Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 17

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 17

கிறு அவளறியாமல் ஆரவின் கையில் சாய்ந்து உறங்க, அதைப் பார்த்த ஆரவின் இதழ்கள் விரிந்தன. அவள் உயரித்திற்கு ஏற்றவாறு அவன் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் கிறுவின் கண்ணா. அழகான விடியலாக அனைவருக்கும் அன்றைய விடியல் இருந்தது. அஸ்வின் விழித்து தன் தோளில் உறங்கும் தன்னவளை தன் மடியில் கிடத்தி அவளை இரசித்தான். மற்றவர்கள் எழுவதைக் பார்த்து தன் கண்களை மூடிக் கொண்டான். கவின், ஜீவி இருவரும் எழுந்து  தர்ஷூவிடம் கூறி தமது அறைக்குச் சென்றனர்.

 

தர்ஷூ, மாதேஷ் எழுந்து ஆரவ், கிறுவை தேடி பெல்கனிக்கு வந்தனர்.

 

தர்ஷூ மாதேஷிடம், “கிறு அவ பக்கத்துல கூட யாரையுமே விட மாட்டா இப்போ ஆரவோட கைவளைவுக்குள்ள அவன் நெஞ்சில சாய்ந்து தூங்குறா” என்றாள் சிரித்துக் கொண்டே.

 

“ஆரவ், கிறு இரண்டு பேரோட மனசுலையும் மற்றவங்க இருக்காங்க, பட் வாயால் அதை சொல்ல மாட்டேன்றாங்க. எப்போ தான் எல்லாம் சரியாகுமோ?” என்று பெரு மூச்சு விட்டான் மாதேஷ்.

 

பின் உறங்குவது போல் நடிக்கும் அஸ்வினிடம் இருவரும் வந்தனர்.

 

“போதும் டா நடிச்சது, தூங்குறவன் எவனும் அரை கண்ணை திறக்க மாட்டான்” என்றான் மாதேஷ்.

 

“ஈஈஈ” என அஸ்வின் இளிக்க,

 

“இங்க யாருமே போடோஸ் எடுக்க இல்லை, சோ கொஞ்சம் வாயை மூடிக்க” என்றாள் தர்ஷூ.

 

“போடி உங்க இரண்டு பேருக்குமே என் பொன்டாட்டி என் மடியில் தூங்குறது பொறாமை அதான் இப்படி பேசுறிங்க” என்றான் அஸ்வின்.

 

“யாருக்கு டா பொறாமை, நான் எதுக்கு பொறாமைபடனும்னு சொல்ல என்னோட பேபி என் பக்கத்துல இருக்கா நானும் அவளை மடியில படுக்க வச்சிப்பேன், யேன் இப்படி தூக்குவேன்” என்று அவளை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான் மாதேஷ், அவள் திமிறுவதையும் பொருட்படுத்தாமல்.

 

சூரிய ஒளி கண்ணில் பட மெதுவாக கண்களைத் திறந்தான் ஆரவ். தன் நெஞ்சத்தில் உறங்கும் கிறுவைப் பார்த்தான். குழந்தை முகம், உறக்கத்திலும் புன்னகையுடன் இருக்கும் உதடுகள், கன்னத்தில் உள்ள மச்சம் என அவளை இரசிக்க அவள் முகத்தை இரசிப்பதற்காக ஆதவனும் எட்டிப் பார்க்க மெல்ல தூக்கத்தில் இருந்து விழித்து கண்களை திறந்தாள் கிறுஸ்திகா. என்றுமில்லாத நிம்மதியான உறக்கத்தில் இருந்து எழுந்த கிறு முதலில் பார்த்தது தன்னைக் காதலுடன் பார்க்கும் தன்னவனையே.

 

அவன் பார்வை வீச்சை தாங்க முடியாதவள் எழ, அது முடியாமல் போனது. அப்போதே கவனித்தாள் தான் ஆரவின் கைவளைவில் இருப்பதை, அவள் தன்னை உணர்ந்து நெளிய, அப்போதே தன்னிலை அடைந்தான் ஆரவ். எதுவும் பேசாமல் வேகமாக தனது அறையை அடைந்தான்.

