Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32

பனி 32

“அப்பா நான் உங்க பொண்ணு பா” என்றாள் கிருஷி அழுகையுடன்.

 

“நீ என் பொண்ணே இல்லை. நான் பெத்த பொண்ணு இருபத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டா” என்று சென்றுவிட்டார்.

 

கிருஷி இதைக்கேட்டு அதே இடத்தில் உறைந்தாள். மற்றவர்கள் வெளியேற கிருஷியை நேசன் நெருங்கினான்.

 

கிருஷி அவன் நெருங்கி வருவதை உணரந்தவள் அவனைத் தள்ளி விட்டு ஓட முயற்சிக்க அவனும் ஓடினான்.

 

அங்கிருந்து அவள் வெளியே செல்ல எத்தனிக்க, அவளைக் கைப்பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான்.

 

“விடு டா என்னை” என்று அவள் திமிற அரக்கனைப் போல் சிரித்துக் கொண்டே அவளை உள்ளே இழுத்தான்.

 

கிருஷியின் மூளையோ ‘தான் லக்ஷனிற்கு மட்டுமே சொந்தமானவள், இவனிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும்’ என்று யோசிக்க,

 

அவள் மனமோ ‘ஆதி பிளீஸ் டா எனக்கு பயமா இருக்கு டா. என்னை காப்பாத்துடா, காப்பாத்துடா’ என்று கதறியது.

 

ஆதிக்கு அது கேட்டதோ என்னவோ, அவன் மனம் கிருஷிக்கு ஆபத்து என்று சொல்லிக் கொண்டே இருந்தது.

 

“மச்சான் என்ன ஆச்சுடா?” என்று விகி கேட்க,

 

“இல்லை டா, நவி” என்று அவன் கூற வரும் முன்,

 

“சேர் இன்னும் ஐந்து மீற்றரில் ஸ்பொட் இருக்கு. நாம ஜீப்பில் போக முடியாது. அதனால் நாம நடந்து போகனும்” என்றார் டீமில் ஒருவர்.

 

“அது மட்டும் இல்லை சேர் அந்த குடோனிற்கு பின்னாடி ஒரு தண்டவாளம் இருக்கு சேர். அந்த வழியா சென்றால் எல்லோரையும் பிடிக்கலாம். முன் வழியா சென்றால் ஒருத்தர் பார்த்தாலும் எஸ்கேப் ஆகிடுவாங்க” என்றார் இன்னொருவர்.

 

“அப்படி ஒரு பக்கம் மட்டும் விட முடியாது” என்று கூறிய ஆதி யோசித்தவன்,

 

“நான், விகி தண்டவாளம் வழியாக போகிறோம். மற்றைய எல்லோரும் முன்வழியா ரௌன்டப் பன்னுங்க. பக்கத்துல இருக்கிற பொலிஸ் ஸ்டேஷனிற்கு அழைச்சு இந்த ஸ்பொட்டுக்கு வர சொல்லுங்க. குயிக்” என்றான்.

 

ஏனோ அவன் மனமும் தண்டவாளம் வழியே செல் என்றே கூறியது. அங்கு வண்டியை ஓரமாக நிறுத்தியவர்கள் அவர்கள் திட்டத்தின் படி பிரிந்து சென்றனர்.

 

கிருஷியின் மனதில் ஆதி ‘நவி மா நீ எனக்காக எப்படியாவது தப்பிச்சு வா மா உனக்காக நான் வெயிட் பன்னிட்டு இருக்கேன். உன்னால் அந்த இராட்சசன் கிட்ட இருந்து தப்பிக்க முடியும்’ என்று கூறுவது போல் இருக்க,

 

‘நான் உன்கிட்ட வரேன் லக்ஷன்’ என்று யோசித்தவள் தன் கைகளைப் பிடித்து இருந்த கைகளை கடித்தாள்.

 

அதில் கையை விலக்கியவன் வலியில் உதற அவனிடம் இருந்து பின் வாசல் வழியாக ஓட ஆரம்பித்தாள். அவனுடைய ஆட்கள் முன்பகுதியில் பாதுகாப்பிற்கு இருந்ததால்,

 

நேசன் ” டேய் எங்க டா இருக்கிங்க? அந்த சிறுக்கி என் கையை கடிச்சி பின் வாசல் வழியாக தப்பிச்சுப் போறா பிடிங்க டா” என்று கத்த அவர்களும் கிருஷியை துரத்தி ஓட நேசனும் ஓடினான்.

