Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 11

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 11

நிலவு 11

 

“ஜீவிதா இன்றைக்கு கோயிலில் ஒரு முக்கியமான பூஜை இருக்கு, நீயும் கவினும் கலந்துக்கங்க” என்று தர்ஷூவின் புறம் திரும்பிய சாவித்ரி  

 

“தர்ஷூ நீயும் தான் மா, உன் புருஷனை கூட்டிக்கிட்டு வா” என்றார். 

 

“இப்போவே கிளம்புங்க” என்றார் இந்து. 

 

அவர்கள் இருவரும் கோயிலுக்குச் செல்ல தயாராகி வந்தனர். இருவருமே தேவதை போல் இருக்க மாதேஷ், கவினின் நிலை தான் திண்டாட்டமாக இருந்தது. 

 

அவர்களுடன் ராம், அரவிந், மீரா சென்றனர். அஸ்வின் முக்கியமான வேலை டவுனிற்குச் செல்ல  இருப்பதாகவும், வினோ, ஆரவ் தொழில் வேலைகள் சில இருப்பதாகவும் கூறி மறுத்தனர்.

 

கிறுவிடம் எவரும் கேட்கவில்லை, கேட்டாலும் அவளது பதில் முடியாது என்பதாகத் தான் இருக்கும் என்று அறிந்தனர். 

 

அஸ்வினிடம் தனக்கும் சில பொருட்கள் வாங்க இருப்பதாகக் கூறி அவனுடன் சென்றாள் கிறு. இருவரும் காரில் அமைதியாகச் சென்றனர். கிறுவும், அஸ்வினும் தத்தமது வேலைகளை முடித்து வந்தனர். அவன் ஒரு பூங்காவின் அருகில் காரை நிறுத்தி, அதற்குள் அவளை அழைத்துச் சென்றாள். 

 

“என்ன அஸ்வின் இங்கே எதுக்கு என்னை அழைச்சிட்டு வந்தாய்?” என்று கேட்க, 

 

“உன் கிட்ட பேசனும்” என்றான்.

 

“சொல்லு” என்று இவள் அமைதியாக, 

 

“நீ ஆரவைப் பற்றி என்ன முடிவு எடுத்திருக்க?” என்று அஸ்வின் கேட்க, 

 

“நீ மீராவைப் பற்றி என்ன முடிவு எடுத்திருக்க?” என்றாள். 

 

“என்னிடமே திருப்பி கேள்வி கேட்குறாய்? நான் கேட்டதற்கு முதலில் பதில் சொல்லு” என்றான். 

 

“முதலில் நீ சொல்லு நான் எடுத்திருக்கின்ற முடிவைப் பற்றி நான் சொல்கிறேன்” என்றாள் உறுதியாக. 

 

“நான் என் மீருவோ யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்” என்றான். 

 

“மீரா பாவம் டா நேற்று இராத்திரி ரொம்ப அழுதா, அவ மனசு ரொம்ப காயபட்டு இருக்கு, அவ உன்னை மன்னிப்பான்னு நீ நினைக்குறியா?” என்று கிறு கேட்க, 

 

“நிச்சயமாக கிடையாது. என்னை அவ ஆழமா காதலிச்சிருக்கா, இப்போ காதலிக்கிறாளா? அப்படின்னா தெரியாது” என்றான் அஸ்வின்.

 

கிறு சிரித்து “அவ இன்னும் உன்னை மட்டும் தான் காதலிக்குறா, என்ன உன் மேல கோபமா இருக்கா, அந்த கோபம் ஐந்து வருஷமா உன் மேலே இருக்கு, இப்போதைக்கு குறையுமான்னு கேட்டால் தெரியாது” என்றாள்.