 

‘இவனுக்கு என்னாச்சு?’ என்று அவள் சிந்தித்தவாறே உள் நுழைய மீராவை இரசிக்கும் அஸ்வினைக் கண்டாள்.

 

“டேய் அஸ்வின்” என்று கிறு அவனை உழுக்கவே அவன் நிஜ உலகிற்கு வந்தான்.

 

“என்னடி கத்துற?” என்று அஸ்வின் கேட்க,

 

“நீ என்ன டா கண்ணை திறந்துட்டே தூங்குற?” என்க,

 

“கடவுளே என் தங்கச்சி இன்னமும் சின்ன பிள்ளையா இருக்கா, ஆரவிற்கு இவளை சமாளிக்குறதுக்கு ஸ்பெஷல்  ஆற்றலை கொடு” என்று கடவுளுக்கு அப்ளிகேஷன் போட்டான் அஸ்வின்.

 

“எருமை திரும்ப தூங்குறியா?” என்று அவள் கேட்க,

 

“ஏன் கிறு என்னை பார்த்தால் கண்ணை திறந்துட்டு தூங்குறது போல இருக்கா?” என்று அவன் பாவமாக கேட்க,

 

“ஆமா” என்றாள் சாதரணமாக.

 

“ஆரவ் உன் பாடு திண்டாட்டம் தான்” என்றான் அவன் உயிர் தோழன் அஸ்வின்.

 

“புரியிர மாதிரி பேசேன்டா வானரமே” என்று கிறு கூற,

 

“உனக்கு இப்போ நான் என்ன சொன்னாலும் புரியாது டி, நான் மீரா எழற வரைக்கும் வெய்ட் பன்றேன்” என்றான்.

 

“அப்போ இந்த நாள் பூரா இதே இடத்துல தான் இருக்கனும்” என்றாள்.

 

“என்ன டி சொல்ற?” என்று அவன் கேட்க,

 

“இவ சரியான கும்பகர்ணி டா எழ மாட்டா” என்றாள்.

 

“உன்னை விடவா?” என்று அவன் கேட்க, அவள் முறைத்தாள்.

 

“சரி அதை விடு இப்போ என்னடி பன்றது?” என்று அஸ்வின் கேட்க,

 

“ஒரே ஒரு வழி தான் இருக்கு” என்று அருகில் உள்ள தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் வீசினாள் கிறு.

 

திடுக்கிட்டு எழுந்த மீரா, “கிருத்தி” என்று கத்தி அவளை துரத்தினாள். இருவரும் வீடு தோட்டம் என்று அனைத்து இடங்களையும் சுற்றி ஓடினர்.

 

“காலங்காத்தாலேயே ஆரம்பிச்சிட்டாளுங்க டா” என்று கவின் கூற, மாதேஷும் சிரித்தான். பின் இருவரும் சிரித்துப் பேசி அறைக்குச் சென்றனர்.

 

“பார்த்தியாடா இவளோ நேரமா துரத்திட்டு, இப்போ சிரிச்சிட்டு போறாளுங்க, இவங்க விஷயத்தில் மட்டும் எப்பவும் தலை போடக் கூடாது. போட்டோம் நோஸ் கட் ஆகுறது நமளோடது தான்” என்றான் அஸ்வின். அதைப் பார்த்து ஆரவும் சிரித்தான்.

 

பின் பெண்கள் அனைவரும் கீழிறங்கி வந்தனர். பெரியவர்களுக்கு இவர்கள் சென்று உதவினர்.

 

அஸ்வின், “அம்மா குலாப் ஜாமுன் செய்றிங்களா?” என்று இந்துவிடம் கேட்க,

 

“சொரி பா இன்றைக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்திடா” என்றார் கவலையாக.

 

“இந்து மா நான் செய்றேன்” என்றாள் கிறு.

 

“ஏன் டி என்னை ஹொஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகவா?” என்று கேட்க,

 

“மகனே நான் செய்றதுல கையை வச்ச கொன்னுடுவேன்” என்று கிறு குலாப் ஜாமுன் செய்ய ஆரம்பித்தாள்.

 

மீரா அவளுக்கு உதவி செய்ய, பிரேக் பஸ்டிற்கு மேசையில் குலாப் ஜாமுன் தயாராகி இருந்தது.