 

கிருஷி தன்னுடைய வேகத்தை அதிகரித்து ஓட மேல் பகுதியில் தண்டவளாம் இருப்பதைக் கண்டவள் அவ்வழியாக மூச்சிரைக்க ஓடினாள். ஒரு நிலையில் அவளுக்கு ஓட முடியாமல் போக,

 

‘லக்ஷன் என்னை காப்பாத்துடா, சீக்கிரமா என் கிட்ட வாடா’ என்று மனதால் அவனிடம் பேசிக் கொண்டே ஓடினாள். தண்டவளத்திற்கு வந்தவள் அதில் மீண்டும் ஓட ஆரம்பித்தாள். அவளைத் துரத்திக் கொண்டு அனைவருமே ஓட ஆரம்பித்தனர்.

 

அவளுடைய கால்களும் வேகத்தைக் குறைக்க, ஓட முடியாமல் ஆதியை மட்டும் நினைத்துக் கொண்டு அவளுடைய சக்தியை மட்டும் பயன்படுத்தி ஓட ஆரம்பித்தாள்.

 

நாவரண்டது, கைகளும் சக்தியை இழக்க, கால்களும் வலுவிழந்தது. ஆனாலும் அவள் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் ஓடினாள்.

 

அவள் தொடர்ந்து ஓடுவதைப் பார்த்த நேசன், அருகில் இருந்த கட்டையை அவளை நோக்கி வீச கிருஷியின் தலையில் வேகமாக அடித்தது.

 

அடுத்த நொடி “லக்ஷன்” என்ற அலறலோடு அப்படியே விழுந்தாள். அவளை நெருங்கி வந்த நேசன் குரூரமாக சிரித்தவன் அவள் கைபிடிக்கச் சென்றான்.

 

ஆதி தண்டவாளம் வழியாக செல்ல அவன் மனமோ ‘தன்னவள் ஆபத்தில் இருக்கின்றாள்’ என்று கூற உடனே மொபைலை எடுத்து அவளுக்கு அழைப்பை ஏற்படுத்த ஸ்விச்ஓப் என்று வந்தது.

 

தன் வீட்டிற்கு அழைத்து கேட்கலாம் என்று அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“அம்மா நவி எங்கே?” என்று கேட்க,

 

“அவ கோயிலுக்கு போனா பா, ஏதாவது பிரச்சனையா பா?” என்று கேட்க,

 

வீட்டில் உள்ளவர்களையும் பயமுறுத்த வேண்டாம் என்று முடிவு எடுத்தவன்,

 

“இல்லை மா, ஒன்னும் இல்லை. இப்போ நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

தன் மகன் தன்னிடம் எதையோ மறைக்கிறான் என்று புரிந்துக் கொண்டவர் இருவருக்காகவும் சாமி அறைக்குச் சென்று வேண்டிக் கொண்டார்.

 

அவன் மனம் இதே வழியில் வேகமாகச் செல் என்று அறிவுறுத்த, அதன்படி வேகமாகச் சென்றான்.

 

“எதுக்கு டா இவளோ வேகமா போற?” என்று விகி கேட்க,

 

“தெரியல்லை டா என் மனசு சொல்லுது வேகமாக போகச் சொல்லி” என்று கூறி இன்னும் தன் வேகத்தை அதிகபடுத்தினான்.

 

அவன் அதே பாதையில் செல்ல அவனுக்கு கிருஷியின் குரலில்

 

“லக்ஷன்” என்ற அலறல் கேட்க,

 

“நவி மா” என்று ஓட ஆரம்பித்தான்.

 

கிருஷியின் குரலை தூரத்தில் கேட்ட விகியும் அதிரந்து கையில் துப்பாக்கியுடன் வேகமாக ஓடினான்.

 

நேசன் அவள் கைபிடிக்கச் செல்ல அவன் கையை பதம் பார்த்தது ஒரு தோட்டா.