 

அவளோட கோபம் கூட நியாயம் தான். அன்று நான் பேசிருந்தேன் என்றால் அவளை இங்கே விட்டுட்டு போயிருப்பாங்க, கொஞ்ச நாள் போனதுக்கு அப்பொறமா மாமாவை சமாதனபடுத்த இருந்தது. ஆரவ் கூட பேசி, எல்லாவற்றையுமே அவனுக்கு புரிய வச்சி இருக்கலாம். என் மேலே தப்பு இருக்கு, இதனால் அவ ரொம்ப காயபட்டிருக்கா, அவளோட கோவத்தை குறைக்க வழி தேடனும், அவ எந்த தண்டனை எனக்கு கொடுத்தாலும் ஏத்துக்குவேன், அப்படியே விட்டுடவும் கூடாது, ஓவரா போயிட்டானா, அதனால் அவளை விட்டு புடிக்கனும் பட் என் கண்பார்வையில் தான் அவ எப்பவும் இருக்கனும்” என்றான் அஸ்வின் தீவிரக் குரலில். 

 

“டேய் என்னடா சொல்ல வர?” என்று கிறுஸ்திகா புரியாமல் கேட்க, 

 

“உனக்கு புரியாது, அவ என் கூடவே இருக்கிறதுக்கு ஒரு ஐடியா சொல்லு” என்றான்.

 

அவள் சிந்தித்து, ஒரு யோசணை கூற அவனும் அதை ஏற்றுக் கொண்டான். 

 

“இந்த ஐடியா சூப்பர், யாருக்கும் நம்ம மேலே டவுட் வராது” என்றான். 

 

“அதற்கு தான் கிறு வேனுங்குறது” என்றாள் கெத்தாக. 

 

“சரி இப்போ நீ சொல்லு, ஆரவ் பற்றி என்ன முடிவு எடுத்திருக்க?” என்று அஸ்வின் கேட்க, 

 

“அவன் என் புருஷன் தான், அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றாள். 

 

“நீ அவன் கூட பேசினியா இதை பற்றி?” என்று அஸ்வின் கேட்க, 

 

“எனக்கு பயமா இருக்கு அண்ணா, அவன் அந்த சம்பவத்தை மறந்துடுன்னு சொன்னால் என்னால தாங்க முடியாது, ஆனாலும் தைரியமா நீ இன்னும் என்னை மனைவியா ஏத்துக்க இல்லையா என்று கேட்டேன், அவன் அமைதியா இருந்தான் அண்ணா, அப்போ என்னால் தாங்க முடியல்லை. ஆனால் அவன் தான் அவன் மட்டும் தான் என் புருஷன் அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்க வீட்டைப் பொருத்த வரைக்கும் ஆரவ் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதில் எல்லோருமே உறுதியா இருக்காங்க. என்னால் நிச்சயமாக இன்னொருத்தனை புருஷனா ஏத்துக்க முடியாது” என்றாள் அழுதபடி.

 

“நீ நிர்பந்தத்தாலையா அவனை உன் புருஷனா ஏத்துக்குற?” என்று அஸ்வின் கவலையாய் கேட்க, 

 

“இல்லை அண்ணா அவன் என் உயிரோட கலந்து இருக்கான் அண்ணா, அப்படி இருக்கும் போது அது எப்படி நிரபந்தம் ஆகும்?” என்றாள் கிறுஸ்திகா.

 

“என்ன சொல்கிறாய் கிறு? என்று அஸ்வின் கேட்க, 

 

“ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே, அவனை பார்த்தப்போ எனக்குள்ள ஏதோ வித்தியாசமா நான் பீல் பன்னேன், அவன் எனக்கு முக்கியமான நேரத்துல உதவி செஞ்சப்போ எனக்கும் அவனுக்கும் இடையில் ஏதோ ஒரு உறவு இருக்குன்னு என் மனசு சொல்லிச்சு, அவன் என் பக்கத்துல இருந்தப்போ நான் பாதுகாப்பை உணர்ந்தேன், என் கன்னத்தில் அவன் அறைஞ்சப்போ எனக்கு அவன் மேல கோபமே வர இல்லை. அப்போ என் மேல இருக்கிற உரிமையில் அவன் அடிச்சான்னு என் மனசு சொல்லிச்சு. அந்த உரிமை அண்ணனா? என்று கேட்டால்  பதில் “இல்லை” , நான் அவனை கடைசியா பார்த்த அந்த நாள் தான் அவன் எனக்கு புருஷன் என்று புரிஞ்சுகிட்டேன், அந்த உரிமை புருஷன் அப்படிங்குற உரிமை என்று புரிந்தது” என்றாள்.

