஆள் செட்டாச்சா?” என்று ஒருவள் மீராவைப் பார்த்து கேட்டாள்.

 

கிறு வினோவை அழைத்தான். “வினோ உனக்கு ஆள் இருக்காங்களான்னு கேட்குறாளுங்க” என்றாள்.

 

“படிக்கிற வயசில் உங்களுக்கு இது தேவையா? ஓடுங்கடி” என்று அவர்களை விரட்டினான் வினோ.

 

கிறு “உனக்கு யாரும் செட் ஆகல்லை என்று  சொல்கிறதுக்கு அவமானப்பட்டு விரட்டுற” என்க,

 

“ரொம்ப டேமேஜ் பன்னாத டி எனக்குன்னு பொறந்தவ என்னை தேடி வருவா” என்று அங்கிருந்து சென்றான் வினோ. கிறு புன்னகைத்து அங்கிருந்து சென்றாள்.

 

மீராவும் அஸ்வினும் அருகருகே நின்று சாமி கும்பிட்டனர்.

 

மற்றவர்கள் எதிர்ப்புறம் நின்று சாமி கும்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

 

“இப்போ என்னடி பன்னலாம்?” என்று மீரா கேட்க,

 

மாதேஷ் “ஏதாவது பேய் படம் பார்க்கலாம்” என்றான்.

 

அஸ்வின் “இட் மூவி பார்க்கலாம்” என்றான்.

 

“ஏ சூப்பர், அந்த படமும் ரொம்ப நல்லா இருந்தது” என்று கிறு கூற, இப்போது அவளை முறைப்பது மீராவின் முறையானது.

 

கவின் “உனக்கு எப்படி தெரியும்? அந்த படம் நல்லா இருக்குன்னு, நாங்க தானே வினோ கிட்ட நாலு நாளைக்கு முன்னாடி சிடி வாங்க சொன்னோம்” என்றான் புருவங்களை சுருக்கி,

 

‘ஐயோ கேள்வி வேற கேட்குறானே, கிறு சமாளி’ என்று தனக்கே கூறி,

 

“பிரன்ஸ் சொன்னாங்க டா” என்றாள்.

 

அவளை மற்றவர்கள் நம்பாமல் ஒரு பார்வைப் பார்க்க,

 

அஸ்வின் “வினோ போய் சிடியை எடுத்துட்டு வா” என்றான்.

 

‘ஐயோ சிடி அவளுங்க கிட்ட இருக்கே, இப்போ எப்படி கேட்கிறது?’ என்று மனதில் நினைத்து கிறுஸ்தியைப் பார்க்க, அவள் கண்களால் மேலே இருப்பதாகக் கூறினாள். இதை ஆரவ் கவனித்தான்.

 

“நான் போய் எடுத்துட்டு வரேன்”  என்று  வினோ மேலே செல்ல, அவன் பின்னே கிறுவும் செல்ல,

 

“நீ எங்கே போற கிறுஸ்தி?” என்றான் ஆரவ்.

 

‘இவன் எதுக்கு நம்ம கிட்ட கேட்குறான்’ நினைத்தவள்

 

“வினோவிற்கு உதவி செய்ய தான்” என்றாள்.

 

“சிடி கிலோ கணக்கு வெயிட் இல்லையே” என்றான் ஆரவ்.

 

“அதானே நீ எதுக்கு போற? நீ இங்கே வந்து உட்காரு” என்றான் மாதேஷ். மீராவிற்கு அவள் கண்களால் காட்டி விட்டு சோபாவில் அமர்ந்தாள்.

 

யாரும் அறியாமல் மீரா வெளியே சென்று, ஏணியில் ஏறி அறையை அடைந்து சிடியை வினோவிடம் வழங்கி விட்டு அவ்வாறே திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தாள். இதை ஆரவ், அஸ்வின் இருவரும் நன்றாகவே கவனித்தனர்.

 

வினோ கீழே வந்து, சி.டி ஐ அஸ்வினிடம் வழங்கினான்.

 

“செம்ம கேடிங்கடி நீங்க” என்று அஸ்வின் மூவரையும் பார்த்து கூற மூவரும் விழித்தனர்.