 

அவனுடைய ‘ஆஆஆ’ என்ற கத்தலில் அவனுடைய ஆட்களும் எங்கிருந்து வந்தது என குழம்ப, வேட்டையாடும் சிங்கம் என அவர்கள் முன் வந்து நின்றான் ஆதி.

 

அவன் பின்னால் விகியும் வந்ததைப் பார்த்து அனைவரும் இந்த இடத்தை எப்படி கண்டுபிடித்தனர் என்று குழம்பி ஓட முயல அவர்களைச் சுற்றி வளைத்தனர் பொலிஸார்.

 

அதுமட்டுமல்லாமல் கிருஷியை அடைத்து வைத்திருந்த குடோன் முழுவதுமே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

 

கிருஷியின் அருகில் ஓடி வந்த ஆதி அவளைப் பார்க்க தலையில் இருந்து இரத்தம் வழிய அவள் படுத்து இருந்தாள்.

 

அவளுடைய நெற்றி தண்டவாளத்தின் இரும்புப் பகுதியில் அடிபட்டு இருந்ததால் இரத்தம் குபீர் என்று வழிந்துக் கொண்டே இருக்க, கை, கால்களில் அதிக சீராய்ப்புகள் இருந்தது. அவளைத் தூக்கி தன் கையில் ஏந்தியவன்,

 

“நவி மா என்னை பாருடி, உன் லக்ஷன் வந்திருக்கேன். என்னை பாருடி, பயமுறுத்தாத டி” என்று அழுதான்.

 

அவளை தூக்கி நடக்க, அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம்,

 

“நேசனை மட்டும் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போகாதிங்க. அவனை விக்ரமன் கிட்ட விட்டுடுங்க” என்று அவன் கோபமாகக் கூற

 

“சேர் அது” என்று ஏதோ கூற

 

“நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் பன்னுங்க” என்று கர்ஜித்தான்.

 

பின் விகியிடம் திரும்பிய ஆதி,

 

“இவனை பத்திரமா பார்த்துக்க, நான் வந்து கவனிக்கிறேன்” என்று நேசன் மீது அனல் பார்வையைக் கக்க அனைவருமே அதில் பயந்தனர்.

 

ஆதி அவளை வேகமாக அருகில் இருந்த அவர்களுடைய ஜீப்பிற்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழி எல்லாம் அவளுடன் பேசிக் கொண்டே வந்தான். ஆனால் அவளிடம் எந்த ஒரு அசைவும் தென்படவில்லை.

 

விகி அந்த குடோனை சீஸ் வைத்து சுற்றி வர இன்னும் ஏதாவது தடையம் கிடைக்குமா என்று தேடிய பிறகு அங்கி இருந்து நேசனை மட்டும் ஒரு பாழடைந்த பங்களாவிற்கு அழைத்துச் சென்றான். அவன் கை, கால்கள், கண்கள் கட்டப்பட்டு இருந்து குளோரபோமும் அவனுக்கு மயக்கத்தில் இருப்பதற்காக வழங்கப்பட்டது. மற்றவர்களை பொலிஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச் செனறனர்.

 

அந்த குடோன் சிவபெருமாளின் பெயரில் இருப்பதைக் கண்டுகொண்டான் விகி. அனைத்திற்கும் பின்னாக சிவபெருமாளே இருக்கிறார் என்று தெரித்துக் கொண்டவன் உடனே ஆதிக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

ஆதி அவளை அவசரமாக ஹொஸ்பிடலில் அட்மிட் செய்தான். அவளை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்ற டாக்டர்கள் அவளை பரிசோதித்து ஆதியிடம் வந்தார்.

 

“ஆதி உங்க வைபிற்கு பின் தலையில் பலமா அடிபட்டு பிளீட் ஆகுது. அதுமட்டும் இல்லை நெற்றியில் இருந்து பிளீட் ஆகுது. கால்களில் அடிபட்டு பிக்சர் ஆகி இருக்கு” என்றார்.

 

“அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே?” என்று பதட்டமாகக் கேட்க,

 

“தற்போது அதை சொல்ல முடியல்லை. ஹெவி பிளட் லொஸ் அதற்கு அவங்க பிளட் குரூப் பிளட் வேணும். எங்க ஸ்டொக்ல இருக்கிற பிளட் போதாது” என்றார் டாக்டர்.