 

“அதே நேரம் தான் நான் புரிஞ்சிகிட்டது, அவன் மேலே எனக்கு ஈர்ப்பு இருந்ததால் தான் அவனுக்கு நான் ஒன்னுமே அன்றைக்கு சொல்ல இல்லை” என்றாள்.

 

“அப்போ நீ ஆரவை….” என்று அஸ்வின் கேட்க, 

 

“உயிருக்கு உயிரா நேசிக்கிறேன், அவன் என் புருஷனா மாறினதுக்கு அப்பொறம் தான் நான் காதலிக்கவே ஆரம்பிச்சேன், அண்ணா நான் உனக்கு துரோகம் பன்ன இல்லை அண்ணா, திரும்பவும் சொல்றேன் அவன் என் புருஷனானதற்கு அப்பொறம் தான் நான் அவனை காதலிச்சேன், நம்பு அஸ்வின்” என்றாள் தவித்துக் கொண்டே. 

 

“குட்டிமா ரிலெக்ஸ், உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும், நீ எனக்கு துரோகம் எதுவும் பன்ன இல்லை.  மனசை போட்டு குழப்பிக்காத” என்றான்.

 

“அடுத்ததா என்ன செய்ய போகிறாய்?” என்று அஸ்வின் கேட்க, 

 

“அண்ணா ஆரவ் மனசுல நிறைய விஷயங்களை போட்டு தன்னையே கஷ்டபடுத்திட்டு இருக்கான், அவன் கிடைக்குற அன்பை எதுக்கு வேனாங்குறான்னு எனக்கு புரிய இல்லை. முதலில் அவனுக்கு அவனை பற்றி புரிய வைக்கனும், அவனுக்கு உண்மையான அன்பை காட்டனும், தனியா அவன் வாழுகிறதை எப்படியாவது நிறுத்தனும், அப்பொறமா தான் அவன் காதலை அவனை உணர வைக்கனும், இது எல்லாவற்றையுமே என்னோட காதலால மட்டும் தான் பன்ன முடியும் அது எப்படி என்று எனக்கு தெரியும்” என்றாள்.

 

“என்னடி சொல்ற? என்ன பன்ன போற?” என்று அஸ்வின் ஒரு வித பரிதவிப்போடு கேட்க, 

 

“ஆரவோட வளர்ச்சியைப் பற்றி நீ என்ன நினைக்குற?” என்று கேட்டாள்.கிறுஸ்திகா.

 

“அவன் கஷ்டப்பட்டு வெறியா உழைச்சு இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கான்” என்றான். 

 

“இல்லை டா அவன் தன்னை கவனிக்காமல் தன்னோட தனிமையை போக்குறதுக்காக தான் இவளோ வெறியா உழைக்கிறான்” என்றாள். 

 

“என்ன சொல்ற?” என்று அஸ்வின் பதட்டமாகக் கேட்க, 

 

“உன்னோட பிரன்டைப் பற்றி எந்த அளவுக்கு உனக்கு தெரியும் அப்படின்னு எனக்கு தெரியாது. என் புருஷனா அவனை பற்றி எனக்கு ஓரளவு தெரியும், அவன் தன்னோட பீலிங்ஸ யார் கிட்டவும் காட்றது இல்லை. நீ ஆரவ் அழுது பார்த்து இருக்கியா? என்று கேட்டாள். 

 

“இல்லை” என்றான். 

 

“அவன் நேற்று நைட் அழுதான்” என்றாள்.