 

அனைவரும் காலை உணவை எடுத்து, குலாப் ஜாமுனை சுவைக்க ஆரம்பித்தார்கள். முதலில் அரவிந் தன் பெண்ணிற்காக அந்த விஷப் பரீட்சையை எழுத தயாரானார். முதலில் சுவைத்தவர் மெய் மறந்து அதை சுவைக்க,

 

“குட்டிமா சூப்பரா இருக்கு டா” என்று மேலும் மேலும் சாப்பிட அவரை பார்த்து அனைவரும் சாப்பிட்டு அவளை பாராட்ட அஸ்வினிற்கு மட்டும் குலாப் ஜாமுன் வழங்கப்படவில்லை. அவன் சுவையை பார்க்க, அவன் மனம் துடித்தது.

 

இதைப் பார்த்த கிறு “டேய் இப்படி பாக்காதடா, எல்லோருக்கும் வயிறு வலிக்க போகுது” என்றாள்.

 

கிறு மீராவிற்கு கண் ஜாடை காட்ட, அவள் “இப்படி பார்க்காத பிடி இதை சாப்பிடு” என்று அவனுக்கும் குலாப் ஜாமுனை வழங்கினாள்.

 

அவனும் சுவைத்து, “கிறு மா சான்ஸே இல்லை, ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு டி” என்றான்.

 

“தேங்ஸ்” என்று எழுந்து கைகளை கழுவச் சென்றாள்.

 

“கிறு எப்படி இதெல்லாம் உனக்கு பன்ன தெரியும்?” என்று மீரா கேட்க,

 

அவள் சிரித்து “பெங்களூரில் நான் தனியா இருக்கும் போது, எனக்கு சமைச்சு தர யாரும் இருக்க இல்லை அதனால் எனக்கு சாப்பிட தேவையானதை நானே கத்துக்குட்டேன். நல்லாவே நான் சமைப்பேன்” என்றாள்.

 

இதைக் கேட்டு இந்துவும், சாவியும் கண்ணீர் வடிக்க, ராம் அரவிந் அவர்களை சமாதானப்படுத்தினர். மற்றவர்கள் அமைதியாக இருக்க, மீரா கிறுவை அணைத்து கண் கலங்கினாள். அவளும் மீராவை அணைத்துக் கொண்டாள். கிறுவை மாத்திரம் பார்த்த ஆரவிற்கு அவளது வலியை அவள் கண்களைக் கொண்டே புரிந்து கொண்டான். அவனுக்கும் அப்போதே அவன் மனதில் வலி ஒன்று உருவானது. அஸ்வினும் கண் கலங்கினான், தன் வீட்டு இளவரசி கஷ்டப்பட்டதை நினைத்து.

 

விஜயசோதிலிங்கம் சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு,

 

“இன்றைக்கு evening போய் எல்லோருக்கும் தேவையான டிரஸ்சை எடுத்துட்டு வருவோம் எல்லாரும் ரெடியாகி இருங்க” என்று கூறி நகர

 

ஆரவும், கிறுவும் ஒருவரை ஒருவர் பாரத்துக் கொண்டே பழைய நிகழ்வுகளில் மூழ்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28

நிலவு 28   அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அது கோயிலின் மகா பூஜைக்கு முன்னைய தினமாகும். அனைவரும் காலை உணவை உண்ட பிறகு, சோபாவில் அமர்ந்து இருக்க,   சாவி, “இன்றைக்கு கோயிலுக்கு போகனும், சீக்கிரமா ரெடியாகுங்க” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15

ஆரவின் கதையைக் கேட்டவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கிறு கூறமுடியா ஒரு வலியை உணர்ந்தாள்.   ராம், “அவன் அப்பா பேர் என்ன?” என்க,   “தேவராஜ்” என்றான் அஸ்வின்.   “அவங்க கம்பனியோட பெயர்” என்று அரவிந் கேட்க  

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 55

நிலவு 55   “என்ன ஆச்சு கண்ணம்மா?” என்று ஆரவ் கேட்க,    “கால் வலிக்குது டா” என்றாள்.   அவள் கால்களைப் பார்க்க வீங்கி இருந்தது.   அவள் முன்னே இருந்த சோபாவில் அமர்ந்தவன், அவள் கால்களை தன் மடியின்