 

“அவ என்ன பிளட் குரூப் டாக்டர்?” என்று  ஆதி கேட்க,

 

“B negative” என்றார்.

 

“டாக்டர் எனக்கும் அதே பிளட் குரூப் தான், என் பிளட்டை எடுத்துகங்க” என்று கூற

 

“சரி அந்த அறைக்கு போங்க” என்றார் டாக்டர்.

 

அவன் அங்கே சென்று பிளட்டை வழங்கி வரும் போதே விகி அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“சொல்லுடா” என்றான் அதே கோபத்தில்,

 

“ஆதி அந்த குடோன் சிவபெருமாளோட பெயரில் இருக்கு” என்றான் விகி அமைதியாக.

 

அதில் சிவபெருமாளின் மீது கட்டுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டது.

 

“அது மட்டும் இல்லை டா சென்னையில் இறக்குகிற சரக்கு அனைத்துமே இங்கே இருக்கு” என்றான் விகி.

 

“டேய் அந்த நாயை அரெஸ்பட் பன்றதுக்கு எல்லா ஏற்பாடையும் பன்னு” என்றான் உறுமலுடன்.

 

“ஆதி, இப்போ குட்டிபேபி எப்படி இருக்கா?” என்று விகி கேட்க,

 

“அவளோட நிலையைப் பற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாரு டா. அவளோட பின் தலை பலமா அடிபட்டு இருக்காம். காலில் பிரக்சர் ஆகி இருக்காம் டா” என்றான் உடைந்த குரலில்.

 

“நீ பயப்படாத டா. அவ திரும்பி வருவா. உன் கூட சந்தோஷமா வாழ, உன் கூட சண்டை போட” என்றான் விகி.

 

“நெஜமா என் கிட்டையே என் நவி திரும்பி வருவாளாடா?” என்று சிறு பிள்ளையாய் கேட்க,

 

“வருவா டா. கடவுளை நம்பு, நான் அரெஸ்ட் வோரென்ட் வாங்குறதுக்கான வேலைகளை பார்க்குறேன், கிருஷியை பார்த்துக்க” என்றான்.

 

“சரி டா, நீயும் கவனமா இரு” என்று ஆதி கூற

 

“சரி மச்சான், வீட்டிற்கு விஷயத்தை சொன்னியா?” என்று கேட்க,

 

“இல்லை டா, மறந்தே போயிட்டேன், அவளை இந்த நிலமையில் பார்க்கும் போது என் மூளை வேலை செய்யவே இல்லை. நான் வீட்டிற்கு சொல்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

டாக்டர் ஆதியை அழைக்க,

 

“ஏதாவது கிருஷிக்கு?” என்று அவன் தழுதழுத்த குரலில் கேட்க,

 

“இல்லை ஆதி, இது வேறு” என்று கூறினார்.

 

அவர் கூறிய செய்தியில் அதிரந்து நின்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 12

பனி 12   பவியின் வீட்டிற்குச் செல்லும் வழியில் கிருஷி மொபைலில் ஏதோ செய்ய,   “என்ன டி பன்ற? அதுவும் சிரிச்சிகிட்டே?” என்றாள் பவி.   “இன்றைக்கு 12.36க்கு தான் லக்ஷன் புரொபோஸ் பன்னான். அதான் சேவ் பன்னி வைக்குறேன்”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 2யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 2

பனி 2   காலேஜை வந்தடைந்தாள் கிருஷி. தனது ஸ்கூர்டியை பார்கிங்கில் நிறுத்தி, நேரடியாக பிரின்சியின் அறைக்குச் சென்றாள்.   “குட் மோர்னிங் சேர்” என்று புன்னகைக்க,   “குட் மோர்னிங் கிருஷி” என்றார்.   “சேர் என்னோட டைம் டேபள்”

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23

பனி 23   “மச்சான் தங்கச்சை சமாளித்தாலும் உன் குடும்பத்தை சமாளிக்க முடியுமா?” என்று விகி கேட்க,   “கேள்வியை மாற்றி கேக்குற டா” என்றான் ஆதி.   “புரியிர மாதிரி சொல்லு?” என்று கூற   “என் குடும்பத்தை சமாளிப்பேன்,