 

“அவன் என்னிடம் தான் அவனோட வீக்னசையும் காட்றான், அதை அவனால ஏத்துக்கவும் முடியல்லை, ஏன்னா அவன் இன்னும் என்னை மனைவியா ஏத்துக்க இல்லை, அவனால் என்னை காதலிக்கவும் முடியல்லை, பட் நான் அவன் கண்ணில் எனக்கான காதலை பார்த்து இருக்கேன், இதை போல் நிறைய விஷயம் இருக்கு அண்ணா, அவனை சரி பன்ன என்னோட அன்பாலையும், காதலாலையும் தான் முடியும். அதற்கு நான் அவன் கூட 24 மணி நேரமும் பக்கத்துல தான் இருக்கனும், அது நடக்காத காரியம் எங்க வீட்ல அவன் எப்படி இருக்க போறான்?” என்றாள். 

 

“நீ இன்னொரு தடவை அவன் கிட்ட மனசு விட்டு பேசு” என்றான்.

 

“நீ வேற, இதை பற்றி நானா அவன் கிட்ட பேசினேன்னா என்னை செருப்பால அடின்னு சொல்லி இருக்கேன்” என்றாள் கிறு. 

 

“யேன்டி உனக்கு என்ன லூசா? இருக்கிற ஒரு வாய்ப்பையும் தவறை விட்டுட்டாய்” என்று கோபப்பட்டான். 

 

“உன்னை விட என் புருஷனைப் பற்றி எனக்கு தெரியும், அவனா இதை பற்றி என் கிட்ட பேசுவான் பாரு” என்றாள். 

 

“எந்த நம்பிக்கையில் சொல்கிறாய்?” என்று அஸ்வின் கேட்க, 

 

“எல்லாம் உன் பிரன்டு மேலே இருக்கிற நம்பிக்கையில் தான்” என்றாள். 

 

“அஸ்வின், உனக்கு ஆரவ்வைப் பற்றி தெரிந்த விஷயங்களை சொல்லு” என்றாள் கிறு.

 

அவன் ஆரவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூற ஆரம்பிக்கும் போது, அவன் மொபைல் அலறியது.

 

“என்னடா பன்ற மூனு மணி நேரமா அண்ணனும் தங்கையும் சேர்ந்து?” என்று இந்து கேட்க, 

 

“மூன்று மணி நேரமா?” என அதிர்ந்து, 

 

“வருகிறோம் மா” என்று அழைப்பைத் துண்டித்து காரை வீட்டை நோக்கிச் செலுத்தினான் அஸ்வின். 

 

“ரொம்ப நாளைக்கு அப்பொறமா மனசு விட்டு பேசினதால் ரிலெக்ஸா பீல் பன்றேன்” என்றான் அஸ்வின். 

 

“நானும் தான் டா தேங்க்ஸ் என்ட் லவ் யூ சொ மச் டா அண்ணா” என்று கிறு கூற, 

 

“லவ் யூ டூ மை டியர் பிரின்சர்ஸ்” என்றான் அஸ்வின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2

நிலவு 2   வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம்.    ‘என் மகன் வளர்ந்து விட்டானா? எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா? நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறுக்காக இருக்கிறேனா? ஒரு வேளை வினோ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 38யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 38

நிலவு 38   அன்றிரவு ஆரவிற்கு கிறுவே ஊட்டி விட்டாள். இருவரும் சிரித்து பேசி உண்டார்கள். கிறு அனைத்து வேலைகளையும் முடித்து உறங்க அறைக்கு வரும் போது, ஆரவ் லெப்டொப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்தான். இரவு உடைக்கு மாறி வரும்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 21யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 21

“மீரா என்னடி பேசாம இருக்க?” என்று அவளை உசுப்பேற்றி விட, மொபைலை அவனிடம் வீசி விட்டு அழுதுக் கொண்டே தனது அறைக்கு ஓடினாள் மீரா.   கவின், “எதுக்கு கிறு இப்படி பன்ன?” என்று கேட்க,   “நான் என்ன பன்னேன்?”