 

“என்ன?” என்று மீரா தடுமாறிக் கேட்க,

 

“உங்க கிட்ட தான் சிடி இருக்குன்னு ஆரவ் என் கிட்ட எப்பவோ signal கொடுத்தான்” என்றான் அஸ்வின்.

 

கிறு “என்ன சொல்ற புரியல” என்று கூற,

 

ஆரவ் “சிடியைப் பற்றி பேசின உடனே உங்க மூன்று பேரோட முகத்தையும் பார்த்தேன், அஸ்வின் சிடியை எடுத்துட்டு வர சொல்லும் போது, வினோ உன்னை பார்த்தான். நீ கண்ணாலேயே சிடி மேலே இருக்குன்னு சொன்ன” என்க மூவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை.

 

ஆரவ்,”நீங்க இரண்டு பேரும் இட் படம் பார்த்ததால் தான் ஒழுங்கா தூங்கி இருக்கமாட்டிங்க, கரெக்டா?” என்க,

 

“ஆமா” என்றனர் கிறு மற்றும் மீரா.

 

“பாவிகளா, இதை தான் ஹொஸ்டல்ல போய் பன்றதா? இரு அம்மா கிட்ட சொல்றேன்” என்று அஸ்வின் கூற,

 

மீரா பயந்தாலும், கிறு அமைதியாக இருந்தாள்.

 

‘ஏதோ பிளேன் பன்னிட்டா’ என்று தன்னுள் முனுமுனுத்தான் வினோ.

 

அஸ்வின், “என்னடி பயம் இல்லாமல் இருக்க?” என்று கேட்க,

 

“நான் எதுக்கு அஸ்வின் பயப்படனும்? மீரா இங்க பாரு அஸ்வின் கூட ஒரு பொண்ணு கட்டிபுடிச்சிட்டு இருக்கா அது யாருன்னு கேளு” என்றாள் ஒரு மொபைலை அவளிடம் காட்டி.

 

“சும்மா பொய் சொல்லாத, வேறு யாரோட மொபோலையோ போடோ எடிட் பன்னிட்டு என் மேலே பொய் பழி  கூறாத கிறு” என்றான் திமிராக.

 

‘மவனே மாட்ன டா’ என்று மனதுள் கூறியவள்,

 

“அஸ்வின் அது வேறு ஒருத்தரோட மொபைல் இல்லை உன்னோடது தான்” என்றாள் கிறு.

 

ஒழுங்காக மொபைலை பார்த்தவன்

“இதை எப்போடி எடுத்த?” என்க,

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்” என்றாள் கண்ணடித்தபடி.

 

“மீரா எனனடி பேசாமல் இருக்க?” என்று அவளை உசுப்பேற்றி விட, மொபைலை அவனிடம் வீசி விட்டு அழுதுக் கொண்டே தனது அறைக்கு ஓடினாள் மீரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16

“பாருடா மத்தவங்க தூங்குறாங்களே, டிஸ்டபனஸ் இல்லாமல்  இருக்கனுமே, அந்த எண்ணம் கொஞ்சமாவது அவளுங்களுக்கு இருக்கா?” என்று பொரிந்தான் கவின்.   “வாடா போய் பாக்கலாம் எதுக்கு சிரிக்கிறாளுங்க?” என்று அனைவரும் அடுத்த அறையை நோக்கிச் சென்றனர் நால்வரும்.   அறைக்கதவை திறந்த

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49

நிலவு 49   “இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே விறுவிறுப்பா மெச் ஆரம்பமாக போகுது. இதுக்காக இங்கே உள்ள எல்லோருமே ஆர்வமாக இருக்காங்க, எந்த கம்பனி செம்பியன்ஷிப் எடுக்க போகிறாங்கன்னு பார்க்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. யேன்னா இங்க ஸ்டேட் லெவல்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10

நிலவு 10   “ஆரவ் இன்னும் நீ என்னை உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையா?” என்று கிறுஸ்திகா கேட்க,    அவன் அமைதியாக கண்கள் கலங்க அவளையே பார்த்தான்.    அவன் அமைதியைப் பார்த்தவளுக்கு ‘இதயத்தில் எவரோ ஈட்டியைப் பாய்ச்சியது போல’